Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts
Sunday, July 3, 2011
காதல் Vs காமம்
1940 ல திருலோகசீதாராம் ( சுஜாதாவோட மொத கதைய தன் சிவாஜி பத்திரிக்கையில வெளியிட்டவர் கூட இவர் தான்னு ஞா) ஆசிரியத்துல வெளிவந்த கிராம ஊழியன் பத்திரிக்கையில அதனோட பேருக்கு பொருத்தமே இல்லாத உன்னத படைப்புகள் எல்லாம் வெளி வந்ததை போல 2000,ஜூலை,31 ஆம் தேதி துவங்கின என் கவிதை07 வலைப்பூவில் கவிதை தவிர "சகலமும்"வெளிவந்தது.
ஒரு பதிவுல வாக்குஸ்தானத்து சுக்கிரனை பத்தியும் என் கவிதா மோகத்தையும் விவரிச்சதா ஞா . கவிதையை விட்டபிறவுதான் ப்ரெட் ஹன்டிங்கே ஒரு முடிவுக்கு வந்தது .( நம்ம கடக லக்னத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதியாச்சே.)
இருந்தாலும் கவிதைன்னா ஒரு குன்ஸ் அப்படியே மைண்ட்ல நின்னுருச்சுங்ணா. கடந்த சில நாட்களா எழுதிக்கிட்டிருந்த காதலித்தால் செக்ஸ் பவர் ஃபணால் தொடர்ல காதல் Vs காமம்னு ஒரு உப தலைப்பை அடிச்சு கூட வச்சிருக்கேன்.
இருந்தாலும் 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்த தேவகுமாரன் மாதிரி மைண்டுக்குள்ள என்னைக்கோ ஏரைக்கட்டி வச்சிருந்த பாட்டெல்லாம் கியாபகம் வர ஆரம்பிச்சுருச்சு.
இன்னாங்கடா இது .." அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் " சானல் மாறி சொரியுதுன்னு நினைச்சேன். அப்பாறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு.
காதல்ங்கறது கவிதை மாதிரி. காமம்ங்கறது உரை நடை மாதிரி. கவிதையை புரியற மாதிரியும் எழுதலாம். புரியவே புரியாத மாதிரியும் எழுதலாம்.
காதல் கூட இப்படியாக்கொத்ததுதான் புரியாத கவிதை பிரமிப்பை கொடுக்கிறாப்ல - காதலும் புரியாத வரைக்கும் பிரமிப்பை கொடுக்கும்.
ஆனா காதலை டிசக்சன் பண்ணா அசலான மேட்டர் எல்லாம் வெளிய வந்துரும். வெளிய வந்த மேட்டரை பார்த்தா வாழ்க்கையே வெறுத்துரும். அவ்ளோ அக்வார்டா இருக்கும். அல்லது வெகு சாதாரணமானதா இருக்கும். அதுவும் பெண்கள் மேட்டர்ல இது மஸ்ட்.
//இந்து வதன குந்தரதன மந்தகமன மதுரவசன ககன ஜகன சொகசு லலனவே //
இந்த வரிகளை கொஞ்சம் வேகமா படிச்சா ஒரு கட்டிங் போட்ட கணக்கா இருக்கும். ஆனால் தமிழ்ல இதனோட அர்த்தத்தை சொன்ன "அட அவ்ளதானா" னு ஆயிரும்.
காதலும் அப்படித்தான்.பரபாஷையில சொல்லப்பட்ட ஆடம்பரமான வார்த்தை விளையாட்டு. பரபாஷை கவிதைய தமிழ்ல டப் பண்ண மாதிரி காதல்களை சைக்காலஜிப்படி டிசக்சன் பண்ணா 'த்து போ"ன்னு ஆயிரும்.
காதல் & கவிதை பற்றிய விளக்கம் இது.
காமம்ங்கறது உரையாடல் மாதிரி. சாதாரணமானது. ஆனால் சில நேரங்கள்ள உரையாட்லே அற்புதமான கவிதையா மாறிரும். அது கவிதையா மாறுவதும் உரையாடலா முடிஞ்சு போறதும் உரையாடற பார்ட்டிக்கையில இருக்கு.
எப்பயோ கோசாரத்துல சந்திர சுக்கிர சேர்க்கை ஏற்ப்பட்டப்பயோ அ சுக்கிரன்/புதன் இத்யாதி கிரகங்கள் அனுகூலமா சஞ்சரிச்சப்பயோ நாம கிறுக்கின வரிகளை பாருங்க..
புதுமொழி கற்பவன்
மீண்டும் குழந்தையாகிறான்.
