Saturday, January 30, 2010

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு

என் ஜன்ம் லக்னம் கடகம் என்பதாலா அ கூட்டு எண் 2 என்பதாலா தெரியவில்லை என் வாழ்வின் போக்கை அவதானிக்கும் போது ஒருவித இரட்டை தன்மை தென்படுகிறது.

இந்த எஃபெக்ட் யார் யார் வாழ்வில் இருக்கும்:

*2,11,20,29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
*பிறந்த தேதி,மாதம்,ஆண்டுகளை கூட்டி சிங்கிள் நெம்பர் ஆக்கினால் 2 வருவோர்க்கு (இது கூட்டு எண்)
*பெயர் எண் 2 வருவோர்க்கு
*கடக ராசி,கடக லக்னத்தில் பிறந்தோர்க்கு
*ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரங்களில் பிறந்தோர்க்கு
*தற்போது சந்திர மகா தசை, எந்த தசையானாலும் சந்திர  புக்தி நடப்பவர்களுக்கு
*கடகத்தில் சூரியன் இருக்கையில் (ஆடி மாதம்) பிறந்தவர்களுக்கு)

இரட்டை தன்மை:

ஒரு கோணத்தில் பார்த்தால் என்னை காட்டிலும் அதிர்ஷ்ட சாலி இந்த உலகிலேயே இருக்கமாட்டான் என்று தோன்றும். மற்றொரு கோணத்தில் பார்த்தால் என்னை காட்டிலும் துர் அதிர்ஷ்ட சாலி  இந்த உலகிலேயே இருக்கமாட்டான் என்று தோன்றும்.

இந்த பதிவில் ஒரு என்று நான் அடிக்க முயன்ற போதெல்லாம் இரு என்றே அச்சாகியது. நான் கோழி கொத்தும் பாணியில் ஒவ்வொரு விசையை தனி தனியே கொத்தும் டீன் ஏஜன் அல்லன். ஆங்கில தட்டச்சு லோயர் ஃபெயிலானவன். ஃபிங்கரிங்க் தெரியும். இருந்தும் ஏனோ ஒருவுக்கு பதில் இரு.( சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு இது போன்ற மிஸ்டிக் சம்பவங்களும் அதிகமாக நடக்கும்)

பொருளாதார ரீதியில் பார்த்தால் இன்றைய தேதிக்கும்  நான்  செட்டில் ஆனவன் என்று சொல்லவே முடியாது.( காரணம் சந்திரன் 14 நாள் வளர்வார், 14 நாள் தேய்வார், இரண்டேகால் நாட்களுக்கு ஒரு முறை ராசி மாறிவிடுவார்)

மூணு வருசத்துக்கு  முன்னாடி கூட தினசரி அன்னய  சோற்றுக்கு சம்பாதிச்சுக்கிட்டிருந்த  ப்ரெட் ஹண்டர் தான். நூறு அல்ல ஆயிரம் அல்ல பத்தாயிரம் ரூபாய் வந்தாலும் ஒரே நாளில்  பைசல் . மறு நாள் ஒரு ஐம்பது ரூபாய் மிச்சமிருந்தால் எவனோ ஒரு கடன் காரன் வரவில்லை அ நான் தேடிப்போன போது கிடைக்கவில்லை என்று அர்த்தம்.  ஷீர்டி பாபா வாழ்ந்திருந்த போது அப்படித்தான் தமது சன்ஸ்தானில் வந்த பணம் அனைத்தையும் பங்கிட்டு விடுவாராம்.

இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய எந்த டீலானாலும் அதுல சக்ஸஸ் ஆக சந்திர பலம் தேவை.

"மனுஷுலு ருஷுலை எதகாலன்டே புண்ய சரிதலே ஆதாரம்" இது ஒரு தெலுங்கு திரைப்பட பாடல் வரி." மனிதர்கள் ரிஷிகளாய் வளர புனிதர்களின் வரலாறுகளே அடிப்படை " என்பது இதன் பொருள். நான் கச்சா முச்சானு படிச்சதுல ஞா இருக்கிறதெல்லாம் புனிதர்களின் வரலாறுகள் தான். அது முகமது நபியாகட்டும், திப்பு சுல்தானாகட்டும், காமராஜர் ஆகட்டும், அண்ணாவாகட்டும் .

