Wednesday, January 13, 2010

அதை லீகலைஸ் பண்றது பத்தி யோசிங்க - சுப்ரீம் கோர்ட்

கே:உங்கள் வலைப்பூ ஒரு லட்சம் ஹிட்ஸை நெருங்கும் இந்த வேளையில் நீங்கள்
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: என்னங்க நீங்க ஏதோ இப்பத்தான் 75 ஆயிரத்தை தாண்டியிருக்கு அதுக்குள்ளாற இந்த பில்டப்பு ஏன் ?
கே: சரி 75 ஆயிரமே கூட வச்சுக்கங்க இதை பத்தி என்ன நினைக்கிறிங்க?
ப: எப்படியோ என்னை உசுப்பேத்தி வாய பிடுங்கறதுனு முடிவு பண்ணிட்டிங்க அப்படிதானே. செப்பு மொழி பதினெட்டுடையாள்னு பாரதியார் சொன்னாரு. அந்த பதினெட்டுல தமிழ் ஒரு மொழி. என் செய்தி இந்த உலகத்துக்கானது. கு.ப. இந்தியாவுக்கானது. இந்திய ஜனத்தொகை 120 கோடிய தாண்டி ஓடுது இதுல எழ்த்தறிவில்லாதவுகளை விட்டுட்டாலும் 55 சதவீதம் பேரை நானும் என் செய்தியும் சென்றடையனும். இன்டர்னெட்டை பார்க்கிறவுக வெறும் 2 சதம்தானு கேள்விப்பட்டேன். இதுல தமிழ் எவ்ளோ ? தமிழ் வலை தளங்கள்ள ப்ளாகர் டாட் காம் எவ்ளோ அதுல கவிதை07 க்கு வர்ரவங்க சதவீதம் எவ்ளோ. 75 ஆயிரம்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறிங்க ...சோளப்பொறி . இன்னும் ரொம்ப தூரம் பயணிக்க வேண்டியது இருக்கு

கே: அப்படி ஏன் ஃபீல் பண்றிங்க உங்க எழுத்துக்களை அந்திமழை டாட்காம், நிலாச்சாரல் டாட் காம்னு அனுப்பிச்சது ஒரு காலம் அதிகாலை டாட்காம் அழைத்து அணைத்துக்கொண்டது. முத்து கமலம் டாட் காம் "எடுத்து போட்டுக்கோங்க" என்ற உங்கள் மெயிலுக்கு ரெஸ்பாண்ட் ஆகி எடுத்து போட்டுக்கொண்டது. எத்தனையோ அக்ரகேட்டர்ஸ் உங்களுக்கே தெரியாம தங்களோட வலை தளத்துல உங்க பதிவுகளை காட்டறாங்க. பெரியார் எழுத்துக்கள் எங்களுக்கே சொந்தம்னு கோர்ட்டுக்கு போய் ஸ்டே வாங்கின விடுதலை கூட உங்க பதிவை அதிகாலை டாட்காமுக்கு நன்றியோட வெளியிட்டிருக்காங்க. டமில் குறிஞ்சி உங்க ஏ ஜோக்ஸை பப்ளிஷ் பண்ணி கவிதை07 க்கான சுட்டிய கொடுத்திருக்காங்க. கவிதை07க்கு இதுவரை 75 ஆயிரம் ஹிட்ஸ் மட்டுமே வந்திருக்கலாம். பிற வலை தளங்கள் மூலமா உங்க எழுத்துக்களை பெரிய வாசகர் கூட்டம் படிச்சிருக்கலாமே.

ப: என்னவோ ஆறுதல் சொல்றிங்க .சொல்லுங்க. நான் ஏதும் பெரிசா வெட்டி முறிக்கல. 2009 மே முதல் தினசரி ஒரு 4 மணி நேரத்தையும் 40 ரூபாயையும் இதுக்காக ஒதுக்கினேன். அந்த ரூபாய் கூட ஜோதிடக்கலை ஆர்வலர்கள் மூலமா ஆலோசனை கட்டணமா ரீ எம்பர்ஸ்மென்ட் ஆகிட்டு இருக்கு.

