Saturday, January 16, 2010

"திரௌபதி " ஒரு காமப்பேய்

"திரௌபதி " ஒரு காமப்பேய் என்பதை ஸ்தாபிக்கும் முன் பிராமணோத்தமர்கள், இந்துத்வா வாதிகள் அகமகிழும் ஒரு அற்புதம் குறித்து சில வரிகள்

இன்னைக்கு ஒரு அற்புதம் நடந்தது. அற்புதங்கறதா இல்லே என் அலட்சியத்தால நடந்ததுங்கறதா புரியலை. திரௌபதிங்கற தெலுங்கு நாவலுக்கு சாஹித்ய அகாதமி அவார்டு தரப்பட்டிருக்கு. அதுல என்னமோ திரௌபதி கேரக்டரை எழுத்தாளர் நாஸ்தி பண்ணிட்டாருனு தெலுங்கு டி.வி.சேனல்ஸ்ல ஒரே லொள்ளு. அதுலயும் காங்கிரஸ் கட்சி மகளிரணி தலைவி ஒரு அம்மாள் புலி வேஷமே ஆடிவிட்டார்.

இந்த புராண புருடாக்களை தனிப்பட்ட வகையில ஆராய்ச்சி பண்ணி, அதனோட எசன்ஸ் என்ன? அதனானல போற வழிக்கு ஏதாச்சும் புண்ணீயம் உண்டானு பார்க்கிறதோட  நம்ம ப்ராசஸ் க்ளோஸ். அதை விட்டுட்டு அதையெல்லாம் வச்சுக்கிட்டு  ஜல்லியடிக்கிறதுல எனக்கு சம்மதமில்லே.

ஆரம்ப காலத்துல நான் கூட இது மாதிரி  சில காவிய  முயற்சிகள் செய்ததுண்டு. உம்: கண்ணன் கதை .அவரோட வாழ்க்கைல ஆக்சன்,ரியாக்சன் என்று பார்த்தால் நிறைய பார்க்க முடியும் . அவர் பிறருக்கு என்ன செய்தாரோ அதுக்குண்டான கூலி நிச்சயமா கிடைச்சிருக்கு. அதை வச்சு படம் பண்ணா அந்த ஆர் எஸ் எஸ்ஸும் ஒன்னும் பண்ண முடியாது. உம்:
இவர் கவுரவங்க வமிசத்தை நாஸ்தி பண்ணாரு.அதே மாதிரி யாதவ வமிசம் கூட நாஸ்தியாச்சு.  கர்ணன் சாவுக்கு பூனையா மாறி தாய்பாலை கவுத்து சதி பண்ணாரு. இவர் சாவுக்கும் அது மாதிரி ஒரு சதியே காரணமாச்சு. (அன்பர்கள் கோரினால் இது குறித்து தனிப்பதிவே போடலாம்)


இந்த திரவுபதி நாவலை  எழுதின ஆசாமி பத்தி எனக்கு ஓரளவு தெரியும்.பாவம் பிழைக்க தெரியாத அரசியல்வாதி. என்.டி.ஆர் காலத்துல தெ.தேசத்துல இருந்தவர். சந்திர பாபு என்.டி.ஆர் ,முதுகுல குத்தினப்பவும் என்.டி.ஆரோடவே இருந்தவரு. என்.டி.ஆர் செத்தபிறகும் லட்சுமி பார்வதிய எப்டியாவது ஒப்பேத்திரலாம்னு உழைச்சவரு. காட்டன் துரையோட கல்லறைய தேடி லண்டன் வரை போய் வந்தவர்.


அப்படி என்னதான் எழுதிட்டாருனு பார்த்தா ஒரு மண்ணுமில்லே. சர்ச்சைல பேசிக்கிட்டத வச்சி பார்த்தா குந்தி (மாமியார்)  திரவுபதிய (மருமகளை) முதலிரவு அனுபவத்தை விசாரிச்சதா எழுதியிருக்காராம். அர்ச்சுனன் ( மச்ச யந்திரத்தை அடிச்சு ஜெயிச்சு வந்தவங்கறதாலயும்)  பீமன் (பலசாலி,அப்பப்போ திரௌபதியம்மாவோட கோரிக்கைகளை தீர்த்து வச்சதாலயும் - டெக்காமெரான் தனமா கற்பனை பண்ணிக்கிடாதிங்க ஒரு தரம் மனோரஞ்சிதமலர் கொண்டு வந்து தரார், கீசகனை வதம் பண்றார், துரியோதனன் வஸ்திராபரணம் பண்ணதுக்கு நாகரிகமான ஹேர் ஆயில் அதான் ரத்தத்தை சப்ளை பண்றாரு , துரியோதனன் துடைய பிளக்கிறார்) தர்மபுத்ரன் ( டெசிஷன் மேக்கர்) என்பதால் இந்த மூவர் மேல் மட்டும் ஸ்பெஷல் அஃபெக்ஷன் வைத்திருந்ததாய் எழுதியிருக்காராம்.), பாவம் நகுல சகாதேவர்கள் டச் மி நாட் தானாம்.

