Showing posts with label சைக்காலஜி. Show all posts
Showing posts with label சைக்காலஜி. Show all posts

Monday, October 31, 2011

நாம அல்லாருமே தற்கொலை விரும்பிகள் தான்


நாம அல்லாருமே தற்கொலைய விரும்பறவுகதான்.என்ன பலருக்கு தைரியம் போதாம சுத்தி வளைச்சு -தவணையில செய்துக்கறோம். உஜிலா தேவில குருஜி தற்கொலை செய்துக்கறவுகளை காச்சு காச்சுன்னு காச்சியிருந்தாரு.

ஒரு ஜாதகர்.அவருக்கு ஜாதகத்துல சனி சரியில்லை. கால் வலி. ஒரு குருஜியை போய் சந்திச்சாரு. அதைபோக்க சாந்தி பண்ணனும் அதுக்கு ரூ.42 ஆயிரம் செலவாகும்னு அந்த குருஜி சொன்னாராம் ( நான் இந்த குருஜியை சொல்லலை) அந்தாளு ரூ.42 ஆயிரத்தை சாந்திக்கு கொடுத்திருந்தா அது தற்கொலை இல்லியா? அதை வாங்கிக்கிட்ட குருஜியின் செயல் கொலைக்கு கம்மியானதா?

இந்த மாதிரி அனேக வில்லங்க விஷயங்களை ஆடியோவுல சொல்லியிருக்கேன். ஹெட் ஃபோன்ல கேளுங்க - இல்லாட்டி தனிமையில கேளுங்க. பதிவை கேட்க வழக்கம் போல கீழ்காணும் ப்ளேயரின் ப்ளே பட்டனை அழுத்துங்க.

Monday, January 17, 2011

உடலுறவு முறைகள்+மனோதத்துவம் (தொடர்ச்சி)..

காப்பி பேஸ்ட் கிராக்கிகளுக்காக இந்த சுத்தியடிக்கிற மெத்தடை ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கேன். உடலுறவும் கிரக நிலையுங்கற தொடரை தற்காலிகமா நிறுத்தி உடலுறவு முறைகள்+மனோதத்துவம் ங்கற தலைப்பிலான தொடரை ரீ ஸ்டார்ட் பண்றேன். சிரமத்துக்கு மன்னிக்கனும்.

ஆண் மேல் முறைகள்,பெண் மேல் முறைகள் சிட்,ஸ்டாண்ட்,லேன்னு மெத்தட்ஸ் சொன்னேன். இதுல ஸ்டாண்ட் லே மெத்தட்ஸை ஓரளவுக்கு கவர் பண்ணிட்டம். இப்ப சிட் (உட்கார்ந்தே வேலை பார்க்கலாம் பாஸு)

படுத்தவாக்குல மூளைக்கு நிறைய ரத்தம் பாயும், ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.

நின்ன வாக்குல இன உறுப்புக்கு நிறைய ரத்த பாயும் இந்த மெத்தட்லயும் ப்ரி மெச்சூர்ட் எஜாகுலேஷனுக்கு வாய்ப்பிருக்கு.

உட்கார்ந்த வாக்குல புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து பாய வேண்டியிருக்குங்கறதால மூளைக்கு பாயற ரத்தம் குறையும்.

மேலும் வட்டத்துக்கு உள்ள சக்தியே தனி. எந்த நேர் கோடும் ஒரு முற்றுப்பெறாத வட்டத்தின் பகுதியேனு ஒரு ப்ரின்ஸிப்பிள் இருக்கு.

ஆஃப்டரால் எலக்ட்ரிக் வயர் நீளவாக்குல போவுதுனு வைங்க அது ஒரு ரகம் .அதே ஒயர் பின்னி பிணைஞ்சு போகுதுனு வைங்க அதுவழியா பாயற பவருக்குள்ள பவரே வேற.

உட்கார்ந்து வேலை பார்க்கும்போது வட்டம் ஓரளவு பூர்த்தியாகுது.இந்த பொசிஷன்ல ஆணும் பெண்ணும் தங்களோட உள்ளங்கைகளையும் பாதங்களையும்
ஒன்றோடு ஒன்றை இணைத்துக்கொண்டால் இந்த வட்டம் இன்னம் கொஞ்சம் பவர் ஃபுல்லா வேலை செய்யும்.

ஒவ்வொரு உடலிலும் உள்ள சக்தி உள்ளங்கைகள், பாதங்கள் வழியா செலவழிஞ்சுட்டே இருக்கும்.  டபுள் ட்யூட்டி பண்ணி டயர்டாயிட்டவுக ரெண்டு உள்ளங்கைகளையும், பாதங்களையும்  சேர்த்துக்கிட்டு கொஞ்ச நாழி கண்ணை மூடிக்கிட்டா  நல்லாவே  ரெஃப்ரஷ் ஆயிருவாய்ங்க. ( டெஸ்ட் யுவர் செல்ஃப்  அண்ட் ரிப்போர்ட் ப்ளீஸ்!)

உட்கார்ந்த நிலையில், பாதங்களை உள்ளங்கைகளை இணைத்த நிலையில் உறவில் ஈடுபடும்போது சிந்தனைகள் வெளி உலகத்தை நோக்கி சிதறாது . (பக்கத்து வீட்டு வாண்டுகளின் கூச்சல், தூரத்து நாய் குரைப்பு ) நல்ல கான்சன்ட்ரேஷன் கிடைக்கும். கான்சன்ட்ரேஷன் இருந்தா அப்சர்வேஷன் நல்லா இருக்கும்.  நல்ல அப்சர்வேஷன் இருக்கும்போது ப்ராசஸ் ஆட்டோமெட்டிக்கா பாஸ் ஆகும் ( ஐ மீன் Pause..இதனால உச்சம் தள்ளிப்போகும்)

படுத்த நிலையில உறவை விரும்பறவுக வாழ்க்கையில சாதிச்சவுகளாவோ அ தோத்துப்போனவுகளாவோ இருப்பாய்ங்க.

நின்ற நிலையில் உறவை விரும்பறவுக வாழ்க்கை போராட்டத்தின் உச்சக்கட்டத்துல இருப்பாய்ங்க.

உட்கார்ந்த நிலையிலான உறவை விரும்பறவுக ? போராட்டத்தின் இடையில ஒரு ரிலாக்சேஷனை விரும்பறவுகளா இருப்பாய்ங்க. இதுக்கான படங்களையும் தந்திருக்கேன் ஒரு ஓட்டு ஓட்டுப்பாருங்க.


இதுல செக்ஸுவல் பார்ட்னர்ஸ்ல ஒருத்தர் உட்கார்ந்த நிலையை அடுத்தவுக வேற நிலையை ஆப்ட் பண்ணினா அதுக்குண்டான முறைகளும் இருக்கு. இங்கே பாருங்க.











Tuesday, January 11, 2011

உடலுறவு முறைகளும் மனோதத்துவமும்:6


மேஜர் டிவிஷன்ங்கற தலைப்புல ஆண் மேல் முறை,பெண் மேல் முறைன்னு பார்த்தோம்.

ஃபிசிக்கல் ட்ரெய்னிங் க்ளாஸ்ல சிட்,ஸ்டாண்ட் பார்த்திருப்பிங்க இத்தோட லே (படு)ங்கறதையும் சேர்த்துக்கிட்டா முறைகள் ஓவர். எல்லா உடலுறவு முறைகளையும் இந்த 3 பிரிவுல அடக்கிரலாம்.

ஆண் மேல் முறை,பெண் மேல் முறையை நோண்டி நுங்கெடுத்தாச்சு. அதை ஆப்ட் பண்றவுக சைக்காலஜி,ப்ளஸ்,மைனஸ் எல்லாத்தையும் பார்த்தோம். மேற்சொன்ன மேஜர் க்ளாஸ்ல உள்ள சப் டிவிஷனை எல்லாம் டீட்டெய்ல்டா பார்க்கத்தான் போறோம். அதுக்கு முன்னாடி பொதுவான சில மேட்டர்ஸை க்ளியர் பண்ணிரனும்

( எந்த புண்ணியவானும் தடை கோராம இருந்தா- எதுக்குனா நல்லது கவிதை07 ஐ புக் மார்க் பண்ணிவச்சுக்கங்க. அல்லது ஃபாலோயர் ஆயிருங்க)

முறை எதுவா இருந்தாலும் அதில் ஈடுபடறவுக தம்பதிகளா இருக்கனும். ஒருத்தர் மேல அடுத்தவருக்கு அன்பும் காதலும் இருக்கனும் .அப்பத்தான் எந்த முறையா இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகும்.

செக்ஸில் வெற்றிக்கான சூட்சுமமே ஆண் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தனும், பெண் செக்ஸ் குறித்த தன் மித்ஸ், ஹிண்டரன்ஸ் எல்லாத்தையும் விட்டுட்டு ஓப்பன் மைண்டடா இதையும் தான் பார்த்துருவமே..ங்கற மைண்ட் செட்டோட கோ ஆப்பரேட் பண்ணனும்.

செக்ஸுங்கறது ஏதோ ஜன்ய பாகங்களுக்கு மட்டும் சம்பந்தப்பட்டதுனு நினைச்சா அது பெருந்தவறு. உடல்,மனம்,புத்தி எல்லாமே இதுல ஈடுபடுது. ஒரு புள்ளியில குவியுது.

இதெல்லாம் அப்படி கான்சன்ட்ரேட் ஆகும்போது கொஞ்சம் போல முக்கினா ஆன்மாவையே உணரமுடியும். பேசிக்கலா ஆத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் வித்யாசமே கிடையாது. அதுவும் தன்னை ஆத்மாவா உணர்ந்த ஆத்மாவுக்கு பரமாத்மாவை விட மதிப்பு அதிகம்.

என்னதான் ஜன்ய பாகங்களுக்கு மட்டும் தொடர்புள்ளதல்லனு சொன்னாலும் இந்த காரியத்துல அதுகளோட ரோலும் இருக்கு. அதனால நீங்க பயணிக்கிறது சிக்ஸ் ட்ராக் ரோடா, ஹைவேவா, சி.சி ரோடா , ஒத்தையடிப்பாதையான்னு தெரிஞ்சுக்கிடவேண்டியிருக்கு.

எல்லாரும் எல்லா முறைகளையும் ட்ரை பண்ணி பார்க்கலாம் தப்பில்லை. ஆனால் சந்தானத்துக்காக இதுல ஈடுபடறவுக ஆண்மேல் முறை அதுவும் லேயிங் (படு) பொசிஷனையே தேர்வு பண்ணிக்கிறது நல்லது.

அதே போல கன்சீவ் ஆனவுக தங்களோட ஃபேமிலி டாக்டர் சிபாரிசு செய்த முறைய மட்டும் பின்பற்றனும்.

பல தடவை சொல்லியிருக்கேன். நான் மருத்துவனோ பிரச்சினைகளை தீர்ப்பவனோ அல்லன். பிரச்சினை வராம தடுக்க சில யோசனைகளை முன் வைப்பவன். பிரச்சினை வந்தா டிலே பண்ணாம ஸ்பெஷலி்ஸ்டுகளை கன்சல்ட் பண்ண மோட்டிவேட் பண்றவன்.

நான் ஆரோக்கியன். என் கருத்துக்களும் ஆரோக்கியர்களுக்கானதே. இதய நோய் இத்யாதி வில்லங்கம் உள்ளவர்கள் என் பதிவிலான விசயங்களை பரீட்சை பண்ணாதிங்க. விளைவுகளுக்கு அடியேன் பொறுப்பல்ல . வேணம்னா நான் எழுதற மேட்டரை பத்தி அதுக்கான ஸ்பெஷலிஸ்ட் அ குடும்ப டாக்டர் அ லேடி டாக்டரை கன்சல்ட் பண்ணுங்க. அதுக்கப்பாறம் அவிக சொல்படி நடந்துக்கோங்க.

(ஸ்..அப்பாடா )


முறைகளோட ப்ளஸ் மைனஸ் அப்பாறம் கதை. முதல் கோணல் முற்றும் கோணல்ங்கற மாதிரி ஆயிராம இருக்க சில விஷயங்களை மொதல்ல நோட்பண்ணிக்கங்க.

இடம்,பொருள்,ஏவல் முக்கியம். ஹோட்டல் அறையிலயோ , வெளியூர் போன நேரத்துலயே இந்த மாதிரி பரீட்சையில இறங்கினா இயல்பாவே பெண்ணுக்குள்ள எச்சரிக்கை உணர்வால அவிக சம்மதிக்காம போயிரலாம். அல்லது ரிஜிடிட்டி வந்துரலாம்.

விளக்கை அணைக்கிறதா வேணாமா ,மொத்தமா துகிலுரியனுமா கூடாதா மாதிரி மேட்டர்லல்லாம் முரட்டுப்பிடிவாதம் பிடிச்சா அசலான மேட்டர்ல காந்தி தாத்தா மாதிரி நான் கோ ஆப்பரேஷன் மூவ்மென்ட் ஆரம்பமாயிரும். அப்பால என்னை திட்டிக்கிட வேண்டி வந்துரும்.


கீழ் காணும் படங்களை பாருங்க. குறைஞ்ச ரிஸ்க் நிறைய்ய புதுமை .


படம்:1
பாம்பே சர்க்கஸ் கணக்கா இந்த அளவுக்கெல்லாம் சிரமம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஒத்தையடி பாதையில போக உசிதமான முறை இது. .
படம்:2

இதுவும் அதுவே. ஆனால் சிக்ஸ் ட்ராக் ரோட்ல இந்த முறைய பின்பற்றினா யூஸ்லெஸ்.




படம்:3
ஃபோர் ப்ளேக்கு பிறகு மோக வெறி தலைக்கேறின பிறகுன்னா பெட்டர். ஆரம்பத்துலயே இந்த ரூட்ல போனா கெமிஸ்ட் ரி ஒர்க் அவுட் ஆகாது. என்னமோ ஏரியல் அட்டாக் மாதிரி தான் இருக்கும்.



படம்:4
இந்த முறைய பின்பற்றனும்னா முதுகெலும்பு ஐரன் ஆர் ஸ்டீல்ல ஆகியிருக்கனும்போல. ஆனா உபரியா தலையணைகள் இருந்தா ட்ரை பண்ணலாம்.



படம்:5
இதுவும் பிற்போக்குத்தனம்தான். ஆனால் ஆசனவழி புணர்ச்சி அல்ல. பார்ட்னரோட காலை உங்க காலைக்கொண்டு ஆங்கில வி கணக்கா பண்ணிட்டா பாய்ண்ட் டு பாய்ண்ட் தான்

படம்:6

இந்த பொசிஷனும் ஆஃப்டர் ஃபோர் ப்ளே மீட்டர் டபுள் ஸ்பீட்ல ஓடறப்ப அப்ளை பண்ண உகந்தது. இது ப்ரிமெச்சூர்ட் எஜாகுலேஷனை தவிர்க்கவும் உபயோகப்படும் (காண்டாக்ட் குறையுதுங்கோ)

படம்:7
இது சிக்ஸ் ட்ராக் ரோட்ல புகுந்துவர ஏற்ற பொசிஷன். என்ட்ரி முடிஞ்ச பிறவு காலை கொஞ்சம் சேர்த்துவச்சிக்கனும் தட்ஸால்


Sunday, January 2, 2011

கில்மா சிறுகதை: 3 (பாகம்:2)

அண்ணே வணக்கம்ணே,
இது கடந்த பதிவில் எழுதிய கில்மா சிறுகதையின் பார்ட் :2 பார்ட் ஒன்னை படிக்கலைன்னா /ஞாபகமில்லேன்னா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க .அப்பத்தேன் புரியும்.

மறு நாள் டாக்டர் ஜெயதேவுக்கு ஃபோன் செய்தேன். "வாங்க..பேசுவோம்" என்றார்.சென்றேன்.எங்களிடையில் இடம் பெற்ற உரையாடலை ( ஒரு சில வெட்டுக்களுடன்- அதாவது குசல விசாரிப்பு -பழைய கேஸ்கள் குறித்த ஃபாலோ அப்ட்ஸ் ) அப்படியே தருகிறேன்.

