Sunday, December 12, 2010

பாரதி ஒரு கஞ்சா கேஸு

அண்ணே வணக்கம்ணே,
கவிதை07லயும், அனுபவஜோதிடத்துலயும்  "சோதிடம் தன்னை இகழ்" ங்கற தலைப்புல ஒரு பதிவை பார்த்திருப்பிக. இல்லைன்னா இங்கன அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

மேற்படி தலைப்பு பாரதியாரோட உபயம். எடுத்தாண்டவர் நம்ம சு(க்)குமார்ஜி, ஏன் இன்னொரு "க்" போட்டேனு சொல்றேன். காத்துல போற மேட்டர்ங்களை படிச்சு படிச்சு  அந்த காத்து  மண்டைல நிரம்பி மண்டை  வீங்கியிருப்பிக. சுக்கு வாயு உபத்திரவத்துக்கு நல்லது.

சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சின தெய்வமும் இல்லேனு ஒரு பழமொழியே உண்டு.

நம்ம சுக்குமாரு சுக்கை உரசி பாலாடைல கலந்து கொடுத்துட்டாரு.இப்ப கியாஸ் எல்லாம் காலியாகியிருக்கும். இப்ப விசயத்துக்கு வந்துருவம்.

சோதிடம் தன்னை இகழ்னுட்டு பாரதி சொன்னதா பதிவு ஆரம்பமாகுது.

பாரதி கஞ்சா அடி, பாரதி பெண் சுதந்திர விஷயத்துல எப்படியா கொத்த பிற்போக்கு ஸ்டாண்டை கொண்டிருந்தாரு தெரிமா?ன்னெல்லாம் நானும் ரேங்கலாம். ஆனால் நாம அம்பேல்.

நான் சொல்லிக்கொள்ளவிரும்புவதெல்லாம் ஒன்றே அட பாரதியார் லைஃபே அவர் ஜாதகப்படிதேன் நடந்திருக்கும்.

நீங்க மின்சாரத்தை இகழ்ந்தா என்ன? புகழ்ந்தா என்ன? அடிச்சா ஷாக்குதேன்.அசால்டா இருந்தா சங்குதேன்.

பாரதியாரைபத்தி தூக்கிவிட்டு ( அம்புட்டு விபரம் உள்ளவரு... முற்போக்கு சிந்தனையாளரு, வரப்போறத முன்கூட்டியே அறியத்தந்த ஞானமுள்ளவரு தப்பா சொல்லிருப்பாருங்களா?) அவரோட வாக்குக்கு வக்காலத்து  வாங்கறாரு.

ஒரு பார்ட்டி ஜூரிங்கறதால அவரோட எல்லா ஸ்டேட்மென்டும் பக்கான்னு ஒத்துக்கிடமுடியாதே.வாத்யாரு "போஸ்ட் கார்ட் விலைய குறைப்பேனு சொல்லலியா?  கலைஞர் " நாடாவை அவிழ்த்துப்பார்த்தால் தெரியும்"னு சொல்லலியா? நம்ம புரச்சி தலைவி "எம்.ஜி.ஆரோட உடன் கட்டை ஏறியிருப்பேனு "சொல்லலியா.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள்  காண்பதறிவுனு வள்ளுவர் சொல்லிக்கிறாருபா.

நியூட்டன் எம்மாம் பெரீ விஞ்ஞானி. அவரோட லேப்ல ஒரு அம்மா பூனை குட்டிப்பூனை ராத்திரி மாட்டிக்கினு ஹதம் பண்ணிருச்சுங்க. ஒடனே நம்மாளு ஆளை கூப்டு சின்னதா ஒன்னும் பெருசா ஒன்னுமா ரெண்டு துளை போட வச்சாராம். ( ஏன் பெரீ ஓட்டையில குட்டிப்பூனை நுழையாதா? )

இன்னோரு ஆங்கிள்ள பார்த்தா பாரதி சொன்னது கரீட்டுதான். "சோதிடம் தன்னை இகழ்" கரீட் பாய்ண்ட் தேன். ஆனால் கெரகம் எந்தளவு பாதுக்குது? எப்டி பாதிக்குது? அதுக்கு பாச்சா காட்டறது எப்டி? அதுங்கிட்டருந்து நைசா கழண்டுக்கறது எப்டினு சப்ஜாடா தெரிஞ்சிக்கினு இகழனும்பா.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுனு கூட சொல்லிகிறானுவோ. அதுக்காக ஸ்கூலையெல்லாம் இழுத்து பூட்டிரனுமா என்ன? அல்லாத்தையும் படிச்சுட்டு தாளி லைஃப்ல அல்லாடி அடடா ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாதுங்கோனு தெரிஞ்சிக்கிடனும். அப்பால பட்டறிவை சேர்க்கனும். ஏட்டறிவும் -பட்டறிவும் சேர்ந்தா  தி.முக அதிமுக ஒன்னா சேர்ந்தமாதிரி கொளுத்திருவமில்லை.