ஓஞ்சு போவுது நியாய தர்மமா நாமளும் ஒரு பதிவை போட்டுரலாம்னு முந்தா  நேத்து மாஞ்சு மாஞ்சு நாலு பாரா அடிச்சேன்.பொத்தாம் பொதுவா புராணத்தை பத்தின என் கருத்தோட அசலான விஷயத்துக்கு வரதுக்குள்ளே பசி எடுக்கவே சாப்ட்டுட்டு வரலாம்னு போனேன்.   இந்த சிஸ்டத்துல சி ட்ரைவ் லாக் பண்ணிவச்சிருக்கு. வைரஸ் பயம்தான். பை மிஸ்டேக் சி ட்ரைவ்ல சேவ் ஆயிருச்சா என்ன தெரியல.அப்படி சேவ் ஆனா சிஸ்டம் ஆஃப் ஆயி ஆன் ஆனதுமே அந்த ஃபைல்ஸ் எல்லாம் தேர்தல் உறுதிமொழி மாதிரி காணாம போயிரும்.  இப்படி முதல்ல தட்டச்சின ஃபைல் காணாம போனதுமே டர்ராயிட்டேன். ஆத்தா கோச்சுண்டாளா என்னடானு.

ஆனா ஒன்னு. புராணம் நிஜம்னு நம்பிட்டா பாப்பாரவுக  நம்ம தலையில சாணி கூடையையே ஏத்தி வச்சுட்டு அதுல ஒண்ணுக்கும் அடிச்சுருவாக. பெரியார் தம் உள்ள ஆசாமி அவருக்கு கடவுள்கிட்டே என்னா மாதிரி டீல் இருந்ததோ தெரியாது. கடவுள் அவரை எந்த நோக்கத்தோட அனுப்பினாரோ தெரியாது. அதான் பெரியார் செம தில்லா கடவுள் என்ற சமாச்சாரமே  டுபாகூர்... ஓடுங்கடான்னு சவால் கேட்டுட்டாரு.

நம்ம கதை எப்படின்னா டவர் சரியா வராதப்போ செல் சம்பாஷணை மாதிரிதான் நமக்கும் ஜேஜிக்கும் உறவு. பார்ட்டி ஒன்னு சொல்லி நாம ஒன்னு செய்து எதுக்கு லொள்ளுன்னு ஜாஸ்தி பூசிக்கிறதுமில்லை. கனெக்சனை வெட்டிவிடறதுமில்லே. ஏதோ ஒரு மாதிரியா போய்க்கிட்டிருக்கு.

கடவுள் என்ன கை விட்ட சந்தர்ப்பம் அனேகம். ஆனால் நான் அவரை விடறதா இல்லே. அதுக்காக இந்த பஞ்சகச்சங்கள் அவுத்துவிடற பீலாவ எல்லாம் நம்பி அவிகளுக்கு சரண்டராகற மாதிரியுமில்லே.

என் சித்தாந்தம் என்னனு ஏற்கெனவே பல தரம் சொல்லியாச்சு. இங்கே இருக்கிறது ஒரே உயிர். உடல்கள் தான் வேற. நம்ம மனசுல இந்த சமூகம் இன்செர்ட் பண்ணீட்ட ஈகோவால இதை உணர முடியறதில்லை தட்ஸ் ஆல். இந்த சத்தியத்தை உணர ஈகோ ஃபணாலாகனும். ஈகோ ஃபணாலாயிட்டா ராமனு நானே  கிருஷ்ணனும் நானே.

என்னை பொருத்தவரை ஆத்தா அனாமிகா (பெயர் இல்லாதவ)  அதே சமயம் இந்த உலகத்துல இருக்கிற எல்லா பெயருமே அவளோடதுதான். இதை எப்படி விளக்கறதுன்னா பில் கேட்ஸ் சட்டைப்பையில சில்லறையா எவ்ள வச்சிருப்பாருங்கறிங்க. அந்த மாதிரி எல்லா பேரும் அவளோடதா இருக்கும்போது அவளுக்கென்ன பேரு. எல்லா உருவமும் அவளோடதா இருக்கும்போது அவளுக்கென்ன உருவம்.