"டாக்டர் ! பண்டரியோட ஹெரிடட்டரி எனக்கு  நல்லா தெரியும். அவங்க ஹெரிடட்டரியிலயே இதெல்லாம் கிடையாது. எனக்கென்னமோ இது சைக்கலாஜிக்கல் ப்ராப்ளமோனு தோணுது"

" மேபி.. மொதல்ல  நீங்க அவங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது.பண்டரி உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டது எல்லாத்தயும் ஒன்னு விடாம சொல்லுங்க"

"சார்.. பண்டரி முழுமையான ஆண்மகன்.அவங்க வைஃப் ஹோம்லி லுக். இந்த  நடுத்தர வயசுலயும் சின்னதா  சிவக்கக்கூடிய கன்னம். சராசரி குடும்பத்தலைவி. மொதல்ல ஒரு பெண் குழந்தை. அதுக்கு சின்னவயசுல அம்மை போட்டு அந்த தழும்புகள் நிரந்தரமா  முகத்துல தங்கிருச்சு"

" ம்...ம் மேல சொல்லுங்க"

" அடுத்து ஒரு ஆண் குழந்தை. அவனுக்கு எந்த பிரச்சினையுமில்லேன்னாலும் பக்கத்து போர்ஷன் பெண் மேல ஒருதலைகாதல் . இதே யோசனையில பத்தாம் கிளாஸ்ல 3 தாட்டி குண்டு. பண்டரியோட கூட மாட இருப்பான். ஒரு வேலை  சொந்தமா செய்யமாட்டான். காடா தாடி வளர்த்துக்கிட்டு கலங்கலா பார்த்துக்கிட்டு இருப்பான். கஞ்சா கிஞ்சா அடிக்கிறானோன்னு ஒரு சம்சயம். அடுத்து ஒரு பையன் .அடிச்சு பிடிச்சு இண்டர் வரை வந்துட்டான். அண்ணன் பொசிஷனை பார்த்தோ என்னமோ பெண்களை ஏறெடுத்து பார்க்கமாட்டான். வாரத்துக்கொரு குப்பி ஃபேஸ் க்ரீம் வாங்குவான்.தினசரி ஷேவ் பண்ணுவான்.டீக்கா ட்ரஸ் பண்ணுவான்.சினிமாபார்ப்பான் .வேலை வெட்டி எதுவும் கிடையாது.ஐ திங்க் அவன் சுய இன்ப பிரியனா இருக்கலாம்."

"ஓகே முகேஷ் வீட்டு ஆண்களை பத்தி விலாவாரியா சொல்லிட்டே பெண்கள் பத்தி இன்னம் எதுனா அடிஷ்னல் இன்ஃபர்மேஷன் இருந்தா நல்லது"

"முதல் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாரு.வந்தவனெல்லாம் அந்த பெண்ணோட முகத்துல இருக்கிற அம்மையை மட்டும் பார்த்துட்டு வாய் கூசாம லட்சக்கணக்குல வரதட்சிணை கேட்டாய்ங்க. இதுல அந்த பெண் கொஞ்சம் போல அப்செட். நம்ம பண்டரியும் தான்"

"இந்த மேட்டர்ல அந்த மதரோட நிலை என்ன?"

"உள்ளுக்குள்ள வச்சு குமைவய்ங்க போல"

"பண்டரி, மற்றும்  அவரோட வைஃபோட அதர்  ஆக்டிவிட்டீஸ்  பத்தி எதுனா தெரிஞ்சா சொல்லுங்க"

"அதர் ஆக்டிவிட்டீஸ்னா.. பண்டரி தினசரி ஏதோ ஒரு  கோவிலுக்கு விசிட் அடிப்பாரு. ரெண்டு மூணு கோவில்களுக்கு மாலை கூட போடுவார். வள்ளலார் மேல ஆர்வம் அதிகம். ஏதோ சங்கம் மாதிரி வச்சு வாரம் ஒருதடவை கூட்டம்லாம் போடுவாரு.மதருக்கும் பக்தி சாஸ்தின்னுதான் சொல்லனும். தினசரி பூஜை ரூம்ல உட்கார்ந்து சின்ன சின்னதா புஸ்தவங்கள் வச்சிக்கிட்டு முணுமுணுன்னு படிச்சுக்கிட்டிருப்பாய்ங்க"

ஜெயதேவ் , மாடிக்கு போலாம் வாங்கன்னாரு. தொடர்ந்தேன். சிகரட் பாக்கெட்டை நீட்டினார். கவர்ந்து பற்றினேன். அவருக்கும்.

சுருள் சுருளாய் புகை விட்டபடி ஜெயதேவ் பேச ஆரம்பித்தார்.

"இன்னைக்கு இங்கே  பந்த் /கர்ஃப்யூ /144 இப்படி எதுனா இருந்திருந்தா நீ புறப்பட்டிருப்பயா?"

"நோ "

"அதே வேலையதான் அந்த பெண்ணோட உடலும் செய்திருக்கு. பண்டரிக்கும் அவரோட மனைவிக்கும் இடையில  இயல்பான செக்ஸ் லைஃப் இல்லாம இருக்கும்னு  நினைக்கிறேன். இல்லாட்டி நான் ஸ்டாப்பா  இத்தனை கோவில்,பக்தி எல்லாம் சாத்தியமே இல்லை.அதுவும் இந்த 40  அ 45 ரேஞ்சு வயசுல.  அவங்களோட செக்ஸ் லைஃப் பாதிக்கப்பட பெரிய பெண்ணோட திருமண பிரச்சினையும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். பண்டரி ஆண் பிள்ளை .வெளிய போயிர்ராரு. ஆனால் அவரோட வைஃப் வீட்டோட தான் இருக்கனும். மிஞ்சிப்போனா கிட்டத்துல இருக்கிற கோவிலுக்கு போகலாம். தன் தாயோட நிலைய அந்த பெண்குழந்தை சூட்சுமபுத்தியோட க்ராஸ்ப் பண்ணியிருக்கலாம்.இது  பாய்ண்ட் நெம்பர் ஒன். அம்மாவோட டெப்ரஷன்,தன்னிரக்கம், சில சமயம் எரிச்சல் .

ஆனா பண்டரி ஏஸ் எ மேல் செக்ஸ் இல்லாத  குறைய மறக்க அ அதை இன்னபிற ஆக்டிவிட்டீஸால நிரப்ப வாய்ப்பிருக்கு.ஆனால் அவரோட வைஃபுக்கு அது இல்லை. ஸோ பண்டரி மே பி கூல்.  காதல் தோல்வி அண்ணன் .அவனும் ஒரு எஸ்கேப்பிஸ்ட் தான் சுகஜீவனம். அடுத்த அண்ணன் ஃபேஸ் க்ரீம் பார்ட்டி .அவன் பாடும் அவிழ்த்து விட்ட மாடு மாதிரி.

வீட்ல உள்ள பெண்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்க ( அக்கா +அம்மா) ஆண்கள் எல்லாம் எஸ்கேப்பிஸ்டுகளாகி சொகமா இருக்க அந்த பெண்ணுக்கு தான் ஏன் பெண்ணா பிறந்தோம்ங்கற இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்திருக்கலாம். மைண்ட்  ஃபேண்டசிக்கு போயிருச்சு. வலுவான எண்ணங்கள் பாடி மேல வேலை செய்ய போதுமான வளர்ச்சி,அடையாளங்கள் இல்லாம போயிருக்கலாம்"

" ஓகே டாக்டர் பிரச்சினை இதுன்னு கெஸ் பண்ணிட்டிங்க.இதுக்கு என்ன சொல்யூஷன்?"

"மொதல்ல பெரிய மகளுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி எதுனா ட்ரை பண்ணி கண்ணாலம் கட்டி துரத்தச்சொல்லு"

"ஓகே"

"மொதல் அண்ணனை செருப்பாலடிச்சு கண்ணாலம் பண்ணி தனிக்குடித்தனம் வைக்க சொல்லு"

"ஓகே"

"ரெண்டாவது அண்ணனை  பண்டரி தன் வேலையில ரெய்ன் பண்ணட்டும். முடிஞ்சா அவனுக்கும் கண்ணாலம் தனிக்குடித்தனம்"

"ஹேண்ட் பை ஹேண்ட் பண்டரி கோவில் குளத்தையெல்லாம் விட்டுத்தொலைச்சுட்டு செக்ஸ் லைஃபோட செகண்ட் இன்னிங்சை துவக்கட்டும்.."

"ஓகே டாக்டர்.. இதுக்கும் அந்த பெண் மீசை வரைஞ்சுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"முட்டாள் ! அவள் கண் முன்னாடி எல்லா பெண்ணும் (அக்கா,தாய்)  கண்ணீர் விட்டுக்கிட்டிருக்காங்க. எல்லா ஆண்களும் (அப்பா,இரண்டு ஆண்கள்) பிரச்சினைலருந்து,வாழ்க்கையிலருந்து தப்பிச்சுக்கிட்டு சொகம்மா காலம் கழிக்கிறாங்க. அவள் மனசு சுருங்கி போச்சு. ஆமை மாதிரி தன் இயல்பான கிளர்ச்சிகளை,ஆவலை ஓட்டுக்குள்ள சுருக்கிக்கிட்டா.. ஆணா மாறிட்டா தனக்கு எந்த பிரச்சினையுமில்லைங்கற ஃபேண்டசில இறங்கிட்டா.அவளோட எண்ணம் வலிமையா இருந்ததால பாடி அதை ஒபே பண்ணிருச்சு"

Saturday, December 25, 2010

பழைய மாணவர்கள் சந்திப்பு மனமுதிர்ச்சியற்ற செயல்

 நான் தமிழ் சினிமா பார்த்து பலகாலமாச்சு. என்றாலும் பத்திரிக்கைகள்,இணையத்தின் மூலம் அவ்வப்போது ஒரு சில என் பார்வைக்கு வருவதுண்டு. சினிமா மேட்டர்லயும் ஒரு குன்ஸுலதான் காலத்தை கழிக்கிறேன். ஏதோ சினிமாவுல பழைய மாணவர்கள் எல்லாம் மறுபடி மீட் பண்ற சீக்வென்ஸ் வராப்ல ஞா. இதே மாதிரியான நிகழ்ச்சி ஒன்னை இன்னைக்கு ஏற்பாடுபண்ணியிருந்தாய்ங்க.  போற வழியில இதுக்கான ஏற்பாடுகளை ஒரு க்ளான்ஸ்  பார்க்க வேண்டியதாயிருச்சு.

இது என்னென்னமோ நினைவுகளை கிளப்பி விட்டுருச்சு. காலச்சக்கரம்ங்கறது நிற்காம சுழலும் தன்மை படைச்சது. அதை நிறுத்த முயற்சிக்கிறது (உ.ம் ஹேர் டை), அதை பின்னோக்கி ஓடவிட முயற்சிக்கிறதோ சிறுபிள்ளைத்தனம். கவுரதையா சொன்னா மனமுதிர்ச்சியற்ற செயல். இந்த செயல்கள்ள ஒன்னுதான் பழைய மாணவர்கள் சந்திப்பு.

மேலும் மாணவர்கள் மட்டும் சந்திச்சுக்கிட்டாலும் ஏதோ ஒரு வகையில உண்மை வெளிப்படவும் - ஆய்வுக்குட்படுத்தவும் சின்ன சான்ஸ் இருக்கும். ஆனால் வாத்தியாருங்களுக்கு சன்மானம்னு ஒரு அஜெண்டாவை வேற சேர்த்துக்கிடறாய்ங்க.

வழக்கமாக கிழவாடிகள் "எங்க காலத்துல.." என்று ஆரம்பித்து தம் காலத்தை பொற்காலமாக எஸ்டாப்ளிஷ் பண்றது வழக்கம். ஆனால் நாட் நாட் காலத்துலயே வாத்தி மாரு பர்சனாலிட்டி இன்னானு தெரிஞ்சுக்கனும்னா இங்கே அழுத்துங்க. ஔரங்கசீப் தன்னோட வாத்திக்கு எழுதின கடிதம் இது.

இன்னைக்கு நடந்த மேற்படி நிகழ்ச்சி பத்தின செய்தியை லோக்கல் டிவில வேற பார்க்க வேண்டி வந்துருச்சு. தாளி அதுல ஒவ்வொரு வாத்தியானை சன்மானம் பண்ணிக்கிட்டிருந்தா ஃப்ளாஷ் பேக் அப்படியே பிச்சுக்கிட்டு வருது.

ஓஷோதான் சொல்வாரு" சரியான ஆள் தப்பான வழியில போனாலும் இலக்கை அடைஞ்சுருவான் ( நம்ம அனுபவம் : இன்னம் சீக்கிரமாவே) தப்பான ஆளு சரியான வழியில போனாலும் பெப்பே தான்.

அதைப்போல சரியான ஸ்டூடெண்ட் தப்பான வாத்திக்கிட்டே மாட்டினாலும் க்ளிக் ஆயிருவான். தப்பான ஸ்டூடெண்ட்டுக்கு  சரியான வாத்தி அமைஞ்சாலும் பெப்பேதான்.

சரி சரி மேட்டர் ரெம்ப பர்சனலா போகுது மானாம். ஹோல்டான்

Thursday, December 23, 2010

தன் மீதான வன்முறையை தானே தூண்டும் பெண்

இந்த பதிவை புரிஞ்சிக்கிடனும்னா மொதல்ல நீங்க நம்ம சித்தாந்தத்தை புரிஞ்சிக்கனும்.

*எல்லா உயிர்களுக்கும் மூலம் ஒரு செல் அங்கஜீவியான அமீபா.
*அது செல் காப்பியிங்க் மூலமா பல்கி பெருகியது
*காப்பியிங் எர்ரர் மூலமா புது ஜீவராசிகள்
*ஒரே செல் -ஒரே உயிர்-ஒரே உடலா இருந்தப்ப காலம்-தூரம்-இன் செக்யூரிட்டி-கம்யூனிகேஷன் ப்ராப்ளம் எதுவுமில்லை
*பல உடலா இருக்கிறச்ச எல்லா இழவும் ஆரம்பிச்சுருச்சு
*செல் காப்பியிங் காரணமா ஓருடல் ஓருயிரா இருந்த இனிய ஞாபகங்கள் மனித மூளைவரை வந்துவிட்டன.
*மறுபடி ஓருயிர் ஓருடலா மாறனுங்கற துடிப்பு ஆரம்பமாயிருச்சு
*இந்த இணைப்புக்கு தடை உடல் தாங்கற அப்செஷன் வந்துருச்சு

(இங்கு நம்ம சித்தாந்தம் முடியுது -சைக்காலஜி ஆரம்பிக்குது)

*உயிர்களின் எல்லா செயல்களுக்கும் (மனிதன் உட்பட) பின்னணியில் இருப்பது கொல்லும் -கொல்லப்படும் இச்சையே

*கற்காலத்தில் இது ஸ்தூலமா நிறைவேறிட்டு இருந்தது
*சஞ்சார வாசத்துலயும் நாட் பேட்
*ஸ்திரவாசத்துல இது குறைய ஆரம்பிச்சது
*இதுக்கு செக்சை ஒரு சிறந்த வழியா மனித மனம் அங்கீகரிச்சுருச்சு
*ஆற அமர செக்ஸில் இறங்க அதுல பெண்தான் பவர் ஃபுல்னு தெரிஞ்சுருச்சு -மேலும் சொத்தா மாறிய விளை நிலம் -அது தன் வாரிசுக்கே சேரனுங்கற துடிப்பு -காரணமா பெண்ணடிமை ஆரம்பிச்சுருச்சு
*அடிமை எந்த க்ஷணம் வேணம்னா புரட்சி பண்ணலாமே.அவளோட எங்கனருந்து செக்ஸை ஆற அமர அனுபவிக்கிறது. தன் பிரதான கோரிக்கைகள் நிறைவேற செக்ஸை சிறந்த ஆல்டர்னேட்டிவா வச்சிருந்த மன்சனுக்கு இன்னொரு ஆல்டர்னேட்டிவ் தேவை பட்டுது.அதான் பணம்.

பணத்தை துரத்துறதுல இறங்கி இருந்த கொஞ்ச நஞ்ச பவரையும் இழந்துட்டான் மன்சன். பெண்ணுக்கு பணத்தை துரத்துற வாய்ப்பு கிடைச்சாலும் அந்த பணத்தை வச்சு கொல்லவோ, கொல்லப்படவோ பிரகாசமான வாய்ப்புகள் கிடைக்கலை( சம்பள கவரை அப்படியே அப்பன்,மாமனார்,புருசன் கையில கொடுத்துர்ராய்ங்களே)

செக்ஸுல ஆர்காசம்/உச்சம் எய்தினாதான் மேற்படி கொல்லப்படும் இச்சை நிறைவேறும். (கொல்லும் இச்சை நிறைவேறிருது -ராத்திரில அவனுக்கு வீரிய ஸ்கலிதம் நடக்கறச்ச -பகல்ல அவனை பயங்கர மொக்கை பண்ற சமயம் - கலர் டிவி,கல் நெக்லஸ் கேட்டு வதைக்கறச்ச)

இவளோட கொல்லும் இச்சை நிறைவேற இருந்த இன்னொரு வாய்ப்பு குழந்தை பிறப்பு அதுவும் ஃபேமிலி ப்ளானிங் காரணமா மொக்கையாயிருச்சு.

ஆக்சுவலா பெண் இயற்கையால ஆசீர்வதிக்கப்பட்டவள். அவளுக்கு ஆபத்தை  முன் கூட்டியே ஸ்மெல் பண்ற கப்பாசிட்டி அதிகம், அப்படி ஆபத்து தலைகாட்டினாலும் அதை அப்படியே ஃப்ரீஸ் பண்ணிர்ர சாலக்கும் உண்டு ,அட ஆபத்தே வந்திட்டாலும் அதுலருந்து தன்னை காப்பாத்திக்கவும், திருப்பித்தாக்கவும் தேவையான சக்தி அவளுக்கு யதேஷ்டம்.

