Friday, December 10, 2010

பெண் , வாழ்வின் சங்கீ(கே) தம்

பெண்ணின் மறுபக்கம் : கேள்வி பதில்
அண்ணா வணக்கம்ணா,
என்னதான் சரோஜாதேவித்தனமான ஃப்ளாஷ் பாக்ஸ், கில்மா, பலான ஜோக்குன்னு  எழுதினாலும் தாய்குலத்தோட ஆதரவு நம்மை விட்டு விலகமாட்டேங்குது. என்ன ஒரு பிரச்சினைன்னா அவிக கமெண்ட் போடமாட்டாய்ங்க. தனிப்பட்ட மெயில்லதான் கருத்து தெரிவிக்கிறாய்ங்க.

நம்முது சிம்ம ராசி. அதிபதி சூரியன்.இவரு பித்ருகாரகன்.( டாடிங்கோ) லக்னமா கடகமா போச்சு.இதுக்கு அதிபதி சந்திரன் மாத்ருகாரகன் ( மம்மிங்கோ) "தத்த நாடி" ஒரு தடியான தெலுங்கு புஸ்தவத்துல படிச்சதா ஞா.

"லக்னம் கடகமாகி , ராசி சிம்மமானால் பெண்கள் தங்கள் தாய் தந்தையர்கிட்டே பகிர்ந்துக்காத மேட்டரை கூட இவிக கிட்ட ஷேர் பண்ணிக்குவாய்ங்க"ன்னு ஆத்தர் சொல்லியிருந்தாரு -இதுல அவிக ரெண்டு பேரும் பரிவர்த்தனமாகி ஆட்சி பெற்ற கணக்கா இருக்கிறதால இந்த இம்சை சாஸ்தியாயிருச்சுங்கண்ணா.

இப்பயாச்சும் தாடியெல்லாம் வெள்ளையாகி, ஆன்மீகம்,ஜாதகம்னு ஹார்ம்லெஸ்ஸா, வெள்ளை சாம்பார் கணக்கா, 43 வயசுக்கே ஆடிய ஆட்டம் என்னன்னு அடங்கி கிடக்கோம்.இப்ப ஷேர் பண்ணிக்கிட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா நாட் நாட்லயே " ஏய் சொன்னா கேலி பண்ணக்கூடாது.. நமக்குள்ள எவ்ள சண்டை வந்தாலும் வெளிய சொல்லக்கூடாது . இதை நீ ஒருத்தன் தான் புரிஞ்சுக்குவேனு உனக்கு சொல்றேன்" மாதிரி முன்னுரையோட சமவயது பெண்குட்டிகள் கூட எத்தனையோ வில்லங்கமான கேள்விகளையெல்லாம் கேட்டு பதில் வாங்கியிருக்காய்ங்க. எல்லாத்தயும் கூட்டி கழிச்சு பார்த்தா தத்த நாடி நெத்தியடி போலத்தான் இருக்கு. சரிங்கண்ணா மேட்டருக்கு வந்துருவோம்.

பெண்ணின் மறுபக்கம் தொடரை ஆரம்பிச்சதுமே என்ன கெட்டுப்போனவளை பத்தி,சாடிஸ்ட் மனைவிகள் பத்தி ,பெண் கிரிமினல்ஸ் பத்தி எழுதப்போறிங்களா? புது தளத்துல இறங்கறிங்க வாழ்த்துக்கள் மாதிரி மெயில்ஸ் எல்லாம் நிறைய வந்தது. இந்த சாதிய எல்லாம் விலக்கி வச்சுட்டு தொடரிலான என் எழுத்துக்கள் மேல வந்த விமர்சனங்கள்,சந்தேகங்களை மெயில் பண்ணவுக அனுமதியோட இங்கன பதிச்சு அதுக்கெல்லாம் ஆன்சர் பண்ணவும் ட்ரை பண்ணியிருக்கேன்.

கேள்வி: 1
பெண்கள் மேல ஏன் உங்களுக்கு இத்தனை ஆர்வம்?

பதில்:
த பார்ரா பெண் மேல ஆர்வமில்லாத ஆண் எங்கன இருக்கான். அப்படி இருக்கிறவன்தான்  வரதட்சிணை வாங்கறான், மார்கெட் பண்றான், நீலப்படம் எடுக்கிறான், ப்ரோக்கரேஜ் பண்றான்.

