முன் கதை சுருக்கம்
என் பேரு முகேஷு வயசு22.டிகிரி முடிச்சுட்டு 'ச்சும்மா' இருந்த நேரம் அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் தன்னோட டூர் பஸ்ஸுக ரெண்டையும் பார்த்துக்க கூப்டாரு. நல்லாவே டெவலப் ஆச்சு. எனக்கு வெளி வேலைல இருக்கிற ஆர்வம் க்ளரிக்கல் வேலைல இல்லாததை பார்த்த ஓனர் மாயாவ எனக்கு உதவியா அப்பாயிண்ட் பண்ணார்.
மாயா என்னைவிட பத்து வயசு பெரியவ. குஷ்பு தனமான ஃபிசிக். ரொட்டீன் உமன் இல்லே வேலைல எமன். அவளுக்கு 4 அக்கா எல்லாரும் மேரீட். அவியளுக்கு கல்யாணம் பண்றதுக்குள்ளாற அப்பா சலிச்சு போயி செத்துப்போயிட்டாரு. மிச்சம் மீதி நிலத்தையும், எஃப்,டிக்களையும் மாயா பேருக்கு வச்சிட்டார். இதனால அக்கா புருசங்க 4 பேரும் இவளை கவுத்து சொத்து பணம் அடிச்சுரலாம்னு பார்க்க இவ டவுனுக்கு ஜூட்.
போது போறதுக்கு நம்ம டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலை. சபார்டினேட்டா வீக் எண்ட்ல மீட் பண்றதுண்டு. நேரு ஸ்ட்ரீட்ல அறையெடுத்து தங்கியிருக்கா. அறைனு சொன்னது அவ தனியா இருக்காங்கற கான்செப்ட்ல . சின்ன வீடுன்னு சொல்லலாம். ( பாக்யராஜ் படத்துல வர்ர வீடில்லங்கண்ணா). எனக்கு அம்மா 1984லயே டிக்கட்.பாலச்சந்தர் தனமான அப்பா, ரெண்டு அண்ணன் ,ஒரு தம்பி, பொம்பளையிலயே சேர்த்தியில்லாத பாட்டி. ஊர்ல நத்தம், நாடோடி,புறம்போக்கு ,ப்ளாக் டிக்கட் எல்லாத்தோடயும் டச். அப்பப்ப ரீஃபில் பண்ணிக்கிறதுக்காக பலான வீடுகள்.
ஒரு நாள் ஞா கிழமை மாயாவோட அறைக்கு போறேன். வாயில் நுரை. பக்கத்துல பூச்சி மருந்து பாட்டில். எப்படியோ ஒரு போலி டாக்டர்,அவர் மூலமா கவர்ன்மென்ட் ஹெட் நர்ஸு மூலமா காப்பாத்தி வுட்டாச்சு. என்னம்மா விசயம்னு கேட்டா பழைய காதலனாம். மாயாவோட அப்பா பார்த்த சம்பந்தம் பெண் பார்க்க வர்ரப்பல்லாம் மொட்டை கடிதாசு போட்டு கெடுக்கிறது வேலை. தங்கச்சிக்கு முடியாம இவர் பண்ணமாட்டாராம்.அதுவரை மாயா வாயாம இருக்கனுமாம். மாயா மாதிரி கேரக்டர் அவனை எப்படி டைஜஸ்ட் பண்ணிக்கும்.தங்கச்சி கல்யாணத்துக்கு செக் கிழிச்சு கொடுத்து "ஓடிப்போடா"ன்னிருக்கா.
அந்த நாய் வெளில போய் " நீ என்னை வச்சிருக்கிறதாவும் என் மேல ஆசைப்பட்டு செக் கொடுத்ததாவும் ஊரெல்லாம் சொல்லுவேன்னு" சொல்ட்டு போக மாயா தற்கொலை முயற்சி. பாபுரெட்டி ஆட்கள் துணையோட மாயா கிராமத்துக்கு போயி மேற்படி நாயை தூக்க முயற்சி. கிராமத்தாளுங்க எங்களை மரத்துல கட்டி வச்சு செமை காட். மாயா ஜீனும், கார்ட்டூன் போட்ட பஞ்சு மிட்டாய் டீ ஷர்ட் ,சம்மர் கட்டுனு என்னை இம்சிக்க நானும் ஓஞ்சு போன்னு ஈடுகொடுக்க படக்குனு முகத்தை வாரி நெஞ்சுல அணைச்சுக்கிட்டா. நான் பேசாம எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கயேன். அந்தாளும் விடோயர்தான்னேன்..அவள் உனக்கு அம்மா தானே வேணம் வாடா செல்லம்னு நெஞ்சோட அணைச்சிக்கிட்டா.
மறு நாள் ஓனர் அவர் சம்சாரத்தை மெட்ராஸ் அப்போலோ கூட்டிப்போகனும்னாரு. மாயாவை துணைக்கு கூட்டிப்போறனு சொல்ட்டு மாயாவுக்கு போன் போட்டு விவரம் சொன்னேன்."சரி வரேன்"ன்னா. ஆஃபீஸ் போய் என்ன மாயா.. நீ ரூமுக்கு போய் பேக்கிங் முடி நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னேன். " என்ன நினைச்சிருக்கே என்னப்பத்தி .. "ன்னு சீறினாள் மாயா.
அப்புறமா பார்த்தா நீ என்னை ஏன் காப்பாத்தினே மனிதாபிமானம். அது எனக்கு இருக்கா இல்லியானு சந்தேகப்பட்டுத்தானே போன் பண்ணேன் அதான் கோபம்னாள். ஷாட் கட் பண்ணா சென்னை. சொறி பார்ட்டியான என் அண்ணனோட சென்னை ஃப்ரெண்ட்ஸ் உதவியோட ஓனரம்மாவை அப்போலோல அட்மிட் பண்ணினேன். ஓனர் கொடுத்த தகவலை கேட்டு ஆஸ்பத்திரிக்கு வந்துட்ட சொந்தக்காரவுக நாங்களே பார்த்துக்கறோம்னிட்டாங்க. ஓனருக்கு ஃபோன்ல தகவல் சொல்லிட்டு அவர் சொன்னாப்ல சிக்கன் சென்டருக்கு போனோம்.