ஆனாலும் பெண் மீதான வன்முறை அதிகரிச்சுட்டே போகுது. பெண்கள் பலியாயிட்டே இருக்காய்ங்க.

ஒரு வேளை செக்ஸ்,குழந்தை பிறப்பு இத்யாதில நிறைவேறாத தங்களோட கொல்ல்ப்படும் இச்சையை நிறைவேத்திக்க இவிகளா
ஆண்களை தூண்டிவிடறாய்ங்களோங்கற சம்சயம் சாஸ்தியாயிட்டே போகுது .

இதுக்கு தீர்வுதான் என்ன? செக்ஸ் எஜுகேஷன் -கண்ணாலத்துக்கு மிந்தி ஒரு ஷார்ட் டெர்ம் கோர்ஸ் -அதுல படிச்சு பாஸ் பண்ணாதான் கண்ணாலம்னு வைக்கனுமோ?

Friday, December 10, 2010

பெண் , வாழ்வின் சங்கீ(கே) தம்

பெண்ணின் மறுபக்கம் : கேள்வி பதில்
அண்ணா வணக்கம்ணா,
என்னதான் சரோஜாதேவித்தனமான ஃப்ளாஷ் பாக்ஸ், கில்மா, பலான ஜோக்குன்னு  எழுதினாலும் தாய்குலத்தோட ஆதரவு நம்மை விட்டு விலகமாட்டேங்குது. என்ன ஒரு பிரச்சினைன்னா அவிக கமெண்ட் போடமாட்டாய்ங்க. தனிப்பட்ட மெயில்லதான் கருத்து தெரிவிக்கிறாய்ங்க.

நம்முது சிம்ம ராசி. அதிபதி சூரியன்.இவரு பித்ருகாரகன்.( டாடிங்கோ) லக்னமா கடகமா போச்சு.இதுக்கு அதிபதி சந்திரன் மாத்ருகாரகன் ( மம்மிங்கோ) "தத்த நாடி" ஒரு தடியான தெலுங்கு புஸ்தவத்துல படிச்சதா ஞா.

"லக்னம் கடகமாகி , ராசி சிம்மமானால் பெண்கள் தங்கள் தாய் தந்தையர்கிட்டே பகிர்ந்துக்காத மேட்டரை கூட இவிக கிட்ட ஷேர் பண்ணிக்குவாய்ங்க"ன்னு ஆத்தர் சொல்லியிருந்தாரு -இதுல அவிக ரெண்டு பேரும் பரிவர்த்தனமாகி ஆட்சி பெற்ற கணக்கா இருக்கிறதால இந்த இம்சை சாஸ்தியாயிருச்சுங்கண்ணா.

இப்பயாச்சும் தாடியெல்லாம் வெள்ளையாகி, ஆன்மீகம்,ஜாதகம்னு ஹார்ம்லெஸ்ஸா, வெள்ளை சாம்பார் கணக்கா, 43 வயசுக்கே ஆடிய ஆட்டம் என்னன்னு அடங்கி கிடக்கோம்.இப்ப ஷேர் பண்ணிக்கிட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு. ஆனா நாட் நாட்லயே " ஏய் சொன்னா கேலி பண்ணக்கூடாது.. நமக்குள்ள எவ்ள சண்டை வந்தாலும் வெளிய சொல்லக்கூடாது . இதை நீ ஒருத்தன் தான் புரிஞ்சுக்குவேனு உனக்கு சொல்றேன்" மாதிரி முன்னுரையோட சமவயது பெண்குட்டிகள் கூட எத்தனையோ வில்லங்கமான கேள்விகளையெல்லாம் கேட்டு பதில் வாங்கியிருக்காய்ங்க. எல்லாத்தயும் கூட்டி கழிச்சு பார்த்தா தத்த நாடி நெத்தியடி போலத்தான் இருக்கு. சரிங்கண்ணா மேட்டருக்கு வந்துருவோம்.

பெண்ணின் மறுபக்கம் தொடரை ஆரம்பிச்சதுமே என்ன கெட்டுப்போனவளை பத்தி,சாடிஸ்ட் மனைவிகள் பத்தி ,பெண் கிரிமினல்ஸ் பத்தி எழுதப்போறிங்களா? புது தளத்துல இறங்கறிங்க வாழ்த்துக்கள் மாதிரி மெயில்ஸ் எல்லாம் நிறைய வந்தது. இந்த சாதிய எல்லாம் விலக்கி வச்சுட்டு தொடரிலான என் எழுத்துக்கள் மேல வந்த விமர்சனங்கள்,சந்தேகங்களை மெயில் பண்ணவுக அனுமதியோட இங்கன பதிச்சு அதுக்கெல்லாம் ஆன்சர் பண்ணவும் ட்ரை பண்ணியிருக்கேன்.

கேள்வி: 1
பெண்கள் மேல ஏன் உங்களுக்கு இத்தனை ஆர்வம்?

பதில்:
த பார்ரா பெண் மேல ஆர்வமில்லாத ஆண் எங்கன இருக்கான். அப்படி இருக்கிறவன்தான்  வரதட்சிணை வாங்கறான், மார்கெட் பண்றான், நீலப்படம் எடுக்கிறான், ப்ரோக்கரேஜ் பண்றான்.

அக்சுவலா எனக்கு ஆண்கள் மேல தான் ஆர்வம் ( அதுக்குன்னு என்னை ஹோமோவாக்கிரப்போறிங்க - ஜஸ்ட் ஒரு இனப்பற்று ) பாவம் ஆண் எவ்ள பெரிய அறிவாளியா இருந்தாலும் பெண் விஷயத்துல முட்டாளாயிர்ரான்.   நான் ஒரு லீடர். அதாவது ஒரு கூட்டத்தை வழி நடத்தறவன். மொதல்ல எனக்கு மேட்டர் என்னனு தெரிஞ்சாதானே நான் வழி நடத்த.. ஒரு ஆண் நல்ல படி மோல்ட் ஆனா அது அவன் சொந்த விஷயம். ஆனால் ஒரு பெண் சைக்கலாஜிக்கலா நல்லபடி மோல்ட் ஆயிட்டா அவள் குடும்பம்,க்ளாஸ்,காலனி ஏன் அந்த ஏரியாவே பிரகாசமாயிரும்.

பெண் என்பவள் இயற்கையின்,உயிர்வாழ்தலின்,இருத்தலியலின் , வாழ்வின் சங்கேதம். வாழ்வை துரத்தும் மரணத்தை மறக்கடிக்கும் சங்கீதம்.அதுலயும் அபஸ்ருதி  உண்டு இல்லேங்கலை.ஆனால் அது நோட் எழுதினவனோட தவறு.அவளோட தவறில்லை.

கேள்வி:2
பெண்ணை அக்கா,தங்கச்சிங்கறதை ஏன் கிண்டலடிக்கிறிங்க?

பதில்:
அது மனசுலருந்து வர்ரதில்லிங்க. ஒரு ஆண் பெண்  சேர்ந்து ஸ்தூலமா என்ன செய்துட்டிருந்தாலும் சரி ஒரு ட்ராக்ல "அது"ஓடிக்கிட்டே இருக்கும்.  ஒல்லி பீச்சானா, கண்ல மட்டும் உசுரை வச்சிக்கிட்டு ,பவர் கிளாஸ் போட்டுக்கிட்டு , இன்டர் நெட்ல வெறும் எழுத்தா கிடக்கிற பக்கங்களை ப்ரவுஸ் பெண்ற பெண்ணை பார்த்தா இது மாதிரி ஒரு தங்கச்சியிருந்தா நல்லாருந்திருக்குமேனு தோணும். இல்லேங்கலை.

ஸ்டாண்ட்ல வெயிட் பண்ற ஷேர் ஆட்டோல ஒரு பையில ரிப்பேரான மிக்சியும் ,இன்னொரு பையில  ரெண்டு மாசத்துக்கு தேவையான காய் கறியும், ப்ளெயின் புடவையும், மேட்சிங் ப்ளவுஸும், குஷ்புதனமான ஃபிசிக்குமா , முகத்துல பொடிச்ச வியர்வைய கர்சீஃபால துடைச்சிட்டே உட்கார்ந்திருக்கிற ஒரு பெண்ணை பார்த்தா அதுவும் "இன்னாடா இது.. இதும்பக்கத்துல ஒக்காரனுமா? ஒரு தம் போட்டுட்டு அடுத்த ஆட்டோல போலாமுனு நினைக்கிறச்ச சவுஜன்யமா உள்ளுக்கு நகர்ந்து உட்கார்ந்து இடம் கொடுக்கிற பெண்ணை பார்த்தா " தோடா இந்த மாரி ஒரு அக்கா இருந்திருந்தா நல்லாதான் இருந்திருக்கும்போலனு தோணும்.இல்லேங்கலை.

அதுக்காக கண்டவளையும் அக்கா,தங்கச்சினு விளிச்சுக்கிட்டு அவ ஏமாந்த சமயம் கண்ட இடத்துல கண்ணை மேய விடற கயவாளீத்தனம்லாம் நமக்கு பிடிக்காதுங்கோ..

இந்த அக்கா தங்கச்சி  அழைப்பும் அங்கீகரிப்பும் எப்படியிருக்குதுன்னா "உடலுறவுக்கு அனுமதிக்கமாட்டேன்"ங்கற போர்ட் மாதிரியும், "எங்களுக்குள்ள உடலுறவு இல்லேனு சமுதாயத்துக்கு அறிவிச்சுக்கற  முயற்சியாவும் தான் இருக்கு. தங்கள் மேல சந்தேகம் இருக்கிறவுகதான் இந்த மாதிரி போலி அழைப்புகள்,அங்கீகரிப்புகளுக்கு இலக்காகிறாய்ங்க. இன்னம் உபகதைகள் எல்லாம் இருக்கு. ஆனால் சொல்லலை.பச்சையா போயிரும்..

கேள்வி: 3
// உங்க எதிர்க்க ஒரு ஆளு நாய கூட்டிட்டு வராரு. அந்த நாயி உங்களை கடிச்சுருச்சுனு வைங்க. நாய்கிட்டயா சண்டைக்கு போறிங்க. இல்லை .அந்தாளுகிட்டேதான் சண்டைக்கு போவிங்க.அதுமாதிரி தாய்குலம் அவிக எசமானங்க கையில நாய் மாதிரி//
இது ஓவராயில்லயா?

பதில்:
யம்மாடி .. இன்டர் நெட்ல படிக்கிறச்ச மைண்ட் பஜ்னு ஆயிருது. அதை கொஞ்சம் உசுப்பி விடனும்னா இந்த மாதிரி வார்த்தை பிரயோகம்லாம் தேவைதான். நான் சொன்ன உதாரணம், பண்ண வார்த்தை பிரயோகத்தையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. நான் சொன்னதுல எங்கனா ஃபால்ட் இருக்குதா? இருந்தா அதை பேசுங்க

கேள்வி:4
ஒரு பையன் தன் தாயை தேடித்தான் காதலிக்க  துவங்கறான். ஒரு பெண் தன் தந்தைய தேடித்தான் காதலிக்க துவங்கறாள்ங்கறது சைக்காலஜி. ஆனால் அவிக அப்படி தேடறதே தங்கள் பெற்றோரை பழிக்கு பழி வாங்கத்தானு சொல்றிங்களே இதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?

எல்லா வாழ்க்கையுமே தோல்வித்தேன். அதான் செத்துப்போயிர்ரமே. அட சாகிறது அப்பாறம். நாமதான்  வாழறதே இல்லையே. உங்க வாழ்க்கைய நீங்களா வாழ்ந்திருந்தாலாவது ஒரு திருப்தியாச்சும் இருந்திருக்கும்.அந்த வாய்ப்பையும் உங்க பெற்றோர் தரலை. அவிக வாழ்க்கையும் தோல்விதான்.ஆனால் அவிகளா சில வெற்றி சூத்திரங்களை வடிவமைச்சு  உங்க மண்டைக்குள்ள திணிச்சாய்ங்க.

அவிக பார்த்த உலகம் வேற. நீங்க பார்க்கப்போற உலகம் வேற. அவிக அனுபவம்லாம் 25 வருஷத்துக்கு முந்தின  தினசரி பத்திரிக்கை மாதிரி.

பெற்றோர்கிட்டே குழந்தைகள் அனுபவிக்கிற  கொடுமைங்கறது கொடுமையிலயும் கொடுமை. லோயர் மிடில் கிளாஸ், லோ கிளாஸ்லயாச்சும் பரவாயில்லை.படிப்பு, சத்துணவு, ஆரோக்கியம் இத்யாதிக்கு வழியில்லன்னாலும் சுதந்திரமாவது கிடைக்கும். ஆனா மத்த ஃபேமிலிஸ்ல?

சொன்னா மானக்கேடு சொல்லாட்டா வெட்கக்கேடு . சொன்னாலும் சமூகம் என்ன சொல்லும் "தத் வாய மூடு உன்னை வளர்க்க உங்கப்பாம்மா என்னமா கஸ்டப்படறாய்ங்க தெரியுமா"

இந்த ஊமைக்கோபம் ஒவ்வொரு மனசுலயும் இருக்கு. அது எரிமலைக்குள்ள லாவா மாதிரி கிடக்கு. அதான் தம்பதிகள்,காதலர்கள்  இடையில் வெடிக்குது. இந்த ஒரு பாயிண்டை சொன்னதுக்கே  நமக்கு டாக்டர் பட்டம் கொடுக்கனும். ( ஹும்.. இப்பல்லாம் ரெம்ப சீப்பாம்ல ஒரு அம்தாயிரம் ஆகுமா?)

(கேள்வி பதில் அடுத்த பதிவிலும் தொடரும் - உணர்ச்சிவசப்பட்டு நீங்களூம் கேள்விகளை கேட்க விரும்பினால் கேட்கலாம் - மெயில் /எஸ்.எம்.எஸ்/ கமெண்ட் எப்படி வேணம்னாலும்)

Wednesday, December 8, 2010

பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக

இது ஆண்கள் உலகம்
இன்னைக்கு பெண் சுதந்திரத்தை  கண்ட மேனிக்கு  விமர்சிக்கிற ஆண்கள் நிறைய இருக்காங்க. அவிகளையெல்லாம் ரெண்டு க்ரூப்பா பிரிச்சுரலாம். 1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக. 2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக ( சுகம்னா "பலான"சுகம் மட்டுமில்லிங்கண்ணா சகல சுகங்களும். இது ஏன் இப்படினு கேப்பிக.சொல்றேன்.

1. பெண்ணால இம்சைக்கு இலக்கானவுக:
இவிகளுக்கு ஒரு சீக்ரெட் தெரியாது.  பெண்ணுக்குள்ள இருக்கிற ரெண்டு பெண்கள்ள ஆரை இன்வைட் பண்றதுங்கற சாய்ஸ்ல தப்பான சாய்ஸை ஆப்ட் பண்ணி  இவிக தலைக்கு இவிகளே கொள்ளிவச்சுட்டாய்ங்கங்கறது தான் அந்த சீக்ரெட்.

அடிப்படை காரணத்தை விட்டுட்டு ஸ்தூலமான காரணங்களையெல்லாம் காரணங்களாக்கிக்கிட்டு அவளை படிக்க வச்சது தப்பு, வேலைக்கு அனுப்பினது தப்புன்னு இவிகளே கற்பிதம் பண்ணிக்கிட்டு இப்படி விமர்சிக்க  ஆரம்பிப்பாய்ங்க.

ஹவுஸ் வைஃப்ல எத்தீனி பொம்பளை புருசனை நடுத்தெருவுல நிக்க வச்சுட்டு   ஓடியிருக்கு தெரியுமா? எத்தீனி ஆஃபீஸ் கோயர்ஸ் இன்னைக்கும் வேலை வெட்டியெல்லாம் தள்ளி வச்சுட்டு தங்களோட தலைவலிய,கால் குடைச்சலை போஸ்ட் போன் பண்ணிக்கிட்டு  புருசனுக்கு தைலம் தேச்சு விடுறாய்ங்க தெரியுமா?

பாஸூ! லைஃப்ல ஒரே ஒரு பாயிண்டை நெல்லா புரிஞ்சிக்கனும். ஒருத்தியோட/ஒருத்தனோட செயல்பாட்டுக்கும் அவனோட ஜீன்ஸ்,என்விரான்மென்ட்,படிப்பு இத்யாதிக்கும் தொடர்பிருக்கிறாப்லயே இருக்கும். ஆனால் அதெல்லாம் சொம்மா ஒட்டடை மாதிரி . அவனுக்குள்ள/அவளுக்குள்ள ஒரு ஸ்ட்ராங் வில் வந்துருச்சுனு வைங்க இந்த ஜீன்ஸ் /என்விரான்மென்ட் எல்லாம் நாலு காலையும் தூக்கிரும்.