கே: குருஜி டாட்காம் கூட ஏதோ ஆஃபர் அனுப்பினாப்ல இருக்கு .
ப: ஏற்கெனவே அப்ளை பண்ணியிருந்தேங்க எல்லாம் இந்த விளம்பர விஷயமாதான். கூகுல் ஆட்சென்ஸ் எட்டாக்கனி. ஐஸ்வர்யா கிடைக்கலன்னா அயித்த மகளை பொண்ணு கேட்க போவலியா அது மாதிரி

கே:வாழ்த்துக்கள். சரி இப்ப சொல்லுங்க . ஒரு எளிய முயற்சில 75 ஆயிரம் வாசகர்களை சென்றடைந்திருக்கிங்க. இதை பத்தி உங்கள் கருத்தென்ன ?
ப: கேள்வியே தப்புங்க. 75 ஆயிரம் டிவைடட் பை 210 போட்டுக்கங்க. ஒரே வாசகர்/பதிவர் கூட்டம் மட்டுமே 210 நாட்கள்ள 210 தடவை பார்த்திருக்கலாமே..
ப: பாரதியார் கூட கணக்கு,பிணக்குன்னாரு கவிஞரா இருந்துக்கிட்டு கணக்குல கெட்டியா இருக்கிங்களே
கே: நான் கூட கணக்குல வீக்குதாங்க. மொத்தமா கோட்டை விட்டுரபோறோம்னு ஒரு முன்னெச்சரிக்கை. அந்த கணக்குப்படி சொல்றேன் நீங்க சொல்ற 75 ஆயிரம் ஹிட்ஸ் எல்லாம் பெரிய சாதனை ஒன்னுமில்லிங்க. . " நெஞ்சினிலே உறுதி வேண்டும். வாக்கினிலே தெளிவும் வேண்டும்"னாரு பாரதி. நெஞ்சுல உறுதி இருந்தாதான் வாக்குல தெளிவு வரும். தப்போ சரியோ எனக்குனு ஒரு கருத்தை வச்சிருக்கேன். இதுல இரட்டை வேடம், தசாவதாரமெல்லாம் கிடையாது. பரஸ்பரம் முரண்பாடுள்ள எத்தனையோ விஷயங்களை நான் என் வலைப்பூல விவாதிச்சிருக்கேன். இதுக்கு காரணம் எனக்குள்ளாற குழப்பம் கிடையாது. சுய நலம் கிடையாது. ஹிப்பாக்ரசி கிடையாது . நான் எதுக்கும் கமிட் ஆகலை. எதுலயும் ஃபிக்ஸ் ஆகலை . ஸோ ஹார்ட் வேர் கணக்கா ஆணித்தரமா என் கருத்துக்களை சொல்ல முடியுது.

கே: உங்கள் வாசகர்களை பத்தி என்ன நினைக்கிறிங்க?

ப: இதுல என் வாசகர் , உங்க வாசகர்னு முத்திரையெல்லாம் கிடையாதுங்க. இது மேய்ச்சல் காடு.புல் மணம் வீசினா நெருங்குவாங்க. ருசியா இருந்தா கொறிச்சு பார்த்துட்டு போயிருவாங்க. என் ப்ளாகை ஃபாலோ பண்ற 54 பேரை கூட நான் என் வாசகர்கள்னு சொல்லமாட்டேன். அவிக இன்னம் பத்து பதினாறு ப்ளாக்ஸையாவது ஃபாலோ பண்ணுவாங்கல்லயா?

கே: நீங்க ஒருபதிவுல சொல்லியிருந்திங்க . 2006 ஜூலைல இருந்து 2009 மே வரை என் ப்ளாகை பார்த்தவக 2006 பேர்தானு. 3 வருசத்துல 2006 பேர் ஏழரை மாதத்துல 80 ஆயிரம் பேரு எப்படி இந்த வித்யாசம் ?
ப: ப்ராக்டிக்கலா சொன்னா அப்போ தமிழ் மணம், தேன் கூடு விட்டா வேற அக்ரகேட்டர் கிடையாது. இப்போ அக்ரகேட்டர்ஸ் அதிகம். இன்னம் ட்விட்டர்,ஃபேஸ் புக், கூகுல் புக்மார்க்ஸ் இப்படி கச்சா முச்சானு இருக்கு.

கே: இருக்கு தலை ! அப்போ எல்லா வலைப்பூவுக்கும் ஏழரை மாசத்துல 80 ஆயிரம் ஹிட்ஸ் வந்திருக்கனுமே ! ஏன் வரலை

ப:அடப்பாவிங்களே ! வாயை பிடுங்கறிங்களேப்பா ! கொஞ்சம் மசாலா சேர்த்துக்கிட்டேன் தட்ஸால் . தெலுங்கானா பத்தி எழுத நினைச்சா வெறும் தெலுங்கானானு எழுதாம தெலுங்கானாவும் ஒரு பலான ஜோக்கும்னு எழுத ஆரம்பிச்சேன்.
கே: இது நம்ம கலாச்சாரம், பண்பாட்டுக்கு விரோதமான செயலில்லயா ?

