Sunday, February 27, 2011

ஜெ -கலைஞர் - ஒரு ஜோதிட ஒப்பீடு



அண்ணா வணக்கம்ணா,
வழக்கமா பேர்பாதி போஸ்டை இங்கே போட்டு மீதிக்கு சைட்டுக்கு லிங்க் கொடுப்பேன். இன்னைக்கு ஐட்டத்துல தொடுப்புகள் அதிகம் . வெறுமனே கட் பேஸ்ட் பண்ணமுடியாது .அதனால அங்கயே ஆரம்பிச்சுருவம். அதுக்கு இங்க அழுத்துங்க.

Saturday, February 26, 2011

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்


அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட "வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்"னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா - அதாங்க ரூ 250)

Friday, February 25, 2011

365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா



365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா 3 மேட்டர் உங்க ஜாதகப்படி கரீட்டா செட் ஆயிட்டா போதும். ஒன்னு செய் தொழில். ரெண்டு மனைவி மூணு வீடு . அப்ப மத்த விசயம்லாம் ஆத்துல அடிச்சிக்கினு போனா பரவால்லியானு கேப்பிக.

நிதானமா ரோசிங்க. ஒரு நாள்ள -24 மணி நேரத்துல மனுஷன் கு.பட்சம் 8 மணி நேரமாச்சும் தொழில்,உத்யோகம்,வேலைன்னு செலவழிச்சாகனும். அதனால தொழில் மேட்டர் ஜாதகப்படி அமைஞ்சுட்டா 8 மணி நேரம் கிரக பீடனங்களிலிருந்து எஸ்கேப். ( மீன் தண்ணில இருக்கிறாப்ல சேஃப் - உங்க ஜாதகத்துக்கு தொடர்பில்லாத வேலையில இருந்தா அது மனுஷன் நீச்சலடிக்கிற மாதிரி -அல்லாரும் குற்றாலீஸ்வரன் ஆயிரமுடியாதில்லியா -மூச்சு வாங்கும் -நாக்கு தள்ளும் -எப்படா கரையேறுவோம்னு தான் இருக்கும்)

அடுத்து நைட் 10 டு மார்னிங் 10 AM 12 மணி நேரம் வீட்டுல செலவழிக்கவேண்டியிருக்கு. அதனால வீடு ,பொஞ்சாதி கரீட்டா அமையனும் இல்லாட்டி இந்த 12 மணி நேரம் நரகமாயிரும். தாளி வீடு சரியில்லாதவன்,பொஞ்சாதி பிடுங்கல்ல இருந்து தப்பிக்க நினைக்கிறவன் தான் இன்ன பிற ஆக்டிவிட்டீஸுக்கு வர்ரான்.

மேற்சொன்ன 3 மேட்டர் கரீட்டா செட் ஆயிருச்சுன்னா 20 மணி நேரம் மன்சன் சேஃப் ஆயிர்ரான். இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் உங்க தொழில் உங்க ஜாதகப்படித்தான் அமைஞ்சிருக்கான்னு தெரிஞ்சிக்கனும். உங்க வீடு,மனைவி மேட்டர்லயும் இதை செய்யனும். அப்படியில்லேன்னா மெல்ல மெல்ல ரூட்டை மாத்தி உங்க பேட்டைக்கு வந்துரனும்.( பொஞ்சாதி மேட்டர்ல மட்டும் இது கஷ்டம்தேன். மொதல் பார்ட்டி இருக்கிறச்ச ரெண்டாவது பார்ட்டிக்கு ட்ரை பண்ணா மகிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு கதை ஒரு பக்கம்னா இந்த ஒரு செயல் உங்களுக்கு அப்பாறம் உங்க வம்ச விருட்சத்துல வரப்போற ஏழு தலைமுறைக்கு ஆப்பாயிரும்.

அவிக தங்களோட சிக்கலை என்னாட்டம் ஆளுக்கு சொன்னா நாங்க போட்டு குடுத்துருவம். (உங்க முன்னோர் ஆரோ ஒன்னுக்கு ரெண்டா கண்ணாலம் கட்டியிருக்காய்ங்க.அதனாலதான் உங்க கண்ணாலம் தள்ளிப்போகுது -குடும்பவாழ்க்கையில சிக்கல்னு) நீங்க செத்து எந்த லோகத்துல இருந்தாலும் அவிக சாபத்தை வேற வாங்கனும்.

இதுவரை கமிட் ஆகாதவிங்க வேணம்னா ட்ரை பண்ணலாம். ( எனக்கு வரப்போற பொஞ்சாதி எப்படியிருப்பானு சோசியரை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு சூஸ் பண்ணிக்கலாம். ஏற்கெனவே ஆனவுக (கண்ணாலத்தை சொன்னேன்) உங்க ஜாதகப்படி பொஞ்சாதி எப்படியிருக்கனும்னு கண்டுக்கிட்டு அவிக ட்ரஸ் அப், மேக்கப், கெட் அப், தொழில் இத்யாதியில மாற்றம் கொண்டு வர ட்ரை பண்ணலாம். வீடு மேட்டர்ல யுவார் ஃப்ரீ.

"கட்டிடக்கலை ஒரு அறிமுகம்"னு ஒரு புக் ஒர்க்ல அதனோட ஆசிரியர் கே.வி.முனியோட கோ ஆப்பரேட் பண்ண சமயம் அவர் ஒரு பாய்ண்ட் சொன்னாரு.

ருணானுபந்த ரூபேணா பசு,பத்னி ,சுதாலயானு ஒரு ஸ்லோகம் இருக்காம். "சுதா" என்றால் பிள்ளைகள், ஆலயா என்றால் வீடு. பூர்வ கர்ம வினைகளுக்கேத்தாப்ல தான் கால் நடை, மனைவி, வீடுல்லாம் அமையும்னு ஸ்லோகம் சொல்லுது.

மாதா,பிதா,குரு தெய்வங்கற லிஸ்டுல தெய்வம் கடாசில வந்தாலும் தெய்வத்தோட அருளாலயே மொதல்
மூணும் அமையறாப்ல பசு,பத்னி,சுதா,ஆலயாங்கற லிஸ்டுல ஆலயா(வீடு) கடைசில வந்தாலும் வீட்டைபொறுத்து மத்த தெல்லாம் அமைய வாய்ப்பிருக்கு - விதியை மதியால் வெல்ல நினைக்கிறவன் அதை வீட்டின் மூலம் நிறைவேத்தலாம்னு சொன்னாரு.

அவரோட நோக்கம் வாஸ்துப்படி வீட்டை அமைச்சிக்கனுங்கறது. ஆனால் நான் சொல்ல வர்ரது வேற . உங்க ஜாதகப்படி நீங்க எந்த மாதிரி வீட்ல வாழனுமோ அந்த மாதிரி வீட்டை அமைச்சிக்கிட்டாலே போதும் ( உ.ம் ஆக்னேய குறைபாடுள்ள வீடு ) சுத்தம் சுகாதாரம்லாம் நமக்குத்தேன் முக்கியம். கெளுத்தி மீனுக்கு சேறுதான் சொர்கம்ங்கோ.


சரிங்கண்ணா இந்த பதிவுல மனுஷனோட 24 மணி நேரத்துல கு.ப 8 மணி நேரத்தை விழுங்கிர்ர தொழிலை பத்தி விலாவாரியா இங்கே பார்ப்போம்.

Thursday, February 24, 2011

கலைஞர் ஒரு விதவை


இன்னாடா இது அக்குறும்பா கீது. ஆம்பளை போய் விதவையாக முடியுமான்னு கேப்பிக. சொல்றேன்.மனைவியை இழந்த ஆணை விதவன் என்று சொல்லும் சம்பிரதாயம் இங்கில்லே.(மேல் சேவனிஸ்ட் சொசைட்டிப்பா). ஆனால் மனைவியை இழந்தவர்களை குறிப்பிட ஒரு வார்த்தை இல்லேன்னாலும் இழந்தது இழந்ததுதானே.

"அவர் ஏங்க கல்யாணம் கட்டிக்கலை?"
"அவர் தன் லட்சியத்தை கண்ணாலம் கட்டிக்கிட்டாருப்பா"

"ஹும்.. உங்களுக்கு மொதல் பெண்டாட்டி உங்க ஆஃபீஸ் - நான் ரெண்டாவதுதான்"

இந்த வசனம்லாம் கேட்டிருப்பிக. கலைஞரும் அப்படித்தான் லட்சியத்தை மணந்து அரசியல் வாழ்க்கைய துவக்கினாரு. ஆனால் அவரோட ஜாதக மகிமை லட்சியம் செத்துப்போச்சு. ஆமாங்கண்ணா அவர் ஜாதகம் கீழே:

கடக லக்னம் -லக்னாதிபதி உச்சம் -இது சந்திரங்கறதாலதான் ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா லைஃப் போகுது. 14 வருஷம் வனவாசத்துக்கும் இதான் காரணம். (வளர்பிறை -தேய் பிறை)

தன,வாக்கு ,குடும்பஸ்தானாதிபதியோட சேர்க்கை - இதனால தான் அவரு குடும்பத்தை பிரிய , அட்லீஸ்ட் விட்டுக்கொடுக்க மறுக்கறாரு. ரெண்டு எட்டுல ராகு கேது ( இதைத்தான் மாங்கலிய தோஷம்ங்கறாய்ங்க- இந்த அமைப்பாலதான் கலைஞரோட லட்சியம் செத்துப்போயி அவரு விதவையாயிட்டாரு)

7,8 க்கு அதிபதியான சனி 4 ஆவது இடத்துல உச்சம். 8ங்கறது மரணத்தை காட்டற இடம் - 4ங்கறது "வீட் மற்றும் தன்னவரை" காட்டற இடம் . கணக்கு டாலி ஆயிருச்சா. ராசா ஒரு தலித். அவரை தன்னவருன்னு சேர்த்ததால சிறைக்குள் பூத்த சின்ன சின்ன மலர்கள் பார்ட் டூ எழுத வச்சிர்ராப்ல இருக்கு. ( சிறைப்படலுக்கு சனியே காரகன்)

6,9க்கு அதிபதியான குரு அஞ்சுல கீறாரு. அஞ்சுன்னா புத்திஸ்தானம், பெயர் புகழை காட்டற இடம். 6ன்னா சத்ரு ரோக ருணங்களை காட்டற இடம். குரு ரோகாதிபதியா வேலை செய்தா "இந்திராவுக்கு பென்ஷன் தரோம்" பாணில வார்த்தைய விட்டு ஆப்பு. அவரு பாக்யாதிபதியா வேலை செய்தா எம்.ஜி.ஆர் உடல் நலம் பாதித்து ப்ரூக்ளின்ல இருந்தா உருக்கமா உடன் பிறப்புக்கு கடிதம்.

ஒரு சமயம் டாப்பு. ஒரு சமயம் பயங்கர ஆப்பு.ரெண்டுத்துக்குமே தலைவரோட புத்தி தான் காரணமாகுது. குருன்னா அவாள். அவிக மேல பாசம்,துவேசம் மாறி மாறி வரவும் இதான் காரணம்.

ஏழுல செவ் உச்சம்.7ங்கறது ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃபை காட்டற இடம். செவ்வாய்னா எதிரி. பாவம் தலீவரு ஆரை நண்பர்னு நினைக்கிறாய்ங்களோ அவிகளே ஆப்பு வைக்க இதான் காரணம். அதே போல ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப் எல்லாருமே குழி தோண்டவும் இதான் காரணம்.

இவர் 7லருந்து ஜன்மத்தை பார்க்கிறதால சட்டுனு கோவம் வந்துருது. ஆருனா ரிப்போர்ட்டர் வில்லங்கமா கேள்வி கேட்டா " எந்த பேப்பரு"ன்னு சீறவு இதான் காரணம்.

இந்த ஜாதகத்துக்கு செவ்வாய் தான் யோககாரகன்.இவர் 7ல உட்கார்ந்து உச்சம் பெற்றார். அதனால பெரியா(ரோட)ளுங்களோட சகவாசம் ஏற்பட்டுது. செவ்வாய் சகோதர காரகர் (அண்ணா தம்பி) அதனாலதான் அண்ணா ஒரு லைஃப் கொடுத்தார். உடன்பிறப்புங்க கொடுத்துக்கிட்டே இருக்காய்ங்க. இவர் தான் ஒன்னும் கொடுக்கமாட்டேங்கறாரு.

4/11 க்கு அதிபதி விரயத்துல உட்கார்ந்தாரு. அதாவது வீடு வாசல் எல்லாம் விரயமா போயிரனும். இந்த பாய்ண்டை ஆரோ கிட்னி உள்ள ஜோசியர் கேட்ச் பண்ணி சொன்னதால வீட்டை "தானம்" பண்ணிட்டாரு போல.

தானம்னா என்ன ? தாரை வார்த்து கொடுத்துட்டு துண்டை உதறி தோள்ள போட்டுக்கிட்டு இறங்கிரனும்.அதான் தானம். அதை விட்டுட்டு................( வேணம்பா பெரிய இடத்து பொல்லாப்பு நமக்கெதுக்கு -சென்னை டு சித்தூர் எவ்ள நேரம் ஆயிரப்போவுது)

அப்பாறம் பாருங்க சோதரஸ்தானாதிபதியான புதன் விரயத்துல போய் பவர் ஃபுல்லா இருக்காரு. எம்.ஜி.ஆரையும் சகோதரர்னு தானே விளிச்சிட்டிருந்தார் ( பேச்சு -எழுத்துல) புதனுக்குரிய கடவுள் விஷ்ணு. ராம -சந்திரன்னா அது வைஷ்ணவ நாமம்தானே. அதான் பாவம் வாத்யாருகிட்டே செமர்த்தியா வாங்கி கட்டிக்கினாரு.

கம்யூனிகேஷன்ஸுக்கு அதிபதியான புதன் பலம் பெற்றார். இதனால தான் ஒரு பக்க வசன காலம் முதல் ஒரு வார்த்தை வசனம் வரை குப்பை கொட்டறாரு.அந்த புதன் விரயத்துல உள்ளதால தன் பக்க வாதத்தை எடுத்து வைக்கிறப்ப மாத்திரம் மொக்கையாயிருது. (லேட்டஸ்ட் உதாரணம்: ஸ்பெக்ட்ரம் ஜி).
அதே போல டாக்டர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் யாராலயும் உபயோகமில்லாம போக இதான் காரணம்.


அது சரிங்கண்ணா ஏன் சோனியா அம்மா இப்படி இம்சை பண்றாய்ங்கனு கேப்பிக.சொல்றேன். கடகலக்னத்துக்கு வுமன் தான் எமன். (ஜெயலலிதா கதை ஆச்சு.இப்ப சோனியா ) ராகுன்னா விதவைய காட்டற கிரகம்.

நம்ம தலீவருக்கு ராகு கேது பாப கத்திரி யோகத்தை தந்திருக்காய்ங்க. அதாவது ஒரு விதவையால தனம்,சொல் வாக்கு,செல்வாக்கு, குடும்பம் எல்லாமே பறிபோகனும். ராகு எட்டை பார்க்கிறதால (வேணாங்கண்ணா ஓவரா போயிரும்) அதுவும் போகனும்.

ஆடு ஆரை நம்புது? கசாப்புக்காரனைத்தானே நம்புது. சரி இந்த கேது தசையில தாத்தாவுக்கு ஆப்புதானான்னு கேப்பிக சொல்றேன்.

இன் ஜெனரல் கேது தசை/புக்தி யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார். துன்பங்கள் மூலம் தான் ஞானம் பாசிபிள். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி துறையிலோ , தியானம், சன்னியாச வாழ்விலோ இருந்தாலன்றி கேது கொஞ்சமேனும் தீய பலனை தராது விட மாட்டார். தினசரி ஒரு மணி நேரமேனும் காவி வேட்டி அணியவும். மாதம் ஒரு கோவிலில் ரா தங்கவும்னு சொல்லலாம். ஆனால் தலீவர் கோச்சுக்குவார்.

வேணம்னா ஒன்னு பண்ணலாம் கேது ராகு சமசப்தகத்துல இருக்கிறதால மஞ்ச சால்வைய தூக்கிப்போட்டுட்டு மேற்சொன்ன ஒரு மணி நேரம் கருப்பு சால்வை அணியலாம். பெரியார் சம்பந்தப்பட்ட இடத்துல ராத்தங்கலாம்..

என்னைக்கேட்டா அல்டிமேட் பரிகாரம்:

அந்த காலத்து வானப்ரஸ்தம் மாதிரி தாளி என் சொச்ச வாழ்க்கைய பெரியார் கொள்கைய பரப்ப உபயோகிக்கப்போறேன்னுட்டு கருப்பு சால்வையோட ரோட்ல இறங்கிர்ரதான். அழகிரியா ஸ்டாலினாங்கறதை தொண்டர்கள் முடிவு செய்யட்டுமே.

ஜாதக உதவி: வகுப்பறை

Tuesday, February 22, 2011

கலைஞருக்கு ஒரு டாப் பரிகாரம் « Anubavajothidam.com


கலைஞருக்கு டாப் பரிகாரத்தை சொல்றதுக்கு முந்தி இன்னொரு ரகசியத்தை உடைக்கிறேன். இந்த பதிவு நேற்றைய போலி ஜோதிடரை கண்டறிய பதிவோட 2 ஆவது பகுதிதான். (இப்ப மேட்டருக்கு போயிருவம்)

ஒனக்கு இன்னாத்துக்குப்பா இந்த ஆள்காட்டி வேலை. ஏதோ நாலு விஷயத்தை பத்தி எழுதினே. சனம் படிச்சாய்ங்க. இன்ஸ்பைர் ஆயிட்டாய்ங்க. ஏதோ வாரத்துக்கு பத்துபேரு அக்கவுண்ட்ல காசு போட்டு பலன் கேட்டுக்கறாய்ங்க. இப்ப எதுக்கு இந்த லொள்ளுனு கேப்பிக. சொல்றேன்.

