Showing posts with label ஜாதகம். Show all posts
Showing posts with label ஜாதகம். Show all posts

Friday, October 14, 2011

மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டரும் ஜோதிடமும் « Anubavajothidam.com


அண்ணே வணக்கம்ணே !
சத்ரு ரோக ருண உபாதைகள் இல்லாத பார்ட்டி உலகத்துலயே கிடையாது. இன்னம் சொல்லப்போனா இந்த உபாதைகள் இல்லாத நாடே கிடையாது. இந்த உபாதைகளை தவிர்க்க ஒரு அயனான பரிகாரத்தை தரத்தேன் இந்த பதிவு.

"ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா"னு எழுதி வச்சாரு கண்ணதாசன். இதையே சைக்காலஜி டெக்னிக்கலா மல்ட்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்னு சொல்லுது.

லக்னத்துல அ ஏழுல கச்சா முச்சான்னு கிரகங்கள் இருக்கிறது , அல்லது லக்னாதிபதி கெட்ட சகவாசம் பண்றது, மனோ காரகனான சந்திரன் சகட்டுமேனிக்கு கிரகங்களோட சேர்ந்திருக்கிறது இப்படியா கொத்த கிரக நிலைகள்ள பிறந்தவுக இந்த மன நோய்க்கு ஆளாக வாய்ப்பிருக்கு.

நம்ம ஜாதகத்துல லக்னத்துல சூரியன்,புதன், உச்ச குருன்னு 3 கிரகங்கள். இதுல லக்னாதிபதி+ மனோகாரகனான சந்திரனோட சுக்ர சேர்க்கை.

ஒரு வகையில (ஐ மீன் ஒரு கோணத்துல) பார்த்தா முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளும் நமக்குள்ளே இருக்கிறதா பீத்திக்கலாம்.

சூரியன் -சிவா - அழித்தல் , புதன் -விஷ்ணு -காத்தல் , குரு -பிரம்மா -படைத்தல் . ஆனால் இன்னொரு கோணத்துல பார்த்தா புதன் விரயாதிபதி , குரு ரோகாதிபதி.

சந்திர சுக்கிர சேர்க்கையிலும் ரெண்டு கோணமிருக்கு. சந்திரன் -மனம் , சுக்கிரன் -கலை ( இதையே சந்திரன்னா மனசு - சுக்கிரன்னா கில்மான்னும் அனலைஸ் பண்ணலாம்)

இதை நெகட்டிவா பார்த்தா சுக்கிரன் பாதாகாதிபதி ( நம்ம கடகலக்னத்துக்கு) . இதனாலதேன் இருக்கிறதுலயே வெள்ளை சாம்பார் தனமான ஜோதிட "கலையை" கூட நம்ம ஆசனத்துக்கு கடப்பாறை கொண்டுவர்ர ரேஞ்சுல வெளிப்படுத்திக்கிட்டிருக்கோம்.

இல்லாட்டி அய்யரு ஊஞ்சல்ல உட்கார்ந்திருந்தாரு -அய்யரம்மா காஃபி கொண்டு வந்து கொடுத்தாய்ங்கனு ஆரம்பிச்சு எழுதிக்கிட்டிருந்திருந்தா கல்கியிலயே தொடர்கதை எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கலாம்.

சின்ன வயசுல நாம ரெம்ப சென்சிட்டிவ். "ஏண்டா பல் தேய்க்காம இட்லி சாப்பிட்டே இதைவிட ஜா.ரா மாதிரி பார்ட்டிங்க போட்ட கமெண்டுகளை படிக்கலாமே" னு அண்ணன் சொன்னதை தாங்கமுடியாம "உங்க சங்காத்தமே வேணாம்னு வீட்டை விட்டே வெளியேறிட்ட கேஸு.

கூச்சம் சாஸ்தி. ஒரு தாட்டி திருப்பதிக்கு போனேன். அண்ணனோட அறையில தான் ஹால்ட். சாயந்திரம் அங்கன இருந்த சொந்தக்காரவுக வீட்டுக்கு போனோம். போறச்ச கல்லா இருந்த குடல் கலக்க ஆரம்பிச்சது . நான் ரூமுக்கு போறேன்னேன். அண்ணன் ஒத்துக்கிடலை.

சொந்தக்காரவுக வீட்டுக்கு போயி போலாம். வாடான்னுட்டான். நான் ங்கோத்தா தேவையே இல்லை. விட்டுரு .ரூம்லயே பார்த்துக்கறேன்னுட்டன். ஆனால் அங்கன போனதும்..

"டே வெள்ளை! ஏதோ வேலையிருக்குன்னியே.. போகனுமா.. போறதாருந்தா போ.. போடா"னு லந்து பண்ண ஆரம்பிச்சிட்டான். பத்து நாளு தங்க போன நாம மறு நாளே பிச்சுக்கிட்டு சித்தூர் வந்துட்டம்.

இதான் நம்ம கேரக்டர். இந்த அழகுல டீன் ஏஜ் பிரச்சினைகளை எல்லாம் ஆருகிட்ட டிஸ்கஸ் பண்றதாம். அப்பத்தேன் திருச்சில இருந்து நம்ம நண்பன் சம்மர் லீவுக்கு வந்திருந்தான். ( கொல்ட்டி -சாம்பார் மேட்டர் சொல்லி நொந்த அதே நண்பன்) அவன் தான் கில்மா மேட்டர்ல அதுவரைக்கும் நமக்கு இருந்த தயக்கம்,கூச்சம், போலித்தனம் எல்லாத்தையும் ஒழிச்சு கட்டினான்.

ஆனால் அந்த ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்ண இங்கன ஆள் கிடையாது. அதனால டிஸ்கஸ் பண்ணி தெளிவு பெற ஒரு கவுண்டர் பார்ட் தேவைப்பட்டது. அப்பம் சுஜாதாவோட கணேஷ் வசந்த் ரெம்ப பிரபலம். நமக்கும் சுஜாதா மேல ஒரு அபிமானம் இருந்தது. உபரியா நாம ரஜினி ரசிகன் வேற ( அந்த காலத்துல)

சுஜாதாவோட வசந்த், நம்ம திருச்சி நண்பன், ரஜினி காந்த் + நாம எப்படில்லாம் இருக்கனும்னு நினைக்கிறோமோ அந்த அம்சங்கள் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி முகேஷ்னு ஒரு கேரக்டரை உருவாக்கினோம்.

நாம எழுதற கதைகள் நம்ம கேரக்டர் வந்தா அதுக்கு நிச்சயம் முகேஷ்ங்கற பேருதான். 1991 ல கலப்பு திருமணம் - வேலையின்மை -ஏழ்மை - நாயடில்லாம் நல்லாவே பக்குவப்படுத்த கொஞ்சம் இறங்கி வந்து "அழகு"ங்கற கேரக்டரா மாறினோம்.

முகேஷ் ஹீரோயிக் கேரக்டர். அழகு கொஞ்சம் போல மோரல்ஸ் -லட்சியம்லாம் உள்ள சாமனியன். ஓஷோவை படிக்க ஆரம்பிச்ச பிற்காடுதான் முருகேசனை இந்த முருகேசன் டோட்டலா அங்கீகரிக்க முடிஞ்சது.

இதையெல்லாம் எவனும் சொல்லிக்க மாட்டான். ஆனால் நாம சொல்லிக்குவம்.ஏன்னா நமக்குள்ள எந்த ஹிடன் அஜெண்டாவும் கிடையாது. நேரிடை ஜன நாயகத்துல ஜனாதிபதியாகனும்ங்கற மேட்டரையே உடைச்சாச்சு. இனி மறைக்க என்ன இருக்கு?

அரசியல்ங்கற சர்க்கசை பார்த்து பார்த்து சர்க்கஸ் வீரர்களை எல்லாம் அட்மைர் பண்ண ஆசாமி நாம. நம்ம கேரக்டர் பஃபூன் கேரக்டரா கூட இருக்கட்டும். இன்னைக்கு நாம பார்த்து அட்மைர் பண்ண சர்க்கஸ் வீரர்கள் ஆருமில்லை.

நோ ஐ.சி ( இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) . ஒரு கை பார்த்துர்ரதே சரி. நாம ஜனாதிபதி ஆகிறோமோ இல்லையோ. மனசை நெல்லா சூப்பர் ரின் போட்டு வெளுத்தாச்சு.

ஒதகாத மேட்டரையெல்லாம் போட்டு அடைச்சு நம்ம எழுத்தும் பேச்சும் மலச்சிக்கல் காரனோட அபான வாயு மாதிரி நாற கூடாது. சரி சைக்காலஜி போதும். அஸ்ட்ராலஜி மேட்டர் ஒன்னு சொல்றேன்.

லக்னத்துக்கு ஆறாம் பாவத்துக்கும் தொடர்பு ஏற்பட்டா கடன் ,நோய், வழக்கு இத்யாதி தொல்லைகள் வரும். எந்த காரியத்தை எடுத்தாலும் வாயிதா, தடை.

இதுக்கு நான் ஒரு சில பரிகாரம் சொல்றது வழக்கம்.

1.ஒரே சப்ஜெக்டை எடுத்துக்கங்க. அதுக்கு பாசிட்டிவா ஒரு பக்கம் - நெகட்டிவா ஒரு பக்கம் எழுதுங்க.

உ.ம் வரதட்சிணை நல்லது /வரதட்சிணை கெட்டது.

2.பத்திரிக்கைகள்ள ஆசிரியருக்கு கடிதம்னு ஒரு பகுதி இருக்கும். அதுக்கு ஏதாவது ஒரு புனைப்பெயர்ல உங்க துறை - பகுதியின் பிரச்சினைகளை எழுதி அனுப்புங்க. அந்த புனைப்பெயருக்கு சொந்தம் கொண்டாடாதிங்க.

3.எந்த ஒரு நல்ல வேலையானாலும் சொந்த காசுல செய்யாதிங்க. கடன் வாங்கி செய்ங்க.


உஸ் அப்பாடா.. சைக்காலஜி அஸ்ட்ராலஜி ரெண்டையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு போட்டாச்சு. தமிழ் மணத்துல வெறுமனே சோசியத்தை பத்தி எழுதினா இது செல்ஃப் ப்ரமோஷன் போஸ்டுன்னு ரிமூவ் பண்ணிர்ராய்ங்க தலை.

Friday, September 23, 2011

பொய்யாகும் ஜாதக யோகங்கள்

அண்ணே வணக்கம்ணே!

குறிப்பிட்ட சில கிரகஸ்திதிகளை -கிரக சேர்க்கைகளை யோகங்கள்னு சொல்றாய்ங்க. இந்த யோகம் இருந்தா அது வரும், இந்த யோகம் இருந்தா இது வரும்னு ஊத்தறாய்ங்க. ஆக்சுவலா யோகம்னா கலப்பு/சேர்க்கைன்னு பொருள் சொல்லலாம். இதை கவனிங்க.

சம்யோகம் = உடலுறவு

ரெண்டு அ டூ ப்ளஸ் கிரகங்கள் சேர்ரதுக்கு யோகம்னு பேரு. ஆனால் அசலான பொருளே மறந்து போற அளவுக்கு எங்காளுங்க ( நான் உட்பட) செய்துட்டம்.

கிரகம்லாம் அரசு அதிகாரி மாதிரி. உங்களுக்கு பலன் தராம கழட்டிவிடறதுக்கு என்னெல்லாம் வழி இருக்குன்னு தேன் பார்க்கும்.

உங்க அப்ளிகேஷன்ல குண்டூசி குத்தி வச்சிருந்து அதை எடுக்கிற அதிகாரிக்கு அது சரக்குன்னு ஏறினா போதும் உங்க மனு கு.தொட்டிக்கு போயிரும். அந்த மாதிரி தான் கிரகங்களும்.

உங்களுக்கு யோகத்தை தரவேண்டிய கிரகம் அம்மா மாதிரி ஸ்ட்ராங்கா உட்கார்ந்திருக்கனும். சூரியன்ல அஸ்தங்கதம், ராகு கேது சேர்க்கை, 6,8,12 ல மாட்டிக்கிறது அ மேற்படி அதிபதிகளோட சேர்ந்துர்ரது இப்படியெல்லாம் மொக்கை ஆகியிருக்கக்கூடாது. முக்கியமா உங்க ஜாதகத்துக்கு பாவியா இருக்கக்கூடாது.

அவரோட தசை உங்களுக்கு உரிய வயதில் வரனும். ( இல்லாட்டி திவாரி மாதிரி அகாலமா அஜால் குஜால் வேலை செய்து மாட்டிப்போம்).

அந்த கிரக காரகத்வமுள்ள கல்வி, உத்யோகம் உங்களுக்கு வாய்ச்சிருக்கனும்.வாய்ச்சாலும் நீங்க எட்டி உதைக்காம இருந்திருக்கனும். இப்படி எத்தனையோ இஃப்ஸ் அண்ட் பட்ஸ்.

இந்த பதிவுல பஞ்சமகா புருஷ யோகங்கள்ள சிலதை பார்ப்போம்.

1.செவ்வாய்:
இவரு உச்சம் -ஆட்சி பெற்றால் ( மகரம் - மேஷம் /விருச்சிகம்) ருசக யோகம்னு சொல்றாய்ங்க. இந்த யோகம் ரிஷபம், மிதுனம்,கன்னி,துலா,மகரம்,கும்ப லக்னங்களுக்கு ஒர்க் அவுட் ஆகுமா ரோசிங்க. அட மேஷம்,விருச்சிக லக்னங்களுக்கு இவரு லக்னாதிபதி. அவிகளுக்கு உடல்,உள்ள நலனை தர்ரதுக்குள்ளயே நாக்கு தள்ளிரும். அப்பாறம் என்னத்த பூமி லாபத்தை தர்ரது? மகரலக்னத்துல செவ் உச்சம் பெற்றால் ஆசனத்துல கட்டிதான் வரும் ( நம்மாளு ஒருத்தனுக்கு ப்ளட் ஷுகரே வந்துருச்சு)

2.புதன்:
இவரு உச்சம் ஆட்சி பெற்றால் ( கன்னி - மிதுனம்) பத்ரயோகம்னு சொல்றாய்ங்க. இது மேஷம்,கடகம்,விருச்சிகம்,தனுசு, மீன லக்னங்களுக்கு ஒர்க் அவுட் ஆகுமா? கன்னி மிதுனம்னு பார்த்தா புதன் லக்னாதிபதி .அவிகளுக்கு உடல்,உள்ள நலனை தர்ரதுக்குள்ளயே நாக்கு தள்ளிரும். அப்பாறம் என்னத்த யோகத்தை தர்ரது?

(கோடு போட்டாச்சு ..ரோடு போட ஆரு தயாரு - மத்த யோகங்களை எல்லாம் ஆரு கிழிக்கப்போறிங்க? சுகுமார்ஜீ ,டவுசர் , வினோத்ஜீ )

இன்னைக்கு ஒரு பிரபலத்தோட ஜாதகத்தை ஆடியோல அனலைஸ் பண்ணியிருக்கேன். (ஆரோ கேட்டாய்ங்க.. காசா பணமா ..அதான் போட்டாச்சு) இதுல உள்ள யோகங்கள் எல்லாம் ஏன் ஒர்க் அவுட் ஆகாதுன்னும் விளக்கியிருக்கேன். கேட்டுட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்க மறந்துராதிங்கண்ணா.

வழக்கம் போல கீழே உள்ள ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி கேட்டுருங்க.



யோக -அவயோக விளக்கம் கீழ்காணும் ப்ளேய்ர்லயும் தொடருது. ப்ளே பட்டனை அழுத்தி கேளுங்க.

Wednesday, February 16, 2011

சுக்கிர(ல) பலமும் பலான யோகமும்

முதல்ல தலைப்பு தர்ர தவறான அர்த்தத்தை நிவர்த்திக்க வேண்டியது என் கடமை. பலான யோகத்தை தர்ரது ஜஸ்ட் சுக்கிரன் மட்டும்னு நினைச்சுரதிங்க. மத்த 8 கிரகங்களோட பலமும் இதுக்கு தேவைப்படுது.

உதாரணமா சந்திரன் மனோகாரகன் என்பதால் சந்திரபலமும் தேவை. சனி நரம்புகளுக்கு காரகன் என்பதால் சனி பலமும் தேவை. இப்படி கில்மா மேட்டர்ல மத்த 8 கிரகங்களோட பலத்துக்கான அவசியத்தை தொடர்பதிவாவே போட்டாச்சு. ( நீங்க ஊருக்கு புதுசுன்னா பழைய பதிவுகளை தேடிப்படிங்க)

அடுத்து பலான யோகம்னா கண்டவளையெல்லாம் கட்டிலுக்கு கொண்டு வந்துர்ர யோகம்னு நினைச்சா ஏமாந்துருவிங்க. ஆக்சுவலா இப்படி காஞ்சான், அலைஞ்சான் ஜாதகத்துல பார்த்திங்கனா சுக்கிரன் கெட்டு குட்டிச்சுவரா போயிருப்பார். க்ளியர் !

