Thursday, February 3, 2011

கிரக பலமும் கில்மாவும்: 1

அண்ணே வணக்கம்னே.. ஒவ்வொரு தொடரை முடிச்சதுமே " இத்தீனி நாளு எப்படியோ காலத்தை ஓட்டியாச்சு..இனி என்னத்த எழுதறது"னு ஒரு திகில் பரவும். ஆனால் பாருங்க முருகர் முக்தித்தருனு  அடியெடுத்து தர அருணகிரி நாதர் எழுதின மாதிரி,  வியாசர் சொல்ல சொல்ல  வினாயகர் எழுதின மாதிரி அதும்பாட்டுக்கு போய்க்கினே கீது.

எல்லாம் நல்லாருக்கு தம்பி.. எல்லாத்துலயும் கில்மாவை ஏன் கொண்டு சேர்க்கறேனு அண்ணன் மாருங்க சிலரு கேட்கிறாய்ங்க. நான் என்ன ஆருக்காச்சும் எச்சி உமிஞ்சி சத்தியமா பண்ணி தந்திருக்கேன்.கூகுல் ஸ்டேட்ஸ்ல  டாப் டென் போஸ்டு எதுனு பார்த்தா இந்த சமாசாரம்தேன் மொதல்ல நிக்கிது.

நான் எழுதறது நான் மட்டும் வாசிச்சிக்க இல்லை. நாலு பேரு ( ஹி ஹி..இப்பல்லாம் அபவ் 500 தேன்) படிக்கனும். சுஜாதால்லாம் போண்டாவுல விஷம் வச்சாய்ங்க. நான் கசப்பு மாத்திரைக்கு ஷுகர் கோட் தரேன். நல்லதை நல்லவழியிலயே சாதிக்கிறது ராமரோட ரூட்டு. நல்லதை கெட்ட வழியில போயாச்சும் சாதிக்கிறது கிருஷ்ணர் வழி.

என் நோக்கம் புனிதமானது. ஆன்மீகத்துக்கான முதல் படி கில்மாதான். "காமி கானி வாடு மோட்ச காமி காலேடு" காமத்தை கடந்து வரனும்னா ( ஓஷோ ) அதை என்னா ஏதுனு நிறுத்தி நிதானமா விசாரிச்சுரனும். சந்தோசத்துல உள்ளவன் அடுத்தவனையும் சந்தோசப்படுத்துவான். ஒன்னு நாலாகி நாலு நாற்பதான ஒட்டு மொத்த  சமூகமே சந்தோசமா மாறும். தெலுங்குல "சந்தோஷம் சகம் பலம்"னுவாய்ங்க.

மனுஷன் என்னா செய்தாலும் அதும்பின்னாடி இருக்கிற ரெண்டே உந்துதல் கொல்லுதல்,கொல்லப்படுதல். இது ரெண்டுமே  விழிப்பு,ஆழத்துடன் கூடிய செக்ஸுல சாத்தியம். ( காரே மூரேனு காஞ்ச மாடு கம்பங்கொல்லைல விழுந்த மாதிரி செயல்பட்டா செக்ஸுல கூட  இது சாத்தியமில்லாம போயிரும்)

செக்ஸ் மறுக்கப்பட்டா, செக்ஸ் தடை செய்யப்பட்டா,செக்ஸுல உண்மையான ஆர்காசம் கிட்டலின்னா அது வன்முறையா, பண வெறியா, பதவி வெறியா மாறி வெளிப்படுதாம். அதென்ன உண்மையான ஆர்காசம்னு கேப்பாய்ங்க.

ஆணுக்கு ஜஸ்ட் செமன் வெளிப்பட்டா அது ஆர்காசம்னு நினைக்கிறாய்ங்க. இது தவறு ஒரு முறை ஈடுபட்டா பத்து பதினைஞ்சு நாளைக்கு அந்த எண்ணம் கூட வரக்கூடாது. அப்பத்தேன் காரியம் முறைப்படி நடந்திருக்குனு அர்த்தம்.

குறைஞ்ச மார்க் வந்தவுக இம்ப்ரூவ்மென்டுக்கு கட்டின கதையா தினம் தினம் அதே  நினைவு வந்தா காரியம் முறைபப்டி நடக்கலைனு அர்த்தம்.பெண்கள் நிலை இதை விட மோசம். பார்க்க லேட்டஸ்ட் சர்வேக்கள்.

ஓகே ஓகே முன்னோட்டம் போதும் விஷயத்துக்கு வரேன். கடந்த 12 தினங்களாக  செக்ஸ் விஷயத்துல சக்ஸஸ் ஆக  துவாதசபாவங்கள் எப்படி இருக்கனும்னு விவரிச்சேன்.

நாளைலருந்து சக்ஸஸ் ஃபுல் கில்மாவுக்கு ஒன்பது கிரகங்களின் நிலை எப்படி இருக்கனும். ஒன்பது கிரகங்களும் கில்மாவுக்கு எப்படியெல்லாம் ஹெல்ப் ஃபுல்லா இருக்குனு பார்ப்போம்.

உடு ஜூட்