லைஃப்ல எல்லாமே இன்டர் லிங்க்ட் போல தோணும். ஆனால் எல்லாமே தனி தனி நைனா. பெண் இம்சை பண்றது தனி. அவள் ஹவுஸ் வைஃபா ,ஆஃபீஸ் கோயராங்கறது தனி . நீ ஏன் மெனக்கெட்டு ரெண்டையும் போட்டு குழப்பிக்கிறே.

ஒரு வீட்ல வாடகைக்கு  குடியிருந்தப்போ ( எப்போ,எந்த வீட்லன்னு டீட்டெய்ல் வேணா பாஸ் மறந்துட்டன்) கோ டெனன்ட் தம்பதி. பொம்பளை மேட்டர் எவ்ரி திங்க்  பிலோ ஆவரேஜ் தான்  . இதுல  வெண் குஷ்டம் வேற. புருசங்காரன் மூட்டைத்துக்கும் தொழிலாளி. கட்டையா குட்டையா இருப்பான்.ரூ.20க்கு மிஞ்சி குடிக்கவே மாட்டான். காசை அப்படியே கொண்டாந்து பொஞ்சாதிக்கிட்ட கொடுத்துருவான். அவனை அந்த பொம்பளையும் அவளோட ஆத்தாக்காரியும் போட்டு குடாய்வாய்ங்க பாருங்க . சரோஜா தேவி நாவல் எல்லாம் பிச்சை வாங்கனும்

இதே இன்னொரு உதாரணம் சொல்றேன். பையன் வெத்துவேட்டு. கொஞ்சம் போல பூர்வீக சொத்து.அதுல ஆயிரம் வெட்டுப்பழி குத்துப்பழி. இவனை ஒரு பெண் லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கிருச்சு. பத்து நாள்ள தெரிஞ்சு போச்சு. புருசங்காரனை நம்பியிருந்தா பட்டினிசாவு  நிச்சயம்.வேலை தேட ஆரம்பிச்சுருச்சு. கொஞ்ச நாள் ப்ரைவேட்டா DTP ஆப்பரேட்டர். அப்பாறம் இ.பில டெம்ப்ரரி . அப்பாறம் ஏதோ பரீட்சை எழுதி பர்மெனன்ட் ஆச்சு. இன்னைக்கு 3 பெண் குழந்தை. இன்னைக்கும் புருசங்காரன் பத்து ரூபா சம்பாதிச்ச பாடில்லை. அவனுக்கு ஏகப்பட்ட ஐ.சி (இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்) இந்த பொண்ணு பாவம் இன்னைக்கும் எல்லா இம்சையையும் பல்லை கடிச்சு சமாளிச்சுக்கிட்டு குடும்பத்தை ஓட்டிக்கிட்டே தான் இருக்கு.

இதையெல்லாம் கூட்டிக்கழிச்சு பாருங்க. பெண் சுதந்திரத்தால ஒருத்தி புதுசா கெட்டுப்போறதுமில்லை. கெட்டு குட்டிச்சுவராகவேண்டியவ வீட்டுக்குள்ளாற சிறைவச்சா மாத்திரம் கெடாம இருக்கப்போறதுமில்லை.

பெண் சுதந்திரத்தை விமர்சிக்கிறவங்கள்ள அடுத்த க்ரூப்பை பார்ப்போம்.

2. பெண்ணால கச்சா முச்சானு சுகப்பட்டவுக:
இவிக நினைப்பென்ன நம்மாளு படிக்கலை,வேலைக்கு போல அதனாலதான் அந்த அளவுக்கு அடங்கி ஒடுங்கி நம்மை சுகப்படுத்தினாள். பாஸ் மொத க்ரூப்புக்கு சொன்ன ரெண்டு உபகதைகளையும் ஒரு ஓட்டம் ஓட்டுங்க மேட்டர் வெளிய வரும்


பெண்ணை, பெண் சுதந்திரத்தை  விமர்சிக்கிற ஆணை,  வடிகட்டின முட்டாள்னுதான் சொல்வேன்.ஏன்னா உன் வாழ்க்கை போராட்டத்துல சக போராளியா இருந்திருக்க வேண்டிய பெண்ணை  போர்களத்துலருந்தே விலக்கி வச்சவன் நீ. நிஜமா இருந்த அவளை நிழலாக்கினவன் நீ  ( அல்லது உங்கப்பன்,தாத்தன் ,பாட்டன் ,பூட்டன்)  அந்த நிழலுக்கு பயந்து நடுங்கறதும் நீ.

மனிதமனம் கூட ஒரு வாய்க்கால கரை புரண்டு ஓடற தண்ணி மாதிரிதேன். அதனோட ஓட்டத்துக்கு தடை ஏற்பட்டா தேங்கின மாதிரியே இருக்கும். ஆனால் எங்கனயோ பிச்சிக்கிடும். தனக்குன்னு ஒரு பாதைய  போட்டுக்கிட்டு அதும்பாட்டுக்கு ஓடிப்போயிரும்.

கற்கால வாழ்க்கைல உடல் பலம் பெற்றவன் தான் தலைவன். சக்கர நாற்காலிலல்லாம் வந்தா பொளப்பு நாறிப்போயிரும் .கூட்டத்துல வெள்ளம்,பூகம்பம், குரூர மிருகங்களோட வரவை கெஸ் பண்ணக்கூடிய அளவுக்கு ஓரளவு சூட்சும புத்தி கொண்டவனை அவன்  பலகீனனா இருந்தாலும் தலைவன் கிட்டே சேர்த்துக்கிட்டிருப்பான்.  இந்த அட்வைசர் பொசிஷன்ல உள்ளவன் தனக்குனு ஒரு அஜெண்டா வச்சுக்கிட்டு டெவலப் ஆகியிருப்பான்.தன் வாரிசுகளையும் தயார் படுத்தியிருப்பான். அவன் தான் பிராமணன். உலக நாடுகளின் சரித்திரத்துல எந்த இனத்துல பார்த்தாலும் இதை போல ஒரு க்ரூப் நிச்சயமா இருக்கும்.

இவிக ஃபிசிக்கலா வீக்.ஆனால் மென்டலா ஸ்ட்ராங். கற்கால வாழ்க்கைலயாகட்டும்,சஞ்சார வாழ்க்கையில ஆகட்டும் பெண் ஃபிசிக்கலாவும் ஸ்ட் ராங்கு, மென்டலாவும் ஸ்ட்ராங்கு தேன். ஸ்திர வாழ்க்கை வர்ரச்ச  ரிலாக்ஸ்ட்  செக்ஸ் - பெண்ணின் செக்ஸ் பவர் குறித்த ஞானம் - 7-23 மேட்டர் பாஸ் - பன்முறை உச்சம்- தனியார் சொத்து -வாரிசு பிரச்சினை  எல்லாம் வந்ததும் பெண்ணோட யோனிய லாக் பண்ணி வைக்க முடியாத கையாலாகாத ஆண்கள் கூட்டம் அவளையே பூட்டிவைக்க ஆரம்பிச்சிருக்கலாம்.

ஒரு சில தலைமுறைகளுக்கு பின்னாடி பெண் ஃபிசிக்கலா வீக் மென்டலா ஸ்ட் ராங்குங்கற நிலை வந்திருக்கலாம். இந்த அட்வைசரி கூட்டமும் இதே கேட்டகிரிதான்.  அவிக மைண்ட்ல என்னா ஓடுதுன்னு தாய்குலம் கெஸ் பண்ண, தாய்குலத்தோட மனசுல என்ன ஓடுதுன்னு அவிக கெஸ் பண்ண ஒரு டக் அஃப் வாரே நடந்திருக்கலாம்.

கூட்டத்தலைவன் , இப்படி பெண்கள் - அப்படி ஆலோசகர்கள் இடையில மாட்டி வதை பட்டிருக்கனும். எப்படியோ தலைவன் ஆலோசகர்கள் பக்கம் சாஞ்சுருக்கனும். அங்கன ஆரம்பிச்சதுதான் பெண்ணுக்கு எதிரான அமைப்பு ரீதியிலான  அடக்குமுறை .

நீங்க வேணா கவனிச்சு பாருங்க. எவன் வத்தலும் தொத்தலுமாவோ அல்லது மைதாமாவு பொம்மை மாதிரி மழமழன்னோ ,பூ மாதிரி கை, காலோட இருக்கானோ அவன் தேன் பெண்டாட்டிய நச்சு கொட்டிக்கிட்டே இருப்பான். அவளை கமாண்ட் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டே இருப்பான். ஏன்னா இவனும் அவளும் ஒரே சாதி. ஃபிசிக்கலா வீக்கு, மெண்டலா ஸ்ட்ராங்கு.

இதுவே கரடு முரடா, கரணை கரணையா புஜமும், புஜபல பராக்கிரமுமா இருக்கிறவன் பொஞ்சாதிய ம..ரு கூட கண்டுக்கவே மாட்டான். பூஞ்சைகளின் க்ரூப் பூவையர் மீதான அச்சத்தால் அடிக்கல் நாட்டி எழுப்பிய சிறைதான் பெண்களுக்கெதிரான  அமைப்பு ரீதியிலான  அடக்கு முறை.

இது தூள் தூள் ஆகனும்னா ரெண்டு வழி இருக்கு. பூஞ்சைங்க புஷ்டியாகனும்.
தாஷ்டிகமாகனும். இல்லைன்னா அடடா நாம இவியளை அடிமைப்படுத்த நினைச்சா இவியளை நமக்கு சமமா , நம்மை இவியளுக்கு சமமா  நினைக்கிறோம்னு அர்த்தம் - இப்படி  ரியலைஸ் ஆகனும் .

ஆண் ஆண்தான். பெண் பெண் தான். அவர்களுக்கான சிறப்பான பலங்களும் உண்டு பல்கீனங்களும் உண்டு. இவிகளை ஒப்பிடறதே முட்டாள்தனம்.ரெண்டும் இரு வேறு பிரக்ருதிகள்.

நான் என்ன சொல்லவரேன்னா தாளி ஆண்கள்ள ஆண்மை தீர்ந்து போச்சு. நீங்களும் பெண்களா மாறியாச்சு. இன்னம் என்னத்துக்கு இந்த கெத்து?

இத்தீனி நூற்றாண்டு காலமா நீங்களே சட்டம் போட்டிங்க, நீங்களே நீதி வழங்கினிங்க, நீங்களே ஆண்டிங்க, நீங்களே யுத்தங்கள் செய்திங்க. நீங்களே இந்த பூமிய அழிச்சு பழஞ்சோறாக்கிட்டிங்க.

நீங்களே அவளை அடிமையாக்கினிங்க. நீங்களே அவளோட சுதந்திரத்தை பத்தி பேசினிங்க .போராடினிங்க. அதை ரேஷன்ல தந்திங்க. அவளோட கருத்தை,ஆடையை, அவளுக்கான பத்திரிக்கை ஏன் அவளுக்கான காப்பர் டி, கேர் ஃப்ரீய கூட நீங்களே தயாரிச்சிங்க.

சனத்தொகையில பாதியா இருக்கிற அவிக கருத்தை தெரிஞ்சிக்கிடாம,அவிகளோட மனப்பூர்வமான பங்கு இல்லாம, பங்களிப்பு இல்லாம ஒரு ம..ரும் பிடுங்க முடியாது. இன்னைக்காச்சும் கேளூங்கப்பா. அவள் என்ன நினைக்கிறான்னு.

பெண் எழுத்தாளர்கள்,பெண் கவிஞர்கள் எல்லாம் ஆண் எழுத்தாளர்கள்,ஆண் கவிஞர்களோட போலிகள். அவிக கருத்துக்கும் மூலம் ஒரு  ஆண் தான்.

அதோ அவளை பாருங்க ஸ்தூலமா பார்த்தா டிவி சீரியல்ல மூழ்கி கிடக்கறாப்ல தான் தோணுது ஆனால் அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?

அதோ அவளை பாருங்க அட்சய திரிதியை விளம்பரத்தை பார்த்து முண்டியடிக்கிற கூட்டத்துல முன்னேறிக்கிட்டிருக்காளே அவ மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா? அந்த மன ஓட்டத்துக்கான ஆரம்ப புள்ளி எதுன்னு உங்களூக்கு தெரியுமா? எனக்கு தெரியுமா?

அவளுக்கு தேவை என்னன்னு நான் தீர்மானிக்க விரும்பலை. ஆனால் உங்களோட முதலைக்கண்ணீரும், அக்கா தங்கச்சி சென்டிமென்ட் மட்டுமில்லைன்னு மேசைய தட்டிச்சொல்லமுடியும்.

அவளை அடிமையாக்க பார்த்தா அடிமை என்னைக்கு புரட்சி செய்வாளோனு அஞ்சி நடுங்கனும். நீங்க அவளை அடிமையாக்கி வச்சிருக்கிங்களா  நீங்க  அவள் கழுத்துல போட்டுவச்ச கற்பு இத்யாதி சங்கிலி கண்ணிகளால உங்களை அவள் அடிமையாக்கிவச்சிருக்காளா ரோசனை பண்ணுங்க பாஸு..

இது பயணம்யா.. அதுவும் மரணத்தை நோக்கின பயணம். அவள் சகபயணி. இது யுத்தம்யா? சாவின் நிழல்களோட பண்ற யுத்தம். சாவை நோக்கிய ஃபாஸ்ட் அப் இந்த யுத்தம். இதுல சக போராளிய்யா அவள்.

அவள் இந்த பயணத்தை பத்தி என்னதான் நினைக்கிறாள்னு கேட்டுப்பாருங்கய்யா.. இந்த வெத்து யுத்தத்தை பத்தி என்னதான்  நினைக்கிறான்னு  கேட்டுப்பாருங்கய்யா..

எல்லாம் முடிஞ்சதுக்கப்பாறம் ஏதோ படத்துல படம் முழுக்க  மம்முட்டி இடுப்புல கட்டிவச்சிருந்த துண்டை அவிழ்த்து உதறி தோள்ள போட்டுக்கிட்டு போற கதையா போயிரப்போவுது..

Tuesday, December 7, 2010

கணவர் கொலைவழக்குல உள்ளே

பெண்ணின் மறுபக்கத்துக்கு என்னெல்லாம் காரணம்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.லிஸ்ட் மட்டும் தீர்ந்தபாடில்லை. பெண் பேயா மாற இத்தீனி காரணம் இருந்தாலும்  நிறைய பெண்கள் பெண்ணாவே இருக்காய்ங்க இது எப்டி?

1984 அவிக ஒரு லெக்சரர். கணவர் கொலைவழக்குல உள்ளே இருக்காரு. வருசத்தை இன்னொரு தாட்டி ரெஃபர் பண்ணுங்க 1984. இன்னைய தேதிக்கு தாளி மனுசனுக்கு மனுசனுக்கே கம்யூனிகேஷன் கிடையாது. பக்கத்து வீட்டுக்காரன் பாம்பே ஸ்வீட் விக்கிறானா பாம் விக்கிறானானு தெரிஞ்சுக்கற ஆர்வம் கூட இப்ப கிடையாது. 1984 ல சனத்துக்கு நிறைய ஃப்ரீ டைம் இருந்திருக்கும். எப்படியெல்லாம் நோண்டியிருப்பானு கெஸ் பண்ணுங்க.

மேலும் அந்த கணவன் கோடீஸ்வரன் கிடையாது. அரசியல்வாதி கிடையாது. இவிகளும் சவுண்ட் கிடையாது. லாஜிக்கலா பார்த்தா அவிக சேடிஸ்டாவே மாறியிருக்கனும். ஆனால் அவிக பிஹேவியர் ?

அந்த காலகட்டத்துல நாம சரியான பொறுக்கி நாம கலாய்க்கிறப்ப  எவளாச்சும் பொறுக்கினு திட்டினா வெறும் பொறுக்கியில்லை கண்ணு பொம்பளை பொறுக்கின்னு க்ளெய்ம் பண்ணிக்கிற ஸ்டேஜு.

அப்படியா கொத்தது எப்டி எப்டியோ மெயின் ஸ்ட்ரீமுக்கு வரவழைச்சு காலேஜ் மேகசினுக்கு கவிதை எழுதவச்சாய்ங்க. பேச்சு,கட்டுரை போட்டில பார்ட்டிசிப்பேட் பண்ண வச்சாய்ங்க. 1987ல புதுசுன்னு ஒரு ஒல்லியோ ஒல்லியா பத்திரிக்கை நடத்தினப்ப கதை எழுதி கொடுத்தாய்ங்க. குமுதம்காரன் ரேஞ்சுல பத்து பக்க கதையை ஒரு பக்கத்துக்கு ( ஃபுல் ஸ்கேப்ல குவார்ட்டர்)  சுருக்கி போட்டப்ப சின்ன முகச்சுளிப்பு கூட இல்லாம பாராட்டினாய்ங்க, இதெப்படி அவிகளுக்கு சாத்தியப்பட்டுச்சு?

