ஒரு காலகட்டத்துல சம்போக காலத்து முக்கல் முனகலையெல்லாம் சங்கீதத்துல கொண்டுவந்தாய்ங்களே அவிக அது என்னவோ தங்களோட மார்க்கெட்டிங் உத்தின்னு நினைச்சுருக்கலாம். ஆனால் சங்கீதத்தோட இலக்கே அதான். இவிக லேட்.
செக்ஸுக்கும் சங்கீதத்துக்கும் நெருக்கமான ஒற்றுமை இருக்கு.மனித உடலுக்கும் -இசைக்கருவிகளுக்கும் இடையில ஒரு ஒத்திசைவு ஒற்றுமை இருக்கு. இன்னம் சொல்லப்போனா நிறைய இசைக்கருவிகள் செக்ஸுவல் பார்ட்ஸ் போலவே இருக்கும். உடலுறவு விருப்பத்துக்கும் சங்கீத ரசனை இசைக்கருவிகளை இயக்கறதுக்கும் நிறைய தொடர்பிருக்கு. அதனாலதான் அந்த காலத்துல பெண் பார்க்க போற பார்ட்டிங்க பெண்ணை பாடச்சொல்லி, வீணை வாசிக்க சொல்லி பார்த்தாய்ங்களோ என்னவோ?
அந்த பொண்ணு வீணைய எப்படி ஹேண்டில் பண்றாளோ அப்படி கணவனை ஹேண்டில் பண்ணாள்னா அவன் அலியாவே இருந்தாலும் ஆண்மையின் சிகரமாயிருவான்.
சம்போகத்துக்கு மட்டுமில்லே சங்கீதத்துக்கும் செக்ஸ் பவர் தேவை. அது உச்சத்துல உள்ள இசை அமைப்பாளன் ஆன்மீகத்துக்கு வந்தே ஆகனும். இதெல்லாம் பக்கத்து பக்கத்து பஸ் ஸ்டாப்புங்கப்பு.
என்னங்கடா இது சித்தூர் முருகேசன் படக்குனு சித்தார் முருகேசனாயிடாருனு மலைக்காதிங்க. நான் என்ன ராமதாஸா படக்கு படக்குனு ஸ்டாண்ட் மாத்திக்கறதுக்கு.
பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேன்னுட்டு "உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்"ங்கற நம்ம சப்ஜெக்ட்லருந்து டீவியேட் ஆகாம இருக்கம்லே.
லக்னம் , இரண்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும் -கில்மா மேட்டர்ல மேற்படி பாவ காரகத்வத்தோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். அடுத்தது மூன்றாமிடம்.மூன்றாமிடம் தேன் சங்கீதத்தையும் காட்டுதுங்கண்ணா.
அரசியல்ல வேணம்னா மூன்றாவது அணி மொக்கையா இருந்திருக்கலாம். ஆனால் ஜாதகத்துல 3 ஆவது பாவமும் ரெம்ப முக்கியங்கண்ணா. மூன்றாவது இடம் இளைய சோதரஸ்தானம், தைரிய ஸ்தானம், கர்ண ஸ்தானம், ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸை சங்கீத ரசனையை காட்டற இடம்.சவுண்ட் சிஸ்டத்தை காட்டற இடம்.
இங்கே பாவ கிரகம் இருக்கனும்ங்கறது ஒரு முக்கியமான விதி. அதுசரி இங்கன சுபகிரகங்கள் இருந்தாதானே ரசனை நல்லாருக்கும்னு கேப்பிக.
நல்ல சங்கீதம் சம்போகத்துக்கு பின்னான அமைதிய தந்துருங்கண்ணா. கெட்ட சங்கீதம் சம்போகத்துக்கு தூண்டும்ங்கண்ணா..
அது சரி மூன்றாவது இடத்துல பாவகிரகங்கள் இருந்தா இன்னம் எப்படியெல்லாம் அது கில்மாவுக்கு உதவும்னு இப்ப பார்ப்போம்.
