Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Friday, November 18, 2016

நான் கைது செய்யப்பட்டால்

அண்ணே வணக்கம்ணே !
உங்கள கைது பண்ற அளவுக்கு என்னங்க ஆயிருச்சுன்னு கேப்பிக சொல்றேன்.
இன்னைக்கு நாடே பத்தி எரியற கரன்சி ரத்து மேட்டரை நாமதேன் 1986 லருந்து தனிப்பட்ட வகையிலயும் 1992 ஜன சக்தி இதழ்ல பிரசுரமான பிறவு அஃபிஷியலாவும் புலம்பிக்கிட்டிருக்கம்.

இது நம்ம ஐந்து அம்ச திட்டத்துல ஒரு அம்சம்  அவ்ளதேன். இந்த செனேரியோல 2014 ஜூலையில மோடிக்கும் அனுப்பினம் . ஆர்.டி.ஐ படி கேட்டதுல 2015 ,மார்ச்சுல பிரதமர் அலுவலகம் "ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்"னுட்டு ஒரு பதிலை அனுப்பினாய்ங்க.

நாம பிரதமருக்கு அனுப்பின கன்டென்ட்லருந்து ஒரு சில அம்சங்களை அவிக சுட ஆரம்பிச்சாய்ங்க. என்னடா இது இமிசைன்னு பாம்லெட்டா /பாக்கெட் புக்கா போட்டு சனத்துக்கும்-வி ஐ பிங்களுக்கும் யதேஷ்டமா அனுப்ப ஆரம்பிச்சம்.

இதன் தொடர்ச்சியா லோக்சபா ஸ்பீக்கருக்கும் அனுப்பினம் (தமிழ் 50/தெலுங்கு 50) .தமிழ் தெலுங்கு எம்பிக்களுக்கு கொடுக்க  சொல்லி  கேட்டிருந்தம் .கண்டுக்கல. ஆர்.டி.ஐ படி கேட்டம்.  ரிப்ளை பாக்ஸை காலியா விட்டு பதில் அனுப்பினானுவ.

இந்த நிலையில கடந்த 8 ஆம் தேதி கரன்சி ரத்து அறிவிப்பு வந்தது. செரி நம்மை மாதிரி பலரும் யோசனை சொன்னதா கதை பண்ணி ராமர் கோவில் சுண்டல் மாதிரி எதுனா லெட்டர் வரும்னு வெய்ட் பண்ணேன். வரல.

செவ்வாயோட செவ்வாய் நவ.15 ஆம் தேதி லோக்கல் ப்ரஸ் க்ளப்ல ப்ரஸ் மீட் வச்சு கிழி கிழின்னு கிழிச்சன். ஒரே ஒரு லோக்கல் சானல்ல மட்டும் வந்தது .

அவிக நம்ம திட்டத்தின் ஐந்து அம்சங்களையும் -மோடிக்கு நாம டோக்கனா நன்றி சொல்ற மேட்டரையும் மட்டும் எடிட் பண்ணி போட்டாய்ங்க. மத்த பத்திரிக்கை எதுலயும் மேட்டர் வல்ல.

ஆனால் போகவேண்டியவிக காதுக்கெல்லாம் நிச்சயமா போயிருக்கும் .போதாக்குறைக்கு முக நூல்ல வேற மொத்த ப்ரஸ் மீட்டையும் போட்டு நாஸ்தி பண்ணியாச்சு.

மோடியும் லேடி ஸ்டைலுக்கு வந்துட்டாப்ல இருக்கு. ஈரோட்ல ஆரோ ஒரு இஸ்லாமிய இளைஞரை கைது பண்ணியிருக்காய்ங்க. ஆக நாமளும் கைது செய்யப்படலாம். இது ஒரு சான்ஸ்.

அடுத்த சான்ஸு?? எங்க ஊரு சந்திரபாபு நாயுடு. கரன்சி ரத்து மேட்டரை மோடி அறிவிக்கிறதுக்கு சரியா ஒரு மாசம் மிந்தி அண்ணாத்த மோடிக்கு இதே மேட்டரை வலியுறுத்து லட்டர் போடறாரு.  நம்ம ப்ரஸ் மீட்ல இதையும் கிளிச்சம்.

கொய்யால 2016, ஜூலை 12 ஆம் தேதி நான் போட்ட லெட்டர்லருந்து சுட்டயா? பிச்சைக்காரன் சினிமா பார்த்தயா ? அல்லது தில்லியிலருந்து ரகசிய தகவல் வந்ததா இதான் கேள்வி.

இந்த ரெண்டு ஆப்பு போதாதுன்னு ஜெ'வுக்கு அப்போலோ முகவரிக்கு ஒரு வீடியோ மடலும் அனுப்பியிருக்கன்.

ஆக இந்த மேட்டர்ல   நாம கைதாக 3 சோர்ஸ் இருக்கு. ஒரு வேளை நெஜமாலுமே கைதானா நீங்க என்ன பண்ணனும்?

