Showing posts with label Human. Show all posts
Showing posts with label Human. Show all posts

Sunday, November 14, 2010

ஏக் மார், தோ துக்டா


உங்கள் வலைப்பூ விளம்பரங்கள், ஒளிப்படங்கள் வேலைகளுக்கும், வலை, கணிணி வடிவ வேலைகள், 2டி, 3டி அனிமேசன், வீடியோ, ஆடியோ தொகுப்பு வேலைகள், ஓவியம், கேரிகேச்சர், விளம்பர வடிவங்களுக்கும், அனைத்து கணிணி மென்பொருள் பாடங்களுக்கும் அணுக... ஓகதாஸ்... Ohedas Technologies... info by: Mail to


ஏக் மார், தோ துக்டா

ஆத்திகம், நாத்திகமான பெரியாரோடு சம்மந்தமான வார்த்தைகள் வேண்டாம்... இறைவனை நம்ப மறுப்பவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை...  “ஏதோ ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்திலும், நம்முள்ளும் இருக்கிறது”.

நிருபிக்கபட்டால் ஏற்றுக்கொள்ள தயார் என்பதெல்லாம் வேடிக்கைத்தனம். அதுவோ, இதுவோ மனிதனால் ஏற்படுத்திக்கொண்ட கணக்குகளில் அடங்குவதில்லை. ஆனால் ஆசாமியான தன்னை சாமி என்று சொல்லுபவனை, ஏமாற்றுபவனை கழுவிலேற்றலாம்.

அந்த சக்தியை நோக்கிய (யா இல்லை) பாதையில் இரண்டு வழிகள்.
ஒன்று வழிபாடு,
இரண்டு தன் வழிபாடு.
அது கோவில், குளம், சடங்கு, மந்திரம், யாகம், நம்பிக்கை... இது தியானம்...

எனக்குத்தெரிந்தவரையில் இரண்டையுமே வழிமொழிந்தவர்கள் சித்தர்கள்தான். உனக்கு எது முடியுமோ அது...

சடங்குகளின் உண்மை நிலை... தளர்ந்திருப்பதால் முதலானது இப்பொழுது கேலிக்குரியதாக மாறுகிறது. சித்தர் தியானமோ நிரூபணம் வேண்டுவதால் ஏற்றுக்கொள்ள ஆர்வமில்லை.

இரண்டிலும் விருப்பமுள்ளவருக்கோ, விளக்கம் தர ஆசானில்லை. கடல் நீரில் இனிப்பைத் தேடுவதாக இருக்கிறது. சந்தர்ப்பவாதிகள் மக்களை ஏமாற்றி, மூளையையும், கற்பையும் சுரண்டிவிடுகிறார்கள்.

மேயிற மாட்டை, நக்குற மாடு கெடுத்ததாக ஒரு சொலவடை உண்டு... அது போல, பக்தியிலும், தியானத்திலும் இருப்பவனை மறுதலிப்பவன் விடுவதே இல்லை. தன் சகதியை எதிராளிக்கும் பூசி மகிழும் சந்தோஷம்.

ஒரு சின்ன கேள்வி... இப்பொழுது எல்லா வலைப்பூக்களிலும் கூகுள் ஆட்சென்ஸ் உண்டு... எத்தனை பேர் அதை கிளிக்கி அந்த வலை பதிவருக்கு உதவியிருக்கிறோம்?. 

“போய்யா ஜி... நான் கிளிக்கினால் எனக்கா பணம் வருது... அவனுகுல்ல போகுது...!”

அடபாவிகளா... அவன் கிளிக்கினால் உனக்கு வருமேயா... அதை மறந்திட்டயே?

இந்த ஒரு பொதுவான விசயத்திலேயே இப்படியான முரண் இருந்தால்.... விளங்கிரும்லா...

வழிபாடுகளை பொறுத்தவரை... வழிகாட்டி தேவையில்லை... உனக்கு எந்த தெய்வமோ அதே... அது ஆசியாவின் உயர்ந்த கோபுர வழியிலிருந்தாலும் சரி, இல்லை மொட்டை கோபுர வழியிலிருந்தாலும் சரி. அது முதன்மையான நம்பிக்கையின் அடிப்படையானது.

ஆனால் இரண்டாவதான தன் வழிபாடு... தியானம், இது உடல், மன அமைதி தியானம் இல்லை. குண்டலி அ குண்டலினி தியானம்...

ஆர்வமுள்ளவர் மட்டுமே மேற்கொண்டு படிக்கலாம்...

குண்டலி மூலாதாரம் எனும் Sexual Gland ல் உறைந்திருக்கிற ஒரு மின்சாரம். அதுவே உடல், மன, எண்ண செயற்பாடுகளின் ஆதாரம். இதன் இயக்கம் சிவம்... இல்லையேல் சவம். சித்தர் தியான முறை... குண்டலியின் இயக்கத்தை மாற்றுதல்... தன் சுய இயக்கத்தை நிறுத்தி நமது கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்.

எப்படி கொண்டுவர இயலும்?
முறையான பிரணாயாமம்... இட, வல சுவாச வழியே காற்றை சுவாசித்தல்... இரண்டிற்குமிடையே ஒரு கணம் நிறுத்துதல்... இந்த நிறுத்தல் காற்றை சூடாக்கி, மூலாதாரம் நோக்கி நகர்ந்து குண்டலியை உசுப்பேற்றும்...

இது இப்போதில்லை... எளிய முறை குண்டலி தியான பயிற்சி கிடைக்கிறது... வேண்டுவோருக்கு மட்டுமே கிடைக்கும். எங்கே ஜி? தேடுங்கள்... வாழைப்பழம் தான் தர முடியும்... உரித்தலும், ஊட்டிவிடுதலும் என் வேலையல்ல.

கேள்வி: ஜி... கூகுளாண்டவர் கிட்ட கேட்டா நிறைய நூல் “குண்டலி தியானம்” பற்றி கிடைக்கிறதே முயற்சிக்கலாமா?

பதில்: விபரம் கிடைத்தவரையில் சரி... அதன் படி நடக்கவேண்டாம்... குண்டலி உசுப்பேற்றல் முறையாக இயக்கப்பட வேண்டும், முறை தவறினால்... உடல், மன, எண்ண செயற்பாடுகள் தடுமாறும் வாய்ப்புகள் உண்டு...

சரி... இதன் மூலமாக என்ன கிடைக்கும்?

ஓட்டுக்கு பணம் வாங்குகிற மக்களல்லவா நாம்... ஏம்ப்பா... எதாவது கிடைச்சாத்தான் பண்ணனுமா? பண்ணிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க கூடாதா?

அப்பொ... வழிபாடு பண்ணா இதெல்லாம் நடக்காதா?

நடக்கும்... அமெரிக்காவிற்கு விமானத்தில் போவதற்கும், கப்பலில் போவதற்குமான வித்தியாசம்தான்.

அதான் தலைப்புல வச்சிருக்கேன்....  ஏக் மார், தோ துக்டா



வழிபாடு தொடரலாமா?

:)

குண்டலியின் தொடர்புடைய... திரு. முருகேசன் அவர்களின் பதிவு காண்க... இங்கே

Sunday, October 31, 2010

காதல் பிறக்க சரியான இடம்

மனம் என்றொரு வெங்காயம் - இரண்டு 

 காதல் பிறக்க சரியான இடம்...   இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன என்றும்  பார்த்தோம். கடற்கரை, கல்யாண மண்டபம், பக்கத்துக்கு வீடு, மொட்டை மாடி, நிறுவனத்தில் இருக்கிற லிப்ட்,  சாலையில் வேகமாக இரு சக்கர வாகனம் நாம் மேலாக இடித்தபிறகு... பேருந்து, இப்படி நிறைய இருக்கிறது. இடம் முக்கியமானால் , அப்படி ஒரு இடம் இருந்தால் எல்லோருமே அங்கே போய் நின்று விடுவோம். (இப்பொழுது கூட)

மனத்தில் இருக்கிற காதல் முக்கியம்.  கடற்கரைக்கு உங்கள் மனைவியை அழைத்துசெல்லுங்கள்... புதிதாக காதலிக்க தோன்றும். வானில் முழு நிலவை பார்த்துக்கொண்டே இருங்கள்... காதலின் புது விஷயங்கள் தோன்றும். நீங்கள் பார்க்கும் அதே வேளையில் எத்தனை ஆயிரம் காதலர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணங்களை வான் நிலவு உங்களிடம் பாய்ச்சலாம் அல்லவா?

 அடுத்த முறை காதலை சொல்லும் பொது சரியான நபரை மட்டுமல்ல, இடத்தையும் தேர்ந்து எடுங்கள் .

நாம் சுவாசிக்கிற காற்று போல, எங்கெங்கும் மனதின் எண்ண அலைகள் மிதக்கின்றன. நமக்குள் ஏற்படுகிற வெற்று  இடத்தில்  தானாகவே வந்து அமர்கின்றது. தனக்குள்ளே பிறந்த ஓன்று வெளிச்சென்று மீண்டும் நமக்குள்ளே வலிமையோடு வந்து அமரும்.

கீழே கிடந்த காசை ஏன்டா எடுத்தேன் என்று எப்போதாவது நினைத்து இருகிறீர்களா?
கண்டிப்பா யாராவது வந்து காப்பாதுவங்கன்னு  நினைச்சேன் அதே நடந்தது....

நல்லவருக்கு நல்லவன் உதவுவதும், கெட்டவனுக்கு கேட்டவன்  உதவுவதும் இதன் அடிப்படைதான்.  அந்த அடிப்படை நீங்கள்தான்.  வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்... யாரேனும் ஒருவரோடு பேசிகொண்டிருக்கையில் முதல் 10 நிமிடம் பொது   விசயமாகவே   பேசப்படும்,  அப்படியே காலம் கடக்க ஒரே விஷயத்தை  இருவருமே   பேசிக்கொண்டிருப்பதை   காண முடியும்.

அதோடு நீண்ட பேச்சின் உடே சில போது விஷயங்கள், பேசிக்கொண்டிருக்கிற அந்த இடத்தின் பொதுவான தன்மை கலந்த விஷயங்கள் வரும். சில வெட்டு குத்துக்கள் அதே இடங்களில் நடப்பதை உணர முடியும். சில நட்பு அதே இடங்களில் உருவாக கூடும். சில காதல் திடீரென அந்த இடத்தில் மட்டும் பிறக்க கூடும். சில கல்யாண நடவடிக்கைகள் அங்கே முடிவு செய்யப்படும்.

சில சேவல் பண்ணைகளில் ஒரே நேரத்தில் உற்சாக விழாவும், பெண்கள் ஹாஸ்டல்களில் ஒரு சேர விலக்கம் ஆவதும் இப்படித்தான். சில எதிர்பாரத விஷயங்கள் நடக்கும் போது " எப்படி இது தோணிச்சுன்னு தெரியல்ல, எல்லாம் சுமுகமா நடந்தது" என்பதெல்லாம் நம்மை சுற்றி இருக்கிற எண்ணங்கள் தன் இயக்கத்தை உணர வைக்கின்றன.

மனிதனின் இயக்கம் மனம், மனதின் இயக்கம் எண்ணம், எண்ணத்தின் இயக்கம் மனிதனின் செயல்பாடு. இப்பொழுது ஒரு வட்டம் வந்து விட்டது. 


ஒவ்வொரு மனிதனுடைய எண்ணம், சொல், செயல் எல்லாமே மனதிலே அடக்கம். மனமே மனிதனின் அகமும் புறமும்.  அவனின் தோற்றம் மட்டுமே அவனை சொல்லுவதில்லை. ஒருவனை பற்றி, அவனை உரித்து பார்க்கவேண்டுமானால் அவனின் சில சொல், செயல் கவனித்தால் போதும்.

ஆக, நாம் சரியான  அலை வரிசையில் இயங்க வேண்டுமானால் நாம், நம்மை செம்மை படுத்தியாக வேண்டும்.

ரொம்ப சீரிஸ் பேசிட்டோம்... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவோம்...

மருத்துவமனையில்
செவிலி: ஒரு அரை மணி நேரம் தாமதமா வந்திருந்தா  நோயாளியை பொழைக்க வச்சிருக்கலாம்...
ஒருவர்: எப்படி சொல்றிங்க?
செவிலி : டாக்டர் வீட்டுக்கு போயிருப்பார்


கடற்கரையில்
காதலன்: டியர்... எனக்கு ஆச்சரியமா இருக்கு, எனக்கு வேலை  இல்லன்னு தெரிஞ்சும் எப்படி உங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க?
காதலி: பையன் என்ன பன்றாணு கேட்டாங்க... வயித்தில எட்டி ஒதைக்கிரான்னு  சொன்னேன்

:)

மனம் என்றொரு வெங்காயம்

மனம் என்றொரு வெங்காயம்

நமது உடலுறுப்பு அனைத்தையும் பெயரிட்டு, அதைக்கண்டும், சரி செய்தும் வருகிறோம். ஆனால் மனம் என்ற ஒன்றை எப்படி குறிப்பிட முடியும்? மனதை பறிக்கிறாள் என்று சொல்லுகிறோமே... அல்லது சொன்னோமே ;)அப்படியாக பறிக்க கூடியதா, கசக்கி பிழியக்கூடியதா? அல்லது இல்லாத ஒன்றா? இருக்கிற ஒன்றா?

எனக்குத் தெரிந்ததெல்லாம் மனம் ஒரு வெங்காயம்... அவ்வளவுதான்...

என்னடா...வெங்காயம்? என கேள்வி பிறக்கிறதா?

ஆமாங்க... வெங்காயம் தான்... வெங்காயத்தை உறிக்க, உறிக்க வெங்காயம் தான் வெளித்தெரியும்... உங்கள் மனதை உறிக்க, உறிக்க நீங்கள்தான் வெளிவருவீர்கள்...

