Thursday, December 23, 2010

தன் மீதான வன்முறையை தானே தூண்டும் பெண்

இந்த பதிவை புரிஞ்சிக்கிடனும்னா மொதல்ல நீங்க நம்ம சித்தாந்தத்தை புரிஞ்சிக்கனும்.

*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.
*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது
*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்
*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை
*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு
*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.
*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு
*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு

(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)

*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே

*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது
*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்
*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது
*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு
*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா பெண்ணடிமை ஆரம்பிச்சுருச்சு
*அடிமை எந்த க்ஷணம் வேணம்னா புரட்சி பண்ணலாமே.அவளோட எங்கனருந்து செக்ஸை ஆற அமர அனுபவிக்கிறது. தன் பிரதான கோரிக்கைகள் நிறைவேற செக்ஸை சிறந்த ஆல்டர்னேட்டிவா வச்சிருந்த மன்சனுக்கு இன்னொரு ஆல்டர்னேட்டிவ் தேவை பட்டுது.அதான் பணம்.

பணத்தை துரத்துறதுல இறங்கி இருந்த கொஞ்ச நஞ்ச பவரையும் இழந்துட்டான் மன்சன். பெண்ணுக்கு பணத்தை துரத்துற வாய்ப்பு கிடைச்சாலும் அந்த பணத்தை வச்சு கொல்லவோ, கொல்லப்படவோ பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கலை( சம்பள கவரை அப்படியே அப்பன்,மாமனார்,புருசன் கையில கொடுத்துர்ராய்ங்களே)

செக்ஸுல ஆர்காசம்/உச்சம் எய்தினாதான் மேற்படி கொல்லப்படும் இச்சை நிறைவேறும். (கொல்லும் இச்சை நிறைவேறிருது -ராத்திரில அவனுக்கு வீரிய ஸ்கலிதம் நடக்கறச்ச -பகல்ல அவனை பயங்கர மொக்கை பண்ற சமயம் - கலர் டிவி,கல் நெக்லஸ் கேட்டு வதைக்கறச்ச)

இவளோட கொல்லும் இச்சை நிறைவேற இருந்த இன்னொரு வாய்ப்பு குழந்தை பிறப்பு அதுவும் ஃபேமிலி ப்ளானிங் காரணமா மொக்கையாயிருச்சு.

ஆக்சுவலா பெண் இயற்கையால ஆசீர்வதிக்கப்பட்டவள். அவளுக்கு ஆபத்தை  முன் கூட்டியே ஸ்மெல் பண்ற கப்பாசிட்டி அதிகம், அப்படி ஆபத்து தலைகாட்டினாலும் அதை அப்படியே ஃப்ரீஸ் பண்ணிர்ர சாலக்கும் உண்டு ,அட ஆபத்தே வந்திட்டாலும் அதுலருந்து தன்னை காப்பாத்திக்கவும், திருப்பித்தாக்கவும் தேவையான சக்தி அவளுக்கு யதேஷ்டம்.

ஆனாலும் பெண் மீதான வன்முறை அதிகரிச்சுட்டே போகுது. பெண்கள் பலியாயிட்டே இருக்காய்ங்க.

ஒரு வேளை செக்ஸ்,குழந்தை பிறப்பு இத்யாதில நிறைவேறாத தங்களோட கொல்ல்ப்படும் இச்சையை நிறைவேத்திக்க இவிகளா
ஆண்களை தூண்டிவிடறாய்ங்களோங்கற சம்சயம் சாஸ்தியாயிட்டே போகுது .

இதுக்கு தீர்வுதான் என்ன? செக்ஸ் எஜுகேஷன் -கண்ணாலத்துக்கு மிந்தி ஒரு ஷார்ட் டெர்ம் கோர்ஸ் -அதுல படிச்சு பாஸ் பண்ணாதான் கண்ணாலம்னு வைக்கனுமோ?