மது என்ற வார்த்தைக்கு பல பொருட்கள் உண்டு. தேனையும் மது என்றே குறிப்பிடுவது வழக்கம்.( உம்: மதுமிதா போன்ற பெயர்கள்) ) கண்ணனுக்கு மது சூதனன் என்று ஒரு பெயர் உண்டு இதற்கு மது என்ற அரக்கனை கொன்றவா என்று பொருள் . சனம் குழந்தைகளுக்கு கண்ணன் பேரை சூட்டுகிறோம் என்ற நினைப்பில் மது என்று பெயர் சூட்டுகிறார்கள். அல்லது மது சூதனன் என்று சூட்டினாலும் "சுருக்" கமாக மது என்று அழைக்கிறார்கள். அது அரக்கனின் பெயர் . அரக்கன் பெயர் வைத்தால் அரக்க குணம் தானே வரும்.அப்படித்தான் மது மக்களின் செல்வம், குடும்ப நலம், உடல் நலம், நிம்மதி அனைத்தையும் பறித்து வருகிறது.
அய்யராத்துக்ள்ள பார்த்திங்கனா மாதுங்கற பேரை நிறைய பார்க்கலாம்.மாதவன் என்ற பெயருக்கான சுருக்கம் இது. (கோவிந்தனை கோண்டு என்பார்கள்) மாது என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுபவர் உடலளவில் ஆணாக இருந்தாலும் ரொம்பவே பெண் தன்மையுடன் இருப்பார். அவரது செயல்பாடுகளில் நிறைய நளினம் இருக்கும்.
நேமாலஜி என்று ஒரு சப்ஜெக்ட் அதில் நிறையவே டுமீல்கள் இருந்தாலும் அதற்கான அடிப்படை மட்டும் உண்மையே. ஒய்.எஸ். ஆர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியின் பெயர் ரச்ச பண்டா. ரச்ச என்றால் விவகாரம் என்று பொருள்.பண்டா என்றால் பாறாங்கல் என்று பொருள். ஹெலிகாப்டர் சித்தூர் வந்து சேராது பெரிய விவகாரமாகிப்போனது. அது மலையில் மோதி வெடித்து சிதறியது.
தண்ணீ, லாலா, சரக்கு, என்று பல பெயர்களில் அறியப்படும் மதுவுக்கு மது என்ற அரக்கன் பெயரை தெரிந்து சூட்டினார்களோ அல்லது மது என்ற பெயர் மகிமையால் அது உயிர்களை, மானத்தை, சொத்து சுகங்களை , நிகழ்காலத்தை, எதிர்காலத்தை கொன்று போடுகிறதோ தெரியவில்லை.
இத்தனைக்கும் குடிப்பவன் எல்லாம் கெட்டவன் என்று அர்த்தமில்லை. ஏன் குடிக்க ஆரம்பித்தான் என்று அவனுக்கே தெரியாது. ஒரு வேளை காரணம் தெரிந்தால் விளைவுகள் தெரிந்தால் சிலரேனு விட்டுத்தொலைக்க முடியுமே என்ற அற்ப ஆசையால் இப்பதிவை போடுகிறேன்.
தாயின் கர்பத்தில் இருக்கும் சிசு விரல் சூப்புவதை படம் பிடித்து காட்டியிர்க்கிறார்கள் தெரியுமோ? பிறந்தகுழந்தை தாயின் மார்பை சுவைக்க ஆரம்பிப்பதற்கு முன்பே உதடுகளை மார் காம்பை சூப்புவது போல் செய்வதை பார்க்கலாம். தாய் அதற்கு பாலூட்ட கையில் எடுத்து மார்பின் அருகில் கொண்டு செல்லும்போது சட்டென்று உதடுகளை குவிக்கும். இப்படியாக எம்ப்டி சி.டி.யில் ரைட் செய்யப்பட்டஃபைல்ஸ் மாதிரி தாயின் முலை, முலைக்காம்பு, பாலருந்திய அனுபவம் சிசுவின் மைண்டில் பச்சென்று பதிவாகிவிடுகிறது.