எல்லா பெண்களுமே அவளோட உருவம்தானு நினைக்கிற ஸ்டேஜுல இருந்தாலும் ,
எந்த வேசியையும் மனம் நிறைய அம்மானு கூப்பிடற ஸ்டேஜுல இருந்தாலும் திரவுபதி கூட ஆத்தாவோட சொரூபமா இருந்தாலும் " நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே " என்று தான் இந்த பதிவை போடுகிறேன்.

சரோஜா தேவி நாவல்ல கூட வராத சம்பவங்கள எல்லாம் வச்சு ஒரு கதை எழுதி வப்பாங்க. அதுல ஒரு பாத்திரம் திரவுபதி. அந்த பாத்திரத்தோட அவுட் லைனை வச்சு தன் கற்பனைய கலந்து  ஒரு ஆசாமி ஒரு  நாவல் எழுதிட்டா அதுக்கு அவரோட மனைவி, அம்மா கேரக்டரை ஆராயனும்னு மேற்படி மகளிரணி சொல்லுது.  பையங்க மேல அம்மா, மனைவி இம்பாக்ட் தான் அதிகமா இருக்குமாம்.

வேசித்தனம் செய்த பெண்ணை கல்லாலடித்து கொல்லச்சொல்லி வேதம் சொல்லுது . நீ என்ன சொல்றேனு ஏசுவை கேட்டாங்களாம் .அதுக்கு அவர் "உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர்கள் மட்டும் கல்லெறியுங்கள்"னாராம்.

அட டுபுக்குங்களே !  திரவுபதி இருந்தாளோ இல்லையோ தெரியாது. அவளுக்கு அவமானம் நடந்து போச்சுனு உயிரோட இருக்கிற அந்த எழுத்தாளனோட தாயையும், மனைவியையும் அவமானப்படுத்தறதுக்கு துணிஞ்சிட்டயே நீ என்ன பத்தினியா? ( உடனே பெண்ணிய வாதிகள் ஆகா இதாண்டா ஆணாதிக்க மனப்பான்மை என்று வரிந்து கட்டவேண்டாம். இங்கே கற்பை நான் அளவு கோலாக கொள்ளவில்லை. மேற்படி மகளிரணிதான் கொண்டார்.) அரசியல்ல, அதுவும் இந்தியால ,அதுவும் காங்கிரஸ்ல ஒரு கவுன்சிலர் ரேஞ்சுக்கு ஒரு பெண் போகனும்னாலே எத்தனை வேசித்தனம் தேவைனு கவுன்சிலர் டிக்கட் கிடைக்காத தாய்மார்களை கேட்டுப்பாருங்க. இவுக மகளிரணி அதுவும் மானில அளவு. சரி பதிவு போற போக்கே சரியில்லை. விசயத்துக்கு வந்துர்ரன்.

திரவுபதி ராஜாமகள். சுயம்வரம் நடக்குது. அர்ச்சுனன் மச்ச இயந்திரத்தை அடிக்கிறான். திரவுபதி மால சூட்டறா. வீட்டுக்கு வராங்க. அர்ச்சுனன் "அம்மா ஒரு பழம் கொண்டாந்திருக்கேன்றானாம்"  வியாச மகரிஷியோட (?)கற்பனைய பாருங்க  பழமாம். சுயம், உயிர்,உணர்ச்சி, கருத்து இத்யாதி கொண்ட பெண்ணை  நாலு நாள்ள அழுகிப்போற பழம்ங்கறான். உடனே அம்மாக்காரி " நைனா அஞ்சுபேரும் பிரிச்சுக்கங்கடாங்கறாளாம்" என்ன ஒரு கற்பனை பாருங்க. இந்த கூமுட்டை அர்ச்சுனன் சொல்லும் போதே ஒழுங்கா சொல்லியிருக்கனும். சொல்லல ஓஞ்சு போட்டம். கிழவி கண்ணால பார்க்கிறால்ல ஒரு பொண்ணு வந்து நிக்கறத. அப்பயாச்சும்  அறிவு கெட்டவே இதென்ன பழமாடா பகிர்ந்து தின்ன. இவள் உன் பெண்டாட்டி என்று சொல்லியிருக்கலாம். அட கிழவிக்கு  தான்  அறிவில்லே. ( இதுல டீன் ஏஜ்லயே அடிபட்ட கேசாச்சே. சூரியனோட ரொமான்ஸ் பண்ணி கர்ணனை பெத்து விட்டவதானே. சரி அடலசன்ட் ஏஜ் பொன பிறகு மாத்திரம் என்ன வாழ்ந்தது ? பாண்டு பாவம் டம்மி பீஸு. எமன், வாயு, இந்திரன்னு கொண்டாடின பார்ட்டியாச்சே. அட இந்த அர்ச்சுனனுகாவது அறிவிருக்க வேணாம். "அட கிழப்பொணமே ..கொண்டு வந்தது பழத்தை இல்லே ..பெண்ணை .." என்று சொல்லியிருக்கலாமே.

