யார் சூப்பர் ஸ்டார்?
ஒவ்வொருவருக்கும் ஒரு காலம், ஒரு வரலாறு, அன்றைய நாட்களில் அன்றைய நிலவரப்படி... திரைப்படங்கள் மூலமாக... ரசிகன் தரும் போற்றுதல்... அந்த போற்றுதல் ஒரு வட்ட நிகழ்வு... ஒரு முழு சுற்று நிகழும் போது, கடந்த சுற்றில் இருந்தவர் மரிப்பார் அல்லது மறக்கப்படுவார். சில நேரங்களில் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் நிலை.
ரசிகனுக்காகவே நடிப்பதாக ஜல்லியடிப்பவர்கள் முதல் நாள் ரசிகனுக்காக இலவச காட்சியல்லவா அளிக்கவேண்டும். ஆனால் நடப்பதென்னவோ கொள்ளை. ரசிகனுக்கும் இத்தனை பணத்தில் ஒரு நடிகனின் டிக்கெட் வாங்கி பார்த்தேன் என்ற பெருமை வேறு... ஒரு திரைப்படம் ஒரு ரசிகனின் 180 நிமிடங்களை கொலை செய்வதாகவே நான் உண்ர்கிறேன்.
ரசிகன் இப்படி உணர்ச்சிவசப்படுதலுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்... அவர்களுக்கு யார் காரணம்?... முன்னாளில் அவரவர்களின் பெற்றோர்கள்தான் காரணம்...
ஐயோடா... விளங்கிரும்...
திரைப்படம் என்பது ஒரு நிகழ்வு... ரத்தமும், சதையுமாக உயிருள்ள பெண்ணையே “மாய பிசாசு” என்ற அழைத்த மனிதன், உண்மையான மாய பிசாசு திரைப்படங்களை போற்றுதலும், அதற்காக சண்டையிடுவதும், காலத்தை தொலைப்பதும், தன் எதிர்காலத்தை அழிப்பதும் கண்டிக்கதக்கது.
திரைப்படம்... ஒரு இலை துளிர் விட்டு, பசுமையாகி, காய்ந்து, உதிர்ந்து மண்ணில் சருகாகி, மக்கி போவதை போல அல்லாமல் என்றுமே 16 ஆக உலவும் மாயப்பதிவு....
திரைப்படத்தை திரைப்படமாகவே பாரக்கும் பக்குவம் உலகில் எவருக்குமே வரவில்லை, இனிமேலாவது வருமா அதும் தெரியவில்லை...
ஒரு ரசிகனாவது, தொலைத்த தன்னை கண்டெடுத்து மீட்டுக்கொள்வானா தெரியவில்லை.
ஒரு ரசிகனின் தோளில் நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு நடிகரையும் சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுவது சுத்த பைத்தியகாரத்தனம். ஒரு ரஜினிகாந்தல்ல, ரசிகன்தான் எப்பொழுதுமே சூப்பர் ஸ்டார்.
சூப்பர் ஸ்டார் ரசிகனைத்தவிர எவனுமில்லை.
ஆக...
ஆரம்பமும் முடிவுமில்லா ஒரு பதிவாக இருக்கிறது... கேள்விகள் தொடரலாம்...