Showing posts with label parigaram. Show all posts
Showing posts with label parigaram. Show all posts

Saturday, June 25, 2011

சனிப்பெயர்ச்சி 2011 : 12 ராசிகளுக்கு பலன்+ பரிகாரம்

இது கடந்த பதிவின் தொடர்ச்சி.  நீங்கள்  இந்த பக்கத்திற்கு புதிதாக வந்தவரானால் பதிவின் கடைசியில் தந்துள்ள தொடுப்பை க்ளிக்கி அதையும் படித்தால் முழுப்பலனை அடையலாம்.

1.மேஷம்:
இவிகளுக்கு சனி 10,11 க்கு அதிபதி. இவர் 6 ல நின்னது பொதுவிதிப்படி ஓகேன்னாலும் சிறப்புவிதிகளின் படி நல்லதில்லை. ஆனாலும் சத்ருஜயம்,ரோக நிவர்த்தி ருணவிமுக்தி நிச்சயம் கிடைக்கும். அடுத்தவுகளை  இம்சை பண்ணி பார்க்கனுங்கற எண்ணம் வந்திருக்கும் .அதை விட்டுட்டு / குறைச்சுக்கிட்டு  கன்ஸ்ட் ரக்டிவா செயல்படறது நல்லது. மூத்த சகோதரம் நோய்வாய்படலாம்./அவிகளோட சண்டை சச்சரவு ஏற்படலாம்.

எச்சரிக்கை:
இப்பம் உங்க பார்கெய்னிங் பவர் அதிகரிச்சிருக்கும். இல்லேங்கலை.ஆனால் ரெம்ப ஓவரா போயிராதிங்க. அடக்கி வாசிச்சு காரியத்தை முடிச்சுக்கங்க.

2.ரிஷபம்:
இவிகளுக்கு சனி 9,10 க்கு அதிபதி. சிறப்பு விதிப்படி பார்த்தா அஞ்சுல வந்ததால சொத்து சுகம், வேலை வாய்ப்பெல்லாம் கிடைச்சிருக்கனும். ஆனால் பாருங்க பஞ்சம சனியாவே ஒர்க் அவுட் ஆகி ஆப்படிச்சிட்டதா தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்குல ஒரு பழமொழி உண்டு." பஞ்சம சனி வாடினி மஞ்சம் பக்கன கூட சேர்ச்சகுரா"

இதுக்கு அர்த்தம் "பஞ்சமத்துல சனி  உள்ள ராசிக்காரனை கட்டில் பக்க்த்துல கூட சேர்க்காதே" அவனுக்கு உதை கொடுக்க வ்ந்தவன் நம்ம முதுகுலயும் ரெண்டு போட்டுட்டு போயிருவானு அர்த்தம்.

உங்க ராசிய பொருத்தவரை இது வெறும் பஞ்சம சனி எஃபெக்ட் கிடையாது உங்க ராசிக்கு மட்டும் மரணத்துக்கு அதிபதியான குரு லாபத்துல உட்கார்ந்ததுதேன் ( மே,8 வரை ஒரு வருசமா)

இப்பம் அந்த குரு 12ல மறைஞ்சதால சொத்து,சுகம்,வேலை வாய்ப்பு எல்லாத்தையும் எதிர்பார்க்கலாம். பஞ்சம சனியால ஏற்பட்டுக்கிட்டிருந்த அவமானம், நிராசை, மான பங்கம்லாம் அவாய்ட் ஆயிரும். டோன்ட் ஒர்ரி

பரிகாரம்:
கிழிஞ்ச /சாயம் போன சட்டை, பிஞ்ச செருப்பு, டை போடாத தலைன்னு வேசம் கட்டுங்க பேர் புகழுக்கு ஆசைப்படாதிங்க. பசங்களை நொய் நொய்னு  கரிச்சு கொட்டாதிக


3.மிதுனம்:
இவிகளுக்கு சனி  8,9 க்கு அதிபதி .இவர் நாலுல இருக்காரு. இதனால நாளிதுவரை தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள் விஷயங்கள்ள பாதிப்பை தந்திருக்கலாம். சிலருக்கு வீடு மாற்றம் ,வாகனமாற்றம் ரேஞ்சுக்கு கூட போயிருக்கலாம். ஆனால் இப்பம் த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் வகையறாக்கள்ள சூப்பர் ஒர்க் அவுட் நடக்கலாம். சிலர் கட்டின வீடா வாங்கலாம். சிலர் லீஸுக்கு போகலாம்.