உணவுக்கு ருசியை தர்ரது பசி. பெண்ணுக்கு அழகு தர்ரது உங்க ஆண்மை. சுக்கிரன் சுப பலமா இருந்தா "ஐம்பதிலும் ஆசைவரும்" புருசன் பொஞ்சாதி உடம்புல பூரிப்பு வரும். முகத்துல திருப்தி, ஆனந்தம்னு கலந்து கட்டியா ஒரு தெய்வீக களை வரும்.

காளிதாசர் வரி வசூலை பத்தி ராசாவுக்கு இன்னா சொன்னாரு தெரீமா " வண்டு பூவுல தேன் எடுக்கிற மாதிரி இருக்கனும்"னாராம். விந்து ஊறின பின்பு இயற்கையா ஏற்படும் உந்துதல் உடலுறவுல முடிஞ்சா சுபம். மேட்டர் வேற மாதிரி போச்சுனு வைங்க ( செயற்கை உந்துதல்/ ஈகோ/ காரணமா கோதாவுல இறங்கறது) ஆடத்தெரியாதவ கூடம் கோணல்ன மாதிரி "கோ ஆப்பரேசனே இல்லிங்க" - " அவளுக்கு இதுல ஆர்வமே இல்லிங்க"ன்னு குற்றப்பத்திரிக்கை வாசிக்க ஆரம்பிக்கிறது. பொஞ்சாதிய தவிர ஊர்ல கீரவ எல்லாம் உலக அழகியா தெரியறதுனு ஆரம்பிக்கும். அதனாலதான் சொல்றேன். ஆராச்சும் " அலை பாய்ஞ்சா" அங்கே மேட்டர் சரியில்லைனு அர்த்தம்.

விந்துவை சுக்கிலம்னு சொல்றாய்ங்க. (இந்த பெயர் பொருத்தம் ஆக்சிடென்டலுனு நினைக்கிறிங்களா?).


9 கிரகங்கள்ள செக்ஸுக்கு பொறுப்பா இருக்கிற கிரகம் சுக்கிரன். இன உறுப்பு, அதன் வேலைத்திறன், சுக்கில சுரோணிதங்களின் சுரப்பு, லூப்ரிகேஷன் எல்லாத்துக்கும் இவர் தான் இன் சார்ஜுங்கற மேட்டரை எல்லாம் கடந்த பதிவுலயே சொல்லியாச்சு. ஞா இருக்கில்லை.

ஜோசியத்தை பத்தி ஓரளவு தெரிஞ்சவுக , ஏன் சில மேதைகள் கூட ஒரு கிரகம் பெட்டரான இடத்துல உட்கார்ந்துட்டா போதும் அது தொடர்பான மேட்டர்ல எல்லாம் ஜாதகர் விளையாடுவாருனு நினைச்சுர்ராய்ங்க. இது தவறு.

என் ஜாதகத்துல ஜன்ம லக்னமான கடகத்துலயே குரு உச்சம். குருன்னா கோல்ட். சாதாரண லாஜிக் படி பார்த்தா என் கிட்டே கிலோ கிலோவா கோல்டிருக்கனும். ஆனா யதார்த்தம் அப்படியில்லை. ஏன்? குரு என் ஜாதகத்துல உச்சமா இருக்கிறதால குரு தொடர்பான தாதுக்கள் நம்ம பாடில பல்க்கா இருக்கோ என்னமோ? கோல்ட் மேல எனக்கு பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் கிடையாது. அது அப்பப்போ வரும். போகும் கண்டுக்கறதில்லை. ஆனா அது வந்துக்கிட்டே தான் இருக்கு. போயிட்டே தான் இருக்கு.

இதையே சுக்கிரனுக்கு பொருத்திப்பாருங்க. உங்க ஜாதகத்துல சுக்கிரன் நெஜம்மாவே நல்ல பலத்தோட இருக்காருனு வைங்க. உங்களுக்கு செக்ஸ் மேலயோ, ஆப்போசிட் செக்ஸ் மேலயோ (எதிர்பாலினர்?) பிரியம்,ப்ரேமை, பிரமை எதுவும் இருக்காது. ஆனா அது உங்களை தேடிவரும். வந்தா வரவில் வைப்பிங்க.போனா செலவில் வைப்பிங்க. ஆனா அதை பத்தி ரோசிக்க மாட்டிங்க.

செக்ஸ் மட்டுமில்லை,பணம் மட்டுமில்லை எதை பத்தி வேணம்னாலு சரி நீங்க அதை பத்தி ரோசிக்கிற வரை அது உங்ககிட்டே வராது. ஹவ் லாங் யுவார் ஹேவிங் மணி அட் யுவர் மைண்ட் யு கெனாட் கெட் மணி இன்டு யுவர் பாக்கெட்.

எதுவரை உங்க மைண்ட்ல பணம் இருக்கோ அதுவரை உங்க பாக்கெட்டுக்கு பணம் வராது. இதையே உடைச்சி சொன்னா எதுவரை உங்க மைண்ட்ல செக்ஸ் இருக்கோ அது வரை அது உங்க அவெய்லபிலிட்டிக்கு வராது.

சுக்கிரன் உங்க ஜாதகத்துல உங்களுக்கு சாதகமா இருக்காரா இல்லையானு தெரிஞ்சிக்க சின்ன ட்ரிக் இருக்கு. இந்த பதிவை படிக்கிற வரை செக்ஸ் எனக்கு கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்வியே உங்க மைண்ட்ல இருந்திருக்காது, வந்திருக்காது. விதி வழியே மதி.

ஆக சுக்கிரன் யாரோட ஜாதகத்துல வீக்காயிருக்காரோ அவிகதான் அலைஞ்சு பறை (இசைக்கருவிங்கோ) சாத்துவாய்ங்க. இவிகளுக்கும் கிடைக்கும். எப்படி கிடைக்கும்? நேரம் கெட்ட நேரத்துல, இடம்,பொருள், ஏவல், கால ,தேச,வர்த்தமாங்கள் தவறி கிடைக்கும். பொருந்தா காதல்,கள்ளக்காதல், ஒரு தலை காதல் , சுய இன்பம், ஹோமோ, குத புணர்ச்சி இதெல்லாமே சுக்கிரன் வாரி வழங்க கூடிய தீயபலன்கள்ள
சிலதுதான்.

இதுக்கு காரணம் என்னன்னா.. இவிக மைண்ட் வேணம்னா பெற்றோர்,ஆசிரியர்,சமுதாயம் இத்யாதியினர் காரணமா கரப்ட் ஆகி இயற்கையோட, இயற்கையில் ஒரு பாகமான கிரகங்களோட தொடர்பை இழந்திருக்கலாம். ஆனால் இவிக உடல் ? இது பூமியின் குழந்தை. பூமி சூரியனின் குழந்தை. அதனால இவிக உடலே இவிக ஜாதகத்தை சொல்லிரும். ( கால புருஷ தத்துவம் - உங்க லக்னம் தலை - எட்டாமிடம் தான் மர்மஸ்தானம் - விரயஸ்தானம்தான் கால்)

நிறைகுடம் தளும்பாதுனு கேள்விப்பட்டிருப்பிங்க.இந்த மேட்டர்லயும் அதே ரூல் தேன்.

யாரோட ஜாதகத்துல சுக்கிரன் சுபபலமா இருக்காரோ அவிக உடல்ல எல்லாமே அளவா இருக்கும். பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவா இருக்கும். ஆனால் யாரோட ஜாதகத்துல சுக்கிரன் வீக்கா இருக்காரோ அவிக உடல்ல எதுவுமே அளவா இருக்காது. பசி,தூக்கம்,வளர்ச்சி,கிளர்ச்சி எல்லாம் எல்லாமே அளவுக்கதிகமா இருக்கும்.

ஒரு பால் பாத்திரத்தில வழிய வழிய பாலை ஊத்தி ஸ்டவ் மேல வச்சா ( ஸ்டவ்வை கொளுத்திதான்) அது கொதிக்க ரெம்ப தாமதாமகும். ஆனால் ஒரே ஒரு பாலாடை பாலை ஊத்தி காய வைச்ச உடனே கொதிச்சு உடனே காந்தி ,கருவாடா போயிரும்.

இவிக பழக்க வழக்கங்களை வச்சும் சுக்கிரன் சுபபலமா இருக்காரா , பலவீனமா இருக்காரானு தெரிஞ்சிக்கிடலாம். சுக்கிரன்னா வெறுமனே செக்ஸுக்கு மட்டும் அதிபதி இல்லே.

அவர் லக்சரி, ஃபேன்சி, ஃபேன்டசி,காஸ்மெடிக்ஸ், டூர், ட்ராவல், நொறுக்கு தீனி விருந்து , பார்ட்டி, கெட் டு கெதர், வீடு,வாகனம்,தூக்கம் எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கார். சுக்கிரன் சுபபலமா இருக்கிற பார்ட்டிங்களுக்கு இது மேல எல்லாம் பெரிசா ஆர்வமிருக்காது. ஆனால் இதெல்லாம் தேடிவரும். தேடிவந்தாலும் அதை அளவாதான் ஏத்துப்பாய்ங்க.ஏன்னா மேற்சொன்ன எல்லாமே உங்க செக்ஸ் பவரை குறைக்கக்கூடிய மேட்டருங்க தான். இவிக உடலே இதை எல்லாம் ப்ரொட்டெஸ்ட் பண்ணும். ( என்னமோப்பா சோஃபால உட்கார்ரதை விட வெறும் நாற்காலில உட்கார்ந்தாதான் வசதியா இருக்குனு பேசுவாங்க)

யார் ஜாதகத்துல சுக்கிரன் பலவீனமா இருக்காரோ அவிக உடல் கொய்ட் ஆப்போசிட்டா ரியாக்ட் ஆகும். மேற்சொன்ன லக்சரி முதலாக வாகனம் தூக்கம் வரை எல்லாத்தையும் அளவுக்கதிகமா கேட்கும் அனுபவிக்கும். அப்பத்தானே பேட்டரி வீக்காயிரும். அதெப்படி வீக்காயிரும்னு கேட்கறிங்க அப்படித்தானே.. சின்ன உதாரணம் :

வாகனம்,பயணங்களோட எஃபெக்ட்:

மனித உடலோட டெம்பரேச்சர் 98.4 டிகிரி இதுல விதையில் உள்ள உயிரணுக்கள் உயிர் வாழ முடியாதுனு தான் இயற்கை விதைகள் உடலுக்கு வெளியில் படைச்சிருக்கு. நீங்க எதிர்பாலினரை கவரனும்னு நினைச்சா நிறைய நேரம்
அல்ட்ரா மாடர்னா பேண்ட் சட்டைல இருக்கனும். பேண்ட் அணியனும்னா அண்டர்வேர் அணியனும். கண்டவளை கண்ட நேரத்துல பிக் அப் பண்ணனும்னா டூ வீலர்ல மணிக்கணக்கா பயணிக்கனும். இதனால விதைக்கு கிடைக்க வேண்டிய கூல் எஃபெக்ட் கிடைக்காம உயிரணுக்களோட அசையும் திறன் குறைஞ்சுரலாம், கவுண்ட் குறைஞ்சிரலாம். இதுவல்லாம மலச்சிக்கல்ல துவங்கி, பைல்ஸ் வரை அனேக வியாதிகள் வந்து ந்நா ...........றிப்போகலாம்.

நொறுக்கு தீனியோட எஃபெக்ட்:
குழந்தை ஆசனப்பருவத்தை தாண்டி இன உறுப்பை தீண்டி விளையாடற ஸ்டேஜ்ல பெற்றோர் கண்டிப்பால அது மறுபடி ஆசனப்பருவத்துக்கே போகுது. டீன் ஏஜ்ல இதுக்கு வாய்ப்பு குறைஞ்சி போகுது . அதனால டீன் ஏஜன் ஆசனத்தோட ஆரம்பமான வாய் மேல கான்சன்ட்ரேட் பண்றான். வீண் பேச்சு, நொறுக்கு தீனி, சிக்லைட் மெல்றது, பான்,பீடா,பான் பராக் எல்லாத்துக்கும் இதுவு கூட ஒரு காரணம்.

பசியிருந்தா தான் சாப்பாட்டை தின்ன முடியும். நொறுக்கு தீனி அப்படி கிடையாது. பசியே இல்லைன்னாலும் திங்கலாம். ஏற்கெனவே பல தடவை சொல்லியிருக்கேன்.
உடலிலான இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யும் போது , ஜீரண மண்டலம் வேலை செய்யாது. ஜீரண மண்டலம் வேலை செய்யும் போது இனப்பெருக்க மண்டலம் வேலை செய்யாது. நொறுக்கு தீனி அதிகரிக்க அதிகரிக்க ஜீரண மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் ( ஒரு ஸ்டேஜ் வரை) அதிகரிக்கும். இனப்பெருக்க மண்டலத்தோட வேலை நேரம், தரம் , திறம் எல்லாமே படிப்படியா குறைஞ்சுரும்.

இப்படி ஒவ்வொரு பாயிண்டுக்கும் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்குது பாஸு.

சுக்கிரன் வீக்கா இருக்கிற ஜாதகர்களுக்கு அடிக்கடி தங்கள் ஆண்மைல சந்தேகம் வந்துரும் . உடனே அதை சோதிக்க களத்துல இறங்கிருவாய்ங்க. ( சில சமயம் ஆசிரியர்கள் மாணவிகள் மேல, தாத்தாக்கள் குழந்தைகள் மேல சோதிக்கறச்ச தந்தில செய்தியாயிர்ராய்ங்க).

மேலும் இவிக விந்து நீர்த்திருக்கும். நீர்த்த விந்து அடிக்கடி புரள ஆரம்பிக்கும். வெளியேற துடிக்கும். சீக்கிரம் ஸ்கலிதமாயிரும். இதனால் ஒன்ஸ் மோர். பல்வேறு காரணங்களால எண்ணிக்கை அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உடலுறவின் ஆழம் -காலம் குறையும். ஆழம் குறைஞ்சா செக்ஸால கிடைக்க வேண்டிய மைண்டுங்கற கம்ப்யூட்டர்ல ரீசெட் பட்டனை அழுத்தின எஃபெக்ட் ,ரிலாக்சேஷன் எதுவுமே பெரிசா கிடைக்காது.

இதுவரை ஜாதகம் இல்லாமயே, உங்க செக்ஸ் மற்றும் இதர பழக்க வழக்கங்களைக்கொண்டே உங்க ஜாதகத்துல சுக்கிரன வீக்கா ஸ்ட்ராங்கானு தெரிஞ்சிக்க சில வழிமுறைகளை சொன்னேன். இதுவே போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா?

வேண்டு கோள்:

நிறையப்பேரு "இதென்னங்க கண்டதுலயும் கில்மாவ கலந்து டீக்கடை பெஞ்சு மாதிரி ஒரு எழுத்து நடை"னு கேட்கிறாய்ங்க ( அதை விட நிறைய பேரு தூள் மா ..சூப்பர்மாங்கறாய்ங்க அது வேற கதை).

ஜோசியம்னா அது வயசாளிங்க சப்ஜெக்டுனு ஒரு இமேஜ் இருக்கு. அது தப்பு. வயசாளிங்க விஷயத்துல ஜோசியம் பார்க்கிறதுன்னா அது ஏற்கக்குறைய போஸ்ட் மார்ட்டம் பண்ற மாதிரி. ஆனால் "பசங்க" மேட்டர்ல டாய்க்னசிஸ் மாதிரி. ரெம்பவே யூஸ் ஃபுல். அதனால இளந்தாரிகளை இழுத்துப்போடத்தேன் இந்த சாக்லெட் பூச்சு.

இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க? கமெண்ட் ப்ளீஸ்!

Tuesday, February 15, 2011

2011, மே 8 க்கு மேல் மத்திய அரசு கவிழும்?

மொதல்ல இந்த பதிவுக்கு இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகம்னுதான் தலைப்பு வச்சேன். அப்பாறம் ஆதித்தனார் எழுத்தாளர் கையேடு மாதிரி கடைசில உள்ளதை தூக்கி டாப்ல கொண்டு வந்தேன்.

நான் வைக்க நினைச்ச தலைப்பு 100% கரீட். இந்தியாவின் ஜாதகம் ஊழல்வாதிகளுக்கே சாதகமா இருக்கு. இதுக்கும் அவாளோட சதிதான் காரணம். விஐபிங்களுக்கு சின்ன வீட்டை கர்பப்படுத்தறதுக்கு கூட பக்காவா டைம் வச்சு கொடுக்கிற அவாள் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்க குறிச்சுக்கொடுத்த டைம் இருக்கே . வயிறு எரியுதுங்க.

லக்னம் ரிஷபம்:
ரிஷப லக்னம் ராசி சக்கரத்துல ரெண்டாவது ராசி. இதனோட குணம் என்னன்னா சுருக்கமா சொன்னா செக்கு மாடு. நம்ம தலைவருங்க நாட்டை முன்னேற்ற பாதையில கொண்டு போகாம இருக்க காரணம் இதான். நம்ம நாடு செக்கு மாடாட்டம் ஒரே வட்டத்துக்குள்ள சுத்தி சுத்தி வரவும் , அசலான பிரச்சினையை விட்டுட்டு ஜல்லியடிக்கவும் இதான் காரணம். மேலும் தங்களோட செல்வம்,செல்வாக்கு,சொல்வாக்கு,
பணம், குடும்பம்னு அவிக இருக்கவும் இதான் காரணம்.நம்ம தலைவருங்க உசரு போற நேரத்துல கூட "விகட வினோத பரிகாச பிரசங்க பிரியர்களா" இருக்க காரணம் இதான்.