நமக்குள் ஏற்பட்ட, ஏற்றப்பட்ட அடுக்கடுக்கான நினைவுத் தொகுப்புகள்... அது தன்னாலும், பிறராலும் செய்யப்படலாம். காலம் கடந்தோ, இந்த கணத்திலோ, தற்காலிகமாகவோ நிகழ்த்தப்படலாம்... இந்த நிகழ்வின் காரணகர்த்தாவே மனம் என்று அழைக்கப்படுகிறது.

நீதான் செய்கிறாய் என்று சொன்னால் நான் (நான்தாங்க... நீங்க இல்லை) தன்முனைப்பாக செயல்பட்டு விடுவேன் என்பதனாலேயே மனம் என்ற ஒரு குழுஉரிச்ச சொல்... மூலமாக நமக்கு உணர்த்தப்பட்டு வருகிறது...

நாம் செம்மையானால், மனமும் செம்மையாகும்.

திரு. முருகேசன் தனது பதிவில் சொல்லியிருக்கிறபடியே இந்த பிரபஞ்சம் முழுவதும் எண்ணங்கள் நிரம்பியிருகின்றன. நாம் புதிதாக யோசிக்க ஏதுமில்லை... இருப்பதை வானொலி போல ஒத்த அலை பெற்று செயல்படுகிறோம்...

ஒரு பரிசோதனை..... அப்படியே ஒரு நிமிடம் யோசியுங்கள்... இதை படித்த பிறகு...
இப்பொழுது கவிதை07 படித்துக்கொண்டிருப்பதை சற்று விலக்கி...

1) இப்பொழுது நான் என்ன விரும்புகிறேன்?
2) எனக்குள் என்ன யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது?
3) எதன் பொருட்டு இந்த யோசனை?
4) காரணம் என்ன?
5) இது, இந்த யோசனை என்னால் இயக்கப்பட்டதா?


சரியான பதிலை பின்னூட்டத்தில் தரவும்...

Monday, October 25, 2010

மனிதன் என்பவன் வாழும் மிருகம்

நாய் எலும்புக்காக தோண்டி 
தானே புதைந்து போனால்
அப்படித்தான் இருக்கிறது
இப்போதைய பொருளாதாரமும்
மக்களின் வாழ்வும். ....

வரவேண்டியதும் வருவதில்லை, கேட்டாலும் கிடைப்பதில்லை. தவறிய வார்த்தைகள் கிடைப்பதுபோலவே நமது வார்த்தைகளும் தவறுகின்றன. ஒரு நியாயம் ஒரே நியாயமாக இருப்பதில்லை.

என்ன சிக்கல் என்றால், நாணயத்தோடு, நாணயமும் சேர்ந்து கொள்வதால் 'பேரு' தள்ளாட்டம் ஆடுகிறது. இக்கரைக்கு அக்கரை ப(ச்)சை போல, ஒவ்வொரு வாசலும் ப(ச்)சையாகவே தெரிகிறது.

தகவல் தொடர்பியலில் ஒரு வார்த்தை உண்டு, மனிதன் என்பவன் வாழும் மிருகம், (உபயம் சாக்ரெடீஸ்)

வேட்டை அறிந்த, தன் இனத்திற்குள்ளேயே வேட்டையாடும் குணமறிந்தவன். அடேங்கப்பா! எத்தனையாயிரம் வேட்டைகள், இன்னமும் முடிந்தபாடில்லை. இப்போதைய மனிதன் தானே காணச் சகியாத முகமூடி அணிந்திருக்கிறான், வெளியே அல்ல, தனக்குள்ளே.

அது ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்கதையாகிப்போவதுதான் வேதனை.

வேட்டை பைரவர்களுக்கு மத்தியில் வெள்ளாடுக்கு மதிப்பேது? அப்படி இருந்தால்தான் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்கிற நிலைதான் எல்லோரிடமும்.

இது எந்த வயதில் ஆரம்பிக்கிறது?

அது ஒரு பேருந்து நிறுத்தம். நான் கல்லூரி செல்லும் பேருந்துக்காக நிற்கிறேன். என் அருகில் இரு சிறார்கள்.(ஆ இல்லையா என்பதை பிறகு முடிவு செய்தால் சிறப்பு). ஒருவனை விட ஒருவனுக்கு இரண்டு, மூன்று வருட வயது வித்தியாசம், வயது பத்தும், ஏழும் இருக்கலாம். பத்து வயதுடையவனுடைய(!) முகம் சிறுத்(தை)து, அதீத கண்காணிப்பு கொண்ட கண்களோடு கல்லெறிந்த குளத்துநீர் கலக்கத்தோடும் அதிர்வுளோடும் முகத்தில் தகப்பனை(?) உருவகித்திருந்தான். இன்னொருவனுக்கோ கல்லெறியாத குளத்துநீர் போல அமைதியான முகம் (அம்மாவோட முகமோ?.) இவன் எது சொன்னாலும் அவன்...

'அப்படி இல்லடா, ஃபூல்', 'இப்படித்தான்டா ஃபூல்' என்று மறுதலளித்தவாறே வந்தான்.

நான் இருபது நிமிடம் முன்னதாகவே பேருந்து நிறுத்தம் வந்து விடுவதால் இது போல சில நிகழ்வுகள் காணக்கிடைக்கும். (நான் ஏறிச் செல்லுகிற பேருந்துக்கு சரியான நேரமே கிடையாது. முன்னதாகவும், சரியாகவும், தாமதமாகவும் வரலாம், வராமலுமிருக்கலாம்.)

'டேய், தள்ளி நில்லுங்கடா' குரல் கவனம் கலைத்தது.

பேருந்து நிறுத்தம் அருகிலிருந்த பெட்டிகடைக்காரர், நான் நடைபாதையின் மேலே நின்றிருந்தபடியால் அது என்னை குறித்ததல்ல. தினமும் என்னை பார்ப்பதனாலும் இப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. திறந்த கடையின் வாசல்(?) குப்பையை விலக்கியபடி (ஆமா, விளக்குமாறா, விலக்குமாறா? விளக்கம் வேண்டுமே) சொன்னார்.

அந்த பெரிய சிறுவன்(ர்) முறைத்த பார்வையை பெட்டிகடைக்காரர் கவனித்து விட்டார்.

'டேய், என்னடா பார்க்கிற' பெட்டிகடைக்காரர் கொஞ்சம் இறங்கிவிட்டார் போல.

'வாசல் கூட்றேன்ல, மேல நின்னா என்னடா?'

'ஏன், இது உங்க ரோடா? இது கார்பரேசன் ரோடு'

'டேய், ரொம்ப பேசாத'

'பப்லு, வேணான்டா'

'நீ சும்மாயிருடா, ஃபூல்'

பெட்டிகடைக்காரர் வியந்த முகத்தோடு என்னை பார்த்தார், நான் மெலிதாக புன்னகைத்தேன்.

'பாருங்க சார், எப்படி பேசுறான் பாருங்க'

அந்த பெரிய சிறுவன்(ர்) இப்போது என்னை பார்த்தான்(ர்).

நான் மீண்டும் மெலிதாக புன்னகைத்தேன்.

'ம், ஊரு ரொம்ப கெட்டு போச்சு சார்' வாசலில் நீர் தெளித்தபடி பெட்டிகடைக்காரர்.
அந்த பெரிய சிறுவன்(ர்) உர்ர் என்றிருந்தான்.

தெளிக்கும் நீர் அவன் மேல் பட்டுவிட கூடாது அவரிருக்க, பட்டா தெரியும் சேதி என்று அவனிருந்தான். நல்ல வேளையாக பேருந்து வர, ஏறிக்கொண்டோம். மூன்று நிறுத்தங்கள் வரை 'ஃபூல்' ஒலித்துக்கொண்டிருந்தது ...

Friday, October 22, 2010

இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்...

 சுகுமார்ஜி பக்கங்கள் ( ரொம்ப முக்கியம்...!? )

இது கொஞ்சம் மூளையை கசக்கிய விஷயம்... இல்லாதவர்கள் தள்ளி போகலாம்... (சொந்த மூளையை உபயோகிச்சா உங்களுக்குத்தான் பிடிக்காதே)

ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி விடிவதில்லை, ஒரே ஆற்றில் இரண்டு முறை நீராட முடியாது (ஓஷோ ) ஆனால் மனிதன் படுத்தால் இப்படி, என்ன மனநிலையில் படுத்தானோ அதே நிலையிலேயே எழுகிறான்.

எனக்கொரு எண்ணம் முன்னாட்களில் எழும்...
மனிதன் எப்போது திருந்துவான்? கண்டிப்பாக இறக்கும் தருவாயில் அவன் தான் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து வருந்துவான். ஆனால் மறுநிமிடமோ, மறுநாளோ அவன் இறந்து விட யாருக்கு லாபம்? ஒரு தாத்தா செய்த அதே தவறுகளை மகன் செய்கிறான் (சிலர் விதி விலக்காக) அதே தவறுகளை பேரனும் செய்கிறான்.

ஆனால் மனிதர்கள், அவர்களின் மனநிலையும் வேடிக்கையானது...
தான் பெற்ற கஷ்டம் குழந்தை படக்கூடாது என்று எண்ணி வளர்த்தால் பிள்ளை வேறு மாதிரி வளர்கிறான் ...
கஷ்டங்களை பெற்றே வளரட்டும் என்று தந்தை நினைத்தால், அப்பனையே வெட்டி செய்கிறான் பிள்ளை...
அப்போ தவறு எங்கே?

நாமெல்லாம் வளர்ந்த கில்லாடிகள், குழந்தைகள் வளரும் கில்லாடிகள்! கில்லாடிக்கு  பிறந்தது   கில்லாடியகத்தானே இருக்கும்.

ஆனால் நான் இங்கே சொல்ல தயாரானது வேறு... மனிதன் 6to60 ன்னு   வச்சிக்கோங்க ... எல்லாம் ஸ்பார்க் மாதிரி இருக்காங்க... எதுல ஸ்பார்க்னு கேக்கலியே? அப்படி ஒரு கேள்வி கேக்கவே கூடாது... கொய்யால... எவன்கிட்ட போனாலும், மண்ணெண்ணையை வாயில ஊத்தி பக்னு நெருப்ப ஊதின மாதிரி நம்ம முஞ்சில ஊதுறன்கப்பா...

ஏன்டா இப்படி இருக்கிங்க?
நான் மட்டுமா? நக்கலா எதிர் கேள்வி கேக்குறாங்க...

அலுவலகத்தில் திட்டு வாங்கிட்டு, பொண்டாட்டியை புரட்டுன மாதிரி தொடர் கதையா போய்கிட்டே இருக்கு...

இருக்கிறதிலே எவன் நல்லவன் அப்படின்னு கேட்க  கூடாது? எவன் கொஞ்சமா தப்பு பன்றவன்னுதான் கேட்கணும். ஆனால் ஒருவர் கேட்டார் " என் பிள்ளையை நீ சொல்லுற மாதிரி வளர்த்தா, இந்த உலகத்தில  என் பிள்ளை இளிச்சவாயனா  போயிடுமே?"

கவனிங்க... ஒரு குழந்தைய நல்லவனா வளர்க்கிறது கெட்ட விஷயமா போய்டுச்சு...
துணிகளுக்கு ஒரு வாசிங் மிசின் இருக்கிறப்புல மனுஷன் மூளைக்கு யாராவது  ஒரு வாசிங் மிசின கண்டு பிடிங்களேப்பா...

இப்போதான் எல்லா வகையான தொழில்  நுட்ப வல்லுனர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள், மாணவர்கள்,  அதித மூளை குழந்தைகள் இருக்கிறார்களே... கொஞ்சம் மூளையை கசக்கினால் கண்டு பிடித்து விடலாம் ....

அட.... யாருப்பா அது " அப்ப மனுசங்களே இல்லையானு கேக்கிறது" கம்முனு கிடங்க ...

Monday, October 11, 2010

சுகுமார்ஜி பக்கங்கள்_ Sugumarje's Page_3

ராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? மூன்று...

இந்த புவி காலம், இயக்க ஒழுங்குக்கு கட்டுப்பட்டது. என்னைப்போல வாரம் மூன்று பதிவு என்று சொல்லிவிட்டு இரண்டை தருகிற ஏமாற்று அதற்கு தெரியாது.
இப்புவியில் மனிதம் உட்பட எல்லா உயிரினங்களும் நிலை பெற்றிருக்க வேண்டிய கட்டாயமும் அதற்கு உண்டு. நிலை பெறுதல் என்றால் சாகாவரமெனெபதல்ல. இறவா வாழ்வுதான் நாம் நினைக்கிறோம்... இறந்தும் வாழ்வதுதான் நமக்கு கிடைத்த வரம். அந்த நிலைபெறுவதற்காக நாம் செய்யத்தகுந்தது என்ன?

இப்புவியில் பிறந்தோர்க்கெல்லாம் ஒரு கடமை இருக்கிறது. அது இப்புவியை நிலைபெறுவதற்காக உயிர்க்கச்செய்தல். நாம் வாழ்கின்ற இப்புவி வரப்போகிற இளைய தலைமுறைக்கானது. இந்த பதிவு கூட அப்படித்தான் (ரொம்ப ஆசைதான்!?). அப்படியான அக்கறைதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தாக வேண்டும். அத்தகைய அக்கறைதான் இப்புவியை மேன்மேலும் உயிர்க்கச்செய்யும்.

இந்த உயிர்க்கச்செய்தலில் குழந்தைப்பேறு முதன்மையானது. அதற்கு இன்னொரு துணையும் அவசியமாகிறது. இந்த சமூகம் இதை திருமண பந்தத்தின் வழியே முறைப்படுத்தி இருக்கிறது. யாரோடும், யாரும் இல்லவே இல்லை. அப்படி செயல்பட மிருகங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. மனிதம் எனச்சொல்லில் புனிதம் என்பதும் கலந்திருப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

குழந்தைப்பேறு மிக நீண்ட வரலாறு, முடிவில்லா தன்மை கொண்டது. பதின்வயதில் நம்மை இந்த இயற்கை நம்மை தயார்படுத்துவதே இதற்குத்தானே. ஒரு பையன் தன்னை ஆணாக உணர்வதும், சிறுமி தன்னை பெண்ணாக உணர்வதும் பதின் வயதுகளில்தானே. காமத்தால் பிறந்த நாம், காமத்தில் உழல்வது அதிசயம் அல்லவே. நிச்சயிக்கப்படும் திருமணத்தைவிட இந்த உயிர்க்கச்செய்தலில் காதல் திருமணம் செய்யும் பங்கு வேகமானது. இந்த விளக்கங்கள் திரு. முருகேசன் பதிவுகளில் நிறைய இருக்கின்றன.