எச்சரிக்கை:
பழைய வீடு வாகனம் வாங்கும்போது ஓவரா பேரம் பேசாதிங்க.அடுத்த ரவுண்டுல வாரிசுகளுக்கு ஆப்பா முடிஞ்சுரும்.

4.கடகம்:
இவிகளுக்கு சனி 7,8 க்கு அதிபதி. இவர் 3 ல இருக்காரு. கண்ணாலமாகாதவுகளுக்கு திருமண முயற்சிலயும்/காதல் கத்திரிக்காய் பிசினஸ்லயும் அல்லல் அலைச்சல் ஏற்படலாம். கண்ணாலமாகியிருந்தா
பொஞ்சாதிக்கு/ அவிகளோட போறச்ச ஜாதகருக்கும் சின்னதா அடி ,கிடி கூட பட்டிருக்கலாம். அவிகளுக்கு பயணங்கள் அதிகம் செய்யவேண்டி வந்திருக்கலாம். இவிக உட்ன் பிறப்புகளுக்கு ஆப்பு. அவிகளோட நீயா நானா ரேஞ்சுலதேன் ரிலேஷன் இருக்கும்.

தைர்யே சாஹசே லக்ஷ்மி கணக்கா தைரியம் அதிகரிச்சிருக்கும். அதனால  லாபமா நஷ்டமாங்கறது நீங்க தைரியத்தை எக்சிபிட் பண்ண ஃபீல்டை பொருத்தது.

எச்சரிக்கை: தைரியம்னா ஓகே. அது குருட்டு  தைரியமா ஆயிராத பார்த்துக்கங்க. பொஞ்சாதி ஹெல்த்தையும் பாருங்க.

5.சிம்மம்:

இவிகளுக்கு சனி 6 ,7 க்கு அதிபதி. இவரு ரெண்டுல உட்கார்ந்தாரு. சலிச்சிக்கிட்டோ /  முனகிக்கிட்டோவாச்சும் வீட்டம்மா கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க. சில நேரம் உங்களையும் அறியாம உங்க பேச்சு எதிராளி மனசை புண்படுத்திரலாம். கொடுக்கல் வாங்கல்ல வாக்கு தவற வேண்டி வரலாம்.
இது வீடா வீட்டை பிடிச்ச பீடையா எங்கயாச்சும் ஒழியறேங்கற வசனம்லாம் கூட வாய்ல வந்திருக்கலாம். போயிராதிங்க. ங்கொய்யால சித்தூர்ல பத்து ரூபாய்க்கு கிடைச்ச அளவுச்சாப்பாடு இன்னைக்கு இருபத்தி அஞ்சு ரூபா. இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கிடைச்சுக்கிட்டிருந்த ஃபுல் மீல்ஸ் 40 ரூவா.

கடன் வாங்க வேண்டி வரும். கொடுத்தா திரும்பி வராது தெண்ட செலவும் ஆகும்.கண் பார்வையும்  மங்கும். டூவீலர்ல போறவுக தரமான கிளாஸ் யூஸ் பண்ணுங்க. மனைவி மனைவி வழி உறவினர் வகையறாவுலயும் விரயம் ஏற்படும்.

எச்சரிக்கை:
யாகாவாராயினும் நா காக்க.

