Wednesday, December 22, 2010

மரணம் = செக்ஸ் = பணம்

மரணம் வந்த பிறகு உடல் உதிர்ந்து போகுது. உயிர்  முடிவில்லாத இந்த படைப்போட கலந்துருது. செக்ஸ்ல வீர்ய ஸ்கலிதம் நடக்கறச்ச பாடி பத்தின ஞா ஒட்டு மொத்தமா போயிருது. ( ஒரு க்ஷணத்துக்காச்சும்) .இதை காலாதீத நிலை,ப்ளாக் அவுட் குட்டிமரணம்னு கூட சொல்றாய்ங்க.

உடம்புங்கற சிறைல சிக்கிக்கிடந்த உசுரு /ஆன்மா/நினைவு படைப்போட இரண்டற கலந்துருது.

பணம் பல வகையான எல்லைகளுக்குள்ளாற சிக்கி சீரழியற மனிதனை உலகத்தோட ஒன்னு மண்ணா சேரவைக்குது. உ.ம்: மொழி,தூரம், ஜியாக்ரஃபி

மரணம் உங்களை இந்த உலகத்துலருந்து விடுவிக்கிற மாதிரியே செக்ஸ் கூட விடுவிக்குது.

செத்துப்போன பிற்பாடு உங்களுக்கு செக்ஸோ பணமோ தேவையில்லை.

செக்ஸ் அவெய்லபிலிட்டில இருக்கிறச்ச பணத்தோட வேலையிருக்காது. மரணம் பத்தின நினைவு இருக்காது.

உங்க கிட்ட பணம் இருந்தா மரணத்தோட ( ஐம் சாரி மரணத்தோட நிழல்களான தனிமை,இருட்டு,முதுமை எட்செட்ரா) ஃபைட் பண்ணி ஜெயிச்சுக்கிட்டு (அட்லீஸ்ட் ஜெயிச்சுட்டதா நினைச்சுட்டு) சந்தோசமா இருப்பிங்க. இந்த ஃபைட்ல தோத்துட்டுத்தான் இருக்கிங்க. உண்மையில ஹைவேல போயிட்டிருக்கிற மரணத்தை விசிலடிச்சு கூப்ட்டுட்டிங்கனு தெரியற வரை செக்ஸ் குறித்த தேவையிருக்காது ( ஃபிசிக்கல் வீரிய புரளல் இருக்கலாம் - நான் சொல்றது சைக்கலாஜிகல் வில்) மரணம் பத்தின நினைவு இருக்காது.

இப்படி மரணம் -மைதுனம்-தனம்ங்கற மூணுக்கும் உள்ள ஒற்றுமை எந்தளவுக்கு போயிருதுன்னா ஒன்னிருக்கும்போது அடுத்ததுக பத்தின ஞா மே இருக்காதுங்கோ.

எலக்ட் ரானிக் உபகரணங்கள்ள ஆன்,ஆஃப் ஆப்ஷன் இருக்கிறாப்லயே ஒவ்வொரு உயிர்லயும் வாழனுங்கற துடிப்பும்,சாகனுங்கற வெறியும் சமமா இருக்கு.

மரணம் மீதான காதல் கூட வாழனுங்கற வெறியாலத்தான்னா நீங்க சிண்டை பிச்சுக்குவிங்க. ஆமாங்கண்ணா "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இல்லியா? எல்லாம் ஒன்ஸ் மோர்மாதிரிதேன் டேக் ஒன் டேக் டூ மாதிரி தேன்.


மன்சன் காட்ல வாழ்ந்தப்போ சாவு அப்பப்போ கண்ணடிச்சு கூப்புடும், பின்னால தட்டிட்டு போவும், கை குலுக்கும். அந்த கால கட்டத்துல பார்த்திங்கனா செக்ஸுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

மரணத்தோட ஸ்பெஷாலிட்டி என்னடான்னா அது ஒவ்வொரு தாட்டி நமக்கு ஹலோ சொல்றப்பயும் வாழ்க்கை பற்றிய நம் எண்ண குப்பைல்லாம் பக்குனு எரிஞ்சு போயிரும். நம்மோட ப்ரியாரிட்டி லிஸ்ட் ரெம்ப சின்னதாயிரும்.  மரணத்துடனான நம்ம அறிமுகமே டாப்ல நிக்கும். இது காட்டு வாழ்க்கைல சாத்தியமாச்சு.அதனாலதான் மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவான செக்ஸுக்கு பெரிய முக்கியத்துவம் இல்ல.


