Monday, December 20, 2010

சோனியாவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

எம்மா ! நீ எங்கயோ பொறந்தே. ஒரு ஹோட்டல்ல வெய்ட்டரா இருந்தப்ப எங்க ராஜீவ் உங்களை கண்ணாலம் கட்டிக்கிட்டாரு. நீ பாவம் இந்திராம்மா கிட்டே ஒட்டவே இல்லையாம். ஏதோ பார்ட்டில உன் கவுன் தையல் பிரிஞ்சிருக்க அதை அவிகளே தச்சு விட்டாய்ங்களாம். அதுக்கப்பாறம் தான் க்ளோசா மூவ் பண்ண ஆரம்பிச்சிங்களாம். (இதை வச்சுத்தானே மேனகாவை கைப்புள்ளையோட வீட்டை விட்டு விரட்டினிங்க)

ராஜீவ் போய் சேர்ந்தாரு. அரசியலும் மானாம் மண்ணாங்கட்டியும் மானான்னு ஓரம் கட்டிக்கினிங்க.ஏதோ எங்க ஸ்டேட் காரரு பி.வி நரசிம்ம ராவ் ஒப்பேத்திக்கிட்டிருந்தாரு. அந்த சமயத்துல சமீபத்துல அஜால் குஜால் வேலை பண்ணி ஸ்டேட்டை விட்டே ஓடிப்போன என்.டி.திவாரிய வச்சு ஒரு பார்ட்டியே ஆரம்பிக்க வச்சிங்களாம். அதுக்காக பிரச்சாரம்லாம் கூட பண்ணிங்களாமே. அந்த கட்சிக்கு ஆறே சீட் வந்துதாமே .நம்ம ரோசா ஒரு டிவி பேட்டில சொன்னப்ப ஜில்லுனு ஆயிருச்சு.

எப்படியோ பார்ட்டில நுழைஞ்சு அதை அப்படியே  ஹைஜாக் பண்ணிட்டிங்க. கட்சில இருக்கிற கிழவாடிங்களோட மென்டாலிட்டய நல்லாவே புரிஞ்சிக்கிட்டிங்க. மேய்க்க ஆரம்பிச்சிட்டிங்க. காந்தி மேல கூட எனக்கு காட்டமான அதிருப்தியெல்லாம் இருக்கு. பாவம் அவிக பண்ண தப்புக்கு உங்களை வையமாட்டேன் . பயந்துக்காதிங்க.

புருசன் பொஞ்சாதியை பெட்டர் ஹாஃப்ங்கறாய்ங்க. ராஜீவ் உங்கள்ள பாதிதானே.அவரை கண்ணாலம் கட்டிக்கிட்டதாலதானே இந்த ராஜபோகம் அனுபவிக்கிறிங்க.

இலங்கை மேட்டர்ல அவரு ஒரு தப்பு பண்ணிட்டாரு. மெஜாரிட்டியான புலிகளை தவிர்த்துட்டு ஒரு சொல்யூஷனை ஏற்படுத்தனும்னு துடிச்சாரு.அப்போ தமிழ் நாட்ல தேர்தல் ஜுரம். பஞ்சாயத்து பண்றதுக்கு போன ஆளூ இவரே பாட்டியா மாறி கையெழுத்து போட்டாரு. அமைதி காக்கறோம்னு ஒரு படைய அனுப்பி வெந்த புண்ல வேலை பாய்ச்சினாரு. விதி விளையாடிருச்சு.அவர் மட்டும் அவாள் பேச்சை கேட்காம புலிக  இல்லாட்டி அது ஒரு தீர்வே கிடையாது. இந்த ஆட்டத்துக்கு நான் வரமாட்டேன்னுட்டு குர்தா மண்ணை தட்டி விட்டுட்டு போயிருக்கலாம். போகலை.

அவரோட பெட்டர் ஹாஃபுனு நிரூபிக்க உங்க ஒரு தாலி அறுந்ததுக்கு இத்தீனி லட்சம் தாலிகளை அறுத்துட்டிங்க.  பெட்டர் ஹாஃபுன்னா கணவன் ஏதாச்சும் தப்பு தண்டா பண்ணியிருந்தா அதை திருத்தப்பார்க்கனும் தாயே.. அதை விட்டுட்டு தமிழ் சினிமா மாதிரி ரிவெஞ்ச்ல மட்டும் பெட்டர் ஹாஃபுனு தப்பா புரிஞ்சிக்கிட்டிங்களே.