சிந்தும் மழலை
* * *
சிக்னலில் நின்றபோது குயிலின் கூ .. கூ
அட சட் ! ரிங் டோன்
* * *
காதலும் கவிதையும் ஒன்னு. காதல் காதலிக்கிறவனுக்கு சினிமா ஸ்கோப்ல தெரியுது. தேர்ட் பார்ட்டிக்கு 35 எம்.எமல தெரியுது.
காதலிக்கிறவனுக்கே காதலிக்கிறச்ச சினிமா ஸ்கோப்ல தெரியுது. கண்ணாலத்துக்கு அப்புறம் 35 எம்.எமல தெரியுது.
ஏன்னா அது உருவாகிறது மனசுல. மனசு மாறக்கூடியது. அஸ்ட் ராலஜிக்கல் ரெஃபரன்ஸ் தரனும்னா சந்திரன் மனோ காரகன் .6 மணி நேரத்துக்கொரு தாட்டி நட்சத்திர பாதம் மாறிர்ராரு. சில நேரத்துல ராசியே மாறிர்ராரு.
உரையாடலும் காமமும் ஒன்னு.அல்லாருக்கும் புரியுது. ( புரியாத மாதிரி காட்டிக்கிறாய்ங்க அது ஹிப்பாக்கிரசி) .
அது உடலில் உருவாகுது. உடலை சுடலையில வச்சு எரிக்கிற வரை அதனோட வெப்பம் இருந்துக்கிட்டே இருக்கு.
புரியாத கவிதைய வச்சு மாரடிக்கிறதை விட புரியற உரையாடலை எப்படி கவிதையா மாத்தறதுங்கற "தில்லாலங்கடி வேலை" தெரிஞ்சா பெட்டருங்ணா.
அதுக்குன்னு காதலை இந்த தொடர்ல இருந்து கழட்டி விட்டுரலிங்ணா. அதுவும் ஒரு ட்ராக்ல போய்க்கினே இருக்கும்.டோன்ட் ஒர்ரி.
1987 முதல் 1991 வரை தெலுங்கு சினிமா பாட்டுகளோட ட்யூனுக்கு நான் எழுதின சில பாட்டுக்களை/பல்லவி/ சரணங்களை கியாபகத்துலருந்து தந்திருக்கேன். ப்ராக்கெட்ல உள்ளது இன்னைய தேதிக்கு போட்ட கமெண்ட்.
அமுதமே புது வாசம் வீசும் குமுதமே
வானிலே பிறந்து வந்த நாதமே
மதனன் வரைந்த லிகிதமே
பூவில் பாரிஜாதமே (அமுதமே
குறிப்பு:
பாரிஜாதம்னு ஒரு பூவே இல்லை. இந்த மரம் சொர்கத்துல இருக்கிறதா ரெஃபரன்ஸ் இருக்கு. ஆக காதலி - காதல் எல்லாம் வெறும் கற்பனையிலதான் சாத்தியமானு கேட்டுராதிங்க)
கன்னம் கண்டு வந்த வண்டு அமரும் கண்ணே தாகம் கொண்டு
காதல் தாகம் தந்த மோகம் சொன்னேன் பாட்டு ராகம் போட்டு
காகம் போன்ற என்னிலே துள்ளி வந்த ராகமே
மானே மதியே மதியின் ஒளியே (அமுதமே
குறிப்பு:
தன்னை காகம்னு தாழ்த்திக்கிறான். ஏன்?
ஆன்மா படைப்போட இணைந்திருக்கு. ஆனா அதை ஈகோ கவர் பண்ணி படைப்புலருந்து தனிமைப்படுத்திருச்சு. ஈகோவை தொலைச்சாத்தான் தனக்கு ஆன்ம தரிசனம் ஏற்படுங்கற இன்ஸ்டிங்ட் அவனுக்குள்ள இருக்கு. அதுக்கு காதலி -காதல் எல்லாம் சாக்கு.பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதிநிதி . அவளோட ஈகோ இல்லாம உறவாடுவதன் மூலம் இயற்கையோட ரீ கனெக்ட் ஆகமுடியும்னு சப்கான்ஷியஸா நம்பறான் போல.
* * *
ராகங்கள் ரதமாகும் சிவிகை ஏந்திடும்
சோகங்கள் மலையேறும் மாலை வந்திடும்
மேகங்கள் தூவாதோ பன்னீர் மழையே
காலமே மாறிடும் ஞாலமே என்னை பேசிடும்
ஆலாலம் அது கூட அமுதாய் மாறிடும்
கமெண்ட்:
//பன்னீர் மழையே // ங்கொயயால இருக்கிற பொல்யூஷனுக்கு அமில மழைதேன் பொழியும்.