மாயாவ மாடில படுக்கச்சொல்லிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். அப்புறம் மாடிக்கு போக மாயா ஏன் லேட்டுன்னு கோச்சுக்கிட்டா. " நீ என்ன பெண்டாட்டியா?" ன்னேன். அவள் என்ன வண்டி ரூட் மாறுதுன்னா. அம்மா மேல இருக்கிற காதலால அப்பனை வெறுக்கற மன நிலையான ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் பத்தி சொன்னேன்.
"சீ சீ .. அம்மாவ போய் எவனாச்சும் காதலிப்பானா?"
"காதலிச்சுருக்கான். சரித்திரத்துல மட்டுமில்லே புராணத்துலயும் இதுக்கு உதாரணம் இருக்கு . வினாயகர் தன் தாய் பார்வதி மாதிரி பெண்ணைத்தான் கட்டனும்னு ஆற்றங்கரைல,அரச மரத்தடில உட்கார்ந்திருக்காராம்..பாவம் அவருக்கு விஷயம் தெரியாம அங்கே உட்கார்ந்திருக்காரு. ஆறு எல்லாம் சாக்கடையாகி பல காலம் ஆச்சு. குட்டிங்கல்லாம் இப்ப ஆத்துக்கே போறதில்ல..ஆனால் வினாயகர் மட்டும் அங்கேயே தங்கிட்டாரு"
"ஏய் கடவுள் மேலயே ஜோக்கா ?"
"கடவுள் வந்து தாய்ப்புலி. மனுஷங்க எல்லாம் குட்டிப்புலி. ஆனா இவிக ஆட்டு மந்தையாயிட்டதால புலி புலின்னு பயந்து சாகறாங்க.. ஆனால் நான் குட்டிப்புலி. கடவுளோட சண்டை போடுவேன், தகராறு பண்ணுவேன்,கோச்சுக்குவேன்.. ஜோக்கடிப்பேன். என் கடவுள் என் இஷ்டம்"
"சரிடா அம்பி ! நீ புலியா இருக்கலாம் நான் மட்டும் .."
"பசுவா அக்கா ? உன் சைஸுக்கு அதைத்தான் சொல்லனும்"
"த்தூ.. பொம்பளைன்னா வெறும் உடம்புதானா?"
"இல்லைதான். ஆனால் பொம்பளைங்கள்ள நிறைய பேரு தங்களை அப்படித்தான் , வெறும் உடம்பாத்தான் எக்சிபிட் பண்ணிக்கறாங்க. உடம்பை பத்தி பேசினாதான் ரசிக்கிறாங்க"
"பின்னே உன் பார்வைல பொம்பளைன்னா என்ன ?"
"ஒரு மனுஷ பிறவி. என்னாட்டம் ஒரு ஜீவன். எனக்கிருக்கிற வலி, மல,ஜல உபாதை எல்லாம் அவளுக்கும் உண்டுதானே "
' யப்பா உனக்கு இன்னா வயசு இருபத்திரெண்டா ?அறுபத்தி ரெண்டா?"
"பார்த்தயா இதான் பொம்பளை சைக்காலஜி. உங்க கணக்கு பிரகாரம் 22 வயசுல மெச்சூரிட்டியே வராது அப்படித்தானே .. வயசான பார்ட்டியா இருந்தா குண்டு தீர்ந்து போன துப்பாக்கி மாதிரி அப்படித்தானே .. எத்தனை மாமனார் மருமகளை முடிச்சிருக்கான் தெரியுமா? எத்தனை வாத்தியார் மாணவிகளை முடிச்சிருக்கான் தெரியுமா? இளமைல காமம்ங்கறது அனலைசிங்க்ல , டெசிஷன் மேக்கிங்க்ல , ஒரு டிஸ்டர்பன்ஸ்தான் இல்லைங்கலே.. அதுக்காக அறுபத்தி ரெண்டுலதான் மெச்சூரிட்டின்னா எப்படி ? என்னையே எடுத்துக்க.. அதுக்குன்னு சில பார்ட்டி இருக்கு. அங்கே போய் எல்லாத்தயும் முடிச்சுர்ரேன். ஃப்ரெஷ் மைண்டடா வெளிய வந்துர்ரன்.. என்னை இத்தனை மாசமா பார்க்கிறே.. எப்பயாச்சும்.. உன்னை ஒரு உடம்பாவோ, ஒரு பொம்பளையாவோ பார்த்திருக்கேனா?"
"அஸ்கு புஸ்கு.. ஒன்னும் பேராதுன்னு அடக்கி வாசிக்கிறயோ என்னவோ?"
" உன் கிட்டயா ? பேராதுங்கறயா .. கிழிஞ்சது போ.. பந்தயமா எண்ணி பத்து நாள்ள முடிச்சுருவன்"
"பின்னே ஏன் உன்னை ஒரு உடம்பாவோ, ஒரு பொம்பளையாவோ பார்த்திருக்கேனா?ன்னு நீட்டி முழக்கறே.."
"முதலை ஆடு மாடை கூட அப்படியே மென்னு விழுங்கிருமாம். மாமிச துணுக்குங்க ஈறு சந்துல மாட்டிக்கிட்டு நாத்தமெடுத்து வீங்கி அவதிப்படுமாம். அப்போ கரையோரமா வந்து தலைய கரை மேல வச்சு வாயை திறந்து வச்சி படுத்துக்குமாம் ....... அந்த சமயம் சின்ன பறவை ஒன்னு வந்து முதலையோட பலிடுக்குல இருக்கிற சதை துணுக்குகளையெல்லாம் கொத்தி கொத்தி தின்னுமாம்.. அந்த பறவைய விழுங்க முதலைக்கு எவ்ள நேரம் பிடிக்கும் ? ஆனா விழுங்காது.. அதே இழவுதான் உன் சங்கதியும். ஒரு ஆம்பள எல்லா பொம்பளையையும் பெட் ரூம் பார்வையே பார்த்தா அவன் பலான விஷயத்தை தொட்டுக்கூட பார்க்கலைன்னு அர்த்தம்.. அவன் கூடிய சீக்கிரம் மன நோயாளி ஆயிருவான்"
சொல்லி முடித்து சிகரட்டை எடுத்து பற்ற வைக்க தீப்பெட்டி தேட மாயா எடுத்துக்கொடுத்தாள்.. அவள் பார்வையில் பூஜ்ய பாவம்.. கீதை சொன்ன கண்ணனை பார்த்த அர்ஜுனன் மாதிரி பார்த்துக்கிட்டிருந்த மாயாவ.. " ஹோய் ! என்னா பார்வை இது ரஜினிகாந்தை ரஜினி ரசிகன் பார்த்தமாதிரி.. நான் ஒன்னும் மகானில்லே.. ப்ராக்டிக்கல் மேன்.தட்ஸால்"ன்னிட்டு சீறினேன்.
