Thursday, January 27, 2011

வாங்க விகடனை எரிக்கலாம் !

ஆனந்த விகடனின் மரண வாக்குமூலம் மூலம் இல்லாமயே நம்மை டென்சனாக்கிருச்சுங்க ,அதனாலதான் இப்படி ஒரு தலைப்பு.

ஆனந்த விகடன் மட்டுமில்லிங்கோ ப்ரிண்ட் மீடியாவுக்கே தாளி சாவு நெருங்கிக்கிட்டிருக்கு. படிக்கிறவுக தொகை குறைஞ்சிட்டே போவுது. ( நெம்பரை சொல்லி ஏமாத்துவாய்ங்க - பெருகிய மொத்த சனத்தொகையையும் - சாஸ்தியான வாசகர்கள் எண்ணிக்கையையும் சொல்லச்சொல்லுங்க. அப்படி தப்பித்தவறி படிக்கிறவுகளும் சோசியம்,வாஸ்து தேன் படிக்கிறாய்ங்க ( நமக்கு பிரச்சினையில்லிங்கண்ணா)

மரணப்படுக்கையில இருந்துக்கிட்டு "ஆடிய ஆட்டம் என்ன......."ன்னு பாடினா/ சேம் சைட் கோல் போட்டா  அது மரண வாக்குமூலம் தானே.26/1/2011 தேதியிட்ட இதழ்ல (இது கடைக்கு வந்து ஒரு வாரமாகியிருக்கும் -இவிக எக்ஸ்பைர்ட் மெடிசின் சேலை பத்தி கிழிப்பாய்ங்க) சரஸ்வதி விஜயம்னு ஒரு ஐட்டம் போட்டிருக்காய்ங்க.

நம்ம வலைப்பூவை ஆரு படிக்கிறாய்ங்களோ இல்லியோ விகடன் அண்ட் கோ படிச்சுர்ராய்ங்க. டாக்டர் ஷாலினியோட ஊஞ்சல் தொடரே நம்ம வலைப்பூவோட வெற்றி தந்த இன்ஸ்பிரேஷன் தானு ஒரு சம்சயம்.  நம்ம வலைப்பூவுல சரஸ்வதி சபதத்தை  ஸ்க்ரால் பண்ணிட்டிருந்தப்ப கிடைச்ச ஸ்பார்க் போலவெ இருக்கு.

சந்துமுனையில சிந்து பாடறாப்ல நம்ம ப்ளாகர்ஸை மொக்கைபண்ணியிருக்காய்ங்கண்ணா.

ஆனந்த  விகடனை எரிப்போம் வாங்க!


ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி

ஆமாங்கன்னா ஒரு சில எழுத்தாளர்கள் வேணம்னா ப்ளாக் எழுதலாமே தவிர ஒரு சில ப்ளாகர்களோட எழுத்து பத்திரிக்கையில வந்திருக்கலாமே தவிர ப்ளாகர்கள் தனி இனம்.  நமக்குள்ள ஆயிரம் பொறாமை பொச்சரிப்பு இருக்கலாம். ஆனால் விகடன் மாதிரி டயனோசர்  நம்ம தன்மானத்தை சீண்டி பார்த்த பிறவும் விட்டோம்னா  ..

மொத்தமா விட்ட மாதிரிதான்.

மொதல்ல விகடனோட அமுதவரிகளை  பாருங்க,

வென்யூ:
வருத்தமில்லா வாசகர் சங்கத்தின் பொதுக்குழு

//தலைவர் கைப்புள்ள (?) போதையில் இருந்தாலும் தெளிவாக பேசினார்//

அன்னைக்கு அம்மாவை விஜயகாந்த் கேட்ட கேள்வியத்தான் கேட்க வேண்டியிருக்கு." நீ ஊத்திக்கொடுத்தயா?" அட.. குடிக்கிறதென்ன ஐபிசி படி குற்றமா?

//எவ்வளவு நாளைக்குத்தான் நாம் எல்லாம் வாசகர்களாவே இருக்கிறது. இன்னிலருந்து நாமளும் எழுத்தாளன் தான் //

எழுத்தை ஆளறவன் தான் எழுத்தாளன்னா நாங்க நெஜமாலுமே எழுத்தை ஆளறோம்யா. ஆனா நீ எழுத்தால வாள்றவன்.