***
பாசமில்லே பரிவுமில்லே என்ன பெண்டாட்டி
பக்குவமா பார்த்துக்கிட்டேன் தன்னால் ஒரு வப்பாட்டி
தாலி கட்டி போயிருப்பேன் உன்னோட நான் திண்டாடி
சாவி கொடுத்த பொம்மை போலே வந்திருக்கேண்டி முன்னாடி
கமெண்ட்:
என்ன கலைஞருன்னு நினைப்பா? பல தார சட்டத்துல உள்ள போட்டுருவாய்ங்க.
* * *
ஜாடிக்கேத்த மூடி போல ஏழு பொருத்தம் ஓகே..
கமெண்ட்:
அவா கிட்டே பொருத்தம் பார்த்தே போலிருக்கு. இந்த தசவித பொருத்தம்லாம் ஜுஜுபி நைனா ஜாதகம் பொருந்தனும். அதான் இம்பார்ட்டன்ட்
* * *
இந்த பாட்டுக்கு மட்டும் சிச்சுவேஷன் சொன்னாத்தான் சரியா வரும். ஹீரோயின் ஹீரோவை கலாய்க்க அவன் குளிக்கப்போறச்ச - அவனோட ட்ரஸ் எல்லாத்தையும் - பாத்ரூம் கதவு மேல கழட்டி போட்ட ட்ரஸ் உட்பட - தூக்கினு போயிர்ரா.
அப்ப ஹீரோ டர்க்கி டவலையும் உதறிப்போட்டுட்டு பாடற குத்துப்பாட்டு - ஹீரோ ஆரு தெரியுமா? நம்ம சிரஞ்சீவிதேன்
ஹே வெட்கம் விட்டுக்கடி வேணுமுன்னா தொட்டுக்கடி
மாமனோட பட்டுக்கடி வா வா
அட மந்திரம் தந்திரம் கற்றவன் சுந்தரன் நானே
பத்திரம் பத்திரம் சிதறிடும் கற்புத்தானே
கமெண்ட்:
கற்பு என்ன சூறைத்தேங்காயா.. போடா பொங்கி !
செடி கொடி மரம் எல்லாம் ஆடை கட்டுதா
கமெண்ட்:
பால் கூட ஆடை கட்டுது தெரியும்ல
பிறக்கும் போது யாருக்கும் தான் ஆடை இருந்துதா
கோட்டைக்குள்ளே கண்ணை பொத்தி பார்க்கவில்லையே
ஒரு நாளு ஸ்ரீ கிருஷ்ணந்தான் ஆடைகள் கொண்டு போனான்
இ ந் நாளு பாமாமணி என்னாடை கொண்டு போனாள்
* * *
நீ அறிந்த ரகசியம் தான் எனக்கு ஒரு அதிசயம் தான்
நீ காட்டு நீ காட்டு நானும் பரிசம் போடுறேன்
உன் மனசை திறந்து காட்டு மாலை போடுறேன்
(இது மூலப்பாடலோட ஆசிரியரின் வரிக்கான மொழிப்பெயர்ப்பு)
கமெண்ட்:
த பார்ரா பாட்டுல கூட சடன் ட்விஸ்ட் ?
* * *
Thursday, June 30, 2011
காதலால் கில்மாவுக்கு ஆப்பு
அண்ணே வணக்கம்ணே !
இந்த படைப்புலயே உன் மனசை விட உசந்த வஸ்து கிடையாது. ஒருவேளை ஏதாச்சும் வஸ்து உன் மனசை விட உசந்ததா தோனினா உன் மனசு வீக்காயிருக்குன்னு அர்த்தம்.
மேற்படி ஸ்டேட்மெண்ட் நம்மோடது இல்லிங்ணா .விவேகானந்தர் சொல்லியிருக்காரு. ஒருத்தன் ஒருத்தியை லவ் பண்றான்னா என்ன அர்த்தம். இவன் லைஃப்ல அவளும் இருந்தாதான் இவன் லைஃப் பூரணமாகும்னு நினைக்கிறான்.
ஒரு கோணத்துல பார்த்தா இவன் லைஃப் அரைகுறையா இருக்கு. அவள் வந்தா அது முழுசாகும்னு ஃபீல் பண்றான். அவள் உசந்த வஸ்துவா தெரியறான்னா என்ன அர்த்தம் இவன் மைண்ட் வீக்காயிருக்குனு அர்த்தம்.
லவ் பண்ற பார்ட்டியெல்லாம் வீக் மைண்டடுன்னு சொல்லலை. ஆனால் வீக் மைண்டட் சனம் கூட லவ் பண்றாய்ங்க. இவிகளால தான் பிரச்சினையே வருது.