6.கன்னி:
இவிகளுக்கு சனி 5 ,6 க்கு அதிபதி .இவரு ஜன்மத்துலயே உட்கார்ந்தாரு.  அஞ்சுக்கதிபதிங்கறதால ஒரு பக்கம் பணப்புழக்கம் அதிகரிச்சாலும் மந்த புத்தியும், சோம்பலும் இருக்கும். இது அளவுக்கு மீறிப்போயிராம பார்த்துக்கங்க. சொம்மா சுத்தம் சுத்தம்னு மெனக்கெடாதிங்க. ஃப்ரீயா உடு மாமேனு இருந்தா தோஷம் பரிகாரமாகும்.

கால்,ஆசனம், நரம்பு தொடர்பான பிரச்சினை வரலாம். அகால போஜனம் -அகால நித்திரை -பகல் கொட்டாவில்லாம் உண்டு.குடல் கல் குடலாயிரும். முகத்துல எண்ணெய் வழியும் முடி உதிரும் .சின்னவயசா இருந்தாலும் வெள்ளை முடி வரும். முகத்துல கிழட்டுத்தனம் வந்துரும். கூன் போட ஆரம்பிச்சிருவிக. எடக்கு மடக்கா பேசத்தோணும். கடன், நோய்,விரோதங்கள் வரலாம்.

பரிகாரம்:
சஃபாரி சூட் போடுங்க . அட்லீஸ்ட் ஒரே நிறத்தில் பேண்ட் சட்டை ,ஸ்டீல் செயின்,மோதிரம் ப்ரேஸ்லெட் போடுங்க.

7.துலா:

இவிகளுக்கு சனி 4,5 க்கு அதிபதி. விரயத்துல உட்கார்ந்தார். இதனால தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள் வகையறாவில் செலவுகள் கூடும். அல்லல் அலைச்சல் பெருகும். பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,
வகையறாவிலும் நிராசையே மிஞ்சும். வாரிசுகளே விரோதிகளா மாறலாம். அடக்கி வாசிங்க.

பரிகாரம்:
வீட்டு சன்னல் /கேட்டுக்கு, வண்டிக்கு  திருஷ்டி கயிறு சுத்திவிடுங்க. ரெம்ப சுத்தப்படுத்தாதிங்க. முக்கியமா பெட் ரூமை .  அம்மா இருந்தா அவிகளை நீல நிற உடை ,பொருட்களை அதிகம் யூஸ் பண்ண சொல்லுங்க. சனிக்கிழமை யாரேனும் உடல் ஊனமுற்றவருக்கு (கால் ஊனம் பெஸ்ட்)  சிற்றுண்டி அ உணவு கொடுங்கள்

8.விருச்சிகம்:

இவிகளுக்கு சனி 3,4 க்கு அதிபதி. லாபத்துல உட்கார்ந்தார். சகோதர சகோதிரிகளுடனான மனக்கசப்பு மாறும் அ உடன் பிறவா சகோதரர்/சகோதிரி  கணக்கா ஒரு பார்ட்டி உதவுவார்.அவரால உங்க தைரியம் ரெட்டிப்பாகும்.பிரயாணங்கள் அதிகரிக்கும். அதே சமயம் அவற்றின் மூலம் இரும்பு ஆயில் கிரானைட்ஸ் போன்ற சனி காரக அம்சங்களில் லாபம் கிட்டும். தாய்,தாய் வழி உறவு ,பூமி,வீடு ,வாகனம்,கல்வி,  தங்கள் பாசத்துக்குரியவர்கள் வகையறாவில் செலவுகள் குறையும். விட்டால் லாபமும் ஏற்படும். இரண்டாவது வீடு அ வாகனம் அமையவும் வாய்ப்பு.