இங்கனதான் நான் அடிக்கடி சொல்ற பஞ்ச் உதவுது." பெண் இயற்கையின் பிரதி - நிதி -பிரதி நிதி -அட இயற்கையே அவள்தான்" இன்னைக்கு இயற்கை மனுஷன் கையில சிக்கி என்ன பாடுபடுதுன்னு தெரிஞ்சுக்க  ஓசோன் படலத்து ஓட்டை ஒன்னு போதும்.
ஆனாலும் மாதவிலக்கு சமயத்துலயும் ரெப் கணவனோட  ஷூவுக்கு  பாலீஷ் போட்டுத்தர்ர மாதிரி, பெத்து இறக்கி பச்சை உடம்பா பரிதவிச்சு கிடந்தாலும் ஆஷ் ட்ரேவை நகர்த்தி வைக்கிற மாதிரி இயற்கை கருணைகாட்டிக்கிட்டே தான் இருக்கு.

இந்த நேச்சர் பெண்லயும் இருக்கு. அதனாலதான் நம்ம பிழைப்பெல்லாம் ஏதோ ஒரு மாதிரியா ஓடிக்கினு கீது. மத்த பொம்பளைங்க மேட்டர்ல எல்லாம் இந்த பேசிக் நேச்சர் என்னாச்சுனு கேப்பிக. "எறும்பு ஊற கல்லும் குழியும்"ங்கறாய்ங்க. நீங்க அதை எதிர்க்க முடியாத நிலையில இருக்கிறச்ச  அந்த எறும்பு கடிக்க ஆரம்பிச்சா / அட அது ஒரு எறும்பு இல்லே எறும்பு கூட்டம்னு வச்சிக்கங்க . என்னாகும்?

மொதல்ல கண்ணு காலி. அப்பாறம் எறும்புகூட்டம் கண் ஓட்டை வழியே கபாலத்து
க்குள்ளே புகுந்தா மூளை காலி. இதே இழவுதான் பெண்கள் விஷயத்துலயும் நடக்குது. ஆனால் ஃபிசிக்கல் பாடிய பெருசா திங்கறதில்லை .. அவளுக்குள்ள இருக்கிற இயற்கை குணங்களை , இயற்கையை ஒத்த குணங்களை தின்னு தீர்த்துருது.

பாட்டன்,பூட்டன், முப்பாட்டன் பண்ண பெண் கொடுமைகளை தாங்கி வந்த ஜீன்ஸ்,அப்பன், அண்ணன் ,தம்பி,மாமன், சித்தப்பன், பக்கத்து வீட்டு அங்கிள்,க்ளாஸ் மெட்ஸ், லவர்,பஸ்ல டிக்கெட் கொடுக்கிறவன் , தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கிறவன் இவ்ள ஏன் பொதுக்கழிவறையில கட்டணம் வசூலிக்கிறவன் வரை அவளை /அவளுக்குள்ள இருக்கிற இயற்கைய /இயற்கையை ஒத்த குணங்களை அந்த குணங்களால் ஆன உருவத்தை எறும்பு கூட்டம் போல தின்ன ஆரம்பிச்சா என்னாகும்?

அவளை திங்க நினைக்கிறவன் மட்டுமில்லை, அவளை பாதுகாக்கவேண்டிய நிலையில இருக்கிறவன் கூட அவளை வெறும் மாமிச பிண்டமா, பச்சையா சொன்னா ஒரு துளையாத்தான் பார்க்கிறான்.

அவள் பாதி ராத்திரி பி.பி.ஓ அனுப்பற மாருதில ஏறிப்போகலாம். ரத்தம் சுண்ட வேலை பார்க்கலாம். ஆனால் தான் ஒரு துளைங்கற விஷயத்தை மறந்துரக்கூடாது. அதை மட்டும் காப்பாத்திக்கிட்டா போதும்.

அடங்கொய்யால யத்பாவம் தத்பவதின்னா நீ எதை நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய்னு அர்த்தம். இதையே நான் மாத்தி சொல்ல விரும்பறேன். ஒரு ஜீவனை பத்தி ஊர் உலகம் என்ன நினைக்குதோ அது அதுவாவே மாறுது.

அவளை மாமிசப்பிண்டமாவே பார்த்தா அவள் மாமிசப்பிண்டமாவே மாறிப்போயிர்ரா. ஆறாங்கிளாஸ் படிக்கிறவரை எனக்கு இங்கிலீஷ் சுட்டுப்போட்டாலும் வராது. (இப்ப மட்டும் கிழியுதாங்காட்டியும்னு நோகடிக்காதிங்க பாஸ். இங்கிலீஷ்ல ஒரு ப்ளாகே மெயின்டெய்ன் பண்றோமில்லை. ப்ளானட்ஸ் ஸ்பீகிங் தொடரை தவிர மத்ததெல்லாம் நாமளா விட்டதுதான்)

ஆறாங்கிளாஸ்ல ஜேவிஎன் என்று ஒரு சார். எல்லா பசங்களோட அசைன்மென்ட் பேப்பரையும் கட்டுக்கட்டி கொடுத்து திருத்திக்கிட்டு வாப்பான்னுட்டாரு. அங்கன பத்திக்கிச்சு.

ஒரு தாட்டி ஒரு கேள்விக்கு கேள்வி ஞானத்துல சொந்தமா பதில் எழுத எழுப்பி நிக்க வச்சு க்ளாஸையே க்ளாப் பண்ண சொன்னாரு.

இதுலருந்து என்ன தெரியுது? ஒரு ஜீவனை பத்தி சனம் என்ன நினைக்குதோ அந்த நினைப்பு அந்த ஜீவனை பாதிக்குது.

ஜேவிஎன் மாதிரி யாருனா ஒரு கவுரவஸ்தன் " த பாரும்மா.. நீ வெறும் மாமிசபிண்டமில்லை. உடலளவுல இருக்கிற ஆறுவித்யாசம்லாம் கிடக்கட்டும். மொதல்ல  நீ ஒரு ஹ்யூமன் பீயிங். ஒரு பெண் என்ற காரணத்தால் மனித உயிருக்குரிய உரிமைகள் மறுக்கப்பட்டா ஒத்துக்கிடாதே. போராடு. அதே போல ஒரு மனித உயிருக்குரிய கடமைகள்ள இருந்து பின் வாங்காதே. சனத்தொகைல பாதியா உள்ள உனக்கு பாதி உலகம் சொந்தம் .உன் பங்கை விட்டுக்கொடுக்காதே. இந்த பிக்காலிங்க தங்களோட  பைத்தியக்காரத்தனத்தால உன் பங்கையும் சேர்த்து இந்த உலகத்துக்கே உலை வச்சிட்டானுவ. என்னா ஏதுனு விஜாரி..உன்னால முடியாதது ஒன்னுமில்லை. தாளி ஆண் என்ன அன்னிய கிரகத்தை சேர்ந்தவனா? இல்லே. உன் சக போராளி. மரணத்தை நோக்கியே போற வாழ்க்கை பயணத்துல சக பயணி - அவன் ஒன்னை மாமிசமாவோ துளையாவோ பார்த்தா போடாங்கோ உன் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்கோ"ன்னு சீறுன்னெல்லாம் சொல்லிக்கொடுத்தா மாறலாம். எதுவும் மாறலாம். மாறாதது மாற்றம் ஒன்னுதேன்.

இந்தியும் அதே கதைதான். சுட்டுப்போட்டாலும் , சுடாம போட்டாலும் வராது.  இந்தி டீச்சர் மூணு ப்ராமின் பெண்களையும், சில இன துரோகிகளையும் மட்டும் கிட்டக்க கூட்டி வச்சுக்கிட்டு கொஸ்டியன் ஆன்சர்ஸ் மார்க்  பண்ணி கொடுத்துரும். நித்தம்  நித்தம் கர்பமா இருக்கும்.

நாம பின்னாடி வரிசைல உட்கார்ந்து தமிழ்ல எழுதி மேல கோடு போட்டு இந்தின்னு கணக்கு பண்ணிக்கிட்டிருப்போம். அப்பாறம் ஆரோ புண்ணியம் கட்டிக்க ( எங்க சின்ன அண்ணன் தானு நினைக்கிறேன்) தட்சிணபாரத் இந்தி பிரச்சார சபாவுல சேர்ந்து பிரவேஷிகா வரை முடிச்சேன்.

இவனுக்கு இந்திவராது, இங்கிலீஷு வராதுனு சனம்  நினைச்சிட்டிருந்தாய்ங்க. அதுவரை எனக்கு ஒரு ம...ரும் வரலை.

ஏன் வராதுனு கேள்வி எழுப்பினேன். தூள் கிளப்பினேன்.தாய்குலத்துக்கும் இதைத்தேன் சொல்றேன். என் லாப்ல நான் தான் எலி. இந்த எலிக்கே ஒர்க் அவுட் ஆன ஊசி புலிங்களுக்கு ஒர்க் அவுட் ஆகாதா என்ன?

3வகை மனங்கள்:

மனித மனங்களை 3 வகையா பிரிக்கலாம்.

1. அடுத்தவுக எண்ணங்களை உள்வாங்கி அப்படியே  செயல்படுத்தற அடிமை மனங்கள்
2.  தன் எண்ணங்களை குவிச்சு ஒரு விதை எண்ணமாக்கி அதை செயல்படுத்தற ஆக்டிவ் மனங்கள்
3. அடுத்தவுக எண்ணங்களை புறக்கணிச்சு, அந்த எண்ணங்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்கி அதை செயல்படுத்தற டைனமிக் மனங்கள்

பல நூற்றாண்டுகளால்  மேதைகள் என்று தம்மைத்தாமே க்ளெய்ம் செய்துகொண்ட ஒரு இனத்தால் உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த சமூகத்தின் எண்ணம், ஜீன்களில் பொதிந்துள்ள அடிமைத்தனம் இதையெல்லாம் எதிர்த்து பெண் தன் இயற்கை குணங்களோட தொடரனும்னா அதுக்கு தேவை டைனமிக் மைண்ட்.ஸ்ட்ராங்கர்  செக்ஸுங்கற ஆண்கள்ளயே இந்த ஜாதி ரெம்ப கம்மி. இதுல தாய்குலத்துல கம்மியுலயும் கம்மி.

அதனாலதான் மெஜாரிட்டி ஆஃப் தி பெண்கள்  சனங்க, சமுதாய  எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு தாங்களும் கஷ்டப்பட்டு, ரெட்டை வேடம் போட்டுக்கிட்டு, தங்களை தாங்களோ ஏமாத்திக்கிட்டு,  பேயா உருவாக்கப்பட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாத ஆண்களையும் கஷ்டப்படுத்தி  கஷ்டப்பட்டுக்கிட்டிருக்காய்ங்க.

தாய்குலம் தங்களோட மைண்டை டைனமிக் மைண்டா கனெவ்ர்ட் பண்ணிக்கனும்னா ஒட்டு மொத்தமா ஒரு யு டர்ன் எடுத்து மாத்தி யோசிக்கனும். இன்னைக்கு  பேசப்படற ,  00.01% பெறப்பட்டிருக்கிற பெண் சுதந்திரமெல்லாம் ஆண் மனங்கள் ப்ரிஸ்க்ரைப் பண்ணதுதேன். இதுவும் ஒரு அடிமைத்தனம் தேன்.

இதையெல்லாம் யார் பேசுவாய்ங்கனு வெய்ட் பண்ணிக்கிட்டிருந்த என் சக போராளிகளுக்கும், மரணத்தை நோக்கிய பயணத்திலான சக பயணிகளுக்கும் என் உறுதி மொழி ஒன்னுதேன்.

உங்க எண்ணங்கள் என் மைண்டுக்கு  வந்து சேர்ந்தாச்சுங்கோ..

(தொடரும்)

Monday, December 6, 2010

பெண்ணின் மறுபக்கம்: 4

வணக்கம் பாஸ்,
பெண்ணின் மறுபக்கம் தொடரை படிச்சுட்டு தாய்குலம் பக்கெட் நிறைய சாணி   கரைச்சு வச்சிருக்கிறதா மர்ம டெலிஃபோன் எல்லாம் வருது. அட்லீஸ்ட் நான் சொல்ற மேட்டர்ல நியாயம் உள்ளதா நினைக்கிற பார்ட்டிங்க இண்ட்லிலயும்,உலவுலயும் ஓட்டுப்போடலாமில்லியா பாஸ். கொஞ்சம் போல தகிரியமாச்சும் வருமில்லை. பதிவுக்கு கீழயே ஓட்டுப்பட்டை இருக்கு ஒரு சொடுக்கு சொடுக்குங்க தலை!

பகவத்கீதைல கிருஷ்ணர் சொல்றாராம்" நீ எந்த உருவத்துல என்னை வணங்கினாலும் அந்த உருவத்துல நான் உனக்கு அருள் புரியறேன்"னு. பொம்பளையும் கிட்ண பரமாத்மா மாதிரிதான்.

நீ அவளை உடம்பா பார்த்தா உடம்பாவே ரெஸ்பாண் ஆகறா. நாத்தத்தையெல்லாம் மறைச்சுக்கிட்டு, வெட்டி வெட்டி பார்த்துக்கிட்டு ,நமட்டு சிரிப்பு சிரிச்சுக்கிட்டு.

நீ அவளை மனுஷியா பார்த்தா மனுஷியா ரெஸ்பாண்ட் ஆகறா. ரா.கி.பரமஹம்சர் சொல்வாரு " உன் எண்ணத்துக்கேற்ப உன் பெற்றோர்,சகோதரர்,மனைவி,மக்கள், ஏன் ராஜாவோட மனசு கூட மாறிரும்"


நடுராத்திரி, ஒரு பெண் உடம்பெல்லாம் நகை போட்டுக்கிட்டு தனியா போயி திரும்பி வராளோ அதான் உண்மையான சுதந்திரம்னு ..காந்தி சொன்னாரே அந்த சுதந்திரம் ப்ராக்டிக்கலைஸ் ஆகனும்னா ..ரெண்டு வேலை செய்யனும்.

ஒன்னு மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வர வைக்கனும். ரெண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும்.

இன்னைக்கு தங்கம் விலையேறுது விலையேறுதுனு அடிச்சிக்கிறாய்ங்க.ஏன் ஏறுது? மனுஷனுக்கு சகமனுஷன் மேல மட்டுமில்லை கார்ப்போரேட் கம்பெனிகள் மேல கூட நம்பிக்கை இல்லை. ( இருந்தா ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணுவானே) .

மனுஷனுக்கு மனுஷன் மேல நம்பிக்கை வரனும்னா ...வேணா ராசா மறுபடி ஆப்பரேஷன் இந்தியா2000 பத்தி மறுபடி ஒரு பாட்டம் எழுதியாகனும். நீங்க பேசாம நம்ம ப்ளாக்ல ஓடிக்கிட்டே இருக்கே அந்த அனிமேஷனை ஒரு தாட்டி பார்த்து படிச்சுருங்க. சுட்டி.

ரெண்டாவதா சொன்ன பாய்ண்டு அவனை பெண்ணை வெறும் உடம்பாவே பார்க்கிற அவஸ்தைலருந்து காப்பாத்தனும். அதுக்கு ஒரே வழி ஆண்,பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு லைசென்சிங் கொண்டுவரனும். ( கர்பத்தடுப்பு மற்றும் எய்ட்ஸ் தடுப்புக்கான பக்கா பயிற்சி கொடுத்து)

பல நூற்றாண்டுகளா செக்ஸ் ஏறக்குறைய தடைபடுத்தப்பட்டிருக்கிறதால அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா தெரியறாப்ல காஞ்சவன் கண்ணுக்கு கவிதையெல்லாம் காயிதமா தெரியுது. இவன் கழுதையா மாறி திங்க பார்க்கிறான்.

நெல் மூட்டைய அடுக்கி வைக்கிறச்ச பொரியை இறைச்சுவைப்பாய்ங்களாம்.எலி அதை பொறுக்கி பொறுக்கி தின்னுக்கிட்டிருக்குமாம். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து தொலைச்சாலே பெண்ணை உடம்பா பார்க்கிற நோய் ஒழிஞ்சு போயிரும்.

தாய்குலம் என்னவோ  உண்மையிலயே திறமையை காட்டித்தான் இன்டஹ் சமூகத்துல அங்கீகாரம் பெற ட்ரை பண்ணுது ( ஒரு உயிரின் அடிப்படை இச்சை இது) ஆனால் சமூகம் அவளோட திறமைய பார்க்காம தினமலர் தனமான "தெறமைய "த்தான் பார்க்குது.

நிறைய சதவீதம் பெண்கள் தாளி திறமைய காட்டனும்னா ரெம்ப கஷ்டப்படனும், தெறமைய காட்டறது ச்சோ ஈஸினு இறங்கிர்ராய்ங்க.

