Sunday, December 26, 2010

இரும்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியங்கள்

"போதுமென்ற மனமே பொன்செய் மருந்து" பழமொழி என்னமோ எஸ்.எம்.எஸ் மாதிரி சுருக்கமா இருக்கு. ஆனால் உள்ளாற பூந்து பார்த்தா இதுல வாழ்க்கையே இருக்கு.

ரசவாதம்னா கேள்விப்பட்டிருப்பிங்கனு நினைக்கிறேன். எந்த உலோகத்தையும் தங்கமா மாத்தற சப்ஜெக்ட்.

எல்லா உயிருமே உன்னதத்தை நோக்கித்தான் பயணம் செய்யுது.

புல்லாகி பூடாகி ...........மனிதனாகி "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்னு உன்னதம் தான் டார்கெட்.

ஆனால் இந்த இன்ஸ்டிங்டை கரெக்டா புரிஞ்சிக்க முடியாத கூட்டம் (ஒரு காலத்துல நானும்) நடிகனாகனும், (இப்ப டிவி சீரியல்ல சித்தப்பா,பெரியப்பா கேரக்டர் அ கேம்பியர் தான் டார்கெட் - பொழப்பு ஓடுமே) பணக்காரனாகனும், தலைவனாகனும், நாடாளனும் துடிக்குது.

இவிகளுக்கும் ரசவாதத்துல தங்கம் பண்றேனு புறப்படறவனுக்கும் அடிப்படையில வித்யாசமில்லை.

எங்க ஊர்ல இந்த மேட்டரால பல குடும்பங்கள் குட்டிச்சுவரா போச்சு. ஒரு புருசங்காரனை பொஞ்சாதி வீட்டை விட்டு துரத்தி கின்னஸ் ரிக்கார்டே பண்ணிருச்சு.

ஒரு பிக்காலி தன்னோட ரெண்டு சகோதிரிகள் நாற்பதை நெருங்கிக்கிட்டு முலைக்காம்பு சுருங்கி கிடக்க இன்னம் ஒரே ஒரு வேர் கிடைச்சா வேலை முடிஞ்சுரும்னு அலைஞ்சுட்டு இருக்கான்.

ஆக பொன் செய் மருந்துன்னா அது ரசவாதம் தேன். அது வேறொன்னுமில்லைடா கண்ணா "போதுங்கற மனசுதான்"ன்னு பழமொழி சொல்லுது.

ரேடியோ இருந்தது. அவிகளுக்கு பிடிச்ச நேரத்துல,பிடிச்ச பாட்டை போட்டுட்டிருந்தாய்ங்க கேட்டுக்கிட்டிருந்தோம். ( வாழ்க்கையும் ரேடியோ மாதிரிதான் -அதனால வாழ்க்கை ஆலாபனை பண்ற பாட்டை கேட்டுக்கற மனப்பக்குவம் இருந்துது )

இப்ப நாம கேட்கிறத அவன் போடனும்னு நினைக்கிறோம். வாழ்க்கையை ஏத்துக்கற பக்குவமும் குறைஞ்சு போச்சு.

ரஜினி கூட ஒரு பாட்ல "இமயம் வரை உயராது எந்தனுயிர் போகாது"ன்னு பாடிட்டாரு. ஆனால் அவரு இமயத்தை நாடறது கூட எஸ்கேப்பிசம்தேன். மனுஷன் பாருங்க எத்தனை உயர்ந்த மேட்டரை கூட என்னமா மிஸ் யூஸ் பண்ணிர்ரான். டிஸ்டில்ட் வாட்டர் கால் கழுவின மாதிரி ..தூத்தேரிக்க.

உயரம் போக போக தனிமை வந்துரும். எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. ஓசோன் படலத்தை தாண்டிட்டா கதை கந்தல்தேன்.

அமெரிக்காவை பாரு..அமெரிக்காவை பாருன்னு பீத்திக்கிட்டிருந்தாய்ங்க. இன்னைக்கு என்னாச்சு அந்த நாட்டு ஜனாதிபதியே வந்து மார்க்கெட்டிங் பண்ற நிலை. நம்மாளுங்க அதை கூட பண்ணமாட்டாய்ங்க.

பசுமை புரட்சி...பசுமை புரட்சின்னுட்டு நிலமகளை மலடாவே ஆக்கிட்டாய்ங்க. விவசாயம் காஸ்ட்லி ஆயிருச்சு.

"இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே" - இதுவும் சின்னதா தான் இருக்கு. ஆனா அர்த்தம் பெருசு.


இருக்கிறதுன்னா கைவசமிருக்கிற சோர்ஸஸ், மோட்ஸ். நம்ம கைவசம் உள்ளது நிலம். மக்கள் சக்தி.ஜீவ நதிகள். தாளி ஒழுங்கு மரியாதையா விவசாயத்து மேல கான்சன்ட்ரேட் பண்ணா எங்கயோ போயிரலாம்.

ஆனால் இவிக எஸ்.இ.ஜெட் (சிறப்பு பொருளாதார மண்டலம்) ங்கற பேர்ல உள்ள விளை நிலத்தையெல்லாம் பறிச்சு கதை பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. அவன் எந்த காலத்துக்கு ஃபேக்டரி கட்டி ,எந்த காலத்துக்கு நம்மாளூக்கு வேலை கொடுத்து இதெல்லாம் ஆவறதா போறதா?

