Showing posts with label கேள்வி பதில். Show all posts
Showing posts with label கேள்வி பதில். Show all posts

Wednesday, December 14, 2011

பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா?


அண்ணே !
வணக்கம்ணே.. முழுப்பலன் - 10 கேள்விக்கு பதில்னு ஜாதகங்கள் ஓவர் ஃப்ளோ ஆயிட்டிருக்கு. மேலும் நமக்கு சொந்தமான AD PAGES சார்பில் 1 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் பட்ஜெட்ல 8 ஆயிரம் காலண்டர் போட்டுக்கிட்டிருக்கம். ( விளம்பரம் பிடிச்சு போட்டு ஃப்ரீ டிஸ்ட்ரிப்யூஷனுதேன்). மேலும் ஜோதிடம் 360 புஸ்தவ வேலையும் ஓடிக்கிட்டிருக்கு.

அல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தினசரி பதிவும் போட்டுக்கிட்டிருக்கம். எங்க என்.டி.ஆர் கணக்கா அதிகாலை 3 மணிக்கு எந்திரிச்சாலும் நேரம் போதலை. ஜாதகபலன் மேட்டர்ல ஆத்தா ரேஷன் வச்சுட்டாப்ல இருக்கு ரெண்டு ஜாதகத்துக்கு பலன் பதிவு பண்ணாலே மூளை பஜ்னு ஆயிருது .

சரி பதிவு போட்டு நாலு கமெண்ட் வந்தா சரி விடு போட நினைச்சவுக 400 பேரா இருந்தாதான் நாலு கமெண்ட் வரும்னு ஆறுதல் பட்டுக்கலாம். ஹிட்ஸ் மட்டும் கூடுதே தவிர குறையலை.ஆனால் கமெண்ட் சுத்தமா ஜீரோவுக்கு வந்துருச்சு.

பதிவு போடற வேலையும் இருக்கக்கூடாது.அதே நேரத்துல கமெண்டும் ஹவுஸ் ஃபுல் ஆகனும் எப்படினு சந்திரபாபு ரேஞ்சுல ரோசிச்சதுல ஒரு ஐடியா வந்தது. அது இன்னாடான்னா கேள்வி பதில் (ஆரும் கேட்கலின்னா நாமளே பினாமியா கேள்வி எழுதி பதில் போட்டுரலாம்ல)

இந்த ஏற்பாடு ஜோதிடம் 360 வெளிவரும் வரை தேன்.அப்பாறம் நிறைய எழுதுவம்ல.

கேள்வி கேட்பவர்கள் கவனத்துக்கு:

முடிஞ்சவரை நாலு பேருக்கு உபயோகமான கேள்விய கேளுங்க. ( என்னுது பலான லக்னம் -கிரக நிலை இது- எனக்கு பக்கத்து வீட்டு ஆன்டி மடியுமா போன்ற கேள்விகளை அவாய்ட் பண்ணுங்க)

ஜா.ரா கவனத்துக்கு:
உடனே எனக்கு இடது விதை வலிக்கிறது மாதிரி கேள்விகளை போலி பெயர்கள்ள கேட்டுராதிங்க

கேள்விகளை கேட்க இங்கே அழுத்துங்க ப்ளீஸ்

Thursday, February 17, 2011

இலவச ஜோதிட கேள்வி பதில்


பல்வேறு திரட்டிகளின் வழியே வந்து இந்த பதிவை படிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி . நம் புதிய வலை தளமான அனுபவ ஜோதிடம் டாட் காமில் இலவச ஜோதிட கேள்வி பதில் என்ற பகுதியை ஆரம்பித்தது வெறுமனே வருகையை கூட்டும் தந்திரமல்ல.

1989 முதல் இந்த துறையில் இருந்தாலும் நாளிதுவரை (என்றும்) மாணவனாக இருக்கவே விரும்பும் எனக்கு ஆசிரியர்கள் யார் என்றால்.. ஆரம்பத்தில் மூல நூல்கள்,உரை நூல்கள், ஜோதிட இதழ்கள் தான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பின் எனக்கு ஜோதிடத்தை கற்பித்தது என்னை நாடி வந்த ஜாதகங்களும் -ஜாதகர்களும் தான்.