சில மாத பால் குடி பழக்கத்தை நிறுத்த தாய்'மார்'கள்படும் பாடிருக்கிறதே . முலையில் வேப்பெண்ணை தடவி, விளக்கெண்ணை தடவி ஆன தகிடு தத்தமெல்லாம் செய்து பால் மறக்கடிப்பார்கள். ஜிட்டாண்டி என்று என் பால்ய காலத்து சகா. ஆறு ஏழு வயதில் எங்களுடன் விளையாடிக்கொண்டே இருப்பான். திடீர்னு பாச்சி ஞா வந்துரும் . வீட்டுக்கு ஓடிப்போய் முச்சி முச்சினு அம்மாட்ட பால் குடிச்சிட்டு வந்து ஆட்டத்தை கன்டின்யூ பண்ணுவான். இந்த பால் குடி பருவமும், பால் மறக்கடிப்பு சம்பவங்களும் குழந்தையின் மனதில் பசுமையாக நிலைத்து விடுகின்றன. (பெண் குழந்தைகளின் நிலையும் இது தான் என்றாலும் சேம் செக்ஸ் என்பதால் இது அந்த அளவுக்கு எஃபெக்டிவாக இருப்பதில்லை போலும்) டீன் ஏஜ் பையன்கள் முதல் கிழவாடிகள் வரை முந்தாணை சரிந்ததும் தம் பார்வையை திருப்ப முடியாது அவஸ்தை பட காரணம் இதுதான். இதை சைக்காலஜி நிப்பிள் காம்ப்ளெக்ஸ் என்கிறது.
யோக சாஸ்திரப்படி:
யோகம் என்பதென்ன? ஆசனத்துக்கு சற்று மேல், இன உறுப்புக்கு சற்றுக்கீழே மூலாதாரத்தில் சர்ப்ப வடிவில் (தன் வாலை தானே கவ்வியபடி) நித்திராவஸ்தையில் இருக்கும் குண்டலி சக்தியை விழிப்புற செய்து உச்சந்தலையில் இருக்கு சஹஸ்ரார சக்கரத்துக்கு பாயச்செய்வதே யோகமாகும்.
இந்த யோகத்தில் குறிப்பிடப்படும் சக்கரங்கள் யாவும் உணவுக்குழலை ஒட்டியே அமைந்துள்ளன. ஒரே குழாய். அதன் ஆரம்பம் வாய். முடிவு ஆசனம். வாயில் ஏற்படும் உள்ளார்ந்த அசைவுகள் அதிர்வுகளை உருவாக்குகின்றன. அந்த அதிர்வுகள் மூலாதாரத்தை சென்றடைந்து நித்திராவஸ்தையில் இருக்கும் குண்டலி சக்தியை விழிப்புற செய்கின்றன. மந்திர உச்சாரணைகள் ( வாய்விட்டு சொல்வதை விட மனோஜபம் எனும் உள்ளார்ந்த தியானமே அதிக அதிர்வுகள் ஏற்படுத்தும் என்பது தர்க்கபூர்வமாகவே தோன்றுகிறது) ஆனால் சிசு பாலருந்தும்போதும்,வாயசைவுக்கேற்ப ஓமக்குச்சி நரசிம்மன் ரேஞ்சிலேனும் அதிர்வுகள் மூலாதாரத்தை சென்றடையக்கூடும். அது மறுக்கப்பட்ட நினைவுகள் அதன் மூளையில் ரஸ்னா பவுடர் ரேஞ்சில் நின்றுவிடுகின்றன. என்விரான்மென்ட் அதில் தண்ணீர் சர்க்கரை சேர்த்துவிட 22 டம்ளராய் மாறிவிடுகிறது. லோகட், சரிந்த முந்தானைகள், துப்பட்டா இல்லாத சல்வார், சுடிதாகள் மலையாள பட பிட்டுகளும், இன்டர் நெட் நீலப்பட க்ளிப்ஸும் ஈர்க்கின்றன.