9.தனுசு:
இவிகளுக்கு சனி 2 ,3 க்கு அதிபதி 10ல உட்கார்ந்திருக்காரு. இதனால உங்க தினசரி/மாதவருமானத்துல சுணக்கம் ஏற்படலாம் ( குறையாதுங்கோ - கைக்கு வர தாமதமாகலாம். அம்புட்டுதேன்)  உங்க பேச்சு குடும்ப உறுப்பினர்கள், தைரியம் ,சகோதரர்கள் வகையறாவில் தாமதித்த நன்மை ஏற்படலாம். ஆரம்பத்தில் இந்த அம்சங்களால் உங்கள் செய்தொழில்,உத்யோகத்தில் பாதிப்பே ஏற்பட்டிருந்தாலும் இந்த 6 மாத காலத்தில் நன்மை ஏற்படலாம்.

செய் தொழிலில் லொள்ளு பண்ணிக்கிட்டிருந்த வேலைகாரவுக இப்பம் நெல்லாவே கோ ஆப்பரேட் பண்ணுவாய்ங்க. இரும்பு ,ஆயில் தொடர்பான சனி காரகத்தொழிலில் இருந்தால் ரெட்டிப்பு யோகம்.அல்லது பார்ட் டைமாகவேனும் செய்யவேண்டி வரலாம். ஒரு சிலர் வீடு கட்டுதல்/மராமத்து ஆகியவற்றிலும் இறங்குவீர்கள்.

பத்தில் குரு வந்தா பதவிபறிபோகும் . சனி வந்தா? இன்னொரு லட்டு திங்க ஆசையானு கேப்பாரு. கேட்டுக்கிட்டே இருப்பாரு. அதுக்காவ எல்லாத்துலயும் தலைய விட்டுராதிங்க ( கெட்ட வார்த்தை இல்லிங்கண்ணா - பலான மேட்டரும் கடியாதுங்ணா )

10.மகரம்:
இவிகளுக்கு லக்னாதிபதி   தனபாவத்துக்கும்  ஆதிபத்தியம் பெற்று . 9 ல உட்கார்ந்திருக்காரு. சிறப்பு விதிப்படி இது தூளான அமைப்பு இதனால த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள், த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து, சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் வகையறாக்கள்ள தூள் கிளப்பனும்.

ஆனால் இவர் சனிங்கறதால  மனசு கஷ்டம் , அல்லல் ,அலைச்சல், அவப்பேர் , கிழிஞ்ச சட்டைக்காரன், சட்டை போடாதவன்,  தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சித்தேன் மேற்படி பலனை எல்லாம் பெற முடியும்.

உ.ம் ஜகன்மோக் ரெட்டி

இவிகளுக்கு நியாயமா வரவேண்டிய விசயம்லாம் சுவத்துல சூப்பர் சிம் மாதிரி ஒட்டியிருக்கும். ப்ரின்ஸ் ப்ளேட் வாங்கி சுரண்டிக்கிட்டு கிடக்கனும். ஆனால் இது கடைசி 6 மாசம்ங்கறதால மேற்சொன்ன பலன் எல்லாம் தேர்தலுக்கு முந்தின 6 மாசம் கணக்கா பெறவும் வாய்ப்பிருக்கு. முக்கியமா  தூர தேச உதவி -பயணம் ஒர்க் அவுட் ஆகலாம்.

11.கும்பம்:
இவிகளுக்கு லக்னாதிபதியே விரயாதிபத்யமும் பெற்று எட்டுல இருக்காரு. விரயாதிபதி எட்டுல நின்னா யோகம். அல்லல் அலைச்சல்,  செலவெல்லாம் குறைஞ்சு /தூக்கம் குறைஞ்சு /கில்மாவாலயே டயர்ட் ஆகனும். ஆனால் பாருங்க இவருக்கு லக்னாதிபத்யமும் இருக்கு . இதான் பிரச்சினை.

லக்னங்கறது ஜாதகத்துக்கு கடைக்கால் மாதிரி. ஜாதகத்துல எத்தீனி யோகம் இருந்தாலும் லக்னாதிபதி டுபுக்காகியிருந்தா ஒரு இழவும் கைக்கும் வந்து சேராது. அதே நேரத்துல ஜாதகம் சுமாரா இருந்தாலும் லக்னாதிபதியோட பலத்துல சமாளிச்சுர்ரதே இல்லை சாதிக்கவும் முடியும்.

