Saturday, January 9, 2010

ஒய்.எஸ்.ஆர் கொலை ? பின்னணியில் ஈ நாடு ?


ஒய்.எஸ்.ஆர் மரணம் கொலயா ? பின்னணியில் ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளதா ? என்று தெலுங்கு சேனல்கள் அலப்பறை செய்தது தெரிந்ததே. ஒரு ரஷ்ய வலைதளத்தின் செய்தியை ஆதாரமாக கொண்டு சேனல்கள் தீபாவளி கொண்டாடிவிட்ட நிலையில் ரோசய்யா தலைமையில் ஆன அரசு போலீஸ் நாய்களை அவிழுத்துவிட்டது. எமர்ஜென்ஸி காலம் போல் நள்ளிரவு சோதனைகள், கைதுகள் நடந்தேறிவருகின்றன.

என்னைப்பொருத்தவரை நான் ரஷ்யன் வலைதளத்தையோ, அதன் செய்தியை ஆதாரமாக கொண்டு ஸ்டோரிகள், விவாதங்களை பிரசுரித்த தெலுங்கு சேனல்களையோ ஆதரிக்கவில்லை. ஆனால் தெலுங்கானாவுக்கு ஆதரவாக மத்திய அரசு முதல் அறிக்கை வெளியிட்ட நாள் முதலாக மவுன விரதம் காத்துவந்த சந்திரபாபு மேற்படி டி.வி ஒளிபரப்புகளுக்கு பின் ஆங்காங்கே நடந்த தாக்குதல் சம்பவங்களை தாக்கி பேசிய வீராவேசமான, காராசாரமான பேச்சு புதிய சிந்தனைகளை கிளப்பியது.

ஏறக்குறைய எனக்கு வந்த அதே சந்தேகங்களை ஆந்திர காங். எம்.பி. உண்டவல்லி அருண்குமார் கிளப்பியுள்ளது என் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. என்னண்ணே "ஒன்னுமே புரியலையா? புரியறாப்ல சொல்ட்டா போச்சு"

முதல்ல அருண்குமார் பத்தி சில வரிகள்.
இன்னைக்கு அரசியல் இருக்கிற இருப்புல லாஜிக்கை எல்லாம் புறம் தள்ளி ( ஈ நாடு பத்திரிக்கைய விரோதம் பண்ணிக்கிட்ட என்.டி.ஆரே நாய் சாவு செய்த்தாரே) ஒரு தர்ம யுத்தத்தை அறிவுப்பூர்வமா நடத்தி அதுல வெற்றியும் பெற்றவர் அருண்குமார்.

ஆமாங்கண்ணா ராமோஜிராவ் வெறுமனே பேப்பர் மட்டும் நடத்தல 36 வியாபாரம் பண்ணார்.ஊறுகாய் வியாபாரம் உட்பட. அதுல சக்ஸஸ் ஆனது ஈ நாடுவும், ஈ டிவி சேனலும்தான். மத்தபடி எல்லாமே அடாசு.பயங்கர லாஸு. எப்டி சமாளிச்சாருனு கேட்கிறிங்களா ?

பரிமாறுகிறவன் நம்மாளா இருந்தா எந்த பந்தியா இருந்தா என்ன? அப்போ சி.எம். நம்ம பாபுதான். நம்மாளு ஃபிலிம் சிட்டி கட்டறேனு இறங்குனாரு.பாபு பல நூறு ஏக்கர் நிலத்தை தாரை வார்த்தாரு. அப்டியும் தேறலை. ஹெவி இன்ன்வெஸ்ட்மெண்டு. லோ பட்ஜெட் காரனும் ரஜினி மாதிரி கோஷா பார்ட்டிகளும்தான் ஃபிலிம்சிட்டி பக்கம் ஒதுங்கினாங்க.

ராமோஜியோட 36 வியாபாரங்கள்ள மார்கதர்சினு ஒரு சிட்ஃபண்டும் ஃபைனான்ஸும் இருக்கு. தெ.தேசம் தலைவர்களோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கும் இருக்கு. அவிகளுக்கு கோடிக்கணக்கான கள்ளப்பணமும் இருக்கு . என்ன செய்யலாம்னு பார்த்தார் ராமோஜி. அந்த கள்ளப்பணத்தையெல்லாம் தன் ஃபைனான்ஸுல ஃபிக்ஸடாவும், சீட்டாவும் போட்டு சலவை செய்தார்.இதுல விதிகள் காற்றில் !
நம்ம அரசாங்கம் பத்தி தெரியுமில்லியா. தூங்கின மாதிரியே இருந்தாலும் திடீர்னு முழிச்சுக்கிட்டா ஆனை எழுந்தமாதிரி எழனுமே அதுக்காக சின்ன சின்ன ஃபிட்டிங்ஸ் வச்சி வச்சிருக்கும்.

