Sunday, January 10, 2010

துணை எழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் சுஜாதா மீது எனக்கொரு பிரமிப்பு எப்போதும் உண்டு.  சிங்கிள் காலம் ந்யூஸுக்கு மட்டுமே தகுதியுள்ள ஒரு சாதாரண என் கவுண்டரை கூட ஒரு அற்புதமான சிறுகதையாக மாற்றும் ஜாலக்கு சுஜாதாவுக்கு உண்டு. அவர் எழுத்துக்களில்  வலிந்தோ, போகிற போக்கில் அவரையறியாதோ பிராமணீய விஷ விதைகள் கலந்தாலும் அவற்றை கண்டறியும் திறன் வந்துவிட்டதாலும், அவரை தாண்டி ஏராளமான எழுத்தாளர்கள், அவர் எழுத்துக்களை தாண்டியும் எழுத்துக்கள் உண்டு என்ற புரிதலாலும்  சுஜாதாவின் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பதில் எனக்கேதும் கொள்கை பேதமில்லை.

சுஜாதாவுக்கு பிறகு தவளைப்பாய்ச்சல் நடை என்று சொல்ல முடியாவிட்டாலும் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களின் வீச்சு என்னை கவருகிறது. வெகுஜன பத்திரிக்கைகளில் வெளிவந்த அவர் எழுத்துக்களை அவ்வப்போது படித்திருந்தாலும் அவர் எழுத்துக்களின் உத்தேசம் எனக்கு புரிபட்டுவிட்டது.

உண்மை கலைஞன் என்பவன் அவன் என்னதான்  வார்னர் ப்ரதர்ஸுக்கு கதை எழுதி னாலும், அமெரிக்காவிலேயே பிறந்து வாழ்ந்தாலும், அட அவன் வாஜ்பேயியாகவே இருந்தாலும் அடிப்படையில் அவன் கவிஞன் தான் அவனை செலுத்துவது மனிதம், கருணை, அபேத பாவம், குழந்தைமை , இடது சாரி ஆதர்சங்கள், நாடு கடந்த பொதுமை இப்படி எத்தனையோ !

"அரசியல் வாதி வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியே இல்லை
காரணம் அவன் முகம் அதில் தெரிந்துவிடுமே"
-இந்த வரிகளை எழுதிய கவிஞர் யார் என்பதை இப்பதிவின் இறுதியில் பாருங்கள்.

கலைஞர் மு.கருணாநிதி

நல்ல எழுத்தின் அடையாளம் :
அதில் சொல்லாமல்  விடப்பட்டவை ,தொடராமல் விடப்பட்டவை ஊமை கண்ட கனவு கணக்காய் வாசகன் மனதில் பல காலம் மச மசப்பதே. சமீபத்தில் நான் படித்த
எஸ்.ராமகிருஷ்ணனி "துணை எழுத்து " இந்த வகையை சேர்ந்ததே.
நிறைய எழுத்தாளர்கள் பாத்திரங்களின்  அப்சர்ட் செயல்பாடுகளை , அதிலும் முக்கியமாய் அவர்களது "தேடிப்போன ராவுகளை" வர்ணிப்பதே புதுமை என்ற மதிமயக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை பசித்த புலி தின்னட்டும் ( நன்றி: சுஜாதா)

(To be Continued