அட இதுவும் வேணாம் விடுங்க. அர்ச்சுனன் ஜொள்ளு பார்ட்டி, குந்தியும் லோலு. மத்த மூணு பேருமாவது அப்ஜக்ஷன் சொல்லியிருக்கலாமே. ஒரு பன்னாடையும் சொல்லல. அந்த காலத்துல பஹு பார்த்ருத்வம் ( அதாங்க பல கணவன் முறை)  நடை முறைல இருந்திருக்கு. அஞ்சு பேரும் போய் அஞ்சு மாலை வாங்கி வந்திருந்தாலும் அது வேற கதை. தாளி.. போனது ஒருத்தன். இங்கே வந்தா   நிலைமை இப்படி ?

உண்மையிலயே திரவுபதி ஒரு சாமானிய பெண்ணாயிருந்திருந்தாலும் " இன்னாடி இது அக்குரும்பா இருக்கு. கிழவிக்கு தான் அறிவில்லேன்னா இந்த மன்சனுக்குன்னா அறிவிருக்க வேணாம்.. எனக்கு இந்த வாழ்வும் வேணா ஒரு மசிரும் வேணாம்" என்று தன் நாட்டுக்கு திரும்பியிருக்கனும். ஆனால் இந்தம்மா அஜீஸ் ஆயிர்ராங்க.
அப்போ என்ன அர்த்தம். திரவுபதி ஒரு நிம்ஃபோனு தானே நினைக்க வேண்டியிருக்கு. இந்த பல கணவன் முறைல ஷெட்யூல் எப்படி போடுவாங்க. அகாலத்துல வீரியம் புரண்டா டர்ன் இல்லாதவன் என்ன செய்றது? டர்ன் வந்தப்ப "முடியல"ன்னா என்ன செய்றது.?  எந்த பையன் எந்த தகப்பனுக்கு பிறந்தானு எப்டி கண்டுக்கறது ? அந்த காலத்துல ஜென்யூ டெஸ்ட் கூட கிடையாதே

சரிப்பா.  துரியோதனன் மாய சபைக்கு வரான் தவறி விழுந்துர்ரான். உடனே அதை பார்த்து  சிரிக்க வேண்டிய அவசியம் என்ன? துரியோதனன் யாரு? இவிக வீட்டுக்காரனுகளுக்கு தம்பி முறை. இந்தம்மாவுக்கு மச்சினன். அவன் தவறி விழுந்ததுக்கு சிரிபபனேன். சரி சிரிச்சேல்ல படக்குனு மன்னிப்பு கேட்டு யுத்தத்தை தவிர்த்திருக்கலாம்ல.   இது வரைக்கும் நடந்தத கூட விட்டுரலாம். சூதாட்டத்துல தோத்து போயி பாண்டவங்க வனவாசம் போறாங்கல்ல.  அப்போ இந்த பொம்பளைக்கு காட்ல  என்ன வேலை?  நிம்மதியா குந்தி தேவிக்கு சேவை செய்துக்கிட்டு கிடக்கலாம்ல. ஏன் காட்டுக்கு போனாப்ல?  காட்ல அஞ்சு குடிசையா போட முடியும். கு,பட்சம் அஞ்சு கூடாரம் கூட போட்டிருக்கமுடியாது. ஆனாலும் திரவுபதி காட்டுக்கு போனாக இதுக்கு என்ன  அர்த்தம்.திரவுபதி  நிம்ஃபோனுதானே  இதை கூட விட்டுருவம் .

பாண்டவங்க அஞ்ஞாத வாசம் போறாங்க. வனவாசத்துலயாவது இவிங்களை  ஸோ அண்ட் ஸோனு தெரியும் . ரிஸ்க் கம்மிதான்.  அஞ்ஞாத வாசத்துல இந்த ஃபெசிலிட்டி கூட கிடையாதே ஏன் போகனும்? திரவுபதி ஒரு நிம்ஃபோனு சொல்ல இதைவிட ஆதாரம் என்ன வேணும்?

அந்தம்மா (சரி அந்த பாத்திரம்னு கூட வைங்க) செய்தா தப்பில்லயாம் .அத பத்தி எழுதினா தப்பாம். எங்கத்தி நியாயம்டா சாமி.