எப்போ இவிக சஞ்சார வாழ்க்கைலருந்து ஸ்திரவாசத்துக்கு மாறினாய்ங்களோ மரணத்துடனான ஹாய்,ஹலோக்கள் குறைஞ்சு போச்சு.

மரணத்தோட விஷயத்துல இன்னொரு பெக்யூலர் திங் என்னடான்னா
அது அப்பப்ப ஹலோ சொல்லலைன்னா உள்ளுக்குள்ளாற சாவு பத்தின பயம் ஸ்டார்ட் ஆயிரும்.  அட்லீஸ்ட் மரணத்தோட நிழல்களாச்சும் நம்மை உரசிக்கிட்டு போகனும்.இல்லைன்னா தாளி தற்கொலை பண்ணிக்க்கிட்டு செத்துப்போயிருவம்.

ஸ்திர வாசத்துல மரணத்துடனான உறவு குறைஞ்சு போச்சு.மரணம் பத்தின பீதி அதிகமாயிருச்சு. மரணத்துலருந்து தப்பிக்க ஒரே வழி செத்துப்போறது. அப்படி சாக தில்லில்லாதவன் தேர்ந்தெடுக்கிற தவண முறை சாவு செக்ஸ்.(ஞா படுத்திக்கங்க குட்டிமரணம்)

ஸ்திரவாசத்துல தான் மன்சன் செக்ஸை ஆற அமர அனுபவிச்சிருக்கனும்.

இயற்கையோட க்ரூர விதி என்னடான்னா எதுமேல உங்களுக்கு எவ்ள சீக்கிரம் எந்த அளவுக்கு ஆர்வம் பிறக்குதோ அந்த அளவுக்கு ,அவ்ள சீக்கிரம் அதை அனுபவிக்கிறதுக்கான சக்தி குறைய ஆரம்பிக்கும்.

உ.ம் தின்னிப்பண்டாரங்களுக்கு ஷுகர்,அல்சர் மாட்டிக்கிறமாதிரி

இப்படியாக செக்ஸில் அதிகமா ஈடுபட்ட மன்சனுக்கு பேட்டரி வீக் ஆக ஆரம்பிச்சது. சாவு ஹலோ சொல்லாததால சாவு பயம் வந்து சாவறதுக்காக செக்ஸுல இறங்கி அஜீஸ் பண்ணிக்கிட்டிருந்தவனுக்கு பேட்டரி வீக்காகி ( இந்த காலத்து வீக்னெஸ்  இல்லிங்கண்ணா அந்த காலத்து பெண்ணை சமாளிக்க முடியாத வீக்னெஸ்) செக்ஸுக்கும் அன்ஃபிட் ஆக ஆரம்பிச்சான்.

இன்னொரு பக்கம் பெண்ணோட செக்ஸ்பவர் என்னானு புரிஞ்சு போச்சு ( ஒரே ராத்திரில பலதடவை உச்சம் பெறும் சக்தி - 7 வெர்ஸஸ் 23ல்லாம் ஞா இருக்கில்லை)

இன்னொரு பக்கம் இவன் பாடுபட்டு பண்படுத்தின நிலம் ஒரு சொத்தா உருவாக ஆரம்பிச்சது. சாவு பயம் மேலும் நெருக்கமா துரத்த - செக்ஸுலயும் அதுக்கு பெருசா  வடிகால் கிடைக்காம இருந்த நிலையில - தன் வாரிசுகள் தன் பிரதிரூபமா - தன்னோட மறுபதிப்பா - தன்னோட நீட்சியா நினைக்க ஆரம்பிச்சான்.