கற்பதை நிறுத்திவிடுவதாய் எனக்கு உத்தேசமில்லை. மேலும் 18 மாதங்களில் 3 லட்சம் வருகைகளை பெற்ற எனக்கு வருகைகள் குறித்த கவலையும் இல்லை. பின்னே ஏன் இந்த பகுதி என்றால் சொல்கிறேன்.

கட்டண சேவையுடன் ,இலவச சேவையும் அளித்து வருகிறேன் என்றாலும் இலவச சேவை பெற கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கும்.மேலதிக விவரங்களுக்குஇங்கே அழுத்துங்க.

கட்டண சேவையை பயன்படுத்துபவர்கள் என் வங்கி கணக்கை நிறைக்கின்றனர். (மனதில் குற்றமனப்பான்மை எழும் அளவுக்கு அளவுக்கதிகமாக – அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி) இலவச சேவையை பயன்படுத்துபவர்கள் என் மனதை நிறைக்கின்றனர்.

ஆனால் கட்டண சலுகையை பெறும் வசதியும் இல்லாது -இலவச சேவையை பெற மெனக்கெடவும் பொறுமையில்லாது இருக்கும் அன்பர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.

அவர்களும் பயன் பெறவே இந்த பகுதி. ( அப்படியே அவிக ஜாதகங்களை வச்சு நம்ம ஜோதிட புலமையை கூர் தீட்டிக்கலாமில்லை ) .

http://www.scientificastrology.com ,
http//:freehoro.com,
அல்லது
http://www.ganesaspeaking.com போன்ற வலைதளங்களில் தங்கள் பர்த் டீட்டெய்ல்ஸ் கொடுத்து ஜாதகம் எடுத்து உங்க கேள்வியோட எனக்கு தட்டி விட வேண்டிய இமெயில் முகவரி: chittoor.s.murugesan@gmail.com

(எனது இன்னபிற மெயில் முகவரிகளுக்கு கேள்விகள் ,ஜாதகங்களை அனுப்பி சட்டை கிழித்துக்கொள்ள வைகக்வேண்டாம் ப்ளீஸ்)

நிபந்தனை: கேள்வி பதில்கள் தினசரி எனது புதிய வலை தளத்தில் பிரசுரிக்கப்படும். ( பெயர் வெளியிட விரும்பாதவர்கள் தம் கேள்வியில் கட்டாயம் குறிப்பிடவும்)

என்ன அதுக்குள்ள பக்கத்தை மூடிட்டிங்க. ஓ.. ஜாதகம் போட்டு மெயில் அனுப்பவா? அனுப்புங்க ப்ளீஸ் !

Wednesday, October 27, 2010

கேள்விகள்

அண்டை மாநிலம் ஆந்திராவில் இருக்கும் மக்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல, இரண்டு முறை கூகுள் டாக்கில் பேசியதற்கே என்னை சகோதரன் என விளித்து இப்பொழுது தனது வலைப்பதிவிலும் எழுத வாய்ப்புக்கொடுத்துள்ளார் முருகேசன் ஜி. அவர் கொடுத்த அனுமதியுடன் எனது ஜோதிடம் சார்ந்த சந்தேகம் மற்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்கிறேன். ஆந்திரா மக்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகம் சேர்த்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். இன்று முருகேசன் ஜி பச்சை மிளகாய் சாப்பிட்டிருக்கக்கூடது என ஆசைப்படுகிறேன், ஒரு சில கேள்விகள் எனக்கே ஓவராக தெரிந்தாலும் பலமுறை என் மனதில் தோன்றியதால் இங்கே கேட்டுவிடுகிறேன். தவறாக தெரிந்தால் குறிப்பிட்ட கேள்வியை நீக்கி விடுங்கள் முருகேசன் சார். தனிப்பட்ட கேள்விகள் எதுவும் இல்லை, சந்தேகங்களுக்கு :) போகலாம்,

1. ஒவ்வொரு கிரகங்களின் திசை ஆண்டுகள் (உடுமகாதிசை) எதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன? உதாரணமாக கேதுவிற்கு 7 வருடம் என பயன்படுத்துகிறோம், 7 வருடம் என்பது எதன் அடிப்படையில் வந்தது?

2. ஜோதிடத்தில் லக்னமே பிரதானமானது, லக்னத்துடன் சந்திராலக்னத்தையும் சேர்த்து பார்க்க துல்லியமான பலம் கிடைக்கிறதென்பது அடிப்படை மற்றும் அனுபவம். ஆனால் மற்ற கிரகங்களுக்கில்லாத தனித்தன்மை (இரண்டாம்நிலை லக்னம்) சந்திரனுக்கு ஏற்பட காரணமென்ன?