நான் அப்பப்ப வில்லங்கமா ஒரு வசனம் விடுவேன். தாளி ஜோசியம் பொய்யாவே இருந்தாலும் சம்பவம்லாம் ஜோசியப்படி தான் நடக்கும்.ஏன்னா நாட்டை, மானிலத்தை வழி நடத்தறவுகளை வழி நடத்தறதே ஜோசியம் தான்.ஜோசியர்கள் தான்.

ஜஸ்ட் ! உங்க கலைஞர்,ஜெயலலிதா,விஜயகாந்துக்கு சரியான ஜோசியர் கிடைச்சு ...........

அந்தாளு ஜோதிஷத்துல உள்ள அசலான மேட்டரை ( அஸ்ட்ராலஜி மீன்ஸ் ஆப்ஷன்ஸ் துரை! ) போட்டு உடைச்சா ..........

ங்கொய்யால உங்களுக்கு என்ன வேணுங்கறிங்களோ அது எந்த கிரகத்தோட காரகத்வம்னு பார்த்து அந்த கிரகத்தோட இதர காரகத்வங்கள்ள அதுக்கு சமமானதை விட்டுத்தொலைச்சா நினைச்சதை பெறலாம்னு சொன்னா.. இதை அவிக ஏத்துக்கிட்டு செயல்பட்டா ஸ்டேட்டே உருப்படும்.

அப்படி ஆரும் அமைவாங்கனு நினைக்காததால கலைஞருக்கு நானே ஒரு டாப் பரிகாரம் சொல்லியிருக்கேன். அதை படிக்க சிரமம் பார்க்காம இங்கே க்ளிக் பண்ணுங்க

Monday, February 21, 2011

போலி ஜோதிடர்களை கண்டறிய

1.வெளித்தோற்றத்தில் அக்கறை -24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப்:

ஒரு பெண்......... பாவம் ஏதோ சின்ன ஹெல்த் ப்ராப்ளத்துக்கு இருபத்து அஞ்சு பைசா மாத்திரை போட்டுக்கிட்ட பாவத்துக்கு என்னா கதியாச்சுன்னு ஜூ.வில போட்டிருந்தான் .கதி கலங்கி போச்சு.

ஒரு நேரம் முடிஞ்சு இன்னொரு நேரம் ஆரம்பிக்கிறச்ச இந்த நிமிசத்துக்கும் அடுத்த நிமிசத்துக்கும் லிங்க் கட்டாயிருது. என்னா வேணம்னா நடக்கலாம். மரணம் உட்பட. இந்த வாழ்க்கைங்கற நாடகமே டிவி சீரியல் மாதிரி படக்குனு கழட்டிவிட்டுட்டு இவருக்கு பதில் இவருன்னு வாழ்க்கை டைட்டில் கார்டு போட்டுருது.

காலகதி அறிந்த ஒரு பார்ட்டி வெளித்தோற்றத்துல அளவில்லாத அக்கறை காட்டறாருன்னா அவர் கோள்களையும் அவற்றின் சஞ்சாரத்தையும்,அவற்றின் பலா பலனையும் முழுக்க நம்பலைனு அர்த்தம்.

சாமானிய சனம் ரொட்டீனுக்கு அலையுதுன்னா அது வேற கதை .அவிகளுக்கு விவரம் போதாது. மேட்டர் தெரியாது.

செருப்புக்குள்ள காலை நுழைப்பான் காது அறுந்திருக்கும். ஒடனே நோயாளி பொஞ்சாதிய தாலியறுத்து ஸ்லாப் மேல இருந்து ஷூ எடுக்க சொல்லி அதுக்கு பாலிஷ் போட்டு போட்டுக்கிட்டு போவான். ஒரு விபத்து நடக்கும் -வேலை போகும் - தலை போகும் -நெஜமாலுமே அவன் பொஞ்சாதி தாலி அறுந்துரும்.

ஒனக்கு செருப்பு போடவே போதாத காலத்துல ஷூ போட்டா கிரகம் ஒத்துக்கிடுமா என்ன? ஒரு நாள் கூட மிஸ்ஸானதில்லை காலைல 5 மணிக்கு டாண்ணு எந்திரிச்சு , வாய் கொப்புளிச்சு , கக்கா போயிட்டு வாக்கிங் .. என்று ஆரம்பிப்பவர்களை பார்த்தா பரிதாபப்படுங்க. அவரோட ஜாதகத்துல உள்ள 9 கிரகங்களோட பலமும் அவரோட ரொட்டீனை மெயின்டெய்ன் பண்றதுலயே சரியாபோச்சு.

மாறாதது மாற்றம் ஒன்றே என்பது. ஜோதிடத்தின் சாரம். சந்திரன் 6 மணி நேரத்துக்கொரு தாட்டி பாதம் மாறிர்ராரு. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் லக்னம் மாறிடும். சைக்காலஜிப்படி கூட மனுசனுக்கு 4 நிமிசத்துக்கொருதரம் லேசா மூட் மாறுமாம். 2 மணி நேரத்துக்கொருதரம் அடியோட மாறுமாம்.

உண்மை நிலை இப்படியிருக்க பார்ட்டி 24 மணி நேரமும் ஜோதிடர் போன்றே பில்டப் தர்ராருன்னா அவருக்கே கோள்களின் சுழற்சியின் மீது நம்பிக்கையில்லை என்று அர்த்தம். தான் முழுக்க நம்பாத மேட்டரை ஒருத்தன் எதிராளிக்கு சொல்றான்னா அந்த பேச்சுல அவனோட வில் கலந்திருக்காது. அது வாய்ப்பாட்டு.ஆன்மாவின் ராகமல்ல.

2.காசே தான் கடவுளடா என்ற நினைப்பு:

சனம் பணத்துக்கு அலையுதுன்னா அதுக்கு பல காரணம் இருக்கு.(ஒரே உயிரில் ஆரம்பித்து -பல்லுயிராய் பிரிந்து - ஓருயிராக மாற உடலே தடை என்ற பிரமையில் -கொலை தற்கொலை என்ற எண்ணத்தின் உந்துதலில் - முடியாதபோது செக்ஸ் -அதுவும் முடியாதபோது பணம் என்று கொன்ற படி கொல்லப்பட்ட படி வாழறாய்ங்க. இதை புரிஞ்சிக்கிடலாம். ஆனா நாளும் கோளும் அறிஞ்ச ஜோசியருக்கு வாழ்க்கையின் நிலையாமை அப்பட்டமா புரிஞ்சு போய் ,டர்ரடிச்சு கிடக்கனும். அப்படி டர்ரடிச்சு கிடக்கறச்சதான் புதிய கதவுகள் திறக்கும். நெஜமாவே காற்றுவரும்.

அடங்கொய்யால பல்லுயிரா பிரிஞ்சாலும் நாமெல்லாம் ஒரே உயிரய்யா, செல்ஃபோன்ஸ் ஆயிரம் பிராண்டுல இருந்தாலும், சர்வீஸ் ப்ரொவைடர் வேறயா இருந்தாலும் , சேட்டிலைட் ஒன்னுதான். நாமெல்லாம் எங்கய்யா பிரிஞ்சோம். பிணைஞ்சுதான் கிடக்கோம். அகந்தையின் காரணமா அதை புரியாமகிடக்கோம்னு புரிஞ்சிரனும்.

இந்த பிணைப்பை உணர்ந்தவனுக்கு சேரனுங்கற துடிப்பில்லை - அதுக்காக கொல்லனும் -கொல்லப்படனுங்கற அவசியம் இல்லை. அதுக்கான ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸையோ பணத்தையோ தேடிப்போகவேண்டிய அவசியமுமில்லை.

மேலும் ஒவ்வொரு ஜாதகம் ,ஒவ்வொரு ஜாதகரும் தன் ஆன்ம சக்தியை உறிஞ்சறதை அவரால உணரமுடிஞ்சுட்டா சாக்கு போக்கு சொல்லி தப்பத்தான் பார்க்கனுமே தவிர காசு காசுனு அலைய முடியாது.

அட்லீஸ்ட் அடப்போங்கடா நீங்களும் உங்க பணமும்.. நேரம்தாண்டா முக்கியம்ங்கற எண்ணம் அவருக்குள்ள பலமா இருக்கனும். அதை விட்டுட்டு அவரு காசை பார்க்கிறாருன்னா அவருக்கு நாளோ கோளோ முக்கியமில்லைன்னுதானே அர்த்தம். தானே நம்பாத ஒன்னை நம்பினதா பம்மாத்து பண்ற அந்தாளோட வாக்கு பலிக்குங்கறிங்களா?


3.பாசிட்டிவ் அப்ரோச் - மார்க்கெட்டிங் உத்திகள்:
கடந்த பாய்ண்டுக்கான விவரணையத்தான் இன்னொரு தாட்டி சொல்லனும். உண்மையான ஜோதிடன் "ஆளை விடுங்கப்பா"ங்கற மூட்ல தான் இருப்பான். வந்தவனை கழட்டி விடத்தான் பார்ப்பான். அதை விட்டுட்டு ஜாதகத்துல உள்ள மைனஸ் பாய்ண்டையெல்லாம் பூசி மெழுகிட்டு அதெல்லாம் ஒன்னும் பண்ணாது கோவில்ல விளக்கு போடுங்க கணக்கா ஜல்லியடிக்கிறான்னா என்ன அர்த்தம்?

தாளி தாமஸ் ஆல்வா எடிசன் பல்பு கண்டுபிடிச்சாச்சு. எல்லா கோவில்லயும் பல்புதேன் எரியுது. விளக்குங்கறது கர்பகிருகத்துல ஒன்னோ ரெண்டோ தான் இருக்கு. ஊர் உலகத்துல உள்ளவன் எல்லாம் விளக்கு போட ஆரம்பிச்சா எண்ணைய எங்கன டெப்பாசிட் பண்ணி வைக்கிறதாம்.

மார்க்கெட்டிங் எங்க ஊர்ல ஒரு ஜோசியர் 10 நாளைக்கு மிஞ்சி பலனே சொல்ல மாட்டார். அதுவும் பொத்தாம் பொதுவா இருக்கும். (கஷ்டமோ நஷ்டமோ நடக்கும்/ புதுசா ,நல்லதா எதையாச்சும் செய்விங்க) அதுக்கப்பாறம் என்ன நோண்டினாலும் ஒரு வார்த்தை பெயராது. 11 ஆவது நாள் மறுபடி அவரை போய் பார்க்கவேண்டியதுதேன்.

சிலர் எம்.எல்.எம் மாதிரி ஒருத்தன் மாட்டினா அவனை குழையடிச்சு அவனோட டிபபர்ட்மென்டையே கவுக்க பார்ப்பாய்ங்க. ஒன்னு பலன் சொல்றதால இவிக என்ன இழக்கறாய்ங்கனு தெரிஞ்சிருக்காது அல்லது இவிகளுக்கு இழப்புங்கறதே இருக்காது. ( சூட்சுமமா ரோசிச்சு புரிஞ்சிக்கிடனுங்கோ)


4.தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்:
ஜோதிடத்துக்கு காரகன் புதன். ஜாதகத்துல புத பலம் இல்லேன்னா தான் தோல் வியாதி அண்ட வியாதி கீல்வாதம்லாம் வரும். ( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல புதன் பாதி உயிரோட இருந்து இப்படி வியாதிகளையும் கொடுத்து அப்படி பாண்டித்யத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தே கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)

5.ஒழுங்கற்ற பல் , கீச்சுக்குரல் ,திக்குவாய்,பொய் பித்தலாட்டம் -சொந்த ஃபேமிலிலயே வெட்ட்ப்பழி குத்துப்பழி:

ஜாதகத்துல ரெண்டாவதுபாவம் தான் வாக் பலிதத்தை காட்டுது. ரெண்டாமிடம் கெட்டாத்தான் மேற்சொன்ன தீயபலன் எல்லாம் ஏற்படும்.( ஆனால் ஒரு சிலர் மேட்டர்ல தன பாவமும், தனபாவாதிபதியும் பாதி உயிரோட இருந்து இப்படிப்பட்ட பிரச்சினைகள் + வியாதிகளையும் கொடுத்து அப்படி வாக்பலிதத்தையும் கொடுத்திருப்பாருங்கண்ணா - எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவு பண்ணிரக்கூடாது)

இன்னம் ஒரு 9 பாய்ண்ட் இருக்குங்கண்ணா அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Sunday, February 20, 2011

கத்தோலிக்க பெரியார்



தமிழ் கத்தோலிக்கன் என்ற வ்லைப்பூவுக்கு சொந்தக்காரர் தாமென்னவோ ஈ.வெ.ரா என்ற நினைப்பில் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.ஏதோ ஹிட்ஸை கூட்டிக்க இப்படி ஒரு பதிவை போட்டிருந்தா ஓகே. ( நாமளும் இந்த கேஸ்தானே சுஜாதாவையே கிழிச்சிருக்கன் -ஆனால் அவரோட எழுத்தை படிச்சுத்தேன் எழுத்து மேலயே ஒரு கவுரதை வந்துது -இதையும் மறைச்சதில்லை)

ஆனால் பாவம் ..தான் எழுதினதையெல்லாம் அவர் முழுக்க நம்பி பதிவு போட்டிருந்தா மட்டும் கஷ்டம். தவளை எங்கனா கத்திக்கிடலாம். பாம்பு கண்டுக்கிடாது. பாம்புக்கு மஸ்தா வேலை கீறப்ப, அது ஏதோ தன் வேலைய தான் பார்த்துக்கிட்டிருக்கிறப்ப "மணலுள் புதைந்து வாழ் நுணலெல்லாம்" கத்த ஆரம்பிச்சா அதுவும் ஊர் பேர் எல்லாம் மென்ஷன் பண்ணி சவால் கேட்டா விடாது பாம்பு.

இப்படித்தேன் ஒரு பார்ட்டி திருஷ்டி சுத்தி போட்ட லெமன்ல தான் ஜூஸ் போட்டு குடிப்பேன்னு அடம் பிடிச்சது .நம்ம கிட்டே மோதறச்ச ட்ராயிங் டீச்சர். நமக்கு வெட்டிப்பேச்செல்லாம் பிடிக்காதுங்கோ. உடனே ஒரு கால் காயிதம் எடுத்து 5 பாய்ண்ட் எழுதிக்கொடுத்தேன். 6 மாசம் கழிச்சு பேசிக்கலாம்னேன்.கால் காயிதத்துல நாம எழுதிக்கொடுத்தமாதிரி சாக்கடை ஓரமாவே டப்பாவ பிடிச்சுக்கிட்டு பொழப்ப ஓட்டவேண்டியதாயிருச்சு.

ஆரோ ஒரு ஜோசியரை(?) -ஊர் பேர் போட்டு புள்ளிவிவரம் கொடுத்திருக்காரு. இந்த மாதிரி உபகதையெல்லாம் ஞானும் நிறைய எழுதியிருக்கன். ஆனால் ஊர் பேர் எல்லாம் போடக்கூடாது. தமிழ் கத்தோலிக்கருக்கு என் அறிவுரை இதான். பை தி பை பெரியாரோட வாழ்க்கையில ஒரு சம்பவம். யாரோ வந்து விபூதி நீட்டறாய்ங்க. ( வச்சு விடறாய்ங்களா என்ன ஞா இல்லை) ஸ்பாட்ல எதிர்பார்ட்டி இருக்கிற வரை அதை துடைக்கலை. ஏன்னா விபூதி கொடுத்தவரோட மனசை காயப்படுத்தக்கூடாதுங்கற பெரியமனுஷத்தனம்.

பெரியாருக்கு வமிசா வழியா வந்த கோவில் தர்ம கர்த்தா பொறுப்பை கடைசிவரை நிறைவேத்திக்கிட்டிருந்த கதை தெரியுமா? சாமி பேரை சொல்ல ஊரை ஏமாத்தற சங்கராச்சாரி, நித்யானந்தா மாதிரி சாமிகளை விட ஈ.வெ.ராம சாமி தேன் உண்மையான துறவிங்கறது என் முடிபு.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா - இது உண்மையான ஆன்மீகம். " மானவ சேவே மாதவ சேவா -இது உண்மையான ஆத்தீகம். இது ரெண்டுத்துக்கும் நடுவுல பூந்தா அது அமாவாசை இருட்டு பெருச்சாளினு அர்த்தம்.

பார்ட்டியோட தர்ம சந்தேகம்(?) என்னடான்னா "ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?"
ஏன்யா டாக்டருக்கு பன்றிக்காய்ச்சல் வருவது தெரீமானு கூட கேப்பிக போல. பேசிக்கலா ஜோசியரும் ஒரு மனுஷ ஜன்மம் தேன். அவருக்கும் கக்கா,மூச்சா, நல்ல நேரம்,கெட்ட நேரம் எல்லாம் வரும். அவரு தன்னைப்பத்தியே 24 மணி நேரம் ,365 நாள் நினைச்சிட்டிருந்தா மக்களுக்கு என்னத்த சொல்லமுடியும்.
அப்படியே அவரு தன் ஜாதகத்தை வச்சுக்கிட்டு பார்த்தாலும் அது அவரோட ஜாதகம்னாலும் சனி -செவ் சேர்க்கைக்கு கூட எங்கனா ரிலாக்சேஷன் இருக்கான்னுதான் பார்ப்பாரு. (இதுவே ஊரான் ஜாதகம்னா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு)

ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியணும் தான். அவிக ஈகோ ,தன்னோடதுங்கற எண்ணம் முழுக்க தெரிய விடறதில்லை. அதுக்காவ அது பெரிய டிஸ்குவாலிஃபிகேஷன் ஆயிருமா என்ன?