சரி. இப்பொழுது இயற்கை, புவி, உயிர்க்கச்செய்தல் விளக்கமறிந்தோம்... தலைப்புக்கான காமத்திற்கு வரலாம்.

நம்மை ஒரு பெண்ணாக, ஆணாக, திருநங்கை ஆக உருவாக்குதலில் குடும்ப சூழல் மட்டுமல்ல, கிரகச்சூழலும் தான். தோற்றத்தில் ஆணாக, செயற்பாடுகளில் பெண்ணாக இருப்போரையும், தோற்றத்தில் பெண்ணாக, செயற்பாடுகளில் ஆணாக இருப்போரையும் நம் வாழ்வில் காண்கிறோம். இந்த வேலையை புதன், சனி, மற்றும் சந்திரன் செய்யவிழைகின்றர். சுக்கிரன் இதற்கு, இவர்களுக்கு உதவதயாராகிறான்...

இன்னமும் காண்போம்...

Friday, February 19, 2010

கேவலமான படைப்பு மனிதன்

ஆழ்துளை கிணறில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்ற ஒன்னரை லட்சம் ரூ செலவுல ஹேண்ட் ரோபோ கண்டுபிடிச்சிருக்காங்க.

நல்ல செய்தி தானேப்பு.

மேலோட்டமா பார்த்தா நல்ல செய்திதான். ஆனால் கொஞ்சம் யோசிச்சி பாருங்க. ஆழ்துளை கிணறு அமைக்கிற விஞ்ஞானம் அவசியமானதுதான். விஞ்ஞானம் போர் ஃபெயில் ஆயிட்டா அதை மூடாம போட்டுட்டு போங்கடானு சொல்லிச்சா.பூனை மலம் கழிச்சா கூட அதை மண்ணை போட்டு மூடிட்டிதான் போகும்னு எங்கயோ படிச்சேன். ஆனால் மனுசன்?

பூனைய விட கேவலமாய்யா நாம ? பூனை மலத்தை விட கேவலமானதா ஃபெயிலியர் ஆன போர் ?

இந்த படைப்புலயே கேவலமான படைப்பு மனிதன் தான். மோப்ப திறன் கிடையாது. சொந்தமா எறும்பு மாதிரி சுறு சுறுப்பு கிடையாது. எறும்பு மாதிரி சேமிப்பு கிடையாது. ஒரு நாய் குட்டியை கிணத்துல தூக்கிப்போட்டா தானா நீந்தும். ஆனால் மனுசனுக்கு ஸ்விம்மிங்க் பூல் போகனும். லைஃப் ஜாக்கெட் போடனும். கோச் இருக்கனும். தாளி நீச்சல் குளத்தோட ஆழத்தை பார்த்தா பத்தடி கூடஇருக்காது. வேட்டையாடற சக்தி,சாமர்த்தியம் கிடையாது. நரிக்குறவன் அடிச்சு கொண்டுவந்தா காராசாரமா ஆக்கி திங்க தெரியும் அவ்ளதான்.

நம்மாளுங்க எல்லாத்துக்கும் அரசாங்கத்தை குறை சொல்றத ஒரு விரதமாவே பின்பற்றிவராங்க. அரசாங்கம் சொல்லுச்சா போர் ஃபெயில் ஆயிட்டா அதை மூடாம விடுங்கடானு.

சரி இருக்கபபட்ட நாயோ, இல்லாதப்பட்ட பிசாசோ போர் போட்டுச்சு, அதை மூடாம போயிருச்சு.. அந்த வட்டாரத்துல சின்னப்பிள்ளைங்க இருக்கிற குடும்பத்தை சேர்ந்தவங்க நாலு பேர் சேர்ந்து அக்கம்பக்கத்துல இருக்கிற ஒரு பாறாங்கல்லை தூக்கி மூடலாமில்லயா.

அட அத கூட விடுங்க மூடாட்டி போவுது அந்த பகுதிக்கு நம்ம வீட்டு பசங்க போகாமயாச்சும் பார்த்துக்கிடலாமில்லே.

Monday, August 24, 2009

செக்ஸ் Vs பொருளாதாரம்

1.பதிமூன்று வயதில் செக்ஸுக்கு தயாராகிவிடும் மாணவன் அ மாணவி செக்ஸ் மீதான நாட்டத்தால் தன் அறிவில் பாதியை தான் கல்வி பயில செலவழிக்க வேண்டியுள்ளது. பாதி அறிவு செக்ஸை அடையவோ அ அந்த உணர்வுகளை அடக்கவோ செலவழிந்து விடுகிறது

2. அதிர்ஷ்ட வசமாக சுய இன்பம் இத்யாதி மாற்று வழிகளின் உதவியால் காதல் கத்திரிக்காய் என்று டைவர்ட் ஆகாதிருந்தால் அ புத்தி சாலித்தனமாக கணக்கு போட்டு காதலித்தால் பிரச்சினை இல்லை. தெய்வீக காதல் இத்யாதியில் இறங்கிவிட்டால் ஷெட் (திவால்)

3.அட எப்படியோ வேலை கிடைத்துவிட்டது உடனடியாக ஒரு திருமணம் நடந்துவிடுமா ? ஊஹூம் சந்தையில் மாடு பிடித்த கணக்காய் பெண்ணையோ ,பிள்ளையையோ பிடித்து கட்டி வைப்பதற்குள் அவளுக்கு முலைக்காம்பே சுருங்க ஆரம்பித்துவிடும். இவன் இழந்த சக்தி வைத்தியர்களை சுற்றி அலைந்து கொண்டிருப்பான்.





சரி ஒழியட்டும் கதம் கதம் !
அவர்களிடையே உடலுறவு என்பது இயல்பானதாக இருந்து விட்டால் பிரச்சினை இல்லை. அவ்வாறன்றி அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு விட்டால்..

1.அவருக்கு உடலுறவு என்றால் என்னவென்றே தெரியவில்லை
2.பார்த்ததுமே எல்லாம் முடிஞ்சி போகுது
3.அவர் மீசை மட்டும் தான் வச்சிருக்கார்

என்றெல்லாம் அந்த பெண் குறை சொல்லி தாய் வீட்டுக்கு வந்துவிட முடியாது. காரணம் தெரிந்ததே..நம் சம்பிரதாயம்,கலாச்சாரம்,பெண்ணின் அடக்கம் கழுதை முட்டை என்று ஆயிரம்.


தன் மனக்குறை இது என்று வெளியில் சொல்ல முடியாத நிலையில் அந்த பெண் அந்த குடும்பத்தில் பிரச்சினைகளை க்ரியேட் செய்ய ஆரம்பித்து விடுகிறாள். சரி அதுலதான் ஒன்னும் கழட்ட முடியலை இதையாவது செய் என்று அவனுக்கு டார்கெட் வைக்கிறாள். (54 இஞ்ச் கலர் டிவி முதல் டபுள் பெட் ரூம் ப்ளாட் வரை.

ஆணின் கதை வேறு. அவனுக்கு அந்த விஷயத்தில் மனைவி சரிப்பட்டு வரவில்லை என்றால் நிறைந்த சபையில் உடைத்து சொல்லி விடுகிறான்.

ஒருவேளை இவனால் அவளை திருப்திப் படுத்த முடியாத நிலை இருந்தால் அதை மட்டும் வாயால் சொல்ல் முடியாது வேறு வகையில் பிரச்சினைகளை உருவாக்கி அவளை தாய் வீட்டுக்கு அனுப்பி விட முயல்கிறான்.

இவன் தான் பெரிய ஆண்பிள்ளை சிங்கம் ,மதன காமராஜன் என்ற நினைப்புடன் முதலிரவு அறைக்குள் நுழைகிறான். ஏதோ காரணத்தால் தோற்று போய்விட்டால் அவள் முகத்தை மறுநாள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இதை எப்படி சபையில் வைத்து சொல்வது..


இந்த நிலையில் தான் என் அம்மாவை ம‌திக்கிற‌தில்லே..
க‌ல்யாண‌த்துக்கு போட்ட‌ ந‌கை எடை குறைவா இருக்கு
மெத்தை த‌ர‌லை,க‌ட்டில் த‌ர‌லை எல்லாம் ச‌பையில் வைக்க‌ப்ப‌ட்டு க‌தை காவ‌ல் நிலைய‌த்துக்கோ, குடும்ப‌ கோர்ட்டுக்கோ செல்கிற‌து.
மேற்படி ஆணோ பெண்ணோ வெத்து ஆட்கள் அல்லவே அவர்களில் ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் ஒருவர் டாக்டராக இருக்கலாம் லாயர்,ஆடிட்டர் இத்யாதி வேலைகளில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்.

பாதிபேர் அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது என்று தம்மை தாமே வடிவமைத்து கொண்டு விடுகின்றனர். இந்த நிதானம்/ ஹிப்பாக்ரஸி/கோழைத்தனம் இல்லாதவர்களால் தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இது போன்ற கணவன் மனைவி பொருளாதார விஷயங்களில் பைத்தியம் பிடித்தாற்போல் நடந்து கொள்வார்கள். ஒன்று வடிகட்டின கஞ்சத்தனம் வந்துவிடும். (எதிராளியை பழி வாங்குகிறார்களாம்) அல்லது ஊதாரித்தனமாக செலவழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இங்கே ஒரு தத்துவம்:
மனிதனில் இருப்பது ஒரே சக்தி. அது காம சக்திஅது மேல் நோக்கி போனால் யோக சக்தி. கீழ் நோக்கி வந்தால் காம சக்தி. அது படைப்பின் சக்தி. ஒரு உயிரை படைக்கத்தான் காம சக்தி. தன்னை இழக்கத்தான் (தன் ஈகோ) காமசக்தி , அதில் இழக்க முடியாதவன், படைக்க முடியாதவன் உடைக்க ஆரம்பித்துவிடுகிறான். சட்டத்தை, பொருளாதார அமைப்பை உடைக்கிறான். தூள் பண்ணுகிறான்.

நான் சவாலிட்டு கூறுகிறேன் . எவனொருவனுக்கு செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் இருக்கிறதோ அவன் பாதுகாப்பற்று இருப்பதாய் உணர்கிறான். பெரும் பணம் சேர்க்கிறான்.

தன் "பவிசு" தெரியாத அ புரிந்து கொள்ள முடியாத சிறுமிகளை சீரழிக்கிறான். அ ஹோமோவாகிறான் , மனிதன் தான் ஒரு வேலையை திருப்திகரமாக முடித்து விட்டால் மீண்டும் அதில் ஈடுபாடு பிறக்க நாள் பிடிக்கும். அரை குறைகள் தம் அரை குறைத்தனத்தை மறைக்க மீண்டும் மீண்டு ஈடுபட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச சக்தியையும் இழந்துவிடுகின்றன.

எனவே அரசாங்கம் முதற்கண் தம் மக்களின் செக்ஸ் லைஃபை சீர்திருத்த வேண்டும் .

இல்லாவிட்டால் மேற்படி அரை குறைகள் படைக்கும் சக்தியை படைப்பில்

செலவழிக்காது உடைப்பில் செலவழிக்க ஆரம்பித்துவிட்டால் கதை கந்தல் தான். ஒரு கள்ளக்காதல், மனைவி வெட்டிக்கொலைக்கு மட்டுமல்ல சத்யம் ஊழல் முதல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை இதுவும் ஒரு காரணம். இதுவே காரணம்.

Sunday, August 9, 2009

பெண்கள் இரண்டுவிதம் : கோகுல் அவர்களுக்கு மறு(ப்பு ) மொழி

கோகுல் அவர்களே !
//முதலில் என்னை 18 வயதாக நினைத்ததற்கு ஒரு நன்றி , ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் அந்த வயதை கடந்து விட்டேன் !//

தங்கள் விரிவான மறுமொழிக்கு நன்றி. தங்களில் ஒரு வித தேடுதல் தெரிகிறது (அதான் 18 ஐ கடந்தாச்சுனு சொல்லிட்டிங்களே !


// நீங்கள் சொல்வது எல்லாம் படிப்பதற்கு மிகவும் இன்பகரமானதாக இருக்கிறது, குடும்பத்தில் அடங்கி போகிறவர்கள்தான் உண்மையில்
அடக்குகிறார்கள் , ஆஹா , ஆனால் பாருங்கள், நம் நாட்டில் குடும்ப நீதிமன்றங்களில் வரும் வழக்குகள் இந்த மாயாவாதத்தை விட்டு மிக மிக விலகி இருக்கின்றன.//

வாதமில்லே பக்கவாதமில்லேண்ணா ! நான் சொல்றது சத்தியம். பெண்ணை உங்க ஆண்மையாலயோ, உடல்பலத்தாலயோ வெல்லவே முடியாது. அவள் போய் ஒழியட்டும்னு சகிச்சுக்கறா அவ்ளதான். அந்த கருணைக்கும் ஒரு எல்லை உண்டு இல்லியா. மேலும் நீங்க சொல்ற கோர்ட்டு ,கேஸு பார்ட்டிங்க எல்லாம் அவங்களுக்குள்ள இருக்கிற அன்புக்கு ஏங்குற ஆத்மாவை தொலைச்சுட்டவங்க அல்லது தொலைக்க வைக்கப்பட்டவங்க. அவங்க எண்ணிக்கைய இன்றைய ஜனத்தொகையோட ஒப்பிட்டா ரொம்ப குறைச்சல். இதெல்லாம் மாறிவரும் வாழ்க்கை முறைக்கு நாம கொடுக்கிற விலை. ஆண் ஆணா இல்லாதப்ப (பான்பராக்,சுய இன்பம்,இறுக்கமான உள்ளாடைகள் இப்படி நூற்றுக்கணக்கான காரணங்களால் ஆண் ஆண்மையை இழந்து பெண்ணாவே மாறி அவளோட ஏட்டிக்கு போட்டியா மாறிப்போறான். ஆண்மையின் சிகரமா இருக்கிறவனுக்கு அவளோட இன் செக்யூரிட்டி,பொசசிவ் நெஸ் இதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் புன்முறுவல் பூக்க வைக்கிறதா இருக்கும்"

இங்கே நடக்கறது என்னன்னா .. ரெண்டு பேரும் பெண்களே.. அதான் இத்தனை லொள்ளு. ஆண் ஆண் மாதிரி வாழ்ந்தா பெண் அவனை அட்மைர் பண்ணுவா . ஒரு பெண் பெண்ணையோ, ஒரு ஆண் ஒரு ஆணையோ அட்மைர் பண்றதுக்கெல்லாம் உயிரியல் சம்பந்தமான காரணங்கள் இருக்கலாம்.

