மொதல்ல இந்த பதிவுக்கு இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகம்னுதான் தலைப்பு வச்சேன். அப்பாறம் ஆதித்தனார் எழுத்தாளர் கையேடு மாதிரி கடைசில உள்ளதை தூக்கி டாப்ல கொண்டு வந்தேன்.
நான் வைக்க நினைச்ச தலைப்பு 100% கரீட். இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகமா இருக்கு. இதுக்கும் அவாளோட சதிதான் காரணம். விஐபிங்களுக்கு சின்ன வீட்டை கர்பப்படுத்தறதுக்கு கூட பக்காவா டைம் வச்சு கொடுக்கிற அவாள் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க குறிச்சுக்கொடுத்த டைம் இருக்கே . வயிறு எரியுதுங்க.
லக்னம் ரிஷபம்:
ரிஷப லக்னம் ராசி சக்கரத்துல ரெண்டாவது ராசி. இதனோட குணம் என்னன்னா சுருக்கமா சொன்னா செக்கு மாடு. நம்ம தலைவருங்க நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு போகாம இருக்க காரணம் இதான். நம்ம நாடு செக்கு மாடாட்டம் ஒரே வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வரவும் , அசலான பிரச்சினையை விட்டுட்டு ஜல்லியடிக்கவும் இதான் காரணம். மேலும் தங்களோட செல்வம்,செல்வாக்கு,சொல்வாக்கு,
பணம், குடும்பம்னு அவிக இருக்கவும் இதான் காரணம்.நம்ம தலைவருங்க உசரு போற நேரத்துல கூட "விகட வினோத பரிகாச பிரசங்க பிரியர்களா" இருக்க காரணம் இதான்.
இது ஸ்திர ராசி. தாளி இஞ்சி முரபா விக்கறதுக்கு கூட சரலக்னமா பார்த்து வையின்னு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் இவ்ளோ பெரிய எஸ்டாப்ளிஷ்மெண்டுக்கு ஸ்திர லக்னத்தை வச்சிருக்கானுவ.
ராசிய பாருங்ககடகம். இதனோட அதிபதி யாரு சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறுவாரு. 24 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திரம் மாறுவாரு. 6 மணிக்கொருதரம் பாதம் மாறுவாரு. 15 நாள் வளர்பிறை, 15 நாள் தேய் பிறை. இந்த ராசிக்காரவுகளுக்குனு ஒரு "சுயம்" இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளைகள்னா அது இந்த ராசிக்கரவுகதான்.
ரஷ்யா இருந்தவரை அவிக அழிச்சாட்டியத்துக்கெல்லாம் சால்ரா போட்டுக்கிட்டிருந்தம். இப்ப அமெரிக்கா.
சரி இதுவாச்சும் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். சனத்தொகை படபடனு எகிறுது (ரிசபத்துக்கு அதிபதி சுக்கிரன் - கில்மாவுக்கு இவர் தான் அதிபதி) உலகம் போற போக்குல இன்னைக்கும் ஒரு சமயம் இல்லாட்டியும் ஒரு சமயம் சென்டிமென்ட் பார்க்கிற சனம் இந்தியாவுலதான் இருக்காய்ங்கனு ஆறுதல் பட்டுக்கலாம்.
லக்னத்தை பாருங்க ராகு -ஏழைப்பாருங்க கேது. ராகு கேதுக்களிடையில எல்லா கிரகமும் சிக்கி பிதுங்கிக்கிட்டிருக்கு. இதனோட பலன் என்னடான்னா 45 வருசம் வரை சொல்லிக்கிறா மாதிரி டெவலப் மென்டே இருக்காது. மேலும் ஊழல்வாதிகள் + சாமியார்களிடையில நாடாள்வோரும், நாடும், நாட்டு மக்களும் சிக்கி சீரழியனும்.( ஞா இருக்கா திரேந்திர பிரம்மச்சாரி, சந்திராசாமி)
ஜோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவன் கூட இந்த மாதிரி ஒரு நேரத்தை ரெக்கமெண்ட் பண்ணமாட்டான். நேரு மாமாவுக்கு நாள் குறிச்சு கொடுத்த பன்னாடை பரதேசி ஆருனு விசாரிக்கனும்ணே.
