கள்ள உறவுகள் :2
ஜூனியர் விகடன் தனமா பத்திரிக்கைகள் ஓராயிரம் துவங்கிய காலம் ஒன்று உண்டு. அப்படி துவங்கப்பட்ட ஒரு பத்திரிக்கை நிறுவன குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. பாவம் அவர்களுக்கு இது ஒன்றே தொழிலல்ல.பல்வேறு தொழில்களில் செழித்த குடும்பம் அது. பத்திரிக்கை என்பது மூன்றாம் பட்சம் தான். குடும்பத்து பெரியவர் பேருக்கு தான் ராஜா. மொத்த நிர்வாகமும் இரண்டாவது மகனின் கையில் தான். முதல் மகனின் மனைவி தான் வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் கவனித்துவந்தாள். பெரியவருடையது ஏறக்குறைய ரிட்டையர்ட் லைஃப்தான். பெரிய மகன் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தான். அதுவும் பெரியவர் முகம் பார்த்து தரப்பட்ட வேலை. அதில் கிடைத்த சம்பளம் மகனின் கார் பெட்ரோல் செலவுக்கு கூட வராதென்பது வேறு விசயம். மேலும் திருமணமாகி பல வருடமாகியும் சந்தான பாக்கியம் வேறு கிட்டாத நிலை. பெரியவர் மனைவியை இழந்தவர். முக்கால்வாசி நேரம் வீட்டோடு இருப்பார். பெரிய மருமகளும் ஹவுஸ் வைஃப், வாரிசு உருவாகாத காரணத்தால் கணவன் செக்ஸ் என்பதையே வெறுத்து வந்த சந்தர்ப்பம் அது.
பெரியவர் வயது ஐம்பதை நெருங்கினாலும் அந்த காலத்து கடைக்கால் ஆயிற்றே திடமாகவே இருந்தார். பெண்களுக்கு மெனோஃபஸ் சமயத்தில் காம உணர்வு அதிகமாக இருக்குமாம். அது மாதிரி ஆண்களில் பலருக்கு ஐம்பதுகளில் திடீர் என்று காம உணர்வு கொப்பளிப்பதுண்டு. இந்த கட்டத்தில் தான் பலான வீட்டம்மா கார் ட்ரைவரோட ஓடிப்போயிட்டாளாமே. பலான வீட்டம்மா மகளோட படிக்கிற பையனோட ஓடிப்போயிட்டாளாமே இத்யாதி செய்திகள் கிளம்புவது வழக்கம். இந்த கட்டத்தை சாக்கிரதையாக சமாளிக்காவிட்டால் சரவண பவன் அண்ணாச்சி கதைதான்.
ஆனால் பெரியவருக்கு கவிதை07 ஐ படிக்கும் வாய்ப்பில்லை. ஆண்மையும், மனைவியும் இருந்த காலத்தில் பணத்தின் பின்னே பி.டி உஷா கணக்காய் ஓடிக்கொண்டிருந்து விட்டார். இரண்டாமவன் அடுத்த வாரிசு கணக்காய் வியாபார லாவாதேவிகளில் மூழ்கி அதிகாலை புறபப்படுவதும் நள்ளிரவு வீடு திரும்புவதுமாய் இருந்தான்.
பெரிய மருமகளின் நடவடிக்கைகள் அவள் அதிருப்தியில் இருப்பதை பட்டவர்த்தனமாய் காட்டின. வெளியுலகத்தை பொருத்தவரை மருமகள் என்றா பொசிஷனில் மாமனார் மீது அவள் காட்டிய அக்கறை அவருக்குள் பழைய நினைவுகளை கிளறியிருக்கவேண்டும்.
மருமகளுக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. முதலில் அவள் எல்லா மனைவியரையும் போல் தன் கணவந்தான் உலகத்திலேயே பவர் ஃபுல் மேன் என்று நம்ப ஆசைப்பட்டாள். ஆனால் அவன் "எல்லா" விதத்திலும் டம்மி பீஸ் என்பதை சில வருடங்களிலேயே புரிந்துகொண்டாள். அவள் குறிவைத்ததென்னவோ சின்னவருக்கு தான். ஆனால் சின்னவரோ பண வேட்டையில் மூழ்கியிருந்தார்.