மன சாட்சியை  ஊர் மேல விட்டவனோட எழுத்தையெல்லாம் சூடான பால்கோவானு வித்துத்தானே வவுத்தை கழுவறே.. நீயே எழுத்தாளன் மா................தி...............ரி தலையங்கம்லாம் எழுதறப்ப நாங்க எழுதினா உனக்கு எங்க வலிக்குது?

ஸ்கூல் யூனிஃபார்மோட ஒரு குட்டி  மூச்சு வாங்க மாடியேறி  வந்து  கதை கொடுத்தாத்தான் போடுவிங்க.. அந்த குவாலிஃபிகேஷன் இல்லாதவுக ப்ளாக்ல தானே எழுதவேண்டியிருக்கு.


//. எவனும் நம்மை ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டேன்னாலும்//

தோடா .. நீயே சேர்த்துக்கிட்டுத்தானே ஒரு பக்கத்தை நிரப்பறே. யூத் விகடன்லருந்து ப்ளாக் பிரிவை எடுத்துட்டு பாரு .. உன் ஜாதகம் தெரியும்


//நாமளா போயி புக் ஃபேர் ஜீப்புல ஏறிரனும்.//

அப்பு! சைக்கிள் கூட வேணாம்னுட்டு அபிஷ்டுகளோட சவுகாசமே வாணாம்னுட்டு காந்தி  தாத்தா ரேஞ்சுல நாங்க பண்ற பாதயாத்திரைய்யா ப்ளாகு.


//ஆமா நாமளும் எழுத்தாளன் தான்...நாமளும் எழுத்தாளன் தான்" எக்கோ  அடித்தனர் எல்லோரும்.கண்களில் இலக்கிய வேறி குத்தாட்டம் போட்டது//

இலக்கியம்னா அய்யரு ஊஞ்சல்ல உட்கார்ந்து காப்பி குடிப்பாரு. மாமி நிலைப்படில நிப்போனு ஒரு டெஃபனிஷன் கொடுத்துவச்சிருந்திங்க.. அதை உடைச்சு ஸ்க்ராபுக்கு அனுப்பினதுல உங்களுக்குதேன் வெறி போலும் நம்மாளுங்களுக்கு வெறியெல்லாம் இல்லிங்கோ.. வெறியேத்தறதுதான் எங்க ஸ்டைலு..


//வ.இ.வா.ச.வின் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் பிளாக்கர்கள், கூகுள் காரன் இலவசமா ப்ளாக் எழுதிக்க இடம் கொடுத்ததுமே இணையத்தில் துண்டு போட்டு இலக்கியத்துக்குள் குடிசை போட்டவர்கள். இன்டர் நெட்டில் டன் கணக்கில் எழுத்துக்குப்பை கொட்டுபவர்கள்.//

இதை சக ப்ளாகர்களின் விமர்சனத்துக்கு விட்டு வைத்து தாவுகிறேன். ( என்ன ராசா .. ரெடிதானே)


//இவர்களே ஒருவருக்கு ஒருவர்"எழுத்துச்சூறாவளி"  "இலக்கிய சுனாமி' என்று பட்டம் கொடுத்துக்கொண்டவர்கள்.//

பட்டம் ஆரு கொடுக்கிறாங்கறது முக்கியமில்லிங்கோ. வாத்யாருக்கு வாரியார் கொடுத்தாரு (பொன்மனச்செம்மல்), கலைஞருக்கு எம்.ஆர் ராதா கொடுத்தாரு, நடிகர் திலகத்துக்கு ஒரு சாதாரண ரசிகன் கொடுத்தான்.

பட்டம் பொருந்துதா.. எல்லார் வாய்லயும் வழங்குதாங்கறதுதேன் முக்கியம்..

// அவ்வப்போது மொண்ணையாக ஏதாவது கூட்டம் போடுவார்கள் //

மொண்ணையான்னா வேணாம் பிரதர் என்னென்னமோ ஞா வருது. பாஸு! அதுல அழுக்கு படியாது. ஆடையில உரசி உரசி சென்சிட்டிவ் நெஸ் குறைஞ்சுரும். நின்னு விளையாடலாம் தெரியுமில்லை

//.மைக்கை பிடித்து சப்பையாக பேசுவார்கள்.//

அட டுபுக்கே.. ஜப்பான் காரன் மூக்குகூட சப்பைதேன்.. சில நேரத்துல சப்பை மேட்டர் தேன் ஆப்பை வைக்கும்..

// இந்த இலக்கிய நிகழ்வுகளின்  போட்டோக்களை இன்டர் நெட்டில் ஒரு ரவுண்டு ஓட்டுவார்கள்//

உங்களுக்குதேன் டூ பீஸ், அரை நிர்வாணம்,கால் நிர்வாண படங்களை போடவே இடம் போதமாட்டேங்குதே..