மாயா பாலகுமாரன் நாவல் கணக்கா என் கையை எடுத்து கண்ல ஒத்திக்கிட்டு "முகேஷ் ! ரியலி யுவார் க்ரேட். 22 வயசுல இப்படி ஒரு கோணத்துல யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்னா .. "
" அறுபத்திரெண்டுல கபாலம் வெடிச்சு கதி மோட்சம் தாங்கறியா.. யம்மாடி .. என் லாப்ல நான் தான் தவளை, நான் தான் குரங்கு என் ஆராய்ச்சிகளோட இடைக்கால முடிவுதான் இதெல்லாம்.. ஆஃப்தி ரிக்கார்டுன்னு வச்சுக்கயேன்"
அதுவரை நான் சேரிலும் அவள் கட்டிலிலும் உட்கார்ந்திருந்தோம். திடீர் என்று "முகேஷ்! இங்கே வாயேன் இங்க வந்து உட்காரு"ன்னிட்டு கைய பிடிச்சு இழுத்தா. நான் கேலியா " என்னம்மா கண்ணு பத்து நாள்ள முடிச்சுர்ரதா பந்தயம் போட்டது நான் .. உனக்கென்ன அவசரம்"னேன்.
"ஷிட்.. வாடான்னா "ன்னிட்டு ஒரு இழுப்பு இழுத்தாளா .. நான் ஏதோ அசால்ட்டா தம் போட்டுட்டிருந்ததால ( நம்ம பாடி வேற காட்பாடியாச்சா) கட்டில்ல போய் விழுந்தேன். "தத்.. சரியான தக்கை நீ.. ஒரு இழுப்புக்கேவா இப்படி விழறது.. சரி ஒழியட்டும் எந்திரிச்சு உட்கார்"ன்னாள். எந்திரிச்சு உட்கார்ந்தேன்.
"என் தலை மேல கைய வை"ன்னா மாயா.. எனக்கு ஒன்னுமே புரியலை. ஒரு கைல சிகரட்டை வச்சுக்கிட்டு மாயா தலைமேல கைய வச்சேன். அந்த கைய எடுத்து அப்படியே தன் முகத்துல வச்சிக்கிட்டா. என் கை கண்ணீரால நனைஞ்சது..
"சனியனே ..நான் என்ன பண்ணேன்.. ஏன் அழறே இப்போ"
"என் அப்பா ஞா வந்துருச்சு.. ஒரு நாள் என்னை பெண் பார்க்க வரதா இருந்தவங்க சொன்ன நேரத்துக்கு வரலை. ஏதோ கன்னா பின்னானு லெட்டர் வந்ததாவும் அதனால வரலைன்னும் தகவல் வந்தது. நான் புழக்கடைல துணி துவைக்கிற கல் மேல உட்கார்ந்து அழுதுக்கிட்டிருந்தேன். என் அப்பா வந்து என் தலை மேல கைய வச்சு யம்மாடி .. அழுவாதடா.. நான் செத்து பிறந்து வரதுக்குள்ள நீ கிழவியாயிருவ..அதனால நான் ஒன்னு பண்றேன் .. உனக்கு முன்னாடி நான் செத்து எவனாச்சும் நல்ல பையனா பார்த்து அவன் மனசுல பூந்து உன்னை கல்யாணம் பண்ணி காலமெல்லாம் கண் கலங்காம வச்சு காப்பத்தறாப்ல செய்றேன்னார்.. என் அப்பாதான் உன் மனசுல பூந்து இதெல்லாம் பேசினாரோனு தோணுச்சு.. அதான் "
"மாயா .. உனக்கொரு ரகசியத்தை சொல்லவா.. பிற குட்டிகளோட பழகறப்போ அதுகல்லாம் ஏதோ கவுன் போட்ட அரை டிக்கட் மாதிரி தோனுமே தவிர ஒரு இழவு ஃபீலிங்கும் வராது. என்னமோ நான் கிழடா மாறிட்ட மாதிரி டீலாயிருவன். ஏதோ நீ மதர்லி லுக்கிங்கோட இருக்கறதால என்னை நான் யூத்தா ஃபீல் பண்ண முடிஞ்சது.. இப்ப என்னடான்னா நீயும் என்னை கிழவாடியாக்கிட்டே"
"ஏய் பெண் குழந்தை பிறக்கும் போதே தாயா பிறக்குது. மெஸ்யூர்ட் மேல் தான் தந்தையா மாறமுடியும்னு நீதானே சொன்னே .. நீ பிஞ்சுல பழுத்த கேஸு உன்னை எந்த பொண்ணும் தந்தையாதான் ஃபீல் பண்ணுவா?"
"அப்படிங்கறே.. பின்னே பி.ஆர் எதுக்கு உன்னை முத்தல் கோழின்னாரு?"
"என்.........ன முத்தல் கோழியா? நாளைக்கு வச்சிக்கறேன்.."
"யம்மாடி ஆல்ரெடி அவரு மச்சினிய வச்சிருக்காரு. சித்தூர்ல ஒரு டூ டவுன் இருக்கு .. அவரை ஏன் வச்சிக்கறே.. வேணம்னா என்னை வச்சிக்க"
உடனே மாயா என் பின்னங்கழுத்தை ஒரு பிடி பிடிச்சு முகத்தை நிமிர்த்தி பார்த்துட்டு "ப்ச்.. ஒரு பிடிக்கு தாங்கமாட்டே .. உன்னை வச்சிக்கிட்டு என்ன பண்றது .. அதிலயும் சம்மர் கட் சூப்பர்மா .. கான்வென்ட்ல கூட கேள்வி கேட்காம சேர்த்துப்பாங்க" ன்னிட்டு அப்படியே கீழே தள்ளினாள். சிகரட் எகிறி கீழே விழ .. நான் எழுந்து தரையில் அதை தேடிக்கிட்டே " ராட்சசி.. ஆனை குட்டி.. இட்லி பாப்பா" ன்னேன், அவ்ளதான் என்னை இழுத்து கட்டில்ல தள்ளி மேலே ஏறி உட்கார்ந்து மரியாதையா நிறுத்து நிறுத்தலே ..." ன்னிட்டு நாக்கை மடிச்சு முறைச்சு பார்த்தா.. எனக்கு லேசா மூச்சிரைச்சது. இருந்தாலும் தம் கட்டி " பம்ப்ளிமாசு, பன்னி , பிந்து கோசு" ன்னு வரிசையா கத்தினேன். அப்படியே என் மேல குனிஞ்சு என் உதட்டை பிடிச்சு நறுக்குனு ஒரு கடி கடிச்சுட்டு என்னையே பார்த்தாள்.
