Tuesday, January 19, 2010

பொம்பளைக்கு முன்னாடி இருக்கிறது என்ன?

கிருஷ்ணர்: என்னப்பா .." நான் அனுமான் பக்தன்.அவன் ராம பக்தன் என்பதால்  நானும் ராம பக்தன் ..ராமனுக்கு கோவில் கட்டுறதென்ன ஜுஜுபி... ராம ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புவேன்" னு சொல்லிக்கிட்டிருந்தே இப்போ என்னடான்னா பெரியார் ஸ்டைல்ல எல்லாத்தயும் சகட்டு மேனிக்கு கிழிக்க ஆரம்பிச்சுட்டே
முருகேசன்: சரியான நேரத்துக்கு வந்திங்க பாஸ் ! இப்படி உட்காருங்க ..டிஸ்கஷனுக்கு சரியான கவுண்டர் பார்ட் இல்லியேனு பார்த்தா கரீட்டா வன்ட்டிங்க..இன்னைக்கு முடிச்சுரலாம் வாங்க
கிருஷ்ணர்: நான் உன்னை முடிக்கிறதா இருக்கேன்னு வை .. அப்ப என்ன பண்ணுவே?
முருகேசன்: தபார்ரா ! சிசுபாலன் நூறு பாயிண்ட் சொல்ற வரை சிரிச்சிட்டே இருந்ததா சொல்றாங்க. கலி எஃபெக்டுல உங்களுக்கும் மூலம் கீலம் மாட்டிக்கிட்டு அவஸ்தை படறிங்களா என்ன? ரெண்டு பதிவுக்கே பத்திக்கிட்டு வருது.
கிருஷ்ணர்:இந்த நக்கலெல்லாம் வேணாம் விஷயத்துக்கு வா !  நீ இப்படி சகட்டு மேனிக்கு திரவுபதிய பத்தியும் என்னை பத்தியும் எழுதி வார்ரியே உன்னை என்ன பண்ணா தகும்?
முருகேசன்: அது உங்க சவுரியம் தலைவா ! இதையெல்லாமா பக்தனை கேட்பாங்க
கிருஷ்ணர்:  அடப்பாவி இவ்ளோ பெரிய அட்டூழியம் பண்ணிட்டு இன்னம் பக்தன்னு க்ளெயிம் பண்றியா?
முருகேசன்: இதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது.. ஆள விடுங்க
கிருஷ்ணர்:சரிப்பா புரிஞ்சுக்க முயற்சி பண்றேன் சொல்லு
முருகேசன்: நான் படிச்சது,  லைஃப்ல அப்ளை பண்ணது , அப்சர்வ்  பண்ணினது எல்லாத்தயும் கூட்டிக்கழிச்சு என்  அனுபவப்படி பார்த்தா இந்த காலச்சக்கரத்துக்கு ஆதியே கிடையாது. இது எப்போ ஆரம்பமாச்சோ எவனுக்கும் தெரியாது. ஆனா படைப்பு பிக் பேங்க்லருந்துதான் ஆரம்பிச்சிருக்கனும். இந்த பிக் பேங்கும் எத்தனை தடவை நடந்ததோ  தெரியாது. இந்த கால வெள்ளத்துல எத்தினி கிருஷ்ணனோ ?,எத்தனை ராமனோ ?
கிருஷ்ணர்: அதெப்படி நைனா கன்ஃபார்மா சொல்றே..
முருகேசன்: ராமாயணத்துல ஒரு கட்டம் வருது.
கிருஷ்ணர்: யு மீன் சதுரம்?
முருகேசன்: இதைத்தான் சகவாச தோஷங்கறது. கட்டம்னா ஒரு சீக்வென்ஸ். அதுல ஆஞ்சனேயர் கணியாழியோட ஆகாயவீதியா பறக்கறார்.அப்போ அகஸ்திய முனிவர் " தபாருப்பா..இன்னம் நிறைய தூரம் போக வேண்டியிருக்கு ..வா ஒரு டீ சாப்புட்டு போ"ன்னு  கூப்பிடறார். ஆஞ்சனேயர் இறங்கி வரார். "கையில என்னப்பா?"னு விசாரிச்ச அகஸ்தியர் கணையாழிய வாங்கி கமண்டலத்துல போட்டுர்ரார். முதல்ல சாப்பிடு அப்புறம் கணையாழினு சொல்றாரு. சாப்பாட்டு வேலை  முடிஞ்ச பிறகு ஆஞ்சனேயர் கணையாழிய கேட்கிறார்.
