Monday, February 14, 2011

புதனும் மன்மதனும்

இந்த தலைப்பை பார்த்ததும் இன்னாங்கடா இது அமாவாசையும் அப்துல்காதரும்ங்கற மாதிரினு நீங்க சலிச்சுக்கலாம். என் விளக்கத்தைப் படிச்சா புதனும் கில்மாவும் கலைஞரும் ஊழலும் போல பிரிக்கமுடியாத அம்சங்கள்னு நீங்களே ஒத்துக்கிடுவிங்க.

ராசிச்சக்கரத்துல மிதுனம், கன்னிங்கற ரெண்டு ராசிக்கு புதனை அதிபதியா தீர்மானிச்சிருக்காய்ங்க.இதுக்கு மிக வலுவான அடிப்படை இருக்கும். மிக ஆழமான அப்சர்வேஷனுக்கு பிறகுதான் இதை அவிக டிசைட் பண்ணியிருப்பாய்ங்க.

ஜோதிஷ சித்தாந்தங்களை வடிவமைச்சவுகளை குறைச்சு மதிப்பிடவே முடியாது. அவிக ரேஞ்சென்னனு தெரிஞ்சிக்கனும்னா என் கணிப்புகளை பத்தி என் க்ளையண்ட்ஸ் தெரிவிக்கிற கருத்துக்களை பார்க்கனும்.

அதெல்லாம் தனிப்பட்ட மெயில்ல வந்ததால உங்க பார்வைக்கு வைக்கமுடியலை. ஜோதிஷம்ங்கறது ஒரு கடல். நாம வச்சிருக்கிறது சின்ன டெஸ்ட் ட்யூப். அதுல மனிதம்,தர்கம்,யூனிவர்சல் லவ் மாதிரி சில சரக்குகளை கலந்து வச்சிருக்கோம். இதை வச்சிட்டு சொன்ன குத்து மதிப்பான பலனுக்கே ஆகா ஓகோ.

இன்னம் அவிகளை ஜோதிஷம்ங்கற கடல்ல தூக்கிப்போட்டா என்ன ஆகும்னு ரோசிங்க. நிற்க எங்கே விட்டோம்?

ராசிச்சக்கரத்துல மிதுனம், கன்னிங்கற ரெண்டு ராசிக்கு புதனை அதிபதியா தீர்மானிச்சிருக்காய்ங்க. மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும்.

இப்ப புரியுதுங்களா புதனுக்கும் மன்மதனுக்கும் உள்ள தொடர்பு? மன்மதன் கில்மாவுக்கான ஏஞ்சல். புதன் கில்மாவையே சென்ட்ரல் தீமா கொண்ட ராசிக்கு அதிபதி. இதான் அவிக ரெண்டுபேருக்கிடையில் உள்ள தொடர்பு.

இப்ப புதனோட காரகத்வங்கள் என்ன? அவற்றிற்கும் கில்மாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பார்ப்போம்.(புதனே சொல்றாருங்கோ)

1.புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை:
காதலனோ,காதலியோ அட மனைவியாவே கூட இருக்கட்டும் காதல்/கண்ணாலத்துக்கு முந்தி அவிக புதுசுதானே .அவிகளோட தொடர்பு கொள்ளனும்னா புத பலம் தேவை.

2. மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை:
இந்த இழவு இல்லாம எத்தனையோ காதல்கள் ஒரு தலையா நின்னுப்போகுது. புத பலம் உள்ளவுகளுக்குத்தேன் மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை இருக்கும்
3. போஸ்டல்,ஈ மெயில்,, எஸ்.டி.டி. கூரியர்:
இதெல்லாம் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன். மனிதன் ஒரு சமூக பிராணி. அவனை தனிமைப்படுத்திட்டா செத்துப்போயிருவான். செயில்ல கூட செல்ஃபோன் புழங்க ,சோத்துக்கில்லாதவன் கூட செல் ஃபோன் உபயோகிக்க இதான் காரணம். (இதை வச்சு சில மேதைகள் இந்தியாவுல ஏழ்மையே இல்லைன்னு வி.வாதம் பண்றாய்ங்க.அவிக கம்ப்யூட்டர்ல டார்ஜான் வைரஸ் புகட்டும். மேட்டருக்க வரேன். உயிர்களோட அடிப்படை இன்ஸ்டிங்க்ட் உயிர் வாழ்தல் -இனப்பெருக்கம் செய்தல்- பரவுதல்- தொடர்பு கொள்ளுதல். ஜிட்டு கிருஷ்ண மூர்த்தின்னா "லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப்"புங்கறாரு.
நான் இந்த ப்ளாகை வச்சு இப்படி கிழி கிழினு கிழிக்கலைன்னா உங்களை பொருத்தவரை முருகேசன்ங்கற பார்ட்டி இந்த உலகத்துல இல்லேன்னுதானே அர்த்தம்? மனிதனுக்குள்ள இருக்கிற ஒரே பவர் செக்ஸ் பவருனு சொல்றாய்ங்க. அந்த செக்ஸ் பவர் தன்னை கம்யூனிகேஷன் ஸ்கில்ஸா வெளிப்படுத்திக்குது. ( ஒன்னு ரெண்டு பட்லி மாட்டாதாங்கற ஹிடன் அஜெண்டாதான் சோஷியல் நெட் ஒர்க்கிங் சைட்ஸை சக்கை போடு போடவைக்குது.
ஆக புத பலம் இருந்தாதான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்கும். அந்த ஸ்கில்ஸ் வெளிப்பட்டாதான் நமக்குள்ள பவர் ஸ்டோர் (செக்ஸ் பவர்) ஆயிருக்குனு அர்த்தம். கம்யூனிகேஷனோட நோக்கமே கில்மாதேன்.
போஸ்டலை விடுங்க. அது அவுட் டேட்டட் ஆயிருச்சு. எத்தனை பேரு இதர மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷனை உபயோகிக்கிறாய்ங்க? எத்தனை பேருக்கு இதையெல்லாம் முழுக்க உபயோகிக்கதெரியும்? உங்க வீட்டு BSNL லேண்ட் ஃபோன்ல எத்தீனி விதமான ஃபெசிலிட்டி இருக்கு தெரியுமா? எழுப்பி கூட விடறாய்ங்களாம் ( தூக்கத்துலருந்துங்கண்ணா)
இந்த வித்தையெல்லாம் தெரிஞ்சவனை பெண்கள் அதிகம் விரும்புவாய்ங்க.(அவிக வீக்கர் செக்ஸுங்கறதால தங்களை தாங்கள் சுருக்கிக்கதான் பார்ப்பாய்ங்க - செவ்ரல் மோட்ஸ் ஆஃப் கம்யூனிகேஷன் மூலம் தன்னை விரிவு படுத்திக்கற /பரவும் ஆணை நேச்சுரலாவே லைக் பண்ணுவாய்ங்க. இதான் கில்மாவுக்கும் புதனுக்கும் உள்ள தொடர்பு.
ஜோதிடம்:
ஜோதிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக சொல்றேன். ஜோதிஷம்ங்கறது என்ன? நவகிரகங்களோட காரகத்வங்கள் என்ன?, ராசி சக்கரத்தின் 12 பாவங்களோட தன்மைகள் என்ன? குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட ராசிலருந்து என்ன ஆகும்? குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட கிரகத்தோட சேர்ந்தா என்னாகும்னு கணிச்சு /கெஸ் பண்ணி சொல்றதுதான். ஆக ஜோதிடம்ங்கறது என்ன? தனிப்பட்ட தகவல்களை தனித்தனியா ஸ்டோர் பண்ணிக்கிட்டு - க்ளப் பண்ணி - பிரிச்சு மேஞ்சு - கூட்டி கழிச்சு -தர்கம் அப்ளை பண்ணி சொல்றதுதான் . இந்த கெப்பாசிட்டியத்தான் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்ங்கறாய்ங்க.
உங்களுக்கு ஜோதிஷம் தெரிஞ்சிருந்தாதான் கில்மானு சொல்லவரலே.ஒரு ஜோதிடனுக்குரிய தகவல் சேகரிப்பு -ஸ்டோரிங் -ப்ராசசிங் -கேல்குலேட்டிங் -கெஸ்ஸிங் -வே ஆஃப் ப்ரசண்டேஷன் எல்லாம் இருக்கனும். அப்பத்தான் ப்ரப்போசிங் - மோட்டிவேடிங் எல்லாம் பாசிபிள்.