சரி லக்னமும் - (சொந்த பலம்) ஏழாமிடமும் ( நட்பு நாடுகள்) தான் நாறிப்போச்சு . ரஷ்யா சிதறிப்போகவும் அமெரிக்கா இப்படி அல்லாடவும் நம்ம சங்காத்தமும் ஒரு காரணமுங்கோ.
லக்ன,சப்தமாதிபதிகளாவது பலம் பெற்று உருப்பட வைக்கிற நிலைல இருக்காய்ங்களானு பார்த்தா லக்னாதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்து( சத்ரு ரோகம் ருணம்) ஆதிபத்யமும் பெற்று 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தாரு.ஆறுன்னா கடன் ..தீராக்கடன். எதிரி (பாக்,சீனா, அட நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்த வங்காளம் கூட தாலியறுக்குதே)
3ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம். (இங்கன சுக்கிரன் நின்னதாலதான் நாடு பத்தி எரியறச்ச கூட மன்மோகன் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் லக்சரியா உலகம் சுத்தபோறாருபோல) இங்கன லக்னாதிபதி நின்னா என்னாகும்? மேலும் அது சுக்கிரங்கறதால சாப்பிடற சோறு, கட்டற துணி,இருக்கிற ஊட்டுக்கும் கூட சனம் அல்லாடவேண்டியதுதேன்.
காலம் காலமா நிலை கொண்ட ஏழ்மை, உணவு தானிய பற்றாக்குறைக்கும், சமீப காலமா பெருகி வரும் ஆண்மையின்மை,செக்ஸ் குற்றங்கள்,பெண்கள் மீதான வன்கொடுமை ,பெண் சிசுக்கொலை இத்யாதிக்கும் இதான் காரணம்.
லக்னாதிபதியான சுக்கிரனோட ஆரெல்லாம் சேர்ந்தாய்ங்கனு பாருங்க. கண்ல ரத்தம் வரும்:
சந்திரன்:
நம்ம நாடு சுதந்திரம் வந்து 63 வருஷம் முடிஞ்சும் அன்னாடங்காய்ச்சியாவே இருக்கவும் எழுவதும்,விழுவதுமா இருக்கவும் இந்த கிரகசேர்க்கை தான் காரணம். ஆறுதல் என்னன்னா ஒரு 15 வருஷம் ஸ்டெபிலிட்டி, நல்ல வளர்ச்சி இருக்கும், அடுத்த 15 வருஷம் இன்ஸ்டெபிலிட்டி, தேக்கம் இருக்கும்.நம்ம தலைவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இருக்கவும் இதான் காரணம். கடல் வழியா வந்து மும்பை தாஜ் ஹோட்டலை தாக்கற அளவுக்கு கொண்டு போனது இந்த கிரக நிலைதான்.
சூரியன்:
இவர் வீர , தீரத்தை தந்தாலும் இவர் நான்காமிடத்துக்கு அதிபதியாக உள்ளதால நம்ம தலைவருங்க நாட்டை பார்த்துக்கறதை விட தங்களோட வீட்டைத்தான் பார்க்கிறாய்ங்க. (4- வீடு) லக்சரியா பயணம் போகவும், ஏற்கெனவே பளபளக்கும் தங்கள் வீட்டை அரசு நிதி கொண்டு "மராமத்து"பண்ணிக்கிறதுலயும் , விமானபயணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாகன வசதிகளை ஏற்படுத்திக்கிறதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு கடமைய கோட்டை விட்டுர்ராய்ங்க. நம்ம நாடு வீரத்தை காட்டினா ஏழை இந்தியனோட ஓட்டைக்கூரையும் பொத்தலாயிருமுங்கோ. அரைப்பட்டினி முழுப்பட்டினி ஆயிரும்.
புதன்:
இவர் 2/5க்கு அதிபதி 3ல் மாட்டினாரு. ரெண்டுன்னா ரெவின்யூ இன் கம், அஞ்சுன்னா இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி. 3ன்னா பயணம் போறது. பாருங்க நம்ம காசு பணம்லாம் பயணம் போயிருச்சு. நம்ம இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டியெல்லாம் கடல் கடந்து போயி அவிகளுக்கு பொருளீட்டி கொடுக்குது.
புதன்னா கல்வி,மருத்துவம், தொலைதொடர்பு (இதையும் விளக்கனுமா என்ன?)
