Wednesday, December 29, 2010

கூடுதல் கலெக்டர் திடுக் பேட்டி : சிதம்பரம் அதிர்ச்சி

மத்திய உள்துறை மந்திரி சிதம்பரம் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேனு மகாராஷ்டிரம் போனாரு. அங்கே ஒரு கூடுதல் கலெக்டர் சிதம்பரத்தை மட்டுமில்லே மத்திய அரசோட முகமூடியையே கிழி கிழினு   கிழிச்சுட்டாரு. நக்சல் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமுள்ள ஒரு மாவட்டத்துல சுத்தி வந்து படம் காட்ட நினைச்சு நம்மாளு மகாராஷ்டிரம் போனாரு.

இதுவரை எந்த உள்துறை மந்திரியும் அங்கன சுத்தினதில்லையாம். நம்மாளு அங்கே டூர்ல இருக்கிறப்பவே அந்த மாவட்டத்து கூடுதல் கலெக்டர் பாண்டே (முழு பேர் மைண்ட்லருந்து எகிறிருச்சு) ப்ரஸ் மீட் வச்சு கிழிக்க ஆரம்பிச்சாரு.

பார்ட்டி குடுமியும், மார் வரைக்கும் தாடியுமா சாமியார் மாறியே கீறாருங்கோ. அவரோட கிழிப்பு:

* இவிக வந்து போறதால ஒரு லாபமும் கிடையாது
* ஹெலிகாப்டர்ல வட்டமடிச்சுட்டு போனா  க்ரவுண்ட் லெவல்ல என்ன   நடக்குதுன்னு  எப்படி தெரியும்?

*உண்மைலயே பிரச்சினை தீரனும்னா பாரா மிலிட்டரி ஃபோர்ஸை  ரீகால் பண்ணுங்க
* மானில அரசு கேட்டாத்தான் ஃபோர்ஸ் அனுப்பனும். உங்க இஷ்டத்துக்கு அனுப்ப கூடாது

பாண்டே இப்படி கிழிக்க அவருக்குள்ள தகுதி இன்னாங்கறிங்களா?

எந்த பாதுகாப்பும் இல்லாம மாவட்டத்துல எந்த மூலைக்கும் போயி வர்ர தில்லு துரையாம்ல


பாவம் சிதம்பரம்.. குளிக்க போயி சேறு பூசிக்கினாப்ல ஆயிருச்சு

கொசுறு:
ஜனவரி மாசத்துலயே மத்தியில ஆட்சி கவிழப்போகுதுன்னு இங்கே  ஒரே புரளியா இருக்கு. ஜகன் சரத் பவாரை சந்திக்க தில்லி போயிருக்காரு. தெலுங்கானா ராஷ்டிர சமிதியும், ஜகனும் ஒரு புரிதலுக்கு வந்துட்டாப்ல இருக்கு.

ஜகனோட ஸ்கெட்ச் என்னன்னா ராயலசீமால ஆட்சி -தெலுங்கானால வலுவான எதிர்கட்சி

பார்ப்போம்..