நான் பலதடவை சொல்லியிருக்கேன். நாட் ஒன்லி இன் செக்ஸ் உணவுப்பழக்கத்துல கூட எவன் ருசிய தேடறானோ, ஊர் பீக்கு அலையறானோ அவனுக்குள்ள பசி மந்தமாயிருச்சுனு அர்த்தம். அவன் நாக்குல போதுமான சலைவா, இரைப்பைல சுரக்கவேண்டிய ஹெச்.சி.எல் சுரக்கலைனு அர்த்தம். ஜடராக்னி கூலாயிருச்சுனு அர்த்தம்.

உணவுக்கு ருசியை தர்ரது பசி. இளமை. செக்ஸ்ல இன்பத்தை தர்ரது ஆண்மை,இளமை.

செக்ஸ் குற்றங்கள்ள டீன் ஏஜர்ஸை விட மிடில் ஏஜ்ட் நரிகள் தான் அதிகமா இருக்காங்க.

நாட்ல வயசுப்பசங்களைவிட கிழவாடிங்கத்தேன் நிறைய லொள்ளு பண்றதா தகவல். (இதெல்லாம் மெனோஃபஸ் மாதிரி)

ஒருத்தன் புதுசுபுதுசா தேடறான்னா அவனால கில்மால செயிக்கமுடியலைனு அர்த்தம். புதுசு புதுசா தேடறவன் இவளையும் கழட்டிவிடமாட்டானு கியாரண்டி கிடையாது.

அப்பாறம் ஆளை மாத்தற  சனம் சொல்ற காரணம் டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்கு.

மறுபடி மறுபடி சொல்றேன். ஒரு ஆண் பெண் உறவு உன்னதத்துல நிலைக்கனும்னா அந்த ரெண்டு பேருக்கிடையில செக்ஸ் நிகழக்கூடாது -வரக்கூடாது. நீ சொல்ற டேஸ்ட் -ரசனை - ஒத்திசைவு - புரிதல் புண்ணாக்குல்லாம் தொடரனும்னா காதல்,கடலை பர்பிக்கெல்லாம் இடம் கொடுக்காதே.

இயற்கை ரெம்ப கீன். விதைப்பரவல் ப்ராசஸ் தெரியுமில்லியா. அங்கே விதை பரவுது. இங்கே விதைகள்ள யிலருந்து  விதைகள் பரவுது தட்ஸால். இயற்கை கொடுக்கும் உந்துதலுக்கு பலியாகிட்டா உன் ரோல் ஜஸ்ட் டெஸ்ட் ட்யூப்.அவளோட ரோல் ஜஸ்ட் ஒரு குடுவை அம்புட்டுதேன்.

பாய்ஸுக்கு சொல்றது "அவளை உடம்பா பார்க்காதே.. அது உன் உடம்புக்கும் நல்லதில்லை, மனசுக்கும் நல்லதில்லை.

கேர்ள்ஸுக்கு சொல்றது "உன்னை எவனாச்சும் உடம்பா பார்த்து சேப்பா இருக்கே,க்யூட்டா இருக்கே, அழ க் க்க்க்க்க்க்க்க்க்க்க்க்காஆஆஆஆஆ இருக்கேன்ன்னா செருப்பாலயே அடிங்க.

இது உங்களை ஒரு மனுஷியா அவமானப்படுத்தற மேட்டர். இங்கே இடம் கொடுத்தா தாளி ஷாட் கட் பண்ணா கிள்ளினான், அழுத்தினான், மல்லாக்கபோட்டான்னு கம்ப்ள்யிண்ட் கொடுக்கிறதுதான்.

இது ஜஸ்ட் பாடி மேட்டர். இது அவ்ள சீக்கிரத்துல தீர்ந்துபோற சப்ஜெக்ட் இல்லே பாஸ்.அப்பப்போ மூக்கை நீட்டிக்கிட்டே தான் இருக்கும். இப்ப லேசா மனச தொட்டு பார்ப்போம்.

ஒவ்வொரு நெஞ்சமும் ரணமா கிடக்கு. இதுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. பூர்வ ஜன்ம நினைவுகள்,ஜீன்ஸ், பால்யம், டீன் ஏஜ் அனுபங்கள் இப்படி பலப்பல. அதை ஏதேதோ நம்பிக்கைகளாலயும் ,பொய்யாலயும் மூடி வச்சிருக்கம். இதெல்லாம் ஜஸ்ட் ஒரு தோல் சைஸுக்கு மூடிக்கிடக்கு. இதை ஏதோ ஒரு பார்வை பூவா வருடிவிட்டா புல்லரிக்குது. அதுவே ஒரு முள்ளா மாறி கீறி விட்டுருச்சுன்னா போதும் ரண களமாயிருது.

இதெல்லாம் ஏன் ஏதுக்கு எப்படி நடக்குதுன்னு அப்பாறம் பார்ப்போம்.இப்போதைக்கு உடு ..........ஜூஊஊஊஊஊஊஊஊட்.

Sunday, December 5, 2010

பெண்ணின் மறு(ரு)பக்கம் : 3

பெண்ணின் மறுபக்கம்: 3

நான் இந்த தொடர்பதிவுல் ஏதோ பெண்களை பத்தி மட்டும் எழுதிக்கிட்டிருக்கேனு நினைச்சிருந்தா ஐம் சாரி. ஆண்,பெண் என்று பிரிச்சு பேசறதையே விரும்பாதவன் நான். ஆண் பெண் எல்லாமே ஒரே இனத்தை சேர்ந்த  மிருகங்கள் தேன். இது ரெண்டுத்துக்குமிடையில அந்த காலத்து குமுதம் மாதிரி ஏதோ 6 வித்யாசமிருக்கலாம். அதுக்காக அந்த வித்யாசங்களையே பூதாகரமாக்கி, அவளை ஏதோ பூமில கால் பாவாத சமாசாரம் ரேஞ்சுக்கு விலக்கி வச்சுர்ரத என்னால சீரணிச்சுக்க முடியறதில்லை.

என்ன சொன்னேன் ? ஆங் ஆண் பெண் எல்லாமே மிருகம்தேன். மிருகம்லாம் அம்மணமா திரியுது. நாம ஆடைக்குள்ள அம்மணமா இருக்கோம் அம்புட்டுதேன். ஆளுமைய இங்கிலீஷ்ல பர்சனாலிட்டிங்கறாய்ங்க. இதுக்கான வேர்சொல் முகமூடி. ஆமாங்கண்ணே ஆளுக்கொரு முகமூடிய போட்டுக்கிட்டு வலம் வந்துட்டிருக்கோம் . இந்த முகமூடி கழண்டுக்கறதே உயிர்பயம், இயற்கை உந்துதல், காமத்தின் போதுதேன்.

பொய்யா கூட வாழ்ந்துரலாம். ஆனால் அந்த பொய்யை பொய்யினு தெரிஞ்சுக்காம  வாழ்ந்துரப்படாது. உண்மைய ஒரு குன்ஸாவாச்சும் தெரிஞ்சி வச்சிக்கிட்டா நல்லது. இல்லைன்னா அது திடீர்னு தரிசனம் கொடுக்கறச்ச மேக்கப் இல்லாத சினிமா நடிகை மாதிரி ரெம்பவே பேதியாக்கிரும்.

அட மிருகம் ஒன்னு உள்ளாற இருக்கு. அதுக்கு சமூகம், பம்பாடு, அது இதுனு ஒரு சங்கிலிய போட்டு வச்சிருக்கம். கரீட்டுதான். இல்லைன்னா தாளி கான் க்ரீட் காடு காடாவே ஆயிரும். ஆனால் அதை அப்பப்போ உலவ விடனும்பாஸ். இல்லைன்னா உள்ளாறவே கழிஞ்சு வச்சுரும். சங்கிலியை அறுத்துக்கிட்டு பாஞ்சுரும். ( தந்தில செய்தியா வந்து லேண்ட் ஆகும்)

ஹ்யூமன் பிஹேவியர் ரெண்டு விதம். சமூகத்தின் பார்வையில இருக்கிறச்ச ஒரு விதம். தனிமைல இருக்கிறச்ச ஒரு விதம்.

எவ்ரி மேன் ஈஸ் என் ஐலண்ட் ங்கறாய்ங்க. அப்பாறம் பார்த்தா மேன் ஈஸ் எ சோஷியம் அனிமல்ங்கறாய்ங்க( சமூக பிராணி) . சூட்சுமம் என்னடான்னா இவனோட/இவளோட தேவைகள் நிறைவேர்ர வரை சோஷியல் அனிமல் ,தேவைகள் நிறைவேறிட்டா ஐலண்டு (தீவு)

அந்த காலத்துல ஆற்றங்கரைக்கு போறச்ச தாய்க்குலமெல்லாம் கூட்டமாதான் போவாய்ங்க. பத்தினி,பரத்தை எல்லாம் கலந்து போவாய்ங்க.ஏன்னா தேவை. இன்னிக்கு ஃபோனை போட்டா வாட்டர் கேன் வந்து இறங்கிருது. அப்பாறம் எங்கன சோஷியல் லிவிங்.

இவ்ளோ எதுக்கு பத்து வருஷம் மின்னாடி கூட தாய்குலமெல்லாம் கூடி மேட்னி ஷோவுக்கு போவாய்ங்க. சோஷியல் லிவிங்.இன்னைக்கு?

நீங்க இயற்கையில கவனிங்க. ஆண் ,பெண் மிருகங்களோட பிஹேவியர் ஒரே மாதிரிதான் இருக்கும். ( உடலுறவுல தவிர)  ஆனால் மனித குலம் மட்டும் ஏன் இப்படி ஆயிருச்சு?

பிறப்புலருந்து ,இறப்பு வரை ஏனிந்த வித்யாசம்?

கற்காலம், சஞ்சார வாழ்வுலல்லாம் கூட ரெண்டு சாதியும் ஒரே மாதிரி தான் போயிருந்திருக்கனும்.ஸ்திரவாசம் வந்த பிறவு செக்ஸை கொஞ்சம் ஆற அமர அனுபவிக்கிற வாய்ப்பு கிடைச்ச பிறவுதான் ஆண்குலத்துக்கு தெரியவந்திருக்கும். செக்ஸுல பெண் எவ்ளோ ஸ்ட் ராங்கு.. தாங்க எவ்ளோ வீக்குன்னு.

ஆண் ஒரு தாட்டி உச்சமடைஞ்சா டீலாயிர்ரான். பெண் ஒரே ராத்திரில 23 தடவை உச்சம் பெற முடியுமாம். இங்கன ஆண் சாதி கலவரமாயிருச்சு. பெண்ணுக்கு உச்சம்ங்கற மேட்டர் சாத்தியமானாதானே 23 தாட்டின்னுட்டு அவளோட க்ளிட்டோரிசையே வெட்டிப்போட்ட இனம்லாம் சரித்திரத்துல இருந்திருக்கு.

இது ஒரு பாயிண்டுன்னா ஸ்திரவாசத்துனால ப்ரைவேட் ப்ராப்பர்ட்டி ஏற்பட்டு போச்சு. ( வேறென்ன பண்படுத்தப்பட்ட நிலம்) .இது தன்னோட வாரிசுக்கே போய் சேரனுங்கற எண்ணம் வலுப்பட்டுது.

அவளோட யோனிக்கு பூட்டுப்போட முடியாத காரணத்தால அவளுக்கே பூட்டுப்போட ஆரம்பிச்சது ஆண் சாதி. இங்கனருந்துதான் ஆண் பெண் ஆறு வித்யாசம் அறு நூறு வித்யாசமா வளர ஆரம்பிச்சது.

லேபர் வார்டுல பிரசவம் ஆன பிற்பாடு குழந்தைய தனிய கொண்டு போயிர்ராய்ங்க. அதனோட கையில ஒரு பிளாஸ்திரில பால் பாயிண்ட் பேனால செயில் கைதி மாதிரி நெம்பர் இருக்கும் தட்ஸால். பிளாஸ்திரி மாறிட்டா கோவிந்தா கோவிந்தா.

இன்னைக்கு எவனெல்லாம் தன் வாரிசுகளுக்காக ஊரை அடிச்சு உலையில போடறானோ பெண்டாட்டிய காட்டி/ கூட்டி/வச்சு  கூட மேனேஜ் பண்றானோ அந்த வாரிசு இவனோடதுதானாங்கறதுக்கு கியாரண்டியே கிடையாது.

இந்த வாரிசு மேட்டருக்காகத்தேன் தன் சக பயணியான பெண்ணையே அடிமையாக்கி / அவ என்னைக்கு புரட்சி பண்ணிருவாளோனு தொடை நடுங்கிக்கிட்டு அவ பண்ற மவுனபுரட்சி,ஒத்துழையாமை, சதி இத்யாதிக்கெல்லாம் பலியாகிக்கிட்டிருக்கான்.

மொத்தத்துல இந்த வாரிசு மேட்டர்ல ஏன் இத்தனை இன்டரஸ்டு? மனித வாழ்வை டிஃபைன் பண்ண சொன்னா நம்ம டெஃபனிஷன் இதான்.

மரணம் குறித்த அச்சத்தால் கண்டதையும் மரணத்துடன் முடிச்சு போட்டு, மரணத்தின்  நிழலா கருதி நிழல்களோட யுத்தம் பண்ணிக்கிட்டு மரணத்தை வேகமா முத்தமிடற முயற்சிதான் வாழ்க்கை.

தனிமை,ஏழ்மை, காலம்,தூரம்,முதுமை,இருட்டு இப்படி சகலத்தையும் மரணத்தோட முடிச்சு போட்டுக்கறான். இதெல்லாம் ஜஸ்ட் மரணத்தின் உருவகங்கள்தேன். அதுவும் இவன் மனசுங்கற ஹார்ட் டிஸ்க்ல புகுந்த அகந்தைங்கற வைரஸ்  பண்ற  வேலை.

மரணத்தை வெல்ல வாரிசை உருவாக்கறான். இவன் வாரிசு இவனோட மறு உருவம். மரணத்துக்கப்பாறமும் இவன் அவன் ரூபத்துல வாழ்வானு ஒரு மித். இந்த இழவுக்குத்தேன் வாழ்க்கை களத்துல இவனோட சக போராளியா இருந்து கை கொடுக்க வேண்டிய பெண்ணை அடிமையாக்கி , உள்ளுக்குள்ள அவளை பேயாக்கி இவனை இவன் அங்காடி நாயாக்கிக்கிறான்.

இவனுக்கு பயம். அவள் எங்கே தன்னை பீட் பண்ணிருவாளோனு பீதி. அதனால அவளை நாமினேஷனே போடவிடாம பண்றான். கருவுலயே கருவறுக்க பார்க்கிறான்.புறக்காரணம் எதுவா இருந்தாலும் உண்மை காரணம் இதான்.

ஒருத்தன் காளை மாட்டை இழுத்துட்டு போறான். அப்ப யாரோ கேட்கிறாய்ங்க. இந்த காட்சில  பந்தப்பட்டு இருக்கிறது யாரு மனுஷனா? காளை மாடா? மனுஷன் தேன். இவனால அதை விட முடியலை. முடியாது. இதான் பெண் விஷயத்துலயும் நடக்குது.

அவள் அடிமையா இருக்கிற மாதிரியே நடிச்சு இவனை அடிமையாவே ஆக்கிட்டா. ஆணுக்காகத்தேன் பெண் என்ற மேல்ஷேவனிசம் இருந்தாலும் ஒரு ஆணை பெண்ணுக்காகவே தயாரிக்கிறாய்ங்க.

இவன் அழுதா என்னடா பொட்டைமாதிரி அழுதுக்கிட்டு.. நாளைக்கு பொஞ்சாதி என்ன மதிப்பா? என்னடா இது பொட்டச்சி மாதிரி படம் வரைஞ்சுக்கிட்டு இவனோட இயல்பு படி இவன் வாழ முடியாம பெண்ணால பந்தப்பட்டு கிடக்கிறான்.

பெண் தன்னையே பொறியாக்கி,தன்னையே மசால் வடையாக்கி இந்த பிக்காலி மாட்டினா போதும்னு இருக்கா..

அவளை சின்ன வயசுலருந்தே தயாரிக்கிறாய்ங்க. அட கர்பத்துல இருக்கிறச்சயே ட்ரீட்மென்ட் மாறுது.( பாரேன் மொகமெல்லாம் வெளுத்துக்கிடக்கு நிச்சயமா ஆம்பள புள்ளதான்-இப்பல்லாம் லேட்டஸ்டா ஸ்கான்)  அவளுக்கு சரியான உணவு கிடையாது ( ஆம்பள புள்ள அவன் சாப்பிடட்டும்.. உனக்கென்னடி அவசரம்) , படிப்பு கிடையாது (பொட்டப்புளை எப்படியும் அடுப்பூதத்தான் போறா ..அவளுக்கு படிப்பெதுக்கு).

