பாவம்! முரளிக்கு இப்படி ஒரு லட்சியம் வரதுக்கு அப்படி ஒரு காரணம் இருக்கும்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலைங்கண்ணா.
முரளின்ன உடனே சமீபத்துல மேல் லோகத்துக்கு படிக்கப்போயிருக்கிற நிரந்தர மாணவர் நடிகர் முரளிதான் ஞா த்துக்கு வருவாருன்னு தெரியும். ஆனால் நான் சொல்லவந்தது வேற ஒரு முரளி.
போர்ட்டபிள் டிவி கணக்கா சுருக்கமான உருவம். நல்ல நிறம். நம்மாளுங்கள்ள ரேரா அமையக்கூடிய ப்ரவுன் ஐ. ஏதோ தனியார் கல்லூரியில யோகா ,மாரல் சைன்ஸுனு கதை பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி.வயசு என்னவோ முப்பதுக்குள்ளத்தான்.
என்னதான் நமக்கும் பொல்யூஷன் இயற்கை பேரழிபத்தி எல்லாம் கொஞ்சம் போல இன்டரஸ்ட் இருந்தாலும் காலங்கார்த்தால காய் கறி மார்க்கெட்டாண்டை நின்னுக்கிட்டு பிளாஸ்டிக் பைல கறி கா வாங்கிட்டு போறவனையெல்லாம் நிக்கவச்சு பேப்பர் பேக் , க்ளாத் பேகோட சேஃப்டி பத்தியும்,பிளாஸ்டிக்கால ஏற்படக்கூடிய அழிவை பத்தியும் கிறிஸ்தவ பாதிரியார் மாதிரி பன்னா பன்னானு சனங்கள் கிட்டே பேசி மாய நம்மால முடியாது.
எல்லா பிக்காலிக்கும் தான் என்ன பண்றான்னு தெரியும். தெரியாமயா செய்யறான். தெரிஞ்சுதான் செய்யறான். நாம சொன்ன மாத்திரத்துல விட்டுரவா போறான். இல்லே .தனக்கா தோனினா தான் விடுவான். நாம சொல்லி ஆகப்போறதென்ன? வேணம்னா நம்ம குற்ற உணர்வு குறையலாம் தட்ஸால்
ஆனா முரளிக்கு அதே வேலைதேன். இதுமட்டுமில்லிங்கண்ணா விடியல்ல (மார்கழில உட்பட) சின்ன சின்ன டப்பால பெய்ண்ட் இத்துனூண்டு ப்ரஷ் எடுத்துக்கிட்டு போய்
காலியா இருக்கிற சுவர்ல எல்லாம் சேவ் ஆயில் சேவ் பவர் சேவ் வாட்டர்னு எழுதிக்கிட்டிருக்கிற கேரக்டர்.
இன்னைய தேதிக்கு மீடியாவோட பகாசுரப்பசிக்கு சோனியா, அத்வானி,கலைஞர் ,ஜெயலலிதா மட்டும் போதலை. ஒரு தினசரில எவனோ வேலையத்த நிருபன் நம்ம முரளியை பத்தி சென்டர் ஸ்ப்ரெட்ல படங்களோட ஒரு ஐட்டத்தை போட்டுட்டான்.
முரளிக்கு மகாசனங்க மத்தில பேராதரவு. தாளி சனத்துல சில பேர் இருக்காய்ங்க. அவிக அப்பா பேரு பேப்பர்ல வந்தாதான் அவனை போயி அப்பான்னு கூப்பிடுவாய்ங்க,.அப்படியா கொத்த ஊர்ல சென்டர் ஸ்ப்ரெட்ல வந்த முரளிய விடுவாய்ங்களா என்ன?
