Tuesday, December 14, 2010

மனைவி/ காதலியால் பிரச்சினைகள்+ தீர்வுகள்

அண்ணே வணக்கம்ணே. கடந்த பதிவுல தாய்குலத்தை 9 டைப்பா பிரிச்சு அவிகளோட அம்சங்களை  விவரிச்சிருந்தேன். இன்னைக்கு ஒவ்வொரு டைப் பெண்ணாலயும் என்னா மாதிரி பிரச்சினை வரும். அதை எப்படி சால்வ் பண்றதுனு பார்ப்போம்

அதுக்கு மிந்தி ஒரு இன்டரப்ஷன் "இறந்தவன் பேசுகிறேன்"ங்கற தலைப்புல ஒரு வில்லங்கமான பதிவும் போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க.

இப்ப பிரச்சினை தீர்வு பாய்ண்டுக்கு வந்துருவம். மொதல்ல கடந்த பதிவை படிக்காத புண்ணியாத்மாக்களுக்காக டைப் ஒன் லேடீஸோட அம்சங்களை மறுபடி இங்கன காப்பி பேஸ்ட் பண்றேன்.

டைப் ஒன்:

1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம்,  வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு  சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம். இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ்.  மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம்.  ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.

பிரச்சினை & தீர்வு:

ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க. சைல்டிஷா கூட இருக்கலாம். இவிகளுக்கு ரகசியம்னாலே பிடிக்காது. எல்லாத்தையும் எல்லார் முன்னேயும் போட்டு உடைச்சுரலாம். சிலருக்கு போலி கௌரவம் இருக்கும். சரியான தூக்கம் இருக்காது. இதனோட விளைவா  தலைவலி,மலச்சிக்கல், ஜாய்ண்ட் பெய்ன்ஸ் இருக்கும். இவிகளை விமர்சிச்சா அசலுக்கே மோசம் வந்துரும். இது உன்னால தான் முடியும்னு ஒரு வேலைய கொடுத்தா  ஒடனே பைசல் பண்ணுவாய்ங்க. உன்னால முடியுதா பாரு இல்லாட்டி அவள் செய்துருவானு ஈகோவை சீண்டினா கோவிந்தா. இவிகளுக்கு முதுகெலும்புல கூட பிரச்சினை வரலாம். சின்ன வயசுலருந்தே அட்லீஸ் கண்ணாலமான நாள்ளருந்தே முதுகெலும்பை நேர வச்சு உட்கார நிற்க கத்து கொடுங்க.

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. . வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.