Wednesday, December 29, 2010

காங்கிரசின் மரண வாக்கு மூலம்

என்னங்க முருகேசன்.. காங்கிரஸ் ஐ.சி.யுலதான் இருக்கு அதுக்குள்ள ஏன் மரணவாக்குமூலம்னு கேப்பிக. நான் இன்னா பண்ணட்டும் பாஸ் காங்கிரஸ் கட்சி தன்னோட சுயசரிதைய வெளியிட்டிருக்கு அதுதான் மரண வாக்கு மூலம் மாதிரியே இருக்குதாம்.  (The congress and making of  Indian Nation ) ( நாம எங்கே படிச்சோம் - சாட்சி டிவில கிழிகிழினு கிழிச்சுட்டு இருக்காய்ங்க)

எமர்ஜென்சி கால கொடுமைகளை சஞ்சய் காந்தி பேர்ல தள்ளி விட்டுட்டாய்ங்களாம்.( சோனியா இன்னமும் தன்னை மருமகளாவே நினைக்கிறாய்ங்க. ஓரகத்தி  மேனகா மேல அவிகளுக்கு  கோவம் இன்னம் தணியல போல இருக்கு)

பாவம் ராஜீவ் காந்திக்கு தூர திருஷ்டி இல்லாததால சில விரும்பத்தகாத சம்பவம்லாம் நடந்துருச்சாம்.

அவரென்னவோ  பவர் ப்ரோக்கர்ஸை ஒழிக்க முயற்சிபண்ணாராம். ஆனால் கிழவாடிங்க விடலியாம்.

ஆமா ராஜீவ் என்ன 32 ஆவது வட்டசெயலாளராவா இருந்தாரு. அந்த கிழவாடிகளையெல்லாம் தூக்கி இந்துமகாக்கடல்ல எறியவேண்டியதுதானே

பாவம் எங்க ஊரு  நரசிம்மராவு. அவரு செத்து ஒழிஞ்ச பிற்பாடு கூட அவரோட பாடிய கூட தில்லில புதைக்கவிடாம ஹைதராபாதுக்கு அனுப்பிவச்சவுக இன்னைக்கு இந்த புஸ்தவத்துல அவரை வானளவு புகழ்ந்திருக்காய்ங்களாம்.


ஐயப்ப சாமி பூஜைல அறிந்தும் அறியாமலும்,தெரிந்தும் தெரியாமலும்னு மன்னிப்பு கேட்பாய்ங்களே அது மாதிரி ஏறக்குறைய எல்லா தப்பு தவறுகளையும் பட்டியலிட்டு மன்னாப்பு கேட்டிருக்காய்ங்களாம்.

125 வருஷம் பாஸ் ! எல்லா இழவையும் ஞா படுத்தி இப்பயாச்சும் எங்களை புரிஞ்சிக்கிருங்கடா .. ஒழிச்சுக்கட்டுங்கடான்னு இந்த புஸ்தவம் போட்டாப்ல இருக்கு.

இருந்தாலும் என்ன? தமிழினத்தையே அழிச்சா என்ன? நம்ம மீனவனை  சுட்டு தள்ள புல்லெட் கொடுத்தா என்ன? அதைதட்டிக் கேட்ட பார்ட்டிய ஜெயில்ல போட்டா தான் என்ன நம்ம சனம் திருந்துவாய்ங்களா? ஊஹூம் எனக்கு நம்பிக்கையில்லப்பா..

இதுல சொல்லாதது:
ஜனதா ஆட்சி முடிவுக்கு வந்த பிற்பாடு மானில அரசுகளை ஒரே கையெழுத்துல வீட்டுக்கு அனுப்பினது

ஆந்திராவுல கவர்னர் ராம்லாலை வச்சுக்கிட்டு  டூ தேர்ட் மெஜாரிட்டி இருக்கிற நிலைல என்.டி.ஆரோட ஆட்சியை கவிழ்த்த கதை