பெயிண்ட் கடைகாரர் ஒருத்தர் ஃப்ரீயா பெயிண்ட் கொடுக்கறேன்னாரு.ஒரு ஆர்ட்டிஸ்ட் நான் ஃப்ரீயா எழுதறேன்னாரு .. நான் மேட்டரை நீங்க சொல்லுங்க. நான் சுருக் நறுக்குனு ஃபார்ம் பண்ணிதரேண்ணேன். ஸ்லோகன்ஸ் எல்லாம் அழகான பெயிண்டிங்கோட நகர சுவர்களை அலங்கரிக்க ஒரு நகைக்கடைகாரர் இதை பத்தி ஒரு புக்லெட்டே போடலாமேன்னாரு.அதையும் செய்தாச்சு.அட்டையில பெயிண்ட் டப்பாவோட கையில் ப்ரஷ்ஷோட முரளி .
ஊர்ல எங்கப்பாரு இதே பேச்சுத்தேன்.முரளிக்கு ஒரு ஹீரோ ரேஞ்சில பப்ளிசிட்டி .ஒன்னு ரெண்டு குட்டிங்க ஆட்டோகிராஃப் கூட வாங்கிருச்சுன்னா பாருங்களேன்.
ஊரையடுத்து ஒரு பிரபலகோவில். அதனோட நிர்வாக குழுவுல நம்மாளை மெம்பராக்கிட்டாய்ங்க.
நம்ம ஹெட் ஆஃபீஸ் காரவுக இன்ஸ்பெக்சனுக்குன்னு ஊருக்கு வர அவிகளை குஜிலி பண்றதுக்காக கோவிலுக்கு கூட்டி போக வேண்டியதாயிருச்சு. தரிசனம் முடிஞ்சு வர்ர பக்தாள் கையிலல்லாம் பிளாஸ்டிக் பிரசாத பை.
நம்ம முரளி இருக்கிற இடத்துல பிளாஸ்டிக்கா? நோ நெவர். உடனே நிர்வாக அலுவலகம் போய் முரளி எங்கேனு கேட்டேன். சூ காட்டினாய்ங்க.
முரளி இப்போ நல்லாவே புஷ்டியாகியிருந்தான். முகத்துல ஒரு களை. கதர் சட்டை. சட்டைப்பையில ஆயிரம் ரூபா நோட்டுங்க பிதுங்கிக்கிட்டிருக்கு..
என்னப்பா இதெல்லாம்? நீ இருந்துமா இந்த பிளாஸ்டிக் பை?ன்னு கேட்டேன்.
"நீங்கதான் எல்லாத்தையும் செக்ஸோட முடிச்சு போட்டு அனலைஸ் பண்ணுவிகளே இதுக்கு காரணம் என்னனு நீங்களேதான் சொல்லுங்களேன் பார்ப்போம்"னான் முரளி.
" ................................."
"சரி நானே சொல்றேன். அப்போ எனக்கு நிரந்தர வேலையில்லை. டெம்ப்ரரி டீச்சருங்கறதால பைசாவும் பெருசா புரளலை.என் பொஞ்சாதி நாம நல்ல நிலைக்கு வர்ர வரை கட்டாயம் பிள்ளை பெத்துக்கக்கூடாது" ன்னுட்டா
அதுக்காக ராத்திரியில பொஞ்சாதிய தடவறப்பல்லாம் பிளாஸ்டிக் உபயோகிக்க வேண்டியதாயிருச்சு. பயங்கர கடுப்பு.இயலாமை. இது இருக்கிறதாலதான் இந்த அவலம்னு கொதிப்பு. இதுக்கெல்லாம் அவுட்லெட்டாதான் பிளாஸ்டிக் எதிர்ப்பு
இப்ப பாருங்க நான் ஒரு அறங்காவலர் குழு மெம்பர் . நீங்க பார்த்து கொதிச்சிங்களே பிளாஸ்டிக் பிரசாத பை அதுக்கான காண்ட்ராக்டே என்னோடதுதான். பொஞ்சாதி பேர்ல எடுத்திருக்கன். இப்போ ராத்திரிகள்ள நான் பிளாஸ்டிக் உபயோகிக்கிறதில்லை"
திருவிளையாடல் படத்துல " நான் அசைந்தால் அசையும் "பாட்டு போல ஸ்ருஷ்டியே ஒரு கணம் ஸ்தம்பிச்சு இயங்க ஆரம்பிச்சுது..