இலங்கைக்கு நம்ம அரசு பண்ண உதவிகள்ள நூத்துல அரை சதவீதம் புலிகளுக்கு பண்ணியிருந்தா நமக்கு எல்லை தெயவங்களா இருந்திருப்பாய்ங்க. இன்னைக்கு சீனத்து கைதிகள்ளாம் வந்து அங்கன வளர்ச்சி  பணிகள் செய்றாய்ங்களாம். இது தேவையா?

உங்க நாட்ல நீங்க வார்ட் மெம்பரா கூட எலக்ட் ஆகியிருக்கமாட்டிங்க. ஆனால் இந்த நாட்ல உங்களை சூப்பர் பவர் ஆக்கிவச்சிருக்கோம். இதுல தமிழ் நாடு மாதிரியே ஆந்திராவும் உரிய பங்கை ஆற்றியிருக்கு. ஆனால் இதுக்கு பிரதியா நீங்க என்ன செய்திங்க?

மத்த ஸ்டேட் பத்தியெல்லாம் எனக்கு பெருசா தெரியாது. தெரிஞ்சத மட்டுமே இதுல ரெய்ஸ் பண்றேன். தமிழினத்தையே அழிச்சாலும்.. மானம் கெட்டோ ,மதி கெட்டோ உங்க வேட்பாளர்களுக்கு ஓட்டு ப்போட்டாய்ங்க. யுபிஏவுக்கு மெஜாரிட்டி கிடைக்கிறவரை இருந்த சோனியா வேறே. (2009 வரை) தனி மெஜாரிட்டி கிடைச்ச பிறவு உள்ள சோனியா வேற.

சுப்பிரமணியம் ஸ்வாமி ஸ்பெக்ட்ரம் ஊழல்ல 60 சோனியா 30 கருணாநிதி 10 ராசான்னு பகிரங்கமா குற்றம் சாட்ட நீங்க மவுனம் எனது தாய்மொழினு இருக்கிங்க இதுக்கு என்ன காரணம்?  அந்த பார்ட்டி சொல்றது பொய்யா இருந்திருந்தா டங்குவாரு அறுத்திருக்கவேணாமா?

அது சரி  காங்கிரஸ் ப்ளீனரில நீங்க ஊழலை ஒழிக்க ஏதோ அஞ்சு பாய்ண்ட் சொன்னிங்களாமே. இதெல்லாம் டகுலு இல்லைன்னா திமுகவோட கூட்டு முறிஞ்சது. நாங்க உத்தமங்க.ஊழல் கட்சியோட கூட்டுவைக்கமாட்டோம். ஜெயா ஊழல் ராணி அவிகளோடவும் கூட்டில்லை.தனியாத்தான் நிப்போம்னு அறிவிக்கலாமே.

மக்களோட சைக்காலஜிய புரிஞ்சிக்கிறது ரெம்ப கஷ்டம். இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நடந்த தேர்தல்ல கூட  ஆந்திராவுல தெலுகு தேசம் ஸ்வீப் பண்ணிருச்சு.

ஆ.. இதெல்லாம் விதி விலக்கு. ராகுல் காந்தி ..புடிச்சி தந்தா தலைல தெளிச்சிப்பாய்ங்கனு நீங்க நினைக்கலாம். ஆனால் காலம் மாறிப்போச்சு தாயி. ஏதோ ஆந்திரால ஒரு ஒய்.எஸ்.ஆர் இருந்ததால கட்சி பொழச்சுது. இல்லைன்னா மெஜாரிட்டியுமில்லை. ஒரு மண்ணுமில்லை. பீகார்ல பார்த்திங்கல்ல கட்சியோட பாடைய சுமக்க சரியா 4 எம்.எல்.ஏ.

தெலுங்கானான்னு தேன் கூட்டை கலைச்சு விட்டுட்டிங்க டிசம்பர் 31 அன்னைக்கு தெலுங்கானா கொடுக்கறோம்னா ஆந்திராவுல  பத்திக்கும், கொடுக்கமாட்டோம்னா தெலுங்கானால பத்திக்கும்.