லாயருக்கு தண்டனை கிடைக்காதா? தாளி தீர்ப்பு சொல்ற நீதிபதிக்கு , சட்டத்தை வடிவமைக்கிற எம்.எல்.ஏ,எம்.பிக்கே தண்டனை கிடைக்குது. ஆனானப்பட்ட இந்திராகாந்திக்கே கைவிலங்கு போட்டாய்ங்க. அவிகளையும் நம்ம கத்தோலிக்க பெரியார் கூண்ட்ல் ஏத்திருவாரு போல.


"கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" கர்த்தர் வேற கர்த்தரோட படைப்பு வேற இல்லை. கோள்களும் படைப்பின் ஒரு பாகமே. நான் கர்த்தாவுக்கு மட்டும் பயப்படுவேன் அவரோட படைப்புக்கு பயப்படமாட்டேன்னா அது அவிக ஞானத்துக்கு சம்பந்தப்பட்ட மேட்டர். நாம அம்பேல்.

//நாம் எல்லோருமே எப்போதாவது ஜோசியர்களை சந்தித்திருப்போம். நம் எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகுது என தெரிந்து கொள்ள. இப்படி மற்றவர்களின் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என புட்டு புட்டு வைக்கும் இவர்களின் எதிர்காலத்தில், என்ன நடக்கும் என, இவர்களுக்கு தெரியுமா? என்னும் சந்தேகம் நீண்ட நாட்களாகவே எனக்கு இருக்கிறது//

பாஸ்! உங்களுக்கு அந்த சந்தேகமே வேணா.. உங்களை மாதிரி பார்ட்டிகளோட சந்தேகத்தை நிவர்த்திக்கத்தான் கடவுள் சூப்பர் டூப்பர் யோக ஜாதகத்துல என்ன மாதிரி ஒரு அராத்தை படைச்சு - உங்களை மாதிரியெல்லாம் பேச வச்சு -ஸ்டெப் பை ஸ்டெப்பா தேத்தி வச்சிருக்காரு.

உங்களுக்கொரு ரகசியத்தை சொல்லவா? என்னோட ஜாதகம் யோகஜாதகம்னு ஜோதிடம் கன்ஃபார்ம் பண்ணாம இருந்திருந்தா தாளி ..நானும் உங்க பக்கம் இருந்துக்கிட்டு உங்களை மாதிரியே வெட்டிப்பதிவு போட்டுக்கிட்டிருந்திருப்பேன்.

//என் ஊரிலுள்ள ஒரு ஜோசியருக்கு நடந்த சம்பவம்தான்.//

ஒரு ஜோசியருக்கே இல்லை. ஜோதிடத்தை ஜஸ்ட் ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம்மா பார்த்து "தொழில்" நடத்தற எல்லா பிக்காலிகளுக்கும் இப்படித்தேன் நடக்கும். மேட்டர் ரெம்ப பர்சனலா போறதால நான் ஜகா வாங்கிக்கறேன் பாஸ்!

//இப்போ நம்ம ஜோஷிய திலகங்கள் சதீஷ் குமார், சித்தூர் முருகேசன் இன்னும் சிலர் பிரபல பதிவர்களாக இருப்பதால் இதை கேட்டு விட்டால் போச்சு என தோன்றியது. அதுதான் இந்த பதிவு.//

பதில் கொடுத்தாச்சு . வவுறு ரெம்பி போச்சா.(தொண்டை வரை வந்திருக்கனுமே ) உங்க நல்ல நேரம் சதீஷ் பார்வைக்கு உங்க பதிவு போகலை போல.அவரும் பரிமாறினாருன்னு வைங்க .. அஜீரணம்தான்

//இந்த ஜோசியர்களுக்கு அவர்களுக்கு நடக்கப்போவது தெரியுமா?//
100% தெரியும் வாத்யாரே.. இப்ப நமக்கு செவ் தசையில குரு புக்தி நடக்கு. குரு 6/9 க்கு அதிபதி. மொதல்ல ஒரு வழக்கோ, கைதோ நடக்கும். அப்பாறம் லைம் லைட்டுதேன்.( நம்முது கடக லக்னம் -லக்னத்துல குரு உச்சம்)

தனி மனிதர்களை வைத்து முடிவெடுக்காதிங்க..அப்பாறம் எந்தெந்த பாதிரியெல்லாம் அஜால் குஜால் பண்ணினாய்ங்கனு லிஸ்ட் போடவேண்டிவந்துரும். கிறிஸ்தவம் புனிதமானது - யாரோ ஒரு பாதிரியார் வேணம்னா அராத்தா இருக்கலாம். அதே மாதிரி ஜோதிடம் புனிதமானது. யாரோ ஒரு ஜோதிடர் வேணம்னா டுபுக்கா இருக்கலாம்

பி.கு: தங்கள் உத்தேசம் ஜஸ்ட் ஒரு பரபரப்பை கிளப்புவது மட்டுமேயானால் என் பதிவில் இத்தனை காட்டம் தேவையில்லை. ஆனா என்ன பண்றது நமக்கு வாக்குஸ்தானத்துல சனி. பதிவு உங்க மனசை புண்படுத்தியிருந்தா சாரி.

திருப்பதி -ஒரு ஜோதிட அலசல்


என்னங்கடா இது தமிழ் வாரப்பத்திரிக்கைகளை திட்டிதீர்க்கிற முருகேசனாரும் அவிக வழிக்கு போயிட்டாப்ல இருக்கு. சம்பந்தா சம்பந்தமில்லாத படத்தை வச்சிருக்காருனு நினைச்சுராதிங்க. பதிவின் கடைசியல காரணத்தை விளக்கியிருக்கேன்.

தமிழ் நாட்டு சனம் மொட்டையா(?) திருப்பதிங்கறாய்ங்க. ஆனால் இங்கன உள்ள வழக்கு ( பழக்கமுங்கோ) என்னடான்னா கீழே உள்ளதுதான் திருப்பதி. மலை ஏறிட்டா திருமலை. நான் இந்த பதிவுல பேசப்போறது திருமலையை பத்தித்தான்.

நமக்கு இந்த வேதம், இதிகாசம்,புராணம்லாம் ரெண்டாம் பட்சம் தான். நம்ம அளவுகோல் அனுபவம். அங்கன யாரேனும் ஒரு பார்ட்டி இருந்தா அந்தாளு என் கிட்டே பேசனும். என் பேச்சை கேட்கனும் (ஐ மீன் ஃபாலோ பண்றதில்லை -ஹியர் பண்ணனும்) ரெஸ்பாண்ட் ஆகனும். இல்லாட்டி ஆள விடுதேன்.

ஆன்மீகத்துல உள்ள இம்சை என்னடான்னா தன் ஆடையை தொட்டு சொஸ்தமடைந்த பெண்ணுகு ஏசு நாதர் சொன்னாரே "உன் விஸ்வாசம் உன்னை சொஸ்தமாக்கியது"ன்னு அப்படி ஆன்மீகத்துல 2+2ல்லாம் கிடையாது. தாளி ஆளுக்கொரு விடையை கொடுத்து மண்டை காய வச்சுரும்.

ஆனா ஜோதிடப்பார்வையில நவகிரகங்களுக்கும் நைன் இன் ஒன் பரிகாரம் ஏழுமலையான் தரிசனம். எப்படின்னு கேப்பிக.சொல்றேன்.

மலை மேல இருக்கிறதால சூரியனுக்கு. ( ஆனால் நோகாம பஸ்ஸுல போயி இறங்கிட்டா சூரியனுக்குரிய பரிகாரம் ஒர்க் அவுட் ஆகாது. மணிக்கு மணி பெருமாளுக்கு அலங்காரம் மாத்திர்ராய்ங்க.( இன்ஸ்டேபில் பொசிஷனுக்கு அதிபதி சந்திரனுங்கோ நினைச்சப்பல்லாம் கண்ணாலம் (முகூர்த்தகாலத்துக்கு அதிபதி சந்திரனுங்கோ). அப்பாறம் கச்சாமுச்சானு தீர்த்தங்கள் இருக்கு. ( சந்திரன் ஜலகாரகன்) அதுலயெல்லாம் தீர்த்தமாடினா சந்திரனுக்கு பரிகாரம். அங்கன இந்த நிமிசம் பார்த்த முகத்தை அடுத்த நிமிசம் பார்க்கமுடியாது.

நடை பாதையில அப்பப்போ புலி,சிறுத்தை எல்லாம் ஹலோ சொல்லுதாம்.. ( குரூர மிருகங்களுக்கு அதிபதி செவ்) . நீங்க போன தினம் புலி,சிறுத்தை வந்தாலோ வந்து போயிருந்தாலோ செவ்வாய்க்கு பரிகாரம். மேலும் பெருமாளொட கை போஸ்ச்சரை பார்த்து உள்ளாற வேல் இருந்தது.பிடுங்கிட்டானுவ அதனால அது முருகன் தானும் சொல்றாய்ங்க. செவ்வாய்க்குரிய கடவுள் முருகன்.

பிரகார சுவர்ல பார்த்தா சிங்கம்லாம் இருக்கும். அதனால உள்ளாற இருக்கிறது சக்தின்னும் சிலர் அடிச்சு சொல்றாய்ங்க. ராகுவுக்குரிய தேவதை துர்கை. அதனால ராகுவுக்கும் பரிகாரம்.எவனேனும் சினிமாக்காரன் வந்து ப்ரேக் தரிசனம்னுட்டு க்யூ காம்ப்ளெக்ஸ்லயோ,க்யூ லைன்லயோ கூடுதலா ஒரு மணி நேரம் மாட்டிக்கிட்டா இன்னம் கொஞ்சம் காட்டமான பரிகாரம்.

அப்பாறம் இன்னொரு மேட்டர் அழுக்கு போக குளிச்சவனில்லேங்கற மாதிரி திருப்பதி போய் ஏமாறாம வந்தவுக கிடையாது. எந்தளவுக்கு ஏமாந்தா அந்த அளவுக்கு பரிகாரம்.

அதே மாதிரி அய்யருங்க கிட்ட ஏமாந்தாலோ , அரசியல் வாதிகள்,மந்திரிகள் காரணமா காத்திருப்பு அதிகமானாலோ குருவுக்கு பரிகாரம். உள்ளாற உள்ளது சக்திங்கறாய்ங்க. சக்தி வேறே சிவம் வேறேன்னு இல்லை.அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுன்னு கேள்விப்பட்டிருப்பிங்க. குருவுக்குரிய கடவுள் ஷிவா . ஆக திருப்பதி போறது குருவுக்கும் பரிகாரம்

சனின்னா அடிமைப்படல்,சிறைப்படல் ( க்யூகாம்ப்ளெக்ஸ்ல இதான் நடக்குது) மொட்டைபோடற இடத்துல , பொதுக்கழிவறையில டாக்சி ட்ரைவர்கிட்டேல்லாம் ஏமாந்தா சனிக்கு பரிகாரம். மேலும் பெருமாளே ஒரு க்டனாளி (குபேரன் கிட்டே கடன் வாங்கின கதை தெரியுமில்லே) ஒரு கடனாளி ( நாம) இன்னொரு கடனாளியை போய் வணங்கறது எவ்ள பெரிய அவமானம் அதனால இது சனிக்கு பரிகாரம்.(கடன் பட்டவன்னாலே சனிதேன் -அவனை பிழிஞ்சு எடுத்து வட்டி வாங்கறவன் அவனை பெரிய சனி)

புதன்னா கடைத்தெரு. திருப்பதி போய் ஷாப்பிங் பண்ணா மொட்டைதேன் (இது ரெண்டாவது) அப்படி ஏமாந்தா புதனுக்கு பரிகாரம். உணர்ச்சி வசப்பட்டு தேவஸ்தானம் பப்ளிகேஷன்ஸ்ல புக்ஸ் வாங்கினா இன்னம் டபுள் ஸ்ட்ராங் பரிகாரம்.

யதேஷ்டமா சில்லறை,க்ரெடிட் கார்டு, புதுசா வாங்கின காரு, சொந்த தொகுதி எம்.எல்.ஏவோட லெட்டர், தரிசனம் கம் தங்குமிடத்துக்கான ஆன்லைன் புக்கிங், 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா தாளி பிளாட்ஃபாரம்தேன்.(சுமார் சுத்தமா இருக்கும்.பயந்துக்காதிங்க) அப்படி பிளாட்ஃபாரத்துல படுத்து இமிசை பட்டு தரிசனம் பண்ணா கேதுக்குரிய பரிகாரம்.

உணவு,உடை,இருப்பிடத்துக்கு சுக்கிரன் தான் காரகம்.மேற்சொன்ன சில்லறை முதல் 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா எல்லாத்துக்கும் அல்லாடவேண்டியதுதான். இதெல்லாம் சுக்கிரனுக்கு பரிகாரம். சுக்கிரனுக்குரிய தேவதை லட்சுமி. இந்த பார்ட்டி பெருமாள் மார்லயே இருக்கிறதா ஐதீகம். ஆக பெருமாளை தரிசனம் பண்ணா லட்சுமியையும் கரெக்ட் பண்ணமாதிரிதேன்.

ஆக திருப்பதி போறது -ஏழுமலையானை தரிசனம் பண்றதுங்கறது 9கிரகத்துக்கும் நைன் இன் பரிகாரமுங்கோ. நகை நட்டுல்லாம் இல்லாம, ஏதோ காட்டன் புடவை, வேட்டி அரைக்கை சட்டைன்னு புறப்பட்டு பஸ்ஸுல போய் பஸ்ஸுல வாங்க. 9கிரகமும் 9 வாரத்துக்கு வேலை செய்யாதுன்னா பார்த்துக்கங்க.

இந்த பதிவை எழுத இன்ஸ்பிரேஷன் தமிழ் ஓவியாவோட பதிவுதான். எதையும் எதோடவும் தொடர்பு படுத்தமுடியும்.(கேயாஸ் தியரி) ஆனால் நாம அந்த வேலைக்கெல்லாம் போறதில்லை.

உள்ளதை இன்டர்பிரிட்டேட் பண்றோம். தட்ஸால். தமிழ் ஓவியாவோட பதிவைஅவசியம் படிங்க. .உண்மையில இந்த பதிவு அவிக போடவேண்டிய பதிவே இல்லை.ஒரு "இறையன்பர்" அதிலும் "பெருமாள் பக்தர்" போடவேண்டிய பதிவு. ஆனால் தமிழ் ஓவியா போட்டிருக்காய்ங்க.இங்கனதான் பெருமாள் நிக்கறாரு.

தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அவரது வலைப்பூவுக்கு ஒரு ஹெடரை டிசைன் பண்ணவச்சேன் அதைத்தான் இந்த பதிவுக்கு படமா வச்சிருக்கேன். படத்தை மெயில் மூலம் அனுப்பறேன். அதுக்குள்ளாற் இங்கே க்ளிக் பண்ணி அவிக போட்ட பதிவை படிங்களேன்.

Saturday, February 19, 2011

ஜோதிடத்தின் பெயரால் மோசடிகள்

முன்னுரை:
தனி நபர்களான குடுகுடுப்பைக்காரர்கள், நடைபாதையில் "பொழப்ப" பார்க்கும் கிளி ஜோதிடர்கள், புரோகிதத்துடன் உபரி வருமானம் கிடைக்கிறதே என்று இதில் தலை கொடுக்கும் பிராமணர்கள், தாங்கள் விக்கிரக ஆராதனை செய்வதாலேயே அவரது படைப்பான கிரகங்கள் தங்களுக்கு ரெம்ப க்ளோஸ் என்ற எண்ணத்துடன் "மேனேஜ்"செய்யும் அர்ச்சகர்கள், என் போன்று இதர சாதியில் பிறந்தாலும் பித்தாகி , பின் ஜோதிடர்களாய் மாறும் ஜோதிடர்கள், எங்களிலேயே தொழில் காரணமாய் கிடைக்கும் அங்கீகாரத்தால் அவாளாகவே மாறிவிட்ட பூச்சிகள் , அரைகுறைகள் முதல் கிராமப்புற ஜோதிடர்கள் வரை சிறிய அளவில் செய்யும் மோசடிகள் ஒருபுறம்.

நகரங்களில் ஏ.சி வசதியுடன் ஆஃபீஸ் ,தனியார் தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், ஆயிரக்கணக்கில் ஃபீஸ் என்று பட்டையை கிளப்பும் கார்ப்போரேட் ஜோதிடர்களின் மோசடிகள் ஒரு புறம் ,

பத்திரிக்கைகள், இணைய தளங்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை போகும் மோசடிகள் மறுபுறம். இப்படி பல முனை தாக்குதல்கள் நடக்கின்றன.

(இவை கூட சில நேரம் பலித்துவிடுகின்றன. சில நேரம் பலித்துப்போனதாலேயே மக்கள் விளக்கை நாடும் விட்டில் பூச்சிகள் மாதிரி மீண்டு மீண்டும் வட்டமிடுகின்றனர். வாட்டமடைகின்றனர். இது எப்படி என்பதை பின்னொரு சமயம் தனிப்பதிவாகவே இடுகிறேன். இப்போதைக்கு அம்பேல்)

இவை மக்களை தவறான வழியில் நடத்துவதோடு ஜோதிடத்தின் நம்பகத்தன்மையையும் குலைத்து வருகின்றன. ஜோதிடத்தின் பெயரால் நடை பெறும் மோசடிகளை விவரிப்பதும் , இவற்றிலிருந்து தப்ப வாசகர்களுக்கு சில டிப்ஸ் தருவதும் இக்கட்டுரையின் முககிய நோக்கம்.