( ஷாட் கட் பண்ணா பாஞ்சாயிரம் பதிப்பகம் புக்கு போட எங்கிட்டே வாங்கன்னு மெயில் அனுப்பி கூப்பிடுதாம் . உடனெ ப்ளாகர்கள் எல்லாம் ஓடறாய்ங்களாம். அந்த வர்ணனைய பாருங்க..)

//அவரவர் பிளாக்கில் இருந்த ஓட்டை ,உடைசல்,தட்டுமுட்டு சரக்குகளை பென் ட்ரைவில் அள்ளிக்கொண்டு எல்லோரு பாஞ்சாயிரம் பதிப்பகத்துக்கு நடையை கட்டினார்கள் .//

பாஸு.. இங்கனதான் பெரிய தப்பா பண்ணிட்டா இன்ன ப்ளாக்ல இன்ன பதிவு ஓட்டைன்னு சொல்லியிருந்தா அந்த பதிவர் மட்டும் முணகிட்டு போயிருப்பாரு. " யாகாவாராயினும் நா காக்க"னு வள்ளுவர் சொன்னதை மறந்துட்டயெ ..

அப்போ உன் வெர்ஷன் என்னன்னா " தமிழ்ல உள்ள ஏ டு ஜெட் ப்ளாக்ஸ் எல்லாத்துலயும் உள்ள எல்லா பதிவும் ஓட்டை ,உடைசல்,தட்டுமுட்டு சரக்குதேன் .அப்படிதானே.

உன்னை ஓட்டையாக்காம விடமாட்டாய்ங்க. உன் விலாவை உடைக்காம விடமாட்டாய்ங்க. உன்னை தட்டி முட்டி தட்டுமுட்டாக்கி காயலான் கடைக்கு அனுப்பாம விடமாட்டாய்ங்க..

நான் ஊதுற இந்த சங்கு .. "அந்த" சங்குதேன்..


//இதையெல்லாம் நாரதர் சொல்லிட்டே வர சரஸ்வதி " நாரதா போதும் ..போதும்.. இந்த ஆபாசத்தை எல்லாம் நிறுத்து"ன்னுட்டு அலர்ராய்ங்க.//

சரஸ்வதி அம்மா  விகடனை படிச்சதில்லை போல இல்லைன்னா  சுத்தி வளைச்சு ஆபாசங்கற வார்த்தைய யூஸ் பண்ணதவிட பெட்டரா -ஷார்ட்டா- க்யூட்டா- கரீட்டா விகடனை நிறுத்துங்கன்னிருப்பாய்ங்க..

டியர் ப்ளாகர்ஸ் !
நம்மை மட்டுமில்லை சாரு நிவேதிதா,ஜெயமோகன் ஆகியோரையும், மணிமேகலை பிரசுரம் மாதிரி பதிப்பகங்களையும் கூட மொக்கை பண்ணியிருக்காய்ங்க.. அதையும் தொடர்ந்து  படிச்சு உங்க கருத்தை தெரிவிங்க.


//வரவர சரஸ்வதி பூஜைக்கு வைக்கும்  புத்தகங்களின் தரம் சகிக்கவில்லை//ன்னுட்டு  சாட்சாத் சரஸ்வதி சொல்றாய்ங்களாம். எனக்கொரு சந்தேகம் விகடன் க்ரூப் என்ன  சலூனா நடத்துராய்ங்க. புஸ்தவம் தானே போடறாய்ங்க.

அய்யர் மாருங்களுக்கு லையன்ஸ் ஷேர் போக சூத்திரங்களோட எழுத்தையும் அச்சாக்கி காசாக்கிகிட்டுத்தானே இருக்காய்ங்க.

இந்த பஞ்சக்கச்சங்களுக்கு ஒரு சவால் : தாளி.. உங்க இனமானம் வாழ்க. உங்களுக்கு தம்மிருந்தா தாக்கத் இருந்தா வெறும் பூ நூல்களை மட்டும் வெளியிடுங்கய்யா. உங்க பத்திரிக்கையில அவிக எழுத்துக்களை மட்டும் போட்டு மகளிர் மட்டும் மாதிரி பிராமணர்களுக்கு மட்டும் ( சூத்திரர்களுக்கு விற்பதற்கில்லை)ன்னு போட்டு நடத்துங்களே பார்ப்பம்.

