Saturday, December 11, 2010

சோதிடம் தன்னை இகழ்

சோதிடம் தன்னை இகழ், அப்படின்னு நான் சொல்லலீங்க. நம்ம பாரதி தான் சொன்னாரு. அவரபத்தி நான் சொல்லனுமா என்ன? அம்புட்டு விபரம் உள்ளவரு... முற்போக்கு சிந்தனையாளரு, வரப்போறத முன்கூட்டியே அறியத்தந்த ஞானமுள்ளவரு தப்பா சொல்லிருப்பாருங்களா?

ஒரு வாரமா இதே சிந்தனைல இருந்தேன். முருகேசனும் எதாவது போடுங்க, போடுங்கன்னு சொல்லிட்டே இருந்தாரா... அதான் இப்படி ஒரு பாம் போட்டுட்டேன்.

சோதிடம் அப்படின்னு சொல்றதுக்கு முன்னால ஜாதகம் அப்படின்னுதான் சொல்லுவாங்க... அதாவது சாதகமா சொல்லுறது...யாருக்கு? எவன் குறைகேட்டு வார்ரானோ அவனுக்கு... என்ன சாதகம், பாதகம் இருக்குன்னு யோசித்தா தெரியாதா... என்னங்க பெரிய இது? நெருப்ப தொட்டா சுடும்னுதான் தெரியுமே... இத தொட்டு பார்த்துவேற தெரிஞ்சுக்கனுமா?

என்னதான் கிரகம், கிரகம்னாலும் வரப்போறத சொல்ல முடியுமா? ஒரே ஒரு உதாரணம் கிடைக்குமா? நடந்து முடிஞ்சப்பறம் நான் இத அப்பவே சொன்னேனே அப்படின்னு சவடால் வேற... உங்க அவசரத்துக்கு நாங்க என்ன பிரியாணியா?

நாடி பார்த்தா (மருத்துவரில்லீங்க) இப்படி நடக்குமுங்க...

“உங்க ஆத்தா பேரு ஒரு நதி பேருல்ல இருக்கனுமே” அப்படிம்பாரு
பார்க்கவந்தவரோட ஆத்தா பேரு கங்கம்மாள்னு இருக்கும்.... உணர்ச்சி வசப்பட்டு “அட, ஆமாங்க” னுவார்...

ஏங்க, சொல்லும்போதே கங்கம்மாள்னு சொல்ல வேண்டிதான...அதென்ன குறிப்பு?

இப்ப நான், இனிமே என்ன சொல்ல போறேன்னு கண்டு பிடிச்சீங்களா? என்னடா உள்ள இருந்துகிட்டே நோண்டறேன்னு நினைக்கிறீங்களா? இடிப்பார் இல்லாத அரசு, நம்ம தாத்தா அரசு மாதிரி பம்மிகிட்டே இருக்க வேண்டிதான். அப்ப அப்ப ஒரு கிளி.. இல்ல கிழிக்கனும்ல... அப்பதாங்க இதெல்லாம் சரியாவரும்...

மனசில இருக்கிறத எத்தன நாளு மூடி மறைக்கிறது... வாங்க... என்னோட கை சேருங்க...ரெண்டுல ஒன்னு பார்த்துடலாங்க... நல்லா கேள்வி கேட்டாதான் விளெங்கும். நான் இருகேங்க உங்களுக்காக கேள்வி கேக்க... நீங்களும் கேக்கனும்மா? சரி...

ஆனா, கேள்வி கேக்கணும்னா ஒரு கண்டிசன்... சபைக்குள்ள வந்து கேள்வி கேக்கனும்... சொம்மா வெளிய இரிந்திக்கின்னு கூவப்படாது...

சா(ஜா)தகமே இல்லன்னாலும் பரவாயில்ல, வாங்க பிரிச்சு மேஞ்சிரிவோம்... சும்மாவே ஒரு கேள்விக்கு ஒரு பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற பார்ட்டி நம்ம முருகேசு... நாம கேக்குற கேள்வில பத்து பாக்கெட் சிகரட்டு ஊதி தள்ளுற நிலமை வரணுங்கோ... அப்புறம் எங்கே பதிவு போடுறது... அதனால நல்ல பலமான கேள்வியா தயாரிங்க...