Tuesday, December 21, 2010

மருந்தா ? நோய்க்கு விருந்தா?

இந்த தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு தொடராமயே விட்டாச்சு. இன்னைக்கு ஏதோ ரிஃப்ளெக்ஸ்ல வலைதமிழ் திரட்டியை திறந்து பார்த்தா அனைத்திலும் பிரபலமா நின்னிருக்கு.

இன்னய தேதிக்கு இருக்கிற பொல்யூஷனுக்கு ஆரோக்கியத்தை பத்தி நான் பேசினா என்னோட மானசிக ஆரோக்யத்தை பத்தி சந்தேகப்பட்டுருவிக. என்ன செய்ய?  நம்ம மந்திரி,எம்,எல்,ஏ,எம்.பி எல்லாம் சேஃபா இருக்காய்ங்கனு நினைப்போம். ஆனால் இந்த டிவி பேட்டிகள்ள பாருங்க .அல்லாரும் லொக்கு லொக்குனு இருமிக்கிட்டிருப்பாய்ங்க. இவ்ளோ எதுக்கு ஆருனா முக்கிய தலைவரு செத்ததுக்கு ஒரு நிமிஷம் மௌனம்னுவாய்ங்களே அந்த சமயத்துல கூட லொக்கு லொக்கு கேட்குது.

அந்த அளவுக்கு காத்து கரப்ட் ஆயிருச்சு. சோத்துக்கில்லாதவன் கூட மினரல் வாட்டர் குடிச்சாத்தான் பொழைக்க முடியும்ங்கற நிலை வந்துருச்சு. (ஒரு காலத்துல இது லக்சரி)

நிறைய தண்ணி குடிப்பானு டிப்ஸ் கொடுக்கவும் பயம். கண்ட பிராண்டை குடிச்சு சாஸ்தி கம்மியாயிட்டா இன்னா பண்றதுனு பீதி. கீரை சாப்பிடுங்கலாம் பார்த்தா நிலத்துல கொட்டின பூச்சி மருந்து,இரசாயன உரம் ஊறி ஓடிவர கால்வாய் ஓரமாத்தானே இந்த கீரைகளும் விளையுது?

பால் குடிப்பாங்கலாம்னா அதுல யூரியா கலக்குறாய்ங்களாம். கலப்படமில்லாத ஒரே பொருள் தாய்ப்பால்னு ரேங்கிக்கிட்டிருந்தோம்.இன்னைக்கு அதுல கூட பொல்யூஷனோட எஃபெக்ட் தெரியுதுங்கறாய்ங்க.

காலையில காத்தாட நடக்கனும்பானு சொல்லலாம்னா வெறும் டீசல் புகைதேன். ஒரு காலத்துல சீக்கா போட்டு குளிச்சா சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.இன்னைக்கு பே பே காட்டுது. காரணம் என்னடான்னா காத்துல உள்ள டீசல், பெட்ரோல்  புகை.

இதுக்கு மெக்கானிக்குங்க கை கழுவ உபயோகிக்கிற சோப் ஆயிலை முக்கிய ரா மெட்டீரியலா தயாரிக்கிற ஷாம்பூதானே சூட்டபிள்.

எங்க ஊர்ல சுந்தரய்யர் தெருனு ஒரு தெரு இருக்கு தாளி அந்த தெருவுல என்னைக்குமே ,எந்த நேரமுமே ட்ராஃபிக் ஜாம் தான் . இன்னாடா ரீசனுன்னா அங்கனதான் ஊர்ல கீற டாக்டருங்கல்லாம் கீறாங்க.  ஒரு காலத்துல கிராமத்துல மாடு வளர்ப்பாய்ங்க. அந்த பாலை குடிச்சு பிள்ளைங்கல்லாம் பலராமன் கணக்கா இருப்பாய்ங்க. வெண்மை புரட்சின்னு கடைசி சொட்டு வரை டைரிக்கு ஊத்திக்கினு அந்த புள்ளைங்க பாடி எல்லாம் காட்பாடியாப்போச்சு.

