சக பதிவர்கள், வாசகர்கள் (அப்படி யாரேனும் இருந்தால்) ,ஜோதிட ஆர்வலர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். வெறுமனே இப்படி வாழ்த்திவிட்டால் எப்படி? பொங்கல் என்பது விவசாயிகள் சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை, மறு நாள் காளைகளுக்கு, மறு நாள் கன்றுகளுக்கு ( ஓ அது காணும் பொங்கல் இல்லியா ) நன்றி சொல்லும் நாள் அல்லவா?
ஆனால் நாடு போகும் போக்கை பார்த்தால் இனி விவசாயம் எல்லாம் ஃபணால்தான் போலும். நகரமயமாக்கம், தொழில் மயமாக்கம், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இப்படி எத்தனை எத்தனை ஆப்புகள். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு இருக்கிறதா ? இருக்கிறது. அதான் இந்த பதிவு ..வுடு ஜூட்
உலக நாடுகளை மூனு வகையா பிரிச்சுருக்காங்க. இதுல முக்கியமான இரண்டு வகை
1.முன்னேறிய நாடுகள், 2.முன்னேறாத நாடுகள்.
மூனாவது வகை ? அதாங்க முன்னேறிவரும் நாடுகள் . இந்த கேட்டகிரில தான் நம்ம இந்தியாவ வச்சிருக்காய்ங்க. ஒரே ஒரு சமாச்சாரத்த மட்டும் கீழே தரேன்.படிச்சுட்டு இந்தியா முன்னேறி வரும் நாடா முன்னேறவே முடியாத நாடானு நீங்க முடிவு பண்ணுங்க.
நம்ம ரூபா நோட்டை ரிசர்வ் பேங்க் அச்சடிக்குது. எந்த அடிப்படைல அச்சடிக்கிறாங்க தெரியுமா ? இதுக்கு உலக அளவுல மூனு விதமான சிஸ்டம் இருக்கு.
1.கஜானால எவ்ளோ கோல்டு இருக்கோ அதனோட மதிப்புக்கு ஈடான கரன்சிய மட்டும் புழக்கத்துல விடறது
2.கஜானால எவ்ளோ கோல்டு இருக்கோ அதனோட மதிப்புக்கு டபுளா கரன்சிய ப்ரின்ட் பண்றது
3.குறிப்பிட்ட அளவு கோல்டை மட்டும் கஜானால வச்சுக்கிட்டு எவ்ளோக்கு வேணம்னா நோட்டை அச்சடிச்சு ஊர் மேல விட்டுர்ரது
இதுல இந்தியா எந்த முறைய பின்பற்றுது தெரியுமா? மூனாவது முறை. அடங்கொய்யால..
போவட்டும் .எல்லாரும் கரன்சிய டீல் பண்றிங்க இல்லியா. கரன்சி எல்லா இடத்துலயும் செலவாணியாகுது பிரச்சினை இல்லெ. ( அமெரிக்கா மூத்திரம் வைட் பெட்ரோலா எரிஞ்ச காலத்துல ப்ளடி இண்டியன் கரன்சி ? நோ..ஒன்லி டாலர்ஸுனு ஹை க்ளாஸ்ல மாப்பு காட்டினதும் உண்டு) கரன்சிங்கறது மோர் ஆர் லெஸ் ப்ரோ நோட் மாதிரிதான். என்ன ஒரு வித்யாசம்னா ப்ரோ நோட்டை கொடுத்தா பணம் கொடுக்கனும். நாம பணத்தை ரிசர்வ் பேங்க் கவர்னருக்கு கொடுத்தா அதனோட மதிப்புக்கு கோல்டு கொடுக்கனும்.
குறிப்பிட்ட அளவு கோல்டை மட்டும் கஜானால வச்சுக்கிட்டு எவ்ளோக்கு வேணம்னா நோட்டை அச்சடிச்சு ஊர் மேல விட்டுர்ர ஒரு அரசாங்கம், அதனால நியமிக்கப்பட்ட ரிசர்வ் பேங்க் கவர்னர் கரன்சியோட மதிப்பு ஈடான தங்கத்தை திருப்பிதர முடியுமா ? இது சாத்தியமா?
என்னய்யா இது அநியாயம் /அக்கிரமம்னு கேட்டா உடனே ஜனத்தொகை பெருகிப்போச்சும்பாங்க. வேலை கிடைக்கலன்னா ஜனத்தொகை பெருத்து போச்சும்பாங்க. அரிசி விலை ஏறிப்போச்சுன்னா .ஜனத்தொகை பெருத்து போச்சும்பாங்க உண்மைல ஜனத்தொகை பெருக்கம் ஒரு பிரச்சினையா ? வேலையின்மை, ஆகார பற்றாக்குறைக்கு இது ஒரு காரணமானு என்னை கேட்டா இல்லேன்னுதான் சொல்வேன்.