இது ஸ்திர ராசி. தாளி இஞ்சி முரபா விக்கறதுக்கு கூட சரலக்னமா பார்த்து வையின்னு ஜோதிஷம் சொல்லுது. ஆனால் இவ்ளோ பெரிய எஸ்டாப்ளிஷ்மெண்டுக்கு ஸ்திர லக்னத்தை வச்சிருக்கானுவ.

ராசிய பாருங்ககடகம். இதனோட அதிபதி யாரு சந்திரன். இவரு ரெண்டே கால் நாளைக்கொருதரம் ராசி மாறுவாரு. 24 மணி நேரத்துக்கொருதரம் நட்சத்திரம் மாறுவாரு. 6 மணிக்கொருதரம் பாதம் மாறுவாரு. 15 நாள் வளர்பிறை, 15 நாள் தேய் பிறை. இந்த ராசிக்காரவுகளுக்குனு ஒரு "சுயம்" இருக்காது. எடுப்பார் கைப்பிள்ளைகள்னா அது இந்த ராசிக்கரவுகதான்.


ரஷ்யா இருந்தவரை அவிக அழிச்சாட்டியத்துக்கெல்லாம் சால்ரா போட்டுக்கிட்டிருந்தம். இப்ப அமெரிக்கா.
சரி இதுவாச்சும் ஒழிஞ்சு போவட்டும்னு விட்டுரலாம். சனத்தொகை படபடனு எகிறுது (ரிசபத்துக்கு அதிபதி சுக்கிரன் - கில்மாவுக்கு இவர் தான் அதிபதி) உலகம் போற போக்குல இன்னைக்கும் ஒரு சமயம் இல்லாட்டியும் ஒரு சமயம் சென்டிமென்ட் பார்க்கிற சனம் இந்தியாவுலதான் இருக்காய்ங்கனு ஆறுதல் பட்டுக்கலாம்.

லக்னத்தை பாருங்க ராகு -ஏழைப்பாருங்க கேது. ராகு கேதுக்களிடையில எல்லா கிரகமும் சிக்கி பிதுங்கிக்கிட்டிருக்கு. இதனோட பலன் என்னடான்னா 45 வருசம் வரை சொல்லிக்கிறா மாதிரி டெவலப் மென்டே இருக்காது. மேலும் ஊழல்வாதிகள் + சாமியார்களிடையில நாடாள்வோரும், நாடும், நாட்டு மக்களும் சிக்கி சீரழியனும்.( ஞா இருக்கா திரேந்திர பிரம்மச்சாரி, சந்திராசாமி)

ஜோசியத்துல ஏபிசிடி தெரிஞ்சவன் கூட இந்த மாதிரி ஒரு நேரத்தை ரெக்கமெண்ட் பண்ணமாட்டான். நேரு மாமாவுக்கு நாள் குறிச்சு கொடுத்த பன்னாடை பரதேசி ஆருனு விசாரிக்கனும்ணே.

சரி லக்னமும் - (சொந்த பலம்) ஏழாமிடமும் ( நட்பு நாடுகள்) தான் நாறிப்போச்சு . ரஷ்யா சிதறிப்போகவும் அமெரிக்கா இப்படி அல்லாடவும் நம்ம சங்காத்தமும் ஒரு காரணமுங்கோ.

லக்ன,சப்தமாதிபதிகளாவது பலம் பெற்று உருப்பட வைக்கிற நிலைல இருக்காய்ங்களானு பார்த்தா லக்னாதிபதியான சுக்கிரன் ஆறாமிடத்து( சத்ரு ரோகம் ருணம்) ஆதிபத்யமும் பெற்று 3 ஆவது பாவத்துல உட்கார்ந்தாரு.ஆறுன்னா கடன் ..தீராக்கடன். எதிரி (பாக்,சீனா, அட நாம சுதந்திரம் வாங்கிக்கொடுத்த வங்காளம் கூட தாலியறுக்குதே)

3ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம். (இங்கன சுக்கிரன் நின்னதாலதான் நாடு பத்தி எரியறச்ச கூட மன்மோகன் மாதிரி ரப்பர் ஸ்டாம்ப் பிரதமர் லக்சரியா உலகம் சுத்தபோறாருபோல) இங்கன லக்னாதிபதி நின்னா என்னாகும்? மேலும் அது சுக்கிரங்கறதால சாப்பிடற சோறு, கட்டற துணி,இருக்கிற ஊட்டுக்கும் கூட சனம் அல்லாடவேண்டியதுதேன்.

காலம் காலமா நிலை கொண்ட ஏழ்மை, உணவு தானிய பற்றாக்குறைக்கும், சமீப காலமா பெருகி வரும் ஆண்மையின்மை,செக்ஸ் குற்றங்கள்,பெண்கள் மீதான வன்கொடுமை ,பெண் சிசுக்கொலை இத்யாதிக்கும் இதான் காரணம்.

லக்னாதிபதியான சுக்கிரனோட ஆரெல்லாம் சேர்ந்தாய்ங்கனு பாருங்க. கண்ல ரத்தம் வரும்:

சந்திரன்:
நம்ம நாடு சுதந்திரம் வந்து 63 வருஷம் முடிஞ்சும் அன்னாடங்காய்ச்சியாவே இருக்கவும் எழுவதும்,விழுவதுமா இருக்கவும் இந்த கிரகசேர்க்கை தான் காரணம். ஆறுதல் என்னன்னா ஒரு 15 வருஷம் ஸ்டெபிலிட்டி, நல்ல வளர்ச்சி இருக்கும், அடுத்த 15 வருஷம் இன்ஸ்டெபிலிட்டி, தேக்கம் இருக்கும்.நம்ம தலைவர்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்தவர்களாக இருக்கவும் இதான் காரணம். கடல் வழியா வந்து மும்பை தாஜ் ஹோட்டலை தாக்கற அளவுக்கு கொண்டு போனது இந்த கிரக நிலைதான்.

சூரியன்:
இவர் வீர , தீரத்தை தந்தாலும் இவர் நான்காமிடத்துக்கு அதிபதியாக உள்ளதால நம்ம தலைவருங்க நாட்டை பார்த்துக்கறதை விட தங்களோட வீட்டைத்தான் பார்க்கிறாய்ங்க. (4- வீடு) லக்சரியா பயணம் போகவும், ஏற்கெனவே பளபளக்கும் தங்கள் வீட்டை அரசு நிதி கொண்டு "மராமத்து"பண்ணிக்கிறதுலயும் , விமானபயணங்கள், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாகன வசதிகளை ஏற்படுத்திக்கிறதுலயும் கான்சன்ட்ரேட் பண்ணிக்கிட்டு கடமைய கோட்டை விட்டுர்ராய்ங்க. நம்ம நாடு வீரத்தை காட்டினா ஏழை இந்தியனோட ஓட்டைக்கூரையும் பொத்தலாயிருமுங்கோ. அரைப்பட்டினி முழுப்பட்டினி ஆயிரும்.

புதன்:
இவர் 2/5க்கு அதிபதி 3ல் மாட்டினாரு. ரெண்டுன்னா ரெவின்யூ இன் கம், அஞ்சுன்னா இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி. 3ன்னா பயணம் போறது. பாருங்க நம்ம காசு பணம்லாம் பயணம் போயிருச்சு. நம்ம இன்டலக்சுவல் ப்ராப்பர்ட்டியெல்லாம் கடல் கடந்து போயி அவிகளுக்கு பொருளீட்டி கொடுக்குது.
புதன்னா கல்வி,மருத்துவம், தொலைதொடர்பு (இதையும் விளக்கனுமா என்ன?)

அடுத்து ரெண்டாவது இடத்தை பாருங்க சப்தமாதிபதி ( நட்பு நாடுகள்) விரயாதிபத்யம் பெற்று ( வேறென்ன ஆப்புதேன்) இங்கு உட்கார்ந்தாரு. அதுவும் ஆரு? செவ்வாய். பாக்கிஸ்தான் பங்காளி நாடு (செவ் -சகோதரகாரகன்) ஆப்பு வைக்கவும் சீனாக்காரன் "இந்தோ சீனா பாய் பாய்னிக்கிட்டேதானே ஆப்பு வச்சதுக்கும் இதான் காரணம்.

உள்ளார்ந்த ஒற்றுமை குலையவும், ஒரு மொழி காரன் இன்னொரு மொழிகாரனோட - இந்த ஸ்டேட்டு
அடுத்த ஸ்டேட்டோட வெட்டி மடிய இதான் காரணம்.

இன்னம் இங்கன ஆரிருக்கானு பார்த்தா சனி. ரிஷபலக்னத்துக்கு யோககாரகனான சனி மாரகஸ்தானங்கற 3ஆவது இடத்துல மாட்டினாரு.இத்தீனி ஓட்டையிருந்தும் இந்தியா சிதறாம இருக்க காரணம் என்னனு கேப்பிக சொல்றேன்.

அஷ்டமாதிபதியான குரு சத்ரு ரோகஸ்தானத்துல உட்கார்ந்தாரு. இவர் மட்டும் இங்கே இல்லேன்னா துண்டு துண்டா பீஸ் பீஸா சிதறிப்போயிருக்கும்.

நம்ம நாட்டை இன்னைக்கு ஒரு விதேசி ஆளவு 1-7ல இருக்கிற ராகு கேது தான் காரணம்.அதுவும் ராகுன்னா விடோயருனு அர்த்தம்.

நம்ம நாட்டை அதிக காலம் ஆண்டவுக எல்லாம் ஒன்னு வெஸ்டர்ன் ஸ்டைல் (நேரு,ராஜீவ்), அல்லது விடோயர்ஸ்/ பேச்சிலர் தான் .இதுக்கு காரணம் கூட 1-7ல இருக்கிற ராகு கேது தான்.

ஆன கண்ணாலத்துக்கு ஆர்கெஸ்ட்ரா எதுக்கு? எதிர்காலம் எப்படி இருக்கும்னு கேப்பிக. சொல்றேன்.

இப்ப 03/Nov/2010 => முதல் 27/Sep/2011 வரை சூரிய தசை ராகு புக்தி நடக்குது. ஆட்சியாளர்களுக்கு கெண்டம்தேன். அரசாங்கம்னு ஒன்னிருக்கானு நினைக்கிறாப்ல ஊழல்வாதிகளும், விதேசிகளும் தூள் கிளப்புவாய்ங்க.

அடுத்து வரப்போற குரு புக்திதான் ஒரு நல்ல அரசை அமைக்கனும். அது 27/Sep/2011 => முதல் 15/Jul/2012 வரைதான் நடக்கும். அப்பாறம் மறுபடி சனிபுக்தி மாட்டிக்குது. அரசு திண்டாட வேண்டியதுதான். இந்த சந்தடில தலித் அமைப்புகள், தொழிலாளர் யூனியன்கள், கம்யூனிஸ்டுகளோட பிராபல்யம் அதிகமாகலாம்.

சூரியதசை முழுக்க (09/Sep/2009 முதல் 09/Sep/2015 )அல்லாட்டமாதான் இருக்கும் அடுத்து வர்ர சந்திர தசையும் (09/Sep/2015 முதல் 08/Sep/2025) ஒன்னும் கழட்டற மாதிரி தோனலை.

2011, மே 8 ஆம் தேதி ராசிக்கு பத்துல குரு வர்ராரு. இப்ப ஆள்றவுகளுக்கு பதவி பறிபோகலாம்.

எச்சரிக்கை:
ஆமாம் முருகேசன் பரிகாரம் அதுஇதுன்னு அவுத்துவிடறிங்களே நம்ம நாட்டை காப்பாத்த எதுனா பரிகாரம் வச்சிருக்கிங்களானு கேப்பிக. சொல்றேன்.அடுத்த பதிவுல.

Tuesday, February 8, 2011

செவ்வாயும் கில்மாவும்



இன்னாபா இது யுத்தகிரகத்தை போயி கில்மாவோட அநியாயத்துக்கு சேர்க்கிறேனு உ.வ பட்டுராதிங்க. பல யுத்தங்கள் வரதுக்கு கில்மாதான் காரணமா இருந்திருக்கு. யுத்தத்துல வேற்றி கிடைச்சாச்சுன்னா கில்மாவுக்கு குறைவே இருக்காது.

செவ்வாய்னா ரத்தம். பலான இடத்துக்கு ரேப்பிட் ஃபோர்ஸ் மாதிரி ரத்தம் பாயலைன்னா அதை அல்பசங்கியைக்கு மட்டும் தான் உபயோகிக்கமுடியும்.

ஆண்,பெண்கள் சுய இன்பம் இத்யாதியில் இறங்காம, பெண்கள் சாகசங்கள் புரியாம இருந்தா முதல் உறவின் போது கருமுத்துக்களை பார்க்கலாம். ( இது எல்லாருக்கும் கட்டாயமில்லிங்கோ) சிவப்புதுளிகள் ஜீரோ வாட்ஸ்ல கரு முத்தாதான் தெரியும்.

பெண்கள் விசயத்துல ஒவ்வொரு மாதவிலக்குக்கப்பாறம் தான் புதிய எக் செல் ஓவரிலருந்து புறப்பட்டு வந்து கருப்பையில தன் காத்திருப்பை துவங்குது . அப்பத்தேன் அவிக "உணர்ச்சிகள்" தீட்டப்பட்டிருக்கும்.

சாமுத்ரிகா லட்சணத்துல சிவந்திருக்க வேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்டே இருக்கு. இதனோட அடிப்படை என்ன? ரத்த ஓட்டம் கரீட்டா நடக்குதா இல்லியாங்கறதுதேன்.

(ஜாதகததை வைத்து உடல் அமைப்பை சொல்வது போல் (உ.ம் : லக்னம் = தலை,முகம்) உடல் அமைப்பை வைத்து சாதகம் சொல்லமுடியாதா என்பதே சாமுத்ரிகா லட்சணத்தின் அடிப்படை போலும். ஆனால் பாவகிரகங்கள் ஜஸ்ட் உடலை மட்டும் பாதிப்பதில்லை. மனதையும் பாதிக்கின்றன.

சிலர் விஷயத்தில் பாவ கிரகங்கள் உடலை பாதிக்காது (இவர்கள் பார்க்க சுந்தர புருஷர்களாய் இருப்பர்) ஆனால் மனதை கோரமாக பாதித்திருக்கும். ( சாடிஸ்டிக் சார்மிங் வில்லனாக இருப்பார்கள்)

எச்சரிக்கை: இதெல்லாம் என் கருத்து /ஊகம்/அனுபவம் மட்டுமே



இவ்ளோ டீட்டெயில்டா போவானேன் செவ்.......வாய்ங்கற பேரை பாருங்க. ஒடனே சால்னா கடையில நமீதா கணக்கா ஒரு கேரக்டர். வெற்றிலை போட்டு சிவந்த வாய் ஞா வரலை. மத்த கிரகங்கள் செரியில்லைன்னா அது சரியில்லை இது சரியில்லைனு தான் சொல்வாய்ங்க. இவரு சரியில்லைன்னா மட்டும் ( லக்னம் முதற்கொண்டு 3,6,10,11 தவிர வேறு இடங்களில் இருத்தல்) செவ் தோஷம்னு ஒதுக்கி வச்சிர்ராய்ங்க.

இன்னாபா இது அக்குறும்புனு பொங்கி எழுந்துராதிங்க. மேட்டர் கீது வாத்யாரே. மன்சனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தர்ரது வெள்ளயணுக்கள். அது உற்பத்தியாகிறது எலும்புக்குள்ள இருக்கிற மஜ்ஜையில. அந்த மஜ்ஜைக்கு காரகன் செவ்வாய். தாளி நோ.எ.ச இல்லாத பார்ட்டிக்கு எந்த ரோகம் தான் வராது?

மேலும் செவ் சரியில்லின்னா ரத்த சுத்தி சரியா இருக்காது. சொறி சிரங்கு கட்டி எல்லாம் வரும். இப்படி காட்பாடியா போன பாடி கொண்டவன் பலவீனனாதான் இருப்பான். கோபத்துக்கு காரணம் இயலாமை. பலவீனனுக்கு இயலாமை அதிகம். கோபமும் அதிகம்.

இப்ப கில்மாவுலயே பாருங்க. எத்தினியோ சந்தர்ப்பத்துல விட்டுக்கொடுக்கவேண்டி வரும். " விளக்கை அணை" "அம்மா தூங்கட்டும் - ஆட்டுக்குட்டி தூங்கட்டும்" செவ் தோஷமுள்ளவன் சீக்கிரத்துல கோபப்படுவான். கோபப்பட்டவனுக்கு காரியம் நடக்காது.