ஒரு பறவைக்கு ரெண்டு சிறகையும் வெட்டிட்டா அது எப்படி பறக்க ஆரம்பிக்கும். "வெளிக்காட்டப்பட்ட கோபம் மன்னிப்புக்கு வழி தேடும். உள்ளடக்கி வைக்கப்பட்ட கோபம் பழிவாங்கலுக்குத்தான் திட்டமிடும்"

பெண் பேயா மாற அடிப்படைக்காரணம் இதான். ஆண்கள் மேட்டர்ல மட்டும் என்ன வாழுதாம்? காதல்ல ஒரு பெண்  தன் தந்தையை தேடுறாளாம். ஆண் தாயை தேடுறானாம் . சைக்காலஜி சொல்லுது. எதுக்குனு நான் சொல்றேன் ( டாக்டர் பட்டமா? அட நமக்கெதுக்கு பாஸ் அதெல்லாம் ரூபாய்க்கு நாலு கிடைக்குதாமே)

அந்த ரெண்டு பேரும் தங்களோட பெற்றோர்களை தேடறது அவிகளை பழிவாங்கத்தேன். தங்களோட இளமை காலத்தை சிறையாக்கி, தங்கள் சுதந்திரத்தை தனித்தன்மையை சுட்டுப்பொசுக்கி தங்களுக்கு நகலாக்கிவிட்ட பெற்றோரை பழி வாங்கத்தேன் தேடறாய்ங்க.

அப்பாறம் எப்படிங்கண்ணா பெண் பேயா மாறாம இருப்பா? ( தொடரும்)

Saturday, December 4, 2010

பெண்ணின் மறு(ரு)பக்கம் : 2

காதலொருவனை கைப்பிடித்தே அவன் காரியம் யாவிலும் கை கொடுத்தே வாழற பொம்பளைங்கள விரல் விட்டு எண்ணிரலாம்.  மத்த பார்ட்டியெல்லாம் எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுதான். இது வால்மீகி காலத்துலயே இருந்திருக்கு. நாரதர் வால்மீகி மத்தில நடக்கிற உரையாடல்.

"ஏம்பா கொள்ளையடிக்கிறே?"
"என் குடும்பத்தை காப்பாத்த"
"இதெல்லாம் பாவமாச்சேப்பா? இந்த பாவத்துல அவிக பங்கு வாங்கிப்பாய்ங்களா?"
" நிச்சயமா?"
"ஒரு பேச்சு கேட்டுட்டு வாயேன்"

வால்மீகி போய் கேட்க "அஸ்கு புஸ்கு எங்களை காப்பாத்த வேண்டியது உன் கடமை. அதுக்கு உன்னை கொள்ளையடிக்க சொன்னோமா என்ன? உன் பாவம் உன்னோடது.. எங்களுக்கு அதுல ஏன் பங்கு"ன்னிர்ராய்ங்க. வால்மீகி ரிஷியாயிர்ராரு.

உண்மை என்னடான்னா பங்கு நிச்சயம். புருசங்காரனோட கருமத்தால வந்த காசு பணத்தை அனுபவிச்சு அனுபவிச்சு அவனோட நிழலாவே மாறிர்ரா பொஞ்சாதி. அவனோட கோபம், நோய்கள் ஏன் வே திங்கிங்கே வந்துரும்.

குடும்பத்தை நடத்த புருசங்காரன் என்ன பண்றான்? ஏது பண்றான்? அவனுக்கு என்ன வருது? அதுக்குள்ள என்ன கிடைக்கும். ஆனா நமக்கு என்னெல்லாம் கிடைக்குது? அதுக்கு என்ன பண்றான்? இப்படியே எத்தீனி நாளைக்கு நடக்கும்னு யோசிக்கிற பொஞ்சாதிங்க எத்தீனி பேரு கீறாய்ங்க? ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ஏசிபி ரெய்டுல மாட்டி சந்தி சிரிக்கிறவன் பொஞ்சாதிக்கெல்லாம் தெரியாதா இவன் லஞ்சம் வாங்கறான் என்னைக்கோ ஒரு நா ஏசிபில மாட்டுவான்னு தெரியாதா? இவள் அதை தடுக்க முயற்சி பண்ணலியா?

பண்ண மாட்டாள்.ஏன்? மன்சங்க என்னா பண்ணாலும் அவிகளை அதுக்கு
என்கரேஜ் பண்றது  ரெண்டே ரெண்டு இன்ஸ்டிங்ட் தான். ஒன்னு கொல்லுதல் ரெண்டு கொல்லப்படுதல். இதுல வீக்கர் செக்ஸெல்லாம் கொல்லப்படுதலை தேர்வு செய்யவும், ஸ்ட் ராங்கர் செக்ஸெல்லாம் கொல்லுதலை ஆப்ட் பண்ணவும் நிறைய வாய்ப்பிருக்கு.

பொம்பளை கொல்றதை செலக்ட் பண்ணிக்கிட்டா புருசன் ஊழல் வாதியாயிர்ரான். லஞ்ச பிசாசாயிர்ரான்.  வாழ்க்கையில எதுவுமே நிரந்தரமில்லை. நீங்க இன்னைக்கு கொன்னா நாளைக்கு கொல்லப்படுவிங்க.

புருசனை அது வேணம் இது வேணம்னு இவ கொல்ல ஆரம்பிச்சா அவன் பணம் பண்ண ஆரம்பிக்கிறான். பணம் இவனை என்னென்னவோ பண்ண ஆரம்பிச்சுருது. ஒரு நா குடிச்சுட்டு வருவான். இன்னொரு நா எவளையோ வச்சிருக்கானு தெரியவரும். பணம் ஒரு பவர்ஃபுல் வயாக்ரா. அது அவனுக்குள்ள ஆண்மைய பெருக்குது. அவனுக்குள்ள இருக்கிற கொல்லும் இச்சைய ஊக்குது. இவன் கொல்ல ஆரம்பிச்சுர்ரான். ஒரு நாள் இல்லே ஒரு நாள் ஏசிபி காரன் இவனை கொல்றான். இல்லைன்னா  இவனை மாதிரி ஒரு லஞ்ச பிசாசு நடத்தற ஏலச்சீட்ல பார்ட்னராகிறான். இல்லை சீட்டு போடறான். அவன் ஏசிபில மாட்டினா இவன் தலைல துண்டு.

சரி பாஸ்.. இந்த கொல்லுதல் கொல்லப்படுதல்ங்கற சக்கரத்தை நிறுத்தவே முடியாதானு கேப்பிக. கொல்ல ஆரம்பிச்சா கொல்லப்படுவது கியாரண்டி. அதைவிட கொல்லுங்கடானு விட்டுர்ரதே பெட்டர். அடுத்த டர்ன்ல கொல்ற சாய்ஸ் வரும். அப்போ போடாங்கொய்யாலனு விட்டுரனும். நியூட்ரலாயிரனும். அப்போ இந்த விஷ வளையத்துலர்ந்து வெளிய வரலாம். இல்லைன்னா நீங்க இப்ப கொல்ல அவிக நாளைக்கு கொல்லனு புனரபி மரணம் புனரபி ஜனம்னு போயிட்டே இருக்கும்.  கொன்னா கருமம் கூடும். பிறவி உண்டு. கொல்லப்பட்டா கருமம் தொலையும்.பிறவி இருக்காது. இதான் சூட்சுமம்.

இதுக்கெல்லாம் ஆல்ட்டர்னேட்டிவாதான் செக்ஸை இயற்கை படைச்சது. இதுல உள்ள சூட்சுமத்தை ஏற்கெனவே விலாவாரியா சொல்லியிருக்கேன். 7 வெர்சஸ் 23. இந்த வித்யாசத்தை ஓவர்லுக் பண்ணா பிரச்சினையே கிடையாது.  பெண்ணின் மறுபக்கம் வெளிப்பட 70 முதல் 90 சதவீதம் வரை  7 வெர்சஸ் 23.  சமாசாரம்தான் காரணம்.

தாளி இவன் தினசரி தலைவாழை இலை போட்டு அதை பரிமாற போறேன் இதை பரிமாறப்போறேன்னுட்டு பந்தா காட்டி படக்குனு பாயாசத்தை கொட்டி விருந்து ஆயிப்போச்சுன்னா என்ன ஆகும்?

உள்ளடக்கிவைக்கப்பட்ட செக்ஸ் இச்சை வன்முறையா வெடிக்குது.

நிறைய படிச்சவள், நிறைய சொத்து இருக்கிறவள், நிறைய அண்ணன், தம்பி, நிறைய மாமன் மார் இருக்கிறவள் , மாசத்துக்கு 60 அ 70 ஆயிரம் சம்பாதிக்கிறவள் "இவனால எனக்கு ஆர்காசம் தர முடியலை விவாகரத்து கொடுங்க" னு  கோர்ட்டு கதவை தட்டறாள்/ லோ க்ளாஸா இருந்தா " த.. அவன் ஆம்பளையே இல்லை அவன் கூட நான் வாழமாட்டேன்னிர்ரா"

இதுல சிக்கல் எல்லாம் எங்கன வருதுன்னா கொஞ்சமா படிச்சவ, கொஞ்சூண்டு சொத்து இருக்கிறவள், வழுக்கை வாங்கி ,பொஞ்சாதிக்கு உள்பாவாடை துவைச்சி போடற ஒரே ஒரு அண்ணனோ தம்பியோ உள்ளவள்,  ரெண்டு அஞ்சு ஆயிரம்னு சம்பாதிக்கிறவள் / சம்பாதிக்க துப்பில்லாதவள் என்ன பண்ணுவா?

அவளால அசலான மேட்டரை சொல்லவும் முடியாது , அதுக்காக வெடிச்சு கிளம்பற கோபம்,ஆத்திரம்,ஆங்காரம், வன்முறை இச்சையை அடக்கிக்கவும் முடியாது. (சில கேஸ்ல தனக்கு ஏன் இத்தனை கோபம் வருதுங்கறதுக்கான காரணமே தெரியாம இருக்கும்) என்ன பண்றது?

இவளா வீக்கர் செக்ஸ். உடல் பலமில்லை. பிறந்த வீட்டு சப்போர்ட்டும் இல்லை. பண பலமும் இல்லை. இங்கன ஆரம்பிக்குது பெண்ணின் மறு பக்கம். இவளுக்கே தெரியாம அழகா பள்ளம் வெட்டி, தென்னங்கீற்றை பரப்பி, மண்ணை தூவி, சாணி மெழுகி, செம்மண் வச்சு , விட்டா பொங்கலுக்கு போடற மாதிரி பெருசா கோலமும் போட்டு வச்சிருவாள். இதெல்லாம் எதுக்கு பண்றானு அவளுக்கே தெரியாதயும் இருக்கலாம்ங்கறதுதான் சோகம்.

அதுக்குன்னு எல்லா தாய்குலமும் இப்படித்தான்னு சொல்லிரமுடியாது.கர்ணன் சாவுக்கு எத்தனை காரணம் இருந்ததோ அத்தீனி காரணம் ஒரு பெண் பேயா மாறவும் இருக்கு. அதையெல்லாம் விவரிக்கத்தான் போறேன்.

எரியறதை பிடுங்கினாத்தான்  கொதிக்கிறது  அடங்கும். அதை விட்டுட்டு தாயி,தங்கச்சி,அக்கான்னுட்டு எத்தீடி தாட்டி ஊதினாலும் அடுத்த செகண்டு கொதிக்கத்தான் ஆரம்பிக்கும்.

பாஸ் ! ஆப்பரேஷன் இந்தியா2000 அமலாகி நேரிடை ஜன நாயகம் வந்து, ஜனாதிபதி பதவிக்கு டைரக்ட் எலக்சன் வந்து நீங்க கன்டெஸ்ட் பண்ணா ஒரு பொம்பளை கூட ஓட்டுப்போடறதில்லைன்னு மறுமொழி வரும்.

எனக்கு நம்பிக்கையிருக்கு. தாய்குலத்தோட ஹிப்பாக்ரசி, உண்மை குறித்த அச்சம், பொய் மீதான காதல் இதெல்லாம் ஃபேர் அண்ட் லவ்லி பூச்சை விட லேசானது. அதுக்குள்ளாற அவிக நம்மை விட ப்ராக்டிக்கல், நம்மை விட தில்லு துரைசானிங்க, நாளிதுவரை அவிகளை இந்த சமுதாயம் எப்படியெல்லாம் ஏமாத்தியிருக்கு, இப்பயும் எப்படியெல்லாம் ஏமாத்துதுன்னு அவிகளுக்கு தெரியும். நிச்சயமா என்னோட இந்த தொடர்பதிவுக்கு தாய்குலத்தோட ஆதரவு நிச்சயம்.

நான் தாயி,தங்கச்சின்னு வசனம்லாம் விடமாட்டேன். தாளி மனித குலத்தோட பயணமே சாவுங்கற இலக்கை நோக்கித்தான். இதுல அவிக சக பயணிகள் தட்ஸால். அவிகளை பத்தி கூட எனக்கு பெருசா அக்கறை கிடையாது ( மானசீகமா நான் ஒரு பெண் -பெண்ணை விட மென்மையானவன்) எனக்கு இந்த கிடாய்ங்க மேல தான் அக்கறை தாளி சூட்சுமம் தெரியாம , அவிகளை பேயாக்கி இவிக பலியாகி, மனிதத்தையே நலியாக்கி தூத்தேறிக்க இதை விடப்போறதில்லை.

தினசரி ஹிட்ஸ் ஜீரோவுக்கே வந்தாலும் சரி தொடரத்தான் போறேன்..
ஜனாதிபதியாறது அப்பாறம் கீட்டம் பாஸு.. இண்டிலிலயும் ,உலவுலயும் ஒரு ஓட்டை போட்டுத்தான் பாருங்களேன்.

நீங்க ஓட்டுப்போட்டா பதிவு பிரபலமாகும். பிரபலமானா இன்னம் நிறைய பேர் படிப்பாய்ங்க. மரணத்தை நோக்கிய இந்த வாழ்க்கை பயணத்துல சக பயணிகளான பெண்களை  இன்னம் நிறைய பேரு புரிஞ்சிக்கிடட்டுமே ..

பெண்களே புரிஞ்சிக்கிட்டா டபுள் ஓகே

Thursday, December 2, 2010

பெண்ணின் மறு(ரு)பக்கம்

பெண் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி - அட இயற்கையே அவள் தான் - இறை வன் தன்னை இயற்கையா வெளிப்படுத்தியிருக்கான் - இயற்கைய பற்றிய புரிதல் பெண்ணிலிருந்துதான் துவங்குது - பெண்ணை புரிஞ்சா இயற்கைய புரிஞ்சிக்கிடலாம். ஆண் ஒன்னை பெத்த பிறவுதான் தந்தை - பெண் பிறக்கும்போதே தாய்.

இந்த மாதிரி வீரவசனங்களையெல்லாம் நான் எழுதிட்டிருந்தப்ப உங்கள்ள  மஸ்தா பேரு சாமி இன்னம் எங்கயும் அடிவாங்கலை போல. சரிய்யா ஆப்பு வாங்கினா அப்பத்தேன் சத்தியம் புரியும்னு  நினைச்சிருப்பிக.

சிலர் மட்டும் பரவால்லை சாமி ஜாதகத்துல சுக்கிரன் செமர்த்தியான இடத்துல உட்கார்ந்தாப்ல கீது சாமிக்கு க்ராஸ் ஆன பொம்பளையெல்லாம் அப்படி இருந்திருப்பாய்ங்க போலனு நினைச்சிருக்கலாம்.

இது ஏதும் உண்மையில்லை. நானும் செமர்த்தியா அடி வாங்கியிருக்கேன். ஆப்பும் வாங்கியிருக்கேன். எனக்கும் பல பஜாரிங்க, காந்தா, டைப்பு பொம்பளைங்க கிராஸ் ஆகியிருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் நான் அவிகளோட பிஹேவியரை சீரியஸா எடுத்துக்கறதில்லை.

ஏன்னா அவிக வீக். பலவீனமே பாபங்களின் கங்கோத்ரிங்கறாரு விவேகானந்தர்.மேலும் அவிக அடிமைங்க. உங்க எதிர்க்க ஒரு ஆளு நாய கூட்டிட்டு வராரு. அந்த நாயி உங்களை கடிச்சுருச்சுனு வைங்க. நாய்கிட்டயா சண்டைக்கு போறிங்க. இல்லை .அந்தாளுகிட்டேதான் சண்டைக்கு போவிங்க.

அதுமாதிரி தாய்குலம் அவிக எசமானங்க கையில நாய் மாதிரி.( அப்படி சீன் போட்டுக்கிட்டே கணவனை நாயாக்கிர்ர தா.குலத்தையும் பார்த்திருக்கேண்ணா). நான் ஒரு ஆப்டிமிஸ்ட். பாசிட்டிவ் திங்கர். என்னால யாரையும் கோச்சுக்க முடியாது. ஏன் தாத்தாவ கூட ( கலைஞர்) வாழ்க்கையின் நோக்கம் பற்றி  தெரியாத்தனம்,வாழ்க்கையின் சூட்சுமம் குறித்த புரியாத்தனம், தாங்கள் கடந்து வந்த லட்சியபாதை குறித்த மறதி இப்படித்தேன் ரோசிப்பேன். அந்த மாதிரி எலிமெண்ட் எதுனா என் கிட்டே இருக்கானு செக் பண்ணிக்குவன்.