ஜோதிடத்தின் பேராலான மோசடிகளை வெளிச்சம் போடுவது ஒரு ஜோதிடனாய் , ஜோதிட ஆய்வாளனாய் என் கடமை. அவற்றிலிருந்து தப்ப வழி கூறுவது ஒரு மனிதனாய் என் கடமை. ( இதை சேம் சைட் கோல் என்பீர்களோ? கோடாரிக்காம்பு என்று சக ஜோதிடர்கள் வைவார்களோ? அல்லது " இவாள் சொல்லிண்டா அது ஆராய்ச்சி நாம சொன்னா ஏமாத்தா" என்று அவாள் திட்டி தீர்ப்பார்களோ? அதது அவரவர் விருப்பம்.


இனி கட்டுரைக்கு போயிரலாமா?

எது தமக்கு அன் அவெய்லபிளாக இருக்கிறதோ அதற்காக தவிப்பது மனித மனதின் இயற்கை. எதிர்காலம் குறித்த அறிவும் அன் அவெய்லபிள். எனவே தான் மனிதர்களுக்கு ஜோதிடத்தின் மீது இத்தனை கவர்ச்சி. டிமாண்ட் சப்ளை தியரி படி ஒரிஜினல் சரக்குக்கான சப்ளை ரெம்ப ரெம்ப குறைச்சலாக இருக்கிற காரணத்தால் ஜோதிடர்களும், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளின் ஜோதிட சிறப்பு பகுதிகளும் கடை பரப்பும் போலி சரக்குகள் சக்கை போடு போடுகின்றன.

கவர்ச்சிக்கு காரணம்:

மேலும் எதிர்காலம் குறித்த அறிவை பற்றி சிந்திக்கும்போது அது ஏதோ ஒரு காலத்தில் நமக்கு 100 சதவீதம் அவெய்லபிளாக இருந்துள்ளது. எப்படியோ அதை இழந்து விட்டோம் என்ற உள்ளார்ந்த உணர்வு நமக்குள் இருக்கிறது. அதை திரும்பபெற வேண்டும் என்ற வெறியும் இருக்கிறது .( ஆம் தற்போதும் அது அவெய்லபிள்தான். ஆனால் நமது மூளையில் உள்ள ஆழமான பகுதிகளில் அது புதைந்துள்ளது. அகந்தை /ஈகோ என்ற திரைக்கு பின்னால்) . தியாகய்யர் மாதிரி " தெர தீயகராதா"ன்னு உயிர் உருக பிரார்த்தனை செய்தால் அதுவாய் விலகலாம். விலகினால் எதிர்காலம் தரிசனமளிக்கலாம்.

முக்கால ஞானம் :

ஆம். முக்கால ஞானம் அனைவருக்கும் இருந்தது . ஏன் இப்போதும் உள்ளது. என்ன ஒரு அசௌகரியம் என்றால் அது வறண்டு வரும் நிலத்தடி நீர் மாதிரி சற்றே ஆழத்துக்கு போய்விட்டது . யூனிவர்சல் மைண்ட் ,இண்டிவியூஜுவல் மைண்ட் இந்த இரண்டு விஷயங்களையும் , இவற்றிற்கிடையே உள்ள வித்யாசத்தை தெரிந்து கொண்டால் நான் சொல்லவரும் விசயம் தெளிவாக புரியும்.

யூனிவர்சல் மைண்ட் & இன்டிவீஜுவல் மைண்ட்:

குழந்தை பிறக்கிறது. அதற்கு தன்னையும், தன்னை சுற்றியுள்ள பொருட்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாது. ஆனால் சுற்றியுள்ளவர்கள் அதன் மூளைக்குள் தான் என்ற எண்ணத்தை புகுத்துகிறோம். அதுவரை தான், தன்னை சுற்றி உள்ளவர்கள், தான் வாழும் இந்த பூமி, நவ கோள்க்ள், பால் வீதி இத்யாதிகளின் முக்காலத்தையும் உள்ளடக்கிய யூனிவர்சல் மைண்டுடன் இந்த பூமிக்கு வந்த குழந்தையின் மூளைக்குள் நாம் புகுத்தும் "தான்" என்ற எண்ணம் சென்று மூளையின் கோடானு கோடி யூரான்களில் முக்காலம் உணர்த்தும் நியூரான் களை தூக்க நிலையில் ஆழ்த்திவிடுகிறது.

இழந்ததை பெறவே துடிப்பு:

நாம் ஒவ்வொருவரும் முக்காலம் உணர்த்தும் யூனிவர்சல் மைண்டுடன் இம்மண்ணுக்கு வந்தவர்கள்தான்.பாழாய் போன ஈகோ நம் மூளைக்குள் நுழைந்து (பெற்றோராலும், ஆசிரியர்களாலும் நுழைக்கப்பட்டு) அது இண்டிவியூஜுவல் மைண்ட் ஆக்கிவிட்டது. இதனால்தான் முன்னொரு காலத்தில் நாம் பெற்றிருந்த செல்வம் என்ற காரணத்தால்தான் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஜோதிடத்தின் பேரில் இத்தனை ஈர்ப்பு.


இந்த முக்கால ஞானம் குறித்த ஈர்ப்பு சாதாரணர்க்கே அதிகம் என்றால் புத்திசாலிகள், பற்றி வேறே சொல்வதற்கென்ன இருக்கிறது. இதனால் தான் தமது துறையில் புலிகளாக விளங்கும் அறிவு ஜீவிகள்கூட ஜோதிடத்தின் பால் ஈர்க்கப்பட்டு ,ஜோதிடர்களால் ஏமாற்றப்படுகின்றனர். இந்த ஈர்ப்புக்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஜோதிடம் என்பது லாஜிக்கல் கேல்குலேஷன் தான் என்று என் போன்றவர்கள் கையில் அடித்து சத்தியம் செய்வதே.

என்னதான் பெரியார் குறித்த பயத்தால் இப்படி என் போன்றவர்கள் வாதனை செய்தாலும் அதில் ஒரு வித "நிச்சயமற்ற தன்மை" "இருண்மை தன்மை" இருக்கத்தான் செய்கிறது. அதுதான் மனிதர்களை தன் பால் ஈர்க்கிறது.

உண்மையில் ஏமாற்றுவதே அவர்களின் நோக்கமா ?

இல்லை என்றுதான் கூற வேண்டும் . அறியாமை - போதாமை என்று வேண்டுமானால் சொல்லலாம் . எதிர்காலம் என்பது தேவரகசியம். யாருக்கு இதன் பால் ஆர்வமில்லையோ அவர்களுக்கு மட்டுமே இது தரிசனமளிக்கும் . ஓஷோ சொல்வது போல் அந்தந்த நொடியில் வாழ்பவருக்கு தான் எதிர்காலத்தின் மேல் ஆர்வமிராது. யார் மனதில் அகந்தை இல்லையோ, யார் மனதில் சுய நலம் எள்ளளவும் இல்லையோ அவர்களுககு தான் எதிர்காலத்தின் மேல் ஆர்வமிராது.

அந்த ஆர்வமற்றவர்களுக்குதான் எதிர்காலம் தரிசனமளிக்கும். இந்த எளிய உண்மை சாதாரண மக்களை போலவே ஜோதிடர்களுக்கும் புரிவதில்லை. இதனால் தான் எதிர்காலம் குறித்த அறிவு என்பது குருவித்தலையில் பனங்காய் ஆகிவிடுகிறது. மேற்சொன்ன விவரங்கள் தெரியாது ஜோதிடர்கள் ஜோதிடம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள் . இதனால் அவர்கள் ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டில்லாத போதிலும் அவர்கள் கூறும் ஜோதிடம் பல்லை இளித்து ஏமாற்று வேலையாகிவிடுகிறது.

அறிவியல் கண்ணோட்டமில்லை:

முதற்கண் மக்களும் ஜோதிடர்களும் ஜோதிடம் குறித்த அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். முன் சொன்னாற்போல் யார் மனதில் அகந்தையோ,சுய நலமோ எள்ளளவும் இல்லாமலிருந்தனவோ அந்த ரிஷிகள்,மகரிஷிகள் கிரகங்களின் சஞ்சாரத்தையும், அவை மக்கள் கூட்டத்தின் உடல்,மனம்,புத்தி மேல் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் தொகுத்து எழுதி வைத்துள்ளனர். அவற்றை கூட உருப்படியாக படித்தறியாமல் ஐந்தோ பத்தோ ஜோதிட பழமொழிகளை மட்டும் தெரிந்து வைத்து கொண்டு ஜல்லியடிப்பது தவறு.

கோசார பலன்கள்:

தினசரி,வார, மாத பத்திரிக்கைகளில் வெளி வரும் பலன்கள் யாவுமே கோசாரத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்படுகின்றன. கோச்சார பலன் என்பது தற்போது உள்ள கிரக நிலையை பொருத்து கூறப்படுவதாகும் . ஜாதகர் பிறந்தபோது இருந்த கிரக நிலையை பொருத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது . ஓஷோ கூறுவது போல் தாயின் மணிவயிறு ஒரு கேமரா . ஷட்டர் திறந்து எதிரிலுள்ள காட்சி ஃபிலிமில் பதிவாவது போல் சகல பாதுகாப்புகளுடன் தாயின் வயிற்றிலிருந்த குழந்தை வெளியே வந்ததுமேஅந்த நேரத்து கிரக ஸ்திதி அக்குழந்தையின் மீது அழுத்தமான முத்திரையை பதித்து விடுகிறது. அதற்கு பின் மாறும் கிரக நிலைகளின் (கோசாரம்). பாதிப்பு என்பது புகைப்படத்தின் மீது படியும் தூசு போன்றதே.
ஆனால்பத்திரிக்கைகளும், இணைய தளங்களும் இதனை பெரிய விசயமாக்கி பலன்களை விரிவாக வெளியிட்டு தம் வியாபாரத்தை பெருக்கிக்கொள்கின்றன

கோசாரம் Vs தசாபுக்திகள் :

ஜாதகத்தை வாகனத்தோடு ஒப்பிட்டால் கோச்சாரத்தை சாலைக்கு ஒப்பிடலாம். மோசமான சாலையில் (தற்கால கிரக நிலை) பயணித்த மாத்திரத்தில் நல்லதொரு வேகம் குறைந்து விடாது , புகையை கக்க ஆரம்பித்து விடாது . சக்கரங்கள் கழண்டு போகாது வாகனம் கவிழ்ந்து விடாது. ஏனெனில் அந்த வாகனத்தில் அதற்கான ஏற்பாடுகள் ( உதாரணமாக :ஷாக் அப்ஸர்வர்ஸ்) அற்புதமாக அமைந்திருக்கும்.

மோசமான ஒரு வாகனம் என்ன தான் சிக்ஸ் ட்ராக் சாலையில் பயணித்தாலும் அதன் வேகம் அதிகரித்துவிடப்போவதில்லை. இந்த எளிய உண்மையை அறியாது அல்லது இருட்டடிப்பு செய்து கோசார பலன் களை வெளியிடுவதும். அவை தவறும்போது வாசகர்கள் ஜோதிடத்தையே விமர்சிப்பதையும் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். இதனால் ஜோதிடத்தின் நம்பகத்தன்மையே குறைந்து விடுகிறது.

(பேர்) ராசி பலன்கள்:

ஜாதகர்கள் தாம் பிறந்த நட்சத்திரம் ,பாதம் பிரகாரம் ராசிகளுக்கு அறிந்து கொள்ளும் கோசார பலனே முட்டாள்தனமானது என்று நான் கூறுகிறேன். ஆனால் பல ஜோதிடர்கள் ஜாதகர் வந்து அமர்ந்ததும் பெயரை கேட்டு பலன் சொல்லி முடித்து விடுகின்றனர். நாய்க்கு டைகர் என்று பெயர் வைத்த மாத்திரத்தில் அந்த நாய் புலியாகிவிடுமா என்ன ? பெயர் என்பது LABLE மட்டுமே ..ஜாதகப்படி வைக்கப்பட்ட பெயருக்கு சொல்லும் பலனே 10 முதல் 20 சதவீதம் தான் பலிக்கும் என்ற நிலையில் இந்த பேர் ராசி பலன் களை என்னென்பது ?

திருமண பொருத்தம்:

தனிப்பட்ட பலன்களை ஏறுமாறாக கூறித்தொலைத்தாலும் ஓரளவு மன்னிக்கலாம். ஆனால் ஜோதிடர்களில் பலர் திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கும்போதும் வெறுமனே நட்சத்திரத்துக்கும், பெயருக்கும், செல்லப்பெயர், தொட்டிலில் போட்டபெயர் , அந்த கணம் முடிவு செய்த பெயர்களுக்கு பொருத்தம் பார்த்து பச்சைக்கொடி காட்டிவிடுகிறார்கள். இது அந்த மண மக்களுக்கே அல்ல அவர்கள் குடும்பத்துக்கும் , ஜோதிடத்துக்கும் செய்யும் துரோகமாகும். இப்படி டுபாகூர் பொருத்தங்கள் பார்த்து திருமணம் செய்து அவதி படுவதை விட சாமி முன்னே பூ போட்டு பார்த்து முடிவு செய்யலாம். அந்த சாமியாவது காப்பாற்றும். அல்லது பெரியார் வழிக்கு சென்று மருத்துவ சோதனை (முக்கியமாக ஹெச்.ஐ.வி ) செய்து முடிவெடுத்தால் பகுத்தறிவு வாதியென்ற பட்டமும் கிட்டும். ஐயா அவர்களின் புனித ஆத்மாவாவது அந்த தம்பதிகளை காக்கும். (ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா /மானவ சேவா மாதவ சேவா என்று வாழ்ந்த ஐயா அவர்களின் ஆத்மாவுக்கு அந்த சக்தி நிச்சயம் உண்டு)

அடைந்தால் மகா தேவி

ஒன்று ஒழுங்காக ஜாதகம் பார்த்து தோஷங்களை ஆராய்ந்து அதன் பிறகு நட்சத்திர பொருத்தம் பார்த்து ரஜ்ஜு,நாடி வெவ்வேறாக வந்தால் திருமணம் செய்ய வேண்டும். இல்லையா ஒன்று சாமி அல்லது ராமசாமி ! (பெரியார்) வழியை பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டு டுபாகூர் ஜோதிடர்களிடம், டுபாகூர் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் மட்டுமல்ல கேணத்தனம்.

ஆஹா ! ஓஹோ ! பலன்கள்:

சில ஜோதிடர்கள் முகஸ்துதி செய்தே ஜாதகர்களை ஒழித்து கட்டிவிடுவார்கள். வெறுமனே சில பாடல்களை பாடி அந்த யோகம் இந்த யோகம் என்று அளந்து விடுவார்கள். அடிப்படையான விஷயங்களை மறைத்து விடுவார்கள். ஜாதகத்தில் ஆயிரம் யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்கும் அமைப்பு அந்த ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும். முக்கியமாக லக்னம்,லக்னாதிபதி பலம் பெற்றிருக்க வேண்டும். லக்னம் முதல் 6,8,12 இடங்கள் காலியாக இருக்க வேண்டும். இந்த இடத்ததிபதிகள் லக்னாதிபதியை பார்ப்பதோ, அவருடன் சேர்வதோ கூடாது. முக்கியமாக லக்னாதிபதி நீசமடைதல், அஸ்தங்கதம் அடைதல் ,ராகு கேதுக்களுடன் சேருதல், பகை கிரகங்களுடன் சேருதல் இத்யாதி அமைப்புகள் கூடாது.

யோகத்தை அனுபவிக்க நிபந்தனைகள்:

ஏதோ ஒரு கிரகம் உச்சமானவுடனே அண்ட புளுகு,ஆகாச புளுகை அளந்து விட்டால் மயங்கி விடாதீர்கள். அந்த கிரகம் உங்கள் லக்னத்துக்கு யோககாரகனாகவோ ,கு.பட்சம் சுபனாகவோ இருக்க வேண்டும். நீசம்,ஹஸ்தங்கதம், மற்றொரு உச்சனால் பார்க்கப்படுவது போன்ற அவயோகங்கள் இருக்ககூடாது. நீங்கள் அந்த கிரகம் தொடர்பான துறை,தொழிலில் இருக்க வேண்டும். அந்த கிரகம் தொடர்பான மனிதர்களுடன் உறவாட வேண்டும். உங்களுக்கு இண்டியன் வங்கியில் கணக்கு திறந்து ஒரு நபர் அதி கோடி ரூபாய் போட்டிருந்தாலும் கு.பட்சம் ஏடிஎம் அட்டை வாங்கவாவது அந்த வங்கிப்பக்கம் போனால் தானே பணம் எடுக்க முடியும்.


