Saturday, December 11, 2010

வாங்க ! எழுதுங்க ! எனக்கு பிடிச்சா பரிசு ரூ.100/-

ஆமாங்க . வாங்க!  என் ப்ளாக்ல  எழுதுங்க !!  எனக்கு பிடிச்சா பரிசு ரூ.100/-


இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் கவிதை07ல வெளியிட நினைச்ச உங்க  பதிவை எனக்கு ஒரு மெயில் மூலம்  தட்டிவிட வேண்டியதுதான்.

என் மெயில் முகவரி:
swamy7867@gmail.com

மீள் பதிவா இருந்தாலும் ஓகே.  ஆனால் உங்க பதிவு கீழ்காணும் பத்து விஷயங்களை பத்தினதா இருக்கனும். ( இது போட்டியில்லைங்கண்ணா.. பரிசுனு சொல்லியிருந்தாலும் பரிசு இல்லிங்கண்ணா ..பரிசு கொடுக்கிற அளவுக்கு நான் பெரியாளுமில்லை ..வசதியானவனும் இல்லை. தோஸ்து ஒரு நல்ல ஹைக்கூ சொன்னா ஏம்பா கவிஞருக்கு ஸ்பெஷலா டீ போடுனு சொல்றோமே அப்படி ஒரு  என் கரேஜ்மென்டு. அம்புட்டுதேன்.

உங்க பதிவு பிடிக்காட்டா  ஏன் பிடிக்கலைன்னு ஒரு விண்டோ சைஸுக்கு என் கருத்தை கமெண்ட்ல சொல்லிப்புடுவன். என் விமர்சனம் உங்க எதிர்கால வளர்ச்சிக்கோ அல்லது என்னை கிழிப்பதற்கோ உதவும். ( நல்லாவே பொழுது போகும்ல)

பிரச்சினையை மட்டும் தொட்டுக்காட்டினாலும் சரி - நோண்டி நுங்கெடுத்தாலும் சரி தீர்வையே சுட்டிக்காட்டினாலும் சரி. கதை,கவிதை,கட்டுரை எந்த சாதியா இருந்தாலும் சரி . நோ ப்ராப்ஸ். நீங்க பரிசு பெற ஒரே நிபந்தனை உங்க எழுத்துல ஆர்வம்,அக்கறை,உண்மைத்தன்மை, தார்மீக ஆவேசம் இருக்கனும். அது எனக்கு பிடிக்கனும். ஒரே பிரிவுல கூட பல பரிசுகள் தரப்படலாம். சில பிரிவுகள்ள பரிசே தரப்படாமலும் போகலாம்.

பரிசு தொகை எம்.ஓ மூலம் மட்டுமே அனுப்பப்படும். மெயில்ல உங்க அஃபிஷியல்  நேம், விலாசத்தை குறிப்பிட மறந்துராதிங்க

பதிவுக்கான விஷயங்கள்:

1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்

2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் - சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள்  - உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் - ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை

3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்

4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை - அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் - கல்வித்தரம்

5.வேலையின்மை,  சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.

6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்

7.சுற்றுச்சூழல் - பொல்யூஷன் -காரணங்கள் - விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.

8.மக்கள் பிரச்சினைகளை பேசி - தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு - ஹ்யூமன் வேல்யூஸ்

9. மிஸ்டிக் சைன்ஸஸ் - ஜோதிடம் -வாஸ்து -கைரேகை  முதல் டெலிபதி வரை

10. ஆன்மீகம் - தியானம் -யோகா


நிபந்தனை:

1.உங்க பதிவு படிக்க வைக்கிறதா இருக்கனும் அதாவது ஜோவியலா , எளிய  நடையில் , நச்சுனு இருக்கனும். (விரட்டறதா இருக்ககூடாது)

2. சமையல்,விரதம், சினிமா விமர்சனம், கோலம் இத்யாதிய தவிர்க்கனும்.

3. கடைசி தேதி: 12.12.2012 (இந்த தேதிக்கு  ஒலகம் அழிஞ்சுருமாமில்லை)


என் மகள்:

 டாடி ! இப்பத்தான் ஏதோ வசதியாயிட்டு வர்ரே.. இந்த விஷபரீட்சையெல்லாம் எதுக்கு ஒரு பிரிவுல ஒரு பரிசுன்னா கூட ஆயிரம் ரூபா காலி. இதுல எம்.ஓ கமிஷன் வேற

நான்:

தமிழ் நாட்டு சனம் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் மொத்தமா பத்து பதிவு வருதா பாரு.  அப்படியே வந்தாலும் "எழுத்துல ஆர்வம்,அக்கறை,உண்மைத்தன்மை, தார்மீக ஆவேசம்"ங்கற கண்டிஷனுக்கு ஒரு பதிவாச்சும் தேறுதா பாரு..