இவன் கடேசி வரை வீக் மைண்டடாவே இருந்துட்டா பரவால்லை. இடையில மேற்சொன்ன விவேகானந்தர் ஸ்டேட்மெண்ட் இவனுக்குள்ள ஸ்பார்க் ஆயிருச்சுன்னு வைங்க. அப்பம் அந்த காதலி இவனோட கடந்த கால பலகீனத்தை ஞா படுத்தி இம்சை கொடுக்க ஆரம்பிச்சுருவாள்
மேலும் லவ்ங்கறது ஆப்போசிட்ஸ் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர்ங்கற தியரிப்படி தான் உருவாகுது. கருப்பா கீறவன் - சேப்பா கீறவளுக்கு ஜொள்ளு உடுவான். ஒல்லியா கீறவன் ஹார்லிக்ஸ் பேபிக்கு நூல் விடுவான்.
இனம் இனத்தோடு சேர்ந்தா போரடிக்கும் அவ்ளதேன்.ஆனால் இமிசை இருக்காது. தவறான முனைகள் - எதிரெதிர் குணாம்சங்களுடையவர்களுக்கிடையில் ஏற்படும் காதல் ஆரம்ப காலத்துல ரெம்ப த்ரில்லா இருக்கும்.
இளமை ஊஞ்சலாடும் வரை - ங்கொய்யால எங்க போகப்போறா எல்லாம் நம்ம சைஸுக்கு கிரைண்ட் பண்ணி ஏத்திவிட்டுரமாட்டேங்கற எண்ணம் இருக்கும்.
ஆனால் இளமை ஊஞ்சலோட வேகம் குறையும் போது " இன்னாடா இது பெரி எழவாப்போச்சு. இவளோட இன்னும் எத்தீனி காலத்துக்கு மாரடிக்கனுமோ" னு தோணிரும்.
மனித உடல் எளிமையானது. அப்பாவி. அன் எஜுக்கேட்டட். இதுக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசறதெல்லாம் தெரியாது. என்னதான் கூரைக்குள்ள வசிச்சு கூடுதல் ரோமங்களை இழந்திருந்தாலும் - உடல் உழைப்பு குறைய குறைய சைஸு சின்னதா பொயிருந்தாலும் மனித உடல் பழைய நியூஸ் பேப்பர் மாதிரி காட்டுமிராண்டி காலத்துலயே நின்னுருச்சு. நோ அப்டேஷன்
ஆனால் மனித மனம் காம்ப்ளிக்கேட்டட்.- அடப்பாவி வேலைகளையெல்லாம் அசால்ட்டா செய்துட்டு அப்பாவி மாதிரி பில்டப் கொடுக்கும். நாம படிக்கிற அரைகுறை -எடக்கு மடக்கு படிப்பு -கேட்பு எல்லாமே இதுல ஃபீட் ஆகி கிடக்கு - உள்ளே ஒன்னை வச்சு -வெளிய ஒன்னை பேசறதுல அரசியல் வாதியை விட மோசமானது.
தன்னோட காட்டுமிராண்டி காலத்து பதிப்பு ஒன்னை கவருக்குள்ள போட்டு வச்சுக்கிட்டு அப்டேட்டட் பதிப்பை மட்டும் எக்சிபிட் பண்ணிக்கிட்டு ரெம்ப ஜாலாக்கா மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டு வருது.
மனசுல எந்த அளவு காம்ப்ளிக்கேஷன்ஸ் அதிகமாகுதோ அந்த அளவுக்கு அது கொஞ்சம் போல அதிர்ச்சி -ஏமாற்றம் இத்யாதிக்கு இம்யூன் ஆகலாம்.
ஆனால் பாவம் இந்த அப்பாவி உடல் திருவிழாவுல காணாம போன கொயந்தை மாதிரி அல்லாடி போயிருது.
மனப்போராட்டங்கள் மனித உடலை -அதுவும் செக்ஸ் பவரை சட்டுனு பாதிச்சுருது. அது எப்படின்னு அடுத்த பதிவுல இன்னம் கொஞ்சம் விவரமா பார்ப்போம்.

Wednesday, June 29, 2011
காதலித்தால் செக்ஸ் பவர் கோவிந்தா :2

நாரத பக்தி சூத்திரத்துல சொல்றாப்ல (எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான பக்தி உண்டாம்) எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை விதமான காதல் இருக்கு.
எதையுமே ஒரு சித்தாந்தத்துக்குள்ள அடைக்க கூடாதுங்கறது நம்ம சித்தாந்தம். ஆனால் என்ன பண்றது கடல் நீரை கூட ஒரு டெஸ்ட் ட்யூப்ல அடைச்சு அதை ஷூட் பண்ணி யு ட்யூப்ல விட்டாத்தான் பார்ப்போம்னு சனம் சொல்லுது.
அதனாலதான் நம்ம பாலிசிக்கு விரோதமா காதலை மொதல்ல சித்தாந்தப்படுத்தறேன். அப்பாறம் காதலித்தால் செக்ஸ் பவர் எப்படி கோவிந்தா ஆகும்னு சொல்றேன்.
