பிராமணீயம் பற்றி நான் போட்ட 2 பதிவுகளை வைத்து என்னையும் ஒரு பட்டியலில் வைத்து வ.எண் கொடுத்துவிட்டார்களோ என்றொரு சந்தேகம் பிறக்கிறது. பகிரங்க மறுமொழிகள் சொற்பமே என்றாலும் தனிப்பட்ட மெயில்கள் ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டன. பிராமணீயம் ஒழிந்து விட்டால் நாட்டின் அனைத்து கால்வாய்களிலும் பாலும் தேனும் கரை புரண்டோடும் என்று சத்தியம் செய்ய நான் தயாராக இல்லை. கர்ணன் சாவுக்கு எத்தனை காரணங்கள் உண்டோ அத்தனை காரணங்கள் நம் நாட்டின் இழி நிலைக்கும் உண்டு. வர்ணாசிரம தர்மம் முதல் கோணை முற்றும் கோணை என்பது போல் அமைந்து சரித்திரத்தை திருப்பி விட்டதே தவிர அழிவுப்பாதையை நோக்கி உந்தி தள்ளியதும் அதுவே என்று சொல்வதற்கில்லை.
நாட்டின் சரித்திரத்தை ( கு.பட்சம் சுதந்திர இந்தியாவின்) புரட்டி பார்த்தால் காரண காரியங்கள் புரியும். முதற்கண் வாக்குரிமை குறித்த நேருவின் கண்ணோட்டம் இந்திய ஜன நாயகத்துக்கு முதல் இடியாகிவிட்டது. பல நூற்றாண்டுகளாய் பெரும்பான்மை மக்கள் கல்வி மறுக்கப்பட்டு வாழ்ந்த நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது முட்டாள் தனமாகவே முடிந்தது. சிலர் டேக்ஸ் பேயர்ஸுக்கு மட்டும் வாக்குரிமை என்பார்கள்.ஒரு தீப்பெட்டி வாங்குபவன் கூட டேக்ஸ் கட்டுகிறான். எனவே அனைவரும் வரி கட்டுவோராகவே இருக்கிறோம்.
கல்வி தகுதி என்று பார்த்தால் மெக்காலே பிரபு அமல் செய்த கல்விதான் இன்றும் அமலில் இருக்கிறது. எனவே கல்வியை ஓட்டுரிமைக்கான தகுதியாக நான் பரிந்துரைக்க மாட்டேன். பின்னே என்னதான் செய்ய?
இந்திய சரித்திரத்தில் சாமானிய இந்தியன் வாழ்வில் திருப்புமுனைகளாக அமைந்த 100 அம்சங்களை கேள்விகளாக்கி அவற்றை ஒரு கணிணி கேட்க 35 கேள்விகளுக்காவது பதில் சொல்பவர்களுக்கு மட்டும் வாக்குரிமை அளிக்கலாம். இதற்கான பதில்களை முன் கூட்டி ( மூன்று மாதங்கள் வரை) வெகுஜன ஊடகங்களில் ப்ராட்காஸ்ட் செய்யலாம். கணிணி அறிவுடையவர்கள் ஆன் லைன் மூலமும் , எழுத,படிக்க தெரிந்தவர்கள் தேர்வுகள் மூலமும் பதிலளிக்க ஏற்பாடு செய்யலாம். உள்ளே வெளியே தனமான ஆப்ஜெக்டிவ் டைப் மற்றும் கூடாது. க்வான்டிட்டி குறைந்தால் தான் க்வாலிட்டி அதிகரிக்கும். ஓட்டுப்போட வராதவர்களின் மனுவை எந்த அரசுத்துறையும் பரிசீலிக்கக்கூடாது.
அது சரி இதையெல்லாம் நடாத்த இன்றைய " நிர்வாக அமைப்பு " ஏற்றதா என்றால் இல்லை. தாளி.. ஆறாம் வகுப்புக்கு டெக்ஸ்ட் புக் எழுதச்சொன்னாலே அதில விஷத்தை விதைக்கிற அதிகார வர்கத்தின் அடிவருடிகளான மேதைகள்/அதிகாரிகள் உள்ள நாடிது. பின்னே என்னதான் செய்ய?
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம்:
1.அனைத்து கட்சி கூட்டங்களை நடாத்தி அடுத்த 25 ஆண்டுகளுக்கான காலக்கெடுவுடன் கூடிய செயல்திட்டமொன்றை வடிவமைக்க வேண்டும். எந்த கட்சி வென்றாலும் ,தோற்றாலும் இந்த செயல்திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று சட்டமியற்றி இதை சூப்பர் வைஸ் செய்யும் அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சுக்கு அளிக்கலாம்.
2.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி:
.கட்சிகள் வசூலிக்கும் தேர்தல் நிதி மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிய வேண்டும். கார்ப்போரேட் கம்பெனிகள் போல் அவை தேர்தல் நிதியை திரட்ட ஷேர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். அவற்றுக்கான டிவிடெண்டை குறிப்பிட்ட கட்சி பெற்ற வாக்கிற்கிணங்க அரசே ஷேர் ஹோல்டர்ஸுக்கு வருடா வருடம் தர வேண்டும்.