லக்னங்கறது நம்ம நிறம்,மணம்,குணம், உடல்,மனம்,புத்தி ஆரோக்கியம்,பொறுமை,முடிவெடுக்கும் திறன்  எல்லாத்தயும் காட்டற இடம். மற்ற 11 பாவங்களோட சுருக்கம் இது.

அப்படியா கொத்த  லக்னாதிபதி எட்டுல மாட்டினா எம்.ஜி.ஆர் ப்ரூக்ளின்ல இருந்தப்ப அதிமுக காரன் நிலைதான்.  இதர கிரகங்களோட அமைப்பு ஒரு வீட்டின் ஒய்ரிங் மாதிரின்னா லக்னாதிபதிதான் ட்ரான்ஸ்ஃபார்மர்.

இதனால " நானே நானா மாறினேனா"னுட்டு பாடற மாதிரி ஆயிரும். நீங்க ஆனையாவே இருந்தாலும் எலியெல்லாம் டேட்டிங் கூப்பிடும். போகவேண்டிய நிலையும் வரலாம். சுருக்கமா சொன்னா உங்க சொத்த தேர்ட் பார்ட்டி அனுபவிக்க தேர்ட் பார்ட்டி கடனுக்கு நீங்க பதில் சொல்லவேண்டி வந்துரும்.

அடிபடுதல் ,சிறை செல்லுதல்,வீண் பழி சுமத்தல்,அபராதம் கட்டுதல், உறவில் அடிக்கடி டிக்கெட்டு அஷ்டமசனின்னா இதெல்லாம் சகஜமப்பா..

ஆறுதல்:
இவருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துட்டு 9 ஐ பார்க்கிறதால இந்த பிரச்சினைகள் ஓரளவு குறையலாம்

பரிகாரம்: இரும்பு தானம்,  நொண்டிக்கு அன்னதானம்,அஞ்சனேயர் வழிபாடு, முன்னோர் வழிபாடு

மீனம்:
இவிகளுக்கு சனி 12,11 பாவங்களுக்கு அதிபதி. 7 ல இருக்காரு. 7ங்கறது நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி ஆகியோரை காட்டுமிடம், இங்கன லாப,விரயாதிபதியான சனி நின்னதால  மேற்படி க்ரூப் ஆஃப் People  எண்ணிக்கை ஏறி இறங்கிக்கிட்டே இருக்கும். அவிகளால ஏற்படும் லாப நஷ்டங்களோட கிராஃபும் ஏறி இறங்கிக்கிட்டே இருக்கும்.

எச்சரிக்கை:
ஒன்னுக்கடிக்க போனாலும் தனியாவே போங்க. நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி ஆகியோருக்கு உரிய மரியாதைய கொடுத்து நீக்கு போக்கா நடந்துக்கங்க. இல்லாட்டி இவிகளே ஆப்படிச்சுருவாய்ங்க. ஒரு சிலர் போலீஸ் ஸ்டேஷன் வரை கூட போக வேண்டி வரலாம்.

2012ல இதே சனி எட்டுக்கு வரப்போறாரு. இந்த 6 மாசத்துல கும்பத்துக்கு நடக்கும்னு சொன்ன மேட்டர் எல்லாம் உங்களுக்கு 2012 + 13+6 மாசம்  ல நடக்க வாய்ப்பிருக்கு டேக் கேர். ரிஸ்கான வேலைகளையெல்லாம்  இந்த 6 மாசத்துல முடிக்க பாருங்க.