சிகரட்+ மது :
இவையிரண்டுக்குமே காரணம் நிப்பிள் காம்ப்ளெக்ஸ்தான். பெண்குழந்தை நிலையேனும் பெட்டர் தனக்கு மெனோஃபஸ் வந்த பிறகும் அம்மா மடியில் படுத்து பேன் பார்த்துக்கொள்ள முடியும். ஆண் குழந்தை ? பத்து பன்னிரண்டு வயதானதுமே தாய் மீது சாய்ந்தால் "எருமாடு மாதிரி உரசறான் பாரு தள்ளி உட்கார்ரா" இதனால் தான் பெண்களைவிட ஆண்களில் சிகரட்,மதுப்பழக்கங்கள் அதிகமாக உள்ளன. மேலும் ஆண்,பெண் குழந்தைகளின் மனோதத்துவத்தில் நம்ப முடியாத அளவுக்கு வித்யாசம் உண்டு.
ஆண் பெண் குழந்தை வித்யாசம்:
உங்களில் யாருக்கேனும் ஆண்,பெண் குழந்தைகள் இரண்டும் இருந்தால் சின்ன சோதனை செய்து பாருங்கள். பையனுக்கு கிரிக்கெட் பேட்டும், பெண்ணுக்கு புது சுடிதாரூம் ( உதாரணம் தாங்க பெண்ணிய வாதிகள் இதுக்கும் ஆப்பு வச்சிராதிங்க) வாங்கி தர்ரதா ப்ராமிஸ் பண்ணுங்க. மாலை வீடு திரும்பும்போது எதையும் வாங்கிட்டு வராதிங்க. வரும்போதே பயங்கர தலைவலினு ட்ராமா போடுங்க. பெண் குழந்தை மட்டும் பரவால்ல டாடி நாளைக்கு வாங்கிட்டா போகுதுனு சொல்லும். ஆண் குழந்தை மட்டும் ஏன் பேட்டு வாங்கலை என்பதை தவிர தலைவலி பற்றி பேசவே பேசாது.
பெண் குழந்தை வாழ்க்கைல எதிர்காலத்தில் கச்சா முச்சானு மாற்றங்கள் ஏற்படப்போகுது. அதுக்கு இயற்கை அதை முன் கூட்டியே மாற்றத்துக்கு தயாரா இருக்கிற சக்தியை கொடுக்குது. ஆனால் ஆண் குழந்தை நிறைமாசத்துல பிறந்தாலும் குறைமாச குழந்தை மாதிரிதான் பிஹேவ் பண்ணும்.மாற்றத்தை தாங்கிக்க முடியாம தவிக்கும். அஜிட்டேட் பண்ணும்
ரெண்டு குழந்தைக்குமே பால் மறக்கடிக்கப்பட்டாலும் நிப்பிள் காம்ப்ளெக்ஸ் ஆண் குழந்தைக்கு மட்டும் வரவும்,அவன் மட்டும் சிகரட்,மது பழக்கத்துக்கு ஆளாகறதுக்கும் இதுதான் காரணம்.
மாறிய சமூக,பொருளாதார காரணங்களால் ஆண்,பெண் இருவரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயத்தால் வெகு சீக்கிரத்தில் பால் குடிமறக்கடிக்கப்படுவதால் பெண் குழந்தைகளும் நிப்பிள் காம்ப்ளெக்ஸுக்குள்ளாகி மதுப்பழக்கத்துக்கும், சிகரட் பழக்கத்துக்கும் ஆளாவது வேறுவிசயம்.