நான் வலியை பொறுத்துக்கிட்டு " மாயா உனக்கொன்னு சொல்லவா? ஆணும் பெண்ணும் சேர்ந்து ஸ்தூலமா எதை பண்ணாலும் சூட்சுமத்துல பலானதைத்தான் பண்றாங்களாம்" னேன்.
சட்டுனு பக்கவாட்டில உருண்டு " பிசாசே..உன்னை... நாளைக்கு வச்சிக்கிறேன்.. இப்ப தூங்கு" ன்னிட்டு பாத்ரூம் போய் வந்து போர்த்திக்கிட்டு திரும்பி படுத்துக்கிட்டா. எனக்கு தூக்கம் பிடிக்கலை. இருந்தாலும் நைட் லேம்புக்கான ஸ்விட்சை தேடி போட்டுட்டு யூப் லைட்ட ஆஃப் பண்ணிட்டு வந்து படுத்தேன். நீல நிற லேம்ப் அடக்கமான வெளிச்சத்தை சிந்த மாயா நத்தை மாதிரி சுருண்டு படுத்துக்கிட்டிருக்கா. ரெண்டு கையும் கழுத்தை சுத்தியிருக்க ,கனமான போர்வையால கூட அவளோட உடம்பின் வரி வடிவத்தை மழுப்ப முடியலை. ஏனோ அவள் முகத்தை பார்க்கனும் போல இருந்தது. எந்திரிச்சு வந்து எதிர்ல இருந்த சேர்ல உட்கார்ந்தேன். அவள் முகத்துல இந்த உலகத்தின் மீதான பரிபூரண நம்பிக்கை தெரிஞ்சது. தலை முடியோட அடர்த்தி குறைவா இருந்தாலும் அவள் முகத்துக்கு போதுமானதாவே இருந்தது. அந்த சின்ன கண்களுக்குள்ளே கருவிழிகள் வேகமா அசையறது தெரிஞ்சது . ஏதோ கனவு போல. லேசான சிணுங்கல். கண்கள்ள கண்ணீர். பதை பதைச்சு போய் அவள் நெத்தில அலைபாஞ்சுகிட்டிருந்த தலை முடிய ஒதுக்கி விட்டு அவள் உச்சந்தலைல கைய வச்சேன்
" தெய்வமே .. நீ இருக்கயோ இல்லியோ .. ஆனா இருந்தா நல்லாருக்கும்னு இந்த செகண்ட் தோணுது. இவளை எனக்கு அறிமுகப்படுத்தினதுக்கு..ஜஸ்ட் ஒரு தேங்க்ஸ் சொல்ல. நீ இருந்தா நல்லாருக்கும்னு தோணுது இவளுக்கு இவளை புரிஞ்சிக்கிட்டு இவளையும் ஒரு சராசரி பொம்பளையாக்கிராத ஒரு நல்ல கணவனை கொடுன்னு கேட்க" என் மனசுல நன்றியுணர்ச்சியும், வர்ணனாதீதமான உணர்வுகளும் சினிமா விட்ட சனம் போல கிளம்ப இன்னொரு சிகரட்டை எடுத்து பத்த வச்சேன்.
தொண்டை வறள ஃப்ரிட்ஜை திறந்தேன். தண்ணி பாட்டிலை எடுத்து குடிச்சேன்.. தண்ணி என் தொண்டைக்குள்ள இறங்கற சத்தம் கேட்டோ என்னவோ " ம் ம் எனக்கும்"ங்கற முனகல் கேட்டது மாயாவிடமிருந்து. பாட்டிலை வாங்கி படுத்துக்கிட்டே குடிக்க முயற்சி பண்ண நான் அவள் பக்கத்துல உட்கார்ந்து அவள் பின் கழுத்தை தாங்கி தூக்கிப்பிடிச்சேன் குடிச்சுட்டு பாட்டிலை நீட்டினாள்.
ஹை வேல கூட ட்ராஃபிக் குறைஞ்சிருந்தது. மணி என்ன தெரியலை. மறு நாள் சீக்கிரம் கிளம்பனும்ங்கறது ஞா வரவே பாட்டிலை ஃப்ரிட்ஜ்ல வச்சுட்டு வந்து பேண்டை கழட்டி ஹேங்கர்ல மாட்டிட்டு பேக்ல இருந்து லுங்கிய எடுத்து கட்டிட்டு படுத்தேன். கண்ணை மூடினேன். கொஞ்ச நேரம் ரோட் ரோடா தெரிஞ்சது. பஸ்ஸும் ,லாரியும்,காருமா கண்ணுக்குள்ள தெரிய.. எப்ப தூங்கினேன்னு தெரியாது.
மாயா "ஏய் முகேஷ்..முகேஷ்" ன்னு உசுப்பிக்கிட்டிருந்தா. எந்திரிச்சு மலங்க மலங்க விழிக்க .." ச்சீ எந்திரி சீக்கிரம் உன் அண்ணனோட ஃப்ரெண்ட்ஸ் அசிங்கமா நினைக்க போறாங்க" ன்னா படபடப்பா." த பார்ரா பிடிவாதமா ஜோடியா தான் தங்குவேன்னு அடம் பிடிச்சது அசிங்கமில்லே ஒரே ரூம்ல ஒரே படுக்கைல படுத்துக்கிட்டது அசிங்கமில்லே . நான் எந்திரிக்க லேட்டானா அசிங்கமா ? சரி சரி நீ கீழே போ பதினைஞ்சு நிமிஷத்துல நான் ரெடியாயிர்ரன்"னேன். சரி சரி சீக்கிரம் வா. வரப்ப என் பேகையும் எடுத்துட்டு வா" ன்னிட்டு மாயா கீழே போனா. குளிச்சு ரெடியாயி கீழே வந்தா மாயா கேஷ் கவுண்டர்ல உட்கார்ந்து பணம் வாங்கிக்கிட்டிருந்தா. "ஏய் எங்க அவங்க"ன்னேன். உள்ள டிஃபன் சாப்பிடறாங்க. அசிங்கமா இங்கே வச்சு சாப்பிடறேன்னாங்க நான் தான் நான் பார்த்துக்கறேன்னு அனுப்பினேன்"னா
பி.ஆருக்கும் ஸ்ரீதர் சாருக்கும் சொல்லிக்கிட்டு காரை கிளப்பி அப்போலோ போனோம். வார்ட்ல நர்ஸு "என்னங்க இது பேஷண்டோட யாருமே இல்லாம போயிட்டிங்க"ன்னிட்டு எரிஞ்சு விழுந்தா. நொந்துட்டன்.