செவ்வாய் காரகத்தின் கீழ் வரும் அம்சங்களையும் அதனால கில்மாவுக்கு வரக்கூடிய ஆப்பையும் இப்ப பார்ப்போம்.
வயதில் இளையவர்கள்:
ஜாதகத்துல செவ் நல்ல இடத்துல உட்கார்ந்தா ஆண்டொன்று கூடுமே தவிர வயதொன்று கூடவே கூடாது. பார்ட்டி சொம்மா நச்சுனு இருப்பாப்டி. சப்போஸ் பார்ட்டி ஜாதகத்துல செவ் சரியில்லைனு வைங்க. சின்னப்பசங்களை எல்லாம் தனக்கு போட்டியா நினைக்கிற சைக்காலஜி வந்துரும். டிஷ் பையன், பால் பாக்கெட் போடற பையன் மேல கூட சந்தேகம் வரும்.( காரணம் உற்சாகத்தை தர்ரது செவ். உற்சாகம் குறைஞ்சிக்கிடக்கறச்ச துடியா இருக்கிற பசங்களை பார்த்தா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வருமா வராதா?)
போலீஸ், மிலிட்டரி, ரயில்வே:
செவ் நல்ல இடத்துல இருந்தா இந்த மாதிரி டிப்பார்ட்மென்ட்ல வேலை கிடைக்கும். ( செவ் சரியில்லாத ஜாதகத்துல பிறந்து லஞ்சம் கொடுத்து இந்த வேலையெல்லாம் வாங்கினா செவ்வாயின் இதர காரகங்களான ஆயுதங்கள், வெடி பொருட்கள், அறுவை சிகிச்சை, விபத்து, தீ விபத்து இத்யாதிக்கு பலியாகவேண்டி வரும்ங்கோ. மேற்படி உத்யோகங்கள்ள இருந்தா கண்ணாலம் கன்னா (சீக்கிரமா) ஆகும். அப்பாறம் என்ன கில்மாதான்.
எரிபொருள், மின்சாரம்:
வீட்ல கியாஸ் ஆயிருச்சு. கெரசின் இல்லை. எலக்ட்ரிக் ஓவன்ல ஆக்கி முடிச்சுரலாம்னு பார்த்தா வீராசாமி புண்ணியத்துல கரண்டு வாரா சாமி ஆயிருச்சு. சமையல் எப்படி முடியும். பெட் ரூமுக்கு எப்படி போகமுடியும். செவ் நல்லா இருந்தாதான் எல்லாமே கணக்கா முடியுங்கோ. எரிபொருள் தொடர்பான துறையில வேலை,தொழில் அமைஞ்சாலும் சுராங்கனிக்கா சேக்குதேன். தினம் தினம் அல்வா மல்லிப்பூதேன்..
தர்க்கம், வியூகம்:
அட என்ன பாஸ் எதுலதான் தர்க்கம் பார்க்கிறதுனு விவஸ்தையே இல்லையானு கேப்பிக சொல்றேன். ஆன்மீகத்துல மட்டும் தேன் தர்கம் நாலு காலை தூக்கிரும். உ.ம்: இழப்பவன் பெறுவான். காப்பவன் இழப்பான்.
கில்மாங்கறது உலகியல் வாழ்க்கையில ஒரு அங்கமே. அதனால ஜஸ்ட் ஒரே ஒரு தர்கத்தை கேட்ச் பண்ணினா ஊடல் கீடலையெல்லாம் ஊதித்தள்ளிட்டு காம் நகர்ல அப்பார்ட்மென்டே கட்டிரலாமுங்கோ.
அடுத்தது வியூகம். இதென்ன யுத்தமா வியூகம் வகுக்கனு கேப்பிக சொல்றேன். அச்சம், நாணம்,மடம்,பயிர்ப்பு அது இதுனு சொல்றாய்ங்கல்ல இதெல்லாம் என்னவாம் ஒவ்வொன்னும் ஒரு கோட்டை .இந்த கோட்டைகளுக்கெல்லாம் வேட்டு வைக்கலைன்னா நோ கில்மா. ஒவ்வொரு கோட்டைக்கும் ஒரு வியூகம் வகுத்து டமார் பண்ணாதான் கில்மா.
அறுவை சிகிச்சை:
செவ் சரியில்லைன்னா அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படுது. போதாதகுறைக்கு அவருக்கு சனியோட பார்வை தொடர்பு ஏற்பட்டுதுனு வைங்க அது எவ்ள தூரத்துக்கு போவும்னு சொல்லமுடியாது. அட ஒரு சிசேரியனை எடுத்துக்கங்க. லேடி டாக்டர் " ஒரு ஆறு மாசத்துக்கு பொஞ்சாதிய தங்கச்சி மாதிரி பார்த்துக்கங்க"னு சொல்ட்டா கில்மாவாவது வேறொன்னாவது. இன்னம் ஓவரிய தூக்கறது, யூட் ரஸை தூக்கிர்ரதுனு கதைபோச்சுன்னா ஹார்மோன் சுரப்புலயே பிரச்சினை வந்து சம்சாரத்துக்கு மீசை தாடியெல்லாம் வர ஆரம்பிச்சுரும்.
சமையல்:
யுத்த காரகனான செவ்வாயை சமையலுக்கும் காரகம்னு சொல்லியிருக்காய்ங்க.ரெண்டுக்கு என்ன சம்மந்தம்? யுத்தம்னா மொதல்ல எதிரி நாட்டை வேவு பார்க்கனும், எதிராளியோட படைபலம் ,வியூகம் தெரியனும். அதுக்கேத்தமாதிரி நம்ம படைய பலப்படுத்தனும். சமையல்னா நாம யாருக்கு சமைக்கப்போறோம், அவிக காஞ்சு கிடக்காய்ங்களா?, ஓஞ்சு கிடக்காய்ங்களா? பசியேப்பமா? புளியேப்பமா தெரிஞ்சிக்கிடனும். அப்பாறம் கிச்சன்ல என்ன இருக்கு என்ன இல்லைனு (முக்கியமா கியாஸ்/கரண்ட்) பார்த்துக்கனும்.
யுத்தம்னா மொதல்ல ஏர் பாம்பிங்கா, காலாட்படையா, கடல் வழி தாக்குதலா முடிவு பண்ணனும். சமையல்னா மொதல்ல கொறிக்க ஏதாச்சும் கொடுத்துரலாமா? இல்லை அவசர அடியா பிரியாணி பண்ணி அதுக்கு தயிர் சட்னி கொடுத்துட்டு அதுக்குள்ளாற கோழிகுருமாவ ஒப்பேத்தமுடியுமானுல்லாம் ஸ்கெட்ச் பண்ணனும்.
இப்படி யுத்தத்துக்கும் சமையலுக்கும் நிறைய சம்பந்தமிருக்குங்கோ. சமைக்கிற கணவன் மாரை வச்சு நிறைய ஜோக்கெல்லாம் எழுதறாய்ங்க. ஆனால் சமைக்க தெரிஞ்ச கணவனா இருக்கிறதுல நிறைய லாபம் இருக்கு பாஸ்.
பொஞ்சாதி ஏகத்துக்கு பில்டப் கொடுக்கமுடியாது ( ஸ்டவ்வு கிட்டே நின்னு பாருங்க தெரியும்) - நெஜமாலுமே பொஞ்சாதிக்கு முடியாத சமயம் கோதாவுல இறங்கி கேட்டு கேட்டு செஞ்சா அவிகளுக்கும் ஈகோ சேட்டிஸ்ஃபேக்சன் ஆகும். மனசுல நன்றி உணர்ச்சி பொங்கும். அது கில்மாவுல கூட முடியலாம்.
ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள்:
செவ் சரியில்லைன்னா இதெல்லாம் வந்து கழுத்தறுக்க ஆரம்பிக்கும். லோ பிபி,ஹை பிபி உள்ளவுக,அல்சர் ,பெப்டிக் அல்சர் உள்ளவுக கில்மாவுக்கும் இந்த வியாதிகளுக்கும் என்ன தொடர்புனு சொல்லலாம்.
மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்:
இதுல வெறி கொண்டு ,வெற்றியே குறியா உள்ளவுகளுக்கு மைண்ட் கில்மா பக்கம் போகவே போகாது. உடம்பு கெட்டுரும்ங்கறதெல்லாம் சொம்மா சாக்கு. மனுஷன் பேசிக்கலா பண்றது ரெண்டுதேன். கொல்றது,கொல்லப்படுவது.இது செக்ஸுல சாத்தியம். ஆனால் இது ரெண்டுமே மேற்படி மார்ஷல் ஆர்ட்ஸ் ,போட்டி, ஸ்போர்ட்ஸ்ல சைக்கலாஜிக்கலா -சுத்தி வளைச்சு நடந்துருது -அதனாலதான் மேற்படி ஃபீல்டுல உள்ள பார்ட்டிங்க கில்மா பக்கம் திரும்பறதில்லை. ஆனால் தமாசு என்னடான்னா அதுகள்ள சாதனை பண்ணி முடிஞ்ச பிற்பாடு பலான மேட்டர்ல ஆர்வம் பீறிட்டு கிளம்பும். சில பிக்காலிங்க (முக்கியமா கோச்சுங்க) "ஏடாகூடமா"பிஹேவ் பண்றாய்ங்கனு கேள்வி. இதுக்கு காரணம் அவன் வெறி கொண்டு ,வெற்றியே குறியா செயல்படலைங்கறதுதேன்.
பால்:
மேட்டருக்கு மின்னாடி ஒரு தம்ளர் பால் (முடிஞ்சா ஒரு சில மசாலாக்கள் சேர்த்து) அடிச்சா தெம்பா இருக்கும்.
கொம்புள்ள பிராணிகள்:
மஞ்சு விரட்டு தெரியும்ல. மஞ்சு விரட்டுல குடல் சரியாம தப்பிச்சா குட்டிக மேலாடை சரிக்கும்னு சரித்திரம் சொல்லுதுல்ல .
மாமிசம்:
இது காம உணர்வை தூண்டும்.

ஆக ஒடனே உங்க குடும்ப ஜோதிடரை சந்திச்சு சாதகத்துல செவ் சாதகமா இல்லியானு ஒடனே தெரிஞ்சிக்கிடுங்க. சாதகமா இல்லாட்டி கீழ்காணும் பரிகாரங்களை ஆரம்பிச்சுருங்க.


1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.

Sunday, February 6, 2011

கில்மாவும் சந்திரபலமும்:2

கடந்த பதிவுல சந்திரன் இல்லாட்டி கில்மாவே இல்லேங்கற ரேஞ்சுக்கு எஸ்டாப்ளிஷ் பண்ணியிருந்தேன். அதுக்கு முந்தின பதிவு சூரியபலமும் கில்மாவும். அதுல சூரியன் இல்லாட்டி கில்மாவே இல்லைனு எஸ்டாப்ளிஷ் பண்ணியிருந்தேன். எல்லா ஜாதகர்களோட வாழ்க்கையிலயும் சூரிய,சந்திரர்களோட பலம் இல்லைன்னா இழந்த சக்தி வைத்தியர்களை அணுக வேண்டிவரும்தான் இல்லேங்கலை. அதுலயும் மனிதர்களில் சூரிய மனிதர்கள் ,சந்திர மனிதர்கள்னு ரெண்டு கேட்டகிரி இருக்கு. சூரிய மனிதன் ஜாதகத்துலயோ அ அவனுக்கு கோசாரத்துலயோ சூரியபலம் இல்லேன்னா நாஸ்திதேன். இன் தி சேம் வே சந்திர மனிதனோட ஜாதகத்துலயோ அ அவனுக்கு கோசாரத்துலயோ சந்திர பலம் இல்லேன்னா டங்குவார் அறுந்துரும்.

மொதல்ல சந்திர மனிதர்களோட கேரக்டரிஸ்டிக்ஸை பார்த்துருவம்.

ஒருவித குளுமை ( இவிக மனசுலயும் இருக்கும் -இவிக கிட்ட கொஞ்ச நேரம் பேசினா அது நமக்குள்ளயும் பரவும்) , தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும்)

தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும்.

எவரேனும் ஏற்கெனவே போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம்.

பெரிய பிரச்சினை வந்துவிட்டால் நம்பியவரை கைவிட்டு தப்பித்துக்கொள்ளுதல் இந்த சந்திரமனிதர்களின் இயல்பு. சிக்கனம். இன் செக்யூரிட்டி , சந்தேகம் இவர்களுடன் பிறந்தவையாகும். குடும்பபாசம், க்ஷணிக காதல்கள் (கண்டதும் காதல்?). பெரிய மனிதர் வீட்டு பெண்கள் இவர்களால் சீக்கிரம் கவரப்படுவார்கள். சுருக்கமாய் சொன்னால் பெண்மை நிரம்பிய குணம். மதர்லி நேச்சர்.

இவிக விருச்சிக ராசில பிறந்து தொலைச்சா (அங்கன சந்திரன் நீசம்) அல்லது சந்திரனொட ராகு,கேது,சனி, அல்லது 6,8,12 அதிபதிகள் சேர்ந்த ஜாதகத்தில் பிறந்தா என்ன ஆகும். டப்பா டான்ஸ் ஆடும்.

சூரிய மனிதர்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் ஆண்மை நிரம்பிய குணம். ஃபாதர்லி நேச்சர்.

இதுல நீங்க எந்த கேட்டகிரில வர்ரிங்கனு பாருங்க. சூரிய மனிதனா இருந்தா சூரியன் சுப பலமா இருக்கனும். சந்திர மனிதனா இருந்தா சந்திரன் சுபபலமா இருக்கனும். ஜாதகத்துல மட்டும் இப்படி ஒரு அமைப்பு இருந்துட்டா போதாது.

முக்கிய முயற்சிகள்ள ஈடுபடும்போது கோசாரத்துலயும் அந்த கிரகங்கள் நல்ல நிலையில இருக்கனும்ங்கறதை மறந்துராதிங்க.

கோசாரத்துல சந்திர பலம் இல்லைன்னா ரெண்டேகால் நாள்ள வந்துரும் .இவிக பலான மேட்டரை விட்டு விலகியிருக்கலாம்.

சூரிய பலம் இல்லேன்னா அது வர மாசக்கணக்குல ஆகுமே அப்ப என்ன செய்ய? பகல்ல ஈடுபடறதை தவிர்க்கலாம். ஓவர் கான்ஃபிடன்ஸ் இல்லாம, கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லாம ஈடுபடலாம். ஐ மீன் சைக்கலாஜிக்கலா ப்ரிப்பேர் ஆயிரனும்.

Saturday, February 5, 2011

சந்திர பலமும் கில்மாவும்

நாட் நாட் சினிமாலருந்து, லேட்டஸ்ட் படம் வரை டூயட்டுன்னா சந்திரனை ஒரு மேண்டேஜ் ஷாட்டாவாச்சும் காட்டிர்ராய்ங்க. ஏன்னா கில்மாவுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு இது. மனித மனதின் அடியாழத்தில் இது பொதிஞ்சு கிடக்கு.

உச்சி வெய்யில்ல கூட "ஷோ"போடற சிங்கங்கள் இருக்கலாம். ஆனால் ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். விதியில்லாத குறைக்கு போடலாமே தவிர சந்திரன் அதுவும் வளர்பிறை சந்திரன் அதுவும் பவுர்ணமி சந்திரனோட ஒளியில உரசி ,உலவி, கொஞ்சி மகிழறதுல இருக்கிற த்ரில்லே வேற.

பவுர்ணமி சந்திரன் கடல் நீரை ஈர்ப்பது அல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர்தான். தெரியாத மேட்டர் என்னடான்னா ஹ்யூமன் பாடில உள்ள வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனும் ,சமுத்திர நீரோட கெமிக்கல் காம்பினேஷனும் ஒன்னுதான்ங்கறது.

மனுஷனொட பாடில 90% வாட்டர் கன்டென்டுதானு நினைக்கிறேன். தாளி ரெண்டு மூனு தாட்டி வாயால,வயித்தால போனா டெலிவரி ஆன பெண் மாதிரி டீலாயிர்ரம். தோல் எல்லாம் பாட்டி கணக்கா சுருங்க ஆரம்பிச்சுரும். இதான் சந்திரனுக்கும் ஹ்யூமன் பாடிக்கும் உள்ள லிங்க்.

ஜோதிஷத்துல சந்திரன் மனோகாரகன்னு சொல்றாய்ங்க. அதாவது மனசுக்கு அதிபதி இவரு. சந்திர பலம் இருந்தா நல்ல மனமிருக்கும். மனோபலமிருக்கும்னு அர்த்தம். சந்திரனுக்கு மதினு இன்னொரு பேர். மதிங்கற வார்த்தைக்கு மரியாதை கொடு. ரெஸ்பெக்ட் (அதர்ஸ்)னும் ஒரு அர்த்தம் உண்டு. நல்ல மனசு இருக்கிறவன் எவனையும் அவமதிக்கமாட்டான். மலையாளத்துல மதிங்கற வார்த்தைக்கு போதும்னு ஒரு அர்த்தம் இருக்கு. நல்ல மனசுன்னா என்ன? போதுங்கற மனசுதான். மதி (சந்திரன்) நல்ல இடத்துல இருந்தாதேன் மன்சன் மதி(போதும்)ன்னுவான்.நீங்க போதும்னு நின்னுட்டா எல்லாமே உங்களை தேடிவரும். எனக்கே எனக்கேனு அலைஞ்சு பறைசாத்தினா உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா கதைதேன்.