இளைய சோதரஸ்தானம்:
உங்களுக்கப்புறம் குழந்தையே பிறக்காம போகலாம். அ ஆண் குழந்தைகளே பிறக்காம போயிரலாம். (தம்பிக இருக்கமாட்டாய்ங்க - தங்கைகள் மட்டுமே இருக்க வாய்ப்பு)
ஒரு வீட்ல ரெண்டாவது குழந்தை பிறந்தப்பறம் மொதல் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு நல்லால்லாம போயிரும் அ அது அடம் பிடிக்கிறது சாஸ்தியாயிரும். இன்னாபா மேட்டருன்னா ஊட்ல உள்ள சனம்லாம் "புதிய பிரஜைக்கு" அதிக முக்கியத்துவம் தர ஆரம்பிச்சுருவாய்ங்க, மொத குழந்தைக்கு தான் புறக்கணிக்கப்படறோம்ங்கற ஃபீலிங் வந்துரும். அப்ப அது பெற்றோரோட கவனம் தன் மேல திரும்பனும்னு தவிக்கும்.
இந்த எண்ணம் மூளைக்கு போயி அங்கன ஒரு சில கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகி நிஜமாலுமே ஜுரம்,வயித்துப்போக்குனு ஆரம்பிக்கும். அப்ப பெற்றோரோட கவனம் மூத்த வாரிசு மேல திரும்பும். இது சப்கான்ஷியஸா பெரியவனோட மன அமைப்பு மேல ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திரும்.
முக்கியத்துவத்துக்காக ஏங்கறது ஒரு மன நோய். இத விசாலமான படைப்புல நம்மை சுத்தி இருக்கிற 4 பேர் மத்தில முக்கியத்துவம் கிடைச்சுட்டா போதுமா? அதனால நமக்கென்ன கொம்பா முளைச்சுரப்போவுது.
ஆனா இந்த குழந்தை முக்கியத்துவத்துக்காக ஏங்கறதோட ,அந்த எண்ணம் பலமா இருந்து ,அது அதனோட பாடி மேல ஒர்க் ஆகி நோய் வர்ர ரேஞ்சுக்கு இருந்தா போட்டிகள் நிறைஞ்ச உலகத்துல எப்படி ஓவர் கம் ஆகமுடியும்? முடியாது.
அதனாலதான் 3 ஆவது இடத்துல பாவ கிரகம் இருக்கனும்னு விதிய வச்சாய்ங்க. தங்கச்சி பாப்பான்னா பெருசா பிரச்சினை இருக்காதுங்கறது விதியை உருவாக்கினவுக எண்ணம்.
அன்னைக்கு சொசைட்டில இருந்த மேல்சேவனிசத்தால இது ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.இன்னைக்கும் அப்பர் மிடில் க்ளாஸ்/மிடில் க்ளாஸ்/லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலீஸ்ல மேல் சேவனிசம் இருக்கு. ஏழைக்குடும்பங்கள்ள, BC,SC குடும்பங்கள்ள கூட மேல் சேவனிசம் இருக்கு. "ஹும் பொட்டை குட்டியா பொறந்துவச்சிருக்கு .. நீ கொடுத்துவச்சது இவ்ளதான்"ங்கற ரேஞ்சுல கமெண்ட்ஸ் வரும்.
ஆனால் ஹை க்ளாஸ் ஃபேமிலீஸ்ல இந்த பிரச்சினை இருக்காது. அப்ப மூத்ததுக்கு இளைய சகோதரத்தின் வரவால/அது பெண் குழந்தையாவே இருந்தாலும் முக்கியத்துவம் குறையறதுக்கு வாய்ப்பிருக்கு.