எதுக்குனா நல்லது இரும்பு தானம்,  நொண்டிக்கு அன்னதானம்,அஞ்சனேயர் வழிபாடு, முன்னோர் வழிபாட்டை இப்பமே ஆரம்பிச்சுருங்க. அஷ்டம சனியோட அட்வான்ஸ் எஃபெக்ட் கண்ட்ரோல் ஆகும். இருக்கிற பிரச்சினைகளை லாபமோ நஷ்டமோ முடிச்சுட்டு அஷ்டமசனிய ஃபேஸ் பண்ண ப்ரிப்பேர் ஆயிரலாம்.

உடுங்க ஜூட்.

பி.கு:
12 ராசியில மேஷத்துக்கு மட்டும் பலனை கொடுத்து ச்சூ காட்டி விட்டுட்டதால 11 ராசிக்காரவுகளூம் டெலிபத்தில பண்ண டார்ச்சர் தாங்கமுடியலிங்ணா.

மனசாட்சி:
ங்கொய்யால எப்படியோ திருப்பதி வேலைய தொடராம ஒரு மேட்டரையாச்சும் கம்ப்ளீட் பண்ணியே ..

Sunday, February 20, 2011

திருப்பதி -ஒரு ஜோதிட அலசல்


என்னங்கடா இது தமிழ் வாரப்பத்திரிக்கைகளை திட்டிதீர்க்கிற முருகேசனாரும் அவிக வழிக்கு போயிட்டாப்ல இருக்கு. சம்பந்தா சம்பந்தமில்லாத படத்தை வச்சிருக்காருனு நினைச்சுராதிங்க. பதிவின் கடைசியல காரணத்தை விளக்கியிருக்கேன்.

தமிழ் நாட்டு சனம் மொட்டையா(?) திருப்பதிங்கறாய்ங்க. ஆனால் இங்கன உள்ள வழக்கு ( பழக்கமுங்கோ) என்னடான்னா கீழே உள்ளதுதான் திருப்பதி. மலை ஏறிட்டா திருமலை. நான் இந்த பதிவுல பேசப்போறது திருமலையை பத்தித்தான்.

நமக்கு இந்த வேதம், இதிகாசம்,புராணம்லாம் ரெண்டாம் பட்சம் தான். நம்ம அளவுகோல் அனுபவம். அங்கன யாரேனும் ஒரு பார்ட்டி இருந்தா அந்தாளு என் கிட்டே பேசனும். என் பேச்சை கேட்கனும் (ஐ மீன் ஃபாலோ பண்றதில்லை -ஹியர் பண்ணனும்) ரெஸ்பாண்ட் ஆகனும். இல்லாட்டி ஆள விடுதேன்.

ஆன்மீகத்துல உள்ள இம்சை என்னடான்னா தன் ஆடையை தொட்டு சொஸ்தமடைந்த பெண்ணுகு ஏசு நாதர் சொன்னாரே "உன் விஸ்வாசம் உன்னை சொஸ்தமாக்கியது"ன்னு அப்படி ஆன்மீகத்துல 2+2ல்லாம் கிடையாது. தாளி ஆளுக்கொரு விடையை கொடுத்து மண்டை காய வச்சுரும்.

ஆனா ஜோதிடப்பார்வையில நவகிரகங்களுக்கும் நைன் இன் ஒன் பரிகாரம் ஏழுமலையான் தரிசனம். எப்படின்னு கேப்பிக.சொல்றேன்.

மலை மேல இருக்கிறதால சூரியனுக்கு. ( ஆனால் நோகாம பஸ்ஸுல போயி இறங்கிட்டா சூரியனுக்குரிய பரிகாரம் ஒர்க் அவுட் ஆகாது. மணிக்கு மணி பெருமாளுக்கு அலங்காரம் மாத்திர்ராய்ங்க.( இன்ஸ்டேபில் பொசிஷனுக்கு அதிபதி சந்திரனுங்கோ நினைச்சப்பல்லாம் கண்ணாலம் (முகூர்த்தகாலத்துக்கு அதிபதி சந்திரனுங்கோ). அப்பாறம் கச்சாமுச்சானு தீர்த்தங்கள் இருக்கு. ( சந்திரன் ஜலகாரகன்) அதுலயெல்லாம் தீர்த்தமாடினா சந்திரனுக்கு பரிகாரம். அங்கன இந்த நிமிசம் பார்த்த முகத்தை அடுத்த நிமிசம் பார்க்கமுடியாது.