தன் சொத்து தன் வாரிசுக்கே போகனும்னு  நினைச்சான். யோனிய பூட்ட முடியாத குறைக்கு பெண்ணையே பூட்ட ஆரம்பிச்சான். ( சில பார்ட்டிங்க அதை கூட ட்ரை பண்ணியிருக்காய்ங்க)

காட்டு வாழ்க்கைல தன் சகபோராளியா இருந்த பெண்ணை படிப்படியா அடிமையாக்க ஆரம்பிச்சான். அடிமைன்னா அவள் என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணுவானுதானே அர்த்தம்.இவன் எங்கே தன் ஆயுதங்கள்,கவசங்களையெல்லாம் கழட்டி வச்சுட்டு காதல் பண்றது.

செக்ஸுக்காக அவளை அண்டினா அவளுக்கு அடிபணிஞ்சதாயிருமோனு ஒரு சம்சயம்.  அவளோட செக்ஸ் பவர் தந்த எரிச்சல் ஒரு பக்கம். எல்லாமா சேர்ந்து மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸை வச்சுட்டிருந்த இவனை அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா இன்னொன்னை தேட வச்சிருச்சு.

ஆரம்பத்துல பண்ட மாற்றுல ஆரம்பிச்சது பணத்துல போய் முடிஞ்சது. பணம் எல்லா வகையிலயும் மரணம் -செக்ஸுக்கு மாற்றா அமைஞ்சது.

அவனவன் பணம் பணம்னு அலைய முழுமுதற்காரணம் இதான். இவனுக்கு சாவுன்னா பயம், சாகனும்னா பயம், செக்ஸுன்னா பயம்,பொம்பளைன்னா பயம் ஆனால் சாகனும் அதுக்காகத்தான் மன்சன் பணத்தை துரத்த ஆரம்பிச்சான்.

இவன் பணத்தை வெறும்  பணமா பார்த்திருந்தா பிரச்சினையே இல்லை. இவன் சைக்காலஜிக்கலா என்னென்னமோ காம்ப்ளெக்ஸுல மாட்டிக்கிட்டு பணத்துக்கு இல்லாத அருமை பெருமைகளையெல்லாம் கற்பிச்சிக்கிட்டு பணம் பணம்னு அலைய ஆரம்பிக்கிறான்.

ஒரு காலகட்டம் வரை பணம் அவனை திருப்தி படுத்துது. ஒரு கட்டத்துல தாளி செக்ஸுதாண்டா நாம தேடினதுனு தாமதமா ஸ்ட்ரைக் ஆக காம வேட்டைல இறங்கறான்.

அமீபாங்கற ஒரு செல்லுலருந்துதான் எல்லாரும் வந்தோம்.பிரிஞ்சோம். கரீட்டுதான் ஆனால் நம்ம எல்லாரையும் ஒரு  தங்க கயிறு இணைச்சிருக்கு. இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.

மொபைல் தான் உடல். சிம் தான் ஆத்மா. மொபைல்ல எத்தனையோ மேக்ஸ் இருக்கலாம். சிம்ல எத்தனையோ வகையிருக்கலாம்.  பலவித நெட் ஒர்க்ஸ் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மொபைலும் இணைக்கப்பட்டுதான் இருக்கு.

டவர் வராத இடத்துல நிக்கிறது, பேட்டரி லோ ஆயிர்ரது, மொபைல தண்ணில போட்டுர்ரது, ஸ்விட்ச் ஆஃப் பண்ணிர்ரதுனு இருந்தா நெட் ஒர்க் வேலை செய்யுமா? அழைப்பு வருமா? அழைக்க தான் முடியுமா?

உள்ள நெட் ஒர்க்கை புரிஞ்சிக்கிடாம பிரிஞ்சுட்டோம்னு நினைக்கிறது - மறுபடி ஒன்னு சேர்ரதுக்காக சாகனும்,சாகடிக்கனும்னு நினைக்கிறது -அதுக்கு மாற்றா செக்ஸ் - செக்ஸுக்கு மாற்றா பணத்தை நினைக்கிறது -அந்த பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட ஃபைட் பண்றது - ஹை வேல போற மரணத்தை கை தட்டி கூப்புடறது இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமா இல்லியா?