ஆக மூன்றாமிடம் எந்த அளவுக்கு கெட்டா அந்த அளவுக்கு நல்லதுங்கோ.. இதனால ஃபேமிலில நீங்களே எவர் க்ரீனா இருப்பிங்க - இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் -முக்கியத்துவத்துக்கு ஏங்கறது இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்காது. இந்த என்விரான்மென்ட் உங்களை கான்ஃபிடென்டா வளர உதவும்.
கில்மாவுல முத தேவையே செல்ஃப் கான்ஃபிடன்ஸுதேன். மூன்றாவது இடத்துல வச வசனு சுபகிரகங்கள் இருந்து ,கிண்டர் கார்டன் மாதிரி உங்க கீழே நிறைய தம்பி தங்கைகள் இருந்து -அதுல யாராச்சும் மேன் ஆஃப் தி மேச் கணக்கா கொண்டாடப்பட்டா உங்க சைக்கலாஜிக்கல் செட்டப்பே நாறிப்போயிரும். இதனோட இம்பாக்ட் உங்களோட மேரீட் லைஃப், செக்ஸ் லைஃப் மேலயும் இருக்கும்.
மூன்றாம் பாவ காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தமுன்னு பார்க்கற சீக்வென்ஸ்ல இளைய சகோதரம் மேட்டரைதான் பைசல் பண்ணோம்.அடுத்தடுத்த காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கும் உள்ள தொடர்பை இப்ப பார்ப்போம்.
தைரிய ஸ்தானம்:
தைர்யே சாஹசே லக்ஷ்மீ. துணிஞ்சவனுக்கு துக்கமில்லை, துணிவே துணை,வீரன் இறப்பதே இல்லை,கோழை வாழ்வதே இல்லை - இந்த மாதிரி மேட்டர்லாம் நிறைய கேள்விப்பட்டிருப்பிங்க.
கில்மா மேட்டருக்கும் தைரியத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். பையன் டிகிரி படிச்சிருப்பான். பத்தாங்கிளாஸ் அ இண்டர் படிச்ச பெண்ணையே தேடுவான். ஏன்னா பயம்.
நாய் எல்லாரையும் கடிக்காது. எவனுக்கு நாயை பார்த்ததுமே பேதியாகி வேர்வை குபுக்குனு பொங்குதோ அவனைத்தான் கடிக்கும். ஓடற நாயை கண்டா துறத்தற நாய்க்கு இளப்பம். பல வீடுகள்ள புருசனை பெஞ்ச் மேல ஏத்தி நிக்கவைக்காத குறையா புருசங்களை குறுக்கு விசாரணை பண்ணுவாய்ங்க. இந்த விசாரணையிலயே சப்த நாடியும் ஒடுங்கிரும். இவன் எங்கன கில்மால சாதனை படைக்கிறது. காலப்போக்குல இழந்த சக்தி வைத்தியர்களை பார்க்க வேண்டியதுதேன்.
தைரியம் பத்தாத பார்ட்டிங்க செக்ஸ் தொடர்பான மன நோய்களுக்கு இலக்காக நிறைய வாய்ப்பிருக்கு. ( நிர்வாணத்தை ரகசியமா ரசிக்கிறது -குழந்தைகள் மேல செக்ஸ் பவரை பிரயோகம் பண்றது -பெண்களோட உள்ளாடைகள் திருடி அதை முகத்துல உரசி இன்பம் அனுபவிக்கிறது ) சுய இன்ப பிரியர்களா மாறிரலாம்.
பெண்ணே சதா இன்செக்யூரிட்டில -டைலம்மா - குழப்பத்துல இருக்கிற பார்ட்டி . அவளுக்கு தில்லு துரைகளைத்தான் பிடிக்கும். தொடை நடுங்கிகளை நல்ல "தோழியா" ஏத்துக்கலாமே தவிர.. காதல் கீதல் எல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
வேணம்னா ஒரு தடவை காதலிச்சு -கர்பம் அதுஇதுன்னு நாறிப்போன குட்டிங்க சூடுகண்ட பூனைக்கணக்கா "பேதி"கேஸுகளை சூஸ் பண்ணிக்கலாம்.