"எண்ணம் போல் மனம். மனம் போல் வாழ்வு"னு ஒரு பழமொழி இருக்கு. எண்ணம்னா வந்து போற எண்ணங்கள் இல்லை. எண்ணங்களுக்கெல்லாம் விதையான எண்ணம் அது நல்லதா இருந்தா இன் ப்ராசஸ் மனம் நல்லதா மாறிரும். மனம்போல் வாழ்வுங்கறதால வாழ்வும் பெட்டரா மாறிரும். மேற்படி விதை எண்ணம் எங்கருந்து விதைக்கப்படுதுனு புரியலை. ஜீன் வழியானு சொல்றாய்ங்க. அப்ப என்.டி.ஆர் போட்ட டஜன் குட்டியும் ஏன் டம்மி பீசாயிருச்சு. நம்ம தாத்தா மேட்டர்ல கூட அழகிரிக்கும்,
ஸ்டாலினுக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கு.. இங்கே தான் சந்திரன் விளையாடறாரு.

சந்திர ஆதிக்கத்துல உள்ளவுக இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமானவுகனு ஒரு கணக்கிருக்கு. (ஸ் ..அப்பாடா ..நம்முதும் கடக லக்னம் தேன் -வாக்குல சந்திரன் -ஆக நம்ம பேச்சு/எழுத்து இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கம் தான் போல)

மனமிருந்தால் மார்கம் உண்டுங்கறாய்ங்க. "அவன் மனசு வைக்கலைப்பா.." " ஐயா மனசு வச்சா இதெல்லாம் ஜுஜுபி" இந்த கான்வர்சேஷன் எல்லாம் நெஜம் தான் பாஸ்! மனசு வச்சாத்தான் எதையும் சாதிக்க முடியும். அதுக்கு சந்திரபலம் தேவை.

தெலுங்குல சந்தோஷம் சகம் பலம்ங்கறான். சந்தோஷத்தை தர்ரது ஸ்தூலமான பொருட்கள் இல்லே. சனம் பொருளுக்கு அலையுதுன்னா அதுல கிடைச்சுருமோங்கற எண்ணத்துலதான். வெறும் பொருட்களால சந்தோஷம் கிடைச்சுர்ர மாதிரி இருந்தா அவனவன் 3 ட்யூட்டி பண்ணுவான். சந்தோசத்தை தர்ரது மனசு.

மனசுல உள்ளதெல்லாம் ரெண்டே ரெண்டு கோரிக்கை தேன். ஒன்னு கொல்லனும் ரெண்டு கொல்லப்படனும். இது ரெண்டுக்கும் வாய்ப்புள்ள எல்லா மேட்டர்லயும் மனசு துள்ளும். இது ரெண்டுமே செக்ஸுல சாத்தியமாகுது.அதனாலதான் கில்மாவுக்கு இம்மாம் கிராக்கி.

மனசு ஒத்துழைக்கலைன்னாலும் ஆஃபீஸ் வேலைய வேணம்னா செய்துர முடியும். ஆனால் கில்மா மேட்டர்ல இது இம்பாசிபிள். அதுவும் நீங்க ஆண் என்றால் அசம்பவம். சந்திர பலம் இருந்தாதான் மனசு ஒத்துழைக்கும்.

கும்ப லக்ன காரவுகளுக்கு இவர் சஷ்டமாதிபதி (6) ங்கறதால இவர் 8 அ 12லருந்தா பெட்டர்
தனுசு லக்ன காரவுகளுக்கு இவர் அஷ்டமாதிபதிங்கறதால 6 அ 12ல இருந்தா பெட்டர்.
சிம்ம லக்ன காரவுகளுக்கு இவர் விரயாதிபதிங்கறதால 6 அ 8லருந்தா பெட்டர்.

அதே மாதிரி சந்திரனோட 6,8,12 அதிபதிகள் சேர்ரது, ராகு கேதுக்கள் ஜாய்ன் பண்ணிக்கிறது , நீசமாயிர்ரது (விருச்சிக ராசி) சனி கூட்டு சேர்ரதுல்லாம் இருந்தா மன நலம் கோவிந்தா. மனம் கெட்டா மண வாழ்வும் போயிந்தா..

(சந்திர பலத்தை பத்தியே இன்னம் மஸ்தா சொல்லனும் நைனா அடுத்த பதிவுல பார்ப்போம்..உடு ஜூட்)



தெலுங்குல கூட மதிங்கற வார்த்தை இருக்கு . ஆனா அதை madhi ன்னு ப்ரனவுன்ஸ் பண்ணமாட்டாய்ங்க. mathiன்னு ப்ரனவுன்ஸ் பண்றாய்ங்க. "நா மதி நின்னு பிலிச்சிந்தி கானமை வேணு கானமை" என் மனம் உன்னை அழைக்குது கானமாய் முரளி கானமாய் "னு அர்த்தம்.

மதிங்கற வார்த்தைக்கு முகம்னும் ஒரு அர்த்தம் இருக்குங்கோ .உ.ம் பானுமதி (சூரியனை போன்ற முகமுடையவள்) சந்திரமதி (சந்திரனை போன்ற முகமுடையவள்) மதின்னா மனம் . மனம் மலர்ந்திருந்தா முகமும் மலர்ந்திருக்கும்.

Friday, February 4, 2011

கில்மாவும் சூரிய பலமும்


கில்மாவும் கிரகபலமும் தொடரின் முதல் அத்யாயம் முன்னுரைக்கே சரியா போச்சு. கடைக்கால் கண்ணுக்கு தெரியாதுதேன் ஆனால் பில்டிங்குக்கு அதான் முக்கியம். தம்பிமாருக்கு கொஞ்சம் கடுப்பாகூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த முன்னுரை மிக மிகத்தேவையானதுங்கறது என்னோட கருத்து.

இப்ப சூரிய பலம் கில்மாவுக்கு என்னெல்லாம் சப்போர்ட்டை தரும், பலகீனமா இருந்தா ( சூரியனை சொன்னேனுங்கோ) எப்படியெல்லாம் லொள்ளு பண்ணும்னு இந்த பதிவுல பார்த்துருவம்.
பகல்ல பிறந்தவுகளுக்கு சூரியன்தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இத்யாதிக்கெல்லாம் பொறுப்பேத்துக்கறாரு (ராத்திரில பிறக்கிறவுகளுக்கு சனி)
"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே"னு பாரதியார் சொல்றாரு. ஒரு குழந்தைக்கு அப்பாதான் மொதல் ரோல் மாடல். அப்பனுக்கு பிள்ளை தப்பாம - விரையொன்று போட்டால் சுரையொன்று முளைக்குமா - புலிக்கு பிறந்தது பூனையாகுமா - மாதிரி பஞ்ச் டயலாகெல்லாம் நிறைய கேட்டிருப்பிங்க.
சூரியன் நல்ல நிலையில இருந்தாதான் அப்பா நல்ல நிலைல இருப்பாரு. அவர் நல்ல நிலையில இருந்தாதான் அவரோட குடும்பவாழ்க்கை நல்லாருக்கும். அது நல்லாருந்தாதான் பசங்களோட வாழ்க்கையும் நல்லாயிருக்கும்.
சப்போஸ் ஜாதகத்துல சூரியன் கெட்டுக்கிடக்காருனு வைங்களேன் அப்ப நிலைமை எப்படி இருக்கும்? ஏறுமாறாதான் இருக்கும். இந்த ஏறுமாறான சூழ் நிலையில "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி "இருக்கிறதெங்கே?
எல்லாம் உன்னாலே நான் கெட்டேன் என்னால நீ கெட்டேங்கற ரூட்ல தான் வாழ்க்கை போயிட்டிருக்கும். கண் பார்த்தா கை செய்யும் - அதே ரூட்டை ஜாதகர் கூட பிடிச்சுர்ராரு. முதல் கோணல் முற்றும் கோணல் தேன்
அதுசரிங்கண்ணா " பண்டித புத்ரஹா பரம சுண்ட்டஹா" வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகின்னு சொல்றாய்ங்களே இது எப்படி ஒர்க் அவுட் ஆகுதுனு கேட்டு க்ராஸ் பண்ணுவிங்க. சொல்றேன்.
இந்த பழமொழி 100% உண்மை நிலவரத்தை காட்டுதுனு சொல்ல முடியாதுதான்.ஆனால் இந்த பழமொழி உருவாக ஓரளவாவது உண்மை நிலவரம் தூண்டுதலா இருந்திருக்கனும்.
வாத்தியார் ஜாதகத்துல அஞ்சாவது இடம் அவர் புத்திய காட்டுது, பிள்ளையையும்காட்டுது. அந்த அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருந்திருந்தா அவரும் நல்லா படிச்சு வாத்தியார் ஆயிருப்பார். அவரோட பையனும் நல்லா படிச்சிருப்பான்.
ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நல்லது கெட்டது கலந்தேதான் இருக்குது. எந்த பாவமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே. அதே மாதிரி எந்த கிரகமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே.
இதனால என்னாகுதுன்னா அந்த அஞ்சாவது பாவம் வாத்தியாருக்கு புத்திஸ்தானமா ஒர்க் அவுட்டாயிருச்சு. வாத்தியாராயிட்டார். புத்ரஸ்தானமா டப்ஸாயிருச்சு. பையன் மக்காயிட்டான்.
இது ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூ. இன்னொரு கோணத்துல பாருங்க. அதே வாத்தியார் ஊர் பிள்ளைங்களுக்கெல்லாம் பாடம் கத்துக்கொடுக்கிறார். அவிக மக்காகலே. ஏன்? அவர் " ஸ்கூல்ல எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு தான் பாடம் நடத்தறார். அவருக்கு அந்த ஸ்கூல் பிள்ளைங்களோட எந்த விதமான அட்டாச் மெண்டும் இல்லை. ஆனா வீட்ல வந்து பெத்த பிள்ளைக்கு பாடம் நடத்தறப்போ அதிக அக்கறையோட அதிக அட்டாச் மெண்டோட பாடம் நடத்தறார். இங்கே அந்த அட்டாச்மெண்டே வில்லனாயிருது.
இதுலருந்து என்ன தெரியுது?இவன் என் மகன், இது என்னோட காருன்னு அட்டாச் மெண்ட் வரும்போதுதான் கிரகம் வேலை செய்யுது. அந்த அட்டாச் மெண்ட் இல்லாத இடத்துல கிரகம் வேலையே செய்யறதில்லை.
இது ஒரு கோணம். இன்னொரு கோணம் என்னடான்னா இவன் ஜாதகத்துல சூரியன் நல்ல இடத்துல உட்கார்ந்திருந்தா அப்பனோட வித்து மொதல் டிகாஷன் மாதிரி ஸ்ட்ராங்கா இருந்திருக்கும். இவனும் ஃபில்ட்டர் காஃபி மாதிரி இறங்கியிருப்பான். ஒரு வேளை இவன் ஜாதகத்துல சூரியன் டுபுக்காயிட்டா என்னாகும்? நாலாவது அஞ்சாவது டிக்காஷன் மாதிரி தான் இறங்கும் ( நான் ஜீன்ஸை சொல்றேன்)
சூரியன் பல், எலும்பு, முதுகெலும்பு இத்யாதிக்கு காரகர். இதெல்லாம் நல்லா அமையனும்னா அம்மா ஹெல்தியா இருந்து ,தாய்பால் கொடுத்திருக்கனும். அந்த தாய்பால்ல கால்ஷியம் இத்யாதி புஷ்கலமா இருந்திருக்கனும். அதுக்கு ஜாதகனோட அப்பா இவனோட அம்மாவுக்கு நல்ல சத்துணவை கொடுத்திருக்கனும். அப்பத்தேன் பால் சுரக்கும். பால்ல கால்ஷியம் இருக்கும். எலும்பு ஸ்ட்ராங்கா அமையும். குழந்தை வளர வளர அவனுக்கு கால்ஷியம் நிறைய இருக்கிற உணவை கொடுத்து வளர்த்தா ஏன் அவனுக்கு பல், எலும்பு, முதுகெலும்பு ட்ரபுள் கொடுக்கப்போவுது.
சூரியன் வீக்கு. அப்பன் சோம்பேறி. பையன் சின்ன வயசுல வேலை வெட்டினு போறானு வைங்க. இளம் எலும்பு , சத்துக்குறைவு வேற, இதுல கடும் உழைப்பு நிலைமை என்னாகும்? உடம்பு உடம்பை திங்க ஆரம்பிச்சுரும்.
மொதல்ல பல்லு காலி. பல் போனா சொல் போச்சு. " மனதிலே உறுதி வேண்டும் வாக்கினிலே தெளிவும் வேண்டும்" அது சரி இதுக்கெல்லாம் அடிப்படியான ஹெல்த் நல்லாருக்கனுமே. பல்லுல பிரச்சினை இருந்தா சிரிக்க கூட முடியாதே. அப்பாறம் எங்கன இருந்து தன்னம்பிக்கை, டீம் ஒர்க், தலைமை பண்புல்லாம் சாத்தியம்.
பார்ட்டியை கை கால் வலி,முட்டிவலி,முதுகுவலியெல்லாம் பின்னியெடுக்கும். பொஞ்சாதியை கை கால் அமுக்க சொல்லிட்டு அந்த சொகத்துலயே தூங்கிபோயிருவான். அப்பாறம் என்னத்த கில்மா?
சூரியன் மலைப் பிரதேசங்களுக்கும் காரகர். சின்னவயசுல நாலு மலை ஏறி இறங்கினா எலும்பெல்லாம் உறுதிப்படும். தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டிக்கெல்லாம் சூரியன் தேன் இன்சார்ஜ்
சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி. சவுண்ட் பாடிக்கு தேவை நல்ல வித்து. நல்ல சத்தான தாய்ப்பால் சத்துணவு. இதுக்கெல்லாம் அப்பன் கரீட்டா இருக்கனும். அதுக்கு இவன் ஜாதகத்துல சூரியன் பக்காவா உட்கார்ந்திருக்கனும் ( நீல் கமல் சேர்ல இல்லிங்கண்ணா)
தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டியெல்லாம் அமையனும்னா நல்ல ஜீன்ஸ் இருக்கனும், ஆரோக்கியமான உடல் இருக்கனும் உடலுக்கு ஒரு ஷேப்பை,உறுதிய கொடுக்கிற எலும்பு வலிமையோட இருக்கனும். உங்களுக்கு முட்டிவலி,முதுகுவலி ஏதோ இருக்குனு வைங்க மொதல்ல நேர நிக்கமுடியுமா? பப்ளிக் மேட்டர்ல ஆர்வம் வருமா? தாளி எவன் அம்மாள எவன்னா வச்சுட்டு போவட்டுங்கற மென்டாலிட்டி வருமா வராதா? அப்பாறம் எங்கன இருந்து லீடர்ஷிப்.
மேற்சொன்ன தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டில்லாம் இருந்தாதேன் பொஞ்சாதி மதிப்போ. அவள் மதிச்சாத்தேன் இளமை குதிச்சு ஆட்டம் போடும். இல்லாட்டி நாளாவட்டத்துல பேட்டரி வீக்குதேன்.
இதுல இன்னொரு தமாசு என்னடான்னா சூரியன் மிக நல்ல நிலையில உள்ளவன் தலைவனா ஆகாமயே கூட போயிரலாம் (தலைவனுக்கே இவனை பார்த்தா பல்லு தந்தியடிக்கிறப்ப இவன் தலைவனா இருந்தா என்ன இல்லாட்டி என்ன?) ஆனால் சூரியன் கெட்டு போன ஜாதகர்கள் மட்டும் தலைமைப்பதவிக்கு அலைஞ்சு பறைசார்த்துவாய்ங்க.
இவிக மேட்டர்ல தலைமைப் பண்புகள்னா "சனத்தை மேனேஜ் பண்றது" தன்னம்பிக்கைன்னா " சாவு வீட்டுக்கு போனா பிணமா இருக்கனும், கண்ணால வீட்டுக்கு போனா மாப்பிள்ளையா இருக்கனுங்கற புத்தி"
ப்ராக்டிக்காலிட்டின்னா ஆனைக்கு காலு ரயில்வே ட்ராக்ல மாட்டிக்கிச்சா நீ எலியா இருந்தா என்ன ஏறி விளையாடுங்கறதுதேன்.
விளம்பரங்கள், நாளிதழ்கள்,பயன் கருதா பொது நலப்பணிகளுக்கும் சூரியன் தேன் பொறுப்பு. சூரியன் நல்ல நிலையில இருந்தா இந்த மேட்டர்ல எல்லாம் ஆர்வமிருக்கும், ஞானமிருக்கும், என்ட்ரி இருக்கும்.
பொம்பள வீக்கர் செக்ஸ். அவளுக்கு தன்னை சுத்தி உள்ள சின்னவட்டம் தான் முக்கியம். ஆனால் சூரியன் நெல்ல இடத்துல உள்ளவன் ஊர் ,உலக சேதிகளையெல்லாம் அதிகாலையிலயே அறிய துடிக்கிறதை கண்டா அவளுக்கு ஒரு உதறல் வரும். இவன் நம்மை விட பவர்ஃபுல்ங்கற எண்ணம் வரும்.
பொஞ்சாதி அடங்கியிருந்தா பெட்டைக்கும் ஆண்மை வருங்கோ..
திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்களுக்கும் இவர் தான் அதிகாரி. தெலுங்குல ஒரு பழமொழி. " திரிகி செடிந்தி ஆடதி - திரக்க செட்டாடு மகவாடு. (ஊர்)சுத்தி கெட்டா பொம்பளை, சுத்தாம கெட்டான் ஆம்பளை. ங்கறது இதனோட அர்த்தம்.
ஆம்பளை மட்டுமில்லை,பொம்பளை கூட சுத்தனும் - ஒரு மனித உடல்ல தன் தினசரி உணவை தேடவே 11 கிமீ சுத்தற அளவுக்கு சக்திய வச்சிருக்காம் இயற்கை. உங்க வீட்ல ரீடிங் ரூமுக்கும், டைனிங் டேபிளுக்கு எவ்ளோ தூரம் இருக்கு தலைவா? இதுல சில பார்ட்டிங்க மேகிய வச்சுக்கிட்டு ரீடிங் ரூம்லயே, டிவி பார்த்துக்கிட்டே கொறிச்சுர்ராய்ங்க.ஏன்யா வராது ஷுகரு.. ஏன்யா வராது ஆண்மைகுறைவு
சூரியன் நல்ல இடத்துல இருந்தா வூடுதங்க விடாது. சுத்தவைக்கும். சுத்த சுத்த வலிமை கூடும். உலக அறிவு கூடும். இப்படியாகொத்தவனை தான் பொம்பளை விரும்புவா.அட்லீஸ்ட் இப்படியாகொத்தவனோட தான் சண்டை போடவும் விரும்புவா..
உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்களுக்கும் இவர் தான் காரகம். இங்கல்லாம் ஏதோ ஒரு நா ரெண்டு நாளுன்னா மந்திரி மச்சான், மாமன்னா மதிப்பாய்ங்க, உங்களுக்கா மதிப்பு வேணம்னா நீங்க இந்த ஏரியாவுல நோட்டட் பர்சனா இருக்கனும். அப்படி இருந்தா மந்திரிகளும் உங்ககிட்டே தொங்குவாய்ங்க. இதுக்கும் சூரியபலம் தேவை. இதுக்கு அப்பாவோட இமேஜும் உதவும்/
ஒளிவு மறைவற்ற பேச்சை தர்ரவரு சூரியன். இவர் வீக்கா இருந்தா பாயிண்டுக்கு வரவே பத்து நாள் பிடிக்கும்.எதிராளி "யோவ் ச்சொம்மா சொதப்பாம விசயத்துக்கு வான்னிருவான்" அப்ப பக்கத்துல பொஞ்சாதி இருந்தா வாயிதா போயிரும்.
திறந்த வெளிக்கு சூரியன் தேன் அதிபதி. ஜாதகத்துல சூரியன் சரியில்லைன்னா ஒரு வீ(கூ)ட்டுக்குள்ள அடங்கிக்கிடக்கத்தான் ஜாதகன் விரும்புவான். பொஞ்சாதியே " இன்னாபா.. பஜார்ல ஒன்னும் வேலையில்லியா"னு கேட்டுருவா.
உலகத்தையெல்லாம் விழிக்க வைக்கிறவர் சூரியன். இவர் சரியான இடத்துல அமைஞ்சா இயற்கையோட ஒட்டின லைஃப் கிடைக்கும். ஐ மீன் சூரிய உதயத்துல விழிப்பு - சூரிய அஸ்தமனத்துல வீட்டை வந்து சேர்ரது.