//மேலும் இதை எழுதும்போது தோன்றுவது என்னவென்றால் உங்களுடைய இரண்டு பதிவுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி
இருக்கின்றது. முதல் பதிவில் மிகவும் காத்திரமாக 'ஆர்காசம்' பற்றியெல்லாம் மிகவும் யதார்த்தமாக ஆரம்பித்து உங்கள் அடுத்த பதிவில்
அதற்கு நேர்திசையில் சென்று விட்டீர்கள் ஏன் என்று தெரியவில்லை.//

இடைவெளி என்று ஏன் நினைக்கிறீர்கள். இரண்டு கோணங்களையும் வெளிச்சமிட்டு காட்டினேன். உண்மை எப்பயும் ஒரே கட்சிலயோ, காட்சிலயோ கிடைக்காது. ரெண்டு பதிவுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான்.

"நீங்கள் சொல்வது போல ஆணோ பெண்ணோ முழுமை அடைவது உடலுறவின் மூலமாக என்று வைத்துக்கொண்டால், ஆர்காசம் வந்த உடலுறவின் மூலமாகவா அல்லது அது வராத உறவு மூலமாக கூட முழுமை அடைவார்களா? ஏனெனில் நீங்கள் சொன்னது போல பல பேர் 23 (அல்லது 22.5) அசைவு வரை தாங்குவதில்லை.//

முழுமை அடைவது உடலுறவு மூலமாதான்னு நான் சொன்னதா பட்டிருந்தா அது என் எழுத்தின் குற்றம். நம்ம பெரியவங்க கடவுளை நினை, கடவுளை ஜபினு சொன்னது சாகும்போது பழக்க தோஷத்துல அந்த கடைசி கணத்துல அது நடந்துராதாங்கற அற்ப ஆசைலதான். அதே மாதிரி உடலுறவுங்கறது தொடர்ந்த ப்ராசஸ். இந்த ப்ராசஸால ஏதோ ஒரு கட்டத்துல கணவன் மனைவி ஒன்றுபட ஆரம்பிக்கிறாங்க.(தம் அகந்தையை விட்டு, அல்லது இழந்து ). இது வேறு எந்த வழியிலயும் அசாத்தியம்.

//நீங்கள் சொல்வதை கூட்டி கழித்து பார்த்தால், ஆண்கள் காதல் செய்ய வேண்டும் ஆனால் அதன் பிறகு (அல்லது முன்பே) வரும்
உடலுறவில் அந்த பெண்ணை திருப்தி செய்ய முடியாது , ஆனால் நாம் முழுமையடைய வேண்டும் (அய்யய்யோ ... ) //

இந்த பகுதிக்கான என் விளக்கம் ஏற்கெனவே என் விளக்கத்தில் இருப்பதால் இதை தவிர்க்கிறேன். பெண்ணை திருப்தி செய்ய ஒரு வைப்ரேட்டர் போதும். அவளுக்கு தேவை அன்பு, நான் இருக்கேன்டா என்ற அரவணைப்பு. அது கிடைச்சுட்டா மூச்சா போன ரேஞ்சுல இருக்கிற உடலுறவை கூட கருணையோட மன்னிச்சுர்ரா.( நெப்போலியனோட உடலுறவு பாணி இப்படித்தான் இருக்குமாம். வலம்புரி ஜான் தாய் பத்திரிக்கைல எழுதியிருக்காரு)



//அதன் பிறகு லஞ்சம் வாங்கி அவளை திருப்தி படுத்த வேண்டும். , அல்லது அவள் மன ஆழத்தில் இருக்கும் அன்பை தொட வேண்டும்//
அன்பையோ, உடலுறவில் முழுமையையோ தராவிட்டால் இது தான் ஆண்குலத்தின் தலையெழுத்து

// (நமது பரம்பரையை ரட்சிக்க ..) அது 54 இன்ச் கலர் டி.வீ மூலம் சாத்தியம் ...கிம்பளம் அதிகம் வாங்க வேண்டும் ... //


பரம்பரை என்ற வார்த்தையே என் பதிவில் கிடையாது. பரம்பரை ,வாரிசு இத்யாதியில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே கிடையாது. சி.எம்.சில போய் பாருங்க .ஒரு நாளைக்கு நூறு குழந்தை பிறக்குது. இவற்றை அடையாளம் காண்பது மணீக்கட்டில் கட்டியுள்ள சீட்டால்தான். எவனாவது/எவளாவது அதை மாற்றிக்கட்டிட்டான்னா கோவிந்தா . மேலும் நமக்கே பிறந்தது கூட அது நம்மோட நிழல் தானே தவிர வேறு ஒரு இழவும் கிடையாது. நாம் குழந்தை பெறுவது நம் மரணத்துக்கு பெப்பே காட்டத்தான் . ஆனால் நம்ம நோக்கம் நிறைவேறுவதில்லே. மரணத்துக்கு பூச்சாண்டி காட்ட பெத்த, சரியா வளர்க்காத பிள்ளையே மரணமாகிடறதும் உண்டு


//போங்கையா போய் குழந்தை குட்டிகளை படிக்க வையுங்க (தப்பா நினைச்சுக்காதிங்க தேவர் மகன் கிளைமாக்ஸ்-இல் வசனம்) டென்சன் டென்சன் டென்சன் (கவுண்டமணி குரலில் படிக்கவும்)//

படிக்க வைங்க என்பதோடு செக்ஸ் கல்வியையும் சேர்த்திக்கிடறதா இருந்தா ஜே !

இயற்கைக்கு புறம்பா போகும் போதுதான் டென்ஷன் டென்ஷன்.. இயற்கையோட இயைந்து நடந்தால் ..

ரிலாக்ஸ் ! ரிலாக்ஸ் ! ரிலாக்ஸ் !

Saturday, August 8, 2009

இவள் விடமாட்டாள் என்று தெரிந்து விட்டது

என்னிடம் ஜோதிடம் கேட்க வந்த தாயாரம்மா தன் வேலை முடிந்ததும் , சரி சாமி உன் வேலைய நீ பாரு நா போய் வரேன் என்று புறப்பட்டு போயிருக்க கூடாதா ? செத்த வெத்திலை போட்டுக்கிட்டு புறப்படறேன் என்றாளே வெற்றிலை போட்டுக்கொண்ட கையோடு ஒழிந்திருக்க கூடாதா ? அவள் ஏன் அந்த கேள்வியை கேட்க வேண்டும். நான் ஏன் என் கையறு நிலையை கூற வேண்டும். இந்த 42 ஆவது வயதில் இன்னொரு பெண் ஏன் என் வாழ்வில் நுழைந்து என் வாழ்வை வாணலிக்கு பயந்து அடுப்பிற்கு பாய்ந்த கதையாய் மாறவேண்டும். எல்லாம் விதி.

காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் என்ற பாரதி வரிகளை மெய்ப்பித்தல் என் நோக்கம் இல்லை என்றாலும் நான் பிறந்த நடுத்தர வகுப்பு குடும்பத்து ஹிப்பாக்ரசிகளை சகிக்க முடியாது பார்க்க சுமாரான ஒரு ஏழை பெண்ணை காதலித்ததோடு மணந்தும் கொண்டும் 24 மணி நேரத்தில் பிரிக்கப்பட்ட அதிர்ச்சி என்னில் ஏன் ஏன் என்ற கேள்விகளை எழுப்பி ஜோதிடத்தின் பால் செலுத்தியது. தெலுங்கு சினிமா மாதிரி 20 வ. முன்பான அந்த திருப்பமே என் வழ்வின் அனேக திருப்பங்களுக்கு காரணமானது.

ஊர் சேர்ந்து பிரித்த காதலியை மீட்க பண்ணாத தகிடு தத்தங்கள் இல்லை. என்னதான் சொல்லி அவள் மனதை கலைத்தார்களோ ? என்னதான் சொல்லி அவள் பெற்றோரை பயமுறுத்தினார்களோ தெரியாது. வீம்பு காரணமாய் இரண்டு வருடங்களிலேயே மற்றொரு பெண்ணை இவளும் வேறு ஜாதி. ஏழையும் கூட என் உத்தேசம் என்னவென்றால் வீட்டினர் சொல்லும் பெண்ணை மணந்து நான் என் சொந்த திறமையில் வெளிச்சத்துக்கு வந்தாலும் என்ன சொல்வார்கள் ? " ஹ்ம்..அவ எவ ..... பின்னாலயோ ஓடினயே..அப்படியே விட்டிருந்தா இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா " என்று தானே அலட்டுவார்கள். அந்த வாய்ப்பை அவர்களுக்கு தரக்கூடாது. மேலும் நான் காதலித்து பிரிக்கப்பட்ட பெண்ணே என்னை பார்த்து அடப்பாவி ! என்னை விட்டுட்டு ஊட்ல சொன்னவ பின்னாடி போறியே நீ நல்லாருப்பியா என்று தானே வயிறெரிவாள். அந்த வாய்ப்பை அவளுக்கு தரக்கூடாது

இப்படியெல்லாம் கணக்கு போட்டுதான் காதல் கடிமணம் புரிந்தேன். இதோ 18 வருடங்கள் ஓடிவிட்டன. தலை முடி கொட்டி, தாடி மீசை வெளுத்து ,லேசாக தொப்பை போட்டு ஒரு உதவாக்கரை தமிழ் தினசரிக்கு குத்து கொலை செய்திகள் கொடுத்த படி, சூரியன் மற்றெந்த கிரகத்தையும் சுற்றுவதில்லை, எங்கிருந்து எங்கும் பெயர்வதில்லை என்ற அற்வியல் அறிவு இருந்தும் கிரிக்கெட் காமெண்ட்ரி மாதிரி கிரகங்கள் குறித்த காமெண்ட்ரியை கொடுத்தபடி வயிறு வளர்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் இந்த தாயாரம்மா கேட்ட கேள்வியால் என் வாழ்வில் அதிரடி திருப்பம்.


அவள் தன் சுருக்குப்பையை திறந்ததும் நான் வேலை பார்க்கும் தினசரிக்கு செய்திகளை எழுத ஆரம்பித்தேன். அந்த பத்திரிக்கையின் தினசரி நியூஸ் டெட் லைன் மாலை 5 மணி என்பதால் மாலை 5க்கு பிறகு கிடைக்கும் செய்திகளை காலை நேரத்தில் எழுதி உச்சி வெயிலில் பஸ் மூலம் அனுப்பி வைப்பது வழக்கம்.

ஒரு பாட்டம் வெற்றிலை போட்டு குதப்பி வெளியே போய் துப்பி விட்டு வந்தவள் "சாமி நான் கேக்கறனேனு தப்பா நினைக்க கூடாது சாமி ! உங்கப்பா பெரிய ஆஃபீசரு பாவம் வாயை கட்டி வயித்த கட்டி உங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கினாரு. பாவம் பத்து பைசா லஞ்சம் வாங்காம மானஸ்தனா வாழ்ந்தாரு. அவர் பெத்த புள்ளைங்க 4 பேர் இருக்கும்போதே அவர் கட்டின வீட்டை வித்துட்டிங்க ... உங்க ரெண்டு அண்ணன் மாரும் 50 வயசுக்குள்ளயே செத்து போயிட்டாங்க ..உங்க தம்பி பாவம் ரத்தம் ரத்தமா கக்கிகிட்டிருக்காராம். உன் வீட்ல பார்த்தா உன் பெண்டாட்டி கண்ணுல மட்டும் உயிரை வச்சுக்கிட்டிருக்கு.. உன் பொண்ணு பாவம் படிப்பை கூட நிப்பாட்டிட்டு எங்கயோ போட்டோ ஸ்டுடியோல வேலை செய்யுதாம். அந்த ஸ்டுடியோ காரனையே கல்யாணம் கூட கட்டிக்க போவுதாம். உன்னை பார்த்தா நீ ஒன்னும் குடிச்சி கூத்தடிக்கற மாதிரியும் இல்லே. ஜோஸ்யம் பார்க்க வந்தவங்க இருபது வச்சாலே "அட என்னத்த சொல்லிட்டேன் பத்து போதும் .. இந்த பத்துக்கு குழந்தைங்களுக்கு எதுனா வாங்கிட்டு போங்கனு சொல்லிர்ர. அது ஏன் சாமி நல்லவங்களுக்கே கடவுள் இந்த மாதிரி சோதனைய கொடுக்கறாரு. " என்று பத்தி பத்தியாக பேசினாள்.

"எனக்கு ரேங்கி விட்டது . இத பாரு..இந்த மாதிரி தர்ம சந்தேகத்துக்கெல்லாம் பதில் சொல்ல நான் ஒன்னும் சங்கராச்சாரி கிடையாது. ஆள விடு " என்றேன். சற்றே முகம் சுருங்கி போனாலும் என்னை விடுவதாயில்லை அவள். " இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டா எப்படி சாமி.. நீங்க பெரிய பெரிய புஸ்தவம்லாம் படிக்கிறிங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுவிங்கன்னு தான் கேட்டேன்" என்றால் கெஞ்சலாய்.