ஓனரம்மாவ விசாரிச்சா " எல்லாம் பன்னாடைங்க... பேரம் பேசுதுங்க. நாலு நாள் கூட இருந்து பார்த்துக்கிட்டா அவள் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணனுமாம். இன்னொருத்தி பொண்ணை என் புள்ளைக்கு கட்டனுமாம்.. தத் போங்கடின்னிட்டன்"ன்னாங்க. எனக்கு ஒன்னுமே புரியலை. மாயா, "இதுல யோசிக்க என்ன இருக்கு. கமிட் ஆகிதான் வந்தோம். இதுவும் நல்லதுக்குதான். நான் இருந்து பார்த்துக்கறேன்.பொம்பளைக்கு பொம்பளதான் கரெக்டு"ங்கறா. சரின்னு சிக்கன் சென்டர் போன் நெம்பரை கொடுத்துட்டு "ஏய் மனசுல என்னை நல்லா திட்டிக்கப்போற அப்படித்தானே" ன்னேன். " நீ இப்படி இன்னும் கொஞ்ச நேரம் பேசினா
மனசுல இல்லே வெளியவே திட்டுவேன்.. முதல்ல ஊரை போய் சேரு பாவம் ஓனர் டென்ஷன்ல இருப்பாரு. நாலு நாள் தானே. எப்படியும் எங்களை பிக்கப் பண்ண நீதானே வரனும்"ன்னிட்டு துரத்தாத குறையா அனுப்பிட்டா. நான் கவுண்டர்லயும் , அட்மினிஸ்ட்ரேஷன்லயும் எம்.எல்.ஏ ஆளுங்க அது இதுனு பீலா விட்டு, பி.ஆர்,ஸ்ரீதர் கிட்டே போன்ல பேசி விவரம் சொல்லி முடிஞ்சா ஒரு நடை பார்த்துக்கங்கனு ரிக்வெஸ்ட் பண்ணிக்கிட்டு சித்தூர் வந்தேன்.
நாலு நாள் போறது நாலு வருஷம் மாதிரி இருந்தது. மனசுல மாயா மாயானு ஒரு ட்ராக் ஓடிக்கிட்டே இருக்கு. ஓனரே நக்கலடிச்சுட்டாரு ' என்னடா பெண்டாட்டி செத்தவன் மாதிரி"ன்னு. அஞ்சாவது நாள் மெட் ராஸ்ல இருந்து போன். ஓனர் "நானும் வரேண்டா"ன்னு கிளம்பிட்டாரு. மாயாவ முகத்துக்கு நேரா பார்க்க கூட முடியாத நிலைமை.. எப்படியோ ஊர் வந்து சேர்ந்தோம்.
மாயா இல்லாததால டச் விட்டு போனதால க்ளரிக்கல் ஒர்க் எல்லாம் அரை குறையாவே நின்னிருக்க அவள் திட்டிக்கிட்டே எல்லாத்தயும் ஃபினிஷ் பண்ணா. சரி ஈவ்னிங்காவது மாயாவோட ஸ்பெண்ட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டிருந்தா என் அப்பா வந்தார். சின்னப்பசங்களுக்கு ச்சூ காட்டற மாதிரி" ஏம்மா மாயா ..பஜார்ல எதுனா வேலையிருந்தா பார்த்துக்கிட்டு வா. பொட்டு,ஸ்னோ, பவுடர் எதுனா வாங்க வேண்டியதிருந்தா வாங்கிக்க நான் இவன் கிட்டே தனியா பேசனும்"னாரு.
எனக்கு வயித்த கலக்குது. என் அப்பா ஊர்ல இருக்கிற அப்பனுங்க மாதிரி கிடையாது. தன் வரை உதாரண புருஷரா இருந்தாலும் 'தண்ணி போடறியா தனியா போடு. பொம்பளை கிட்டே போறியா தனியா போ ' எதுக்கு சொல்றேன்னு யோசனை பண்ணு உனக்கே புரியும்.. நீ அறிவாளி உனக்கு விளக்கமா சொல்ல தேவையில்லேம்பார். ராத்திரில 9 க்கெல்லாம் வீடு வந்து சேருன்னு சொல்லிட்டிருந்தார். நானும் 9மணிக்கு வீட்டுக்கு போற மாதிரி போயி மாடியில இருக்கிற என் ரூம்ல இருந்து வெளியேறி பால்கனி வந்து பால்கனி சன் ஷேட்ல இறங்கி குதிச்சு ஜூட் விடறது வழக்கம். பாதி ராத்திரி பன்னெண்டுக்கோ ரெண்டுக்கோ மறுபடி அதே வழில ரூம்ல போய் செட்டிலாயிருவன். ஒரு நாள் பீட் கான்ஸ்டபிள் பார்த்துட்டு போட்டுக்கொடுத்துர" யப்பா.. நீ எந்த நேரத்துக்கு வேணம்னா வா , பெல் அடி! நான் கதவு திறக்கறேன். ஆனா திருடனுக்கு வழி காட்ற வேலை மட்டும் வேணா. பீட் கான்ஸ்டபிள் எனக்கு தெரிஞ்சவங்கறதால சரியா போச்சு. புது ஆளா இருந்திருந்தா.. சந்தேக கேஸ்ல உன்னை கூட்டிப்போயிட்டிருந்தா மறு நாள் எஸ்.ஐ ஸ்டேஷனுக்கு வர வரைக்கும் லாக்கப்ல கிடந்திருப்பே..'ன்னவருதான்.
இருந்தாலும் ஞம ஞமங்குது.தனக்கே உரிய ஸ்டைல்ல தன் ஸ்டீல் பொடி டப்பிய எடுத்து ரெண்டு தட்டு தட்டி ஒரு சிட்டிகைய எடுத்து ஹீரோ அறிமுக காட்சில துப்பாக்கில புல்லெட் போடற ரேஞ்சுல மூக்குல திணிச்சுக்கிட்டு கர்சீஃபா கயிறாக்கி ஒரு தேய் தேய்ச்சுக்கிட்டு " ஏண்டா முகேஷூ.. இந்த மாயாவ பத்தி என்ன நினைக்கிறே?" ன்னாரு.