உபரியா கொஞ்சமே கொஞ்சம் நியூமராலஜி -பாம் ஹிஸ்டரி-கனவுகளுக்கு பலன் - சகுன சாஸ்திரம் தெரிஞ்சா யதேஷ்டம்.உதாரணமா உங்க மனைவிக்கு விடியல்ல அவிக தம்பி செத்துப்போறாப்ல கனா வந்திருக்கும். நாள் முழுக்க மூடியா இருப்பாய்ங்க. நீங்க என்ன ஏதுனு விஜாரிச்சு " தத் இதுக்கா ஃபீல் பண்றே .. கண்ணாலம் ஆகாதவுக செத்துப்போறாப்ல கனவு வந்தா அவிகளுக்கு கண்ணாலம் நடக்கபோகுதுனு அர்த்தம்" - னுட்டு சொன்னா அவிக மூட் உடனே மாறும்.
மனிதர்களின் தோல்:
உடல் ரீதியான காரணங்களால் வர்ர தோல் வியாதிகளும் உண்டுதான். ஆனால் மன ரீதியா பாதிக்கப்பட்டா கூட சில பிரச்சினைகள் வர்ரதுண்டு. எண்ணங்களை மனசுக்குள்ள பூட்டி வச்சுக்கிட்டு, யாரோடயும் பகிர்ந்துக்காம தங்களுக்கு விருப்பமில்லாத வேலைகளை பயத்தாலயோ/வேற வழியில்லாமயோ செய்துட்டு இருக்கிறவுகளுக்கு சில ஸ்கின் ப்ராப்ளம்ஸ் எல்லாம் வருது.
இவிக என்ன வைத்தியம் பார்த்தாலும் பே பே தான். பாருங்க ..புத பலம் இல்லேன்னா - கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்காது -கம்யூனிக்கேட் பண்ணலைன்னா - ஸ்ட்ரெஸ் வரும் -ஸ்ட் ரெஸ் காரணமா ஸ்கின் ப்ராப்ளம் வரும் - அந்த ஸ்கின் ப்ராப்ளமே தாழ்வு மனப்பான்மைய தரலாம் -அதுவே அவிகளை லோன்லியாக்கிரலாம். ஸ்ட் ரெஸ் அதிகமாகலாம்.புத்திக்குழப்பம்- சித்தப்பிரமையில கூட கொண்டு விடலாம். இதுக்கெல்லாம் புத பலம் இல்லாமைதான் காரணம்.
இந்த மாதிரி கிராக்கிங்களுக்கு லவ் எப்படி வரும்?வந்தாலும் அதை எப்படி ப்ரப்போஸ் பண்ணுவாய்ங்க? இவிகளுக்கு எதிர்காலத்துல கண்ணாலம் ஆனாலும் இதே இழவுதேன்.
ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள்:
இதெல்லாம் கரீட்டா ஃபங்சன் ஆகனும்னா ஹார்மோன்கள் சரியான அளவுல சுரக்கனும் . பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் சரி வர சுரந்தா தான் சினைப்பைகள் நல்லா ஃபங்சன் ஆகும். இந்த ஃபங்சனிங் கரீட்டா நடந்தாதான் பெண்மை மிளிரும். மென்மையான , தன்மையான பேச்சு இருக்கும். பசங்க ஜொள்ளுவாய்ங்க.
ஆண்கள்ள டெஸ்டோ ஸ்டீரான் கரீட்டா சுரந்தா தான் அவனுக்குள்ள ஆண்மை மிளிரும். கட்டுடல் இத்யாதி அமையும். அப்பத்தேன் பெண் குட்டிகள் ஜொள்ளும். இதை இன்னொரு ஆங்கிள்ள பாருங்க. புத பலம் இருந்தா கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நல்லாருக்கும். அது இருந்தா எதிர்பாலினரோட பேச.பழக வாய்ப்பு கிடைக்கும். அப்பத்தேன் டெஸ்டோ ஸ்டீரான் கரீட்டா சுரக்கும்.
இயற்கையோட அஜெண்டா -அதன் அமலாக்கத்தை புரிஞ்சிக்கிட்டா தான் இதெல்லாம் புரியும்.சில உயிர்கள்ள பாப்புலேஷன்ல ஆண் பெண் ரேஷோ வேறுபடறதை பொருத்து ஆண் பெண்ணா -பெண் ஆணா மாறிப்போகுதாம். ஏன் இனப்பெருக்கம் நடக்கனும். அதுக்கு ஆண் பெண் தேவை. இதான் இயற்கையோட அஜெண்டா அமலாக்கம்.
கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இல்லாம எதிர்பாலினரிடம் பேசவே பயப்படற நீ என்னைக்கு அஜால் குஜால் வேலையில இறங்கறது -என்னைக்கு உனக்கு குழந்தை பிறக்கிறது போடாங்கோனுட்டு இயற்கை தன் இருகையை பின்னால் வைத்து கோர்த்துக்குது. அப்பால கைனகாலஜிஸ்டை பார்க்க வேண்டியதுதான்.
( புதனுடைய காரகத்வங்களையும் -கில்மாவில் அவற்றின் முக்கியத்துவத்தையும் அடுத்த பதிவுலயும் தொடரலாம்)