ஆனால் வெறுமனே ஜனத்தொகை அதிகரிச்சா பிரச்சினைதான்.கல்வி,தொழில் திறமை மிகுந்த மக்கள் பிறந்து,வளர்ந்து வந்தா அவிக நாட்டுக்கு ஒரு சொத்து மாதிரி. இந்த நாடே எங்க சொத்துனு கொள்ளையடிக்கிற குடும்பம் பென்னி குட்டி போட்ட மாதிரி பெருகினா என்ன ஆகும் ? அவனெல்லாம் சொத்துனு செத்து விழனும்.அப்பதான் நாடு உருப்படும்.
நான் இப்படி சொன்னதுக்கு ஒரு அதிமேதாவி. "ஐயா ! இருக்கப்பட்டவன் பனிரண்டு பெத்தாலும் நஷ்டமில்லே ..அந்த 12 பேரும் பன்னெண்டு ஃபேக்டரி வைப்பான். பலருக்கு வேலை கிடைக்கும்" என்று கூறினார்.
அட டுபாகூருங்களே ! நல்லவன் கெட்ட வேலை செய்தாலும் அது உலகத்துக்கு நாட்டுக்கு நல்லதாவே முடியும். கெட்டவன் நல்ல வேலை செய்தாலும் அது உலகத்துக்கு நாட்டுக்கு கெட்டதாவே முடியும்.
காரல் மார்க்ஸ் ஆதிகாலத்துலயே தொழிலாளி வயித்துலடிச்சாதான் லாபம் வரும்னு ஸ்தாபிச்சிருக்காரு. மறுபடி ஃபேக்டரி அது இதுனு பீலா விட்டுக்கிட்டு.
இந்த ஃபேக்டரி காரப்பயலுக மென்டாலிட்டி எப்டியிருக்கும்டான்னா .. எங்க ஊர்ல ஒரு சாக்லெட் கம்பெனி. பெருசா போட்டி இல்லாத காலத்துல தீபாவளி கொண்டாடினானுங்க . போட்டி அதிகமாச்சு. சமாளிக்க முடியல. தொழிலாளிங்களை அலேக்கா தூக்கி வெளிய போட்டுட்டாங்க. ( அதாங்க வீ ஆர் எஸ் அது இதுனு எக்கச்சக்கமான வழி இருக்கே. ஃபேக்டரில கோடிகள் ஈட்டினப்ப ஒன்னும் தொழிலாளிக்கு லாபத்துல பங்கு கொடுக்கலை. உள்ளூர் கொ.கா. எம்.எல்.ஏவை மீடியேட்டரா வச்சிக்கிட்டு அந்த மன்சனையே யூனியனுக்கு கௌ. தலைவனா போட்டுக்கிட்டு அவனுக்கு வாய்க்கரிசி போட்டுக்கிட்டு அவன் பெத்ததுங்களுக்கு வெளியூர் ஹாஸ்டல் ஃபீஸ்,ஸ்கூல் ஃபீஸ் கட்டிக்கிட்டு கிடந்தானுக.
இப்போவும் அது ஒன்னும் நிக்கலை. தூக்க முடிஞ்ச சாமானெல்லாம் தூக்கியாச்சு. தூக்க முடியாத சாமானை மட்டும் வச்சு கிட்டு பூச்சி காட்டிக்கிட்டு இருக்கானுக
நான் என்ன சொல்லவரேன்னா ..மக்கள் தொகை, மனித வளம் என்பது களிமண் மாதிரி அதை நல்ல ஆட்சில பிள்ளையாராவும் பிடிக்கலாம். வகை இல்லாத பார்ட்டிங்க ஆண்டால் அதுவே குரங்காவும் முடியலாம்.
இன்னைய தேதிக்கு ஆளுக்கு ஒரு மரம் நட்டே தீரனும்னு முடிவெடுத்து நட்டு தொலைச்சுட்டம்னு வைங்க.. வீட்டுக்கு ஒரு மழை நீர் தேக்க தொட்டி வைக்கிறதே சரினு வச்சு தொலைச்சுட்டம்னு வைங்க . என்னாகும்?