மாமனாரின் பார்வை, தொடுதலில் இருந்த கல்மிஷங்களை அவள் மனம் எச்சரிக்கத்தான் செய்தது. ஆனால் ஏதோ உத்யோகம் புருஷ லட்சணம் என்ற அளவில் வேலைக்கு போய் அதுவே மலை என்று அசந்து தூங்குவதாய் நடிக்கும் கணவன் அவள் வயிற்றில் எதையேனும் விதைத்திருந்தாலும் அவள் சமாளித்திருப்பாள். அவள் வாழ்க்கை வேறுமாதிரி போயிருக்கும். அதுவும் இல்லாத நிலையில் மாமனாரின் சீண்டல்கள் அவளுக்கு தேவையாக இருந்ததை அவளால் உணர முடிந்தது.
இந்த சம்பவங்களால் அவள் வியூகம் வேறாக மாறியது. சின்னவர் எப்படியும் திரும்பிப்பார்க்கபோவதில்லை. அவனே இவர் கையில் இருக்கும்போது இவர் நம் கையில் வந்துவிட்டால் .. என்று யோசித்தாள். அதற்கேற்றாற்போல் ஒரு நாள் வேலைக்காரி வேலையை முடித்து போய்விட்ட பிறகு குளியலறைக்கு சென்று கெய்சரை ஆஃப் செய்ய ஸ்விட்ச் போர்டில் கைவைக்க எலக்ட்ரிக் ஷாக் அவள் எண்ணத்தை செயலாக்கியது.ஹாலிலிருந்து காஃபிக்கு குரல் கொடுத்து அலுத்த பெரியவர் பின்பக்கம் வந்தார்.
குளியலறை கதவு திறந்திருக்க பெரிய மருமகள் பிறந்த மேனியாய் விழுந்து கிடக்க பெரியவரில் பகல் தூக்கம் கணக்காய் தூங்கிக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த காமப்பிசாசு ஒரே நொடியில் ஆக்டிவேட் ஆனது. நடக்க வேண்டியது சாரி நடக்கக்கூடாதது மொத்தம் நடந்துவிட்டது.
அன்றிலிருந்து அது வழக்கமும் ஆகிப்போனது. செக்ஸ் ஃபார் செக்ஸ் என்று போயிருந்தால் அது வேறு கதை. கணவனால் முடியாததை தான் சாதிக்க நினைத்தாள் மனைவி. மாமனாரை இன்ப மயக்கத்தில் ஆழ்த்தி வியாபாரத்தில் அ ஆ இ ஈ தெரியாத , நாளிதுவரை ஒரு குண்டூசியை எடுத்து அந்த பக்கம் இந்தப்பக்கம் போட்டறியாத தன் கணவன் பெயருக்கு மொத்த வியாபாரத்தையும் மாற்றச் செய்தாள். முதலில் வருமானவரி பிரச்சினை அது இது என்று பம்மாத்து காட்டி மாற்ற ஆரம்பித்த பெரியவர் நாளடைவில் சாக்கு ஏதும் கிடைக்காது நேரடியாகவே மாற்றதுவக்கினார்.
சின்னவருக்கு அரசல் புரசலாக அசல் விசயம் தெரியவந்தது. அண்ணனை உஷார் செய்தார்.அவனோ காரிய பைத்தியமாக இருந்தான். தான் உபயோகிக்காததை தன் தந்தையாச்சும் உபயோகிக்கிறாரே வெளியே மேயப்போய் குடும்ப கவுரவம் கப்பலேறாதிருக்கிறதே என்று மேலுக்கு சொன்னபடி தன் பெயருக்கு மாற்றப்படும் வியாபார பட்டியலை பார்த்து மகிழ்ந்திருந்தான்.
இன்றைய நிலை:
சின்னவன் மனம் வெறுத்து வெறும் கையாய் வெளியேறினான். தன் திறமையை மட்டுமே முதலாய் வைத்து சில வருடங்களில் பெரியவரை மிஞ்சும் அளவுக்கு சம்பாதித்தான் . குல மகள் ஒருத்தியை மணந்து ஆசைக்கு ஒன்று,ஆஸ்திக்கு ஒன்று என்று வாரிசுகள் பெற்று வாழ்கிறான்.
வியாபார சூட்சுமம் தெரியாத அண்ணன் காரன் காலை அகல வைத்து மூழ்கிப்போனான்.
அகாலத்தில் அழுகுணி ஆட்டம் போட்ட பெரியவருக்கு பெராலிசிஸ் ஸ்ட்ரோக்
மகனும்,தந்தையும் என்ன செய்வதென்று தெரியாது கையை பிசைய மருமகள் எவனெவனையோ வீட்டுக்கே அழைத்துவந்து அனுபவிக்கிறாள்.
காலத்தின் கை தன் தீர்ப்பின் கடைசி பத்தியையும் விரைவில் எழுதும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.