க்ளைமேக்ஸ் காட்சில டைம்பாம்ல முள் நகருமே அதுமாதிரி முதுகுதண்டுல பரபரப்பு ஒட்டிக்கிச்சி. எங்கப்பா ஊர்ல இருக்கிற அப்பனுங்க மாதிரி இல்லேதான் அதுக்காக.. ஷைனி ஆப்ரஹாம் கணக்கா பிச்சிக்கிட்டு ஓடற எண்ண்னகளை 144 போட்டு நிறுத்திட்டு
"மொட்டையா கேட்டா எப்படி ..வேலைக்கு சேர்க்க போறியா.. உன் ஃப்ரெண்டு பசங்களுக்கு யாருக்குன்னா அலையன்ஸ் செட் பண்ண போறியா எந்த கோணத்துல கேட்கிறேன்னு தெரியாம நான் என்னத்த சொல்றது"
"ஆமாம் எங்கப்பன் டாட்டா கோடி கோடியா சொத்து சேர்த்து பதினாறு கம்பெனி வச்சிருக்கான்..அதுல வேலை தரப்போறேன்.. உன் அண்ணனுங்களுக்கு அல்லையன்ஸ் பார்த்து முடிக்கவே வக்கில்லை.இதுல ஃப்ரெண்ட்ஸ் பசங்களுக்கு அலையன்ஸாம் அதெல்லாம் ஒன்னுமில்லடா..பாவம் தனியா ரூம்ல தங்கியிருக்குதாமே.. உங்க ஓனர் தான் சொன்னான் (தனக்கு ஃப்ரெண்டுதானே) "
"ஆமாம்.. அதுக்கென்ன இப்போ ?'
"அதுக்கில்லடா ..பாவம் உங்க ஓனர் சம்சாரம் ஆப்பரேசனுக்காக அட்மிட் ஆனப்ப இந்த பொண்ணுதான் 4 நாள் பக்கத்துல இருந்து பார்த்துக்கிச்சாம்"
"ஆமாம்பா.. பார்த்துக்கிட்டா இப்ப என்னாங்கறே நீ ச்சும்மா சஸ்பென்ஸ் வச்சு கடுப்பேத்தாதே.."
"தத் இந்த அவசரம் தாண்டா உங்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்.. பொண்ணு நல்ல மாதிரியா தெரியுது. எங்கயோ ரூம் எடுத்துக்கிட்டு எதுக்கு தனியா தங்கி அவதிபடனும். 19 X 64 =1216 ஸ்கொயர் ஃபீட்ல கட்ன அவ்ளோ பெரிய வீட்ல இருக்கிறது நீ , உன் சின்ன அண்ணன்,தம்பி,பாட்டி நானு மொத்தம் 4 பேர்தான். பாட்டி உள்பட எல்லாரும் ஹால்லதான் படுக்கறோம். உனக்கு மாடில தனி ரூம் கொடுத்திருக்கு. தெரு ரூம் காலியாத்தானே இருக்கு. பெரியவனுக்கு கல்யாணமானா அதுவும் அந்த கம்னாட்டி தனியா போறேன் அது இதுன்னு கிளம்பாம இருந்தா அப்போ அவனுக்கு,அவன் பெண்டாட்டிக்கு கொடுத்தாகனும் .பேசாம இந்த பொண்ணை நம்ம வீட்டுக்கே வந்துரச்சொல்லேன்"
'வாடகைக்கா?"
"தூத்தேறி.. என்னை என்ன அல்பமுன்னு நினைச்சியா..பத்து பைசா வந்தா கூட அது என் கஷ்டமா ,உழைப்பா இருக்கனும்னு நினைச்சி வாழ்ந்தவன் நானு.. என்னடா பெரிய வாடகை வந்துரும்.. ஒரு ஐ நூறு ரூபா வந்துருமா.. ஊர்ல இருக்கிற அப்பன் எல்லாம் ஆண்குழந்தை வேணம்னு கோவில் கோவிலா சுத்தினா பெண் குழந்தை வேணம்னு ராத்திரி பகல் தெய்வத்தை வேண்டினவன்டா நானு. என்னமோ பொண்ணு அடக்கமா இருக்கே.. உன் ஓனரம்மா ஆகா ஓகோன்னு சொல்ட்டாளாம், உன் ஓனர் அந்த பொண்ணுக்கு எதுனா செய்யனும் எதுனா செய்யனும்னு ஒரே நச்சரிப்பு. நான் தான் அடக்கி வச்சேன். பார்த்துரா நல்லா இருக்கப்பட்ட குடும்பம்ங்கறே தப்பா நினைச்சிக்கபோவுதுனு ப்ரேக் போட்டு வச்சிருக்கேன். சரி உன் அபிப்ராயம் என்ன சொல்லு நம்ம வீட்டுக்கே வந்துர சொல்லலாமா?"
எனக்கு ஒரு கூடை பூவை தலையில் கவிழ்த்தாப்பல ஆயிருச்சு, இருந்தாலும் லேசா சம்சயம். " யப்பா..இதுல உன் சதியெல்லாம் எதுவுமில்லியே அவள் தனியா ரூம்ல இருக்கிறதால தானே இந்த நாயி பாதிராத்திரி வரை கூத்தடிச்சுட்டு வருது.. வீட்டோட வச்சிட்டா என்னத்த கிழிக்க முடியும்னு ஸ்கெட்ச் போட்டயா?"ன்னு கேட்டேன். " அட போடாங்.. தான் திருடி பிறனை நம்பான், கூத்தி கள்ளன் பெண்டாட்டிய நம்பான்னு ஒரு பழமொழியிருக்கு. உன்னை மாதிரி என்னை நினைச்சியா ..நீ என்ன முட்டாளா.. உன்னை சொல்லி திருத்த முடியுமா? எல்லே அடிச்சி திருத்த நீ என்ன சின்னப்பையனா..உப்பு தின்னா தண்ணி குடிக்கப்போறே" ன்னாரு அப்பா.