ஆளுக்கொரு கலர் டிவி வச்சுக்கிட்டு பொம்மை பார்த்துக்கிட்டு ,சிகரட்டா ஊதி தள்ளிக்கிட்டு, பிராந்தி விஸ்கி அடிச்சிக்கிட்டு, பெண்டாட்டியோட சண்டை வந்து அவளை அடிச்சே கொன்னுட்டிங்கனு வைங்க என்னாகும்?
ஒவ்வொரு மனிதனும் நாட்டுக்கு ஒரு சொத்து மாதிரி. அவனை பிள்ளையாண்டிருந்தப்ப அரசு போட்ட தடுப்பு ஊசிலருந்து சகல சப்சிடி, இத்யாதிய கணக்கு போட்டா ஒவ்வொரு மனிதன் மேலயும் அரசு கு.ப. ஒரு தொகை இன்வென்ஸ்ட் பண்ணுது.
அவன் படக்குனு தற்கொலை பண்ணிக்கிட்டா ? கொலையாயிட்டா? விபத்துல செத்து தொலைஞ்சா? அவனுக்கு எயிட்ஸ் வந்துட்டா ? அரசாங்கம் அவன் மேல செய்த முதலீடெல்லாம் வீண் தானே.
மக்கள் தொகை பெருக்கம் என்பது பிரச்சினையே இல்லை. அது மனித வளம். ஒரு பொருளை தயாரிக்க நாலு ஐட்டம் தேவை. லேண்ட்,லேபர்,கேப்பிட்டல், ஆர்கனைசேஷன். இதுல லேபர்னா என்ன ? மனித வளம் தான். ஆனால் இத்தனை கோடி மக்களை வச்சுக்கிட்டு அரசாங்கம் என்ன பண்ணுது. மார்னிங் ஷோ மேட்னி பாருங்கப்பா .. அதர்வைஸ் கலர் டிவில பூனை நடை போடற குட்டிகளை பார்த்து ஜொள்ளிகிட்டு இருங்கப்பானு விட்டு வச்சிருக்கு,
மோட்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆதிகாலத்லயே சொல்லியிருக்கார். இங்கன ஒருத்தன் சம்பாதிக்க பத்து பேர் உட்கார்ந்து திங்கிறான் இது வேலைக்காகாதுனு.
இப்போ நிலைமை என்னன்னு சொல்லவே தேவையில்லே.
நாட்ல நூத்துக்கு 70 பேர் விவசாயத்துமேல டிப்பெண்ட் ஆகி வாழறதா கணக்கு.இது சீசனல் ஜாப். வருசத்துல 365 நாளும் வேலை இருக்காது. வேலை செய்ய வேண்டிய சில மாசத்துலயும் மழை பெய்யாது , இல்லே வெள்ளம் வந்துரும். வேலை இல்லாத மாசங்கள்ள வேலை வெட்டியில்லாம கோழிப்பந்தயம், தாயப்பாசு சாதிகலவரம்.கள்ள உறவு,அரசியல் வெட்டு குத்து கொலை. ரசிகர் மன்றம்.
இதுல பத்து சதம் அன் எம்ப்ளாயிடை தள்ளிட்டா மிச்சமிருக்கிற 20 சதம் மேற்படி 70 சதம் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கிறதும்,விக்கிறதும் இதர சேவைகளை தர்ரதுமா வாழறாங்களாம்.
இதுல உன்னிப்பா கவனிச்சா முதல்ல சொன்ன 70 சதமே 50 சதமளவுக்கு டுபுக்கு பார்ட்டிங்க. பார்ட்டைம் ஜாப் பண்ணிட்டு ஃபுல் டைம் பெனிஃபிட்ஸுக்கு பழக்கப்பட்டவங்க. அடுத்துசொன்ன 10 சதம் டுபுக்குல டுபுக்கு. வெட்டி ஆஃபீசருங்க மூணாவதா சொன்ன 20 சதத்துல கூட விவசாய உற்பத்திய அதிகரிக்கவோ, கு.ப. குறையாம பாதுகாக்கவோ, விவசாய உற்பத்தி பணங்காசா மாறவோ உதவுறவக கம்மிதான். விவசாயி கிட்டேருந்து இவுக லாபம் ஈட்டற லாபம் விவசாயத்துக்கு நஷ்டம் தானே. முதலீடு அதிகமாகுது. லாபம் குறையுது. இந்த 20 சதத்துல அடுத்த கேட்டகிரி விவசாயி கைக்கு பணம் வந்தபிறகு அதை பறிக்கற கேட்டகிரி. அட உட்டாம்பாரு கிரிகிரி சைதாப்பேட்டை வடகறி !