"அந்த கமண்டலத்துல இருக்கு பார் எடுத்துக்கோ" -அகஸ்தியர்
"சாமீ.. இங்கே மஸ்தா கணையாழிங்க இருக்கு "
"அட எதோ ஒன்னை எடுத்துக்கிட்டு போப்பா.. எத்தினியோ ராமன். எத்தினியோ சீதா சிறையெடுப்பு, எத்தினியோ ஹனுமான் அன்வேஷனம் (தேடுதல்) "- அகஸ்தியர்

கிருஷ்ணர்:மொத்தத்துல எங்களோட இருப்பை ஒத்துக்கிடற அப்டித்தானே
முருகேசன்:அவசரப்பட்டா எப்படிங்கணா.. பொறுமை. முதல்ல வந்ததென்னவோ ஒரு செல் அங்கஜீவியான அமீபாதான். அந்த அமீபா தான் மனிதனாச்சு. நீங்கல்லாம் ஐ மீன் ராமன்,கிருஷ்ணன் எல்லாம் அதிமனிதர்களா இருந்திருக்கனும்.  சாதாரண மனிதனோட எண்ணத்துக்கே சக்தி இருக்கிறச்ச உங்க எண்ணங்களுக்கு சக்தி இருக்காதா என்ன? அண்டை வெளில உங்க பேச்சுக்கள்,எண்ணங்கள் மிதக்குது. அதை ஒரு சில மூளைகள் கிரகிச்சுக்குது
கிருஷ்ணர்:அடப்பாவி ஏறக்குறைய எங்களை பித்ருக்களோட பட்டியல்ல சேர்த்துட்ட
முருகேசன்: அப்படி ஏன் இருக்கக்கூடாது? இப்போ எங்காளுங்க குஷ்புவுக்கே கோவில் கட்டினாங்க . நிலைமை இப்படி இருக்க நீங்க ஏன் துவாரகைய நல்ல படி ஆண்ட ஒரு ராஜாவா இருக்க கூடாது. அதனால உங்களுக்கு ஒரு கோவிலை ஏன் கட்டியிருக்க கூடாது.
கிருஷ்ணர்:அப்போ பாகவதம் உண்மைங்கறே
முருகேசன்:மறுபடி அவசரப்படறிங்க்க. உங்க வாழ்க்கை பிளாக் அண்ட் வைட் படம்னா  பாகவதம் கலர் படம். அதாவது கலர் கொடுத்த படம் ஓகே.
கிருஷ்ணர்:அப்போ எல்லாமே பீலாங்கறயா?
முருகேசன்: எல்லாமே பீலான்னு சொல்லல. அதுல சில பல  பீலா ஏன் இருக்கக்கூடாது?
கிருஷ்ணர்:உன் முன்னாடி வந்து நிக்கேனே
முருகேசன்: நிக்கறது நீங்களா இருக்கலாம் . நிற்கவச்சது என் மனம் தானே. விவேகானந்தர் கூட உன் ப்ரார்த்தனைக்கு பலன் கிடைத்தால் அது எங்கிருந்தோ வந்ததல்ல.. உன்னிலிருந்தே வந்ததுங்கறாரே
கிருஷ்ணர்:அப்போ நான் உனக்குள்ளே இருக்கேங்கறியா ..
முருகேசன்:ஏன் இருக்கக்கூடாது. என் தியரிப்படி முதல் ஜீவராசி அமீபா. அதுக்குள்ள பிரவேசிச்ச உயிர் உங்களுக்கும் மூலமான உயிர்/பிரம்மம்/கடவுள் /புனித ஆவி ஏதோ ஒன்னு . அந்த ஒரு உயிர்தானே பல்கி பெருகியது
கிருஷ்ணர்:சரிப்பா மூலத்துல இருந்து வந்தவன் நான்னு ஒத்துக்கிடற இல்லையா ? அப்புறம் எதுக்கு இந்த விமர்சனம்?