ப: படுக்கையறைலருந்து வெளிய வரப்ப அறுத்து வச்சுட்டா வெளியே வரோம்

கே: எதை சொல்றிங்க?
ப: நீங்க எதை நினைச்சிங்களோ அதையேதான்
கே: அப்போ அவிழுத்து போட்டுட்டு வரலாம்ன்றிங்களா?
ப: அதுல ஒரு சிக்கல் இருக்கு. விறைச்சது, வீங்கினது எல்லாம் தெரிஞ்சுருமே
கே: உங்க கான்செப்ட்தான் என்ன?
ப: காம சூத்திரம் பிறந்த இந்த நாட்ல செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டு 90 சதவீதம் பேர் மனப்பிளவுக்கு ஆளாகி அவங்க கண்ணதாசன் சொன்னாப்ல (ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது என்பதடா) அவஸ்தை படறாங்க. நான் ஓஷோ உட்பட என் முன்னோடிகள் சொன்ன விசயங்களை ஞா படுத்திக்கிட்டிருக்கேன் தட்ஸால். கொஞ்சம் மசாலா சேர்த்து வியாக்யானம் பண்ணிக்கிட்டிருக்கேன்.
கே: உங்க எழுத்துக்களோட நோக்கம் ?
ப: எண்ணம் போல் மனம் . மனம் போல் வாழ்வுன்னாங்க. எண்ணம் பிளவு பட்டு, மக்களின் மனோசக்தி சிதறி நினைக்கிறது ஒன்னு, சொல்றது ஒன்னு, செய்யறது ஒன்னு, செய்ததா சொல்லிக்கிறது வேறொன்னு இந்த நிலை மாறனும். இதுக்கு ஆதி காரணம் செக்ஸ் செக்ஸ் குறித்த பிரமைகளை அகற்றி, விழிப்புணர்ச்சி ஊட்டனும். முதற்கண் எண்ணம் சீராகனும். அப்போ ஆட்டோ மெட்டிக்கா செயலும் சீர்படும்
கே: நீங்க புதுசா என்ன சொல்ல விரும்பறிங்க?
ப: என் முன்னோடிகள் சொல்லிவச்சதை மறந்து தொலைச்சுராதிங்கப்பானு சொல்ல விரும்பறேன்.
கே: நீங்க கனவு காணும் நவ இந்தியா பற்றி சொல்லுங்க
ப: நான் மட்டுமில்லிங்க. மனிதாபிமானம் கொண்ட எவனாச்சும் தன் தாய் நாட்டை பத்தி கனவு கண்டா அந்த தேசத்துல மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இருக்கும், உணவு,உடை,இருப்பிடம் ஆகிய மூன்றையும் தரத்தக்க கவுரவமான வேலை/தொழில் வாய்ப்பு இருக்கும் நான் இந்த லிஸ்ட்ல நான் அடிஷ்னலா செக்ஸையும் ஒரு அடிப்படை உரிமையா சேர்க்கனும்னு விரும்பறேன்.
கே: ஏன் நீங்க செக்ஸுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் தர்ரிங்க?
ப: முக்கியத்துவம் தர்ரது நானில்லிங்க இயற்கை. அது உயிர்களுக்கு கொடுத்துள்ள கடமைகள் ரெண்டு. ஒன்னு உயிர் வாழறது .ரெண்டு இனப்பெருக்கம் செய்யறது.
மேற்படி ரெண்டு கடமைகள்ள இருந்து மனித இனம் இயற்கை மனித இனத்தை கைவிட்டுவிடப்போவது ஷ்யூர் ! இப்போ பெருகி வரும் தற்கொலைகள், ஆண்மை குறைபாடுகள், மலட்டுத்தன்மை எல்லாம் இதுக்கு ஒரு அறிகுறி மட்டுமே

அதை நம்ம சனம் அதை மறக்கனும்/மறுக்கனும்னு முயற்சி செய்து மறந்துட்டதா பிரமிச்சு 24 மணி நேரம் அதே நினைப்போட கிடக்காங்க. ராட்சர்களை சாமி வதம் பண்றதுக்கு முன்னாடி அவிக வித விதமான ரூபத்துல வந்து யுத்தம் பண்றாப்ல உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் பண வெறியா,வன்முறையா, அதிகார வெறியா கிளம்பி ஹ்யூமானிட்டிய வதம் பண்ணிக்கிட்டே இருக்கு. செக்ஸ் ஒன்னும் ஐ.பி.சி படி கூட குற்றம் கிடையாது.