நியூமராலஜி /நேமாலஜி :

அஸ்ட்ராலஜியில் கணக்கற்ற விதிகள் இருப்பதாலோ என்னவோ தொழில் முறை ஜோதிடர்களில் பலர் நியூமராலஜி /நேமாலஜிக்கு மாறிவிட்டனர். மக்களில் பலருக்கும்
முக்கியமாய் நடு வயதில்முன்னேறியவர்களுக்கும் பிறந்த தேதி இத்யாதி தெரியாத நிலையில் இவற்றிற்கு ஆதரவு பெருகி வருகிறது. (மேலும் ஜாதக நோட்டை தூக்கிகொண்டு அலையவேண்டி வராதே)

அஸ்ட்ராலஜி Vs நியூமராலஜி :/நேமாலஜி

அஸ்ட்ராலஜியில்கிரகங்கள், நியூமராலஜியில் எண்கள் அவ்வளவுதானே வித்யாசம் என்று நீங்கள் நினைக்கலாம். நியூமராலஜியில் உள்ள சிக்கல் என்ன என்றால் இதில் கூறப்படும் பிறப்பு எண் , கூட்டு எண், பெயர் எண்களுக்கு உரிய கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் வலிமையுடன் வீற்றிருந்தால் தான் நியூமராலஜி நிபுணர் (?) கொடுக்கும் ரிசல்ட் ஒர்க் அவுட் ஆகும். இல்லையென்றால் நீங்கள் கொடுத்த காசு காக்கா தூக்கிட்டு போனமாதிரிதான். இதே விதிதான் நேமாலஜிக்கும். உதாரணமாக சுக்கிரன் சுபனாக பலனளிக்கும் ஜாதகத்தில் நீங்கள் பிறந்திருந்து , சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தாலன்றி நேமாலஜிப்படி செய்யும் பெயர் மாற்றங்கள் இத்யாதி காதலிலோ,
திருமணத்திலோ வெற்றியை தராது.

அனுபவ அறிவு:

மேற்படி ரிஷிகள்,மகரிஷிகள் எழுதி வைத்த விதிகளை மனப்பாடம் செய்து கொண்டுவிட்டால் மட்டும் போதாது. அவை அனுபவத்தில் எந்த அளவு பலிக்கின்றன என்பதையும் பார்க்கவேண்டும். அவர்கள் எதையோ தப்பாக எழுதியிருக்கக்கூடும் என்று நான் கூற வரவில்லை. அவர்கள் எழுதிய போது இருந்த அரசாங்கங்கள் வேறு, அன்றைய சமுதாயம் வேறு , அன்றைய வாழ்க்கை முறை வேறு, அன்றைய கல்வி முறை வேறு. குடும்ப அமைப்பு வேறு . அன்றைய மன அமைப்புகள் வேறு. அவர்கள் அந்த காலத்துக்கு பலன் எழுதி வைத்தார்கள். அவை இன்றும் அதே அளவில் உண்மையாகும் என்பதற்கு என்ன கியாரண்டி ? இதனால் தான் நான் என் ஜோதிட முறைக்கு அனுபவ ஜோதிடம் என்று பெயர் சூட்டியுள்ளேன். செவ்வாய் எட்டிலிருக்கிறார் என்று உடனே பலன் கூறிவிடாது அந்த செவ்வாய் கிரகம் கடந்த காலத்தில் தன் புக்திகளில் எந்த அளவு பாதித்துள்ளது என்பதை ரஃப் கேல்குலேஷன் மற்றும் கணிப்புகள் மூலம் கேள்விக்கணைகள் தொடுத்து அறிய வேண்டும் .ஜாதகரின் கல்வி,வேலை,குடும்ப பின்னணி, இவற்றையும் கருத்தில் கொண்டு பலன் கூற வேண்டும் .இதுவே அனுபவ ஜோதிடம் .

அவ்வாறன்றி "அமாவாசை இருட்டில் பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழி என்பது போல் பலன் சொல்லும் ஜோதிடர்களால் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை நசிந்து போவதோடு ,தவறான வழி காட்டுதலால் கெட்டுப்போனவர்களின் சாபமும் வந்து சேரும்.

அடுத்த பதிவு:
அடுத்த பதிவில் ஜோதிடத்துக்கும் வாஸ்துக்கும் உள்ள தொடர்பென்ன ? வாஸ்து பெயரால் நடைபெறும் மோசடிகள் என்ன என்பதை விவரிக்க உத்தேசம்.நான் ரெடி நீங்க ரெடியா ?

Friday, February 18, 2011

2011,மே16, ராகு கேது பெயர்ச்சி பலன்


மே16, ராகு கேது பெயர்ச்சி பலன்
அண்ணே வணக்கம்ணே,
என்னடா .. ராசிபலனோட எஃபெக்டே 15 டு 30 பர்சென்ட் தானு சொன்ன முருகேசன் ராசிபலனை வச்சே காலத்தை ஓட்டிர்ராப்ல இருக்குனு நினைச்சிராதிங்க. நம்ம நோக்கம் வெறுமனே பலன் சொல்லிட்டு போறதில்லிங்கோ. அடுத்த ராகு கேது பெயர்ச்சிக்கு நீங்க நம்ம சைட்ல பலன் எழுதற ரேஞ்சுக்கு உங்களை ப்ரிப்பேர் பண்றதுதான் நம்ம நோக்கம். ராகு கேதுவை பத்தி நம்ம ப்ளாக்ல நிறையவே எழுதியிருக்கன். அதையெல்லாம் ஒரு ரவுண்டு படிச்சிங்கனா ஒரு ஐடியா வரும்.

தற்சமயத்துக்கு ராகு கேதுவை பத்தி சின்ன அறிமுகம் கொடுத்துட்டு பலனை பார்க்க போயிருவம். இவிக ஒரு ராசில ஒன்னரை வருச காலம் இருப்பாய்ங்க. ஒருத்தருக்கொருத்தர் 7 ஆவது வீட்ல இருப்பாய்ங்க. மத்த கிரகங்கள் இவிக மத்தில மாட்டினா அது கால சர்ப்பதோஷம். இது கோசாரத்துல எப்ப வருதுனு பாருங்க. கால சர்ப்பதோஷத்தோட ட்ரெய்லரை பார்க்கலாம்.

இவிகளுக்கு ஒரிஜினாலிட்டி கிடையாது. தாங்கள் நின்ன ராசி,அதனோட அதிபதி,தங்களோட சேர்ந்த கிரகங்களை பொருத்து பலன் தருவாய்ங்க. இதர கிரகங்களை போலவே இவிகளுக்கு காரகத்வம் எல்லாம் உண்டு. (போர்ட் ஃபோலியோ)

உங்களுக்கு ராகு கேதுக்கள் அனுகூலமா இருந்தா அவிக போர்ட் ஃபோலியோல வெற்றிக்கொடி கட்டலாம் . இல்லைன்னா அவிக போர்ட் ஃபோலியோல இருக்கிற அம்சங்கள் உங்களுக்கு டின் கட்டலாம். மொதல்ல போர்ட் ஃபோலியோவ பார்ப்போம்.

போர்ட் ஃபோலியோ ஆஃப் ராகு: (அவரே சொல்றாருங்கோ)
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே.
ராகு சரியில்லின்னா செய்யவேண்டிய பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் 'ட்ராகன்' (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு 'பெரிசுக்கு' ஒரு 'கட்டிங்' போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்
கேதுவோட போர்ட் ஃபோலியோ:
நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் 'நம்மவர்' என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.
கேது சரியில்லைன்னா செய்ய வேண்டிய பரிகாரங்கள்:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பி.கு:
ராகு கேதுக்கள் இந்திய அரசியலும் ஊழலும் போல பிரிக்கப்பட முடியாத கிரகங்கள் பாஸ்! அதனால உங்களுக்கு ஒருத்தர் சரியில்லைன்னா கூட ரெண்டு பேரோட பரிகாரங்களையும் செய்யறது பெட்டர். ஒய் பிக்காஸ் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிடறதால ஒருத்தர் நல்லாருந்தாலும்,அடுத்தவர் இவரை பார்க்க இவரே இம்சை பண்ணாலும் பண்ணிருவாரு.

மேலும் கேது சுக்கிரனுடைய ராசியிலும், ராகு செவ்வாயுடைய ராசிலயும் இருக்கிறதால கேது சரியில்லாதவுக சுக்கிரன், ராகு சரியில்லாதவுக செவ்வாய் தொடர்பான பரிகாரங்களையும் செய்துக்கறது பெட்டர். ( நம்ம ப்ளாக்லயே தேடுங்க. கிடைக்கும். தேடவேண்டிய வார்த்தை : " நவீன பரிகாரங்கள்"


பெண்கள்:
இன்னொரு முக்கியமான மேட்டருங்கண்ணா கீழே ராகு,கேது ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய பெண்களின் அடையாளங்களை தந்திருக்கன்.ராகு பலம்,கேதுபலம் இல்லாத சமயத்துல இவிகளை டீல் பண்ணா பல்பு வாங்கிருவிங்க டேக் கேர்.

ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்

கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
12 ராசிக்காரர்களுக்கான பலன்கள்:

தொடர்ந்துபடிக்க இங்கே அழுத்தவும்.

Thursday, February 17, 2011

இலவச ஜோதிட கேள்வி பதில்


பல்வேறு திரட்டிகளின் வழியே வந்து இந்த பதிவை படிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி . நம் புதிய வலை தளமான அனுபவ ஜோதிடம் டாட் காமில் இலவச ஜோதிட கேள்வி பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது வெறுமனே வருகையை கூட்டும் தந்திரமல்ல.

1989 முதல் இந்த துறையில் இருந்தாலும் நாளிதுவரை (என்றும்) மாணவனாக இருக்கவே விரும்பும் எனக்கு ஆசிரியர்கள் யார் என்றால்.. ஆரம்பத்தில் மூல நூல்கள்,உரை நூல்கள், ஜோதிட இதழ்கள் தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின் எனக்கு ஜோதிடத்தை கற்பித்தது என்னை நாடி வந்த ஜாதகங்களும் -ஜாதகர்களும் தான்.

கற்பதை நிறுத்திவிடுவதாய் எனக்கு உத்தேசமில்லை. மேலும் 18 மாதங்களில் 3 லட்சம் வருகைகளை பெற்ற எனக்கு வருகைகள் குறித்த கவலையும் இல்லை. பின்னே ஏன் இந்த பகுதி என்றால் சொல்கிறேன்.

கட்டண சேவையுடன் ,இலவச சேவையும் அளித்து வருகிறேன் என்றாலும் இலவச சேவை பெற கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும்.மேலதிக விவரங்களுக்குஇங்கே அழுத்துங்க.

கட்டண சேவையை பயன்படுத்துபவர்கள் என் வங்கி கணக்கை நிறைக்கின்றனர். (மனதில் குற்றமனப்பான்மை எழும் அளவுக்கு அளவுக்கதிகமாக – அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி) இலவச சேவையை பயன்படுத்துபவர்கள் என் மனதை நிறைக்கின்றனர்.

ஆனால் கட்டண சலுகையை பெறும் வசதியும் இல்லாது -இலவச சேவையை பெற மெனக்கெடவும் பொறுமையில்லாது இருக்கும் அன்பர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.

அவர்களும் பயன் பெறவே இந்த பகுதி. ( அப்படியே அவிக ஜாதகங்களை வச்சு நம்ம ஜோதிட புலமையை கூர் தீட்டிக்கலாமில்லை ) .

http://www.scientificastrology.com ,
http//:freehoro.com,
அல்லது
http://www.ganesaspeaking.com போன்ற வலைதளங்களில் தங்கள் பர்த் டீட்டெய்ல்ஸ் கொடுத்து ஜாதகம் எடுத்து உங்க கேள்வியோட எனக்கு தட்டி விட வேண்டிய இமெயில் முகவரி: chittoor.s.murugesan@gmail.com

(எனது இன்னபிற மெயில் முகவரிகளுக்கு கேள்விகள் ,ஜாதகங்களை அனுப்பி சட்டை கிழித்துக்கொள்ள வைகக்வேண்டாம் ப்ளீஸ்)

நிபந்தனை: கேள்வி பதில்கள் தினசரி எனது புதிய வலை தளத்தில் பிரசுரிக்கப்படும். ( பெயர் வெளியிட விரும்பாதவர்கள் தம் கேள்வியில் கட்டாயம் குறிப்பிடவும்)

என்ன அதுக்குள்ள பக்கத்தை மூடிட்டிங்க. ஓ.. ஜாதகம் போட்டு மெயில் அனுப்பவா? அனுப்புங்க ப்ளீஸ் !

Wednesday, February 16, 2011

சுக்கிர(ல) பலமும் பலான யோகமும்

முதல்ல தலைப்பு தர்ர தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.

உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை. இப்படி கில்மா மேட்டர்ல மத்த 8 கிரகங்களோட பலத்துக்கான அவசியத்தை தொடர்பதிவாவே போட்டாச்சு. ( நீங்க ஊருக்கு புதுசுன்னா பழைய பதிவுகளை தேடிப்படிங்க)

அடுத்து பலான யோகம்னா கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார். க்ளியர் !

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பெண்ணுக்கு அழகு தர்ரது உங்க ஆண்மை. சுக்கிரன் சுப பலமா இருந்தா "ஐம்பதிலும் ஆசைவரும்" புருசன் பொஞ்சாதி உடம்புல பூரிப்பு வரும். முகத்துல திருப்தி, ஆனந்தம்னு கலந்து கட்டியா ஒரு தெய்வீக களை வரும்.

காளிதாசர் வரி வசூலை பத்தி ராசாவுக்கு இன்னா சொன்னாரு தெரீமா " வண்டு பூவுல தேன் எடுக்கிற மாதிரி இருக்கனும்"னாராம். விந்து ஊறின பின்பு இயற்கையா ஏற்படும் உந்துதல் உடலுறவுல முடிஞ்சா சுபம். மேட்டர் வேற மாதிரி போச்சுனு வைங்க ( செயற்கை உந்துதல்/ ஈகோ/ காரணமா கோதாவுல இறங்கறது) ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன மாதிரி "கோ ஆப்பரேசனே இல்லிங்க" - " அவளுக்கு இதுல ஆர்வமே இல்லிங்க"ன்னு குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கிறது. பொஞ்சாதிய தவிர ஊர்ல கீரவ எல்லாம் உலக அழகியா தெரியறதுனு ஆரம்பிக்கும். அதனாலதான் சொல்றேன். ஆராச்சும் " அலை பாய்ஞ்சா" அங்கே மேட்டர் சரியில்லைனு அர்த்தம்.

விந்துவை சுக்கிலம்னு சொல்றாய்ங்க. (இந்த பெயர் பொருத்தம் ஆக்சிடென்டலுனு நினைக்கிறிங்களா?).


9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜுங்கற மேட்டரை எல்லாம் கடந்த பதிவுலயே சொல்லியாச்சு. ஞா இருக்கில்லை.

ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம் பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.

என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே குரு உச்சம். குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா யதார்த்தம் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால குரு தொடர்பான தாதுக்கள் நம்ம பாடில பல்க்கா இருக்கோ என்னமோ? கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு. போயிட்டே தான் இருக்கு.

இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க. உங்களுக்கு செக்ஸ் மேலயோ, ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.

செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் லாங் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.

எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு வராது.

சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.

ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.

இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும். ( கால புருஷ தத்துவம் - உங்க லக்னம் தலை - எட்டாமிடம் தான் மர்மஸ்தானம் - விரயஸ்தானம்தான் கால்)

நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.இந்த மேட்டர்லயும் அதே ரூல் தேன்.

யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது. பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.

ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால் ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.

இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.

அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)

யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும். அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :

வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:

மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து ந்நா ...........றிப்போகலாம்.

நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது. டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு கூட ஒரு காரணம்.

பசியிருந்தா தான் சாப்பாட்டை தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை) அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.

இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.

சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).

மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலுறவின் ஆழம் -காலம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.

இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க சில வழிமுறைகளை சொன்னேன். இதுவே போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?

வேண்டு கோள்:

நிறையப்பேரு "இதென்னங்க கண்டதுலயும் கில்மாவ கலந்து டீக்கடை பெஞ்சு மாதிரி ஒரு எழுத்து நடை"னு கேட்கிறாய்ங்க ( அதை விட நிறைய பேரு தூள் மா ..சூப்பர்மாங்கறாய்ங்க அது வேற கதை).

ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி. ஆனால் "பசங்க" மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல். அதனால இளந்தாரிகளை இழுத்துப்போடத்தேன் இந்த சாக்லெட் பூச்சு.

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? கமெண்ட் ப்ளீஸ்!

Tuesday, February 15, 2011

2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு கவிழும்?

மொதல்ல இந்த பதிவுக்கு இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகம்னுதான் தலைப்பு வச்சேன். அப்பாறம் ஆதித்தனார் எழுத்தாளர் கையேடு மாதிரி கடைசில உள்ளதை தூக்கி டாப்ல கொண்டு வந்தேன்.

நான் வைக்க நினைச்ச தலைப்பு 100% கரீட். இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகமா இருக்கு. இதுக்கும் அவாளோட சதிதான் காரணம். விஐபிங்களுக்கு சின்ன வீட்டை கர்பப்படுத்தறதுக்கு கூட பக்காவா டைம் வச்சு கொடுக்கிற அவாள் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க குறிச்சுக்கொடுத்த டைம் இருக்கே . வயிறு எரியுதுங்க.

லக்னம் ரிஷபம்:
ரிஷப லக்னம் ராசி சக்கரத்துல ரெண்டாவது ராசி. இதனோட குணம் என்னன்னா சுருக்கமா சொன்னா செக்கு மாடு. நம்ம தலைவருங்க நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு போகாம இருக்க காரணம் இதான். நம்ம நாடு செக்கு மாடாட்டம் ஒரே வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வரவும் , அசலான பிரச்சினையை விட்டுட்டு ஜல்லியடிக்கவும் இதான் காரணம். மேலும் தங்களோட செல்வம்,செல்வாக்கு,சொல்வாக்கு,
பணம், குடும்பம்னு அவிக இருக்கவும் இதான் காரணம்.நம்ம தலைவருங்க உசரு போற நேரத்துல கூட "விகட வினோத பரிகாச பிரசங்க பிரியர்களா" இருக்க காரணம் இதான்.