இதுல கோயில் டொனேஷன்,மசூதி டொனேஷன், சர்ச் டொனேஷன், ஜோசியம்,வாஸ்து, மாந்திரீகம் இதெல்லாம் எந்த கணக்குல சேர்க்கிறது தெரியலை.
( நான் ஒரு ஜோதிட கன்சல்டன்டாக இருந்தாலும் என்னால் ஒரு தனிமனிதனுக்கு தரப்படும் கன்சல்டன்ஸி நாட்டின் ஜிடிபியை உயர்த்த வல்லதாக இருந்தாலும் அதுமாதிரி ஜோசியத்த சனம் கேட்க மாட்டேங்கிறாங்களே நான் என்ன செய்ய?)
ஆக இந்த மாதிரி காரணங்களால தான் ஜனத்தொகை பெருக்கம் பிரச்சினையாவுது,பிரச்சினைகளுக்கு காரணமாவுது. ஜஸ்ட் ..ஒரு அஞ்சு நிமிசம் கண்ண மூடி கற்பனை பண்ணூங்க .. நாட்ல இருக்கிற விவசாயிகள் எல்லாம் ஒரு கூட்டுறவு சங்கமா ஃபார்ம் ஆகுறாங்க. அதிரி புதிரியா உதிரி உதிரியா கிடக்கிற நிலங்களை மேற்படி சங்கத்துக்கு லீசுக்கு தராங்க. கூட்டுறவு பண்ணை விவசாயம் மேற்கொள்றாங்க. அப்போ என்னாகும்? எந்த விவசாயியும் உரத்துக்காகவோ, விதைக்காகவோ, பாடாவதி சர்ட்டிஃபிகேட்டுக்காகவோ எந்த ஆஃபீஸ் முன்னாடியும், எந்த நாய்மகன் முன்னாடியும் போய் நிக்க தேவையில்லை. அட க்ராப் இன்ஷியூரன்ஸுக்கு கேன்வாஸ் பண்ண எல்.ஐ.சி ஜெனரல் மேனேஜர் விவசாயிகள் கூட்டுறவு சங்க வாசல்ல வந்து நிப்பாருங்கண்ணா..
ஒரு நிறுவனத்தோடவோ,வங்கியோடவோ, அரசாங்கத்தோடவோ கம்யூனிக்கேட் பண்றது ரொம்ப சுளுவாயிரும். எவனாச்சும் நக்கல் பண்ணா சுளுக்கெடுத்துரலாம். முக்கியமா விவசாய உற்பத்திக்கு விவசாயி வச்சதுதான் விலைனு ஆயிரும். இது ஒரு பாதி கனவுதான்.விவசாயத்துக்கு பேசிக் நீர்பாசனம். வடக்குல வெள்ளம் தெற்குல குண்டி கழுவ தண்ணி கிடையாது. அதனால என்னதான் கூ.ப.விவசாயம் செய்தாலும், என்னதான் க்ராப் இன்ஷியூரன்ஸ் இருந்தாலும் ரிஸ்க் ரிஸ்க்தான்.
அடுத்த பேர்பாதி கனவை இப்போ காணுங்க.
நாட்ல இருக்கிற அன் எம்ப்ளாயிட் எல்லாம் ஒரு க்ளோபல் பப்ளிக் லிமிட்டட் கம்பெனியா ஃபார்ம ஆகிறாங்கனு வைங்க . இந்த கம்பெனியோட சிங்கிள் பாயிண்ட் ப்ரோக்ராம் இந்திய நதிகளை கால்வாய்கள் மூலமா இணைப்பது. ஆளுக்கு பத்து ரூபா ஷேர் போட்டு கம்பெனி ஆரம்பிக்கிறாங்க. வேலை துவங்குது . ஷேர் விலை எகிறிக்கும். 60 சதம் ஷேரை கம்பெனி கைவசம் வச்சிருந்தாலும் போதும். மேலும் இருக்கவே இருக்குது உலக வங்கி. இத்தனை நாள் நம்மாளுங்க அதுங்கால்ல விழுந்து கடன் வாங்குவாய்ங்க.இப்ப அவன் நம்மாளுங்க கால்ல விழுந்து கடன் கொடுப்பான்.
இப்போ கற்பனை பண்ணுங்க. பத்து கோடி அன் எம்ப்ளாயிட். இருபது கோடி கைகள். பேனா புடிக்க தெரிஞ்சவன் பேனா புடிக்கான். அது தெரியாதவன் மம்முட்டி புடிக்கான். இப்போ சொல்லுங்க ஜனத்தொகை பெருக்கம் பிரச்சினையா ?