கலைஞரையே கோச்சுக்க முடியாத நான் தா.குலத்தையா கோச்சுக்க போறேன். அவிகளை செலுத்தற ஒரே சக்தி இன் செக்யூரிட்டிதேன். என்னதான் பெண் கல்வி,பெண் வேலை வாய்ப்பு, லேடீஸ் ஹாஸ்டலுன்னு காலம் மாறினாலும் பல யுகங்களா தொடர்ர ஜீன் வழி வந்த இன்செக்யூரிட்டி மாறலை.

ஸ்ட் ரீட் ஃபைட்ல கூட பாருங்க. எவன் ரெம்ப பயந்திருக்கானோ அவன் தேன் மொதல்ல கைய நீட்டுவான். அப்படி பொம்பளைக்கு ஆம்பளைய பார்த்தா பயம். அவனை செயிக்கனுங்கற எண்ணமெல்லாம் கிடையாது. ஜஸ்ட் ஒரு நாக் அவுட் கொடுத்து தாளி ..நீ ஒன்னும் புலியில்லடா.. நான் நினைச்சா நீ காலினு காட்டனும். இது எதுக்குன்னா ஒரு சுய பாதுகாப்புக்காக.

எல்லாம் இந்த ஃபிசிக்கல் வீக்னெஸ் தர்ர இம்சை. இவிக பார்க்கிற மொத ஆம்பளை அப்பங்காரன். அவனுக்கு சுக்கிரன் சரியா இருந்து அவன் பெண்டாட்டி ( இவளோட அம்மா) கொஞ்சம் போல இணக்கமா வாழ்ந்திருந்தா அவன் ஒரு ரேஞ்சுல மாறி மோல்ட் ஆகியிருப்பான்.

இவனால ராத்திரில முடியலைன்னா பகல்ல மிதிப்பான். அவள் இவன் ஈகோவை மிதிப்பாள். இதான் நடக்குது. இதை பார்க்கிற ,பார்த்தே வளர்ர அந்த பொம்பளை புள்ளைக்கு ஆம்பளைன்னாலே கிலி பிறந்துருது. அதுலயும் சில தாய்மாருங்க புருசங்காரனோட சண்டைனு  வந்துட்டா சரோஜா தேவி நாவலை விட கேவலமா பேசுவாய்ங்க.ஓரல் செக்ஸ் பத்தியெல்லாம் டீட்டெயில் கொடுப்பாய்ங்க. இதையெல்லாம் கேட்டுத்தேன் அந்த பொம்பளை புள்ள வளருது.

"தாளி மனுச ஜென்மங்க எது செய்தாலும் - அது கில்மாவாவே இருந்தாலும் - அதுக்கு அவிகளை உந்தி தள்றது கொல்லும் அ சாகும் இச்சைதான். ஸ்தூலமா பார்க்கறச்சதான் வன்முறையும் ,செக்ஸும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டும் ஒன்னுதேன்"னு  அந்த புள்ளைக்கு தெரியாதே.


இதெல்லாம் அந்த இளம் மனசுல நுரையீரல்ல பஞ்சு நூல் மாதிரி ஒட்டிக்கிது. அப்பனுக்கு டபுள் ஆக்டு  இருக்கு. ஆத்தாளுக்கும் டபுள் ஆக்ட் இருக்குது. குடும்பம் -பல்கலை கழகம் - இத்யாதி ஒரு பக்கம் ..

காலமெல்லாம் ஒனக்கு முந்தி விரிச்சு நான் இன்னா சுகம் கண்டேங்கற சரோஜாதேவித்தனமான வியாக்யானம் ஒரு பக்கம்.

பாப்பா வயசுக்கு வருது. ஒடனே அப்பன்,ஆத்தாளோட ட்ரீட் மென்ட் மாறுது. அவிகளோட சாஃப்ட் கார்னர் எக்சிபிட் ஆகுது. பாப்பா எங்கே ஸ்விட்ச் போட்டா எந்த பல்பு எரியும்னு தெரிஞ்சுக்குது. அப்பனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண ஆரம்பிக்குது.
உடலுறவுக்கு வாய்ப்பில்லாத ஆண் பெண் உறவு ரெம்ப அழகா, ஆழமா இருக்கும்..  ஆனால் அண்டர் கரெண்ட்ல உடலுறவு இச்சையும் இருக்கும். இந்த ஸ்டேஜ்ல மனைவியுடனான உறவை விட ( அங்கே உடலுறவுக்கு வாய்ப்பிருக்கு ) மகளுடனான உறவு ஃபேரா, நோபலா இருக்கு. இந்த மாதிரி ஸ்டேஜ்ல தான் ஆத்தாளுக்கும் ,பெண்ணுக்கும் சக்களத்தி சண்டைல்லாம் வரும். அது வேற மேட்டர்.

அப்பனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி பழக்கப்பட்ட பொண்ணு கண்ணாலத்துக்கப்பாறம் புருசனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண ஆரம்பிக்குது. அவனும் புது பெண்டாட்டி  மோகத்துல எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டுவான். அதுவும் அவன் டேமேஜ் பார்ட்டியா இருந்து காணாததை கண்டா சரண்டர் ஆஃப் இண்டியா.

பழக பழக பாலும் புளிக்குங்கற மாதிரி செக்ஸும் பழகிப்போயிட்டா அவன் மண்டைய குறுக்க ஆட்ட ஆரம்பிக்கிறான்.

ஏற்கெனவெ சொன்ன விதிய ஞா படுத்திக்கங்க. உடலுறவுக்கு வாய்ப்பில்லாத ஆண் பெண் உறவுதான்  ரெம்ப அழகா, ஆழமா இருக்கும்.. மத்ததெல்லாம் தேஞ்சுப்போயிரும்.

அப்பன் தன்னிச்சையா சந்தோசமா எக்ஸ்ப்ளாயிட் ஆக சம்மதிக்க, புருசங்காரன் முரண்டு பிடிக்கிறான். இங்கதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பிக்குது. ( பல கேஸ்ல புருசங்காரன் டப்ஸ் கேஸா இருந்தா தாளி நம்மனால அந்த மேட்டர்ல தான் முடியலை.. பெண்டாட்டி சொல்றதயாவது கேட்டுக்குவமேனு இருந்துர்ரான் பிரச்சினை பெருசாவறதில்லை)

சில கேஸ்ல ஒனக்கு எதுல குறை வச்சேன்.. நான் எதுக்கு உனக்கு சரண்டர் ஆகனும்னு புருசங்காரங்க ரெபல் ஆக ஆரம்பிச்சுட்டா பிரச்சினை ஆரம்பமாகுது. இதுல தாய்குலத்துக்கு தன்னிரக்கம், தனிமை உணர்வுல இருந்து , தற்கொலை உணர்வு வரை முத்த ஆரம்பிச்சுருது. சான்ஸ் கிடைச்சா புருசனை கிடைக்கலைன்னா வேலைக்காரிய,. அதுவும் இல்லைன்னா குழந்தைகளை .. அதுக்கும் வாய்ப்பில்லேன்னா கார்னர்ல நிக்கிற டீன் ஏஜ் பசங்களை இம்சை பண்ண ஆரம்பிச்சுர்ரா..

இதையெல்லாம் நான் ஏதோ கற்பனையா எழுதறேனு நினைச்சுராதிங்க தலை.. அனுபவம் அனுபவம் பேசுது.

பொம்பளைக்குள்ள ரெண்டு பொம்பளை இருக்கா. ஒருத்தி நீங்க / நானு பார்க்கிற சாதாரண சராசரி  பொம்பளை. மேனேஜருக்கு தன்னோட பீரியட் டேட்ஸ் வரை சொல்லி உசுப்பேத்துவா அந்த கிழவாடி ஏதோ பழைய ஞாபகத்துல எசகு பிசகா தட்டிட்டா போலீஸுக்கும் போறாளே  அந்த பொம்பளையத்தான் சொல்றேன்.

அவளுக்குள்ளயே இன்னொரு பொம்பளையும் இருக்கா அவள் தேன் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி - அட இயற்கையே அவள் தான்.  இவளை சராசரி பொம்பளையோட ஆழ்மனதிலிருந்து மீட்டெடுப்பது எப்படினு அடுத்தடுத்த பதிவுல பார்ப்போம்.

ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா

Thursday, April 8, 2010

"அந்த" ஐந்து நிமிடத்துக்கான பொய்கள்

அண்ணே வணக்கம்னே,
நமக்குள்ள இருக்கிற மிருகம் நம்மை சந்திக்க வந்தா எப்படியிருக்கும்னு ஒரு கவிதை, தத்துவம் , இத்யாதி கலந்த உரையாடலையும் தனிப்பதிவா போட்டிருக்கேன்.அதை படிக்க  இங்கே    அழுத்துங்க‌

  • "அந்த" ஐந்து நிமிடத்துக்கான பொய்கள்

நாற்பதில் நாய் குணம்?
ஆம்..படைப்பின் பால்
படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.
என் தந்தை அதிகப்படி
வரதட்சிணை கேட்டுஎன் தாயை
கொளுத்தியிருந்தால்?
உதவாக்கரை அரசாங்கங்களின்
பேச்சைக் கேட்டுகு.க செய்திருந்தால்?
அவனே மாவா,குட்காவுக்கு பழகி
ஆண்மை இழந்திருப்பின்?
மூன்றாவது வாரிசாக
நான் பிறந்திருக்க முடியுமா என்ன?
ஆம் ..நாற்பதில் நாய் குணம்?
ஆம்..படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

பெண்ணாய் பிறந்திருப்பின் மாதவிலக்கு உதிரத்தின்
நாற்றம் முகர்ந்து , அந்த ஐந்து நிமிடத்துக்கான
பொய்களை சீரணித்து
அவன் என்னுள் வருகையில் பூரணித்து
அன்பே பகிர்ந்து,
அன்பை இரந்து,
அது கிட்டாது பன் முறையும்,
சீதைக்கு நிலமகளாய், கியாஸ் ஸ்டவ்
சரண் தர ஒரு முறையும்
எரிந்து போயிருப்பேன்

எவன் வீட்டு கட்டிலிலோ
கசங்கி , சமையலறையில் பொருமி,
குளியலறையில் அழுது
முடிந்திருப்பேன்.
ஆணாய் பிறப்பித்து பெண்மனம் தந்து
அன்பே பகிர்ந்து , அன்பு மறுத்தால்
இரங்கும் கலை தந்த உன்னத நிலை தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

இதர சகாக்கள் போல் ஹோமோ உணர்வுகளால்
உந்தப்பட்டு அவர்களுடன் சேர்ந்து
மாங்காய் அடிக்கவும்,
நீச்சல் அடிக்கவும் போகாது
இயற்கை வகுத்திட்ட விதி வழி மதி செல்ல
மான் விழி மாதரொடு இணங்கி
உரையாட உறவாட தூண்டிய
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

ஆசன பருவத்தில் நின்றுவிடாது
மலர் கணைகள்  தொடுத்து
மலர் மஞ்சம் குறித்த கனவுகளை
காணும் தீரம் தந்த, பகிர்ந்து மகிழும்
நட்பு தந்த , சூழல் தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி. 

காம ஜுரம் தகித்த போதும்
கன்னியர் உறவில் ஊடல் எனும் பெயரில்
அவர் இட்ட நிபந்தனைகள் தமை ஏற்காதே
தன்மானம் தனை இங்கே
உயிராய் காத்திடும் உறுதி தந்த,
தலைவன் உறவு தந்த
படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

காமத்திலிருந்து கடவுளுக்காய் பயணம் செய்து
காமம் "கட" பின் அவன் உன் "வுள்"  என்று
இதய வானில் வான வில் வளைத்து
ஞான அம்பெய்திய உள்ளுணர்வு சரிதான் என்று
உறுதி செய்த ஓஷோவின் ஒரு சொல் எனை
சேரச்செய்திட்ட படைப்பின் பால்,படைப்பாளியின் பால்
பொங்குகிறது நன்றி.

ஆம் நாற்பதில் நாய்குணம்.

Saturday, October 3, 2009

செக்ஸ் ஜோக் + மனோதத்துவம்




முதலில் ஒரு ஜோக் பார்ப்போம் !
ஒரு அரசி அவளுக்கு அந்த விஷயத்தில் ரொம்ப நேரம் விளையாடக்கூடிய இளவ‌ரசனை தேர்வு செய்ய ஆசை. சுயம்வரம் ஏற்பாடானது. இளவரசர்கள் அனைவரும் நிர்வாணமாக நிற்க ,அவர்களிடையே இளவரசியும் நிர்வாணமாக நடைபோடுகிறாள். அவனவனுக்கு ஆகாசத்தை ஒட்ட‌டை அடிக்கும் எண்ணம் வந்து ஒட்டடை குச்சிகளாய் நீண்டு கிடக்க ஒருவனுடையது மட்டும் அடக்கம் ஆயிரம் பொன் தரும் என்ற எண்ணத்தில் நிலத்தை பார்த்து இருந்தது. இளவரசி அவன் அருகில் செல்ல முயன்றாள் வழுக்கி விழுந்தாள். பாவம் அந்த இளவரசன் கதை ஏற்கெனவே முடிந்துவிட்டது போலும்.

இந்த ஜோக்கில் ஆணின் துரித ஸ்கலனம் கிண்டலடிக்கப்படுகிறது. உண்மையிலேயே இது சீரியஸ் பிரச்சினைதான். பெண்ணுக்கு 23 ஆணுக்கு 7 இது உச்சவரம்பு. ஆணுறுப்பு இன்செர்ட் ஆனபின்னான அசைவுகள் குறித்த கணக்கு இது. இந்த அழகில் 99 சதம் ஆண்கள் துரித ஸ்கலித அன்பர்கள் தான்.

அதை எப்படி ஓவர்கம் செய்வதென்பதில் தான் அந்தரங்க வாழ்வு மட்டுமல்ல , மணவாழ்வும் அடங்கியுள்ளது. இந்த குறையை ஓவர்கம் செய்ய வாழ்க்கை துணையின் கூட்டுறவும் அவசியம். பெண் மேல் முறையை முயற்சி செய்யலாம். அல்லது விந்து முந்தும்போது அசைவை நிறுத்தலாம் அ பேக் டு தி பெவிலியன் மாதிரி வெளியே எடுத்தும் விடலாம். உதடு,விரல், நாக்கு ஆகியவற்றின் துணையுடன் பெண்ணுக்கு தேவையான அசைவுகளை ஈடு செய்யலாம். இடையில் ஒரு முறை ஐஸ் வாட்டரில் முக்கலாம். எதை என்பது புரியாதவர்கள் இந்த பதிவை படிக்குமத்தனை வயது அற்றவர்கள் என்று பொருள். அவர்கள் உடனே விலகவும்.


மற்றொரு ஜோக் :
ஒரு ராஜா. அவருக்கு ராணி மேல் சந்தேகம். எனவே அவள் உறுப்பில் ஒரு ப்ளேடு பொறுத்தி விட்டு வேட்டைக்கு போகிறார். திரும்பி வந்து அரண்மனையில் உள்ள ஆண்கள் அனைவரையும் நிர்வாணமாக நிற்க வைக்கிறார். எல்லாம் காலும் அரைக்காலுமாய் நிற்கிறார்கள். ஒருவனுடையது மட்டும் முழுதாக இருக்கிறது. "அடடா ராஜ விஸ்வாசி என்றால் நீதான். உன் பேர் என்ன என்றார்" அரசர். அவன் "பே பே பே " என்றான்.

இதன் பொருள் என்ன ? அவன் ராணியிடம் சுரபானம் செய்துள்ளான். (காமசூத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஓரல் செக்ஸுக்கு இப்படி ஒரு பெயர்) இது ஜோக் !

அதாவது ஆண் ஓரல் செக்ஸ் செய்து பெண் உச்சம் எய்த உதவுவது ஜோக். நாம் செக்ஸ் ஜோக்குகளை கெட்ட ஜோக் என்று ஒதுக்கி விட்டாலும் அவை தொடர்ந்து பரவிக்கொண்டே வருகின்றன. ஆனால் அவற்றின் பின்னான மனோதத்துவம்தான் மாறவில்லை. சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள், பெண் துவேஷம், ஆண் அகங்காரம் ஆகியன இவற்றிலும் பிரதிபலிக்கின்றன.

குறிப்பு:
ஆண் பெண்கள் செக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சியை பெற்று அதில் திருப்தியை காண வேண்டும். அதனால் வன்முறை எண்ணங்கள் குறையும். மேலும் காலப்போக்கில் அந்த இன்பம் தற்காலிகம் என்பதை உணர்வார்கள். பேரின்பத்துக்கு முயல்வார்கள் என்ற நல்லெண்ணத்தில் தான் இந்த மாதிரி பதிவுகளை போட்டு வருகிறேன். புரிஞ்சுக்கோங்க !