அதுல ஒன்னு இந்த மாதிரி அனாமத்தா வர்ர ஃபிக்ஸட் எட்ஸெற்றாவ டி.டியாதான் வாங்கனும்னு ஒரு ரூல் வச்சிருக்கு போல. டி.டி.கொடுத்தவன் என்ன அரிசிக்கு காசில்லாதவனா. ச்சும்மா போட்டுவச்சவந்தானே. இதுல ச்சும்மா போட்டவன் எத்தினி பேரு, நிசமாலுமே டிப்பாஸிட் பண்ண நடுத்தரம் யாருனு தெரியாம மெச்சூர்ட் டிப்பாசிட்ஸ் சிலதுக்கு பேமென்ட் நடக்கலை.

விசயம் என்னடான்னா பாவம் ராமோஜி " மாவு விக்க போனா காத்தடிச்சுதா? இல்லே காத்தடிக்கும் காலம் மாவு விக்க போனாரா" தெரியாது . ப்ரஸ்ல விழும் பாருங்க துண்டு காகிதம் ஸ்க்ராபுங்க. அத கூட வங்கில அடமானம் வச்சு கடன் வாங்கியாச்சு .பப்பு வேகலை. இதுல இந்த அருண்குமார் வேற குட்டைய குழப்பு விட்டுட்டாரு. ஆட்சியா காங்கிரஸ் ஆட்சி. சி.எம்மா ஒய்.எஸ்.ஆர். டப்பா டான்ஸ் ஆட ஆரம்பிச்சுருச்சு.

போட்டி பத்திரிக்கைகள் வந்ததுல ( முக்கியமா சாட்சி ரெண்டு ரூபா பேப்பர்) ஈ நாடு கடக்காலே ஆட ஆரம்பிச்சுருச்சு. ஒரு பக்கம் வருமானவரித்துறை ரெய்டு, மறுபக்கம் நிதி நிறுவனங்கள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை. முழி பிதுங்க ஆரம்பிச்சுருச்சு.

கதிகலங்கிபோன ராமோஜி தலை கீழா நின்னு ரசத்துல முகம் கழுவினாரு. ஒய்.எஸ் கடப்பாலருந்து வந்த பார்ட்டி. மாஃபியா பேக் கிரவுண்டு. இப்போ கடப்பா பக்கம்போனா பழைய ஆளுங்க ஒய்.எஸ் டம்மி பீஸுப்பா அவிங்கப்பாதான் கன் பார்ட்டிம்பாங்க. அதென்னா ஆச்சோ என்னமே தெரியாது .ஒய்.எஸ் கூட என்.டி.ஆர் ஃபேன் தான். என்.டி.ஆர் இன்ஸ்பிரேஷனோ ? என்.டி.ஆருக்கு ஏழைமக்களிடையே
கிடைச்ச பேராதரவு எதிர்கட்சில இருந்த ஒய்.எஸ்.ஆரை ப்ரவோக் பண்ணுச்சோ இல்லை கிறிஸ்தவம் தான் அவருக்குள்ள அன்பு,சேவை இத்யாதிய இஞ்செக்ட் பண்ணுச்சோ தெரியாது.

அவரோட நலதிட்டங்கள், ஜலயக்னம் எல்லாம் மக்களை அப்டியே நமீதா கணக்கா மயங்க வச்சுருச்சு. ஈ நாடு என்னதான் மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு எழுதினாலும், கோயபல்ஸ் பிரச்சாரம் செய்தாலும் ஒய்.எஸ். ...ரை கூட பிடுங்க முடியலை.

அதுக்குள்ள 2009 தேர்தல்கள் நெருங்க ஆரம்பிச்சுருச்சு. இன்னொரு தடவை ஒய்.எஸ். சி.எம் ஆனால் மகனே உனக்கு இருக்குடி என்று ராமோஜியின் சிக்ஸ்த் சென்ஸ் சொல்லுச்சோ என்னமோ தெரியாது.பாவம் பாபு மகா கூட்டணி அமைக்க ரொம்பவே உழைச்சார் ராமோஜி. இதுக்கெல்லாம் சிகரம் வச்ச மாதிரி சிரஞ்சீவியோட பிரஜாராஜ்ஜியத்துக்கும் மகா கூட்டணிக்கும் பஞ்சாயத்து கூட பண்ணார். ரெண்டரை வருசம் பாபு, அடுத்த ரெண்டரை வருசம் சிரஞ்சீவினு பேசி பார்த்தார். பப்பு வேகலை.

நிதி நிலைமை மோசமாகிட்டே போவுது. ஏறக்குறைய திவால் நிலைக்கு வந்தாச்சு. தேர்தல்ல மறுபடி காங்கிரஸ் ஜெயிச்சுருச்சு. இவருக்கு ஆப்புவச்ச அருண்குமாரை தோக்கடிக்க ராமோஜி தன்னோட ரத,கஜ,துரக பதாதிகள் அனைத்தையும் உபயோகிச்சும் அருண்குமாரும் ஜெயிச்சுட்டார்.