இது ஸ்திர ராசி. தாளி இஞ்சி முரபா விக்கறதுக்கு கூட சரலக்னமா பார்த்து வையின்னு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் இவ்ளோ பெரிய எஸ்டாப்ளிஷ்மெண்டுக்கு ஸ்திர லக்னத்தை வச்சிருக்கானுவ.

ராசிய பாருங்ககடகம். இதனோட அதிபதி யாரு சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறுவாரு. 24 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திரம் மாறுவாரு. 6 மணிக்கொருதரம் பாதம் மாறுவாரு. 15 நாள் வளர்பிறை, 15 நாள் தேய் பிறை. இந்த ராசிக்காரவுகளுக்குனு ஒரு "சுயம்" இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளைகள்னா அது இந்த ராசிக்கரவுகதான்.


ரஷ்யா இருந்தவரை அவிக அழிச்சாட்டியத்துக்கெல்லாம் சால்ரா போட்டுக்கிட்டிருந்தம். இப்ப அமெரிக்கா.
சரி இதுவாச்சும் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். சனத்தொகை படபடனு எகிறுது (ரிசபத்துக்கு அதிபதி சுக்கிரன் - கில்மாவுக்கு இவர் தான் அதிபதி) உலகம் போற போக்குல இன்னைக்கும் ஒரு சமயம் இல்லாட்டியும் ஒரு சமயம் சென்டிமென்ட் பார்க்கிற சனம் இந்தியாவுலதான் இருக்காய்ங்கனு ஆறுதல் பட்டுக்கலாம்.

லக்னத்தை பாருங்க ராகு -ஏழைப்பாருங்க கேது. ராகு கேதுக்களிடையில எல்லா கிரகமும் சிக்கி பிதுங்கிக்கிட்டிருக்கு. இதனோட பலன் என்னடான்னா 45 வருசம் வரை சொல்லிக்கிறா மாதிரி டெவலப் மென்டே இருக்காது. மேலும் ஊழல்வாதிகள் + சாமியார்களிடையில நாடாள்வோரும், நாடும், நாட்டு மக்களும் சிக்கி சீரழியனும்.( ஞா இருக்கா திரேந்திர பிரம்மச்சாரி, சந்திராசாமி)

ஜோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவன் கூட இந்த மாதிரி ஒரு நேரத்தை ரெக்கமெண்ட் பண்ணமாட்டான். நேரு மாமாவுக்கு நாள் குறிச்சு கொடுத்த பன்னாடை பரதேசி ஆருனு விசாரிக்கனும்ணே.

சரி லக்னமும் - (சொந்த பலம்) ஏழாமிடமும் ( நட்பு நாடுகள்) தான் நாறிப்போச்சு . ரஷ்யா சிதறிப்போகவும் அமெரிக்கா இப்படி அல்லாடவும் நம்ம சங்காத்தமும் ஒரு காரணமுங்கோ.

லக்ன,சப்தமாதிபதிகளாவது பலம் பெற்று உருப்பட வைக்கிற நிலைல இருக்காய்ங்களானு பார்த்தா லக்னாதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்து( சத்ரு ரோகம் ருணம்) ஆதிபத்யமும் பெற்று 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தாரு.ஆறுன்னா கடன் ..தீராக்கடன். எதிரி (பாக்,சீனா, அட நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்த வங்காளம் கூட தாலியறுக்குதே)

3ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம். (இங்கன சுக்கிரன் நின்னதாலதான் நாடு பத்தி எரியறச்ச கூட மன்மோகன் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் லக்சரியா உலகம் சுத்தபோறாருபோல) இங்கன லக்னாதிபதி நின்னா என்னாகும்? மேலும் அது சுக்கிரங்கறதால சாப்பிடற சோறு, கட்டற துணி,இருக்கிற ஊட்டுக்கும் கூட சனம் அல்லாடவேண்டியதுதேன்.

காலம் காலமா நிலை கொண்ட ஏழ்மை, உணவு தானிய பற்றாக்குறைக்கும், சமீப காலமா பெருகி வரும் ஆண்மையின்மை,செக்ஸ் குற்றங்கள்,பெண்கள் மீதான வன்கொடுமை ,பெண் சிசுக்கொலை இத்யாதிக்கும் இதான் காரணம்.

லக்னாதிபதியான சுக்கிரனோட ஆரெல்லாம் சேர்ந்தாய்ங்கனு பாருங்க. கண்ல ரத்தம் வரும்:

சந்திரன்:
நம்ம நாடு சுதந்திரம் வந்து 63 வருஷம் முடிஞ்சும் அன்னாடங்காய்ச்சியாவே இருக்கவும் எழுவதும்,விழுவதுமா இருக்கவும் இந்த கிரகசேர்க்கை தான் காரணம். ஆறுதல் என்னன்னா ஒரு 15 வருஷம் ஸ்டெபிலிட்டி, நல்ல வளர்ச்சி இருக்கும், அடுத்த 15 வருஷம் இன்ஸ்டெபிலிட்டி, தேக்கம் இருக்கும்.நம்ம தலைவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இருக்கவும் இதான் காரணம். கடல் வழியா வந்து மும்பை தாஜ் ஹோட்டலை தாக்கற அளவுக்கு கொண்டு போனது இந்த கிரக நிலைதான்.

சூரியன்:
இவர் வீர , தீரத்தை தந்தாலும் இவர் நான்காமிடத்துக்கு அதிபதியாக உள்ளதால நம்ம தலைவருங்க நாட்டை பார்த்துக்கறதை விட தங்களோட வீட்டைத்தான் பார்க்கிறாய்ங்க. (4- வீடு) லக்சரியா பயணம் போகவும், ஏற்கெனவே பளபளக்கும் தங்கள் வீட்டை அரசு நிதி கொண்டு "மராமத்து"பண்ணிக்கிறதுலயும் , விமானபயணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாகன வசதிகளை ஏற்படுத்திக்கிறதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு கடமைய கோட்டை விட்டுர்ராய்ங்க. நம்ம நாடு வீரத்தை காட்டினா ஏழை இந்தியனோட ஓட்டைக்கூரையும் பொத்தலாயிருமுங்கோ. அரைப்பட்டினி முழுப்பட்டினி ஆயிரும்.

புதன்:
இவர் 2/5க்கு அதிபதி 3ல் மாட்டினாரு. ரெண்டுன்னா ரெவின்யூ இன் கம், அஞ்சுன்னா இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி. 3ன்னா பயணம் போறது. பாருங்க நம்ம காசு பணம்லாம் பயணம் போயிருச்சு. நம்ம இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டியெல்லாம் கடல் கடந்து போயி அவிகளுக்கு பொருளீட்டி கொடுக்குது.
புதன்னா கல்வி,மருத்துவம், தொலைதொடர்பு (இதையும் விளக்கனுமா என்ன?)

அடுத்து ரெண்டாவது இடத்தை பாருங்க சப்தமாதிபதி ( நட்பு நாடுகள்) விரயாதிபத்யம் பெற்று ( வேறென்ன ஆப்புதேன்) இங்கு உட்கார்ந்தாரு. அதுவும் ஆரு? செவ்வாய். பாக்கிஸ்தான் பங்காளி நாடு (செவ் -சகோதரகாரகன்) ஆப்பு வைக்கவும் சீனாக்காரன் "இந்தோ சீனா பாய் பாய்னிக்கிட்டேதானே ஆப்பு வச்சதுக்கும் இதான் காரணம்.

உள்ளார்ந்த ஒற்றுமை குலையவும், ஒரு மொழி காரன் இன்னொரு மொழிகாரனோட - இந்த ஸ்டேட்டு
அடுத்த ஸ்டேட்டோட வெட்டி மடிய இதான் காரணம்.

இன்னம் இங்கன ஆரிருக்கானு பார்த்தா சனி. ரிஷபலக்னத்துக்கு யோககாரகனான சனி மாரகஸ்தானங்கற 3ஆவது இடத்துல மாட்டினாரு.இத்தீனி ஓட்டையிருந்தும் இந்தியா சிதறாம இருக்க காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.

அஷ்டமாதிபதியான குரு சத்ரு ரோகஸ்தானத்துல உட்கார்ந்தாரு. இவர் மட்டும் இங்கே இல்லேன்னா துண்டு துண்டா பீஸ் பீஸா சிதறிப்போயிருக்கும்.

நம்ம நாட்டை இன்னைக்கு ஒரு விதேசி ஆளவு 1-7ல இருக்கிற ராகு கேது தான் காரணம்.அதுவும் ராகுன்னா விடோயருனு அர்த்தம்.

நம்ம நாட்டை அதிக காலம் ஆண்டவுக எல்லாம் ஒன்னு வெஸ்டர்ன் ஸ்டைல் (நேரு,ராஜீவ்), அல்லது விடோயர்ஸ்/ பேச்சிலர் தான் .இதுக்கு காரணம் கூட 1-7ல இருக்கிற ராகு கேது தான்.

ஆன கண்ணாலத்துக்கு ஆர்கெஸ்ட்ரா எதுக்கு? எதிர்காலம் எப்படி இருக்கும்னு கேப்பிக. சொல்றேன்.

இப்ப 03/Nov/2010 => முதல் 27/Sep/2011 வரை சூரிய தசை ராகு புக்தி நடக்குது. ஆட்சியாளர்களுக்கு கெண்டம்தேன். அரசாங்கம்னு ஒன்னிருக்கானு நினைக்கிறாப்ல ஊழல்வாதிகளும், விதேசிகளும் தூள் கிளப்புவாய்ங்க.

அடுத்து வரப்போற குரு புக்திதான் ஒரு நல்ல அரசை அமைக்கனும். அது 27/Sep/2011 => முதல் 15/Jul/2012 வரைதான் நடக்கும். அப்பாறம் மறுபடி சனிபுக்தி மாட்டிக்குது. அரசு திண்டாட வேண்டியதுதான். இந்த சந்தடில தலித் அமைப்புகள், தொழிலாளர் யூனியன்கள், கம்யூனிஸ்டுகளோட பிராபல்யம் அதிகமாகலாம்.

சூரியதசை முழுக்க (09/Sep/2009 முதல் 09/Sep/2015 )அல்லாட்டமாதான் இருக்கும் அடுத்து வர்ர சந்திர தசையும் (09/Sep/2015 முதல் 08/Sep/2025) ஒன்னும் கழட்டற மாதிரி தோனலை.

2011, மே 8 ஆம் தேதி ராசிக்கு பத்துல குரு வர்ராரு. இப்ப ஆள்றவுகளுக்கு பதவி பறிபோகலாம்.

எச்சரிக்கை:
ஆமாம் முருகேசன் பரிகாரம் அதுஇதுன்னு அவுத்துவிடறிங்களே நம்ம நாட்டை காப்பாத்த எதுனா பரிகாரம் வச்சிருக்கிங்களானு கேப்பிக. சொல்றேன்.அடுத்த பதிவுல.

சுக்கிரனும் கில்மாவும்

ஜோதிஷத்துல கில்மான்னாலே சுக்கிரன் தான். இன உறுப்பு, அதிலான சுரப்பு, விறைப்பு,புடைப்பு செயல்பாடு எல்லாத்துக்கும் இவர் தான் காரகர். வழக்கமா ஒவ்வொரு கிரகத்தோட காரகத்வம் என்னனு சொல்லி அதுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தம்னு சொல்லி விலாவாரியா பதிவெழுதறது வழக்கம். இதே ரூட்ல நாளைக்கு இன்னொரு பதிவு போட்டா போச்சு காசா பணமா?

இன்னைக்கு ஜாதகத்துல அ கோசாரத்துல சுக்கிரன் யாருக்கு எங்கே யாரோட இருந்தா என்ன பலன்னு பார்ப்போம்.

ஜாதகம் உள்ளவுக அதை பக்கத்துல வச்சிக்கிட்டு படிங்க. லக்னம் முதல் வீடு. எண்ணும்போது க்ளாக் வைஸ் எண்ணுங்க. லக்னத்தோட சேர்த்து எண்ணுங்க.

ஜாதகம் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. டேட் ஆஃப் பர்த் இருந்தா ஆன்லைன்லயே ஃப்ரீயா ஜாதகம் போட்டுக்க நிறைய வெப்சைட்ஸ் இருக்கு. போட்டு வச்சுக்கிட்டு இந்த பதிவை படிங்க.

http:www.astroloka .com

http:www.freehoro .com

http:www.scientificastrology.com

டேட் ஆஃப் பர்த் இல்லாதவுக என்ன பண்றதுனு கேட்பிங்க. இன்னைக்கு ( நீங்க படிக்கிற தினத்துக்கு) என்ன தேதின்னு பார்த்து மேற்சொன்ன வெப்சைட்ஸ்ல காலை 6 மணி நேரத்துக்கு ஜாதகம் போட்டு பக்கத்துல வச்சிட்டு படிங்க. இதை தற்கால கிரக நிலை, கோசாரம்னு சொல்வாய்ங்க. இதனோட இம்பாக்ட் டெம்ப்ரரி.ஆனா ஆராய்ச்சிக்கு உதவும். உடனடி லாட்டரி மாதிரி ரிசல்ட் தெரியும்.

இதை எல்லாம் அனலைஸ் பண்ண எந்த ராசிக்கு யார் அதிபதின்னு தெரிஞ்சிக்கிடனும். அப்பத்தேன் எந்த ராசிக்கு அதிபதி எங்கன இருக்காருனு பார்க்க உதவியா இருக்கும்.

லெஃப்ட் டாப்ல உள்ள ராசி மீனம் இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மேஷம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி ரிஷபம் இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி மிதுனம் இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி கடகம் இதுக்கு அதிபதி சந்திரன் அடுத்த ராசி சிம்மம் இதுக்கு அதிபதி சூரியன் அடுத்த ராசி கன்னி இதுக்கு அதிபதி புதன் அடுத்த ராசி துலா இதுக்கு அதிபதி சுக்கிரன் அடுத்த ராசி விருச்சிகம் இதுக்கு அதிபதி செவ்வாய் அடுத்த ராசி தனுசு இதுக்கு அதிபதி குரு அடுத்த ராசி மகரம் இதுக்கு அதிபதி சனி அடுத்த ராசி கும்பம் இதுக்கும் அதிபதி சனிதான்.

இப்ப சுக்கிரனோட பல்வேறு நிலைகளை ,அது தரக்கூடிய பலனை நம்ம புதுசைட்ல பார்ப்போம்.அதுக்கு இங்கன அழுத்துங்க

Monday, February 14, 2011

குரு பெயர்ச்சி பலன்கள் 2011


அண்ணே வணக்கம்ணே,

நான் எழுதின 2010 குரு பெயர்ச்சி பலன்களுக்கு 15 ஆயிரத்துக்கு மேல ஹிட்ஸ் கிடைச்சிருக்கு. கோசார பலனோட எஃபெக்ட் 20 முதல் 30% . கோசார பலன் வேலை செய்யுதுன்னா உங்க ஜாதகத்துல தாக்கத் இல்லேனு அர்த்தம். உங்க ஜாதகம் தேன் காரு. தசாபுக்தி ரோடு. அப்ப கோசாரம்? முன்னே அடிக்கிற காத்துனு வேணா வச்சுக்கலாம்.

இதையெல்லாம் சொன்னா கேட்டுக்கவா போறிங்க? எத்தீனி பத்திரிக்கையில எத்தீனி விதமா பலன் போட்டாலும் அல்லாத்தையும் ஒரு தாட்டி புரட்டத்தான் போறிங்க.


அது சரிப்பா எங்கேப்பா குருபெயர்ச்சி பலனுன்னு நீங்க துடிக்கிறது தெரியுது.நம்ம சைட்டு போனியாகாம கிடக்கு. அதனால பலனை நம்ம சைட்ல போட்டேன். இங்கே அழுத்தி படிச்சுருங்கண்ணா.

புதனும் மன்மதனும்

இந்த தலைப்பை பார்த்ததும் இன்னாங்கடா இது அமாவாசையும் அப்துல்காதரும்ங்கற மாதிரினு நீங்க சலிச்சுக்கலாம். என் விளக்கத்தைப் படிச்சா புதனும் கில்மாவும் கலைஞரும் ஊழலும் போல பிரிக்கமுடியாத அம்சங்கள்னு நீங்களே ஒத்துக்கிடுவிங்க.

ராசிச்சக்கரத்துல மிதுனம், கன்னிங்கற ரெண்டு ராசிக்கு புதனை அதிபதியா தீர்மானிச்சிருக்காய்ங்க.இதுக்கு மிக வலுவான அடிப்படை இருக்கும். மிக ஆழமான அப்சர்வேஷனுக்கு பிறகுதான் இதை அவிக டிசைட் பண்ணியிருப்பாய்ங்க.

ஜோதிஷ சித்தாந்தங்களை வடிவமைச்சவுகளை குறைச்சு மதிப்பிடவே முடியாது. அவிக ரேஞ்சென்னனு தெரிஞ்சிக்கனும்னா என் கணிப்புகளை பத்தி என் க்ளையண்ட்ஸ் தெரிவிக்கிற கருத்துக்களை பார்க்கனும்.

அதெல்லாம் தனிப்பட்ட மெயில்ல வந்ததால உங்க பார்வைக்கு வைக்கமுடியலை. ஜோதிஷம்ங்கறது ஒரு கடல். நாம வச்சிருக்கிறது சின்ன டெஸ்ட் ட்யூப். அதுல மனிதம்,தர்கம்,யூனிவர்சல் லவ் மாதிரி சில சரக்குகளை கலந்து வச்சிருக்கோம். இதை வச்சிட்டு சொன்ன குத்து மதிப்பான பலனுக்கே ஆகா ஓகோ.