பாவம் உருவம்,வயதுதான் வளர்ந்திருக்கிறதே தவிர அப்பாவி. செய்வது பழைய பாட்டில் வியாபாரம் தான் என்றாலும் லோட் லோடாய்தான் தள்ளிவிடுவாள். பணவிஷயத்தில் கெட்டி. என்ன ஒரு சிக்கல் என்றால் கணவன் கு(ட்)டிகாரன். இவள் என்னமோ அம்மன் சினிமாவில் அம்மன் வேடம் கொடுக்கலாம் போலத்தான் இருக்கிறாள். அந்த மனிதனுக்கு என்ன அலுப்போ ! மாப்பிள்ளை சோப்ளாங்கி வருடா வருடம் கடன் கேட்டு வந்து தலை சொறிவான். பிள்ளை சூதாடி. சம்பாதனை என்னவோ தலைக்கு மேல் தான் இருக்கிறது. லகர கணக்கில் ஒரு வட்டி இரண்டு வட்டிக்கும் திருப்பி வருவதாய் கேள்வி.

சரி .. இவள் விடமாட்டாள் என்று தெரிந்து விட்டது. நான் டென்ஷனாய் என் பின்னே திரும்பி பார்த்தேன் பீடிக்கட்டு, தீப்பெட்டி இருக்கிறதா என்று அவளுக்கு தெரியும் நான் எரிச்சலடைந்தால் உடனே வெளியே போய் ஒரு பீடி குடித்து விட்டுதான் வருவேன் என்று. இன்று .."சாமி த பாரு ! எனக்காக நீ ஒன்னும் வெளிய போகவேனா அடிச்சு விடு" என்றாள் .

நான் பீடி ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டு புகை ஆழ உறிஞ்சி வெளியேற்றினேன், அவள் ஆவலுடன் என் முகத்தையே பார்ப்பது ஒரு வித திருப்தியை தந்தது. பேச ஆரம்பித்தென் " தபாரு ! லைஃப் வந்து மெகா சீரியல் மாதிரி இதுல காரண காரியம்லாம் நம்ம திருப்திக்கு நாம சொல்லிக்கலாம் அவ்ளதான். இருந்தாலும் நீ இவ்ள தூரம் கேட்டதால சொல்றேன்.

"அடச்சீ .. ஆசைக்கு ஒரு அளவு வேணா"

நள்ளிரவு ! தெருக்கதவை கதவை ஏதோ பிராணி பிறாண்டினாற்போல் இருந்தது. நாமதான் ராத்திரி பிசாசேச்சே மறு நாள் போட வேண்டிய பதிவை டொக் டொக்கி கொண்டிருந்த நான் என்னதான்னு பார்த்துரலாம்னு கதவை திறந்தேன். திறந்ததுதான் தாமதம்.

கோடி சூரிய பிரகாசத்தோடு தோன்றினார்னுவாங்களே அதேமாதிரி பிரகாசத்தோட சாட்சாத் கலைவாணி அன்னப்பறவையில் ஆரோகணித்திருந்தாள். செல்ஃபோன் சிக்னல்கள் அன்னப்பறவையின் பொறுமையை சோதித்திருக்க அதுதான் தன் அலகால் கதவை சுரண்டியது போலு.

"வாங்கம்மா வாங்க வாங்க ! ஏன் வெளியவே நிக்கிறிங்க உள்ள வாங்க என்று வரவேற்றேன். மனைவி,மகள் வெளியூர் போயிருந்ததால் ஏகனாக இருந்த எனக்கு நள்ளிரவில் நாமகள் காட்சி தந்ததும் அன்னத்தை விட்டு இறங்கி என் வீட்டுக்குள் நுழைந்ததும் சிங்கை பதிவர்கள் கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு கிடைத்த அத்தனை ஆனந்தத்தை கொடுத்தது.

"வாங்கம்மா உட்காருங்க ..பஞ்ச சம்ஸ்காரம் இத்யாதியெல்லாம் நமக்கு தெரியாது. இந்த எளியவனை தேடி வந்ததுக்கு ரொம்ப நன்றி !" அது இது என்று உளறிக்கொட்டினேன்.

வந்தவளோ "த பாரு ..உன் புகழ் மொழியெல்லாம் கேட்டு வட்டச்செயலாளர் பதவி கொடுக்க நான் ஒன்னும் ஜெயலலிதா கிடையாது . நேரிடையா விசயத்துக்கு வரேன். நீ ஜோசியன் தானே"
"ஆமாம் தாயே ! ஏதோ விட்ட குறை தொட்ட குறையா ஒரு குன்ஸ் கிடைச்சது..அதை வச்சு காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கேன்"
" உன் அதிவினயம்லாம் இருக்கட்டும் . கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லனும் ஓகே"
"சரி தாயே"
"ராப்பிச்சை மாதிரி அம்மா தாயேல்லாம் வேண்டாம்"
"சரிங்க"
"கலியுகம் துவங்கி எத்தனை வருசம் ஆச்சு.. அது வந்து 5110 ன்னு நினைக்கிறேன்மா..எதுக்கும் பஞ்சாங்கம் எடுத்து பார்த்துரட்டுமா ?"
"கிழிச்சே ..தபாரு ஒவ்வொரு யுகத்துலயும் 5,1111ஆவது வருஷம் உலகத்துல ஏழில ஆறு பாகத்தை அழிச்சு ஒரு பாகத்தை மட்டும் விட்டு வைக்கிறது வழக்கம்"
"அடடே ..டிஸ்க் க்ளீன் அப் மாதிரி "
"உன் அதிமேதாவித்தனத்தையெல்லாம் காட்டாதே சொல்றத கேட்டுக்க"
"சரிங்க"
" இப்போ அந்த நேரம் நெருங்குது. உலகத்தை அழிக்கப்போறோம்"
" அந்த சிரமம் உங்களுக்கு இருக்காதுனே நினைக்கிறேன். அதையெல்லாம் அமெரிக்காவும் ,எங்க அரசியல்வாதிகளுமே பார்த்துக்குவாங்க !"
"முட்டாள் ! குறுக்கே பேசாதே..நீ என்னவோ 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு சிறப்பு ராணுவம் அமைச்சு , நதிகளையெல்லாம் இணைச்சு ,கூட்டுறவு பண்ணை விவசாய முறையை அமலாக்கி இந்தியாவை சொர்க பூமியாக்கறேன் அது இதுனு பீலா விட்டுக்கிடிருக்கியாமே"
"பீலா இல்லைம்மா ..ஜனங்க பை மிஸ்டேக் என் பேச்சை கேட்டா உண்மையிலயே மாத்திர்ரதா சின்ன உத்தேசம்"
"அடச்சீ .. ஆசைக்கு ஒரு அளவு வேணா"
" இதுக்கு பேரு ஆசையில்ல தாயே லட்சியம்"
" தபாரு இதெல்லாம் நடக்காத காரியம் ..பேசாம இதை மாதிரி உளர்ரதை எல்லாம் மூட்டைக்கட்டி வச்சுட்டு ஆகிற வேலை எதுனா இருந்தா அதைப்பாரு !
"நீ சொல்ற ஆகிற வேலைய பார்க்க கோடிக்கணக்குல ஜனம் இருக்குது தாயி.. ஏதோ உருப்படாதவன் தொலையட்டும்னு விடுவியா "
"உன்னையா.. விடறதா நெவர். உன்னை விட்டு வச்சா அழிவே சாத்தியமில்லாம போயிரும்"
"தா .. பார்த்தியா நீ இப்ப விடறதுதான் பீலா.. நான் எல்லாம் ஒரு கணக்கா ஜுஜுபி"
"ஜுஜுபியோ..லோலாக்கு டோல் டப்பியோ ..உன் எண்ண அலைகள் வலுவா இருக்கிறதால தேவலோகத்து டெம்பரேச்சரே ஏறிப்போயி ஏசியெல்லாம் ஓவர் டைம் வாங்குது. எங்க அஜெண்டாவை டிஸ்டர்ப் பண்னுது. நாங்க அழிச்சாகனும். அதுக்கு நீ உன் லட்சியம் லால் மஞ்சன் (பல் பொடி தலைவா !)எல்லாம் விட்டு தொலைக்கனும்"
"யப்பாடி! ட்ரம்ப் கார்டு இப்ப எங்க்கிட்ட இருக்கா .. நான் ஏன் என் லட்சியத்தை விட்டுத்தொலைக்கனும். நான் இந்த பூமில வசிக்கிறவன் . இதை நீங்க அழிக்கறதுக்கு நான் கோ ஆப்பரேட் பண்ணுவேனு எப்படி நினைச்சிங்க"
"நாங்க தெய்வங்க.."
"நான் மனிதன்(ரஜினி பட டைட்டில் இல்லிங்க) . எனக்கு மனிதாபிமானம் தான் முக்கியம்"
"இந்த மனிதர்கள் உனக்கு என்னாத்த செய்து கிழிச்சுட்டாங்கனு இப்படி ஜொள்ளு விடறே"
"நான் ஒன்னும் அத்வானி மாதிரி ரத யாத்திரை போய் ஆதரவு கேட்கலியே..அந்த நாள் முதல் இந்த நாள் வரை என் திட்டத்தை ஆட்சியாளர்கள்,அரசியல்வாதிங்க,மீடியா பார்வைக்கு கொண்டு செல்லதான் முயற்சி பண்ணியிருக்கேன்"
"போறதானே ..மக்கள் கிட்டே போய் நான் 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு சிறப்பு ராணுவம் அமைச்சு , நதிகளையெல்லாம் இணைச்சு ,கூட்டுறவு பண்ணை விவசாய முறையை அமலாக்கி இந்தியாவை சொர்க பூமியாக்கறேன்னு சொல்ல வேண்டியதுதானே"
"நேரம் வரும்போது போறேன்"
"அதுவரைக்கும் இந்த மாதிரி கவைக்குதவாத அங்கத உரையாடல்களை பதிவா போட்டுக்கிட்டு காலத்தை கழிக்கிறேங்கறயா?"
"Some thing is nothing இல்லியா?"
"த பாரு உஅனக்கு இதான் கடைசி வார்னிங். இந்த இழவை எல்லாம் விடப்போறியா இல்லையா?"
"இல்லை தாயி !"
"உன்னோட ரெண்டு கண்களும் பறிக்கப்படும்"
"த பார்ரா இது சாபமில்லே ..வரம்"
"எப்படி சொல்றே?"
"மனோ சக்தில பாதி கண்கள் வழியாதான் செலவாயிருதாம். அதனாலதான் கண்ணில்லாதவங்களோட இதர புலன் எல்லாம் தீட்டப்பட்டு ஷார்ப் ஆயிருதாம்"
"என்ன இது வில்லங்கமா போச்சு. இப்பவே உன் இம்சை தாங்க முடியலை. கண்ணை பிடுங்கி உன் மனோசக்தி அதிகரிச்சுட்டா சொர்கத்தை காலி பண்ணிட்டு கொட நாடு எஸ்டேட் போக வேண்டியதுதான். தபாரு ! உன் ரெண்டு கையையும் பறிச்சுருவோம்"
" நல்லதா போச்சு ப்ளாகர் காரன் போட் காஸ்டிங்னு ஒன்னு வச்சிருக்கான். மொபைல்லயிருந்து அப்படியே போஸ்ட் பண்ணலாம்"
"உன் பேச்சை பறிச்சுட்டா?"
"இன்னம் நல்லதா போகும். என் ஜாதகத்துல சுக்ர,சந்திரர்கள் தவிர எல்லா கிரகங்களும் கேந்திர கோணங்கள்ள இருக்கிறதால பரிவ்ராஜக யோகம்னு பேரு. அதாவது நான் வந்து விடுதலை பெற்றவனாம். இந்த சுக்ர,சந்திரர்கள் வாக்குஸ்தானத்துல மாட்டிக்கிட்டதால அதை சொல்லனும்,இதை சொல்லனும்னு என் சக்திய வீணடிச்சிட்டிருக்கேன்."
"அய்யய்யோ ! இது என்ன புது பிரச்சினை? அடேய் காலணா கவிஞனே! ஏழில் ஆறு பாகந்தாண்டா அழுப்போம் அதுவும் பாவிங்களதான் அழிப்போம்"
"யார் பாவி தாயே ! இன்னைக்கு உலக நாடுகள் பிச்சையெடுக்க காரணமே அமெரிக்காதான். ஆனால் கெடுவான் கேடு நினைப்பான் என்ற ஆரம்ப சூத்திரம் கூட தெரியாத நாடு அது. -ஆடிய ஆட்டமென்ன ? -ங்கற மாதிரி இப்போ காருக்குள்ள குடித்தனம் பண்ற ஸ்டேஜுக்கு அமெரிக்க மக்கள் வந்துட்டாங்க"
"அப்போ அவங்க பண்ண அக்கிரமத்தையெல்லாம் மன்னிச்சுரனுங்கறயா?"
"அப்படி சொல்லமாட்டேன்.. அவங்களால உலக நாடுகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட சொல்லனும்"

Friday, August 7, 2009

.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி

மனைவி என்றதும் உங்கள் மூளையில் பல்வேறு பிம்பங்கள் மின்னலாம். அவற்றையெல்லாம் முதற் கண் துடைத்து விடுங்கள்.(மெட்றாஸ் ஐ என்றால் வேண்டாம்)

உலக அழகி ஐஸ்வர்யாராயே என்றாலும் சரி மனைவி என்ற ஸ்தானத்திற்கு வந்து விட்டால் அவர்களின் சகலமும் மாறிவிடுகிறது. சாலையோர ரோமியோக்கள் கண்ணுக்கு வேண்டுமானால் ப்யூட்டிஃபுல் ஆண்டி யாக தோன்றலாம்.