நடை பாதையில அப்பப்போ புலி,சிறுத்தை எல்லாம் ஹலோ சொல்லுதாம்.. ( குரூர மிருகங்களுக்கு அதிபதி செவ்) . நீங்க போன தினம் புலி,சிறுத்தை வந்தாலோ வந்து போயிருந்தாலோ செவ்வாய்க்கு பரிகாரம். மேலும் பெருமாளொட கை போஸ்ச்சரை பார்த்து உள்ளாற வேல் இருந்தது.பிடுங்கிட்டானுவ அதனால அது முருகன் தானும் சொல்றாய்ங்க. செவ்வாய்க்குரிய கடவுள் முருகன்.

பிரகார சுவர்ல பார்த்தா சிங்கம்லாம் இருக்கும். அதனால உள்ளாற இருக்கிறது சக்தின்னும் சிலர் அடிச்சு சொல்றாய்ங்க. ராகுவுக்குரிய தேவதை துர்கை. அதனால ராகுவுக்கும் பரிகாரம்.எவனேனும் சினிமாக்காரன் வந்து ப்ரேக் தரிசனம்னுட்டு க்யூ காம்ப்ளெக்ஸ்லயோ,க்யூ லைன்லயோ கூடுதலா ஒரு மணி நேரம் மாட்டிக்கிட்டா இன்னம் கொஞ்சம் காட்டமான பரிகாரம்.

அப்பாறம் இன்னொரு மேட்டர் அழுக்கு போக குளிச்சவனில்லேங்கற மாதிரி திருப்பதி போய் ஏமாறாம வந்தவுக கிடையாது. எந்தளவுக்கு ஏமாந்தா அந்த அளவுக்கு பரிகாரம்.

அதே மாதிரி அய்யருங்க கிட்ட ஏமாந்தாலோ , அரசியல் வாதிகள்,மந்திரிகள் காரணமா காத்திருப்பு அதிகமானாலோ குருவுக்கு பரிகாரம். உள்ளாற உள்ளது சக்திங்கறாய்ங்க. சக்தி வேறே சிவம் வேறேன்னு இல்லை.அரியும் சிவனும் ஒன்னு இதை அறியாதவன் வாயில மண்ணுன்னு கேள்விப்பட்டிருப்பிங்க. குருவுக்குரிய கடவுள் ஷிவா . ஆக திருப்பதி போறது குருவுக்கும் பரிகாரம்

சனின்னா அடிமைப்படல்,சிறைப்படல் ( க்யூகாம்ப்ளெக்ஸ்ல இதான் நடக்குது) மொட்டைபோடற இடத்துல , பொதுக்கழிவறையில டாக்சி ட்ரைவர்கிட்டேல்லாம் ஏமாந்தா சனிக்கு பரிகாரம். மேலும் பெருமாளே ஒரு க்டனாளி (குபேரன் கிட்டே கடன் வாங்கின கதை தெரியுமில்லே) ஒரு கடனாளி ( நாம) இன்னொரு கடனாளியை போய் வணங்கறது எவ்ள பெரிய அவமானம் அதனால இது சனிக்கு பரிகாரம்.(கடன் பட்டவன்னாலே சனிதேன் -அவனை பிழிஞ்சு எடுத்து வட்டி வாங்கறவன் அவனை பெரிய சனி)

புதன்னா கடைத்தெரு. திருப்பதி போய் ஷாப்பிங் பண்ணா மொட்டைதேன் (இது ரெண்டாவது) அப்படி ஏமாந்தா புதனுக்கு பரிகாரம். உணர்ச்சி வசப்பட்டு தேவஸ்தானம் பப்ளிகேஷன்ஸ்ல புக்ஸ் வாங்கினா இன்னம் டபுள் ஸ்ட்ராங் பரிகாரம்.