மேலும் உண்மையான் ப்ரொடக்டிவிட்டின்னா அது ஜஸ்ட் ஒரு விவசாயத்துலதான் சாத்தியம். மத்ததெல்லாம் ஜஸ்ட் கன்வெர்ஷன் தேன். ( பால் பொருட்கள் கூட கன்வெர்ஷன் தேன்) .

"ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்"னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார்.

இதை தேன் ஸ்கூல் டேஸ்லருந்து படிக்கிறமேனு சலிச்சுக்காதிங்க.இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது கருக ஆரம்பிச்சாலும் நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)

இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்) இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.

உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட ஒத்துழைப்ப கொடுக்குதுங்க

இந்த விதிப்படி பார்த்தா நாமெல்லாம் மண்ணாந்தைங்க. நாம ஃப்ளாட்டு, வீடு, டி.வி, கம்ப்யூட்டர் மாதிரி பொருட்களை பார்த்து இதை வாங்கிரனும்பா, இத மட்டும் வாங்கிட்டா போதும்னிட்டு நினைக்கிறோம். தப்பி தவறி வாங்கிட்டா அங்கே போடு, இங்கே வை. அங்கே நிற்க வைனு (முட்டாள் தனமா) பேசறோம்.

ஆனால் நான் என்ன நினைக்கிறேன்னா இந்த பொருட்கள்தான் அப்படி நினைக்க வைக்குதா? ரிமோட்டா நம்மை கமாண்ட் பண்ணுதானு ஒரு சம்சயம். மனுஷனுக்கு ஆறு அறிவிருக்கு. மனுஷன் எல்லா உயிர்களை விட மேம்பட்டவனு எழுதி வச்சிருக்காய்ங்க. நாமளும் படிக்கறோம்.

ஆனால் மனுஷனோட மனோபலம் ஜீரோ லெவலுக்கு விழுந்துட்டு ஜஸ்ட் பொருட்கள் அவனை கமாண்ட் பண்ற ஸ்டேஜுக்கு வ்ந்துட்டான். விவேகானந்தர் சொல்வாரு ..

உன் மனசை காட்டிலும் உசந்த வஸ்து இந்த படைப்புலயே கிடையாது. அப்படி எதுனா உசந்ததா தோனினா உன் மனசு வீக்காயிருக்குன்னு அர்த்தம்.

நீ ஆசைப்படறதால எதுவும் வந்து சேரப்போறதில்லை. சில நேரங்கள்ள ஜஸ்ட் நம்ம வில் பவரால - நேரங்கெட்ட நேரத்துல அகாலமா - சிலதை சாதிக்க முடியலாம். ஆனால் அது ச்சுட சுட்ட காஃபி ஊத்த ஹாட் வாட்டர் ஊத்தி கழுவி வச்சிருக்கிற ஃப்ளாஸ்க்ல ஊத்தின ஐஸ் வாட்டர் மாதிரி. ஃப்ளாஸ்கே டமாலாயிரும்.

காலம் தன் ஏற்பாட்டின் படி தன் வேகத்துல ஆறப்ப்போட்டு தான் ஊத்த நினைச்ச காஃபிய ஊத்துது

நீ தேடிப்போறது கிடைக்காது. கிடைச்சாலும் நாறிப்போயிருவ. தானா வர்ரது கிடைக்காம போகாது. உன் தேடலே உன் கண்டடைவை தாமதப்படுத்துது.

உங்களுக்கு இந்த ஸ்தூல உலகத்துல நிறைஞ்சிருக்கிற ஸ்தூலமான ஆபத்துகளே முழுசா தெரியாது. ஆனால் சூக்ஷ்ம உலகம் வேற ஒன்னிருக்கு அதுக்கு ஒரு அஜெண்டா இருக்கு.அதுல கை வச்சி திருத்தற கெப்பாசிட்டி ஒரு கடவுளுக்குதான் உண்டு.

கடவுள் ஒன்னும் கலைஞர் இல்லே எவனெவன் பாராட்டு விழாவுக்கு வந்தானு கணக்கு போட்டு அவனுக்கு ஃபேவரா அஜெண்டாவை திருத்த. சோகம் என்னடான்னா அவரால மாத்தவே முடியாது.

நீ வெய்ட்டிங்ல இருக்கனும்னா இருந்துதான் ஆகனும். உங்க இம்சை பொறுக்கமுடியாம கடவுள் வெயிட்டிங் ரூமை திறந்து வைக்கலாம்.ஃபேன் போட்டுவிடலாம். ஆனால் உங்க ஆங்க்சைட்டிய அவரால ஒன்னும் பண்ணமுடியாது. அதை மாத்தறது,மாத்திக்காதது உங்க கையில இருக்கு.

ஒருத்தன் பசி,பட்டினி,சொறி,சிரங்குமா அவதிபடறான்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் காரணம் இருக்கும். அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

ஒருத்தன் பெண்டாட்டியால இம்சை பட்டு கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன்னு ஏறியிறங்கறான்னா அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

அதுக்கு தேன் சொல்றேன் போதுமென்ற மனமே பொன் செய் மருந்து. ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்.