Friday, December 31, 2010

கில்மா சிறுகதை: 2

1-1-2011
டி.எஸ்.பி தொடர்ந்து கேள்விகளை ஃபாஸ்ட் பவுலர் கணக்காய் வீச  பதில் சொல்லமுடியாமல்  நெளிந்தார் எஸ்.ஐ.

"ஏன்யா நீ பயங்கர தண்ணி பார்ட்டி. விடிய விடிய கூத்தடிச்சுட்டு விடிஞ்ச பிறவு தூங்கப்போற கேசு. சூரியன் உச்சிக்கு வந்த பிற்பாடுதான் முந்தின நாள் நீ என்ன பண்ணேனு சனத்துக்கு ஃபோன் போட்டு கேட்கிற பார்ட்டி.விடியல் 4 மணிக்கு தீவிரவாதிகளை பிடிச்சேன்னா எப்படிய்யா நம்பறது?"

"இல்லிங்கய்யா ரோந்துப்பணிய முடிச்சுக்கிட்டு வர்ரச்ச ஹைதராபாத் உல்வா பஸ் புறப்பட இருந்தது. சரி  நியூ இயர் வேற வருது . எந்த பிக்காலின்னா தலை நகர்ல அலம்பல் பண்ண இங்கருந்து சாமான் செட்டோட  போனா என்ன பண்றதுனு தரோவா செக் பண்ணோம்.."

"யோவ் நீ உன் கதையையெல்லாம் பேப்பர்காரனுக்கு சொல்லு. போயா போய் வேலை பாரு. என்ன நடந்திருக்கும்னு சொல்லவா? நீ பாட்டுக்கு குப்புற படுத்து தூங்கிக்கிட்டிருந்திருப்பே.. உன் ஸ்டேஷன்ல மதுன்னு ஒரு துடியான கான்ஸ்டபிள் இருக்கான். மதுவோ அல்லது வேறு எவனோ ரோந்துல இருந்திருப்பான். அவன் அந்த டெர்ரரிஸ்டுங்களை பிடிச்சு வச்சிக்கிட்டு உனக்கு மெசேஜ் கொடுத்திருப்பான்..நீ ஹேங் ஓவருக்கு ஒரு ஸ்ட்ராங் காஃபி அடிச்சுட்டு ஸ்டேஷனுக்கு வந்து எனக்கு ஃபோன் போட்டிருப்பே கரெக்டா?"

"இல்... இல்லை சார்.. நான் தான்.."

"சரி சரி இப்ப எனக்கு  என்ன  போச்சு தீவிரவாதிகளை பிடிச்சாச்சு ..யார் பிடிச்சா என்ன.. ஆகவேண்டியதை பார்க்கிறேன். என்ன ஒரு இன்க்ரிமென்ட், கேஷ் ரிவார்ட், உத்தம காவலர் விருதுக்கு ரெக்கமண்ட் பண்ணனும் அவ்ளதானே"

"சார் மதியம் பிரஸ் மீட்டுன்னு ஆஃபீஸ்ல சொன்னாங்க.."

"ஆமாமாம்  நல்லா பவுடரை அப்பிக்கிட்டு வந்திரு.. ஆமய்யா உனக்கு குழந்தைகளே இல்லியாமே யாருனா நல்ல டாக்டரா பார்க்க வேண்டியதுதானே"

"பார்க்கனும் சார் ..வரேன் சார்"

*           *                 *

1-1-2012

எஸ்.ஐ தலைகுனிந்து உட்கார்ந்திருக்க டி.எஸ்.பி முகம் சிவந்திருந்தது.  தூத்தேரி.. போலீஸ் டிப்பார்ட்மென்ட் மானத்தையே வாங்கிட்டயேய்யா..பொம்பளைக்கு செக்ஸ் கூட செகண்டரிதான்யா. எப்பப்பாரு குடி , தீனி இதானா லைஃப்.

சரி நீதான் வகையத்தவனு உனக்கு தெரியும் இல்லியா .அந்த கான்ஸ்டபிள் மது துடியான பையன். அவனை போயி ஆர்டர்லி கணக்கா உன்  வீட்டு வேலைக்கு உபயோகிச்சிருக்கே.

பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சு. இப்ப பொஞ்சாதி கர்பம். மது மன்மத வேலை பண்ணிட்டான்னு பதைக்கிறே..

நடவடிக்கை எடுத்தா உன் மானமும் சேர்ந்துதான் போகும். பலான புஸ்தவத்துல கூட உன் கதைய தொடரா போட ஆரம்பிச்சுருவான். அந்த மதுவை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிர்ரன். அவன் தன் உழைப்புல பிடிச்ச தீவிரவாதிலருந்து, கஞ்சா,சந்தனக்கட்டை கும்பல் வரை நீ பிடிச்சதா கணக்கு காட்டி கேமரா ஃப்ளாஷுக்கு முன்னாடி இளிச்சே இல்லை.. இப்போ அவன் நல்லாவே உழைச்சு உன் பொஞ்சாதிய கர்பமாக்கியிருக்கான். எப்படியும் உனக்கு குழந்தைங்க இல்லை. பிறக்கவும் பிறக்காதுன்னு டாக்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டதா நீயே சொல்றே..பேசாம அவன் உழைப்புக்கான மெடலை  நீ வாங்கி நெஞ்சுல  குத்திக்கிட்ட மாதிரி அவனோட வாரிசையும் வாரி அணைச்சுக்க..எப்படியும் நீ நல்ல போலீஸ்காரன் கிடையாது. உன் மூலமா டிப்பார்ட்மென்டுக்கு ஒரு நல்ல போலீஸ்காரனாவது கிடைக்கட்டும்