முருகேசன்:பாஸ்! உங்களுக்கென்ன ஈஸியா சின்னதா கேள்வி  கேட்டுட்டிங்க.  ராமாயணத்துல ஒரு காட்சி வருது. யாரோ ஒரு சூத்திரன் தவம் பண்ண ஆரம்பிக்கிறான். அதனோட தீட்சண்யம் ஈரேழு பதினாலு லோகத்தையும் தகிக்குது. அப்போ தேவர்கள் எல்லாம் வந்து ராமனா இருந்த உங்ககிட்டே புகார் பண்றாங்க அப்போ நீங்க என்ன பண்ணிங்க?
கிருஷ்ணர்:இது என்னப்பா புதுக்கதையா இருக்கு ?
முருகேசன்:புதுக்கதையில்லே புராணத்துல இருக்கிற பல்லாயிரம்  புருடாக்கள்ள ஒரு புருடா . .புகார் வந்ததுமே நீங்க சல்லுனு ரதமேறிப்போய் அந்த சூத்திரனை ஒரே அம்பால அடிச்சு கொன்னுடறிங்க.
கிருஷ்ணர்: சத்தியமா இதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா ..
முருகேசன்: நிறையப்பேருக்கு தெரியாது தலைவா! முதமுதல்ல படிச்சப்ப என்னமா ஃபீல் ஆயிருப்பேனு  ரோசிங்க
கிருஷ்ணர்:இது மாதிரி இன்னும் என்னென்ன இருக்கப்பா ?
முருகேசன்:மஸ்தா கீது பாஸு ! அதையெல்லாம் இன்னும் பொறுக்கிப்போடாம பொழப்பு நடத்திக்கிட்டிருக்காய்ங்க ..
கிருஷ்ணர்: என்னை ஏத்துக்கிர இல்லையா ?
முருகேசன்: என்னா பாஸு நீ இன்னா மாதிரி கேரக்டர் உன்னை போய் ஏ(ஒ)த்துக்கிடாத இருப்பமா?
கிருஷ்ணர்: நானும் அந்த பதிவை படிச்சேம்பா.. நீ என்னவோ ரொம்ப அரத பழசான விசயத்தைதான் சோல்லவர்ரதா படுது. அதுக்கு ஏன் இத்தனை ரகளை பண்றே
முருகேசன்: பாஸு! உங்களுக்கு தெரியாது. நீ என்ன ஜாதி ? இடை சாதி ? உன் கோவில்ல பூஜை பண்றது யாரு தெரியுமா அய்யர். இன்னா அக்குறும்புபா இது?
கிருஷ்ணர்:அப்டியா ? நம்பவே முடியலைப்பா
முருகேசன்:இன்னமிருக்கு தலை ! ஏற்கெனவே கலர் கொடுத்து கண்டம் பண்ணின சமாச்சாரத்துல பகவத்கீதைன்னு ஒரு பிட்டையும் போட்டுட்டானுங்க. அதுல இருக்கிற சமாச்சாரம் எல்லாம் டுபுக்குனு யு கே ஜி பையன் கூட  சொல்லிருவான்
கிருஷ்ணர்:அப்படியா?
முருகேசன்:அப்படித்தாங்கறேன்
கிருஷ்ணர்:இப்போ என்ன என்னதான் பண்ணசொல்றேப்பா?
முருகேசன்: எனக்குனு ஒரு ப்ளூ ப்ரிண்ட் இருக்கு. ஆஸ்திகம், நாஸ்திகம் ரெண்டுமே தெரியும். ஆனா சத்தியம் ஆஸ்திகத்துலயுமில்லே நாஸ்திகத்துலயும் இல்லே
கிருஷ்ணர்:பின்னே எங்கே இருக்கு?
முருகேசன்: சென்டர்ல இருக்கு
கிருஷ்ணர்: என்னப்பா அசிங்கசிங்கமா பேசறே
முருகேசன்: எவனோ வாட் ஈஸ்தி ஃப்ரண்ட் ஆஃப் தி விமன் வாட் ஈஸ் தி பேக் ஆஃப் தி கௌன்னு கேட்டானாம் (பொம்பளைக்கு முன்னாடி இருக்கிறது என்ன? பசுவுக்கு பின்னாடி இருக்கிறது என்ன?)