3. திரேக்காணம், சதுர்த்தாம்சம் போன்ற தசவர்க்கங்கள் மற்றும் இன்ன பிற வர்க்கங்களை கணித்து கொண்டு பலன் கூறுவது துல்லியம் தரும் என்பது ஜோதிடவியல், ஆனால் 30 நிமிட, 60 நிமிடங்களில் ஜோதிட பலாபலன் கூறி முடிக்கும் தற்பொழுதைய நிலவரத்தில் இந்த கட்டங்களை அமைக்க மற்றும் பலாபலன் தெரியாத ஜோதிடர்கள் தானே இனி உருவாகமுடியும்? ( நவாம்சம் கூட அமைக்க தெரியாத ஜோதிடர்களை நான் பார்த்திருக்கிறேன், இவர்களால் ஜோதிடத்திற்கு அவமானம் தானே).

4. அபிஜித் என்ற ஒரு நட்சத்திரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் (திருவோணம் அவிட்டம் இடையில் சரிதானே) அதை ஏன் பயன்படுத்துவதில்லை?

5. சுக்கிரன் ஒரு நீர்க்கிரகம், குளுமையானது என்பது ஜோதிடம், ஆனால் சுக்கிரன் 460 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள ஒரு வெப்பக்கிரகம் என்பது விஞ்ஞானம். முரண்பாடுதானே!

6. மாந்தி(TITAN) சனியின் துணைக்கிரகம் எனில் சனிக்கு இருக்கும் 60 க்கு மேற்பட்ட துணைக்கிரகங்கள் என்ன ஆனது? இதுபோல குருவிற்கும் அதிக துணைக்கிரகங்கள் உள்ளதே, இதனையெல்லாம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

7. ராகு, கேதுக்கள் ஆரம்ப கால ஜோதிடங்களில் பயன்படுத்தவில்லை என முன்னோர்களின் நூல்களில் இருந்து தெரிகிறது. எனில், தற்பொழுது கூட ராகு கேதுக்கள் தவிர்த்தால் துல்லியமான் பலன் கிட்டுமா?

8. நடக்கவேண்டியவை நடந்தே தீரும், அதனை நடத்தி வைக்கவே கிரகங்கள் எனில் நாம் ஜாதகம் பார்த்து அதன் படி நடந்து கொள்வதால் ஒன்றும் மாறிவிடாதல்லாவா?

9. பரிகாரம், பல ஜோதிடர்கள் போலி ஜோதிடராக மாற பரிகாரம் மட்டுமே காரணம் என்பது உலகறிந்தது, இதனாலயே ஜோதிடம் பொய் என்கிற மனநிலைக்கு வர வேண்டி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கிரகங்கள் தன் வேலைகளை செய்யும்போது அதனை தடுக்க அல்லது சரிசெய்ய பரிகாரம் செய்வது என்பது கிரகங்களுக்கு எதிராக செயல்படுவது என்பதாகத்தானே அர்த்தமாகிறது. நாம் இங்கே இரண்டு வாழைப்பழம் ஒரு தேங்காய் வைத்து வணங்குவதால் பல லட்சம் மைல் தூரத்தில் நம் பூமியை விட பல மடங்கு பெரிய கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் வழிக்கு வந்து நமக்கு சாதகமாக வேலை செய்யும் என நினைக்கும்போது நகைப்பாக தானே இருக்கிறது.

10. கிரகங்கள் தான் உலக நிகழ்விற்கு காரணமெனில் இறைவன் என்பது கேள்விக்குள்ளாப்படுகிறதே.

11. எண் கணிதம் என்ற ஒரு கொடுமையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த மொழியின் வரி வடிவங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்வு மாறும் என்பது நினைக்க மடமையாக உள்ளதே. ( எண் கணிதத்திற்கு எந்த ஒரு வரலாறும் இல்லையென நினைக்கிறேன்).

12. ஒரு நாட்டிற்கு ஜாதகம் பார்க்கும் முறை எப்பொழுது வந்தது? இந்தியாவிற்கு சுதந்திரமடைந்த தேதியை ஜாதகமா கணிப்பதை பார்த்திருக்கிறேன். சுதந்திரமடைவதற்கு முன் இந்தியா என்ற ஒரு நாடு இல்லையா? அதற்கு முன் இந்தியாவிற்கு ஜாதகம் பார்க்க எந்த முறை உபயோகப்படுத்தியிருப்பார்கள்?

இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, இன்னொரு நாள் அதையும் கேட்கிறேன்.

இப்படிக்கு,
ராஜா - திருப்பூர்

Monday, October 18, 2010

கேளுங்கள் தரப்படும்

அண்ணே வணக்கம்ணே,
இன்னைலருந்து நம்ம வலைப்பூவுல கேளுங்கள் தரப்படும்னு ஒரு ஃபீச்சர் ஆரம்பமாகுது.வித்யாசமான  கான்செப்ட் ஒன்னும்  இல்லிங்கண்ணா நீங்க கேள்வி கேட்கலாம்.

அதுக்கு நான் பதில் தருவேன்.

மத்தவுகளும் பதில் தரலாம். 

கேட்டவுகளுக்கு எது பெட்டரா படுதோ அதை ஃபாலோ பண்ணிக்கட்டும்.

வெறும் ஜோதிஷம்னே இல்லே எதைப்பத்தி வேணம்னா கேட்கலாம். சூரியனுக்கு கீழே, மேலே எது எத பத்தி வேணம்னா கேட்கலாம்.
கச்சா முச்சானு கேட்கலாம். எடக்கு மடக்கா கேட்கலாம்.

ஜோதிஷ பத்தி கேக்கறவுக  தனிப்பட்ட கேள்விகளை  கேட்கவேணாம். அது பெரிய ப்ராசஸ்ணே. மண்டை காஞ்சுரும்.

வேணம்னா உங்க ஜாதகத்துல உள்ள அம்சங்களை தனி தனியா கேளுங்க. நோ ப்ராப்ளம். ரெம்ப பர்சனல்னா என் நண்பருக்குனு ஆரம்பிச்சு கேட்டா போகுது. கமெண்ட் ஃபார்ம்லயே உங்க கேள்விகளை கேளுங்க.

நானும் கமெண்ட் ஃபார்மல்யே பதிலை சொல்றேன்.  ( 500 பேர் சேர்ர வரை புதுசா பதிவுன்னு  போடறதா உத்தேசமே இல்லை. இது கூட வலையுலக  நண்பர் ஒருத்தர் கொடுத்த ஐடியாதான். )

அக்டோபர் இரண்டாம் தேதி முதல் நம்ம வலைப்பூவுல புதிய பதிவுகள் வெளியாகறதில்லை இருந்தாலும் ஹிட்ஸ் மட்டு கூடுதே தவிர குறையலை ( ஆனா இவ்ள ஆர்வமா படிக்கிறவுக ஏன் சைட்ல ஜாய்ன் பண்ணமாட்டேங்கறாய்ங்க புரியலை)  யாரோ ஒரு பார்ட்டி  ஆளில்லாத டீக்கடைன்னிட்டாருங்கறதுக்காக நான் 500  மெம்பர்ஸை கேட்கலிங்கண்ணா.

நாம அன்னைக்கு இன்னைக்கு என்னைக்குமே பெஸ்ட் செல்லர் தான். 1991ல "உங்களை யார் விரும்புவார்கள்"னுட்டு அட்வான்ஸ் புக்கிங்கோட ஒரு பாக்கெட் புக் போட்டவன்  நானு. டார்கெட்டுக்கு அதிகமா காசு வந்துட்டதால ஒன்+ஒன் கொடுத்தவன் நான்.( 1000+1000)

இங்கன மட்டும் ஏன் நொண்டியடிக்குதுனு சின்னதா ஒரு மனக்கசப்பு தட்ஸால்.  நம்ம டாப் டென் போஸ்டுகளுக்கு வந்த ஹிட்ஸை காட்டற ஸ்க்ரீன் ஷாட்டை பாருங்க.( டீட்டெயில்ஸ் தெரியலைன்னா படத்து மேல க்ளிக் பண்ணுங்க அப்பாறம் கண்ட்ரோல் ப்ளஸ் கீஸை அழுத்துங்க படம் டெவலப் ஆகும் .ஓகே. உடுங்க ஜூட்)

இதை பார்த்தாச்சும் சைட்ல ஜாய்ன் பண்ணுங்கண்ணா