என்னமோ போங்க.ஆனை கொழுத்துப்போனா தன் தலையில தானே மண்ணள்ளி போட்டுக்குங்கற மாதிரி இருக்கு. உங்க போக்கு.இதுல உங்க தவப்புதல்வர் ஒரு அன்னிய நாட்டு தூதர்கிட்டே உள் நாட்டு விவகாரத்தை உளறியிருக்காரு.

இப்பவும் ஒன்னும் மிஞ்சிப்போகலை. காங்கிரஸ் மார்ச்சுவரிக்கு  போறது போறதுதான். சாகறப்ப சங்கரா சங்கரான்ன மாதிரி  எதுனா நாலு நல்ல காரியம் பண்ணிட்டு போங்க.

அடுத்த எலக்சன்ல டெப்பாசிட்டாச்சும் கிடைக்கும். ( எலக்சனுக்க் கூட சான்சில்லை தாயீ .. பை எலக்சனே கொணாந்துருவாய்ங்க போல) பெட்டர் ஹாஃபுன்னா கணவனோட பாவத்துக்கு பரிகாரம் தேடனும்மா.

என்ன பாவம் பண்ணமோ கேடு கெட்ட மனுச ஜம்மம் எடுத்துட்டம். எதை செய்தாலும் கர்மம் சுத்திக்கும். அட நீ நல்லதையே செய்தாலும் கர்மம்தான்.அதை அனுபவிக்க மறுபடி பிறக்கனுமாம்.

ஏழேழு சம்மத்து புண்ணியத்தையெல்லாம் இந்த சன்மத்துலயே தீர்த்துகட்டிட்டிங்க. இன்னொரு ஏழேழு ஜன்மத்துக்கு பாவத்தை மூட்டை கட்டிட்டிங்க. காலச்சக்கரம் ரிவர்ஸ்ல சுத்தினா ராகுலாரோட பேச்சு,நடவடிக்கைக்கு உங்களுக்கு கிடைச்ச வெய்ட்டர் வேலை கூட கிடைக்காது.

கொஞ்சமா மாத்தி யோசிங்க. இந்த சனம் அல்ப சந்தோஷிங்க. இவிகளை சந்தோசப்படுத்தறது ரெம்ப ஈஸி.  இந்த நாட்ல இல்லாத வளமே இல்லை இதை வளப்படுத்தறது ஈஸி. இங்கன இல்லாத வலிமையே இல்லை . இதை வல்லரசாக்கிறது ச்சோ ஈஸி.

அமெரிக்காகரனோட அணு ஒப்பந்தம் போட்டுத்தான் கிழிக்கனும்னுல்ல. ஒவ்வொரு நாட்டு தலைவனா வந்து ஒப்பந்தம் மேல ஒப்பந்தம் போடறதை பார்த்தா கடைய கட்ட போறிங்களோ என்னமோனு கூட ஒரு சம்சயம்.

போறது போறிங்க.நாலு நல்ல காரியம் பண்ணிட்டு போ தாயி.

(ஆந்திரா கதைய டீட்டெய்ல்டா  நான் தெலுங்கு ப்ளாக்ல  எழுதிக்கிறேன். தமிழ் நாட்டு கதையமட்டும் தான் இங்கே பேசியிருக்கேன்.)

சொல்லனும்னு தோனுச்சு. சொல்ட்டன் .எடுத்தா எடுங்க.உட்டா உடுங்க.

"அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும்"
"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்"

இதெல்லாம் தமிழ்ல மட்டுமில்லை இந்தில,இங்கிலீஷ்ல ஏன் இத்தாலிய பாஷைல கூட நிச்சயமா இருக்கும். ஏன்னா இதெல்லாம் ப்ரூவன் ட்ரூத்ஸ். வரலாற்று உண்மைகள்.

வரலாறு ஒரு  பைத்தியம். ஒன்னயே மாத்தி மாத்தி பினாத்திக்கிட்டிருக்கும்.கேட்டா பொழச்சோம் இல்லாட்டி "பாவத்தின் சம்பளம் மரணம்"னு நான் சொல்லலிங்கம்மா.பைபிள் சொல்லுது.

வருந்தறது,திருந்தறதுல்லாம் தான் நமக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்யாசம். திருந்திட்டா பிரச்சினை இல்லை.  திருந்தாட்டா  காலம் திருத்திரும்.அப்ப ரெம்ப வலிக்கும்