அந்த தெருவுல பார்க்கிறேன். முக்காவாசி வில்லேஜ் பார்ட்டிங்க தான் இருப்பாய்ங்க.இன்னாங்கடா இது அக்குறும்பா கீது. நாமல்லாம் டவுன்ல கீற புகை,தூசுக்கு பயந்து தாளி வசதி வந்தா கிராமப்பக்கமா போயி செட்டிலாயிரனும்னு இருந்தா அவிக இப்படி சுந்தரய்யர் தெருவே கதியா கீறாய்ங்கனு  ஒரே கன்ஃப்யூஷன்.

வீடு,வாசல் - கடை கண்ணி - சோறு தண்ணி மாதிரி மருந்து மாயம்னுவாய்ங்க. இது ஏதோ பேச்சுவாக்குல சொன்னதோ,எதுகை மோனைக்காக சொன்னதோவா படலை. அந்த ஃபீல்டே மாயா பஜாருங்கண்ணா.

ஏற்கெனவே சொன்னாப்ல இவிகளோட டார்கெட் நோய்க்கான  காரணம் கிடையாது, நோய் கிடையாது. இவிக டார்கெட் பண்றதெல்லாம் நோய்க்கான அடையாளம். உ.ம்: வீசிங். அடையாளத்தை ஒழிச்சு கட்டிட்டா நோய் தீர்ந்துபோச்சுனு ஒரு ஃபீலிங்.

நாம என்னமோ டாகுட்டருன்னவுடனே கண் கண்ட தெய்வமா நினைக்கிறோம். ஆனால் அவன் படிச்சு வெளியவந்து பல வருஷம் ஆகியிருக்கும்.அவன் சம்சாரமாச்சும் எதுனா மெடிக்கல் மேகசினை ஆட்டா மாவு சலிக்க பயன் படுத்தியிருக்கும்.இவன்  ம...ரு கூட புரட்டியிருக்கமாட்டான்.

ரெப் வருவாரு.அவரு இன்ன நோய்க்கு இன்ன மருந்து புதுசா வந்திருக்கு. இதை இத்தீனி பேருக்கு நீ ப்ரிஸ்க்ரைப் பண்ணா உனக்கு ஃபுல், ஆஃபுனு ( போனசை சொல்றேன் பாஸ்)சொல்ட்டு போவாரு,இவரு அதை ஃபாலோ பண்ணிக்குவாரு.

எனக்கு இந்த அல்லோபதின்னுல்ல எந்த பதி மேலயும் நம்பிக்கை கிடையாது. காரணம் மேற்படி பதிகளோட வரலாறு அப்படி. அதை வழங்கற கல்வி அமைப்பு அப்படி. இன்னைக்கு  இஞ்சினீரா வெளியவரவன்ல 12% மட்டும்தான் நெஜமாலுமே இஞ்சினீராம்.மத்தவன்லாம் டுபாகூராம். மெடிக்கல்ல இந்த சதவீதம் எம்மாத்தம்னு ஐயாமாருங்க சொன்னா சவுரியமா இருக்கும்.

அதனாலதான் நான் நோய்க்கு தடா போட்டுவச்சிருக்கேன். அது எப்படின்னு இந்த தொடர்ல அப்பப்போ சொல்வேன். டோன்ட் ஒர்ரி.

உடம்பு -மனசுங்கற ரெண்டோட அமைப்பும் 90% ஜீன் வழியாவே வந்துருதுனு நினைக்கிறேன். இது எது வலிமையோட இருந்தா அடுத்தது இதை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணும்.

என் மேட்டர்ல பார்த்திங்கன்னா பாடி காட்பாடி. ஆனால் தாளி நெஞ்சுல மாஞ்சா சாஸ்தி. மதனபல்லி டிபி வார்டுலயே இருந்து ஃப்ரெண்டுக்கு சர்வீஸ் பண்ணிட்டு இருந்தேன். ( ரெண்டு மாசம்) ஒரு ம...ரும் நடக்கலை. இத்தனைக்கும் அந்த தேதில நாம ப்ரெட் ஹண்டர். சரியான தீனி கிடையாது.