கர்ண ஸ்தானம்:
இங்கன சுபகிரகங்கள் இருந்தா கெட்ட ஒலிகளை கேட்கிற "பாக்கியமே" கிடைக்காது. ( ஆஃப்டர் ஆல் முத்த சத்தம் உட்பட) குழந்தைய முழு ஆண்மகனாவோ, பெண் மகளாவோ (?) மோல்ட் பண்றதுல ஒலிகளுக்கும் முக்கியபங்கிருக்குங்கோ. பாவகிரகங்கள் இருந்தா "கண்ட" சத்தங்களையும் கேட்டு கேட்டு கில்மாவுல சூப்பர் ப்ளேயரா மாறலாமே கண்டி டபுள் ட்யூட்டி பார்த்ததால நடுவயசுலயே சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆயிரும்.
ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸ்:
தெலுங்குல ஒரு பழமொழி. "திரிகி செடிந்தி ஆடதி -திரக்க செட்டாடு மகவாடு" (ஊர்)சுத்தி கெட்டா பொம்பளை, சுத்தாம கெட்டான் ஆம்பளை. ஆம்பளை மட்டுமில்லை,பொம்பளை கூட சுத்தனும் - ஒரு மனித உடல்ல தன் தினசரி உணவை தேடவே 11 கிமீ சுத்தற அளவுக்கு சக்திய வச்சிருக்காம் இயற்கை. உங்க வீட்ல ரீடிங் ரூமுக்கும், டைனிங் டேபிளுக்கு எவ்ளோ தூரம் இருக்கு தலைவா? இதுல சில பார்ட்டிங்க மேகிய வச்சுக்கிட்டு ரீடிங் ரூம்லயே கொறிச்சுர்ராய்ங்க.ஏன்யா வராது ஷுகரு.. ஏன்யா வராது ஆண்மைகுறைவு
மூன்றாமிடத்துல பாவகிரகம் இருந்தா "பாவம்" நிறைஞ்ச இடத்துக்கெல்லாம் கூட போகவேண்டிவரலாம். ஒரு வேலைக்கே நாலு தாட்டி அலைய வேண்டி வரலாம்.
இந்த பயணங்கள் திட்டமிட்டு செயல்படும் டெக்னிக்கை தரும். எதிர்பாரா திருப்பங்களை சமாளிக்கிற தந்திரத்தை தரும், உங்க அறிவை விசாலப்படுத்தும். பங்க்சுவலாக்கும், தன்னம்பிக்கைய வளர்க்கும்.
இதெல்லாம் கில்மாவுலயும் ஒர்க் அவுட் ஆகி உங்களை காமக்கலையரசனாக்கும்..
எச்சரிக்கை:
டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் ங்கற மாதிரி 3ஆமிடம் பாவகிரகங்களால ஹவுஸ் ஃபுல் ஆகியிருந்தா கச்சா முச்சான்னு பயணம் போக ஆரம்பிச்சு -இன்னபிற கிரகங்களும் ,பாவங்களும் வீக்காயிருந்து கச முசால்லாம் பண்ண ஆரம்பிச்சா எய்ட்ஸுல கொண்டு விட்டுருங்கோ.
மேலும் மனித உடலின் டெம்பரேச்சர் 98.4 டிகிரீஸ். இந்த வெப்பத்துல உயிரணுக்கள் உயிர் வாழமுடியாதுன்னுதான் விதைகளை உடலுக்கு வெளியவச்சிருக்கு இயற்கை. நீங்க கச்சா முச்சானு பயணம் போயிட்டே இருந்திங்கன்னா பாடி டெம்பரேச்சரே விதைகளுக்கும் பரவி கவுண்ட் குறைஞ்சுப்போயிரும். ஜாதகத்துல சந்திரன் வீக்காயிருந்தா நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் வரும்.