ங்கொய்யால எழுத , வாங்க,படிக்க மட்டும் சூத்திரன் தேவை தாளி நீங்க மட்டும் மகா பெரியவாளுக்கு கோவணம் துவைப்பிங்க.. பங்காரு அடிகளாரை மட்டும் கிண்டலடிப்பிங்க.

கூல்... கமிங் டு தி சப்ஜெக்ட்.


சரோதிதாவின் மோகம்  நாவல் வெளியீடுன்னு ஆரம்பிச்சு நக்கலடிச்சிருக்காய்ங்க. அதாரு? சாரு நிவேதிதா.. சமீபத்துலதான் இவிக இதழ்ல  ஒரு கட்டுரை தொடர் எழுதினதா ஞா.  இவிக விஸ்வாசம் இன்னா ரேஞ்சுல கீது பாருபா.

ஜெயமோகனையும் சந்திக்கு இழுத்திருக்காய்ங்க..

புக் ரிலீஸுக்கு சினிமாக்காரவுகளை கூப்பிடறதை பத்தியும் கிண்டலடிச்சிருக்காய்ங்க, அட பன்னாடைங்களே உங்க புஸ்தவத்துல வாசகர் கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு  கமல் தானே கிடைச்சாரு..

அவரை நாங்க கலைஞனா பார்க்கிறோம். நீங்க மட்டும் நம்மாத்து அம்பியாவே பார்க்கிறிங்களே ..  கவிஞர்களை பத்தியும் கிண்டி கிழங்கெடுத்திருக்காய்ங்க.."பாஞ்சாயிரம் வெட்டுங்க - 600 காப்பி போட்டுத்தரேன் ,300 உங்களுக்கு 300 எனக்குன்னு "  ஒருஆஃபர் வேற இடையில  வருது. இதை ஆரம்பிச்சு வச்சது மணி மேகலை பிரசுரம். விகடன்ல என்ன ஆஃபருன்னும் சொல்லியிருக்கலாம்.


நமக்கு கிடைச்ச பப்ளிஷரு ஸ்க்ரிப்டை கொடுங்க. பைசா வேணாம். ராயல்ட்டியா 300 காப்பி தரேன். நீங்க கேட்டா வித்தும் தரேன் ( 40% கமிஷன்)னு சொல்லியிருக்காரு.

விகடன்ல கேட்லாக்கை ஸ்பெஷல் புல்லிட்டனாவே போட்டு டோர் டு டோர் அனுப்பிட்டிருந்தாய்ங்க. மெயில்ல வேற விளம்பர மழை. இப்ப மிஸ்டு கால் கொடுத்தா அப்டேட்ஸ் தரோம்னு ஆசை காட்டறாய்ங்க. இதெல்லாம் டெலி மார்க்கெட்டிங் ரூல்ஸ் படி சரியா தப்பா ஆரு சொல்வாய்ங்க.

நமக்கும் இப்படி அனுப்பி கடுப்பேத்த  நாம கடுப்பாயி "ஸ்கட் " விட அம்பேல். நம்ம பாய்ண்ட் ஒன்னுதேன். தரமில்லேன்னு நீ எப்படி சொல்லலாம். நீயே ஒரு காசு பொறுக்கி.  அரை நிர்வாண படம் போட்டு, எவன் எந்த லாட்ஜுல எவளை தகஜம் பண்ணான்னு எழுதிதானே காசாக்கிறிங்க. நீ எப்படி தரத்தை பத்தி பேசலாம்.

எவனோ பாஞ்சாயிரம் கேட்டான்னா அது அவன் வியாபாரம் - கவிஞர் அந்த ஆஃபரை ஏத்துக்கிட்டா அது அவரோட சொந்த மேட்டர் .புஸ்தவம் வெளிய வந்த பிறவு  நீ பேசு (இதுக்கான தகுதி உனக்கில்லைன்னா கேட்கவா போறே)

போவட்டும் இந்த பாஞ்சாயிரம் ப்ளானு ஒனக்கு ஸ்ட் ரைக் ஆகியிருந்தா விட்டிருப்பியா?  யோவ் விகடன்! உத்தமா பத்தினி மாதிரி இம்மாம் அக்கறையோட நக்கல் பண்ணே இல்லே..

தாளி .. பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு பத்துகேள்விகள்னு ஒரு பதிவு போட்டிருக்கேன். அதுல ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுய்யா..

ஒத்துக்கிடறோம் நீ பத்தினிதான்னு ஒத்துக்கிடறோம்.