காதலை பற்றி மட்டுமில்லே. ஒட்டு மொத்த படைப்பை -மனிதர்களை -உலகத்தை பிரிஞ்சிக்கிடனும்னா ஒரு அடிப்படை உண்மைய புரிஞ்சுக்கனும்.
*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.
*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது
*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்
*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை
*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு
*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.
*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு
*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு
(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)
*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே
*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது
*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்
*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது
*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு
*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா தனக்கே தனக்குன்னு ஒரு பெண் வேணும்ங்கற நிலை வந்துருச்சு.
அந்த தனக்கே தனக்கான பெண்ணுக்கான தேடலுக்கான துடிப்புத்தான் காதல்.
மேலும் மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு செக்ஸ்ல ஓரளவு - கொஞ்சம் நேரமாச்சும் நிறைவேறுது
செக்ஸ்ல கொல்லும் -கொல்லப்படும் இச்சை ஓரளவு நிறைவேறுது.
உடைச்சு சொன்னா ஆணுக்கு விந்து வெளியேறும் வரை கொல்லும் இச்சையும் விந்து வெளியேறிய பின் கொல்லப்படும் இச்சையும் நிறைவேறுது.
பெண்ணை பொருத்தவரை உச்சம் என்பது ரேரஸ்ட் ஆஃப் தி ரேரா இருக்கு. அதனால அவனுக்கு விந்து வெளியேறும் வரை இவளின் கொல்லப்படும் இச்சை நிறைவேறுகிறது. அவனுக்கு விந்து வெளியேறிய பின் இவளது கொல்லும் இச்சை நிறைவேறுது.
இந்த இழவெல்லாம் மல்ட்டி பர்ப்பஸ் ப்ராஜக்ட். இதுக்கான பைலட் ப்ராஜக்டுதான் காதல்.
சோகம் என்னன்னா ஓருயிர் பல்லுயிரா மாறினாலும் எல்லா உயிரும் இணைக்கப்பட்டுத்தான் இருக்கு. அந்த இணைப்பை உணர முடியாம ஈகோ தடுக்குது. ஈகோவை விட்டொழிச்சா உயிர்களிடையிலான இணைப்பை உள்ளபடி உணரலாம்.
ஆனால் ஆன்மாவை ஈகோ மூடி ஈகோவே ஆன்மா - ஈகோவே தான் என்ற மாயா உருவாகிவிட்டது.( நன்றி:ஓஷோ)
ஈகோ சுமக்கமுடியாத பாரமாயிருச்சு. அதை கழட்டி வைக்கிற இடமா மனசு காதலை நினைக்குது. அதனாலதான் காதலிக்கிறாய்ங்க.
இதான் காதல் கத்திரிக்காயோட செனெரியோ.
இப்பம் காதல்ல எத்தனை வகை இருக்குன்னு ஒரு குன்ஸா பார்ப்போம்:
1.தன் மீதான காதலால தன்னை காதலிக்கவும் ஒருத்தி வேணம்ங்கற ஈகோவால காதலிக்கிற காதல்
2.ஈகோவை சுமக்கமுடியாம ஆருக்காகவாச்சும் இந்த 'பாரத்தை" கொஞ்சம் போல இறக்கிவச்சா நல்லாருக்குமேங்கற எண்ணத்துல வர்ர காதல்
3.இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸால - தனிமை உணர்வால - சுய பரிதாபம் - தன்னவர்களால் நிராகரிக்கப்பட்ட உணர்வால வர்ர காதல்
4.தாய் மீதான காதலால் - தாயால் தள்ளி வைக்கப்பட்டு - தாய்க்கு மாற்றாக ஒரு பெண்ணை தேடும் காதல்
5.காமத்தை அங்கீகரித்து - அது குறித்த குற்ற உணர்வு ஏதுமின்றி - நேர்மையாய் அதை நிறைவேற்றிக்கொள்ள செய்யும் காதல்
6.காமத்தை ஓவர் லுக் செய்ய செக்ஸ் அப்பீலே இல்லாத சேப்பாக் கிரிக்கெட் கிரவுண்ட் தனமான சோடாபுட்டி பெண்ணை காதலிக்கும் காதல்
7.பிஞ்சிலே பழுத்து அல்லது மெச்சூர்ட் மைண்ட் காரணமாக தன் தந்தைக்கு நகலாக மாறி பெரிய மனுஷத்தனமாக விளையாட்டுத்தனம் மிக்க பெண்ணை காதலிக்கும் காதல்
8. தானும் முதலியார் -அவளும் முதலியார் - அவிகளுக்கு சினிமா தியேட்டருங்க இருக்கு -தங்களுக்கு சினிமா டிஸ்ட் ரிப்யூஷன் இருக்குன்னு கணக்கு போட்டு காதலிக்கு காதல்
9. யதார்த்த வாழ்க்கை நரகமாக இருக்க நிலத்தில் கால் பாவாத பிரதேசத்தில் சஞ்சரிக்க - சொந்த நரகத்தை மறக்க செய்யும் எஸ்கேப்பிஸ்ட் காதல்
10.சம்மதிச்சா செக்ஸ் இல்லாங்காட்டி தெய்வீகக்காதல்ங்கற சந்தர்ப்ப வாத காதல்
11.காதலிப்போம் - எல்லாம் கை கூடி வந்தா கண்ணாலமும் கட்டிக்குவோம் -இல்லாட்டி ஆருக்கு எங்கன போட்டுவச்சிருக்கோ அப்படியே நடக்கட்டும்ங்கற வேதாந்த காதல்
இப்படி நூத்துக்கணக்கான காதல்கள் நாட்ல இருக்கு. ங்கொய்யால இந்த காதல்கள் சைவமோ அசைவமோ க்ளைமேக்ஸுல கில்மான்னு ஒன்னு நிச்சயம் உண்டு.
