பொடிமாசு -தூள் பக்கோடா -செய்தித்துளிகள் -துணுக்கு தோரணம் இப்படி தலைப்பு எதுவா இருந்தா என்ன..ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத மேட்டரை பிட்டா தூக்கி போட்டுட்டு போயிர்ரது ஒரு ஸ்டைல்.
இதை ஏற்கெனவே ட்ரை பண்ணியாச்சு.ஆனால் போனியாகலை. இப்ப மறுபடி..
*சிரஞ்சீவி தன் கட்சியை காங்கிரசோட சங்கமமாக்கிட்டாரு. அவரு எந்த பதவியையும் எதிர்பார்க்கலையாம். ( மத்திய மந்திரிசபை விரிவாக்கம் எப்போ?) அதை கட்சிங்கறத விட கம்பெனினு சொல்லலாம். கட்சி டிக்கெட்டையே ப்ரிமியம் ஷேர்ஸ் கணக்கா வித்த பார்ட்டி .இப்ப கட்சிய. தூத்தேறிக்க..
*டெலிகாம் ஊழல்ல கலைஞருக்கு பங்கிருக்குனு சொன்ன சு.ஸ்வாமிக்கு தாத்தா நோட்டீஸ் - குப்பைல போடுவேன் -சு.ஸ்வாமி. அய்யரு இப்ப கூட அஞ்சு எம்.எல்.ஏ கொடுங்கனுதான் கேட்கிறாரு.பெட்டிசன் பத்ம நாபம்
* மானில அணைத்திட்டங்களை தேசீய அங்கீகாரம் கேட்டு ஜகன் பாதயாத்திரை :அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு. அப்பா கோடுதான் போட்டு வச்சாரு ( சிரஞ்சீவிய காங்கிரஸ்ல கரைக்க) புள்ள ரிமோட்ல கோலமே போட வச்சிருச்சுங்கோ.
* ஜகனோட கட்சிக்கு அறிவிக்கப்படாத கொ.ப.செ ரோசாதான். சொம்மா சொல்லக்கூடாதுங்கண்ணா தூள் கிளப்பறாய்ங்க. பி.வி நரசிம்மராவ் பி.எம் ஆ இருந்தப்ப சோனியா திவாரி காங்கிரஸ்க்கு பிரசாரம் பண்ண கதையையெல்லாம் ஆரு போட்டுக்கொடுத்தாய்ங்க?
*எஸ்.வி சேகர் காங்கிரஸில் சேர்ந்தார் - தபார்ரா அப்ப அடுத்து தமிழகத்துல காமராஜர் ஆட்சிதான். போங்கடாங்கொய்யால..
*சென்னையில் விரைவில் மினி பஸ் : ஒரு வேளை " கவர் " போக்குவரத்தை இதுலயே முடிச்சுருவாய்ங்களோ
* குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம், ஒரு வருடம் ஜெயில் : அது சரி பப்ளிக் மீட்டிங்ல பேசினா?
* செக்ஸ் ஜோதிடர் வீட்டில் பெண்ணை ஆபாச படம் எடுத்த ரகசிய அறை கண்டுபிடிப்பு: பாவம் அவிக "வாஸ்து" சரியா இருக்கானு பார்த்தாரோ என்னமோ?