ஆனால் தன்னை ஆண்டியாக்கி விட்டபடியால் கணவன் கண்ணுக்கு மட்டும் அவள் ட்ராகுலாவாகவோ,அட்டையாகவோத் தான் தோன்றுவாள். பெண் என்பவள் வேறு எந்த பாத்திரத்தில் வேண்டுமானாலும் சோபிக்கிறாளே தவிர மனைவி பாத்திரத்தில் மட்டும்,சோகிக்கத் தான் வைக்கிறாள். இது நற்குடியில் பிறந்த‌ (காஸ்ட்லி மது இல்லிங்க) ஆதர்ஸ குணங்கள் நிறைந்த பெண்களுக்கும் பொருந்தும்.

ஏதோ என் கடுப்பை பதித்து வயிற்றெரிச்சலை ஆற்றிக் கொள்ளலாம் (அது என்ன நாயர் கடை டீயா) என்று ஆரம்பித்து விட்டேன்.

விஷயத்துக்கு வரேன். பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.

1.நிறைய பெண்களிடம்,மனைவிகளிடம்( என் மனைவிகள் அல்ல) நான் கண்டது:
செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது. ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட். இந்த நிலையில் அவள் செக்ஸுக்கு வருவது தியாகம் தானே . வெட்டி ... நித்திரைக்கு கேடுங்கற மாதிரி

2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.

3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.

4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள்,ஃபோர்வீலர்கள்,
கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம்
தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது. ஒன்றொ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது.

5.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.

6.விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.

7.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது.

என்னைக் கேட்டால் நாட்டில் நில‌வும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளுக்கு கார‌ண‌மே க‌ண‌வ‌ன் மாரின் செக்ஸ் குறைபாடுக‌ள் தான் என்று சொல்வேன்.

மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.

இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி ஹும் நீ அதுக்குத்தான் லாய‌க்கில்லே இதை‌யாவ‌து வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாய‌க்கில்லே இதையாவ‌து வாங்கித் த‌ருவோம் என்று க‌ண‌வ‌ன் வாங்கித் த‌ருவான் போலும்

ப‌திவு எங்க‌யோ ஆர‌ம்பிச்சு எங்க‌யோ போயிருச்சு. எப்ப‌டியோ ம‌னைவிக‌ள் திருந்தினால் ச‌ரி. திருந்தாத‌ ஜ‌ன்ம‌ங்க‌ள் இருந்தென்ன‌ லாப‌ம்

Wednesday, August 5, 2009

நாட்டு ஆண் பெண்களின் விந்து,முட்டைக்கருக்கள் நாசமாகிப்போனதால்

1.பக்கத்து வீட்டு பரிமளம்

"டேய் சோமு ! பக்கத்து வீட்டு பரிமளாகிட்டே போய் 2 தக்காளி வாங்கிட்டு வாடா" என்றாள் அம்மா. "சே பத்தாங்கிளாஸ் படிக்கிற பையனுக்கு சொல்றவேலைய பாரு" என்று திட்டிக்கொண்டே புறப்பட்டேன்.

பரிமளாவுக்கு 35க்கு மேல் வயது. அந்த தோஷம் இந்த தோஷம் என்று திருமணம் தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. பார்க்க அம்சமாகவே இருப்பாள். கதவு திறந்திருக்கவே உள்ளே நுழைந்தேன். அவள் குளித்துவிட்டு பாவாடையை மார்பு வரை தூக்கிக்கட்டிக்கொண்டு டர்க்கி டவலால் தலையை துவட்டிக்கொண்டிருந்தாள். " நான் தரையை பார்த்தபடி "அம்மா 2 தக்காளி வாங்கிட்டு வரச்சொன்னாங்க" என்றேன். பரிமளா ஃப்ரிட்ஜை திறந்து ட்ரேக்களில் தக்காளியை தேடிகொண்டிருந்தாள். அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.காதோரம் சூடு பரவியது, நாக்கு உலர்ந்தது. எப்போதோ பார்த்த பாடாவதி படம் ஒன்றின் காட்சி நினைவிலாடியது.

அந்த நேரம் பார்த்து பரிமளாவின் அம்மா பையுடன் உள்ளே நுழைந்தாள். " ஏய் என்னடா வேலை உனக்கு" என்று சீறியபடி பரிமளாவை பார்த்து " சீ சீ.. என்னடி இது கோலம் போய் புடவைய கட்டிட்டு வா முதல்ல " என்றாள்.

பரிமளம் "அட போம்மா ! எனக்கு காலாகாலத்துல கல்யாணமாகியிருந்தா இவன் வயசுல பிள்ளையோ பொண்ணோ இருந்திருக்கும். இன்னம் நீ என்னை காபந்து பண்றதா நினைச்சு அவமானப்படுத்தாத " என்றாள் .

யாரோ என்னை பளார் என்று கன்னத்துல அறைந்தது போல் இருந்தது.


2.அரை கீரை,சிறு கீரை,முளை கீரேய் !

ரொம்ப நாளைக்கு பிறகு சந்தியாவை பார்த்தேன். விடாப்பிடியாய் தன் காரில் ஏற்றிகொண்டு விட்டாள். பங்களா ஒன்றின் முன் நின்றது கார். பெரிய்ய .. தோட்டம். கணக்கற்ற க்ரோட்டன்ஸ் செடிகள். ஒவ்வொன்றையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள். "இது கலெக்டர் வீட்லருந்து கொண்டு வந்து நட்டது" "இது எஸ்.பி வீட்ல இருந்து கொண்டு வந்தது....."

அந்த நேரம் தெருவில் காய் கறி வண்டிக்காரன் குரல் கேட்டது. "அரை கீரை,சிறு கீரை,முளை கீரேய் !"

சந்தியா பதட்டத்துடன் "ஒரு நிமிஷம் கீரை வாங்கிட்டு வந்துர்ரேன்" என்றாள். என் இதழ்கடையில் சற்றே கோணலாய் ஒரு புன்னகை மலர்ந்தது. அதன் பொருளை கண்டு கொண்டதாலோ என்னமோ சந்தியா என் பார்வையை சந்திப்பதை தவிர்க்க "இதோ வந்த்ட்டன்பா " என்ற படி கேட்டை நோக்கி விரைந்தாள்.


3.மனித வளம்
2050,புது தில்லி
பிரதமர் அலுவலகம். பிரதமர் தன் எதிரில் அமர்ந்திருந்த சீன உயிரியல் மேதை ஸ்டான்லி பேச தயங்குவது கண்டு "நிலைமை கை மீறி போயாச்சு. இந்திய நாட்டுக்கு தேவை மனித வள புனரமைப்புக்கு ஒரு தீர்வு. எதுவா இருந்தாலும் சொல்லுங்க " என்றார்.

ஸ்டான்லி பேச ஆரம்பித்தார்." எங்க நாட்ல 40 வருடத்துக்கு முன்பு ஜனத்தொகை பெருக்கம் பெரிய பிரச்சினையா வடிவெடுத்தப்போ திருமணமான ,ஆகாதா ஆண்,பெண்கள் அனைவருக்கும் கட்டாய கு.க.பண்ணீட்டோம். அதுக்கு முன்னாடி அவங்கள்ள உடல் ,மன ரீதியா ஆரோக்கியமா இருந்தவங்களோட உயிரணுக்களையும்,முட்டை கருக்களையும் சேகரிச்சு ஃப்ரீஸ் பண்ணி பாதுகாப்பான கண்டெயினர்கள்ள புதைச்சு வச்சுட்டம். கடந்த 2020 க்கெல்லாம் ஜனத்தொகை கட்டுப்பாட்டுக்கு வந்து பொருளாதாரம் நல்ல நிலைக்கு வந்து நிலைப்பட்டு போச்சு. ஆனால் மனித வளம் குறைஞ்சு போச்சு. எதிர்காலத்துல இது பெரிய பிரச்சினையாயிரும் போலிருக்கவே ..ஏற்கெனவே புதைச்சு வச்ச மனித உயிரணுக்கள்,முட்டைக்கருக்களை தோண்டி எடுத்தோம். எடுத்தப்பறம்தான் தெரிஞ்சது முட்டைக்கருக்கள் நம்ம உயிரியல் மேதைமைக்கு டேக்கா கொடுத்துட்டு நாசமாகிப்போயிருந்தது. அதனால ஒரு சாகசம் செய்தோம். கொரில்லா குரங்கோட உயிரணுவை சேகரிச்சு ரெண்டையும் சேர்த்து புதிய மனிதனை படைச்சோம். இதுல ஒரே ஒரு பிரச்சினை..புதிய மனிதன் உடம்புல எந்த ஹேர் ரிமூவருக்கும் அசைந்து கொடுக்காத முடி, உடம்பெல்லாம் முடி . மூர்க்கம், அசுரபலம்"

ஸ்டான்லி பேசியதை கேட்ட பிரதமர் முகத்தில் ஏளன சிரிப்பு .".கடைசில உங்க நாட்டை கொரில்லா தேசமாக்கிட்டிங்க" என்றார்.

ஸ்டான்லியின் முகத்தில் ஆக்ரோஷம். ஐந்து நிமிடத்தில் அனைத்து டி.வி.சேனல்களும் அதிக டெசிபல்சில் அலறிக்கொண்டிருந்தன. "பிரதமர் அலுவலகத்தில் கொரில்லா அட்டகாசம்.."

Sunday, August 2, 2009

பெண்ணிய மாயையும் தொடரும் ஆண் ஆதிக்கமும்

மணற்கேணி அமைப்பு அறிவித்த ஒரு போட்டியின் தலைப்பு இந்த பதிவை எழுதும் தூண்டுதலை அளித்தது. தலைப்பே தவறு என்று இந்த கட்டுரையை துவக்க காரணம் அதிர்ச்சி மதிப்பிற்கான முயற்சியே. மணற்கேணிக்கு நன்றி. இதை போட்டிக்கு அனுப்பாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. காரணம் ரொம்ப பெர்சனல் (அதாவது நம்ம எழுத்து அந்தளவுக்கு டிப்ளமேட்டிக் கிடையாதுங்க)


இந்த தலைப்பை உன்னிப்பாக கவனித்தால் தலைப்பே தவறானது என்பது புரியும். தலைப்பு பெண்ணிய மாயை என்று துவங்குகிறது. மாயை என்றால் என்ன பொருள் ?
புத்திக்கு மயக்கத்தை தருவது மாயை. அல்லது இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணி மயங்குதல் மாயை அல்லது இருப்பதை இல்லாததாக கருதி மயங்குதல் மாயை அல்லது தேவையில்லாத ஒன்றை மிகத் தேவையானதாய் எண்ணி மயங்குதலே மாயை எனப்படும்.

பெண்ணியம் என்பது புத்திக்கு மயக்கத்தை தருவதல்ல. தெளிவை தருவதே பெண்ணியம் . பெண்ணியம் என்பது இல்லாத ஒன்றல்ல. இருக்கிறது. என்ன சற்றே சோனியாய் உள்ளது. .பெண்ணியம் என்பது தேவையில்லாத விஷயம் அல்ல. மனித குலத்துக்கு அத்யாவசியமான ஒன்று பெண்ணியம்.

பெண்ணியம் என்பது மாயையல்ல. பெண்ணியம் என்பது பெண்ணுக்கு சம உரிமை கோரும் கொள்கை. பெண்ணியத்தை நேரிடையாக அணுகும்போது அது ஏதோ பெண்களுக்கு மட்டுமே உரியது போலும் மறைமுகமாகவேணும் ஆண்களுக்கு ஆப்பு வைப்பது போலும் தோன்றும். ஆனால் பெண்ணியம் வெற்றி பெறாவிடில் ஆண் இனம் மொத்தமாய் பைத்தியம் பிடித்து சட்டையை கிழித்துக்கொண்டு கும்பலாய் ரோட்டில் அலைவது நிச்சயம் (என்னா.. இப்ப தனியே புலம்புறானுங்க )

மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண் இனம் ஆணாதிக்கம் காரணமாய் உடல்,உள்ள பலமின்றி,பொருளாதார சுதந்திரம் இன்றி, மன உளைச்சல்களுடன், சமுதாயம் மீதான அதிருப்தியுடன் வாழ்வது என்பது சமுதாய நலன்களை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம்.

தனக்கு மறுக்கப்பட்டவற்றாய் பெண்ணினம் முறையற்ற முறைகளில் பெற முனைந்து கொண்டே தான் இருக்கிறது . சில சந்தர்ப்பங்களில் வெற்றி பெற்றும் வருகிறது. உம்: தமிழகத்தில் ஜெயலலிதா, உ.பி.யில் மாயாவதி இதன் விளைவுகளை நாடு அனுபவித்தே தீர வேண்டும். இது நாட்டு வளங்களை எந்த அளவுக்கு விரயமாக்குகிறது என்பதை கிட்னிக்கு வேலை கொடுத்து சிந்தித்தாலே தெரியும். புரியும்.

தொடரும் ஆண் ஆதிக்கம் என்ற வார்த்தையை பார்க்கும்போது பெண்கள் என்னவோ ஆண் ஆதிக்கத்துக்கு எதிராய் பெரிய போராட்டமே செய்துவிட்டது போலும் என்றாலும் ஆண் ஆதிக்கம் தொடர்வது போலும் ஒரு ஃபீலிங் வருகிறது. இதனால் போட்டிக்கான தலைப்பே தவறு என்று கூறி இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.


பெண்ணியம்,ஆணியம் என்று பிரித்து பார்ப்பதே முட்டாள் தனம். ஆனால் என்ன செய்ய வேத காலம் முதலாக (ஒரு சில விதிவிலக்குகள் தவிர)பெண் அடிமையாகவே வாழ்ந்து பின் தங்கிப்போனாள்.
தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாது . இது பாஸ்கலின் தத்துவம். மனித மனம்,நீர் இரண்டுக்கும் சந்திரன் காரகத்வம் வகிப்பதாய் ஜோதிடவியல் கூறுகிறது. அவளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை அவள் எவ்வழியிலேனும் பெற்றிடத்தான் துடிப்பாள். அழகு,கவர்ச்சி,கண்ணீர் போன்ற ஆயுதங்களை அவள் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது சமுதாய மோரல் பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்ணியத்துக்கு காட்டப்படும் ஆதரவும் பெருமளவு குறைவதோடு பெண்ணியமே கேள்விக்குட்படுத்தப்பட்டுவிடுகிறது.