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ரோல் மாடல்களால் இது போல் எளிதாக இன்ஃப்ளுயன்ஸ் ஆவார்கள். சில நேரங்களில் ஒரிஜினல் மாடல்ஸை விட உன்னதமாக வடிவமைக்கப்பட்டுவிடுவதும் உண்டு.

"எவனொருவன் தன்னில் இந்த அனைத்து உயிர்களையும், அனைத்து உயிர்களில் தன்னையும் உணர்கிறானோ " என்று நீட்டி முழக்கி அவன் என்னவோ ஆவான் என்று கீதையில்கண்ணன் சொன்னதாய் சொல்லப்படுவதை கண்ட சாலா குரலில் கேட்டது
ஞா வருகிறது. ஆனால் உண்மையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன். என்னில் ஒரு எம்.ஜி.ஆரை, என்னில் ஒரு கலைஞரை  இப்படி பரஸ்பரம் முரண்பாடு கொண்ட எத்தனையோ மனிதர்களை என்னில் உணர்ந்திருக்கிறேன்.

"வெற்றி பெற்ற மனிதரெலாம் என்னுள்ளே அடக்கம்
வழி காட்டி நிற்கும் முந்தையோர்க்கு சிந்தை குளிர் வணக்கம்"
என்று கவிதை கூட தீட்டியுள்ளேன்.

இயற்கைக்கும், இறைவனுக்கும் நெருக்கமாக உணரக்கூடிய மனிதர்கள் இவர்கள் .

இத்தனைக்கும் நான் சொல்லவந்தது.. என்னதான் இந்த 42 வயதுக்கும் பொருளாதார ரீதியில் பார்த்தால் காற்றிலாடும் தீபமாகவே  இருந்தாலும் என்னில் ஒரு சிலரில் போன்று  கச்சாடா எண்ணங்கள் நுழைவதே இல்லை,

சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் (ராகு,கேது,சனி இத்யாதி சேர்க்கையின்றி இருக்க வேண்டும்)  சுய நலம் வளர்த்தாலோ,சதிகளில் ஈடுபட்டாலோ கதை கந்தலாகி நுரையீரல், சிறு நீரகம் மனம் சார்ந்த நோய்களுக்குள்ளாவார்கள்.

எங்கள் தெருவில் ஒரு கடை இருக்கிறது. அந்த கடைக்காரன் எல்லா பொருளையுமே நாலணா ஏற்றித்தான் விற்பான். (இப்போ நாலணா செல்றதில்லை.அதனால் எட்டணா ஏத்திர்ரான்) .அவன் மனைவிக்கு பைல்ஸ்.   சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்ள வர்ர குண்டு ரமணி மாதிரி இருப்பா.

நீங்க ஒன்ன கவனிங்க எவன் மனைவி இந்த மாதிரி பாம்பே கக்கூஸ் மாதிரி மூஞ்சியோட இருக்காளோ,எவன் மனைவி கருங்குரங்கு,குரங்கு குசலா மாதிரி இருக்காளோ அவனெல்லாம் பணத்தை துரத்திக்கிட்டே இருப்பான். சப்போஸ் மனைவி விசயத்துல நடந்துட்ட  இந்த  சோகத்தை மறைக்கவேவா என்ன புரியலை.

மேலும் மேற்சொன்ன குண்டு ரமணி,கருங்குரங்கு,குரங்கு குசலா  பாம்பே கக்கூஸ்  கேஸ்தான் நிறைய பட்டுப்புடவை வச்சிருக்கும். நகைக்கடை ஷோ ரூம் கணக்கா நிறைய நகை போடும். என்ன இழவோ.. இதையெல்லாம் பார்க்கிறப்போதான் விதிமேல உள்ள நம்பிக்கை ருடீயாகுது.

இந்த மாதிரி அப்சர்வேஷன்ஸ் சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கே சாத்தியம்.

