Saturday, January 23, 2010

செக்ஸ் பவர் உள்ளவனை செக்ஸ் தேடி வருது

நம் வலைப்பூவில் அவ்வப்போது நான் போடும் பலான பதிவுகளால் கவரப்பட்டுஅறியா பிள்ளைகள் எல்லாம் கவிதை07 ல் லாகின் ஆகி பதிவுகளை அதிலும் பலான மட்டும் மாய்ந்து மாய்ந்து படிப்பதை அறிந்து (ஃபீட்ஜெட் மூலம்) இந்த பதிவை போடுகிறேன். ஆமாம் இந்த பலான சமாச்சாரங்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கவர்ச்சி? மத்த காரியத்தை எல்லாம் செய்து முடிச்சுர்ரம் அதுனால அதுகளை பத்தி பேச்சே இருக்கிறதில்லை. இந்த பலான விஷயம் மட்டும் சாகற முட்டும் கண்ணாமூச்சி காட்டிக்கிட்டே இருக்கு. இதுல ஆம்பள பொம்பள வித்யாசமெல்லாம் இல்லை .இல்லவே இல்லை.

ஏண்டான்னா இதை பத்தி யோசிச்சாலே கில்ட்டி. ஜேஜி கண்ணை குத்திருமோ ? சரி யோசிச்சு யோசனையோட சூடு தாங்காம ஜட்டில ஆஸ்திரேலியா மேப் கீப் விழுந்துட்டா இன்னமும் கில்ட்டி. கொஞ்சம் தைரியம் பண்ணி சுய இன்பம் அது இதுனு போயிட்டா படுபயங்கர கில்ட்டி. " ஆதலினால் காதல் செய்வீர். "னு பாரதியார் சொன்னாரேன்னிட்டு காதலிக்கலாம்னா அது ஃபெயிலாயிட்டா தாடி வளர்க்கனும், இல்லே நாண்டுகிட்டு சாகணும், இல்லே பொண்ணு வீட்டுக்காரன் வெட்ட வந்தா அரிவாளை தூக்கிக்கிட்டு ஓடனும். இதெல்லாம் நடந்தாலும் பரவால்லை லவ் சக்ஸஸ் ஆகி கல்யாணத்துல முடிஞ்சு போனா கதை கந்தல்தான்.

அதனால உண்மையானவன், சிந்திக்கற சக்தியிருக்கிறவன் காதல் பக்கம் ஒதுங்கறதே இல்லை. பின்னே செக்ஸுக்கு என்னதான் வழி. இப்படி ரோசிச்சு ரோசிச்சு செக்ஸுங்கறது ஒவ்வொரு செல்லுலயும் கெட்டியா, திக்கா பதிவாயிருது. செக்ஸை செய்தா ஏதாச்சும் கிடைக்க வாய்ப்பிருக்கே தவிர ரோசிச்சா மட்டும் செக்ஸ் பவர் கூட ஃபணாலாயிருது

செக்ஸ் பவர் உள்ளவனை செக்ஸ் தேடி வருது. மலரை தேடி வண்டு வராப்ல. அது இல்லாதவன் "ச்சும்மா ச்சும்மா ஜொள் விட்டு விட்டு தன் செக்ஸ் பவரை வீணாக்கிர்ரான். கூடவே ஆத்மசக்தியும் ஃபணாலாயிருது.

இன்னம் என்னதான் செய்யறது? அதான் செக்ஸை பத்தி பேசி பேசி, யோசிச்சு யோசிச்சு ஜனம் மாயுது. எவனாச்சும் "நேத்து நிம்மதியா தூங்கினேம்பா" என்று தினசரி சொல்கிறானா? இல்லை. இதுவே அவனுக்கு சீக்கு வந்து பத்து நாள் தூக்கமில்லாம செத்து சுண்ணாம்பாகி பதினோராவது நாள் நிம்மதியா தூங்கறான்னு வைங்க ..மறு நாள் அவனோட செய்திபத்திரிக்கைல தலைப்பு செய்தியே "அவன் நல்லா தூங்கினதுதான்"

செக்ஸுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்:

உயிர் வாழ்தலும் ,இனப்பெருக்கம் செய்வதும் உயிர்களின் தலையான கடமைகளாகும். உயிர்களிடம் இயற்கை எதிர்பார்ப்பது இவ்விரண்டைதான். அதனால் தான் எம்.பி.ஏ படித்தவனாகட்டும், எம்ப்டி ஸ்லேட்டாகட்டும் பலான சமாச்சாரத்தின் பால் கவரப்படுகிறான்.

மேலும் பலமுறை நான் சொல்லி வந்ததை போல் எல்லா உயிர்களுக்கும் மூலம் அமீபா. அது ஓருயிர் ஓருடலாக இருந்த போது காலம்,தூரம், பயம்,கம்யூனிகேஷன் போன்ற பிரச்சினைகள் ஏதுமின்றி இருந்தது. அது கொழுத்து இரண்டாக பிரிந்தது. செல் காப்பியிங் எரர் காரணமாய் புதிய ஜீவ ராசிகள் தோன்றின. ஆனால் "ஓருயிர் ஓருடலாக " இருந்த நினைவுகள் மட்டும் செல் காப்பியிங் மூலம் தொடர்ந்து வந்தன. மீண்டும் ஓருயிராக மாற தடை இந்த உடல்களே என்ற எண்ணம் உடல்களை உதிர்க்க தூண்டுகிறது.

இதனால்தான் சைக்காலஜி கூறும் கொல்லும், கொல்லப்படும் இச்சை ஏற்பட்டது. கொல்லுவதும் கொல்லப்படுவதும் செக்ஸில் சாத்தியம் என்பதால் தான் செக்ஸ் மீது இத்தனை ஆர்வம்.

நம்ம சமுதாயத்துல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டுள்ளதால செக்ஸுக்கு மாற்றா வன்முறை, தீனி, பணம், கோல்டு, அழகு, அதிகாரம்னு டைவர்ட் ஆயிர்ராங்க. கொலை பசில இருக்கிறப்ப சாப்பிட்ட ஸ்னாக்ஸ், சேவரீஸ் எல்லாம் பசியையும் கொன்னு, அந்த பசியை முழுசாவும் தீர்க்காம மறுபடி சோத்துக்கே அலைய விடற மாதிரி செக்ஸுக்கு ஆல்ட்டர்னேட்டிவா மனுஷன் சேர்த்துக்கிட்ட சமாச்சாரம்லாம் இவனோட செக்ஸ் பவரை நாசம் பண்ணி மறுபடி செக்ஸுக்கே அலைய விடுது.

சரி விசயம் ரொம்ப அடர்த்தியாயிருச்சு. அடுத்த பதிவுல பார்ப்போம்.