ஊழலின் ஊற்றுக்கண் இந்த தேர்தல் நிதிதான். ஏற்கெனவே கட்சிகள் இதே வேலையை தான் சட்ட விரோதமாக செய்து வருகின்றன. 100 கோடி நன் கொடை கொடுத்த கார்ப்போரேட் கம்பெனி ஐந்தாண்டு காலத்தில் 10000 கோடி கொள்ளையடிக்கிறது. இதை சட்டப்பூர்வமாக்கி தொலைத்து விட்டால் இவனுக வாங்கின ஒரு பைசா தேர்தல் நிதிக்காக 99 பைசா மக்கள் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்கலாம். அரசாங்கத்தின் வளர்ச்சி மற்றும் நல திட்டங்கள் திட்டங்கள் பக்காவாக அமலாக வழிவகை ஏற்படும். தொண்டர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை தடை செய்து ஷேர் ஹோல்டர்கள் என்று மாற்றிவிடலாம். ( உறுப்பினர் சேர்க்கையின் போது செலுத்தப்படும் ரூ.10 ஒரு ஷேராக கருதப்படும்) இதனால் உட்கட்சி ஜன நாயகமும் ( பண நாயகம்னே வச்சுக்கங்க) செழிக்கும். வார்டு மெம்பரா ஜெயிக்க முடியாத நாய் எல்லாம் கூட்டிக்கொடுத்து மாவட்ட செயலாளராக முடியாதில்லயா?) தேர்தல் கமிஷனே இந்த கட்சி (கம்பெனி ) தேர்தல்களையும் நடத்தி தரலாம். பொதுக்குழு , செயற்குழு மினட்ஸ் கூட மெயின்டெயின் செய்யலாம்.
நிரந்தர தேசீய அரசு:
அரசியல், ஊழல் சாக்கடையை நிர்வாகத்தில் கலக்கவொட்டாது தடுக்க. நாடு தழுவிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தி அதில் கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை பொருத்து 25 ஆண்டுகளுக்கு பாராளுமன்றத்திலும், அந்தந்த மானில சட்டப்பேரவைகளிலும் நிரந்தர பிரதி நிதித்துவம் தரலாம். ஒரு கிழவாடி இறந்தால்
இன்னொரு கிழவாடியை அந்த கட்சியே நியமிக்கட்டுமே.
25 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்க சில வழி காட்டுதல்கள்:
1.நாடு தழுவிய சர்வே ஒவ்வொரு குடிமகனின் விவரங்களும் கம்ப்யூட்டர்களில் பத்திரப்படுத்தப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் செயல்திட்டம் கூர்மை படுத்தப்படவேண்டும்.
2.சர்வே முடிவுகளின் அடிப்படையில் எந்த துறை எத்தனை பேருக்கு பிழைப்பு தருகிறது என்ற அடிப்படையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் உம்: விவசாயத்துறை 70 சதம் மக்களை வாழ்விக்கிறதென்றால் பட்ஜெட்டில் 70 சதவீதம் விவசாயத்துறை முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். அந்த 70 சதம் நிதியும் வாழ்விக்கப்படுவோரில் ஆண், பெண்கள் எத்தனை பேர் குழந்தைகள் எத்தனை பேர் என்ற புள்ளிவிவர அடிப்படையில் பிரித்து செலவிடப்பவேண்டும். இதில் நில உரிமையாளர்கள் எத்தனை பேர், கூலிகள் எத்தனை பேர் பார்க்க வேண்டும். அதிலும் பெரு,குறு,சிறு விவாசாயிகள் எத்தனை பேர், வீடற்றோர்,வீடுள்ளோர் எத்தனை பேர் இப்படியாக வராக மூர்த்தி ரேஞ்சில் துளைத்து சென்று விவசாயத்தோடு அவர்களின் வாழ்வும் சிறப்புற நிதி ஒதுக்கவேண்டும்
3.தற்காலிகமாக தற்கால பிரச்சினைகளுக்கு தற்கால தீர்வுகளுக்கு செலவழித்தாலும் நிரந்தர தீர்வுக்கு நிதி ஒதுக்கி செயல்பட ஆரம்பித்துவிட வேண்டும். உ.ம் டாக்டர் .ஒய்.எஸ்.ஆர் தற்காலிகமாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தாலும் நிரந்தர தீர்வாக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் ஜலயக்னம் ஆரம்பித்தார்.
3.பிரச்சினைகள் வந்த பிறகு அலறிப்புடைப்பதை காட்டிலும் ப்ரிவென்ஷன்ஸ் அண்ட் ப்ரிகாஷன்ஸுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். உ.ம் ஈவ் டீசிங், கற்பழிப்புகள், செக்ஸ் டார்ச்சர், கள்ளக்காதல் , அடல்ட்ரி தொடர்பான குற்றங்களை தவிர்க்க விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குதல். தொற்று நோய்கள் பரவிய பின் பதைப்பதை விட பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல் , கழிவறைகள் அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகள் சேனிட்டேஷனை திறம்பட மேற்கொள்ள வழிவகை செய்தல், சத்துணவு குறித்த விழிப்புணர்ச்சியூட்டுதல்