கிருஷ்ணர்: ச்சீ ச்சீ ரொம்ப ஓவரா போறே
முருகேசன்:தலைவா இதுக்கு விடை "w"  woman ல முன்னாடி இருக்கிறது  cowல பின்னாடி இருக்கிறது என்ன ? டபுள்யூ தானே
கிருஷ்ணர்: அவ்ளதானா? நான் என்னவோனு நினைச்சிட்டேன் . சரி சரி சத்தியம் சென்டர்ல இருக்குன்னே..
முருகேசன்: ஆமா பாஸு.. ஆஸ்திகத்தோட முடிவுலதான் நாஸ்திகம் ஆரம்பமாகுது   நாஸ்திகத்தோட முடிவுல தான் ஆஸ்திகம் ஆரம்பமாகுது. ஆனால் மறுபடி அது வேற ஒன்னா முடியுது. இந்த இழவெல்லாம் கூடாதுன்னுதான்  நான் சென்டர்லயே இருக்கேன்.
கிருஷ்ணர்: எப்டி?எப்டி?
முருகேசன்: ஆஸ்திகம் நாஸ்திகம் இந்த ரெண்டுல எதுவா இருந்தாலும் சரி மனிதம் (ஹூமானிட்டி)ங்கற விசயத்துக்கு எதிரா போகாதவரை ஓகே. இன்னொரு ப்யூட்டி என்னன்னா ஆஸ்திகமோ நாஸ்திகமோ அது உச்சத்துல இருக்கும்போது ஆஸ்திகம் நாஸ்திகத்தோட பலனை தருது, நாஸ்திகம் ஆஸ்திகத்தோட பலன தருது ?

கிருஷ்ணர்: என்னபா விசு மாதிரி பேசறே
முருகேசன்: டென்ஷனாயிடாத பாஸு கேஷுவலா யோசனை பண்ணு. ஈவெரா நாஸ்திகர்தான் இல்லேங்கலே. ஆனால் முப்பது முக்கோடி தேவர்களால செய்ய முடியாத நன்மைய வேதம் கீதம்னு டைவர்ட் ஆகாம ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டா  மக்களுக்கு செய்ய முடிஞ்சதுக்கு காரணம் என்ன?
கிருஷ்ணர்: நீ தான் சொல்லேன்.
முருகேசன்:மார்க்ஸ் மதம் ஒரு போதைன்னா மாதிரி ஆன்மீகமுன்னேற்றத்துல கூட
மதம் ஒரு போதைதான். ஆமாம். மதம் ஆன்மீக லட்சியத்துல இருந்து கூட மனிதனை டைவர்ட் பண்ணிருது.  உதாரணமா  ஒரு அணை இருக்கு. அந்த அணைக்கு அந்தப்பக்கம் காட்டாற்று வெள்ளமிருக்கு. இந்தப்பக்கம் அணைச்சுவர்ல நாய் சிலை, பேய் சிலை, சிங்கம் சிலை, அசிங்கம் சிலைனு வச்சு அதுக வாய்ல இருந்து வெள்ள நீர் சீறிவராப்ல வச்சிருக்காங்கனு வைங்களேன். இந்த சிலைகளுக்கு மேல உச்சியில கேட்ஸ் இருக்கு. ஆனா இங்கே ஜனம் டேய் நாய் தண்ணிய குடிக்காத.. டேய் பேய் தண்ணி குடிக்காதேனு அடிச்சுக்கறாங்கனு வைங்களேன்.  இதுதான் மதச்சண்டை. இந்த மாதிரி சிலைகள் இருக்கு ..சிலைகளோட வாய் வழியா தண்ணி வருது குடிச்சா டெம்ப்ரரியா தாகம் தீரும்னு ஒத்துக்கிட்டா இவிக பஞ்சாயத்துக்கே ஆயுசு கரைஞ்சு போயிரும். அதுக்காக பெரியார் என்னபண்ணாருன்னா.. முட்டாப்பசங்களா ..இந்த சிலையெல்லாம் எவனோ ஏற்படுத்தினதுடா.. இதுல வர்ரதெல்லாம் சாக்கடை தண்ணினு அடிச்சு விட்டார். ( உண்மையிலேயே இந்த சிலைகளோட வாய்கள்ள வர்ர தண்ணீல சாக்கடை கலந்து விடப்பட்டிருக்கு. )  பகுத்தறிவை ஊட்டினாரு. மேலே போங்கடா ..கேட்டை தூக்குங்கடா .. வெள்ளாமை செய்ங்கடான்னாரு
கிருஷ்ணர்:  சரி உதாரணம்  நல்லாதான் இருக்கு. அவரோட கொள்கையையே முழங்க வேண்டியதுதானே..