"யப்பா நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை .. ஏதோ பேசிக்கிட்டிருப்போம் அவ்ளதான்"
" நீ பேசினா எனக்கின்னா? படுத்துக்கிட்டா எனக்கின்னா? விந்து விட்டான் நொந்து கெட்டான்.. இந்திரியம் தீர்ந்து விட்டா சுந்தரியும் பேய் போலே. டேய்..உடம்பு கொஞ்ச நாள் தான் பேசும்.. உடம்போட இரைச்சல்ல மனசு,புத்தி சொல்றது உறைக்காது. ஆனால் உன் மேல எனக்கு நம்பிக்கையிருக்குடா. நீ என்னதான் கேப்மாரி ஆட்டம் போட்டாலும் உன் கிட்டே உண்மையிருக்கு. சரி சரி அந்த மாயா கிட்டே நீ பேசறியா? நான் பேசட்டா? "
"அய்யயோ நீ வேணாம்பா நீ எதாச்சும் வெகண்டையா பேசிரப்போறே.. நானே பேசிட்டு சொல்றேன்"
அப்பா கிளம்பி போக மாயா வந்தாள்
"என்ன டாப்பிக் என்னை பத்திதானா?"
"எக்ஸாக்ட்லி.. உன்னை வேலைய விட்டு தூக்கப்போறாராம்.ஓனர் அதுக்கு ஒத்துக்கலன்னா நான் வேலைய விட்டு நின்னுரனுமாம் .. நீ என்னை கெடுக்கிறியாம். வயசுல மூத்த பொண்ணை வச்சிக்கிட்டா சீக்கிரம் கிழவனாயிருவனாம் .. ஆயுசு குறைஞ்சுருமாம்"
"யேய் ..பொய் தானே சொல்றே.. உங்கப்பாவ பார்த்தா நல்ல மாதிரியா தெரியுது. இது மாதிரி பாக்யராஜ் சமாச்சாரம்லாம் அவர் பேசியிருக்கமாட்டார்"
"எனக்கு தெரியாம கேட்கிறேன்.. யார் தான் உன் பார்வைல கெட்டவன்?"
"சூழ் நிலை"
"தபார்ரா..அப்ப சூழ் நிலைதான் வில்லனுன்றே?"
"ஆமாடா கண்ணா... நீ ஏதோ சில்லறை கிராக்கிங்க கிட்ட போய் கூத்தடிச்சுட்டு உன் அவஸ்தையெல்லாம் ஒழிச்சுட்டு வந்துர்ர.. எனக்கா என் அக்காவுங்க கல்யாணம் கட்டிக்கிட்டு படற நரகவேதனைய பார்த்து பார்த்து வெறுத்து போய் உடம்பெல்லாம் கூம்பி போச்சு.. இதுவே என் அக்காங்க நல்லபடியா வாழ்ந்துக்கிட்டிருந்து எனக்கும் அப்படி ஒரு சந்தோசம் கிடைச்சா எப்படி இருக்கும்னு நான் கனவு கண்டுகிட்டிருந்து, உனக்கு மேற்படி டெக்காமெரான் எபிசோடெல்லாம் இல்லாம இருந்திருந்தா ப்ஞ்சு நெருப்பு ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகியிருக்கும்லியா.. அப்போ நீ கெட்டவனா ? நான் கெட்டவளா? இல்லே சூழ் நிலைதான் காரணம்"
"ஆத்தாடி.. நீ இதே மாதிரி தத்துவம்லாம் விட ஆரம்பிச்சா உன்னை டெய்லி சீரியல்ல கொண்டாந்துருவாங்க .. நீ கொஞ்சம் அடங்கு..அர்ஜெண்டா நீ உன் ரூமை காலி பண்னனுமாம் எங்கப்பன் உத்தரவு.."
"ஏன் வாஸ்து சரியில்லயாமா?"
"இல்லடி செல்லம் .. நம்ம ஓனர் அதான் எங்கப்பன் தோஸ்து உன்னை பத்தி மஸ்தா விட்டிருக்காரு..அதனால நீ எங்க வீட்டோட வந்துரனுமாம்"
"உன் மனைவியாவா? உங்கப்பனுக்கு ரெண்டாவது மனைவியாவா?"
"ஆசைய பார்ரா ஆசை தோசை அப்பளம் வடை..எனக்கு அக்காவா .. என் அப்பனுக்கு மூத்த பொண்ணா எப்படி வந்துர்ரயா"
மாயாவின் கண்களில் கண்ணீர்.
"தபாரு என்ன நீ சதா சர்வ காலம் டிவி சீரியல் மாதிரி அழுதுக்கிட்டு."
"இல்லடா மனுஷ ஜாதி பாசத்துக்கு எவ்ள ஏங்கி போயிருக்கு பாருன்னு நினைச்சேன். ஜஸ்ட் நாலு நாள் அந்த கிழவிய எங்கம்மாவா நெனைச்சிக்கிட்டு சர்வ் பண்ணதுக்கே அந்த கிழவி ஓனர்கிட்டே புலம்ப அவரு உங்கப்பா கிட்டே புலம்ப ஏண்டா மனுஷங்க இப்படி பாசப்பறவைகளா இருக்காங்க"
"அப்படி சொல்றீ என் ராசாத்தின்னானாம். கிழிஞ்சது போ .. தெலுங்கு சேனல்ல க்ரைம் டைம் பார்க்கறதில்லயா..அப்பனை,புள்ள,புள்ளய அப்பன், பெண்டாட்டிய புருஷன்,புருஷனை பெண்டாட்டி,அண்ணனை தம்பி,தம்பிய அண்ணன் ஆயிரம் வெரைட்டில கொலை பண்ணியிருக்கான்... பாசப்பறவைகளாம் பாசப்பறவைகள்..இப்படியே பிரமைல வாழ்ந்துக்கிட்டிருந்தே எவனாச்சும் தூக்கிட்டு போய் துபாய்ல வித்துருவான்"
"ஷிட்.. ஏண்டா உனக்கு மனுசங்க மேல இவ்ள கோபம்"
"இது கோபமில்லே கண்ணு அக்கறை.. சரி விஷயத்துக்கு வா. என்ன சொல்றே எங்க வீட்டுக்கு வந்துர்ரயா. எங்க வீட்ல இருக்கிற பார்ட்டிங்களை பத்தி விவரமா சொல்லிக்கொடுத்துர்ரன் எப்படி சமாளிக்கிறயோ சமாளி."
'வந்துர்ரண்டா"
மாயா சம்மதம் தெரிவிச்சதை ராத்திரி அப்பாவுக்கு சொன்னேன். உடனே அவருக்கு அத்தனை சந்தோஷம். போவட்டும்டா பொம்பள குழந்தைக்காக நான் வேண்டி புலம்பினதெல்லாம் வீண் போகல. ஏதோ இத்தனை காலத்துக்கப்புறமாவது தெய்வம் கண்ண துறந்ததே அது இதுன்னு புலம்பிக்கிட்டிருந்தாரு.