இன்னம் அவிகளை ஜோதிஷம்ங்கற கடல்ல தூக்கிப்போட்டா என்ன ஆகும்னு ரோசிங்க. நிற்க எங்கே விட்டோம்?

ராசிச்சக்கரத்துல மிதுனம், கன்னிங்கற ரெண்டு ராசிக்கு புதனை அதிபதியா தீர்மானிச்சிருக்காய்ங்க. மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும்.

இப்ப புரியுதுங்களா புதனுக்கும் மன்மதனுக்கும் உள்ள தொடர்பு? மன்மதன் கில்மாவுக்கான ஏஞ்சல். புதன் கில்மாவையே சென்ட்ரல் தீமா கொண்ட ராசிக்கு அதிபதி. இதான் அவிக ரெண்டுபேருக்கிடையில் உள்ள தொடர்பு.

இப்ப புதனோட காரகத்வங்கள் என்ன? அவற்றிற்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம்.(புதனே சொல்றாருங்கோ)

1.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை:
காதலனோ,காதலியோ அட மனைவியாவே கூட இருக்கட்டும் காதல்/கண்ணாலத்துக்கு முந்தி அவிக புதுசுதானே .அவிகளோட தொடர்பு கொள்ளனும்னா புத பலம் தேவை.

2. மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை:
இந்த இழவு இல்லாம எத்தனையோ காதல்கள் ஒரு தலையா நின்னுப்போகுது. புத பலம் உள்ளவுகளுக்குத்தேன் மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை இருக்கும்
3. போஸ்டல்,ஈ மெயில்,, எஸ்.டி.டி. கூரியர்:
இதெல்லாம் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன். மனிதன் ஒரு சமூக பிராணி. அவனை தனிமைப்படுத்திட்டா செத்துப்போயிருவான். செயில்ல கூட செல்ஃபோன் புழங்க ,சோத்துக்கில்லாதவன் கூட செல் ஃபோன் உபயோகிக்க இதான் காரணம். (இதை வச்சு சில மேதைகள் இந்தியாவுல ஏழ்மையே இல்லைன்னு வி.வாதம் பண்றாய்ங்க.அவிக கம்ப்யூட்டர்ல டார்ஜான் வைரஸ் புகட்டும். மேட்டருக்க வரேன். உயிர்களோட அடிப்படை இன்ஸ்டிங்க்ட் உயிர் வாழ்தல் -இனப்பெருக்கம் செய்தல்- பரவுதல்- தொடர்பு கொள்ளுதல். ஜிட்டு கிருஷ்ண மூர்த்தின்னா "லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப்"புங்கறாரு.
நான் இந்த ப்ளாகை வச்சு இப்படி கிழி கிழினு கிழிக்கலைன்னா உங்களை பொருத்தவரை முருகேசன்ங்கற பார்ட்டி இந்த உலகத்துல இல்லேன்னுதானே அர்த்தம்? மனிதனுக்குள்ள இருக்கிற ஒரே பவர் செக்ஸ் பவருனு சொல்றாய்ங்க. அந்த செக்ஸ் பவர் தன்னை கம்யூனிகேஷன் ஸ்கில்ஸா வெளிப்படுத்திக்குது. ( ஒன்னு ரெண்டு பட்லி மாட்டாதாங்கற ஹிடன் அஜெண்டாதான் சோஷியல் நெட் ஒர்க்கிங் சைட்ஸை சக்கை போடு போடவைக்குது.
ஆக புத பலம் இருந்தாதான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்கும். அந்த ஸ்கில்ஸ் வெளிப்பட்டாதான் நமக்குள்ள பவர் ஸ்டோர் (செக்ஸ் பவர்) ஆயிருக்குனு அர்த்தம். கம்யூனிகேஷனோட நோக்கமே கில்மாதேன்.
போஸ்டலை விடுங்க. அது அவுட் டேட்டட் ஆயிருச்சு. எத்தனை பேரு இதர மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷனை உபயோகிக்கிறாய்ங்க? எத்தனை பேருக்கு இதையெல்லாம் முழுக்க உபயோகிக்கதெரியும்? உங்க வீட்டு BSNL லேண்ட் ஃபோன்ல எத்தீனி விதமான ஃபெசிலிட்டி இருக்கு தெரியுமா? எழுப்பி கூட விடறாய்ங்களாம் ( தூக்கத்துலருந்துங்கண்ணா)
இந்த வித்தையெல்லாம் தெரிஞ்சவனை பெண்கள் அதிகம் விரும்புவாய்ங்க.(அவிக வீக்கர் செக்ஸுங்கறதால தங்களை தாங்கள் சுருக்கிக்கதான் பார்ப்பாய்ங்க - செவ்ரல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் மூலம் தன்னை விரிவு படுத்திக்கற /பரவும் ஆணை நேச்சுரலாவே லைக் பண்ணுவாய்ங்க. இதான் கில்மாவுக்கும் புதனுக்கும் உள்ள தொடர்பு.
ஜோதிடம்:
ஜோதிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன். ஜோதிஷம்ங்கறது என்ன? நவகிரகங்களோட காரகத்வங்கள் என்ன?, ராசி சக்கரத்தின் 12 பாவங்களோட தன்மைகள் என்ன? குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட ராசிலருந்து என்ன ஆகும்? குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட கிரகத்தோட சேர்ந்தா என்னாகும்னு கணிச்சு /கெஸ் பண்ணி சொல்றதுதான். ஆக ஜோதிடம்ங்கறது என்ன? தனிப்பட்ட தகவல்களை தனித்தனியா ஸ்டோர் பண்ணிக்கிட்டு - க்ளப் பண்ணி - பிரிச்சு மேஞ்சு - கூட்டி கழிச்சு -தர்கம் அப்ளை பண்ணி சொல்றதுதான் . இந்த கெப்பாசிட்டியத்தான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்ங்கறாய்ங்க.
உங்களுக்கு ஜோதிஷம் தெரிஞ்சிருந்தாதான் கில்மானு சொல்லவரலே.ஒரு ஜோதிடனுக்குரிய தகவல் சேகரிப்பு -ஸ்டோரிங் -ப்ராசசிங் -கேல்குலேட்டிங் -கெஸ்ஸிங் -வே ஆஃப் ப்ரசண்டேஷன் எல்லாம் இருக்கனும். அப்பத்தான் ப்ரப்போசிங் - மோட்டிவேடிங் எல்லாம் பாசிபிள்.
உபரியா கொஞ்சமே கொஞ்சம் நியூமராலஜி -பாம் ஹிஸ்டரி-கனவுகளுக்கு பலன் - சகுன சாஸ்திரம் தெரிஞ்சா யதேஷ்டம்.உதாரணமா உங்க மனைவிக்கு விடியல்ல அவிக தம்பி செத்துப்போறாப்ல கனா வந்திருக்கும். நாள் முழுக்க மூடியா இருப்பாய்ங்க. நீங்க என்ன ஏதுனு விஜாரிச்சு " தத் இதுக்கா ஃபீல் பண்றே .. கண்ணாலம் ஆகாதவுக செத்துப்போறாப்ல கனவு வந்தா அவிகளுக்கு கண்ணாலம் நடக்கபோகுதுனு அர்த்தம்" - னுட்டு சொன்னா அவிக மூட் உடனே மாறும்.
மனிதர்களின் தோல்:
உடல் ரீதியான காரணங்களால் வர்ர தோல் வியாதிகளும் உண்டுதான். ஆனால் மன ரீதியா பாதிக்கப்பட்டா கூட சில பிரச்சினைகள் வர்ரதுண்டு. எண்ணங்களை மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டு, யாரோடயும் பகிர்ந்துக்காம தங்களுக்கு விருப்பமில்லாத வேலைகளை பயத்தாலயோ/வேற வழியில்லாமயோ செய்துட்டு இருக்கிறவுகளுக்கு சில ஸ்கின் ப்ராப்ளம்ஸ் எல்லாம் வருது.
இவிக என்ன வைத்தியம் பார்த்தாலும் பே பே தான். பாருங்க ..புத பலம் இல்லேன்னா - கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்காது -கம்யூனிக்கேட் பண்ணலைன்னா - ஸ்ட்ரெஸ் வரும் -ஸ்ட் ரெஸ் காரணமா ஸ்கின் ப்ராப்ளம் வரும் - அந்த ஸ்கின் ப்ராப்ளமே தாழ்வு மனப்பான்மைய தரலாம் -அதுவே அவிகளை லோன்லியாக்கிரலாம். ஸ்ட் ரெஸ் அதிகமாகலாம்.புத்திக்குழப்பம்- சித்தப்பிரமையில கூட கொண்டு விடலாம். இதுக்கெல்லாம் புத பலம் இல்லாமைதான் காரணம்.
இந்த மாதிரி கிராக்கிங்களுக்கு லவ் எப்படி வரும்?வந்தாலும் அதை எப்படி ப்ரப்போஸ் பண்ணுவாய்ங்க? இவிகளுக்கு எதிர்காலத்துல கண்ணாலம் ஆனாலும் இதே இழவுதேன்.
ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள்:
இதெல்லாம் கரீட்டா ஃபங்சன் ஆகனும்னா ஹார்மோன்கள் சரியான அளவுல சுரக்கனும் . பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் சரி வர சுரந்தா தான் சினைப்பைகள் நல்லா ஃபங்சன் ஆகும். இந்த ஃபங்சனிங் கரீட்டா நடந்தாதான் பெண்மை மிளிரும். மென்மையான , தன்மையான பேச்சு இருக்கும். பசங்க ஜொள்ளுவாய்ங்க.
ஆண்கள்ள டெஸ்டோ ஸ்டீரான் கரீட்டா சுரந்தா தான் அவனுக்குள்ள ஆண்மை மிளிரும். கட்டுடல் இத்யாதி அமையும். அப்பத்தேன் பெண் குட்டிகள் ஜொள்ளும். இதை இன்னொரு ஆங்கிள்ள பாருங்க. புத பலம் இருந்தா கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நல்லாருக்கும். அது இருந்தா எதிர்பாலினரோட பேச.பழக வாய்ப்பு கிடைக்கும். அப்பத்தேன் டெஸ்டோ ஸ்டீரான் கரீட்டா சுரக்கும்.
இயற்கையோட அஜெண்டா -அதன் அமலாக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தான் இதெல்லாம் புரியும்.சில உயிர்கள்ள பாப்புலேஷன்ல ஆண் பெண் ரேஷோ வேறுபடறதை பொருத்து ஆண் பெண்ணா -பெண் ஆணா மாறிப்போகுதாம். ஏன் இனப்பெருக்கம் நடக்கனும். அதுக்கு ஆண் பெண் தேவை. இதான் இயற்கையோட அஜெண்டா அமலாக்கம்.
கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இல்லாம எதிர்பாலினரிடம் பேசவே பயப்படற நீ என்னைக்கு அஜால் குஜால் வேலையில இறங்கறது -என்னைக்கு உனக்கு குழந்தை பிறக்கிறது போடாங்கோனுட்டு இயற்கை தன் இருகையை பின்னால் வைத்து கோர்த்துக்குது. அப்பால கைனகாலஜிஸ்டை பார்க்க வேண்டியதுதான்.
( புதனுடைய காரகத்வங்களையும் -கில்மாவில் அவற்றின் முக்கியத்துவத்தையும் அடுத்த பதிவுலயும் தொடரலாம்)

ஜெயகாந்தன் எனும் உளறுவாயர்


ஜெயகாந்தனை தெரியாதவுக இருப்பாய்ங்கனு நினைக்கலை. அப்படியே இருந்தாலும் அவிகளும் தன்னை பத்தி தெரிஞ்சிக்கிடனும்னு ஒரு ஆசை அந்த பெருசுக்கு வந்துட்டாப்ல இருக்கு. அதை நிறைவேத்திக்க அந்த பெருச்சு சின்னத்தனமா என்ன செய்துச்சுனு சொல்லத்தான் போறேன்.

கெட்டுப்போயி வந்த பெண்ணை குளிக்க வச்சுட்டு நீ சுத்தமாயிட்டேன்னு அக்னி பிரவேசம் பண்ண செயகாந்தன் இப்படி உளறுவாயரா இருப்பாருனு நினைச்சுக்கூட பார்த்திருக்கமாட்டிங்க. அப்படி என்னதான் உளறிக்கொட்டினாருனு சொல்லத்தான் போறேன்.

எம்.சி.யார் உசுரா இருந்தப்பயே சினிமாவுக்கு போன சித்தாளு எழுதின பார்ட்டிக்கு " நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போயி " உளறியிருக்கு.

அதுக்கு முந்தி செயகாந்தனோட சரித்திரத்துல ஒரு பொன்னேட்டை நீங்க புரட்டியே ஆகனும். அதுக்கான லிங்கை கடைசில தரேன்.

//தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2008, 2009, 2010-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, 2007, 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா,பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.//

தேர்தல் வருதுல்ல..

//விழாவுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி விருதுகளை வழங்கினார். //

பாவம் தாத்தா இந்த வயசுல வை.கோ மாதிரி கட்டுமரமேறி இலங்கைக்கு போயி ஈழத்தமிழர்களுக்கு தோளா கொடுக்க முடியும்?

//பாரதி விருது எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும், சுப்புலட்சுமி விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாலசரஸ்வதி விருது நாட்டியக்கலைஞர் பத்மா சுப்ரமணியத்திற்கும் வழங்கப்பட்டது.//

பாவம் பாரதி. விருது வாங்கின பிறவு ஜெயகாந்தன் பேசின பேச்சை கேட்டிருந்தா ஆன்மா சாவதில்லைங்கற கீதை மொழிய பொய்யாக்கியிருப்பாரு.

ஆமாங்கண்ணா பாரதி விருதை .. என்ன விருது ? ...........பாரதி விருதை வாங்கிக்கிட்டு ஜெயகாந்தன் "இது தமிழர்களின் பொற்காலம்"னு குறிப்பிட்டாராம்.

பாவம் செயகாந்தனுக்கு வயசாயிருச்சு முதுமையில ஏதோ புத்திக்குழப்பம்.. எதையோ உளறிக்கொட்டியிருப்பாருனு நினைப்பிங்க. இல்லிங்கண்ணா இந்திய அமைதிப்படை இலங்கைக்கு போனப்ப இவருக்கு என்னா வயசிருக்கும்? அப்பமே உளறியிருக்காரு. அதை தெரிஞ்சிக்க இங்கே அழுத்துங்க.

இவிக தமிழ் இலக்கிய முன்னோடிங்க.. தூத்தேரிக்க..

நன்றி: இந்நேரம் வலைப்பூ

Sunday, February 13, 2011

காதலர் தின ஜோதிட டிப்ஸ்


காதலர் தின ஜோதிட டிப்ஸ்

காதலை என்னதான் தெய்வீகம் அது இதுனு தூக்கிப்பிடிச்சாலும் காதலுக்கு அடிப்படை கவர்ச்சிதேன். ஆண் மேல பெண்ணுக்கு கவர்ச்சி ஏற்படனும்னா அந்த ஆணுக்கு கட்டாயம் சனி நல்ல இடத்துல நிக்கனும். சனி பிடிச்சவனை பார்த்தா "ஏம்பா இந்த சூட்கேசை தூக்கிட்டு வரயா"னு தான் கேட்கத்தானே தோனும்.(சனி - லேபர்)

சனியை பொருத்தவரை மன்சாளை ரெண்டு வகையா பிரிக்கலாம். சனி அனுகூலமா உள்ளவுக. சனி பிடிச்சவுக. சனி அனுகூலமா உள்ளவனுக்கு சனிபிடிச்சவன் பயிட்டு தூக்கவேண்டியதுதான்.

ஒரு காதல் ஜோடி பீச்ல உட்கார்ந்திருக்கும். அதுல காதலனோ,காதலியோ ஆரோ ஒருத்தர் தேன் எந்திரிச்சு போய் திங்க எதையாவது வாங்கிட்டு வருவாய்ங்க. அப்படி எந்திரிச்சு போறவன் /வள் ஆரோ அவளுக்கு சனி பிடிச்சிருக்குனு அர்த்தம்.

சனி அனுகூலமா உள்ளவுக நூத்துக்கணக்குல சேர்ந்து ஒரு காரியத்தை செய்யலாம். பிரச்சினை வராது. ஆனால் சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க.

ஆக ஆருக்கெல்லாம் சனி அனுகூலமா இருக்காரோ அவிக மட்டும் லவ்ஸ் பண்றது பெட்டர். அதை விட்டுட்டு ஏழரைல, அர்தாஷ்டமத்துலன்னு சனி பிடிச்ச நேரம் லவ்ஸ் பண்ணா பயந்து பயந்து பண்ணனும் ( இங்கே காதல் வந்தது உங்க சுதந்திரத்தை கொல்ல - இந்த லவ் மேட்டர் ஆருக்கெல்லாம் லீக் ஆகுது அவிகளுக்கெல்லாம் பயந்து சாகனும் - சனி பிடிச்சவன் அடிமையாதான் வாழனும்)

மேலும் சனி பிடிச்ச நேரத்துல லவ்ஸ் பண்றிங்கனு வைங்க ஏற்கெனவே சொன்னாப்ல சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க. இந்த மாதிரி கிராக்கிங்கதான் மத்தில கழண்டுக்கறது ஆசிட் அடிக்கிறது , கத்திக்குத்துக்கெல்லாம் இறங்கிரனும் ( இவன் ஸ்டேஷன்ல போய் கை கட்டி நிக்கனுமே - சனி பிடிச்சா நீங்க விசிட் பண்ணியே ஆகவேண்டிய இடங்கள் சிலது இருக்கு போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு ,சுடுகாடு. டேக் கேர்!)