மேட்டர் இன்னாடான்னா லவ்வுன்னு இறங்கி லந்து பண்ணிக்கிட்டிருந்தா பேட்டரி வீக் ஆயிருதுங்ணா .. அது ஏன் எப்படி எந்த் அளவுக்குங்கறதை அடுத்த பதிவுல பார்ப்போம்.
ஜோதிடம் என்ன சொல்லுது:
ஜாதகத்துல களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை பெற்று - லக்னாத் சுபர்களா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா பிரச்சினை இல்லை.
அதுக்கு மாறா மேற்சொன்ன களத்திர காரகன் , களத்திர பாவாதிபதி ,இவிக நின்ன ராசியாதிபதிகள் இதுல ஆரு வலிமை இழந்து - லக்னாத் பாபிகளா இருந்து அவிக ரூட்ல -அவிக காரகத்வமுள்ள பெண்ணை லவ்வினா
பேட்டரி அவுட்டுதேன். (கண்ணாலமே கட்டினாலும் பல்பு வாங்க வேண்டியதுதேன்)
அனுபவத்துல பார்க்கும் போது லவ் பண்ற பார்ட்டியெல்லாம் எந்த கிரகம் தனக்கு ஆப்பு வைக்க பைனாகுலர்ல வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கோ அந்த கிரகத்தோட காரகத்வமுள்ள பெண்ணைத்தேன் லவ் பண்ண ஆரம்பிக்கிறான்.
காதலில் வெற்றி விதிக்கப்பட்டுள்ள ஜாதகன் லவ் பண்ணாமயே கூட இருந்துரலாம். ஆனால் காதலால காயடிக்கப்படனும்னு இருக்கிற பார்ட்டி மட்டும் நிச்சயம் லவ் பண்றான். இம்சைய அனுபவிக்கிறான்.
ஓகே இதுல தொட்டு காட்டின காதல் வகைகள் ஒவ்வொன்னையும் அடுத்த பதிவுல நோண்டி நுங்கெடுப்போம்.
எந்தெந்த காதல்ல பேட்டரி அவுட்டாயிரும். எந்தெந்த காதலால பேட்டரி வீக்காயிரும்ங்கறதை எல்லாம் விலாவாரியா பார்ப்போம். டோன்ட் ஒர்ரி..
Sunday, February 13, 2011
காதலர் தின ஜோதிட டிப்ஸ்

காதலர் தின ஜோதிட டிப்ஸ்
காதலை என்னதான் தெய்வீகம் அது இதுனு தூக்கிப்பிடிச்சாலும் காதலுக்கு அடிப்படை கவர்ச்சிதேன். ஆண் மேல பெண்ணுக்கு கவர்ச்சி ஏற்படனும்னா அந்த ஆணுக்கு கட்டாயம் சனி நல்ல இடத்துல நிக்கனும். சனி பிடிச்சவனை பார்த்தா "ஏம்பா இந்த சூட்கேசை தூக்கிட்டு வரயா"னு தான் கேட்கத்தானே தோனும்.(சனி - லேபர்)
சனியை பொருத்தவரை மன்சாளை ரெண்டு வகையா பிரிக்கலாம். சனி அனுகூலமா உள்ளவுக. சனி பிடிச்சவுக. சனி அனுகூலமா உள்ளவனுக்கு சனிபிடிச்சவன் பயிட்டு தூக்கவேண்டியதுதான்.