மறு நாள் காலைல நான் எந்திரிச்சப்ப தெருவுல ஆளுங்க பேச்சுக்குரல் பலமா கேட்குது. முக்கியமா என் அப்பாவோட குரல். பால்கனிக்கு வந்து பார்த்தா வீட்டு முன்னாடி செங்கல்,மணல் கொட்டிக்கிடக்க, சிமெண்ட் மூட்டைகள் அடுக்கியிருக்க அப்பாவோட ஃப்ரெண்டும் ஒரு காலத்துல மேஸ்திரியுமான ஏ.செங்கல்ராய நாயக்கர் தன் ஆட்களோட ஆஜராகியிருந்தார். எனக்கு ஒன்னும் புரிய்லை,ஏ.சி.என் அண்ட் கோன்னா ஊர்ல அவ்ளோ பிரபலம். சிமெண்ட்ல அவர் தயார் பண்ணாத பொருளே கிடையாது.தலைவர்களோட சிலைகள் உள்பட .அவர் வந்து ஆஜராகிற அளவுக்கு அப்படி என்ன பெரிய வேலைனு புரியலை.
எந்திரிச்சதும் ஒரு சிகரட்ட பத்த வச்சுர்ர செயின் ஸ்மோக்கரான நான் சஸ்பென்ஸ் தாங்காம லுங்கிய சரியா கட்டிக்கிட்டு கீழே இறங்கி வந்தேன். அப்பா சொல்லிக்கிட்டிருக்காரு
" யோவ் ! இந்த பயல் பாதி ராத்திரி வந்து கதவை இடிப்பான் . விதிய நொந்துக்கிட்டு நான் போய் திறந்துக்கிட்டிருந்தேன்.இப்ப அந்த பொண்ணு வேற வந்து தங்க போவுது. சட்டுனு அந்த பொண்ணு போய் திறக்க வேண்டியிருக்கும். இந்த கம்னாட்டி சிங்கிளா வ்ரானோ டபுளா வரானோ தெரியாது. எதுக்கு லொள்ளுன்னுதான் வெளிப்பக்கம் மாடிக்கு படி வச்சுரு. வாஸ்து காரன் இது கிழக்கு பார்த்த வீடு வாயு மூலைல படி வைக்கவே கூடாதுன்னு அடம்பிடிச்சான். நான் தான் அவனுக்கு தைரியம் கொடுத்தேன். என் புள்ள அனுமார் பக்தன் .அவரு வாய் புத்திரன் இவனும் காத்து மாதிரிதான் எந்த பக்கம் திசை திரும்புவானு சொல்லவே முடியாதுன்னு சொன்னேன். ஒத்துக்கிட்டான். அப்படியே அட்டாச்ட் பாத்ரூமும், லேவட்ரியும் கட்டிருங்க. ஃப்ளோரிங்குக்கு மொசைக் தான். ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் வஞ்சனை இல்லாம வளர்ந்திருக்கு வழுக்கி கிழுக்கி விழுந்து தொலைக்கபோவுது. கொஞ்சம் கூட வழுக்கக்கூடாது .. ஃப்ளோரிங்க் அப்படியிருக்கனும். ஒரு வேளை ராத்திரில டிவி பார்க்கிற பழக்கம் இருந்தா என்ன செய்யறது அதனால டிவி வைக்க ஒரு ஸ்லாபு. அது பொட்ட புள்ள மேக்கப் சாமானே ஒரு வண்டி இருக்கும். அதுனால பவர் கட்ல கூட நல்லா வெளிச்சம் வரக்கூடிய திசைல சுவர் சைஸுக்கு சிமெண்ட்ல ரேக் . மத்தில கண்ணாடி வைக்கிற மாதிரி இருக்கட்டும்.மூனு நாள் தான் டைம் தருவேன். எனக்கு நீட்டா ஃபினிஷ் பண்ணி கொடுத்துரனும் "
என் அப்பா இது மாதிரி படபடன்னு ஆர்டர் பாஸ் பண்றத பார்த்து பல காலம் ஆச்சு. ரிட்டையர் ஆனது ஒரு பக்கம்னா , இவரோட சகல பலகீனங்களையும் சகிச்சுக்கிட்டு குடும்பம் நடத்தின அம்மா போனது மறுபக்கம் .. மனுஷன் இருக்கிற இடமே தெரியாம ஆயிட்டிருந்தாரு..
ஏ.சி.நாயக்கருக்கும் அப்பாவுக்கும் இருந்த நட்பு பத்தி சொன்னா நம்பவே மாட்டிங்க. அப்போ அப்பா வெளியூர்ல இருந்தாராம். கல்யாணமாகி குஞ்சும் குளுவானுமா 4 பசங்க. 10 வருசமா குடியிருந்த வாடகை வீட்டை திடீர்னு விக்கப்போறேனு வீட்டு ஓனர் நோட்டீஸ் கொடுத்துட்டானாம்.அப்போ ஏ.சி.நாயக்கர் சீன்ல என்டர் ஆகி அப்பாவுக்கு விஷயமே சொல்லாம மிச்ச ஃப்ரெண்ட்ஸுக்கு விஷயத்தை சொல்லி ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு இந்த வீட்டை வாங்கி ரெஜிஸ்டர் பண்ண வச்சாராம். வீடு அம்மா பேர்ல் ரெஜிஸ்டர் அக இதான் காரணம். பிற்பாடு விஷயம் தெரிஞ்சு ஊருக்கு வந்து புலி வேஷமெல்லாம் ஆடி ஃப்ரெண்ட்சை கச்சாமுச்சானு திட்டினாலும், எண்ணி ரெண்டு வருஷத்துல அவங்க பணத்தை பாங்க் வட்டியோட திருப்பி கொடுத்தாராம் நாயக்கருக்கு தன் நண்பனோட சந்தோஷம் தான் முக்கியம். தான் ஒரு கம்பெனி எம்.டிங்கறத கூட மறந்துட்டு தினமும் வந்து அப்பா கூட இருந்து மேற்பார்வை பார்த்தாரு. மாயாவுக்கு இதையெல்லாம் சொல்ல அவளால நம்பவே முடியலை. மறுபடி கண்ணீர் விட்டா.