எதிர்பாலினரோட நெருக்கம், இதம்லாம் கிடைக்கனும்னா சனி பலம் நிச்சயம் தேவை. சனி பலம் இல்லாத சமயம் , இதர கிரகங்களோட பலத்தால (உ.ம் குரு, சுக்கிரன்) மேற்படி நெருக்கம், இதம் கிடைச்சாலும் டிக்கெட் இல்லாம சினிமா பார்த்துக்கிட்டிருக்கிற மாதிரி தான். படக்குனு தியேட்டர்காரன் டார்ச் சகிதம் செக்கிங்குக்கு வந்தான்னா அவமானம் தேன்.

இன்னொரு மேட்டர் , காதல் பிறக்கிற சமயம் சனி அனுகூலமாயிருந்தா போதும்.. அப்பாறம் சனி பிடிச்சாதேன் சிக்கல் வரும் -அந்த சிக்கலை தாங்கி காதல் நின்னாதான் அது உண்மையான காதல் - விவகாரம் கண்ணாலத்துல முடியும். பெண்ணுக்கு சனி பிடிச்சாதான் அவள் ஒழுங்கா குடும்பம் நடத்துவாள். ஆணுக்கு சனி பிடிச்சாதான் பொஞ்சாதி அருமை தெரியும்.

சில ஜோடிகளை பார்த்திங்கனா லவ்ஸ் பண்ணுவாய்ங்க பண்ணுவாய்ங்க பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் படக்குனு ஒரு நாள் சுமுகமா பிரிஞ்சுருவாய்ங்க. இன்னாடா மேட்டருன்னா அவிகளுக்கு காதல் வந்தப்பயும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு. லவ்ஸ் பண்ண காலம்லாமும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு.

சனி அனுகூலமா உள்ளவளுக்கு சனி தொடர்பான வேலைகள் செய்யவேண்டிய அவசியம் கிடையாது ( ஐ மீன் பயந்து நடக்கிறது -மாமனார் மாமியாருக்கு -அடிமையா இருக்கிறது -கணவனுக்கு) ஆனால் எதிர்பாலினனால இதம் கிடைக்கனும். கிடைச்சுருச்சு.

ரெண்டு பேருக்கு சனி அனுகூலமா இருந்தா ஓகே. ரெண்டு பேருக்கும் சனி பிடிச்சிருந்தா நாட் ஓகேன்னு சொன்னேன். ( ஆனால் இந்த காதல் கண்ணாலத்துல முடிஞ்சாதேன் அது உண்மையான காதல்) . ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சனி அனுகூலமா இருந்து - ஒருத்தருக்கு சனி பிடிச்சிருந்தா என்னாகும்னு கேப்பிக நம்ம சைட்ல சொல்லியிருக்கேன். இங்கே அழுத்தி அதையும் படிங்க

Saturday, February 12, 2011

சனியும் கில்மாவும்


அண்ணா வணக்கம்ணா!
எதையும் எதோட வேணம்னா தொடர்பு படுத்தமுடியும் -கேயாஸ் தியரி . ஆனால் நான் கில்மாவுக்கும் கிரகங்களுக்கு கட்டாய கல்யாணம்லாம் பண்ணி வைக்கலிங்கண்ணா (நேரு இப்படித்தான் தெலுங்கானாவுக்கு கட்டாய கண்ணாலம் கட்டி வச்சுட்டு பூட்டாரு. இப்ப இம்சை தாங்க முடியலை)

சனிக்கு காரி, மந்தன்(ஸ்லோ), முடவன்னு ( நொண்டி) பல பேர் உண்டு. காரியும் காரிகையும் (பெண்) - மந்தனும் மங்கையரும் - முடவனும் மடமாதரும்னெல்லாம் தலைப்பு வைக்கலாம் தான் . ஆனால் தம்பிமாருங்களுக்கு புரியாதோ என்னமோனு வைக்கலிங்கண்ணா.

தெலுங்கு திரைப்பட பாடலாசிரியர் வேட்டூரி சுந்தர ராமமூர்த்தி தெரியுங்களா? நம்ம வாலி எதுகை மோனைக்காக ரெம்ப சுத்தியடிச்சு இம்சை படுவாரு. ஆனா வேட்டூரி வரிக்கு வரி மட்டுமில்லிங்கண்ணா வார்த்தைக்கு வார்த்தை எதுகை மோனை வராப்ல கூட எழுதுவாருங்கண்ணா.

ஒரு பாட்டு வரிய பார்ப்போம்:

இந்துவதன -குந்தரதன -மந்தகமன -மதுர வசன -ககன ஜகன -சொகசு லலனவே. (தெலுங்கு குட்டிகளை மிரட்ட இதை உபயோகிச்சுக்கலாம் - தாளி இன்னைக்கு கான்வென்ட் படிப்பு படிக்கிற குட்டிகளுக்கு சுட்டுப்போட்டாலும் திருப்பிவராது).

மேற்படி பாட்டுவரில 3 ஆவது வார்த்தைய பாருங்க. ",மந்த கமன" மந்த - ஸ்லோ , கமனா - நடக்கிறது. ( நாம அன்ன நடைங்கறோமே அது மாதிரி)

மேற்படி பாட்டு ஒரு சூப்பர் ஃபிகரை வர்ணிக்குது அதுல இந்த வார்த்தை வருது. சாலு மாலை( பெண்குட்டிதேங் -சுஜாதாவோட வார்த்தை பிரயோகம்)

"மந்த கமனாங்கறாரு. இதே வார்த்தை 100% சனிக்கும் சூட் ஆகுது பாருங்க. மேலும் மந்தன்னு பேரே இருக்கு. ( அவர் ஒரு ராசிய கடக்க ரெண்டரை வருசம் ஆகுதுங்கண்ணா. ரெம்ப ஸ்லோ)


- சிறு விளம்பர இடைவேளைக்கு பிறகு தொடரும் -

அண்ணே!
நம்ம வலைப்பூக்களுக்கு பேராதரவு கொடுத்தவுக நீங்க அப்படியே நம்ம வலை தளத்துலயும் அடியெடுத்து வைக்கனும்னு கேட்டுக்கறேன். அதுக்கும் மேற்படி பதிவை தொடர்ந்து படிக்கவும் இங்கே அழுத்துங்க

Friday, February 11, 2011

பாக்கில் அமெரிக்க தூதர் கைது?

பாக்கில் இருவரை பாக்கிற்கான அமெரிக்கதூதர் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்படலாம் என்று செய்தி வந்திருக்கிறது.

"அவிக சுடப்பார்த்தாய்ங்க அதனால தற்காப்புக்கு சுட்டேனு தூதர் சொல்லியிருக்காரு. ஆனால் சுட வந்தவுகள்ள ஒருத்தன் கிட்டத்தான் துப்பாக்கி இருந்திருக்கு. அதுவும் காலி ( நோ புல்லெட்ஸ்) தூதர் கையில துப்பாக்கி எப்படி வந்தது? பையில மாறுவேடத்துக்கு தேவையான ஐட்டங்க ஏன் இருந்தது? ன்னுட்டு பாக் போலீஸ் கேட்குது.

அமெரிக்கா முன்னாடி பாக் அரசு நாலு காலையும் தூக்கிட்டதால பாக் மக்கள் அரசை செல்லா காசுக்கு கூட மதிக்கிறதில்லையாம். அதனால இருக்கிற இத்துனூண்டு மருவாதியனா காப்பாத்திக்க இந்த கேஸை பாக் சீரியஸா டீல் பண்ணுது. அமெரிக்க பெரியண்ணன் "வார்னிங் மேல வார்னிங்" விட்டுக்கிட்டிருக்காரு.

பாக் என்னமோ நடவடிக்கையில உறுதியா இருக்காம். ஹும்.. பார்ப்போம்!

கடவுளுக்கு தர்மத்தை காக்கும் மூட் வந்தா அநியாயத்துக்காக கை கோர்த்த கூட்டாளிக மத்தியில தகராறை உண்டு பண்ணி அவனனவனே அடிச்சிக்கிட்டு சாகிறாப்ல பண்ணுவாராம். (உ.ம் மகிந்திர பட்சே, பொன்சேகா - இப்ப கலைஞர் -சோனியா)

ஆமா நான் பாப்பாத்திதானு கர்ஜனை செய்த ஜெயலலிதா அம்மையாரை கொண்டே ஜெயேந்திர சரஸ்வதியை களி திங்க வச்ச கடவுளுக்கு இதெல்லாம் பெரிய காரியம்னு நான் நினைக்கலை

குரு பலமும் கில்மாவும்


குரு பலமும் கில்மாவும்
சீ சீ அபிஷ்டு ! அபிஷ்டு ! குருகிரகத்தோட காரகம் என்ன? புராணம்,இதிஹாசம், குரு, குரு உபதேசம், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள்னு ஜோதிஷம் சொல்லுது. அப்படியா கொத்த குருவை போயி கில்மாவோட சேர்க்குதே இந்த ஞான சூனியம்னுட்டு "அவாள்" சீறி எழலாம்.

வெய்ட் அண்ட் சீ ! மொதல்ல குருவோட கதையா சொல்லப்படற கில்மா மேட்டரை பார்ப்போம். குருவோட மனைவிய சந்திரன் தள்ளிட்டு போயிர்ரான். அஜால் குஜால் வேலையெல்லாம் முடிஞ்சு புதனும் பிறந்துர்ரானாம். அப்பவும் குரு கண்ட வாசலை ஏறி மிதிச்சு கெஞ்சி கூத்தாடி மனைவியை "மீட்டுர்ராரு"

ஆக குருவும் ஜொள்ளு பார்ட்டியா தான் இருக்கனும். அட மனுசன்ல இருக்கிறது ஒரே பவருப்பா.அது மேல் நோக்கி பாய்ஞ்சா யோகிக் பவர், கீழ் நோக்கி வடிஞ்சா செக்ஸ் பவர் .

நித்யானந்தா மாதிரி பார்ட்டியெல்லாம் லிஃப்ட்ல போறச்ச அறுந்து விழுந்த கேஸு.

காமி கானி வாடு மோக்ஷ காமி காலேடு.ஆழமான உடலுறவுக்கு பிறகு மனசுல ஒரு வித அமைதி, நன்றி உணர்வு பரவும் - அந்த நன்றி உணர்வு பக்தி உணர்வை கிளப்பும். அதுக்குத்தான் செக்ஸ் எஜுகேஷனுக்கான டெமோ போல கோவில் கோபுரத்துல பலான சிலைகளை வச்சாய்ங்க.


ஆழமான தியானம் அ மனம் குவிந்த ஜெபம், பூஜைக்கு பிறகு ஆட்டோமேட்டிக்கா உடம்புல ஒரு மதமதப்பு வரும். இதெல்லாம் தெய்வீகத்துக்கும் - காமத்துக்கும் உள்ள தொடர்பை காட்டுது. விஸ்வாமித்திரர் இழுத்துக்கட்டிக்கிட்டு ( கோவணத்தை சொன்னேன்) தபஸ் பண்ணாரு .ஆனால் மேனகை வந்ததும் என்னாச்சு? மேனோக்கி பாஞ்ச சக்தி கீழ் நோக்கி வடிஞ்சுருச்சு ( ஊர்த்வமுகம் -அதோமுகம்)

குருவோட காரகத்வத்தை பாருங்கம்: (குருவே சொல்றாரு)

//நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, //

தங்கமிருந்தா கண்ணாலம் நடக்கும். பெண் வீட்டுக்காரன் பத்து சவரன் போட்டா இவிக ரெண்டாச்சும் போடனும்ல.. பைனான்ஸ் இல்லைன்னா தாளி பெண் பார்க்க கூட போக முடியாது. மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள்ள இன்டராக்ட் ஆனா "அடடா.. சார் இன்னம் அன்மேரிடா.. என் ஃப்ரெண்டு மகள் ஒருத்தி டிகிரி முடிச்சுட்டு.." வகையறா தகவல் வெள்ளம் கொட்டும்.

//நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்),//

உங்க ஜாதகத்துல குரு நல்ல இடத்துல இருந்தாதான் பிள்ளைப்பேறுல்லாம் கிடைக்கும். அந்த யோகம் இருந்தாதான் கில்மாவுக்கு லைன் க்ளியராகும். (கண்ணாலமாகியும் வாரிசு கிட்டாதவுக இருக்காய்ங்க. இல்லேங்கலை. அதுக்கு இன்னபிற கிரகங்கள்,பாவங்களோட நிலை காரணமா இருக்கலாம். நான் சொல்ல வர்ரது ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட்)


குருபலத்துக்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்பு? சொல்றேன். குரு வயிறு,இதயத்துக்கு அதிபதி. இந்த ரெண்டு பார்ட்டும் ஒழுங்கா வேலை செய்தாலே ஹெல்த் பாய்ண்ட் ஆஃப் வ்யூல தூள் கிளப்பலாம்.

பாடில ரெண்டு விங் இருக்கு. டைஜசன் விங் - பலான விங் ஒன்னு வேலை செய்யும்போது அடுத்தது வேலை செய்யாது. அதனாலதான் கரப்பான் பூச்சி மொதல்ல அஜால் குஜால்னுட்டு அப்பாறம் தான் உணவு தேடவே போகுதாம்.அதனாலதான் அதுக்கு ஆவிசி ( ஆயுள்) சாஸ்தினு ஒரு ஆராய்ச்சி சொல்லுது.

ஆரோக்கியமான உடல்ல ஆரோக்கியமான எண்ணங்கள் தான் வரும்.அந்த எண்ணங்களை செயல்படுத்தற உந்துதலும் வரும். ஸ்தூல நிலை வேறயா ( ஏழ்மை - பசி -பட்டினி ) இருந்தாலும் உற்சாகமா சந்தோஷமா இருப்பிக. சந்தோஷம் சகம் பலம்.

அந்த சந்தோஷம் உங்களை உந்தித்தள்ள நீங்க "முன்னேற்ற பாதையில மனசு வச்சு" ஒர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சுருவிங்க.

ஞாபகசக்தி,ஆட்சி மொழி மேல கமாண்ட் , நிர்வாகம், அரசு, அரசு தரும் வீட்டு வசதி, முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் குரு நல்லா இருந்தாதான் சாத்தியம், இந்த குண நலன், திறமைகள் எல்லாம் இருந்தா முன்னேர்ரதா கஷ்டம். ஒடனே எவனாச்சும் சவுண்ட் பார்ட்டி பையனுக்கு நல்ல டேலன்ட் இருக்கு -எதிர்காலம் இருக்குனு கெஸ் பண்ணி பொண்ணை கட்டி வச்சு வீட்டோட மாப்பிள்ளையாக்கிருவான்.


சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தத்தான் பார்ப்பான்.துக்கத்துல உள்ளவன் அடுத்தவுகளையும் துக்கப்படுத்தத்தான் பார்ப்பான். சந்தோஷமா உள்ள நீங்க நாலு பேருக்கு நல்லதை செய்யப்போவிக. குரு ஆட்சி உச்சம்னு உட்கார்ந்திருந்தா அரசியல் வாழ்வும் கியாரண்டி. ( ஒன்னுக்கு ரெண்டா வச்சிக்கலாமில்லை - சொம்மா தமாசு வாத்யாரே)

குருன்னா டூ குட்.( Too good/ do good) . திணை விதித்தவன் திணையறுப்பான். வினை விதைத்தவன்? ( ஆருப்பா அது அரசியல் வாதியாவாங்கறது ..சைலன்ஸ் ப்ளீஸ்)


குருங்கறது பிராமண கிரகம். குருவோட பலத்தை பொருத்து உங்கள்ள பிராமண லட்சணங்கள் டெவலப் ஆக ஆரம்பிக்கும். ஐ மீன் ஒழுங்கா படிக்கிறது - ஜீன்ஸ் -மொபைல் -ஐபாட் எல்லாம் சோறு போடாது - லவ் - பப் -பீருனு போனா படிப்பு டைவர்ட் ஆயிரும்ங்கற எண்ணம் - எவன் தங்கையையோ எவனோ இழுத்தா -ஸ் அப்பாடா என் தங்கை ஹங்கேரில இருக்கானு பெருமூச்சு விடறதுமாதிரி லட்சணங்கள் வந்துரும். அப்பாறம் வெற்றிக்கு என்ன குறை. காலாகாலத்துல கண்ணாலம்- கில்மாவோ கில்மாதான்.


ஒரு ஜாதகத்துல குரு எவ்ள முக்கியமோ சுக்கிரன் கூட அவ்ள முக்கியம். ரெண்டு பேரும் பேலன்ஸ்டா இருக்கனும். சுக்கிர பலத்தை விட குரு பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் குறைஞ்சுரும். குரு பலத்தை விட சுக்கிர பலம் கூடிப்போச்சுன்னா பலான மேட்டர்ல ஆர்வம் அதிகரிச்சுரும்.

ஆனா ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா குருபலம் உள்ளவுக சுக்கிரனோட லைன்லயும் ( அதாங்க காதல் - கருமாந்திரம்) சுக்கிரபலம் உள்ளவுக பூஜை புனஸ்காரம்னும் போவாய்ங்க. கரீட்டா ஒரு ஸ்டேஜ்ல தங்களோட சுய ரூபத்தை வெளிப்படுத்துவாய்ங்க. சுக்கிரனை பத்தி நிறைய பேசனும். அவரோட பேட்டைக்கு போறச்ச பேசிப்போம்.

( படத்தில் இருக்கும் நடிகர் என்.டி.ஆர் - பிரம்ம ரிஷி விஸ்வாமித்ரா பட ஸ்டில் இது)