இதுவே சூரியன் எக்கு தப்பான இடத்துல மாட்டியிருந்தா தூக்கமின்மை அவதிக்குள்ளாக்கும். தூக்கமாத்திரைக்கு வழக்கப்பட்டுட்டா மீளவே முடியாது. இப்படிப்பட்ட கிராக்கிங்கதான் செக்ஸை தூக்க மாத்திரையா யூஸ் பண்றது.

ஒனக்கு தூக்கம் கிடைக்குது சரி.அவளுக்கு உச்சமும் கிடைக்காம் தூக்கமும் கெட்டா என்னாகும்? சுயம் (செல்ஃப்), அகந்தை ( ஈகோ) க்கும் சூரியன் தான் காரகர். இவர் எந்த அளவுக்கு ஜாதகத்துல பவர்ஃபுல்லா இருந்தா அந்த அளவுக்கு சுயம் பிரகாசிக்கும். அகந்தை கட்டுக்குள்ள இருக்கும்.

பலான மேட்டர்ல மட்டும் சுயமரியாதை, கவுரவம்னு போனா வெட்டி ..லு நித்திரைக்கு கேடு கதையாயிரும். சூரியபலமிருக்கிறவனுக்கு எப்ப எதை எப்படி எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்கிறதுனு தெரியும். விட்டுக்கொடுத்ததை மீட்டுக்கிடவும் தெரியும்.

சூரிய பலம் இல்லாதவனுக்கு இது எதுவுமே தெரியாது. மாட்டிக்கிடு முழிப்பான். ஆக கில்மாவுல புகுந்து விளையாடனும்னா சூரியபலம் அவசியத்திலும் அவசியம்.

Sunday, January 30, 2011

பத்தாம் பாவமும் படுக்கையறை சுகமும்

ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது  இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ஆனாலும் எதுக்கிந்த பாவி,பாம்பு சமாசாரம்? இதுக்கும் படுக்கையறை சுகத்துக்கும் என்ன சம்பந்தம்? கேப்பிக சொல்றேன்.

9ஆவது இடத்தை தர்ம ஸ்தானம்னும் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதுல பெரிய சூட்சுமம் இருக்கு. 9ங்கறது சொத்தை காட்டற இடம். உங்க கணக்குல தர்மம் இருந்தாதான் சொத்து  இருக்கும். சொத்து இருந்தா நிலையான வருமானம் இருக்கும். கு.ப வருமானவரியை குறைக்கவாச்சும் செய்விக.

பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்.............னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.

இதை பாலன்ஸ் பண்ணா நல்லாருக்குமே - இது ரெண்டும் சேர்ந்திருந்தா நல்லாருக்குமேனுதான் இந்த ரெண்டு பாவாதிபதியும் சேர்ந்தா நல்லது .அது தர்ம கர்மாதிபதியோகம்னு சொல்லியிருக்காய்ங்க. சொத்தும் இருக்கும் -நிலையான வருமானமும் இருக்கும் -கூடவே கருமமும் செய்விக (தொழில்) சாரிட்டியும் அமோகமா நடக்கும் . இது பெட்டருனு நினைச்சாப்ல இருக்கு.


ஆனால் எத்தனையோ வள்ளல்களோட வாரிசுகள் இன்னைக்கு பிச்சையெடுக்கிறதை பார்க்கிறோம் படிக்கறோம். இது எப்டி? எப்டி? எப்டி? 

நீங்க மூதாதையரோட சொத்துல கிடைச்ச பணத்தால சாரிட்டி பண்ணா அந்த மூதாதையர்களோட கருமம்தான் தொலையும், உங்க கருமம் தொலையாது. இன்னம் சொல்லப்போனா அவிக கருமம் வந்து உங்க தலையில உட்காரும்.

சரிங்க .. நான் தொழில் செய்து பொருளீட்டி தர்மம் பண்றேம்பிங்க. தொழிலே கருமம்தேன். வியாபாரம் த்ரோஹ சிந்தஹா.

நாம பாவம்ங்கறது பென்சில் எழுத்து -புண்ணியங்கறது ரப்பர் மாதிரினு நினைக்கிறோம். அது தப்பு. அன்னமாச்சாரி "தெகது பாபமும் -தீரது புண்ணியம்"ங்கறாரு.

பாவம் அறுந்து போகாது. புண்ணியம் தீர்ந்து போகாதுனு அர்த்தம். ரெண்டும் ரெண்டு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். அப்ப நான் தொழிலே செய்ய கூடாதானு கேட்கலாம். செய்யலாம். ஆனால் நான் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன், நான் கர்ண மகா பிரபு தானம் பண்றேன் தர்மம் பண்றேன்னெல்லாம் கிளம்ப கூடாது.

நம்ம தேவைக்கு+ எதிர்கால பாதுகாப்புக்கு  பொருளீட்டின பிறவு  ஃப்ரீயா உடுமாமேனு  விட்டுரனும். இன்னைக்கிருக்கிற நிலைமைக்கு ஒழுங்கு மரியாதையா மானம்,ஈனம்,சூடு ,சுரணை எல்லாத்தயும் விட்டுட்டு "பொழப்ப" பார்த்தா ,சிக்கனமா வாழ்ந்து பத்துரூபா எடுத்து வச்சா இந்த மாதிரி ஒரு திட்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிச்சா ஒரு பத்து வருஷம் தொழிலை தொழிலா செய்தா போதும் . அப்பாறம் ரிட்டையர்டு லைஃபுக்கு வந்துரனும்.

உனக்கு பசி . ரோட்டோரம் ஏதோ தோட்டம் இருக்கு. பசிக்கு ரெண்டு பழம் சாப்பிட்டே. ரெண்டை மடில கட்டிக்கினே. போய்க்கினே இரு. நீ என்ன பாடையில போறவரை  கூடையில எடுத்து  கூப்டு கூப்டு தர்மம் பண்றது? தோட்டத்துலயே விட்டுரு.  உனக்கு பின்னாடி பசியோட வர்ரவன் ரெண்டை தின்னுட்டு ரெண்டை மடில கட்டிக்கிட்டு போவட்டும்.

அடடா..பதிவு  ரெம்ப சீரியஸா போயிட்டாப்ல இருக்கு.  பத்து தொழில் ஸ்தானம். இங்கன பாபகிரகமோ,பாம்புகிரகமோ இருந்தாதேன் மனுசன் "எதையோ" ஒன்னை பண்ணி துட்டு சேர்ப்பான். துட்டு சேர்த்தாதேன் பொஞ்சாதி. ( கொண்டு வந்தால் மனைவி).

பணம் சம்பாதிக்கனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய  கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா)  இல்லை நீங்க சாகனும். தொழில்ல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கொலைவெறி ஏறும். இது தீர நீங்க செக்ஸ்ல இறங்க வேண்டி வரும்.செக்ஸ் லைஃப் ஓஹோ தான்.

கொல்றதுன்னா எதிராளியோட  ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)

இதுக்கு சின்னதா ஒரு  உதாரணம்:


கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்

வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை

இதுல கடைக்காரரோட செக்ஸ் லைஃப் சூப்பரா இருக்கும். வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை இங்கேயே நிறைவேறிட்டதால அவரோட செக்ஸ் லைஃப் நியூஸ் ரீல் மாதிரிதேன் இருக்கும்.

தொழில் ஸ்தானத்துல பாவகிரகம்,பாம்புகிரகம் உள்ளவன் எதையோ உருட்டி பிரட்டி, பொய்யோ,புரட்டோ பண்ணி ஒப்பேத்தி பணம் சம்பாதிச்சுருவான் - குடும்பத்துல ,சமூகத்துல அவனோட சர்வைவல் ஓகே ஆயிரும். நேச்சுரலாவே அவனுக்குள்ள தன்னம்பிக்கை பெருகும்.ஆண்மை பெருகும். கில்மால விளையாடுவான்.

பை சான்ஸ்.  பத்துல சுபகிரகம் இருக்குதுனு வைங்க உஞ்ச விருத்திதேன். அவன் ஆன்மீக ரீதியில பெரிய ஆளா வளரலாம்.ஆனால் லோகாயதமா பார்த்தா அதுவும் செக்சுவலா பார்த்தா வீக்குதேன். இதை வீக்குனு சொல்ல முடியாது. சுலபமா தாண்டிருவான்.

சரிங்கண்ணே என் ஜாதகத்துல பத்துல கிரகமே இல்லையேனு ஃபோன் பண்ணிராதிங்க.அந்த பாவம் காலியா இருந்தாலும் அந்த பாவாதிபதி பாபியா சுபனா எங்க நின்னாரு பத்தை ஆரு பார்க்கிறாய்ங்கங்கறத பொருத்து தொழிலும் , கில்மாவும் அமையும். உடு ஜூட்டு..

Saturday, January 29, 2011

அக்கா மகளும் 11 ஆம் பாவமும்

அக்காமகள்னதுமே ஒரு ஜிலீர் உணர்ச்சி பரவும். இதுக்கு காரணம் அவள் முறைப்பொண்ணுங்கறதுதான். அக்கா மகளை கட்டனும்னா உங்க ஜாதகத்துல 11 ஆம் பாவம் சுபபலமா இருக்கனும். 11ங்கறது மூத்த சகோதர (சகோதிரி) ஸ்தானம். இந்த இடம் சுபபலமா இருந்தாதான் எல்டர் ப்ரதர்ஸ்,சிஸ்டர்ஸோட சுமுகமான உறவு இருக்கும் அப்பத்தானே அக்கா மகளை கட்டமுடியும்.

அக்கா மகளை வச்சு பாட்டு எழுதாத கவிஞரே இருக்கமாட்டாருனு நினைக்கிறேன். ஆனால் ஒன்னுங்கண்ணா நம்ம நாட்ல தலை முறைக்கு தலைமுறை உசரம்,ஃபிட்னெஸ், ப்ரெய்ன் பவர் எல்லாம் குறைஞ்சிக்கிட்டே போக காரணம் சாதீயமும்,ஒரே சாதிக்குள்ள கண்ணாலம் கட்டறதும்தேன்.

தாளி பால் கொடுக்கிற பசுவையே பத்து கி.மீ ஓட்டிக்கினு போயி ஜெர்சி காளையோட விந்துவை ஊசி மூலம் ஏத்திக்கிட்டு வர்ர சனம் மகளை மட்டும் ஒன்னுக்குள்ள ஒன்னுனு நெருங்கிய சொந்தத்துல கட்டிர்ராய்ங்க.

சந்திரபாபு என்.டி.ஆர் ட்ரஸ்ட் மூலமா நெருங்கிய சொந்தத்துல திருமணம் செய்த காரணமா வரக்கூடிய நோய்களுக்கு இலவச சிகிச்சை தர்ராரு. ஆனால் பாருங்க பாலகிருஷ்ணாவை சம்பந்தியாக்கிக்கிட்டாரு. இவிகளுக்கெல்லாம் மன சாட்சினு ஒன்னு கிடையவே கிடையாதோ என்னமோ?

நான் இந்த பதிவை போடுவதன் நோக்கம் ஆருக்கெல்லாம் அக்கா பொண்ணு பொஞ்சாதியாகும்னு சொல்றதுக்கில்லை சொம்மா கவர்ச்சிக்காக வச்ச தலைப்பு இது.

நம்ம சித்தாந்தமே வேற. எதிர்கால இந்தியன் சூப்பர் ஃபிசிக்,சூப்பர் உசரம், சூப்பர் ப்ரெய்ன் பவரோட இருக்கனும்னா எவனுமே எவளுமே தன் மதத்துல, தன் மானிலத்துல கண்ணாலமே கட்டக்கூடாது. குறைஞ்ச பட்சம் சொந்த சாதில கட்டவே கூடாது.  சொந்த பந்தத்துல பண்ணா ஆட்டம் க்ளோஸ்.  டேக் கேர்.

இனி ஜோசிய மேட்டருக்கு வரேன். ஜாதகத்துல லக்னம் முதலா (லக்னத்தோட சேர்த்து) க்ளாக் வைஸ் எண்ணும்போது 11 ஆவதா வர்ர ராசிதேன் லாப பாவம்.இங்கன கோண ஸ்தானாதிபதி (1-5-9) இருந்தா தூள். கேந்திராதிபதி இருந்தா (1-4-7-10)  குட். 6,8,12 ஸ்தானாதிபதிகளை தவிர இதர கிரகங்கள் இருந்தாலும் பெட்டர் தேன்.

இன் தி சேம் வே இந்த பாவாதிபதியும்  6,8,12 தவிர வேற எங்கயாச்சும் இருந்தா பெட்டர். அப்பத்தேன் மூத்த சகோதரஸ்தானம் பேர் சொல்லும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு இப்ப பார்ப்போம்.

அண்ணனோ அக்காவோ காலாகாலத்துல கண்ணாலம் கட்டி நல்லபடியா வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்கனு வைங்க. அப்ப அப்பா  நாற்பதுவயசை க்ராஸ் பண்ணியிருப்பாரு.  (பின்யோக ஜாதகமா இருந்தா பீக்ஸ்டேஜ்ல இருப்பாரு ,முன் யோக ஜாதகமா இருந்தா ஓஞ்சுபோயிருப்பாரு) .சந்தோசத்துல உள்ளவுக அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தபார்ப்பாய்ங்க. இந்தவிதிப்படி சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கிற அண்ணனோ ,அக்காவோ உங்களையும் சந்தோசப்படுத்தப்பார்ப்பாய்ங்க. உங்க படிப்பு,வேலைமேட்டர்ல நல்லா என் கரேஜ் பண்ணுவாய்ங்க. காதல் மேட்டர்ல உதவலாம் அல்லது திருமண விஷயத்துல ஆர்வம் காட்டி அங்கே இங்கே வரன் தேடலாம்.

மேலும் அவிக சந்தோசமா வாழறதை பார்த்து உங்களுக்குள்ளயும் ஒரு வித ஏற்புத்தன்மை ஏற்பட்டிருக்கும் .அந்த நல்ல அதிர்வுகள்  உங்க மைண்டுக்கு  ட்ரான்ஸ்மிட் ஆகியிருக்கும். சைக்காலஜிஸ்டுங்க சொல்ற என்விரான்மென்ட் ஏற்படும்.

