Sunday, December 5, 2010

பெண்ணின் மறு(ரு)பக்கம் : 3

பெண்ணின் மறுபக்கம்: 3

நான் இந்த தொடர்பதிவுல் ஏதோ பெண்களை பத்தி மட்டும் எழுதிக்கிட்டிருக்கேனு நினைச்சிருந்தா ஐம் சாரி. ஆண்,பெண் என்று பிரிச்சு பேசறதையே விரும்பாதவன் நான். ஆண் பெண் எல்லாமே ஒரே இனத்தை சேர்ந்த  மிருகங்கள் தேன். இது ரெண்டுத்துக்குமிடையில அந்த காலத்து குமுதம் மாதிரி ஏதோ 6 வித்யாசமிருக்கலாம். அதுக்காக அந்த வித்யாசங்களையே பூதாகரமாக்கி, அவளை ஏதோ பூமில கால் பாவாத சமாசாரம் ரேஞ்சுக்கு விலக்கி வச்சுர்ரத என்னால சீரணிச்சுக்க முடியறதில்லை.

என்ன சொன்னேன் ? ஆங் ஆண் பெண் எல்லாமே மிருகம்தேன். மிருகம்லாம் அம்மணமா திரியுது. நாம ஆடைக்குள்ள அம்மணமா இருக்கோம் அம்புட்டுதேன். ஆளுமைய இங்கிலீஷ்ல பர்சனாலிட்டிங்கறாய்ங்க. இதுக்கான வேர்சொல் முகமூடி. ஆமாங்கண்ணே ஆளுக்கொரு முகமூடிய போட்டுக்கிட்டு வலம் வந்துட்டிருக்கோம் . இந்த முகமூடி கழண்டுக்கறதே உயிர்பயம், இயற்கை உந்துதல், காமத்தின் போதுதேன்.

பொய்யா கூட வாழ்ந்துரலாம். ஆனால் அந்த பொய்யை பொய்யினு தெரிஞ்சுக்காம  வாழ்ந்துரப்படாது. உண்மைய ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சி வச்சிக்கிட்டா நல்லது. இல்லைன்னா அது திடீர்னு தரிசனம் கொடுக்கறச்ச மேக்கப் இல்லாத சினிமா நடிகை மாதிரி ரெம்பவே பேதியாக்கிரும்.

அட மிருகம் ஒன்னு உள்ளாற இருக்கு. அதுக்கு சமூகம், பம்பாடு, அது இதுனு ஒரு சங்கிலிய போட்டு வச்சிருக்கம். கரீட்டுதான். இல்லைன்னா தாளி கான் க்ரீட் காடு காடாவே ஆயிரும். ஆனால் அதை அப்பப்போ உலவ விடனும்பாஸ். இல்லைன்னா உள்ளாறவே கழிஞ்சு வச்சுரும். சங்கிலியை அறுத்துக்கிட்டு பாஞ்சுரும். ( தந்தில செய்தியா வந்து லேண்ட் ஆகும்)

ஹ்யூமன் பிஹேவியர் ரெண்டு விதம். சமூகத்தின் பார்வையில இருக்கிறச்ச ஒரு விதம். தனிமைல இருக்கிறச்ச ஒரு விதம்.

எவ்ரி மேன் ஈஸ் என் ஐலண்ட் ங்கறாய்ங்க. அப்பாறம் பார்த்தா மேன் ஈஸ் எ சோஷியம் அனிமல்ங்கறாய்ங்க( சமூக பிராணி) . சூட்சுமம் என்னடான்னா இவனோட/இவளோட தேவைகள் நிறைவேர்ர வரை சோஷியல் அனிமல் ,தேவைகள் நிறைவேறிட்டா ஐலண்டு (தீவு)

அந்த காலத்துல ஆற்றங்கரைக்கு போறச்ச தாய்க்குலமெல்லாம் கூட்டமாதான் போவாய்ங்க. பத்தினி,பரத்தை எல்லாம் கலந்து போவாய்ங்க.ஏன்னா தேவை. இன்னிக்கு ஃபோனை போட்டா வாட்டர் கேன் வந்து இறங்கிருது. அப்பாறம் எங்கன சோஷியல் லிவிங்.

இவ்ளோ எதுக்கு பத்து வருஷம் மின்னாடி கூட தாய்குலமெல்லாம் கூடி மேட்னி ஷோவுக்கு போவாய்ங்க. சோஷியல் லிவிங்.இன்னைக்கு?