அக்சுவலா எனக்கு ஆண்கள் மேல தான் ஆர்வம் ( அதுக்குன்னு என்னை ஹோமோவாக்கிரப்போறிங்க - ஜஸ்ட் ஒரு இனப்பற்று ) பாவம் ஆண் எவ்ள பெரிய அறிவாளியா இருந்தாலும் பெண் விஷயத்துல முட்டாளாயிர்ரான்.   நான் ஒரு லீடர். அதாவது ஒரு கூட்டத்தை வழி நடத்தறவன். மொதல்ல எனக்கு மேட்டர் என்னனு தெரிஞ்சாதானே நான் வழி நடத்த.. ஒரு ஆண் நல்ல படி மோல்ட் ஆனா அது அவன் சொந்த விஷயம். ஆனால் ஒரு பெண் சைக்கலாஜிக்கலா நல்லபடி மோல்ட் ஆயிட்டா அவள் குடும்பம்,க்ளாஸ்,காலனி ஏன் அந்த ஏரியாவே பிரகாசமாயிரும்.

பெண் என்பவள் இயற்கையின்,உயிர்வாழ்தலின்,இருத்தலியலின் , வாழ்வின் சங்கேதம். வாழ்வை துரத்தும் மரணத்தை மறக்கடிக்கும் சங்கீதம்.அதுலயும் அபஸ்ருதி  உண்டு இல்லேங்கலை.ஆனால் அது நோட் எழுதினவனோட தவறு.அவளோட தவறில்லை.

கேள்வி:2
பெண்ணை அக்கா,தங்கச்சிங்கறதை ஏன் கிண்டலடிக்கிறிங்க?

பதில்:
அது மனசுலருந்து வர்ரதில்லிங்க. ஒரு ஆண் பெண்  சேர்ந்து ஸ்தூலமா என்ன செய்துட்டிருந்தாலும் சரி ஒரு ட்ராக்ல "அது"ஓடிக்கிட்டே இருக்கும்.  ஒல்லி பீச்சானா, கண்ல மட்டும் உசுரை வச்சிக்கிட்டு ,பவர் கிளாஸ் போட்டுக்கிட்டு , இன்டர் நெட்ல வெறும் எழுத்தா கிடக்கிற பக்கங்களை ப்ரவுஸ் பெண்ற பெண்ணை பார்த்தா இது மாதிரி ஒரு தங்கச்சியிருந்தா நல்லாருந்திருக்குமேனு தோணும். இல்லேங்கலை.

ஸ்டாண்ட்ல வெயிட் பண்ற ஷேர் ஆட்டோல ஒரு பையில ரிப்பேரான மிக்சியும் ,இன்னொரு பையில  ரெண்டு மாசத்துக்கு தேவையான காய் கறியும், ப்ளெயின் புடவையும், மேட்சிங் ப்ளவுஸும், குஷ்புதனமான ஃபிசிக்குமா , முகத்துல பொடிச்ச வியர்வைய கர்சீஃபால துடைச்சிட்டே உட்கார்ந்திருக்கிற ஒரு பெண்ணை பார்த்தா அதுவும் "இன்னாடா இது.. இதும்பக்கத்துல ஒக்காரனுமா? ஒரு தம் போட்டுட்டு அடுத்த ஆட்டோல போலாமுனு நினைக்கிறச்ச சவுஜன்யமா உள்ளுக்கு நகர்ந்து உட்கார்ந்து இடம் கொடுக்கிற பெண்ணை பார்த்தா " தோடா இந்த மாரி ஒரு அக்கா இருந்திருந்தா நல்லாதான் இருந்திருக்கும்போலனு தோணும்.இல்லேங்கலை.

அதுக்காக கண்டவளையும் அக்கா,தங்கச்சினு விளிச்சுக்கிட்டு அவ ஏமாந்த சமயம் கண்ட இடத்துல கண்ணை மேய விடற கயவாளீத்தனம்லாம் நமக்கு பிடிக்காதுங்கோ..

இந்த அக்கா தங்கச்சி  அழைப்பும் அங்கீகரிப்பும் எப்படியிருக்குதுன்னா "உடலுறவுக்கு அனுமதிக்கமாட்டேன்"ங்கற போர்ட் மாதிரியும், "எங்களுக்குள்ள உடலுறவு இல்லேனு சமுதாயத்துக்கு அறிவிச்சுக்கற  முயற்சியாவும் தான் இருக்கு. தங்கள் மேல சந்தேகம் இருக்கிறவுகதான் இந்த மாதிரி போலி அழைப்புகள்,அங்கீகரிப்புகளுக்கு இலக்காகிறாய்ங்க. இன்னம் உபகதைகள் எல்லாம் இருக்கு. ஆனால் சொல்லலை.பச்சையா போயிரும்..