யதேஷ்டமா சில்லறை,க்ரெடிட் கார்டு, புதுசா வாங்கின காரு, சொந்த தொகுதி எம்.எல்.ஏவோட லெட்டர், தரிசனம் கம் தங்குமிடத்துக்கான ஆன்லைன் புக்கிங், 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா தாளி பிளாட்ஃபாரம்தேன்.(சுமார் சுத்தமா இருக்கும்.பயந்துக்காதிங்க) அப்படி பிளாட்ஃபாரத்துல படுத்து இமிசை பட்டு தரிசனம் பண்ணா கேதுக்குரிய பரிகாரம்.

உணவு,உடை,இருப்பிடத்துக்கு சுக்கிரன் தான் காரகம்.மேற்சொன்ன சில்லறை முதல் 30 நாட்களில் தெலுங்கு புஸ்தவம்லாம் இல்லாம போனா எல்லாத்துக்கும் அல்லாடவேண்டியதுதான். இதெல்லாம் சுக்கிரனுக்கு பரிகாரம். சுக்கிரனுக்குரிய தேவதை லட்சுமி. இந்த பார்ட்டி பெருமாள் மார்லயே இருக்கிறதா ஐதீகம். ஆக பெருமாளை தரிசனம் பண்ணா லட்சுமியையும் கரெக்ட் பண்ணமாதிரிதேன்.

ஆக திருப்பதி போறது -ஏழுமலையானை தரிசனம் பண்றதுங்கறது 9கிரகத்துக்கும் நைன் இன் பரிகாரமுங்கோ. நகை நட்டுல்லாம் இல்லாம, ஏதோ காட்டன் புடவை, வேட்டி அரைக்கை சட்டைன்னு புறப்பட்டு பஸ்ஸுல போய் பஸ்ஸுல வாங்க. 9கிரகமும் 9 வாரத்துக்கு வேலை செய்யாதுன்னா பார்த்துக்கங்க.

இந்த பதிவை எழுத இன்ஸ்பிரேஷன் தமிழ் ஓவியாவோட பதிவுதான். எதையும் எதோடவும் தொடர்பு படுத்தமுடியும்.(கேயாஸ் தியரி) ஆனால் நாம அந்த வேலைக்கெல்லாம் போறதில்லை.

உள்ளதை இன்டர்பிரிட்டேட் பண்றோம். தட்ஸால். தமிழ் ஓவியாவோட பதிவைஅவசியம் படிங்க. .உண்மையில இந்த பதிவு அவிக போடவேண்டிய பதிவே இல்லை.ஒரு "இறையன்பர்" அதிலும் "பெருமாள் பக்தர்" போடவேண்டிய பதிவு. ஆனால் தமிழ் ஓவியா போட்டிருக்காய்ங்க.இங்கனதான் பெருமாள் நிக்கறாரு.

தமிழ் ஓவியா அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக அவரது வலைப்பூவுக்கு ஒரு ஹெடரை டிசைன் பண்ணவச்சேன் அதைத்தான் இந்த பதிவுக்கு படமா வச்சிருக்கேன். படத்தை மெயில் மூலம் அனுப்பறேன். அதுக்குள்ளாற் இங்கே க்ளிக் பண்ணி அவிக போட்ட பதிவை படிங்களேன்.

Tuesday, April 20, 2010

நவீன பரிகாரங்கள் ஆங்கில பேச்சு

நவீன பரிகாரங்கள் ஆங்கில பேச்சு
நவ கிரக தோஷங்களுக்கு நவீன பரிகாரங்கள் பற்றிய என் ஆங்கில பேச்சை கேட்க விரும்புகிறீர்களா இங்கே அழுத்துங்கள்