நீங்க இயற்கையில கவனிங்க. ஆண் ,பெண் மிருகங்களோட பிஹேவியர் ஒரே மாதிரிதான் இருக்கும். ( உடலுறவுல தவிர)  ஆனால் மனித குலம் மட்டும் ஏன் இப்படி ஆயிருச்சு?

பிறப்புலருந்து ,இறப்பு வரை ஏனிந்த வித்யாசம்?

கற்காலம், சஞ்சார வாழ்வுலல்லாம் கூட ரெண்டு சாதியும் ஒரே மாதிரி தான் போயிருந்திருக்கனும்.ஸ்திரவாசம் வந்த பிறவு செக்ஸை கொஞ்சம் ஆற அமர அனுபவிக்கிற வாய்ப்பு கிடைச்ச பிறவுதான் ஆண்குலத்துக்கு தெரியவந்திருக்கும். செக்ஸுல பெண் எவ்ளோ ஸ்ட் ராங்கு.. தாங்க எவ்ளோ வீக்குன்னு.

ஆண் ஒரு தாட்டி உச்சமடைஞ்சா டீலாயிர்ரான். பெண் ஒரே ராத்திரில 23 தடவை உச்சம் பெற முடியுமாம். இங்கன ஆண் சாதி கலவரமாயிருச்சு. பெண்ணுக்கு உச்சம்ங்கற மேட்டர் சாத்தியமானாதானே 23 தாட்டின்னுட்டு அவளோட க்ளிட்டோரிசையே வெட்டிப்போட்ட இனம்லாம் சரித்திரத்துல இருந்திருக்கு.

இது ஒரு பாயிண்டுன்னா ஸ்திரவாசத்துனால ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி ஏற்பட்டு போச்சு. ( வேறென்ன பண்படுத்தப்பட்ட நிலம்) .இது தன்னோட வாரிசுக்கே போய் சேரனுங்கற எண்ணம் வலுப்பட்டுது.

அவளோட யோனிக்கு பூட்டுப்போட முடியாத காரணத்தால அவளுக்கே பூட்டுப்போட ஆரம்பிச்சது ஆண் சாதி. இங்கனருந்துதான் ஆண் பெண் ஆறு வித்யாசம் அறு நூறு வித்யாசமா வளர ஆரம்பிச்சது.

லேபர் வார்டுல பிரசவம் ஆன பிற்பாடு குழந்தைய தனிய கொண்டு போயிர்ராய்ங்க. அதனோட கையில ஒரு பிளாஸ்திரில பால் பாயிண்ட் பேனால செயில் கைதி மாதிரி நெம்பர் இருக்கும் தட்ஸால். பிளாஸ்திரி மாறிட்டா கோவிந்தா கோவிந்தா.

இன்னைக்கு எவனெல்லாம் தன் வாரிசுகளுக்காக ஊரை அடிச்சு உலையில போடறானோ பெண்டாட்டிய காட்டி/ கூட்டி/வச்சு  கூட மேனேஜ் பண்றானோ அந்த வாரிசு இவனோடதுதானாங்கறதுக்கு கியாரண்டியே கிடையாது.

இந்த வாரிசு மேட்டருக்காகத்தேன் தன் சக பயணியான பெண்ணையே அடிமையாக்கி / அவ என்னைக்கு புரட்சி பண்ணிருவாளோனு தொடை நடுங்கிக்கிட்டு அவ பண்ற மவுனபுரட்சி,ஒத்துழையாமை, சதி இத்யாதிக்கெல்லாம் பலியாகிக்கிட்டிருக்கான்.

மொத்தத்துல இந்த வாரிசு மேட்டர்ல ஏன் இத்தனை இன்டரஸ்டு? மனித வாழ்வை டிஃபைன் பண்ண சொன்னா நம்ம டெஃபனிஷன் இதான்.

மரணம் குறித்த அச்சத்தால் கண்டதையும் மரணத்துடன் முடிச்சு போட்டு, மரணத்தின்  நிழலா கருதி நிழல்களோட யுத்தம் பண்ணிக்கிட்டு மரணத்தை வேகமா முத்தமிடற முயற்சிதான் வாழ்க்கை.

தனிமை,ஏழ்மை, காலம்,தூரம்,முதுமை,இருட்டு இப்படி சகலத்தையும் மரணத்தோட முடிச்சு போட்டுக்கறான். இதெல்லாம் ஜஸ்ட் மரணத்தின் உருவகங்கள்தேன். அதுவும் இவன் மனசுங்கற ஹார்ட் டிஸ்க்ல புகுந்த அகந்தைங்கற வைரஸ்  பண்ற  வேலை.