ஒன்னுமில்லை   ஃபேஸ்புக்ல நம்ம ஐடில இருந்து என் மவளோ /அல்லது நான் நம்பி பொறுப்பை ஒப்படைத்திருக்கும் அந்த ஐவரில் ஒருவரோ கைது தகவலை தெரிவிப்பாய்ங்க. அப்படி தெரிவிச்சதும்  அந்த பதிவையும் இந்த பதிவையும்  சகட்டுமேனிக்கு கச்சா முச்சான்னு ஷேர் பண்ணுங்க. போதும்.

அவியளா "ச்சீ ..போ"ன்னு வெளிய விடற வரை ஜாமீனும் கேட்கமாட்டம் -மன்னாப்பும் கேட்க மாட்டம். ஓகேவா? டீலா ! நோ டீலா !!

Monday, August 24, 2015

ஜெ'வுக்கு அனுப்பிய மெயில்

ஐயா !
இது மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அவர் வேட்பு மனுவில் அளித்ததாய் சொல்லப்படும் மெயில் ஐடிக்கு அனுப்பிய மெயில் . தயவு செய்து இதை முதல்வர் அம்மா கவனத்துக்கு கொண்டு செல்ல  தங்கள் இதழில்/தளத்தில்/டைம்லைனில் வெளியிட்டு பெரிய அளவில் பரப்பவும்.


____________
சித்தூர்,
விடுனர்
சித்தூர் முருகேசன்,
17-201,கும்மரா தெரு,
சித்தூர் ஆ.பி
பெறுனர்
மாண்பு மிகு தமிழக முதல்வர்
சென்னை

மதிப்பிற்குரிய அம்மா  !
வணக்கம்.  உங்களுக்கு தலைமை செயலகம், கட்சி அலுவலகம், கார்டன்
இல்லம்,பரப்பண அக்கிரஹாரா சிறைகளுக்கு அனுப்பியே பதில் இல்லாத நிலையில் -சபா நாயகர் பெயருக்கு 234 பிரதிகள் கூரியர் மூலம் அனுப்பியும் பதில் இல்லாத நிலையில்
ஏதோ "சாஸ்திரத்துக்கு" தரப்பட்ட இந்த மெயில் ஐடிக்கு மெயில் அனுப்புவதால்
பதில் கொடுத்துவிடப்போகிறீர்கள் என்று நம்ப நான் குழந்தை இல்லை.

அதே நேரம் என் முயற்சியில் நான் குறை வைப்பதே இல்லை.  நான் தங்களுக்கு
பல்வேறு முகவரிகளுக்கு  நான் அனுப்பிய மடல்களை கீழ் காணும் தொடுப்பில்
காணலாம்.

https://archive.org/details/swamy7867_gmail

இப்போது என்னை பற்றிய சிறு அறிமுகம்:

 நான் ஆந்திரத்தில் வாழும் தமிழன். என்னைப்பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல
வேண்டுமானால்  நான் ஒரு கனவு காண்பவன்.

என் கனவுகள் என்னை பற்றியவை அல்ல. இந்த நாட்டை பற்றியவை. நாட்டு மக்களை
பற்றியவை. அவர் தம் நல்வாழ்வு குறித்தவை.

என் கனவுகள் நிறைவேற ஆட்சியாளர்கள்/ நீங்கள்  மனம் வைக்க வேண்டும்.

கனவு காண்பதை 1986 லும் ,கனவுகளை ஆட்சியாளர்கள் பார்வைக்கு கொண்டு
செல்வதை 1998 லும் துவக்கி விட்டவன் நான்.

இவை தொடர்பாக நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அவற்றை விலக்கி வைத்து
லேட்டஸ்ட் அப்டேட் மட்டும் கீழே  தருகிறேன்.

மோடி பிரதமர் ஆகி 100 நாட்கள் நிறைவடைந்த தினம் ஒரு பிரதமர் நினைத்தால்
என்னெல்லாம் செய்யலாம் என்று ஒரு பதிவு போட்டேன்.

அதை ஆங்கிலப்படுத்தி மோடி அவர்களுக்கு தபால் மூலம் அனுப்பினேன்.
ஆரம்பத்தில் பதில் இல்லை.

பிறகு ஆர்.டி.ஐ மூலம் விண்ணப்பிக்க " we acknowledge the receipt of your
letter and it is kept on record" என்று ஒரு பதில் வந்தது.

இவற்றை (என் கனவுகள் -மற்றும் பிரதமர் அலுவலக பதில்) சிறு நூலாக
அச்சிட்டு தமிழ்/தெலுங்கு மக்களுக்கு இலவசமாக வினியோகித்து வருகிறேன்.

மோடிக்கு நான் அளித்த யோசனைகளை  கீழ் காணும் தொடுப்பில் காணலாம்
https://www.change.org/p/sri-narendramodi-suggestions-to-modi-for-skill-india
இவற்றில் மானில அளவில்  அமல் படுத்தக்கூடிய விஷயங்களை தாங்களே அமல் படுத்தலாம்.
மத்திய அரசு அமல் படுத்த வேண்டிய விஷயங்களை அதன் கவனத்துக்கு கொண்டு செல்லலாம்.