ஆனால் என் இன்னொரு ஃப்ரெண்டு இருக்கான். க்ளாக் வைஸ் லைஃப். வாழ்க்கையில போராட்டங்கறதே இல்லை. ஆத்தோட போறதுதான்.சொந்த வீடு,அம்மா அப்பா காலி,  கண்ணாலமாச்சு, ரெண்டு குட்டி போட்டாச்சு. ஏதோ ரெண்டு மூணு பலான மேட்டர்ல சிக்க இருந்தான் அதையும் யாரோ ஒருத்தன் சால்வ் பண்ணி விட்டுட்டானுவ. (இதுல அடியேனும் ஒருத்தன்) . அவனுக்கு அட் எ டைம்  டிபி ,ஷுகர் ரெண்டும் மாட்டிக்கிச்சு. டிபி வந்தா நல்லா திங்கனும்.ஷுகர் வந்தா கொஞ்சமா தின்னுக்கிட்டே இருக்கனும். நல்லா தின்னா ஷுகர் சாஸ்தியாயிரும். திங்கலைன்னா டிபி சாஸ்தியாயிரும். ஒரே மூனு மாசத்துல கருவாடு மாதிரி ஆயிட்டான். பெஞ்சுல உட்கார்ர அளவுக்கு கூட தெம்பில்லாம கொஞ்சம் படுத்துக்கட்டானு கேட்கிற ஸ்டேஜு வந்துருச்சு.

ஒரு நா கூப்டு சொன்னேன். மவனே உனக்கு சாவுன்னா செத்துப்போற அளவுக்கு பயம். வாழ்வுன்னா உசுரு நீ அவ்ள சீக்கிரம் சாகமாட்டே. தகிரியமா இரு.  நம்முது அருள்வாக்கா? இல்லே அது  டைரக்டா அவனோட சப் கான்ஷியஸ்ல போயி தச்சுருச்சா தெரியலை.  நௌ ஹி ஈஸ் ஆல் ரைட்.


இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா மொதல்ல "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"னு கவிஞர் சொன்னதை மனசுல வச்சி வாழுங்க.

கான்சர்னா என்ன? செல்கள் வர்ஜியா வர்ஜியாமில்லாம திடீர்னு பெருக ஆரம்பிக்கறது. கான்சர் வந்தவனையெல்லாம் பார்த்திங்கனா வாழ்க்கையில பரவனும்,விரிவடையனும், சாதிக்கனும்ங்கற பயங்கர வெறி கொண்டவனா இருப்பான். ஓரளவு இது மெட்டீரியலைஸ் கூட ஆயிக்கிட்டிருக்கும். விளம்பர இடைவெளி மாதிரி கான்சர் வந்து மாட்டிக்கும்.

நான் என்ன நினைக்கிறேன்னா இவனோட அடி மனசோட ஆணை இவன் லைஃப்ல அமலாச்சோ இல்லையோ அதை அவன் உடல்,அவன் உடலிலான செல் ஏத்துக்குச்சோனு ஒரு சம்சயம்.

இதை எல்லாம் ஏன் சொல்லிக்கினு வரேன்னா ஈஸ்ட் மென் கலர்ல மருந்து மாயங்களை மார்க்கெட்ல தள்றாய்ங்களே அவிகளுக்கு ஒவ்வொரு மனிதனும் தனிச்சிறப்புள்ளவங்கறதோ? அவன் பாடி மைண்ட் ரெண்டும் தேன் நோயையும், அதுக்குண்டான தீர்வையும் கொடுக்குதுங்கறதோ தெரியாதா? அ அதை பத்தின அக்கறையில்லையா? பல நாள் என் மனசை குடைஞ்ச வண்டு இந்தகேள்வி .

( இன்னம் நிறைய கேள்விகள் இருக்கு அதையெல்லாம் அடுத்த பதிவுல பார்ப்போம்)