நான் பணம் சேர்ப்பதை என்றுமே தப்பு சொல்லமாட்டேன். சம்பாதி வேணாங்கல. எதுக்கு சம்பாதிக்கிறேங்கறத தெரிஞ்சுக்கிட்டு சம்பாதி. பணங்கறது ஒரு ஃப்யூயல். வாழ்க்கை வண்டி ஓட அது தேவை. ஆனால் வண்டியை செலுத்தறது நீதான். பணம் சர்வ ரோக நிவாரணி கிடையாது. மேலும் பணத்தை நம்ம பலவீனங்களுக்கு, பை.தனங்களுக்கு, காம்ப்ளெக்ஸ் ரிலீஃஃபுக்கு பயன் படுத்தறது சமுதாயத்துக்கும் ,பொருளாதார அமைப்புக்கும் பண்ற ரோகம்.

பணம் சம்பாதிக்கறவனெல்லாம் என்ன பண்றான் தெரியுமா? மரணத்தோட நிழல்களோடு தான் பண்ற யுத்தத்துல ஆயுதமா பயன் படுத்தறான். மரணத்தோட நிழல்கள் என்ன? தனிமை, இன் செக்யூரிட்டி,இருட்டு, திரஸ்காரம் ( நிராகரிப்பு) இல்லேன்னா பணத்தை கொண்டு சாகிறான்.

என்னை பொருத்தவரை இந்த உலக மாந்தர்கள் ஒரு நாய்கூட்டம். பணங்கறது எலும்பு துண்டு. எலும்பு நம்ம கைல இருக்கிறவரை (அதுகளுக்கு எட்டாத தூரத்ல இருக்கனும்.) நாம சேஃப்.  என்னை பொருத்தவரை நான் கரப்பாம்பூச்சி மாதிரி. எப்படியும், எங்கயும் வாழ்ந்துருவன். ஆனால் சனம் அப்படியில்லே.


நான் என் சுயகவுரவத்தை 10 மி.கி விட்டு கொடுத்திருந்தாலும்  இன்னிக்கு நான் வெல் செட்டில்டா இருந்திருப்பேன். அட சு.க விட்டுக்கொடுக்காதே ஈட்டியதில் ரூபாய்க்கு பத்து காசு ஒதுக்கி வைத்திருந்தாலும் இந்த நிலை கிடையாது. ஆனால் அப்படி நான் வாழ்ந்திருந்தால் இந்த நள்ளிரவில் இந்த பதிவை தட்டச்சும் போது மனதில் நிலவும் ஒரு வித விராக  நிலை எனக்கு கிட்டியிராதே போயிருக்கலாம். , (ராகம் என்றால் விருப்பம் விராகம் என்றால் விருப்பமின்மையா ?வைராக்கியம் என்ற வார்த்தைக்கு இதுவே வேர்சொல், ஆனால் தமிழர்கள் இதை உறுதிக்கு இணையாக உபயோகிக்கிறார்கள்)

அதென்னமோ எவரிடமாவது எதையாவது பெற வேண்டி வந்தால் உயிரே போவது போல் உணர்கிறேன். ஒரு மணி நேரம் தொண்டை வறள ஜோதிடம் சொல்லியிருப்பேன். வந்தவன் தரும் பணத்தை மூன்று முறை மறுப்பேன்.  அப்படியும் கொடுத்தால் தான் வாங்கிக்குவன்.

நான் பிறந்தது 1967. முதல் இருபது வருடங்கள் 1987 வரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு நான் பொறுப்பு கிடையாது. அதற்கு பின்னான காலத்தில் கூட என் தேடுதல் தொடர்ந்ததே தவிர எனக்கென்று ஒரு கொள்கையோ கனவோ மச மசப்பாக தெரிந்ததே தவிர இது தான் என்ற ஸ்பஷ்ட தன்மை மட்டும் கிடையவே கிடையாது.

படிப்படியா ஒரு ஸ்லோ ப்ராஸஸ்ல எல்லா கோணத்துலயும் சிந்திச்சு என்னை நான் வடிவமைச்சுக்கிட்டேன். இங்கே நடக்கிற எந்த ஜீவ மரண போராட்டமும் என் பார்வையில முட்டாள் தனம் தான். ஏதோ மனசு கேட்காம தூக்கத்துல நடக்கிற மாதிரி அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி விரையற மனித கூட்டத்தை எச்சரிக்கிறேனே தவிர.. எவன் ,எவள் எக்கேடு கெட்டு போனாலும் ஐ டோண்ட் கேர் !