//என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது?//

ஸ்பெக்ட்ரம் மேட்டர்ல இறங்கறதுக்கு மிந்தி அல்லாரும் என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு ரோசிச்சிருக்கலாமே. எது ரோசிக்க விடலை? அதான் கெரகம்.

//நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?//

இங்கனதான் தப்பு பண்றிங்க. நெருப்பு சுடும்னு அல்லாருக்கும் தெரியும். ஆனா நேரம் கெட்டுக்கிடக்கறப்ப நம்ம தலைய நாமே கொள்ளிக்கட்டையால சொறிஞ்சிக்கிடறமெ அது எப்டி? அதை எப்போன்னு சொல்லத்தான் சோசியம்.

//என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா?//

நான் சொன்னது நடந்ததை எல்லாம் சொன்னா சு.த.ம்பாய்ங்க. ஒரு தெருவோர சோதிடன் பேரு ராம சாமி. ஜஸ்ட் எங்க பேரை மட்டும் வச்சி சொன்னான் " ஒரு  நாள் இல்லை ஒரு வாரம் பிரிஞ்சிருவிங்க"ன்னு. நானும் உங்களை மாரிதான். விதி மதின்னிக்கிட்டு விடாப்பிடியா அவளையே கண்ணாலம் கட்டிக்கிட்டேன். ஊரே ஒன்னா சேர்ந்து பிரிச்சுட்டானுவோ.. நம்ம ஹிஸ்டரி ரிக்கார்ட் வேணம்னா சித்தூர் பக்கம் வந்து விஜாரிங்க. ப்ரஸ்க்ளப் எலக்சன்லருந்து, எம்.எல்.ஏ,எம்.பி எலக்சனலருந்து நெத்தியடி அடிக்கிறோம்ல.

ப்ளாக்ல சொன்னதுல மிஸ் ஆனது ஒன்னேதான் அது பெரீ சாவு. ஆனால் அப்பாறமாதான் ஸ்பார்க் ஆச்சு பிணத்துக்கெல்லாம் சாவே கடியாதுன்னு.

பெண்டிங்ல கீறது ரெண்டு மேட்டர் ஒன்னு நித்யானந்தா மர்ம சாவு அடுத்தது நவம்பர் 26க்கு மேல் பிரபாகரனின் சாகச யாத்திரை

//நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற...//

நாங்கல்லாம் அட்வான்ஸ் புக்கிங்தானுங்கோ ... நீங்ககசொல்ற ஸ்டைல் ப்ளாக் டிக்கெட் வாங்கறமாரீ..


//நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...

“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...

ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?//

பாஸ்! இது ராங் கால் . நான் சின்ன காஞ்சிவரத்துல பார்த்த நாடி டுபுக்குனு ப்ரூவ் பண்ணி ரீஃபண்ட் கூட வாங்கிட்டன். உண்மையான நாடிய பார்த்தா அப்பாறம் அதுக்கு வக்காலத்து வாங்கறேன்.

//இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்... //

நூத்துல ஒரு வார்த்தை. நீ கிளி ராசா.. ஞானக்கிளி...

//மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...

ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...//

இங்கன தான் உங்க ஜாதகம் உங்களுக்கு விரோதமா வேலை செய்திருக்கு. உங்க பாட்டு சோலோவா முடிஞ்சிரப்போவுது. மிஞ்சிப்போனா வினோத் எதுனா கேட்கலாம். டூயட்டு . அம்புட்டுதேன்.

நமக்கு வாக்குல சனி தலை. நாம பேசவே கூடாதுங்குது கெரகம்.

//சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு..//

கிழிஞ்சது கிருஷ்ண கிரி .எவனாச்சு எழுத்தாளனோ, கவிஞனோ சிகரட் இருந்தா தான் சிறுகதை வரும். சரக்கு இருந்தாதான் சந்தம் வரும்னா தலைலயே போடுங்க. கண்ணதாசன் தண்ணி போட்டிருக்கலாம்.ஆனால் தண்ணி போடற தறுதலையெல்லாம் கண்ணதாசன் ஆயிரமுடியாது.

நாம தம் போடறதுக்குண்டான காரணங்களே வேற ராசா அதையெல்லாம் சொன்னா அன்புமணி ராமதாசு ஆயி பூடுவாரு  டப்பாஸு ..