மரணத்தை வெல்ல வாரிசை உருவாக்கறான். இவன் வாரிசு இவனோட மறு உருவம். மரணத்துக்கப்பாறமும் இவன் அவன் ரூபத்துல வாழ்வானு ஒரு மித். இந்த இழவுக்குத்தேன் வாழ்க்கை களத்துல இவனோட சக போராளியா இருந்து கை கொடுக்க வேண்டிய பெண்ணை அடிமையாக்கி , உள்ளுக்குள்ள அவளை பேயாக்கி இவனை இவன் அங்காடி நாயாக்கிக்கிறான்.

இவனுக்கு பயம். அவள் எங்கே தன்னை பீட் பண்ணிருவாளோனு பீதி. அதனால அவளை நாமினேஷனே போடவிடாம பண்றான். கருவுலயே கருவறுக்க பார்க்கிறான்.புறக்காரணம் எதுவா இருந்தாலும் உண்மை காரணம் இதான்.

ஒருத்தன் காளை மாட்டை இழுத்துட்டு போறான். அப்ப யாரோ கேட்கிறாய்ங்க. இந்த காட்சில  பந்தப்பட்டு இருக்கிறது யாரு மனுஷனா? காளை மாடா? மனுஷன் தேன். இவனால அதை விட முடியலை. முடியாது. இதான் பெண் விஷயத்துலயும் நடக்குது.

அவள் அடிமையா இருக்கிற மாதிரியே நடிச்சு இவனை அடிமையாவே ஆக்கிட்டா. ஆணுக்காகத்தேன் பெண் என்ற மேல்ஷேவனிசம் இருந்தாலும் ஒரு ஆணை பெண்ணுக்காகவே தயாரிக்கிறாய்ங்க.

இவன் அழுதா என்னடா பொட்டைமாதிரி அழுதுக்கிட்டு.. நாளைக்கு பொஞ்சாதி என்ன மதிப்பா? என்னடா இது பொட்டச்சி மாதிரி படம் வரைஞ்சுக்கிட்டு இவனோட இயல்பு படி இவன் வாழ முடியாம பெண்ணால பந்தப்பட்டு கிடக்கிறான்.

பெண் தன்னையே பொறியாக்கி,தன்னையே மசால் வடையாக்கி இந்த பிக்காலி மாட்டினா போதும்னு இருக்கா..

அவளை சின்ன வயசுலருந்தே தயாரிக்கிறாய்ங்க. அட கர்பத்துல இருக்கிறச்சயே ட்ரீட்மென்ட் மாறுது.( பாரேன் மொகமெல்லாம் வெளுத்துக்கிடக்கு நிச்சயமா ஆம்பள புள்ளதான்-இப்பல்லாம் லேட்டஸ்டா ஸ்கான்)  அவளுக்கு சரியான உணவு கிடையாது ( ஆம்பள புள்ள அவன் சாப்பிடட்டும்.. உனக்கென்னடி அவசரம்) , படிப்பு கிடையாது (பொட்டப்புளை எப்படியும் அடுப்பூதத்தான் போறா ..அவளுக்கு படிப்பெதுக்கு).

ஒரு பறவைக்கு ரெண்டு சிறகையும் வெட்டிட்டா அது எப்படி பறக்க ஆரம்பிக்கும். "வெளிக்காட்டப்பட்ட கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளடக்கி வைக்கப்பட்ட கோபம் பழிவாங்கலுக்குத்தான் திட்டமிடும்"

பெண் பேயா மாற அடிப்படைக்காரணம் இதான். ஆண்கள் மேட்டர்ல மட்டும் என்ன வாழுதாம்? காதல்ல ஒரு பெண்  தன் தந்தையை தேடுறாளாம். ஆண் தாயை தேடுறானாம் . சைக்காலஜி சொல்லுது. எதுக்குனு நான் சொல்றேன் ( டாக்டர் பட்டமா? அட நமக்கெதுக்கு பாஸ் அதெல்லாம் ரூபாய்க்கு நாலு கிடைக்குதாமே)

அந்த ரெண்டு பேரும் தங்களோட பெற்றோர்களை தேடறது அவிகளை பழிவாங்கத்தேன். தங்களோட இளமை காலத்தை சிறையாக்கி, தங்கள் சுதந்திரத்தை தனித்தன்மையை சுட்டுப்பொசுக்கி தங்களுக்கு நகலாக்கிவிட்ட பெற்றோரை பழி வாங்கத்தேன் தேடறாய்ங்க.

அப்பாறம் எப்படிங்கண்ணா பெண் பேயா மாறாம இருப்பா? ( தொடரும்)