அட நாளைக்கு உங்க மத்தியில ( தம்பதி) சின்னதோ பெருசோ பிரச்சினை வந்தாலும் அவிக கிட்டே பகிர்ந்துக்கலாம். அல்லது அவிக கவுன்சிலிங் தரலாம்.இது ஒரு ஆங்கிள்.

11 ஐ ஜஸ்ட் லாபஸ்தானமா பார்த்தாலும் இந்த ஸ்தானம் நல்லாருந்தாதான் எது ஒன்னுத்துலயும்  லாபத்தை எதிர்பார்க்கலாம். லாபத்துல உள்ளவன் (கொள்ளை லாபத்துல உள்ளவனில்லிங்கோ -அந்த கேசெல்லாம் வேற -பின்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்) சந்தோசமா இருப்பான். சந்தோசப்படுத்த பார்ப்பான். உலகத்தையே சந்தோசப்படுத்தறவன் பொஞ்சாதிய சந்தோசப்படுத்தாம இருப்பானா என்ன?

நம்ம ஜாதகத்துல லாபஸ்தானாதிபதியே பாதகாதிபதியாயிட்டாரு. போல. என்னங்கடா இது ப்ளாக்ர்ங்கற இனத்தையே இழிவு படுத்தி எழுதியிருக்காய்ங்களேனு  விகடனை எரிப்போம் னு  ஐட்டம் போட்டேன்.மஸ்தா பேரு படிச்சாய்ங்களே கானி  ஆரும் கண்டுக்கிடலை. ஓட்டும் போடலை நீங்க நினைச்சா இப்ப கூட  இங்கேஅழுத்தி  இண்ட்லில  ஓட்டுப்போடலாம். ப்ளாகர்ஸோட எதிர்ப்பை  அவிகளுக்கு தெரிவிக்கலாம்


எம்.ஆர் ராதா ஒரு தாட்டி வெளி நாடு போனப்ப " என்னை இங்கே வரவிடக்கூடாதுன்னு பெட்டிஷன் போட்டவுங்களுக்கும் நன்றி" னு பேசினாரு.  அப்படியாக விகடனை எரிப்போம் பதிவுக்கு ஓட்டுப்போடாதவுகளுக்கும் சேர்த்துத்தேன் இந்த பதிவு..

Thursday, January 20, 2011

பிரபாகரன் உயிருடன் : நக்கீரன் ; அன்றே சொன்ன கவிதை07

பிரபாகரன் உயிருடன்? : அன்றே சொன்ன கவிதை07

ஜோதிஷ அடிப்படையில் பார்த்தால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சாக வாய்ப்பில்லை. உயிருடன் தான் இருக்கவேண்டும். 2010 நவம்பர் 26 க்கு பிறகு தம் சாகசப்பயணத்தை துவக்குவார் என்று என் பதிவுகள்ள சொல்லியிருந்தேன். 

இப்போ பிரபாகரன் குறித்த தகவல்கள் சாகசப்பயணம் துவக்கியிருக்கு. முதல்ல லேட்டஸ்டை அதிகாலைல  பிடிக்க படிக்க இங்கே  அழுத்துங்க (உபயம்: நக்கீரன்)

இப்போ கவிதை07ல் நான் எழுதிய பதிவுகளை ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க.



பிரபாகரன் பிழைக்க வாய்ப்பே இல்லை ( தலைப்புதான் பாஸ் நெகட்டிவ்)


பிரபாகரன் சாகவில்லை


நவம்பர்26க்கு பிறகு பிரபாகரன் சாகசப்பயணம்


பிரபாகரனும் நானும் (ஹி ஹி.. ஜாதகரீதியிலான ஒப்பீடுங்கோ)


எச்சரிக்கை:
ஜோதிடம் பொய்த்தால் அது ஜோதிடத்தின் பெருமை
அது பொய்த்தால் சொன்ன ஜோதிடனின் சிறுமை

உடலுறவு விருப்பமும் கிரக நிலையும் (தொடருக்குள் தொடர்)

உடலுறவு விருப்பமும் - கிரக நிலையும்
இந்த தொடருக்குள் தொடரிலான தொடர்ல ஒன் டு ஃபிஃப்த் பாவங்கள் வரை சுபர்கள்,சுபபலம் பெற்றுன்னு ரொட்டீனா வந்திருக்கும். ஆனால் ஆறாம் பாவம் மேட்டர்ல மட்டும் இந்த பருப்பு வேகாது. இந்த பாவம் காலியாயிருந்து ,இந்த பாவாதிபதி 8 அல்லது 12ல இருந்தாதான் பிழைச்சிங்க. இல்லைன்னா என்னாகும்ங்கறிங்களா? சத்ரு ரோக ருண உபாதைகள் கழுத்தை பிடிக்கும். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தங்கறிங்க? சொல்றேன்.

மன்சன் இன்னா வேலை செய்தாலும் அதுக்கு பின்னாடி இருந்து அவனை ஆண் நாய் மாதிரி முன்னுக்கு தள்றது கொல்லும் இச்சை அ கொல்லப்படும் இச்சைங்கற ரெண்டுதான்.

ஆறாமிடத்துல சுபர்கள் நின்னு  அந்த பாவம் சுபபலமா இருந்ததுனு வைங்க பார்ட்டி கச்சா முச்சானு கடன் வாங்கிட்டே போவான் (எதுக்குன்னா சுபகாரியங்கள் செய்யத்தான், எம்ஜிஆர் வேலைகள் செய்யத்தான்..). இங்கே சுப கிரகம் இருக்கிறதால கடன் அதும்பாட்டுக்கு வளர்ந்துக்கிட்டே போவும்.

கடன் வாங்கி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிறதால கொல்லப்படும் இச்சை நிறைவேறுது. கடன் வாங்கியாவது எம்.ஜி.ஆர் வேலைகள் செய்றதால கொல்லும் இச்சையும் நிறைவேறுது. ( ஆயிரம் பேருக்கு அன்னதானம்ன உடனே ஊர்காரங்க செத்துட்டானுங்களே)  மேலும் உயிரோட அடிப்படை இச்சையான உருவாக்குதல்,பரவுதல் இத்யாதி நோக்கங்களூம் இதுலயே நிறைவேறிரும்.

ஆக்சுவலா மேற்படி சகல இச்சைகளும்  நிறைவேற செக்ஸ் ஒரு களமா உபயோகப்படுது. பார்ட்டிக்கு கடன் மூலமா மேற்படி சகல இச்சைகளும் நிறைவேறிர்ரதால கில்மாவுல இன்டரஸ்ட் குறைஞ்சிட்டே வரும்.

ஒரு வேளை கில்மால தாளிக்கனும்னு கடன் வாங்க ஆரம்பிச்சிருந்தாலும் (அதான் பாஸ் ..ரோஸ் உட்ல டபுள் காட், குர்ல் ஆன் பெட், ஏ.சி எட்செட்ரா.. ) போக போக கில்மாவை விட கடன் வாங்கறதுலயும், கடன் காரனுக்கு பாய்லா காட்டறதுலயும் ருசி ஏற்பட்டுரும்.

அடுத்தது நோய். நோய் வருதுன்னா உங்க பாடி ஆரோக்கியமா இருக்கு. அதுல உள்ள இம்யூன் சிஸ்டம் பர்ஃபெக்டா வேலை செய்யுதுன்னு அர்த்தம்.இப்படியா கொத்த பாடில செக்ஸுவல் பார்ட்ஸும் ஒரு ரிதத்தோட , அஜெண்டாவோட வேலை செய்யும்.

ஒருத்தருக்கு நோயே வரலைன்னு வைங்க ஒன்னு அவர் நம்மள மாதிரி உசார் பார்ட்டியா இருந்து காலை டிஃபன் கட் பண்ணி ராத்திரி கஞ்சி குடிச்சுக்கிட்டு, பான்,மாவா,லாலா ,மசாலால்லாம் டச் பண்ணாம அல்லாரும் நல்லாருந்தா சரின்னுட்டு நடராஜா சர்வீஸையே யூஸ் பண்றாருன்னு அர்த்தம். அல்லது அவர் பாடியே காட்பாடி ஆயிருச்சு, இம்யூன் சிஸ்டம் டோட்டல் ஃபெயில்யூர் ஆயிருச்சு அவருக்கு  எதோ பெருசா நோய் வரப்போகுதுன்னு அர்த்தம்.

பலவீனமே எல்லா பாவங்களுக்கும் கங்கோத்ரி .பலவீனன் தன் பலத்தை நிரூபிக்க புது புதுக்களங்களா தேடிட்டே இருப்பான். அப்பாறம் குட்டிகளோட முரட்டு மாமன் களும், அசல் மாமன்களும் (போலீஸ் காரவுகளை சொல்றேன் இவனை தேட ஆரம்பிச்சுருவாய்ங்க.

இவன் பாட்டுக்கு இஷ்டத்துக்கு கலர் கலரா பார்க்க எவளுக்காச்சும் மிலிட்டரி அண்ணன், போலீஸ் தம்பி இருந்தா ரெட் மார்க்கும் கிடைக்கலாம். மேலும் பலவீனன் அதிகம் கோபப்படுவான். கோபத்துலயே இவன் சக்தியெல்லாம் சக் (Suck) ஆயிர்ரதால நாளடைவுல பேட்டரி வீக் .ஷாட் கட் பண்ணா இழந்த சக்தி வைத்தியர்கள் தான்.

இங்கன சுபகிரகம் இருந்தா வர்ர நோய் ரெம்ப நாள் படுத்தாம படக்குனு டிக்கெட்டை கொடுத்துரும். பாபகிரகமிருந்தாலாச்சும் நீங்க நொந்து நூடுல்ஸானாலும் நித்ய கண்டம் பூர்ணாயுசுன்னு காலத்தை ஓட்டலாம்.

இங்கன சுபகிரகம் இருந்தா சமுதாயத்துல யார் எல்லாம் நல்லவுகனு பேர் வாங்கியிருக்காய்ங்களோ அவிகளோட எல்லாம் இவனுக்கு விரோதம் வந்துரும்.

கெட்டவுகளோட விவகாரம் வச்சிக்கிட்டாலும் அவன் மிஞ்சிப்போனா கூலிப்படைய அனுப்புவான். நாமளும் ஒரு கூலிப்படைய வச்சு சமாளிக்கலாம் (சூரிய போட்டுத்தள்ளினது அவனோட படையில தளபதிதானுங்கோ). ஆனா நல்லவுக கிட்ட விவகாரம் வச்சிக்கிட்டா மாத்திரம்  ..இருங்க ஒரு தாட்டி தலையை சிலிர்த்துக்கறேன்.

சாமானியமா அவிகளுக்கு விரோதினு ஆரும் இருக்கமாட்டாய்ங்க. தங்களை விரோதியா நினைக்க கூட ஆளிருக்குன்னு அவிகளூக்கு தெரிஞ்சா 24 மணி நேரம்,365 நாள் இதே நினைப்பாத்தான் இருப்பாய்ங்க.

அவிக எண்ண அலைகள் காத்துல மிதந்து வந்து நம்மை முற்றுக்கையிட ஆரம்பிக்கும். நம்ம உயிர் காத்துல பறக்கிறவரை தாளி நம்ம விடாது விடாது விடாது.

உங்க சர்க்கிள்ள யாரோ நல்லவருக்கு (?) எவனோ பிக்காலி கெட்டது பண்ணியிருப்பான். ஆனால் நல்லாவே இருப்பான். அதை கமெண்ட்ல போட்டு என்னை குடைய நினைக்காதிங்க. ப்ராக்கெட்ல போட்ட கேள்விக்குறிய பாருங்க அதுவே பதில் சொல்லும்.

இதே கெட்டவனுக்கு கெட்டது பண்ணா அந்த கெட்டவன் பண்ண கெட்டதுல மாட்டி முழிச்சவுக வாழ்த்துவாய்ங்க. அந்த கெட்டவனோட வைப்ரேஷன்ஸ் ஆல் இண்டியா ரேடியோ மாதிரி கொரகொரங்கும். (இன்னைக்கு செல்ஃபோன்,டிவில்லாம் வந்த பிற்பாடு இன்னம் மோசமுங்கோ)

அதனாலதான் ஆறாம் பாவத்துல பாவிகள் இருந்தாலும் பரவால்லைனு விதி வச்சிருக்காய்ங்க.

ஆக மத்த பாவங்கள் ( 6,8,12 தவிர ) சுபபலமானா சுபம். இந்த 6,8,12 மட்டும் கெட்டு குட்டிசுவரானாதான் சுபம். இந்த 6,8,12 அதிபதிகள் இந்த பாவங்களிலேயே மாறிமாறி உட்கார்ந்தா தூள்.

ஓகே பாஸ்.. நாளைக்கு ஃப்ரண்ட்,லவர்,பார்ட்னர்,வைஃப்,வப்பாட்டி எல்லாத்தையும் காட்டற 7 ஆமிடத்தை ஸ்கான் பண்ணுவோம் .தற்சமயத்துக்கு உடு ஜூட்

Thursday, December 16, 2010

உங்க கேரக்டர் இதுதான்

1.மேஷம்:
இவர் கேரக்டர் ஜஸ்ட் ஒரு போர் வீரரை போன்றது. இவருக்கு வியூகம் வகுத்து தர ஒரு தளபதி அ அட்வைசர் தேவை. இந்த சோம்பல் நிறைந்த உலகில் சோம்பலாக இருந்தே பலரும் நல்ல பேர் வாங்கிருவாய்ங்க. ஆனால் சுறு சுறுப்பா இருந்து அந்த சுறு சுறுப்பு காரணமாவே கெட்ட பேர் வாங்கற பார்ட்டிங்க யாருன்னா மேஷ ராசிக்காரங்க தான். (உங்க கொலிக்ஸ் உங்களை சரியான பிட்பிட் சமாசாரம்/ அலிகிரி/ஆத்திரம் பிடிச்சவருனு கிண்டலடிப்பாய்ங்க)
போதிய ப்ளானிங் இல்லாம சக்திக்கு மிஞ்சின வேலைகளை இழுத்து விட்டுக்குவாங்க. மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க.வேகம் இருக்குற அளவுக்கு விவேகம் இருக்காது.முன்னணில, முன்னுதாரணமா திகழனும்னு பார்ப்பாய்ங்க. உலகம் பிழைக்க விடுமா? விடாது. ச்சோ போராட்டமயமான வாழ்க்கை. நல்ல தலைமை குணங்கள் உள்ள  எம்.டி, மேனேஜர், பிறவித்தலைவர்கள் கண்ல நீங்க பட்டிங்கனா  உங்க மாதிரி பார்ட்டிங்கள  விடவே மாட்டாய்ங்க. ஒரே அமுக்குத்தான்.
2.ரிஷபம்:
இவிக குழந்தை மாதிரி .அல்ப்ப சந்தோஷி. எதிராளி   கொஞ்சம் போல அக்கறையோட பேசினா போதும்   மனசுல  எதுவும் வச்சிக்காம உள்ளது உள்ளபடி தாராளமாக பேசி பேசி வம்பில் மாட்டிப்பாய்ங்க. ஆனா போக போக மித பாஷியாயிரவும் வாய்ப்புண்டு. (முக்கியமா பெண்கள்)  கொடுத்த பேச்சை காப்பாத்தனும்னு  துடிப்பார். இதையே பிறரிடமும் எதிர்பார்த்து ஏமாறுவார்.குடும்பத்துடன் அதீத இணைப்பு,பிணைப்பு இருக்கும். அனைவரையும் அணைத்தெடுத்து முன்னேற்ற நினைப்பாரு. . தவறுகளை கண்டிப்பார். இதனாலேயே குடும்பம்,உறவினர் மத்தியில் மிகப்பெரிய வில்லனாக  பெயரெடுக்கலாம். மாற்றங்களை விரும்பாத ராசி இது. செக்கு மாடு மாதிரி ரொட்டீனுக்கு பழக்கப்பட்டவுக.  பணம், பேச்சு, குடும்பம்னால்  வெல்லம். ஆனால் இயற்கை குரூரமானது எந்த ஜாதகர் எதை தன் உயிருக்கு சமமாய் பாவிக்கிறாரோ அந்த விசயங்களிலேயே ஆப்பு வைக்கும். எனவே  இந்த  விசயங்களில் முடிந்தவரை தங்கள் மைண்ட் செட்டை மாற்றிக்கொள்வது நல்லது. இதனால் பொருளாதார விசயத்தில் சற்று வீக் ஆனாலும் குடும்ப உறவுகளில்  அபிவிருத்தி உண்டு. பேச்சை குறைக்கவும், குடும்பத்தாருடனும் சற்று நீக்கு போக்காக நடப்பது நல்லது. அதிகம் அட்டாச் மெண்ட் வேண்டாம்
3.மிதுனம்:
மிதுனம் என்ற வார்த்தை மைதுனம் என்ற பதத்தில் இருந்து வந்தது. மைதுனம் என்றால் கடைதல் என்பது நேரடி வார்த்தை .ஆனால் உடலுறவு என்ற அர்த்தத்தில் தான் இது புழங்குகிறது. மதனன், மன்மதன் இத்யாதி பதங்களுக்கெல்லாம் இதுதான் வேர்சொல். 1967 வருட வாக்கில் அச்சான பஞ்சாங்கம் எதையாவது எடுத்து பார்த்தால் மிதுன ராசிக்கான படமாக கட்டித்தழுவியபடியிருக்கும் தம்பதிகள் படம் தான் அச்சாகியிருக்கும். இப்போதெல்லாம் சாஸ்திரத்துக்கு ஒரு ஆண்,ஒரு பெண் படம் அச்சிடுகிறார்கள். தங்கள் வாழ்வில் செக்ஸ் என்பது மிக முக்கிய இடம் வகிக்கும். அதீத அனுபவங்களாலோ அனுபவங்களுக்கு ஏங்குவதாலோ மனம் செக்ஸையே சுற்றி சுற்றிவரும். அதே போல் உடன் பிறப்புகளின் எஃபெக்டும் அதிகம். அதிகமாக ட்ராவல் செய்வர். இரண்டு பெயர்,இரண்டு விலாசம் ,இரண்டு தொழில் இருக்கலாம். இவிக வாழ்க்கைல மரண சமானமான ஒரு  துக்கமோ, நஷ்டமோ வந்தா  உடனே  ஒரு சொத்து வாங்கற அமைப்பு ஏற்படும். பட்டுனு ஒரு லிஃப்ட் கிடைக்கும். தூர தேசத்துலருந்து உதவி வரும்.
4.கடகம்:
தங்கள் பிரச்சினைகளில் அதிகம் மானசிகமானவையாகவே இருக்கும். "என்னமோ தோணுச்சு செய்தேன் எனும் ரகம்"
முக்கியமாக அவ்வப்போது மூட் அவுட் ஆதல், எளிதில் எரிச்சல்,கோபம், தாய்வழியில் நட்டம், ஜல கண்டம், சீதள் நோய்கள், நுரையீரல், சிறு நீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை ஆகியன மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும். சில நேரங்களில் மித மிஞ்சிய தைரியம், சில நேரங்களில் இனம் புரியாத பயம் அலைக்கழிக்கும்.