இந்த நிலைமைல திவாலாகிப்போன ஈ நாடு க்ரூப் ஆஃப் கம்பெனீஸை ரிலையன்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் அண்டர் டேக்கா அதென்ன இழவு பண்ண முன் வந்தது. ப்ராசஸும் ஆரம்பிச்சுருச்சு. இப்போ கூட்டி கழிச்சு பாருங்க.

1.ரிலையன்ஸுக்கு கியாஸ் விசயத்துல ஒய்.எஸ். மேல கோபம். ( முதல்ல ஆந்திரால இருக்கிற "பிச்சைக்கார நாய்களுக்கு" பைப் மூலமா கியாஸ் கொடுத்து முடிச்சுட்டு மிச்சமிருந்தா வெளிய வித்துக்கோன்னிட்டாரு ஒய்.எஸ். ரிலையன்ஸ் என்ன சேவை ஸ்தாபனமா ? கோடி கோடியா ஈட்டினாதானே ஆயிரம் கோடில வீடுகட்டிக்க முடியும். ரிலயன்ஸ் சகோதரர்களோட அம்மா கியாஸ் விசயத்துல தன் மகன் களிடையே ஏற்பட்ட தகராறை நான் தீர்த்துவைக்கிறேனு ஸ்டேட்மெண்ட் கொடுக்க "அத மத்திய அரசு பார்த்துக்கும். இதுல அம்மா பேச இதென்ன அவிங்க ஆத்துக்காரர் சம்பாதிச்ச சொத்தானு ஒய்.எஸ்.காட்டமா கேட்டார் (செய்தி தலைவா)

2.சந்திரபாபுவுக்கு அரசியல் எதிரி ஒய்.எஸ்.ஒழிஞ்சாதான் பாபு முதல்வர் பதவி பத்தி கனவாவது காணமுடியும்.

3.ஈ நாடுவோட கான்செப்ட் என்ன? போன தேர்தல்லயே ஜகன் எம்.பி. படக்குனு அவரை டெப்புட்டி சி.எம். ஆக்கிட்டா .சாட்சி பேப்பர் எங்கயோ போயிரும். ஈ நாடு பேப்பர் ஸ்டாலுக்கே போகாம பழைய பேப்பர் கடைக்கு போயிரும்

ரிலையன்ஸ் விபத்துக்கு ஏற்பாடு பண்ணும். தப்பித்தவறி விசயம் லீக்காயிட்டா மக்கள் புரட்சி வெடிச்சா எதிர்கட்சி தலைவாரா பாபுவும், பத்திரிக்கை முதலாளியா ராமோஜியும் கவசமா இருப்பாங்க. ஒரு வேளை இந்த ஏற்பாட்டின் படி தான் திவாலாகி போன ஈ நாடு க்ரூப்புக்கு ரிலையன்ஸ் பணம் கொடுத்துச்சோ என்னமோ ?

சி.பி.ஐ இந்த கோணத்துலயும் விசாரிக்கனும். இல்லன்னா எந்த அரசியல் வாதியும் கையேந்தி பவனுக்க் எதிரா கூட பேசமாட்டான். மக்கள் வாய்ல வயித்துல மண்ணுதான்.

தெலுங்கானா பிரச்சினை பத்தி எரியுது சந்திரபாபு தன் எம்.எல்.ஏக்களை ரெண்டு க்ருப்பாக்கி ப்ரோ தெலுங்கானா, ஆன்ட்டி தெலுங்கானானு பேசவிட்டுட்டு மவுன விரதம் இருக்காரு . எப்போ டிசம்பர் 9 ஆம்தேதில இருந்து.

ரிலையன்ஸுக்கு ஒன்னுன்ன உடனே சாமியாடறார்.அப்டின்னா என்ன அருத்தம்னேன். இந்த சந்தேகங்களை நான் மட்டும் எழுப்பலிங்கண்ணா.

இந்த அரசியல் சாக்கடையில் இருந்தும் தர்ம யுத்தத்தை அறிவு பூர்வமா நடத்துற ஒரே ஒரு எம்.பி. அருண்குமாரும் எழுப்பறார்.

உங்கள்ள யாருக்காவது ஈ நாடு ,ராமோஜிராவ் வரலாறை தெரிஞ்ச்சுக்கணும்னு ஆர்வமிருந்தா ஒருகமெண்ட் போடுங்க அடுத்த பதிவா இதையே பார்த்துப்பம்

பி.கு அ கொசுறு :
தாத்தா திவாரி லீலைகளை காட்டி அவருக்கு ஆப்பு வச்சு ஜகன் சி.எம்.ஆக இருந்த ப்ளஸ் பாயிண்டை மைனஸ் பண்ண ஆந்திர ஜோதியின் லேட்டஸ்ட் ஸ்டோரி இன்னா தெரியுமா ? பிரஜா ராஜ்ஜியம் கட்சி சார்பில் எம்.எல்.ஏவா நின்னு தோத்துப்போன ஒரு அ நாமதேயத்தின் லீலைகள். மீடியா எங்கதான் போகுது ஒன்னுமே புரியலியே .. யார்னா விஜாரிச்சு சொல்லுங்கப்பு