ப: எப்படி சொல்றிங்க ?
கே: சமீபத்துல ஒரு வழக்குல சுப்ரீம் கோர்ட் கேட்டிருக்கு "பாலியல் தொழிலை சட்டத்தோட துணையோட தடை பண்ண முடியலன்னா அதை லீகலைஸ் பண்றது பத்தி யோசிக்கக்கூடாது"னு. ஆனா ஜஸ்ட் ட்யூ டு ஹிப்பாக்ரசி மெஜாரிட்டி ஆஃப் தி பீப்புல் வாய் வார்த்தையா இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டே , குற்ற உணர்ச்சியோட அனுபவிச்சிக்கிட்டோ , இல்லை வாய்ப்பு கிடைக்குமானு ஜொள் விட்டுக்கிட்டோ வித விதமான காம்ப்ளெக்ஸுகளோட நாறிக்கிட்டு கிடக்காங்க . இதனால நாட்டு வளர்ச்சி பாதிக்கப்படறதோட , அரசாங்கத்தோட,மக்களோட ரெவின்யூ, நேரம், சக்தி வீணா போகுது.
கே: அதுக்காக விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கறது நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமா தோணலியா?
ப:ஏங்க பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறது கூட நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமாதான் இருந்தது. வயசுக்கு வந்த பிறகு கல்யாணம் பண்றதும், அவ தாலியறுத்தா உடன் கட்டையேறாம இருக்கிறதும் ,மறுமணம் பண்றதும் கூட நம்ம பாரத பண்பாடுக்கு விரோதமாதான் இருந்தது . இன்னும் சொல்லப்போனா விபச்சாரத்துக்கு ஒரு வித சமூக,அரசியல் அங்கீகாரம் கூட நம்ம பாரத பண்பாட்ல இருந்திருக்கு. அதை அந்த காலத்துல மிஸ்யூஸ் பண்ணது உண்மைதான். அதை வமிசா வழியாக்கினதும் உண்மைதான். ஆனால் இப்போ இன்னி தேதிக்கு நம்ம ஜன நாயக அமைப்பு, முக்கியமா மீடியா பவர் ஃபுல்லா இருக்கு. இப்போ விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் தரப்பட்டால் அது மிஸ் யூஸ் ஆக வாய்ப்பே இல்லை. ஒரு வேளை எங்கனாச்சும் பீகார், உ.பி மாதிரி இடத்துல நடந்தாலும் மீடியா வெளிச்சத்துக்கு கொண்டு வந்துரும். ரெக்டிஃபை பண்றது சுலபம்.
கே:சரிங்க முருகேசன் வெறுமனே விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வந்துட்டா நவ இந்தியா பிறந்துருமா என்ன?
ப:அதுக்குதானே ஆப்பரேஷன் இந்தியா 2000 வச்சிருக்கேன். பிரதமர் மக்களால் நேரடியா தேர்ந்தெடுக்கப்படுவார். மும்முனை போட்டி வந்தால் மக்கள் தொகைல 52 சதமா இருக்குற பி.சி,,எஸ்.சி, எஸ்.டி. மைனாரிட்டி வகுப்புகள்ள பாதி பேர் ஒத்துமையா வாக்களிச்சா கூட இந்த 52 சதத்துக்கு அநுகூலமான பார்ட்டி பி.எம். ஆக வாய்ப்புண்டு. அப்புறம் 10 கோடி அன் எம்ப்ளாயிடை வச்சு ஸ்பெஷல் ஆர்மி ஃபார்ம் பண்ணனும். நதிகள் இணைப்பு நடக்கனும். விவசாயிகள் கூட்டுறவு சங்கம் ஏற்படனும். விவசாய நிலங்கள் லீஸ் அடிப்படையில வி.கூ.சங்கத்துக்கு தரப்பட்டு கூட்டுறவு பண்ணை விவசாயம். தற்போதைய கரன்சி ரத்து.. இப்படி நிறைய இருக்குங்க..

கே: இதெல்லாம் நல்லாதான் இருக்கு .இந்த விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம்தான் சரியில்லே
ப: இது எப்படியிருக்குன்னா வீடெல்லாம் நல்லாதான் இருக்கு இந்த கக்கூஸுதான் சரியில்லேங்கிறமாதிரி இருக்கு. வீடு சுத்தமா இருக்கனும்னா அதுவும் இருக்கனுங்க
கே:எப்படியோ ..உங்க லட்சியபாதைல தொடர வாழ்த்துக்கள்