Saturday, December 25, 2010

பழைய மாணவர்கள் சந்திப்பு மனமுதிர்ச்சியற்ற செயல்

 நான் தமிழ் சினிமா பார்த்து பலகாலமாச்சு. என்றாலும் பத்திரிக்கைகள்,இணையத்தின் மூலம் அவ்வப்போது ஒரு சில என் பார்வைக்கு வருவதுண்டு. சினிமா மேட்டர்லயும் ஒரு குன்ஸுலதான் காலத்தை கழிக்கிறேன். ஏதோ சினிமாவுல பழைய மாணவர்கள் எல்லாம் மறுபடி மீட் பண்ற சீக்வென்ஸ் வராப்ல ஞா. இதே மாதிரியான நிகழ்ச்சி ஒன்னை இன்னைக்கு ஏற்பாடுபண்ணியிருந்தாய்ங்க.  போற வழியில இதுக்கான ஏற்பாடுகளை ஒரு க்ளான்ஸ்  பார்க்க வேண்டியதாயிருச்சு.

இது என்னென்னமோ நினைவுகளை கிளப்பி விட்டுருச்சு. காலச்சக்கரம்ங்கறது நிற்காம சுழலும் தன்மை படைச்சது. அதை நிறுத்த முயற்சிக்கிறது (உ.ம் ஹேர் டை), அதை பின்னோக்கி ஓடவிட முயற்சிக்கிறதோ சிறுபிள்ளைத்தனம். கவுரதையா சொன்னா மனமுதிர்ச்சியற்ற செயல். இந்த செயல்கள்ள ஒன்னுதான் பழைய மாணவர்கள் சந்திப்பு.

மேலும் மாணவர்கள் மட்டும் சந்திச்சுக்கிட்டாலும் ஏதோ ஒரு வகையில உண்மை வெளிப்படவும் - ஆய்வுக்குட்படுத்தவும் சின்ன சான்ஸ் இருக்கும். ஆனால் வாத்தியாருங்களுக்கு சன்மானம்னு ஒரு அஜெண்டாவை வேற சேர்த்துக்கிடறாய்ங்க.

வழக்கமாக கிழவாடிகள் "எங்க காலத்துல.." என்று ஆரம்பித்து தம் காலத்தை பொற்காலமாக எஸ்டாப்ளிஷ் பண்றது வழக்கம். ஆனால் நாட் நாட் காலத்துலயே வாத்தி மாரு பர்சனாலிட்டி இன்னானு தெரிஞ்சுக்கனும்னா இங்கே அழுத்துங்க. ஔரங்கசீப் தன்னோட வாத்திக்கு எழுதின கடிதம் இது.

இன்னைக்கு நடந்த மேற்படி நிகழ்ச்சி பத்தின செய்தியை லோக்கல் டிவில வேற பார்க்க வேண்டி வந்துருச்சு. தாளி அதுல ஒவ்வொரு வாத்தியானை சன்மானம் பண்ணிக்கிட்டிருந்தா ஃப்ளாஷ் பேக் அப்படியே பிச்சுக்கிட்டு வருது.

ஓஷோதான் சொல்வாரு" சரியான ஆள் தப்பான வழியில போனாலும் இலக்கை அடைஞ்சுருவான் ( நம்ம அனுபவம் : இன்னம் சீக்கிரமாவே) தப்பான ஆளு சரியான வழியில போனாலும் பெப்பே தான்.

அதைப்போல சரியான ஸ்டூடெண்ட் தப்பான வாத்திக்கிட்டே மாட்டினாலும் க்ளிக் ஆயிருவான். தப்பான ஸ்டூடெண்ட்டுக்கு  சரியான வாத்தி அமைஞ்சாலும் பெப்பேதான்.

சரி சரி மேட்டர் ரெம்ப பர்சனலா போகுது மானாம். ஹோல்டான்