-

Wednesday, April 20, 2011

"ஜெ" தோற்பது உறுதி - ஜெயேந்திரர்

அண்ணா வணக்கம்ணா!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதின்னுட்டு  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சொல்ட்டாருங்கண்ணா. இன்னா நைனா ஒனக்கு மட்டும் ஸ்பெஷலா எஸ்.டி.டி போட்டு சொன்னாரான்னு கேப்பிக.சொல்றேன்.

தாளி..யாரு இந்த பார்ட்டி? இதுக்கு மிந்தி நாம அப்பப்போ எழுதிப்போட்ட பதிவுகளை ஒரு தாட்டி க்ளிக்கி பார்த்திங்கனா  இந்தாளோட பர்சனாலிட்டி தெரியவரும்.

http://kavithai07.blogspot.com/2010/05/vs.html
http://kavithai07.blogspot.com/2010/09/blog-post_12.html
http://kavithai07.blogspot.com/2009/09/blog-post_24.html

சுருக்கமா சொன்னா ..

இவரு போட்ட கெட்ட ஆட்டத்தை தட்டி கேட்ட சங்கரராமனை போட்டு தள்ள கூலிப்படைய ஏவினவர். அன்றைய ஜெ அரசால் கைது செய்யப்பட்டவர். பெரியாரின் சீடர் -அண்ணாவின் தம்பி கலைஞரோட காலை கட்டி ஓலை வாங்கி வெளிய வந்தவர்.

கொசுறு:
எழுத்தாளர் அனுராதா ரமணன் முன்னாடியே வேற ஒரு பார்ட்டியோட தக்ஜம் பண்ணி காட்டினவரு (ஆதாரம்: தமிழ் ஓவியா)  மூடை கிளப்பறாராம்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தோற்பது உறுதின்னுட்டு  காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சொன்ன தகவல்  நமக்கு எப்படி கிடைச்சதுன்னா கூகுலாண்டவர் புண்ணியத்துலதேன்.

கே.என் ராவ்.ங்கற பார்ட்டி தன்னோட ப்ளாக்ல எழுதியிருக்காருங்கோ அவர் இங்கிலி பீஸ்ல  பீசிக்கிற மேட்டரோட சுருக்கம்.

" ஜெயேந்திர சரஸ்வதி தில்லில இருப்பாரு - நீ அவரை சந்திச்சே ஆகனும்னு ஏப்ரல் மாசம் எல்.என்  எனக்கு தகவல் தெரிவிச்சாரு.போய் சந்திச்சேன். அப்போ ஸ்வாமி புன் சிரிப்போட இந்த தடவை அந்தம்மா தோற்கப்போறாய்ங்க - தி,மு.க அரசு ஏற்படும்"னு சொன்னாரு.

அடங்கொய்யால .. நீ இஷ்டாத்துக்கு கூத்தடிப்பே. கேள்வி கேட்ட சங்கர் ராமனை கூலிப்படை வச்சு போட்டு தள்ளிருவே ..ஒரு முதல்வருங்கற வகையில வாழ்க்கையில தான் செஞ்ச மிக குறைவான நல்லவேலைகளில் ஒன்னா உன்னை உள்ளே  தூக்கிப்போட்டா அது பஞ்சமா பாதகம். அதுக்காவ அந்தம்மா தோத்துப்போகனும்.

எச்சரிக்கை:
இந்த பதிவு போடப்பட்ட தேதி MAY 15, 2006 ஆம் தேதி
பதிவர் ஜெ.சரஸ்வதியை மீட்பண்ணது 2006 ஏப்ரல்,28

மேற்படி பதிவுக்கான தொடுப்பு இதோ http://vivekajyoti.blogspot.com/2006/05/shankaracharya-proved-right-woman-has.html
அல்லாம் சரி கே.என்.ராவு.. 2011 தேர்தல்ல அம்மா வரப்போறாய்ங்க - கும்மி எடுக்கப்போறாய்ங்கனு நேத்து முந்தா நேத்து ஜெயேந்திர சரஸ்வதி உங்களுக்கு ஏதும் சொல்லலியா?

Sunday, February 27, 2011

ஜெ -கலைஞர் - ஒரு ஜோதிட ஒப்பீடு



அண்ணா வணக்கம்ணா,
வழக்கமா பேர்பாதி போஸ்டை இங்கே போட்டு மீதிக்கு சைட்டுக்கு லிங்க் கொடுப்பேன். இன்னைக்கு ஐட்டத்துல தொடுப்புகள் அதிகம் . வெறுமனே கட் பேஸ்ட் பண்ணமுடியாது .அதனால அங்கயே ஆரம்பிச்சுருவம். அதுக்கு இங்க அழுத்துங்க.

Saturday, February 26, 2011

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்


அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட "வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்"னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா - அதாங்க ரூ 250)