Tuesday, December 28, 2010

நிர்வாணியானேன்

சீவித்திருப்பதாய் கருதப்படும்
என் சக சீவர்களின் ஒருவனென்றே
சமுதாயம் என்னை கணக்கிட்டுக்கொள்ளட்டும்
பிரச்சினை அதனுடையது..

சக சீவர்களின் துயரம் கண்டே
நான் உயரங்கள் நோக்கி ஊரத்துவங்கினேன்.

இவர்களின் உயிர் காக்கவே
என் உயிரை பணயம் வைத்தேன்

இவர்கள் வண்ணத்தொலைக்காட்சியின்
வண்ணங்களில் மங்கி போகட்டும்.

இவர்தம் உயிரோவியங்களுக்கு தூசு தட்டி
புதுவண்ணம் தீட்டுவேன்.

பித்தம் தலைக்கேற இவர்கள்
சத்தமின்றியே சாவு நோக்கி சறுக்குகிறார்கள்

நாளைய என் முயற்சிகளில்
விடம் விளைந்தால் என் தொண்டை அதன்
மரண தாகம் தீர்க்கும்.

அமுதத்துக்கான பாற்கடல் மதனம் மட்டும் நிற்காது

கண்ட பொய்மைகளால்
பொய்யான அமைதி கண்டு கண்ணுறங்க இயலாதே


கலைவாணி கருணையாலே
மர்மங்களை கற்பழித்தேன்
ஆதி மன வாணி கேட்டேன்
பொய்யெலாம் நான் துறந்தே  நிர்வாணியானேன்

சித்தம் சிவனாக யானே சிவனாகும்
சீர் பெற்றேன்

சிவனோ சீவனோ மயக்கம்
தொடரலாம் சில காலம்.

சீவன் நான்  சிவனாகும் நாழி
காத்திருக்கிறது ஒரு ஊழி

அன்று நான் சிவன்

என் கணிணி விசைபலகை உடுக்கையாய் ஒலிக்க
ஓடி மறையும் தங்கு தடைகள்.

கணினித்திரையில் பிறக்கும்  ஒவ்வொரு வார்த்தையும்
ஒரு தீப்பொறியாக

இணைய நதி அவற்றை ஏந்தி பிரவிகிக்க
பல்லாயிரம் குமாரர்கள் ஜனிப்பர்

என் கவிதை மூன்றாவது கண்
எரிப்பேன் பசித்தோரை எரிக்கும்
ஊழல் வாதிகளை

சுருக்கிட்டே சூறையாடுவேன் சுரண்டலை

என் ஞானம் செஞ்சடை
கோடை கால கங்கையென‌
பெருக்கெடுத்துவரும் பன்னாட்டு பகாசுரர்களை தடுப்பேன்
என் சடை வழி வழிய விடுவேன்

மணி,மாஃபியா,மீடியா முப்புரமும் எரிப்பேன்
ஓர் புன்னகையால்

நான் சிவன்
பாரதத்தின் சிரசில் தோன்றி பெருக்கெடுக்கும் கங்கையை காவிரியில் கலக்கச்செய்வேன்.

நான் சிவன்
மக்களை மறந்த படைப்புலக பிரம்மாக்களின் ஐந்தாவது சிரசை
சீவித்தள்ளுவேன்

நான் சிவன்
அவள் என்னில் பாதி
தத்..

பாதியென்ன?
அவளே நான்.
நானே அவள்.


அவளென் இடமிருக்க
 சமதர்ம சமுதாயம் சமைக்க  தடையான
முடை நாற்ற‌மனிதர்களின் அல்லவை  எரித்து
சாம்பலாக்கி அதன் மீது அரங்கேற்றுவேன் ருத்ரதாண்டவம்..........