முருகேசன்:இதுல ஒரு சிக்கல் வந்துருச்சு தலைவா ! புனிதமா புறப்பட்ட நதில சாக்கடைகள் கலந்துருச்சு . ஆஸ்திகத்தின் பேரால் நடந்த அதே  கொள்ளை நாத்திகத்தின் பேராலும் நடக்க ஆரம்பிச்சுருச்சு.
கிருஷ்ணர்:அதனால நாஸ்திகத்தை பிரச்சாரம் பண்றாப்ல இல்லே
முருகேசன்: இல்லே பாஸு. நாஸ்திகத்தை பின்பற்றனும்னா பெரியார் ரேஞ்சுக்கு வில்பவர் இருக்கனும். அது இல்லாத அடாசுங்கல்லாம்  நாத்திகத்துக்கு வந்து ரெட்டை வேடம் போட்டதால நாத்திகத்துக்கு இருந்த மரியாதை, அதுல இருக்கிற தியாகம், துணிச்சல் ,ஹ்யுமேனிட்டி எல்லாமே ஆவியா போயிருச்சு.
கிருஷ்ணர்: அதனால ஆஸ்திக வழில போகப்போறியா..
முருகேசன்: இல்லே தலைவா! பெரியார் சுட்டிக்காட்டின எந்த குற்றமும் திருத்திக்கொள்ளப்படாத நிலைல பெரியாருக்கு இருந்த தியாகம், துணிச்சல் ,ஹ்யுமேனிட்டியை இந்த மடாதிபதிகள் வளர்த்துக்காததால ஆஸ்திக பாதை ரிப்பேரே ஆகலை. அதுல போற அளவுக்கு எனக்கு பொறுமையுமில்லே. இந்த பஞ்சகச்சங்க பண்ண பஞ்சமா பாதகங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்கற அளவுக்கு நான் கேணையுமில்லே
கிருஷ்ணர்:பின்னே என்னதான் பண்ணப்போறேப்பா?
முருகேசன்:இதுக்கு முன்னாடி சொன்னேனே நாய் சிலை,பேய் சிலைனு. அந்த சிலைகளோட வாய்கள்ள வழியற தண்ணிய ஹ்யுமேனிட்டி, லாஜிக், சைன்ஸ், பகுத்தறிவுங்கற நெருப்பால கொதிக்கவச்சு ஆவியாக்கி சப்ளை பண்ணப்போறேன்.  நதிக்கு அந்த பக்கம் இந்த பார்ப்பார பயலுவ கலந்துவிட்ட சுய நல  சாக்கடைகளையெல்லாம் சீல் பண்ணப்போறேன்
கிருஷ்ணர்:இதெல்லாம் நடக்கற வேலையா?
முருகேசன்:பாஸு! எந்த மதமும் 10 கோடி யூத்துக்கு வேலை தர்ர கண்டிஷன்ல இல்லே. எந்த மதமும் ஜனத்தொகைல 70 சதமா இருக்கிற விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில் செய்றவுகளை  காப்பாத்தி கரை சேர்க்கிற கண்டிஷன்ல இல்லே
கிருஷ்ணர்: இதையெல்லாம் நீ செய்யப்போறியா?
முருகேசன்:இல்லே பாஸு.. நம்ம ஆப்பரேஷன் இண்டியா 2000 செய்யும்.