Sunday, February 13, 2011

காதலர் தின ஜோதிட டிப்ஸ்


காதலர் தின ஜோதிட டிப்ஸ்

காதலை என்னதான் தெய்வீகம் அது இதுனு தூக்கிப்பிடிச்சாலும் காதலுக்கு அடிப்படை கவர்ச்சிதேன். ஆண் மேல பெண்ணுக்கு கவர்ச்சி ஏற்படனும்னா அந்த ஆணுக்கு கட்டாயம் சனி நல்ல இடத்துல நிக்கனும். சனி பிடிச்சவனை பார்த்தா "ஏம்பா இந்த சூட்கேசை தூக்கிட்டு வரயா"னு தான் கேட்கத்தானே தோனும்.(சனி - லேபர்)

சனியை பொருத்தவரை மன்சாளை ரெண்டு வகையா பிரிக்கலாம். சனி அனுகூலமா உள்ளவுக. சனி பிடிச்சவுக. சனி அனுகூலமா உள்ளவனுக்கு சனிபிடிச்சவன் பயிட்டு தூக்கவேண்டியதுதான்.

ஒரு காதல் ஜோடி பீச்ல உட்கார்ந்திருக்கும். அதுல காதலனோ,காதலியோ ஆரோ ஒருத்தர் தேன் எந்திரிச்சு போய் திங்க எதையாவது வாங்கிட்டு வருவாய்ங்க. அப்படி எந்திரிச்சு போறவன் /வள் ஆரோ அவளுக்கு சனி பிடிச்சிருக்குனு அர்த்தம்.

சனி அனுகூலமா உள்ளவுக நூத்துக்கணக்குல சேர்ந்து ஒரு காரியத்தை செய்யலாம். பிரச்சினை வராது. ஆனால் சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க.

ஆக ஆருக்கெல்லாம் சனி அனுகூலமா இருக்காரோ அவிக மட்டும் லவ்ஸ் பண்றது பெட்டர். அதை விட்டுட்டு ஏழரைல, அர்தாஷ்டமத்துலன்னு சனி பிடிச்ச நேரம் லவ்ஸ் பண்ணா பயந்து பயந்து பண்ணனும் ( இங்கே காதல் வந்தது உங்க சுதந்திரத்தை கொல்ல - இந்த லவ் மேட்டர் ஆருக்கெல்லாம் லீக் ஆகுது அவிகளுக்கெல்லாம் பயந்து சாகனும் - சனி பிடிச்சவன் அடிமையாதான் வாழனும்)

மேலும் சனி பிடிச்ச நேரத்துல லவ்ஸ் பண்றிங்கனு வைங்க ஏற்கெனவே சொன்னாப்ல சனி பிடிச்சவுக ரெண்டு பேரு ஒரு இடத்துல ரெண்டு நிமிசம் சுமுகமா இருக்கமாட்டாய்ங்க. இந்த மாதிரி கிராக்கிங்கதான் மத்தில கழண்டுக்கறது ஆசிட் அடிக்கிறது , கத்திக்குத்துக்கெல்லாம் இறங்கிரனும் ( இவன் ஸ்டேஷன்ல போய் கை கட்டி நிக்கனுமே - சனி பிடிச்சா நீங்க விசிட் பண்ணியே ஆகவேண்டிய இடங்கள் சிலது இருக்கு போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி, கோர்ட்டு ,சுடுகாடு. டேக் கேர்!)

எதிர்பாலினரோட நெருக்கம், இதம்லாம் கிடைக்கனும்னா சனி பலம் நிச்சயம் தேவை. சனி பலம் இல்லாத சமயம் , இதர கிரகங்களோட பலத்தால (உ.ம் குரு, சுக்கிரன்) மேற்படி நெருக்கம், இதம் கிடைச்சாலும் டிக்கெட் இல்லாம சினிமா பார்த்துக்கிட்டிருக்கிற மாதிரி தான். படக்குனு தியேட்டர்காரன் டார்ச் சகிதம் செக்கிங்குக்கு வந்தான்னா அவமானம் தேன்.

இன்னொரு மேட்டர் , காதல் பிறக்கிற சமயம் சனி அனுகூலமாயிருந்தா போதும்.. அப்பாறம் சனி பிடிச்சாதேன் சிக்கல் வரும் -அந்த சிக்கலை தாங்கி காதல் நின்னாதான் அது உண்மையான காதல் - விவகாரம் கண்ணாலத்துல முடியும். பெண்ணுக்கு சனி பிடிச்சாதான் அவள் ஒழுங்கா குடும்பம் நடத்துவாள். ஆணுக்கு சனி பிடிச்சாதான் பொஞ்சாதி அருமை தெரியும்.

சில ஜோடிகளை பார்த்திங்கனா லவ்ஸ் பண்ணுவாய்ங்க பண்ணுவாய்ங்க பண்ணிக்கிட்டே இருப்பாய்ங்க. எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் படக்குனு ஒரு நாள் சுமுகமா பிரிஞ்சுருவாய்ங்க. இன்னாடா மேட்டருன்னா அவிகளுக்கு காதல் வந்தப்பயும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு. லவ்ஸ் பண்ண காலம்லாமும் சனி அனுகூலமா இருந்திருப்பாரு.

சனி அனுகூலமா உள்ளவளுக்கு சனி தொடர்பான வேலைகள் செய்யவேண்டிய அவசியம் கிடையாது ( ஐ மீன் பயந்து நடக்கிறது -மாமனார் மாமியாருக்கு -அடிமையா இருக்கிறது -கணவனுக்கு) ஆனால் எதிர்பாலினனால இதம் கிடைக்கனும். கிடைச்சுருச்சு.

ரெண்டு பேருக்கு சனி அனுகூலமா இருந்தா ஓகே. ரெண்டு பேருக்கும் சனி பிடிச்சிருந்தா நாட் ஓகேன்னு சொன்னேன். ( ஆனால் இந்த காதல் கண்ணாலத்துல முடிஞ்சாதேன் அது உண்மையான காதல்) . ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு சனி அனுகூலமா இருந்து - ஒருத்தருக்கு சனி பிடிச்சிருந்தா என்னாகும்னு கேப்பிக நம்ம சைட்ல சொல்லியிருக்கேன். இங்கே அழுத்தி அதையும் படிங்க