எனவே பெண்ணிய வாதிகள் தம் போராட்டத்தை தீவிரப்படுத்துவதோடு தமது வியூகத்தை மாற்றிகொண்டாக வேண்டிய நிலை இன்றுள்ளது. நாளிதுவரை பெண்ணிய வாதிகள் பெண்ணை ஆணாக மாற்றத்தான் போராடினார்கள். இதனால் பெண் இருபுறம் ஏற்றப்பட்ட மெழுகு வர்த்தியாகி தன் ஆயுளையும்,சுதந்திரத்தையும் இரட்டிப்பு வேகத்தில் இழந்து வருகிறாள். கிருக இம்சையோடு (Domestic Violense) ,புற உலகின் இம்சையையும் அவள் கூடுதலாக
எதிர்கொள்ள வேண்டி வந்துவிட்டது. இவற்றையெல்லாம் இந்த பதிவில் தொட்டேனும் பார்க்காது விடுவதாய் இல்லை.

அவள் சம உரிமைகளுடன் வாழ்ந்தது மனித குலம் குகைகளிலும், வனங்களிலும் வசித்த காலத்தில் தான் என்பது என் அனுமானம். ஆணுக்கு சமமான உடல் வலிமையுடன்,வேட்டைத்திறமையுடன் இருந்திருப்பாள். அந்த வாழ்வில் மாதவிலக்கு எல்லாம் அவளை சொர்வுறச்செய்திருக்கவோ, ஓய்வை வேண்டவோ வைக்குமத்தனை நிலை கூட இருந்திருக்காது என்று நம்புகிறேன். பிரசவம் கூட அவளை பெரிதாய் பாதித்திருக்காது. தற்போதும் கூட பிரசவம் முடிந்த கையோடு அரிசி புடைக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மனித குலம் காடு விட்டு நதிக்கரையோரமாக கடலோரமாக பயணத்தை துவக்கிய போது கூட பெண்ணுரிமைக்கு பங்கமிருந்திருக்காது. ஸ்திரவாசம், ஸ்திர விவசாயம் என்று வளர்ந்த போதுதான் தான் திருத்திய காடு தன் ரத்தத்துக்கே என்ற சுய நலம் மனிதனில் ஸ்திரப்பட்ட போதுதான் பெண்ணை சுற்றி வேலி முளைத்திருக்க வேண்டும்.

அதுவரை செக்ஸ் என்பது கொழுப்பேறிய போது, அதிகப்படி சக்தியை வீசி எறியும் செயலாகவோ, அல்லது மழை,குளிரின் போது இதம் தரும் ஒரு செயலாக இருந்திருக்க வேண்டும். ஸ்திர வாசம் , மற்றும் வாரிசு குறித்த கவலை ஆணினத்தின் சிந்தனை போக்கை மாற்றிவிட்டது. அவள் இன உறுப்புக்கு பூட்டு போட முடியாத நிலையில் அவளையே பூட்டி வைக்க ஆரம்பித்தது. (சில பிரகிருதிகள் மேற்படி பூட்டுக்கே கூட முயற்சித்ததாக சரித்திர ஆதாரங்கள் உள்ளன)

ஒருவனுக்கு ஒருத்தி என்ற இயற்கைக்கு முரணான ஏற்பாடு ஆரம்பித்த பின் தான் செக்ஸ் விஷயத்தில் தான் எந்த அளவுக்கு பலவீனன் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஒரு முறைக்கு பின் மறுமுறைக்கு அவன் சற்று நேரமாவது காத்திருக்க வேண்டியது கட்டாயம். பெண்ணோ ஒரே இரவில் 23 முறைகள் வரை உச்சம் எய்தும் சக்தியை பெற்றிருக்கிறாள். (இது இப்போதைய கணக்கு. அந்த காலத்தில் இது கு.ப இரட்டிப்பாகவேணும் இருந்திருக்கலாம்.

இதையெல்லாம் ஆராய்ந்தறிய வன வாழ்வில் நேரமும் கிடையாது. அவசியமும் கிடையாது. (வாரிசுக்கான அவசியமோ ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஏற்பாடோ கிடையாது என்பதால்) . பெண்ணின் பலத்தை அறிந்த ஆண் நடு நடுங்கிப்போனான். அவளில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க தலைப்பட்டான். (இதற்கு மாதவிலக்கு ஒரு பெரும் வாய்ப்பானது) அவள் கால்களை மட்டுமல்ல மனதையும் கட்டிப்போட்டான்.

சிறுமியிடம் ஜிமிக்கி திருட வந்தவன் அவளுக்கு மிட்டாய் தருவது போல அவளது சுதந்திரத்தை பறித்துக் கொண்டு தாய் என்றும் சகோதிரி என்றும் பட்டங்கள் சூட்டினான். உழைப்பிலிருந்து அவளை விடுவித்து ஓய்வு கொடுத்தான். அந்த ஓய்வு பெண்ணை மேலும் பலவீனப்படுத்தியது. உடல் ரீதியான பலவீனம் அவளை மன ரீதியில் பெரிதும் பாதித்தது. பாதுகாப்பற்ற தன்மை அவளை ஒட்டுண்ணியாக்கியது. சதிகாரியாக்கியது.

பெண்ணுக்கு பால்யத்தில் தந்தையும், இளமையில் கணவனும், முதுமையில் மகனுமே பாதுகாப்பு என்று கூறப்பட்டது. அதனால் அவள் பால்யத்தில் தந்தையையும், இளமையில் கணவனையும், முதுமையில் மகனையும் இன்ஸ்பைர் செய்வதே பிழைப்பாய் வாழ வேண்டியதாயிற்று.

உண்டிச்சுருங்குதல் பெண்டிற்கழகு என்று கூறப்பட்டது. இந்த பழமொழி இந்த காலத்திற்கு வேண்டுமானால் பொருந்தலாம். க்ரைண்டர்,மிக்ஸி, யுகம் இது. அந்த காலத்தில் அதுவும் கூட்டுக்குடும்ப யுகத்தில்,இயந்திரங்களின் துணையில்லாத காலத்தில், கு.க.அமலில் இல்லாத காலத்தில் ? யோசித்துபாருங்கள்.அடப்பாவிகளா !
போதிய போஷாக்கு இல்லாவிடில் உடல் உடலை உண்டு விடாதோ.

அவளை உடலாகவே பச்சையாக சொன்னால் வெறும் துளையாகவே பார்த்தது சமுதாயம்.அதை எவனேனும் உபயோகித்து விடக்கூடும் என்றும் சீல் உடைபட்டுவிட்ட பொருளை சந்தைப்படுத்த முடியாது என்றும் வேறு வார்த்தைகளில் கூறியது. அதை ஒரு பாதுகாப்பு குறைபாடாக காட்டி கற்பனை வளத்துடன் கற்பு என்ற நூதன அணிகலனை உருவாக்கி அதையே முழு முதல் தகுதியாக்கி அதை இழந்து விடுவாய் என்று கல்வியை மறுத்தது. வேலை வாய்ப்பை மறுத்தது. பொருளாதார சுதந்திரத்தை மறுத்தது. மீறி கேள்வி கேட்டால் நீ விலைமகளாக விரும்புகிறாயா என்று எதிர்கேள்வி எழுப்பியது.

ஒரு விலை மகள் விஷயத்திலேனும் அவளிடம் உறவாட வருபவனுக்கு சில நிபந்தனைகள் விதிக்க அவளுக்கு உரிமை இருந்தது .வந்தவன் இடம்,பொருள்,ஏவல் எல்லாம் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் திருமணமான குலமகளுக்கோ அந்த உரிமைகள் கூட கிடையாது. இன்னும் சொல்லப்போனால் ஒரு சர்வீஸுக்க் ஒரு சர்வீஸ் ஃப்ரீ என்பது போல் சில கேஸ்களில் அவள் தன் கணவனின் தந்தை, அண்ணன் தம்பிமார் இச்சைகளுக்கும் இணங்க வேண்டியிருந்தது. (சமீபத்தில் கூட இது போன்ற வழக்கு விவரம் தமிழ் வார இதழ்களில் வெளியானதை கவனித்திருக்கலாம்)

பெண் என்பவள் ஒரு துளை, அத்துளையின் சகல உரிமைகளுக்கும் கணவனே பட்டாதாரன்.அவள் சரீர சுகம் தரும் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வந்த வேசி.இலவசமாகவே வாரிசை பெற்று தரும் வாடகைதாய் . சம்பளமில்லாத வேலைக்காரி. இவன் குழந்தைகளின் ஆயா. அதுகளின் கழிவை அகற்றும் தோட்டி. என்னங்கடா இது எங்கயாவது அடுக்குமா ? எந்த ஜீவ ராசியிலாவது இது போல் நடக்கிறதா ? ஏதோ சில உயிர் இனங்களில் ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடு இருக்கலாம். ஆனால் அது இயற்கையின் ஏற்பாடு. அங்கும் கூட அது பரஸ்பர அங்கீகாரத்தின் பேரில்தான் அமலாகிறது.

இன்றைய திருமணமான பெண்களுக்கு நீங்கள் விரும்பினால் உங்கள் கணவர்களை விவாகரத்து செய்துவிடலாம் .உங்களை இந்த சமுதாயத்தில் உள்ள ஆணினம் இழிவாய் நோக்காது. நோக்கினால் அவர்களுக்கு லுல்லா கட் செய்யப்படும். பெண்ணினமும் புறம்பேசாது. பேசினால் அவர்களின் நாக்கு கட் செய்யப்படும். உங்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு,சுய தொழிலுக்கான கடனுதவி அனைத்தும் 24 மணி நேரத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கட்டும். எந்த கணவனின் கீழும் ( நான் ஆதிக்கத்தை சொன்னேங்க ) பெண் என்பவளே இருக்கமாட்டாள் . வேணும்னா ஆண்கள் எல்லாரும் ஹோமோக்களா மாறியிருப்பாங்க.

நான் பெண்ணியம் என்ற கருத்துக்கு ஆதரவாக இத்தனை ஆவேசமாக கருத்துக்களை கொட்டினாலும் பெண்களுக்கான உரிமைகளை ஆண்களே முன் வந்து வழங்க வேண்டும் அ அரசு அதற்கான சட்டங்களை கொண்டு வரவேண்டும் என்று மட்டும் கூறமாட்டேன். ஏனெனில் ஆண்கள் மனமுவந்து வழங்குவதாயின் எப்போது வழங்கியிருக்க வேண்டும். அரசின் சட்டங்கள் என்கிறீர்களா ? இருக்கும் சட்டங்கள் ஒழுங்காக அறிமுகமானாலே போதும். ஆனால் அவை அமலாகா.

இதற்கு என்ன காரணம் என்றால் ஆண் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவது அவள் குறித்த அச்சத்தால். அரசுகளை நடத்துவது ஆண்கள். சரி அரசியலதிகாரம் கிடைத்தால் போதாதோ உ.ம் 33 சதம் ஒதுக்கீடு. இதனை ஸ்தூலமாக பார்க்கும்போது பெண்ணின விடுதலைக்கே கொண்டு வரப்போவதாக தோன்றும். ஆனால் சற்றே அவதானித்துப்பார்த்தால் அய்யராத்து அழகுகள் இப்போதிருக்கும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பாச்சா காட்டிவிட்டு கொல்லைப்புறவழியாக பாராளுமன்றங்களில் நுழையத்தான் வழிவகுக்கும்.

உண்மையான தலித் பெண்தான்:
நமது நாட்டில் உண்மையான தலித்தாக ஒடுக்கப்படுபவள் பெண் தான் . உயர் சாதிக்காரன் தலித்தை கொடுமைப்படுத்தினால் மேற்படி தலித் தன் மனைவியை கொடுமைப்படுத்துகிறான். சாதீய அமைப்பு தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட ஆண்களுக்கு கல்வியை மறுத்து வெறும் கூலிகளாக மாற்றினாலும் இது தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு ஓரளவு நன்மையை செய்ததென்றே கூறவேண்டும். ஆம் அவர்களுக்கு குலப்பெருமை இத்யாதி (?) இல்லாமையால் ,அவர் தம் கணவன் மாருக்கு வாரிசுகள் வந்து ஆள சொத்துக்கள் கிடையாதென்பதால், கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி ஏற்பாடுகள் அந்த அளவுக்க் கடுமையாக அமலாகவில்லை. மேலும் நிலங்களில் பாடுபட மனித வளம் அபரிமிதமாக தேவைப்பட்டதால் அந்த பெண்கள் அந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் மு.படுத்தப்பட்ட பெண்களின் நிலை மோசம். அவர்கள் வெறுமனே லேயர் கோழிகளாக தான் பாவிக்கப்பட்டனர்.ஆண்கள் தமது குலம் தந்த எதேச்சதிகாரத்தால் பிற வர்க,குல பெண்களை பெண்டாளும் முயற்சியிலும், ஊர் நிலங்களை கொள்ளையடிப்பதிலும் கருமமே கண்ணாயிருந்தனர். தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் அரசனோ, இன்ன பிற அதிகார மையங்களோ கோரிய போது தமது வீட்டு லேயர் கோழிகளை ப்ரொவைட் செய்து வந்தனர். பெண்டிரோ உண்டி சுருங்கி, அடிமைத்தளையால் மனம் சுருங்கி கிடந்தனர். உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் தேவைகள் சேடிசமாகி தம் கணவரின் இதர மனைவியரையும்,ஆசை நாயகியரையும்,வேலைக்காரர்களையும், துன்புறுத்தி அதில் இன்பம்கண்டனர்.

தம்மை துளையாகவே கருதி அடிமைத்தளையில் பிணைத்த ஆண்களை அதையே கருவியாக கொண்டு பழிவாங்கவும் செய்தனர். அல்லது கணவன் உடல் ஒடுங்கி கிடக்கையில் பிள்ளைகளை அவனுக்கு எதிராக திருப்பி திருப்தியடைந்தனர். மொத்தத்தில் மன நோயாளிகளாகவே இருந்தனர்.