ஒரு காதல் ஜோடி பீச்ல உட்கார்ந்திருக்கும். அதுல காதலனோ,காதலியோ ஆரோ ஒருத்தர் தேன் எந்திரிச்சு போய் திங்க எதையாவது வாங்கிட்டு வருவாய்ங்க. அப்படி எந்திரிச்சு போறவன் /வள் ஆரோ அவளுக்கு சனி பிடிச்சிருக்குனு அர்த்தம்.
சனி அனுகூலமா உள்ளவுக நூத்துக்கணக்குல சேர்ந்து ஒரு காரியத்தை செய்யலாம். பிரச்சினை வராது. ஆனால் சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க.
ஆக ஆருக்கெல்லாம் சனி அனுகூலமா இருக்காரோ அவிக மட்டும் லவ்ஸ் பண்றது பெட்டர். அதை விட்டுட்டு ஏழரைல, அர்தாஷ்டமத்துலன்னு சனி பிடிச்ச நேரம் லவ்ஸ் பண்ணா பயந்து பயந்து பண்ணனும் ( இங்கே காதல் வந்தது உங்க சுதந்திரத்தை கொல்ல - இந்த லவ் மேட்டர் ஆருக்கெல்லாம் லீக் ஆகுது அவிகளுக்கெல்லாம் பயந்து சாகனும் - சனி பிடிச்சவன் அடிமையாதான் வாழனும்)
மேலும் சனி பிடிச்ச நேரத்துல லவ்ஸ் பண்றிங்கனு வைங்க ஏற்கெனவே சொன்னாப்ல சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க. இந்த மாதிரி கிராக்கிங்கதான் மத்தில கழண்டுக்கறது ஆசிட் அடிக்கிறது , கத்திக்குத்துக்கெல்லாம் இறங்கிரனும் ( இவன் ஸ்டேஷன்ல போய் கை கட்டி நிக்கனுமே - சனி பிடிச்சா நீங்க விசிட் பண்ணியே ஆகவேண்டிய இடங்கள் சிலது இருக்கு போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு ,சுடுகாடு. டேக் கேர்!)
எதிர்பாலினரோட நெருக்கம், இதம்லாம் கிடைக்கனும்னா சனி பலம் நிச்சயம் தேவை. சனி பலம் இல்லாத சமயம் , இதர கிரகங்களோட பலத்தால (உ.ம் குரு, சுக்கிரன்) மேற்படி நெருக்கம், இதம் கிடைச்சாலும் டிக்கெட் இல்லாம சினிமா பார்த்துக்கிட்டிருக்கிற மாதிரி தான். படக்குனு தியேட்டர்காரன் டார்ச் சகிதம் செக்கிங்குக்கு வந்தான்னா அவமானம் தேன்.
இன்னொரு மேட்டர் , காதல் பிறக்கிற சமயம் சனி அனுகூலமாயிருந்தா போதும்.. அப்பாறம் சனி பிடிச்சாதேன் சிக்கல் வரும் -அந்த சிக்கலை தாங்கி காதல் நின்னாதான் அது உண்மையான காதல் - விவகாரம் கண்ணாலத்துல முடியும். பெண்ணுக்கு சனி பிடிச்சாதான் அவள் ஒழுங்கா குடும்பம் நடத்துவாள். ஆணுக்கு சனி பிடிச்சாதான் பொஞ்சாதி அருமை தெரியும்.
சில ஜோடிகளை பார்த்திங்கனா லவ்ஸ் பண்ணுவாய்ங்க பண்ணுவாய்ங்க பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் படக்குனு ஒரு நாள் சுமுகமா பிரிஞ்சுருவாய்ங்க. இன்னாடா மேட்டருன்னா அவிகளுக்கு காதல் வந்தப்பயும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு. லவ்ஸ் பண்ண காலம்லாமும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு.
சனி அனுகூலமா உள்ளவளுக்கு சனி தொடர்பான வேலைகள் செய்யவேண்டிய அவசியம் கிடையாது ( ஐ மீன் பயந்து நடக்கிறது -மாமனார் மாமியாருக்கு -அடிமையா இருக்கிறது -கணவனுக்கு) ஆனால் எதிர்பாலினனால இதம் கிடைக்கனும். கிடைச்சுருச்சு.
ரெண்டு பேருக்கு சனி அனுகூலமா இருந்தா ஓகே. ரெண்டு பேருக்கும் சனி பிடிச்சிருந்தா நாட் ஓகேன்னு சொன்னேன். ( ஆனால் இந்த காதல் கண்ணாலத்துல முடிஞ்சாதேன் அது உண்மையான காதல்) . ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சனி அனுகூலமா இருந்து - ஒருத்தருக்கு சனி பிடிச்சிருந்தா என்னாகும்னு கேப்பிக நம்ம சைட்ல சொல்லியிருக்கேன். இங்கே அழுத்தி அதையும் படிங்க
Labels:
Astrology,
lovers day,
tips,
காதல்,
டிப்ஸ்,
லவ்,
வாலண்டின் டே,
ஜோதிடம்
Friday, November 5, 2010
நம்ம ப்ளாகை நயனதாரா படிக்கிறாங்கங்கோ..