அடுத்து ரெண்டாவது இடத்தை பாருங்க சப்தமாதிபதி ( நட்பு நாடுகள்) விரயாதிபத்யம் பெற்று ( வேறென்ன ஆப்புதேன்) இங்கு உட்கார்ந்தாரு. அதுவும் ஆரு? செவ்வாய். பாக்கிஸ்தான் பங்காளி நாடு (செவ் -சகோதரகாரகன்) ஆப்பு வைக்கவும் சீனாக்காரன் "இந்தோ சீனா பாய் பாய்னிக்கிட்டேதானே ஆப்பு வச்சதுக்கும் இதான் காரணம்.
உள்ளார்ந்த ஒற்றுமை குலையவும், ஒரு மொழி காரன் இன்னொரு மொழிகாரனோட - இந்த ஸ்டேட்டு
அடுத்த ஸ்டேட்டோட வெட்டி மடிய இதான் காரணம்.
இன்னம் இங்கன ஆரிருக்கானு பார்த்தா சனி. ரிஷபலக்னத்துக்கு யோககாரகனான சனி மாரகஸ்தானங்கற 3ஆவது இடத்துல மாட்டினாரு.இத்தீனி ஓட்டையிருந்தும் இந்தியா சிதறாம இருக்க காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.
அஷ்டமாதிபதியான குரு சத்ரு ரோகஸ்தானத்துல உட்கார்ந்தாரு. இவர் மட்டும் இங்கே இல்லேன்னா துண்டு துண்டா பீஸ் பீஸா சிதறிப்போயிருக்கும்.
நம்ம நாட்டை இன்னைக்கு ஒரு விதேசி ஆளவு 1-7ல இருக்கிற ராகு கேது தான் காரணம்.அதுவும் ராகுன்னா விடோயருனு அர்த்தம்.
நம்ம நாட்டை அதிக காலம் ஆண்டவுக எல்லாம் ஒன்னு வெஸ்டர்ன் ஸ்டைல் (நேரு,ராஜீவ்), அல்லது விடோயர்ஸ்/ பேச்சிலர் தான் .இதுக்கு காரணம் கூட 1-7ல இருக்கிற ராகு கேது தான்.
ஆன கண்ணாலத்துக்கு ஆர்கெஸ்ட்ரா எதுக்கு? எதிர்காலம் எப்படி இருக்கும்னு கேப்பிக. சொல்றேன்.
இப்ப 03/Nov/2010 => முதல் 27/Sep/2011 வரை சூரிய தசை ராகு புக்தி நடக்குது. ஆட்சியாளர்களுக்கு கெண்டம்தேன். அரசாங்கம்னு ஒன்னிருக்கானு நினைக்கிறாப்ல ஊழல்வாதிகளும், விதேசிகளும் தூள் கிளப்புவாய்ங்க.
அடுத்து வரப்போற குரு புக்திதான் ஒரு நல்ல அரசை அமைக்கனும். அது 27/Sep/2011 => முதல் 15/Jul/2012 வரைதான் நடக்கும். அப்பாறம் மறுபடி சனிபுக்தி மாட்டிக்குது. அரசு திண்டாட வேண்டியதுதான். இந்த சந்தடில தலித் அமைப்புகள், தொழிலாளர் யூனியன்கள், கம்யூனிஸ்டுகளோட பிராபல்யம் அதிகமாகலாம்.
சூரியதசை முழுக்க (09/Sep/2009 முதல் 09/Sep/2015 )அல்லாட்டமாதான் இருக்கும் அடுத்து வர்ர சந்திர தசையும் (09/Sep/2015 முதல் 08/Sep/2025) ஒன்னும் கழட்டற மாதிரி தோனலை.
2011, மே 8 ஆம் தேதி ராசிக்கு பத்துல குரு வர்ராரு. இப்ப ஆள்றவுகளுக்கு பதவி பறிபோகலாம்.
எச்சரிக்கை:
ஆமாம் முருகேசன் பரிகாரம் அதுஇதுன்னு அவுத்துவிடறிங்களே நம்ம நாட்டை காப்பாத்த எதுனா பரிகாரம் வச்சிருக்கிங்களானு கேப்பிக. சொல்றேன்.அடுத்த பதிவுல.