அந்தப்புரத்து பெண்களின் நிலை வேறு விதம் செயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஆணுறுப்பை ஒத்த பொருட்களால் அலிகள் இன்பம் தர (?) கைதி வாழ்வை வாழவேண்டியதாயிற்று. காலம் மாறியது. அன்னியர் படையெடுப்பின் போது ஆண்களின் நேரம் ,சக்தி அவர்களை எதிர்ப்பதில் செலவாகிக்கொண்டி ருக்க பெண் சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆனால் அவர்களிலும் பெண்ணடிமைத்தனம் இருந்ததால் அவர்களின் ஆட்சியிலும் பெண்களின் நிலையில் பெரிதாய் மாற்றம் வரவில்லை. பஞ்சாங்கங்கள் மிலேச்சர் என்று இழிவாக குறிப்பிடும் கால் கழுவாத ஆங்கிலேயர் வருகைக்கு பின்புதான் பெண்ணின் நிலையில் மாற்றம் துவங்கியது.

பால்ய திருமண தடை, உடன் கட்டை ஏறுதலுக்கு தடை, பெண் கல்வி போன்ற அம்சங்கள் பெண்ணின் அடிமைத்தளைகளை ஓரளவு தளர்த்தவே செய்தது. சுதந்திர இந்தியாவில் இந்த அடிமைத்தளைகள் ஏறக்குறைய ஒரு பெண் திடமான சங்கல்பத்துடன் துணிந்தால் உஃப் என்று ஊதிவிடக்கூடிய ஒட்டடையாக மாறியது. ஆனால் சங்கல்பத்துக்கு தூண்ட வேண்டிய கல்வி பெண்ணினத்துக்கு கிடைத்ததா?, சங்கல்பம் கார்யரூபமடைய ஒத்துழைக்க வேண்டிய அமைப்புகள் ஒத்துழைக்கின்றனவா ? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும் .

பெண் தனது சுதந்திரத்தையோ , உயிர் அ மானத்தையோ காத்துக்கொள்ள தனியளாக அணுகும்போது அவளுக்கு உதவும் நிலையில் பிரதம பிரபுத்வ கார்யாலயங்களான காவல் நிலையங்கள் உள்ளனவா என்றால் இல்லை. அவளுக்கு அங்கு கிடைப்பது இலவச உபதேசங்களும், மெலிதான அச்சுறுத்தல்களும் தான். ஒரு வேளை அவள் இவற்றிற்கு மசியாது போனால் இருக்கவே இருக்கின்றன பொய்வழக்குகள் ,லாக்கப் டெத்ஸ். மகளிர் காவல் நிலையங்கள் உள்ளனவே என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். முதற்கண் அங்குள்ள பெண்கள் ஆண்களாக மாறிவிட்டிருப்பார்கள்.தப்பித்தவறி யாரேனும் மாறாதிருந்தாலும் மேல் சாவனிஸ்டு துறையில் ஒரு எல்லைக்கு மேல் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியாது.

கோர்ட்டுகள் பற்றி சொல்லவே வேண்டாம். இருக்கும் கடுப்பில் எதையாவது எழுதப்போய் நீதிமன்ற அவமதிப்பாகிவிடப்போகிறது. சுருக்கமாக சொன்னால் எந்த அரசுமே, அந்த அமைப்புமே பெண்ணின் உரிமையை , வாழ்வை , கு.ப. உயிர் வாழ்வை கூட உறுதி செய்வதாய் இல்லை.

Half knowledge is too dangerous என்பது போல் பெண்ணுக்கு கிடைத்துள்ள அரை குறை சுதந்திரம் பெண்ணின் வாழ்வை குளிக்கப்போய் சேறு பூசிக்கொண்ட கதையாக்கி விட்டது.

கல்வி பெற கல்விச்சாலைக்கு போனால் அங்கு அவளை சக மாணவர்கள் மட்டுமே அல்லாது , அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய ஆசிரியர்கள் மற்றும்
நி ர்வாகமே அவளை குதறிப்போடுகின்றன. ஒரு முறை அம்பேத்கர் பவனில் சுய உதவிக்குழு பெண்களுக்கான ஒரு அரசு நிகழ்ச்சி நடந்தத். நாற்காலிகள் காலியாய் கிடக்க ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் தான் நடத்தும் நர்சிங் கல்லூரி பெண்களை யூனிஃபார்மிலேயே வரவழைத்து உட்கார வைத்த் ஹாலை நிரப்பினார் என்றால் பாருங்கள்.

அவள் வந்ததோ கல்வியை பெற. கல்வி மூலம் வேலை வாய்ப்பை பெற்று பொருளாதார சுதந்திரத்தை பெற. ஆனால் அங்கு அவள் நிலை என்ன ? பள்ளி நிர்வாகி சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும்போது அரசு நிகழ்ச்சியில் காலி நாற்காலிகளை நிரப்பவேண்டும்

கல்வி பயில வரும் பெண்ணுக்கு அக்னிபரீட்சையாக இருப்பது பிராக்டிக்கல் மார்க்.
தொந்தி சரிந்து, தலை முடி இழந்து, சோடா புட்டி கண்ணாடி போட்டாலன்றி பகலில் பசு மாடு தெரியாத லெக்சரனுக்கு இவள் கேவலம் இரண்டு சதை கோளமாக உபயோகப்பட வேண்டும். அல்லது துளையாக மாற வேண்டும். இல்லாவிட்டால் ப்ராக்டிக்கல்ஸ் கோவிந்தா.. இந்த அரசுக்கு உண்மையிலேயே பெண்ணிய நோக்கிருந்தால் முதலில் இந்த ப்ராக்டிக்கல் மார்க் என்ற சமாச்சாரத்தையே தூக்கி எறிய வேண்டும்.

முன்னர் வீடுகளில் மட்டும் நரகத்தை அனுபவித்த பெண்ணுக்கு அலுவலகமும்,பணியிடமும் கூடுதல் நரகமாயின. முன்னர் தந்தை/கணவனுக்கு அஞ்சி பரபரத்த காலம் போய் அலுவலகத்தில் முதலாளி,மேலதிகாரி,சூப்பர்வைசர் என்று கண்ட நாய்கள் முன்னும் நாயாய் வாலை குழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக வீட்டிலான கடமைகள் ஏதேனும் குறைந்ததா என்றால் இல்லை. மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கும் "ஹ்ம்..மகாராணி நாலு காசு சம்பாதிக்கிறால்ல இனி இதெல்லாம் செய்ய உடம்பு வளையுமா? " என்ற கமெண்டுகள். வீட்டிலிருந்து பணியிடம் செல்கையில் பயண போக்குவரத்தில் படும் இம்சைகள். (சொந்த வாகனமே ஆனாலும் அதற்கான தவணையை பெண்தான் தன் வருமானத்தில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. சொந்த வாகனத்தால் போக்க்வரத்த் தொடர்பான சில்லறை இம்சைகள் கட்டுப்படுத்தப்பட்டாலும் விபத்து என்ற கத்தி அவள் தலை மீது தொங்கிக்கொண்டேதான் இருக்கிறது.


தப்பித்தவறி நியாயமான வழிகளிலோ /அநியாயமான வழியிலேயோ விடுதலை பெற்று விட்ட பெண் ஆணாக மாறிவிடுகிறாள்.(சிலர் பேச்சு, நடை ,உடை பாவனைகளில் மட்டுமல்லாது ,பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாது ( புகைத்தல், மது அருந்துதல்) உடலியல் ரீதியாகவும்மாறிவிடுவதாக கேள்வி. ஆம் . அவள் முன்னர் ஆண்கள் உலகத்தில் தான் சந்தித்த அவமானங்களையெல்லாம் நினைவு கூர்ந்து ஆண்களை பெண்களாய் நடத்த ஆணாகவே மாறிவிடுகிறாள். அவளால் விடுதலை பெற துடிக்கும் பெண்களுக்கு எந்த வழிகாட்டுதலும்.மோரல் சப்போர்ட்டும், உதவியும் கிட்டாமலே போய் விடுகிறது.

மேலும் ஒரு சோகம் என்னவென்றால் அவள் என்னதான் தன் அடிமைத்தளைகளை தகர்த்தெறிந்து சமுதாயம் தன்னை புதைத்து எழுப்பிய சமாதியை பெயர்த்து நிமிர்ந்தாலும் அவளின் சாதனை அங்கீகரிக்கப்படுவதில்லை. அவள் முன் புழுவாய் நெளிந்து காரியம் சாதிக்கும் ஆண் கூட சற்றும் தயங்காது அவள் கற்பின் மேலோ, அவள் நடத்தையின் மேலோ ,கல்லெறிகிறான்.

வாரிசு முறைப்படி அரசியல் அதிகாரம் , நிர்வாக அதிகாரம், பொருளாதார பலம் பெறும் பெண்ணை சுற்றிலும் கூட கண்ணுக்கு தெரியாத கண்ணாடி சுவர் இருக்கிறது. அடிமை வேலியை தாண்டிச்செல்ல துடிக்கும் பெண்களை மீண்டும் பட்டியில் கொண்டுவந்து அடைக்க கும்கி யானைகளாய் பெண்களே உபயோகிக்கப்படுகிறார்கள்

ஆக இந்த கட்டுரை ஆன கல்யாணத்துக்கு மேளம் போல் அமைந்து பெண் எப்படி அடிமைப்பட்டாள், எப்படி அடிமையாய் தொடர்கிறாள் என்பதை இதுவரை விவரித்தது. சரி பெண்ணியம் வெற்றி பெற, அதன் மூலம் மனித குல மாண்பை காத்து நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த அரசு,சமூகம், பெண்கள்,ஆண்கள் ,பெண்ணிய வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். மாறியுள்ள உலக பொருளாதார நிலை, மந்தத்தன்மை , உலகமயமாக்கல், தனியார் மயம், க்ளோபலைசேஷன், தாராளமயம் ஆகியன ஆணை பலவீனனாக்கியுள்ளது. ஜாப் செக்யூரிட்டி என்பது இனி கனவுதான். எனவே ஆண் தன் சர்வைவலுக்கு அதிக நேரம்,சக்தி செலவழிக்கவேண்டியுள்ள இந்த நிலை பெண்ணிய வெற்றிக்கு அருமையான சந்தர்ப்பமாகும். இந்த நேரத்தில் நான் கீழே தரும் அம்சங்களில் பாதியேனும் சாத்தியமானால் பெண்ணியம் வெல்வது உறுதி. அதன் மூலம் மனித குலம் மாண்புறுவதும் உறுதி. (இல்லாட்டி எதிர்கால புதை பொருள் ஆராய்ச்சிகாரங்க காறித்துப்புவாங்கப்பா !)
(மீதி அடுத்த பதிவில்


1.அனைத்து எல்லைகள்,பிரிவுகளுக்கு(பிரிவினைகள்) அப்பாற்பட்டு பெண்கள் ஒன்று திரள வேண்டும்.
2.முதற்கண் பெண்ணிய நோக்குள்ள அமைப்புகள் ஒன்று திரள வேண்டும். பெண்களை ஒருங்கிணைக்க செயல்படவேண்டும்.
3.கேட்க நாதியில்லை என்று தான் பெண்கள் தம் தளைகளை அமைதியுடன் ஏற்று வாழ்கின்றனரே தவிர அடிமைத்தனத்தை விரும்பி அல்ல. எனவே பெண்ணுக்கெதிரான குற்றங்களை /உரிமை மறுப்புகளை பாகுபாடுகளை உள்ளூர் காவல் நிலையம் முதல் ஐ.நா சபை வரை எடுத்துச்செல்ல வேண்டும்
4. நாடு தழுவிய இந்த அமைப்பில் அரசியல் பின்னணி, சினிமா , தொலைக்காட்சி பின்னணி கொண்ட எந்த பெண்ணையும் சேர்க்க கூடாது. (காரணம் : பெண்ணடிமை கோலோச்சுவது இந்த துறைகளில் தான். சில கட்சிகளின் மகளிர் அணியின் முக்கிய வேலையே தலைவர்களின் சதைப்பசிக்கு ஏற்பாடு செய்வதுதான் என்று கேள்வி.
5.இந்த அமைப்புக்கென்று ஊருக்கு நூறு பேராவது இருக்குமாறு மோட்டிவேட் செய்யவேண்டும் இவர்கள் ஒன்றும் ஜீன்ஸ், சட்டை பார்ட்டிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பொருளாதார சுதந்திரம் பெற்று சக பெண்களின் சுதந்திரத்துக்காக தமது ஓய்வு நேரங்களை செலவழிக்கும் நிலையில் இருந்தால் போதுமானது.பேனா பிடித்து ஒரு மனு எழுதவும், மவுஸ் பிடித்து ஒரு மெயில் அனுப்பவும் தெரிந்திருந்தாலே போதுமானது
6.சொந்த வெப்சைட் + சொந்த பத்திரிக்கை . இதில் கோலங்கள், எந்த சாமிக்கு எந்த நாள் விசேஷம் மாதிரி சமாச்சாரங்கள் வெளியாக கூடாது. முக்கியமாய் ராசிபலன்.
7. பெண்களுக்கான அரசியல் ஒதுக்கீடு அமலாக தடையாக உள்ளது அதில் உள் ஒதுக்கீட்டுக்கு (சாதிவாரி) ஆளும் கட்சி தரப்பில் மறுப்பு இருப்பது தான்.இது குறித்த விழிப்புணர்ச்சியை ஊட்டி உள் ஒதுக்கீட்டுக்கு ஆதரவு திரட்ட வேண்டும்
8.எந்த பெண்ணுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அவள் வேசியாகவே இருந்தாலும் சரி அவளுக்கு இந்த அமைப்பு துணை நின்று அவள் உரிமைகளை காத்துக்கொள்ள உதவ வேண்டும்

(To be Continued