ஓகே மதுப்பழக்கத்துக்கு இது மட்டும் காரணமில்லே. இன்னும் சிலதிருக்கு
1.காலச்சக்கரத்தை நிறுத்தும் துடிப்பு (அது ஓடினா கிழவாடியாயிருவான் மேலும் ஓடினா செத்து போயிரு வானே). காலச்சக்கரம் நிஜமாவே நின்னுரும் அதான் சார் ! 2010 ல வீடு கட்ட கூடிய மன்ஸன் 2020ல ரோட்ல நிப்பான்
2.தனக்குள்ள இருக்கிற மிருகத்தை கொஞ்ச நேரமேனும் காத்தாட உலாவவிடற எண்ணம். (அது கண்ட இடத்துல உச்சா ,கக்கா போயிட்டு, கண்ட நாயி ...தை மோந்துருச்சுனு வைங்க கர்பம் தான்)
3.மனிதர்கள் பல்வேறு முகமூடிகளில் செய்வது இரண்டே செயல்கள் தான். ஒன்று கொல்லுதல் ரெண்டு தற்கொலை செய்தல் . இதுக்கும் மதுப்பழக்கம் வழி செய்றதால
நீ எதை செய்தாலும் அது பின்னாடி இருக்கிற கான்செப்ட் இது ரெண்டுதான் அண்ணாத்த .. வேற எதுவேணா செய். இது மட்டும் வேண்டாம். ஏண்டானா குடும்பத்தையே காலி பண்ணிரும்
4. தாயின் முலை மறுக்கப்பட்டாலும் செக்ஸில் வேரு ஒரு முலை தரப்பட்டால் இது தவிர்க்கப்படும். இல்லையேல் மதுப்பழக்கம் நிச்சயம் வரும் ( அப்படி ஏதாச்சும் பிரச்சினை இருந்தால் நம்ம ப்ளாகை படிக்க வை தம்பி பிரச்சினை ஓவர். அதைவிட்டுட்டு அந்த பால் கிடைக்காம இந்த பாலுக்கு வந்தேனு வை பத்தாம்
நாள் இல்லாட்டியும் பத்து வருசத்துல பாலு தான்
5.செக்ஸில் செலவழிந்தும் மிச்சமிருக்கும் க்ரியேட்டிவ் பவரை செலவிட வழி வகை தெரியாது அதனால வரும் ரெஸ்ட்லெஸ் தனத்தை சமாளிக்க . அதுக்கு நிறைய வழி இருக்க் மாமா! , சின்னபசங்களை செட் சேர்த்து க்ரிக்கெட் டீம் வை, காலனில மரம் நடு, வீட்டம்மாவுக்கு உதவியா சாமான் கழுவு,
6.கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இன்மையால் ( சரக்கு ஜாஸ்தியாயிட்டா முதலாளி கிட்டே கம்யூனிக்கேட் பண்ணியே ஆகனும்னு தோனும். செல்லுக்கு ஃபோன் போட்டுட்டிங்கனா வேலை காலி, புவ்வாக்கே லாட்டரி)
7. கூடி வாழும் திறனில் குறை காரணமாய்( லாலா போட ஆரம்பித்தால் எங்க கே.சி.ஆர் மாதிரி கட்சி ஆஃபீஸுக்கே மதியம் தான் வரமுடியும். தனிமரமாயி சாகும் வரை உண்ணாவிரதம் பண்ணாதான் பழைய நிலை வரும்)
8.தாழ்வு மனப்பான்மை ( குடிப்பதால் கோழை வீரனாவதில்லை , வீரன் கோழையாவதில்லை. எங்க ரோசய்யா எத்தனை ஃபுல் அடிச்சா ஒய்.எஸ்.ஆர் மாதிரி யோசிக்க முடியும்?)
9.பொருளாதார காரணங்கள். வரவு எட்டணா,செலவு பத்தணா ( வரவு எட்டணாவா குறைஞ்சு செலவு பன்னெண்டணாவாயிரும்)
10.அவுட்லெட் தேடி ( சரக்கு சரியில்லேன்னா வாந்தி தான் அவுட் ஆகும்)
11.உடலுறவில் சிறக்க (சிறப்பது அப்புறம் அசலுக்கே மோசமாயிரும்ணா) பக்கத்து வீட்டுக்காரனுக்கு பண்டிகை தான்
(அடுத்த பதிவுல இன்னும் டீட்டெயில்டா பார்ப்போம் )