செய் தொழிலில் ஸ்திரத்துவம் இராது. இடமாற்றம் ,சீட் மாற்றம் இருக்கும். இந்த வருடம் விட்டுரலாம்,அடுத்த வருடம் விட்டுரலாம் மாதிரியே இருக்கும். தொழில் ஆர்வமும் 15 நாள் ஓகோ, 15 நாள் அடச்சீ என்றாகிவிடும்.
மனப்போராட்டங்களால் வரும் நோய்கள் வரலாம். உ.ம் வீசிங்க்,(இழுப்பு) ,பி.பி.அல்சர், இத்யாதி
ஜாதகரின் உடல் திடீர் என்று புசுபுசுவென்று கொழுத்து திடீர் என்று ஒல்லியாகிவிடுவார்..இவருக்கு அடிக்கடி சளி பிடித்தல்,திடீர் என உடல் சூடு அதிகரித்தல், திடீர் என்று அதீத உற்சாகத்துடன் செயல்படுதல், திடீர்ன் என்று மந்தத்தன்மைக்கு ஆளாதல் ஆகிய குணங்கள் இருக்கும்.
ஜாதகர் சில நேரங்களில் கஞ்சனாகவும் ,சில நேரங்களில் வீண் செலவுகள் செய்பவராகவும் இருப்பார். அமாவாசைக்கு பிறகான 10 நாட்கள் சுப செலவுகள் செய்வார். பவுர்ணமிக்கு பிறகான 10 நாட்கள் வீண் விரயம் ஏற்படலாம் அல்லது மிச்சம் பிடிக்க பார்த்து அல்லல் அலைச்சலுக்கு ஆளாகலாம்.
சந்திரன்,ஆறு,கடல்,முகம் பார்க்கும் கண்ணாடி, தண்ணீர் இவற்றை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? இவற்றின் ப்ளஸ், மைனஸ் பாயிண்டுகள் ஜாதகரில் அப்படியே அமைந்திருக்கும். உம்: சந்திரனை போலவே இவரது கவர்ச்சி,உடல் நலம்,ஞா.சக்தி அனைத்து வளர்பிறையில் ஒரு விதமாக,தேய் பிறையில் ஒருவிதமாக இருக்கும். ரெண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை புதிய மனிதராக மாறுவார்.
5.சிம்மம்:
ஜாதகரில் லேசான சோம்பல், ஓவர் கான்ஃபிடென்ஸ், சிடு சிடுப்பு இத்யாதி இருக்கலாம். தந்தையுடன் ஒரு வித விரோதபாவம், தாய் மீது அதீத பற்று இருக்கலாம். பற்றுனு கூட சொல்ல முடியாது டிப்பெண்டன்ஸ். இந்த குணத்தால எதிர்காலத்துல அம்மாவுக்கும் மனைவிக்கும் தகராறு வரச்ச ரெம்ப குழம்பி போவாங்க ( நாம எப்பவும் பெண்டாட்டிக்கு ஜே தானே)  .சிலர் தாய்க்காக மனைவியையே பிரியவும் ப்ரிப்பேர் ஆயிருவாய்ங்க. இவிக பணமோ காசோ கடனா கொடுத்தா திரும்பறது கஷ்டம்.
தான குணம், நடுவயதில் 100 % டிசிப்ளின்  புகழ்ச்சிக்கு மயங்கும் தன்மை , யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என்ற எண்ணம் இத்யாதிக்கும் இடமுண்டு . அதுக்கேத்தாப்ல இவிகளை கேள்வி கேட்கிற நிலைல உள்ளவுக சீக்கிரமே மொக்கையாயிருவாய்ங்க. கோவில் குளம்,அபிசேக ஆராதனைகளை விட கடமை உணர்வு,உழைப்பு ஹ்யூமானிட்டியும் மட்டுமே ,மனிதனை இறைவனுக்கு நெருக்கமாக்கும் என்ற உணர்வு இருக்கும். சூரியனை பற்றி சைண்டிஃபிக்காக எடுத்து சொல்லி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கனும். அதிகாலை 6 முதல் மதியம் 12 வரை இவருடைய பீக் ஹவர்ஸ். (அனுகூலம்) மாலை முதல் படிப்படியாக டல்லடிக்க ஆரம்பிப்பார். இவிக குடியுள்ள வீட்டுக்கு எதிர்க்க வீடு இருக்காது. இருந்தாலும் பூட்டிக்கிடக்கும்.திறந்திருந்தா எ.வீட்டுக்காரன் ஷெட்.
6.கன்னி:
கன்னி குறித்து சொல்லவேண்டுமானால் மூன்றே வார்த்தைகள் தான் . கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார். இவர் பெண்ணாயிருந்தால் புகுந்த வீட்டிலும் இதே நிலை ஏற்படும். கணிதம், ஜோதிடம்,மருத்துவ துறைகள்ள ஆர்வமிருக்கும்.பப்ளிக் ரிலெசன்ல புலிங்க.ஆனால் புலி தன் குட்டியை தானே தின்னுர்ராப்ல தன் செட்டுக்குள்ள இருக்கிறவகளையே லொள்ளு பண்ண ஆரம்பிச்சுருவாய்ங்க
7.துலாம்:
பிறந்த ஊரில் இருந்தவரை குடத்திலிட்ட தீபம். அதை விட்ட பின் நல்ல முன்னேற்றம். வாழ் நாள் முழுவதும் பொருளாதாரம்ஆட்டை தூக்கி மாட்டில் போடுவதாகவே இருக்கும். தங்கள் வாழ்வில் ஃப்ரெண்ட்,லவர் ,பார்ட்னர்களின் இம்பாக்ட் அதிகம். நல்லதோ கெட்டதோ அவர்களாலேயே நடக்கும். எதிரி வீட்டில் பெண் எடுத்தல் அ பெண்ணெடுத்த வீட்டாரோடு விரோதம் ஏற்படுதலும் நடக்கலாம். சேமிப்பு முக்கியம். அதையும் விற்க முடியாதபடிக்கு பதிவு செய்வது நல்லது. கடைசி காலத்தில் அனைவராலும் திரஸ்கரிக்கப்பட்டு வாழவேண்டி வரும்.டேக் கேர்இளமையில் வறுமை வாட்டினாலும்  மத்திம வயதில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் . என்றாலும் கடைசிகாலத்தில் ஏழ்மையை அனுபவிக்க வேண்டிவந்துவிடும். இதற்கு காரணம் அந்த வயதிலான தங்கள் பிடிவாதம், யாருடனும் ஒத்துப்போகாமையாகவே இருக்கும்.தங்கள் பேச்சின் மீது தங்கள் மனிதர்கள் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். இதற்கு தாங்களும் காரணம்தான். ஆட்டை தூக்கி மாட்டில் போடும் ரொட்டேஷன் கிங்க் தாங்கள். ஏறினா ரயில் இறங்கினா ஜெயில் என்பார்களே அதுமாதிரி. ( சித்தூர் பாஷைல சொன்னா உட்டாலக்கடி பட்டாபி) எனவே சில சமயம் கொடுத்த வாக்கை காப்பாற்றியிருக்கமாட்டீர்கள்.
8.விருச்சிகம்:
இவர் என்னதான் பொறுமையாய் இருக்க நினைத்தாலும் சூழ் நிலை இதை அனுமதிக்காது. இவரது பேச்சு எதிராளிக்கு  மனதுக்கு வருத்தம் தருவதாய் இருக்கும். இவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கலாம். (புகை, தூசு, மன அழுத்தம் ஆகாது) இவருக்கு யுத்தம் என்றால் வெல்லம். யாரேனும் ஒருவருடன் இவருக்கு விரோதம், யுத்தம் இருக்கும் வரை ஆக்டிவாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். எதிரி ஒழிந்துவிட்டால் இவர் டீலாகிவிடுவார். இவருக்கு சிறுவயதில் அம்மை, கட்டிகள் போன்ற பிரச்சினைகள் வந்திருக்கலாம் அ உயரமான இடத்திலிருந்து தவறி விழுதல், மாடு முட்டுதல் , எலக்ட் ரிக் ஷாக், தீவிபத்து போன்றவையும் நடந்திருக்கலாம். இவர் பிறந்த பிறகு மாடு கன்று நஷ்டமாதல், நிலம் பறி போதலும் நடந்திருக்கலாம்.விருச்சிகம் அக்னி தத்துவ லக்னம். எனர்ஜி ஜெனரேட் ஆயிட்டே இருக்கும். அதை நீங்க யூஸ் பண்ணலேன்னா நாஸ்திதான். இதனால மன அழுத்தம் ஏற்படலாம். ஷுகர் வரலாம். என் அட்வைஸ் என்னன்னா ஃபிசிக்கல் எக்ஸர்சைஸ் கட்டாயம். இன்னொரு விஷயம் பப்ளிக் லைஃப்ல மட்டும் வராதிங்கண்ணா. பிஹைண்ட் தி ஸ்க்ரீன் பெட்டர்.
9.தனுசு:
ஓரளவு ஃபோர் சைட்டட் நெஸ், சேமிப்பு, எதிர்கால சிந்தனை உள்ளவர்தான். ஆனால் பணம் கொடுத்து வைத்து ஏமாந்தவர்கள், போட்டு வைத்து ஏமாந்தவர்கள், சொத்து வாங்கி வில்லங்கத்தில் மாட்டுபவர்களில் அதிகம் பேர் தனுசு ராசி காரர்கள் தான். திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்ற கொள்கை கொண்டவர்கள் இவர்கள். அதே போல் தீர்த்த யாத்திரைகள் புண்ணிய ஷேத்திரங்களுக்கு செல்லுதலிலும் ஆர்வம் உள்ளவர்கள். நீங்க எதிர்காலத்துல குரு ஸ்தானத்துல இருந்து  நாலு பேருக்கு நல்லது சொல்லவேண்டிய பார்ட்டி. அதனால இளமைல கெட்ட ஆட்டம் போடவும் வாய்ப்புண்டு. சிலர் மத்திம வயசுல கூட டபுள் ஆக்டு கொடுப்பாய்ங்க. ஒரு பஞ்சாயத்து கெட்டுப்போகனும்னா இவிகளை விட்டா போதும் வெகண்டையா பேசி விவகாரத்தை முதலுக்கு கொண்டு வந்துருவாய்ங்க. இவிக லைஃப்ல தந்தை,தந்தை வழி சொத்து ,இவர் சேமிப்பு, இவர் வாங்கின சொத்து,தீர்த்த யாத்திரைகள்,தூரபிரயாணங்கள், தூர தேசத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இதுக்கெல்லாம் முக்கியத்துவம் இருக்கும். இவிகளுக்கு ரெண்டாமிடத்ததிபதி சனிங்கோ. அதனால இந்த வருசம் வந்த லாபத்தை இந்த வருசம் சாப்பிடற யோகம் கிடையாது. எட்டுவருசம் கழிச்சு அழுது புரண்டு  ரிட்டர்ன் வாங்கி  சாப்பிடுவாய்ங்க.
10. மகரம்:
கருமமே கண்ணாயினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தங்கள் விஷயத்தில் இது 100 சதம் உண்மை. என்ன வேலை செய்கிறோம். இதனால் யாருக்கு பலன் கிடைக்கும், இதனால் தனக்கென்ன லாபம் என்பதெல்லாம் உங்கள் மைண்டில் இருக்காது. சற்றே தாமசம், மந்தத்தனம் இருக்கலாமே தவிர உழைப்புக்கு அஞ்சும் கேள்வியே இல்லை. இது எந்த அளவுக்கு இருக்கும் என்றால் குளியல்,சாப்பாடு,சுத்தம் பற்றி கூட கண்டு கொள்ள மாட்டீர்கள்.அதே சமயம் ஏதோ ஒரு கலையில் ஆர்வம், திறமை இருக்கும். பேச்சு குறைவாகவே இருக்கும். கணவருடனான இவரது நெருக்கம் ஏற்ற இறக்கங்களுடன்  இருக்கும். ஒற்றைத்தலைவலி,பல்,எலும்பு,முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம். சாஸ்திர சம்பிரதாயங்களை தன்னிச்சையாக (பிரத்யேக ஆர்வமோ, பிடிப்போ இல்லாமலே)  கன்டின்யூ பண்ணுவாய்ங்க.
11.கும்பம்:
என்னைக்கும் எதுவும் சுத்தமா தீர்ந்து போகாது (செல்வம்,செல்வாக்கு முதலியவை) எவ்ள கஷ்ட காலம் வந்தாலும் கொஞ்சமாச்சும் மிஞ்சும். ரகசியங்கள் இருக்கும். எதை செய்தாலும் நமக்கென்ன லாபம்னு பார்த்து செய்யற நேச்சர் இருக்கும். (இளமைல இதுக்கு மாறா இருந்திருக்கலாம்) கொஞ்சம் போல சோம்பல் இருக்கலாம். வெட்டி பந்தா, நாவல்ட்டீஸ்,ஃபேன்சி, காஸ்மெடிக்ஸ்ல விருப்பம் இருக்காது. பர்ப்பஸ் சர்வ் ஆகுதானு மட்டும் பார்க்கிற குணம் இருக்கும். வாழ் நாள் முழுக்க இரும்பு,ஆயில், எண்ணெய் கறை உங்களை விடாது. அல்லது யூனிஃபார்ம் போடற வேலை . நீங்க என்னதான் லாபம் பார்த்து இறங்கினாலும்  நேரம் கெட்டதா இருந்தா நஷ்டம் வரத்தானே செய்யும். உங்க லைஃப்ல உங்க மூத்த சகோதரன்,சகோதிரியோட ரோலுக்கு ரெம்ப முக்கியத்துவம் இருக்கும். எவன் எக்கேடுகெட்டுப்போனா என்ன என் கூலி எனக்கு கிடைச்சதாங்கற மென்டாலிட்டி இருக்கும். இருந்தாலும் படக்குனு அதிகாரி, சூப்பர் வைசர்கிட்ட முட்டிக்குவிங்க.
12.மீன ராசி:
இது இவரோட கடைசி பிறவி. இவருக்கும் பிறருக்கும் அடிப்படையிலயே வித்யாசம் உண்டு. நாமெல்லாம் பொருளீட்டி ,கருமங்களை கூட்டி, மேற்படி கருமங்களை ஒழிக்க பிறவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதில் குறியாய் இருப்போம்.ஆனால் இவர் ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாக ஆரம்பகாலத்தில் நம்மை போலவே பொருளீட்டினாலும் உள் உணர்வு உந்த ஈட்டிய பொருளை விரயம் செய்து கருமம் தொலைத்து, பிறவியை தவிர்ப்பதிலேயே குறியாய் இருப்பார். பிரயாணங்கள்ள ஆர்வமிருக்கும் (அதுவும் டெஸ்டினேஷன் இல்லாத பயணம், நோக்கமில்லாத பயணம், ரிட்டர்ன் ஃபேருக்கு பணமில்லாத பிரயாணமாவும் இருக்கலாம்).இவிக பாதம் / நடை கொஞ்சம் விசித்திரமா இருக்கும்.  பிடி கொடுத்து பேச மாட்டாய்ங்க. எதுலயும் பட்டும் படாமயே இருப்பாய்ங்க(குடும்ப விஷயத்துல கூட)