Thursday, December 23, 2010

மிருகங்களோடு பழகுங்கள்


நான் முன்பு திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்கா இடையிலான் பகுதியில் குடியிருந்தேன். ஆமாம்... ஒருபக்கம் மாமன், ஒரு பக்கம் அப்பன், இறைவனை சொன்னேன். :)

அந்த பகுதிகளில் எல்லா வீடுகளிலும் தோட்டங்கள் அதிகம். எனவே குரங்குகள் (என்னாது அரசியல்வாதியா? இல்லங்க குரங்குதான்) எப்போதும் வரும். மிக நேர்த்தியாக தோட்ட குழாயை திறந்து தண்ணீர் குடித்து விட்டு மூடத்தெரியாது... போய்விடும். சில நேரம் பூனைகள்... அவ்வளவுதான். வீட்டு கதவு திறந்திருந்தால் அழையாவிருந்தாளியாக உள்ளே வர வாய்ப்பிருக்கும். ஆனாலும் பயமில்லை...

இரண்டாண்டுகளுக்கு முன், இப்பொழுது இருக்கும் பகுதியில் வாசம். இது அதைவிட சுவாரசியமான விசயங்கள் கொண்ட வீடு. ஒரேஒரு பிரச்சனை என்னவென்றால் என் வீட்டிற்கு விருந்தாளிகள் வர பயப்படுகின்றனர். பின்னே என்னங்க... நீங்க என் வீட்டு வாசல்ல உட்கார்ந்து இருக்கையில் பாம்பு வந்தா எப்படி இருக்கும்? அட நெஜம் தாங்க... அது மட்டுமில்ல... மழை பெஞ்சு ஓஞ்சதின்னா தண்ணீர் வரும், அப்புறம் தவளை, தேரை கூட்டமா வரும்... ஆமை வரும், நண்டு வரும், மதில் சுவர்ல ஓணான் வரும். சாதம் வைத்தால் காகம், மைனா, குருவி வரும். அப்பப்போ பெயர் தெரியா பூச்சிகள் வரும். போதும் போதததுக்கு கொசு, குளவி, தேனீ வரும். ஆனா எதுவுமே இதுவரை வீட்டுக்குள் வந்ததில்லை. :)

ஒருவேளை நான் அழைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்படி ஒரு வீட்டில் குடியிருந்துதான் ஆகனும்மா? அப்படின்னு கேட்கிறீங்களா? குடி இருக்கதானுங்களே வீடு...

ஆனா... வீட்டை பொறுத்தவரை சில தெய்வாம்சம் இருப்பதாகவே உணர்கிறேன். எனக்கு 4ம் இடத்தில் ராகு... அட இங்க கூட ஜோதிடமா? அதுனால வசிப்பிடம் இப்படித்தான் இருக்கும் என்பது ஒரு சாம்சயம் (வார்த்தை உபயம். திரு. முருகேசன்)

எனக்கு மட்டுமில்லேங்க... என் மனையாளுக்கும் இந்த வீடு பிடித்துவிட்டது. ஆரம்ப காலங்களில் ப்யமிருந்தது உண்மை, ஆனா இப்ப இல்லை.

வீட்டுல தெய்வாம்சம்னு சொன்னேனே...அது... என் வீட்டின் ஒவ்வோரு அறையிலும் கடிகார மணியோசை ஒலிக்குதோ இல்லையோ, கெவுளி சத்தம் விடாம ஒலிக்கும். அது என்னானு அப்புறம் பார்க்கலாம் :) (ஆரம்பிச்சுட்டாங்கப்பா) அதுபோக சின்ன குழந்தை நடந்து போவதைப்போல இரு கால் கொலுசின் மணியோசை ஒலிப்பதாகவும் கூற கேட்டிருக்கிறேன்... என் காதால கேட்டதே இல்லீங்க...

ஆக என் வீடு மிக திருப்தியாக இருக்கிறது... இந்த வாஸ்து எல்லாம் பார்த்தா... கணக்குப்படி எல்லாமே கோல்மால்தான்... ஆனால் மனம் வாஸ்து சிறப்பாக இருக்கிறபடியால், மனை வாஸ்து செயல்பட முடியாது போயிற்று போலும்.



இந்த மாதிரியான வீட்டில் இருந்து பழகிக்கொண்டீர்களென்றால் இந்த உயிரின உலகை நேசிக்கவும கற்றுக்கொள்ளலாம் நண்பர்களே! நான் புலால் உண்பதில்லை... தாவர, கனி வகைகள் மட்டுமே என் உணவு...

என்னங்க... வீட்டிற்கு வர பயமா இருக்கா? பயப்படவே பயப்படாதீங்க... உங்களை சுற்றி இருக்கிற மனித மிருகங்களோடு நீங்கள் பழகி வரும்போது இதெல்லாம் ஜுஜிபி... ஒன்னுமே இல்லீங்க...

வாங்க...

:)