27/10/2010 தேதியிட்ட ஆனந்த விகடன்ல இன் பாக்ஸ் பகுதியில (பக்கம் 46) நயனதாரா பத்தி வந்த துணுக்கை பார்த்தா அப்படித்தான் தோணுது." காதலர்கள் தோற்றுப்போகலாம். காதல் தோற்பது இல்லை" என ஃபீலிங் மெசேஜ்களாக நண்பர்களுக்கு அனுப்பிக்கிட்டிருக்காய்ங்களாம். ஹாஜராகாய் ஜிக்காங்கற தலைப்புல நாம போட்ட பதிவுல " காதல் புனிதமானது . காதலர்கள் துரோகம் செய்யலாம்னு எழுதியிருந்தது ஞா இருக்கா பாஸ்!
நான் வீட்டோட கனெக்சன் வாங்கறதுக்கு முந்தி மத்தவுக ப்ளாக்ஸை படிக்கிறது ரெம்ப குறைச்சல். ஆனால் சமீப காலமா அக்கம்பத்து பேட்டைகள்ள ஒதுங்கறதால ஒரு சிலது கண்ல படுது.
சிலர் ட்விட்டர்ல போட வேண்டிய சைஸ்ல பதிவே போட்டுர்ராய்ங்க. சிலர்னா இன்னம் மோசம் நக்கலடிக்கவே பதிவு போடறாய்ங்க அதுவும் நம்ம தமிழி சினிமா நடிகைகளோட உடையளவுல.
ஆனானப்பட்ட சுஜாதாவே ஒர் ஸ்க்ரீன் அளவுக்கு எழுதினா போதும்னு சொல்லியிருக்காரு. ஆனா சனம் ட்விட்டர்,எஸ்.எம்.எஸ் ரேஞ்சுல பதிவு போட்டு கடுப்படிக்கிறாய்ங்க.
நம்மை மாதிரி பக்கம் பக்கமா எழுதச்சொல்லலே. அட்லீஸ் ஒரு ப்ளேட் பானி பூரி அளவுக்காச்சும் எழுதலாம்லியா?
"பலான மேட்டர்ல" அப்படி சுருக்கமா முடிச்சு முடிச்சு எல்லா மேட்டர்லயும் அதே பழக்கம் வந்துட்டாப்ல இருக்கு.
தீபாவளி வாழ்த்து சொன்னவுகளுக்கு நன்றி. நமக்கென்னங்கண்ணா தீபாவளி. பட்டாசு கொளுத்தலாம்னா உதறுது ,ஸ்வீட் சாப்பிடலாம்னா ராத்திரி ரெண்டு தாட்டி அதிகமா மூச்சா போயிட்டா ஷுகரானு உதறல், புதுதுணி போடலாம்னா
கண்ணாலமான புதுசுல ஒரு பேண்ட் பத்து ரூபா ஒரு ஷர்ட் அஞ்சு ரூபானு வித்து வயித்தை நிரப்பின காலம் ஞா வந்துருது.
என்ன தீபாவளியோ என்னமோ? ( ஹும்..வயசாயிருச்சு) கூடிய சீக்கிரம் நம்ம ஸ்டைல்ல ஒரு ஃபுல் மீல்ஸ் சைஸ்ல ஒரு பதிவோட வரேங்கண்ணா
எச்சரிக்கை:
சில அறிவாளிகள் ஆ.வி வெளி வந்த தேதியென்ன நீ பதிவு போட்ட தேதி என்னன்னு க்ராஸ் பண்ணுவாய்ங்க. அவிகளுக்கு தெரியாது பாவம்.. நம்ம வயசு 43 . ஒரே விஷயத்தை ரிப்பீட்டு பண்றது கிழவாடிகளோட கல்யாணகுணம். தமிழ் ஓவியா ஷீர்டி பத்தி போட்ட பதிவுக்கான கமெண்ட்லயும் இதே மேட்டரை சொல்லியிருக்கேன். அதுக்கு பல வருஷம் முந்தியிலிருந்தே நம்ம பஞ்ச் டயலாக் இது.
இப்போ சொல்லுங்க நம்ம ப்ளாகை நயன தாரா படிச்சிருப்பாய்ங்களா அ அந்த துணுக்கை எழுதின பார்ட்டி படிச்சிருக்குமா?

Subscribe to:
Posts (Atom)