கேள்வி: 3
// உங்க எதிர்க்க ஒரு ஆளு நாய கூட்டிட்டு வராரு. அந்த நாயி உங்களை கடிச்சுருச்சுனு வைங்க. நாய்கிட்டயா சண்டைக்கு போறிங்க. இல்லை .அந்தாளுகிட்டேதான் சண்டைக்கு போவிங்க.அதுமாதிரி தாய்குலம் அவிக எசமானங்க கையில நாய் மாதிரி//
இது ஓவராயில்லயா?

பதில்:
யம்மாடி .. இன்டர் நெட்ல படிக்கிறச்ச மைண்ட் பஜ்னு ஆயிருது. அதை கொஞ்சம் உசுப்பி விடனும்னா இந்த மாதிரி வார்த்தை பிரயோகம்லாம் தேவைதான். நான் சொன்ன உதாரணம், பண்ண வார்த்தை பிரயோகத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. நான் சொன்னதுல எங்கனா ஃபால்ட் இருக்குதா? இருந்தா அதை பேசுங்க

கேள்வி:4
ஒரு பையன் தன் தாயை தேடித்தான் காதலிக்க  துவங்கறான். ஒரு பெண் தன் தந்தைய தேடித்தான் காதலிக்க துவங்கறாள்ங்கறது சைக்காலஜி. ஆனால் அவிக அப்படி தேடறதே தங்கள் பெற்றோரை பழிக்கு பழி வாங்கத்தானு சொல்றிங்களே இதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

எல்லா வாழ்க்கையுமே தோல்வித்தேன். அதான் செத்துப்போயிர்ரமே. அட சாகிறது அப்பாறம். நாமதான்  வாழறதே இல்லையே. உங்க வாழ்க்கைய நீங்களா வாழ்ந்திருந்தாலாவது ஒரு திருப்தியாச்சும் இருந்திருக்கும்.அந்த வாய்ப்பையும் உங்க பெற்றோர் தரலை. அவிக வாழ்க்கையும் தோல்விதான்.ஆனால் அவிகளா சில வெற்றி சூத்திரங்களை வடிவமைச்சு  உங்க மண்டைக்குள்ள திணிச்சாய்ங்க.

அவிக பார்த்த உலகம் வேற. நீங்க பார்க்கப்போற உலகம் வேற. அவிக அனுபவம்லாம் 25 வருஷத்துக்கு முந்தின  தினசரி பத்திரிக்கை மாதிரி.

பெற்றோர்கிட்டே குழந்தைகள் அனுபவிக்கிற  கொடுமைங்கறது கொடுமையிலயும் கொடுமை. லோயர் மிடில் கிளாஸ், லோ கிளாஸ்லயாச்சும் பரவாயில்லை.படிப்பு, சத்துணவு, ஆரோக்கியம் இத்யாதிக்கு வழியில்லன்னாலும் சுதந்திரமாவது கிடைக்கும். ஆனா மத்த ஃபேமிலிஸ்ல?

சொன்னா மானக்கேடு சொல்லாட்டா வெட்கக்கேடு . சொன்னாலும் சமூகம் என்ன சொல்லும் "தத் வாய மூடு உன்னை வளர்க்க உங்கப்பாம்மா என்னமா கஸ்டப்படறாய்ங்க தெரியுமா"

இந்த ஊமைக்கோபம் ஒவ்வொரு மனசுலயும் இருக்கு. அது எரிமலைக்குள்ள லாவா மாதிரி கிடக்கு. அதான் தம்பதிகள்,காதலர்கள்  இடையில் வெடிக்குது. இந்த ஒரு பாயிண்டை சொன்னதுக்கே  நமக்கு டாக்டர் பட்டம் கொடுக்கனும். ( ஹும்.. இப்பல்லாம் ரெம்ப சீப்பாம்ல ஒரு அம்தாயிரம் ஆகுமா?)

(கேள்வி பதில் அடுத்த பதிவிலும் தொடரும் - உணர்ச்சிவசப்பட்டு நீங்களூம் கேள்விகளை கேட்க விரும்பினால் கேட்கலாம் - மெயில் /எஸ்.எம்.எஸ்/ கமெண்ட் எப்படி வேணம்னாலும்)