ஒரு அண்ணன், தம்பி. இருவரும் அக்கா ,தங்கைகளான பெண்களை மணந்து கொண்டனர். இதில் அண்ணன் காரன் ஒரு சுரங்கத்தொழிலாளி. சீக்காளியாகி வீட்டோடு வந்துவிட்டான். அவனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். தம்பி ஓட்டல் கீட்டல் வைத்து சவுண்டாக இருந்தான். ஆனால் பிள்ளையில்லை. பெண்டாட்டிக்கு ரத்த சோகை . அண்ணன் ஒரு மாவட்டத்தில் , தம்பி ஒரு மாவட்டத்தில் தத்தம் மனைவியரோடு வசித்தனர்.
அண்ணன் காரன் பொருளாதார ரீதியில் நொடிச்சு போயிட்டான். தம்பி காரன் மாசா மாசம் வந்து படியளந்தாதான் வயித்துப்பாடுங்கற நிலை. அதனால மாசா மாசம் வந்து போறது வழக்கமாச்சு. சாதாரணமாவே ஆம்பிளைக்கு கையில் காசு புரண்டா ஆண்மை அதிகரிக்கும். (இதை எந்த சைக்காலஜிஸ்டும் சொல்லலனு நினைக்கிறேன். அதே நேரம் நொடிஞ்சு போயிட்டா ஒரு தற்கொலை உணர்வோட சரமாரி உடலுறவுல ஈடுபடறதும் உண்டு. செக்யூர்ட் லைஃபுங்கறாங்களே அந்த செக்யூர்ட் லைஃபுல இருக்கிற ஆசாமிக தான் செக்ஸாலஜிஸ்டை பார்க்க வேண்டி வந்துருதுங்கோவ்)
இதுல மனைவி வேற ரத்த சோகை கேசாச்சா. இங்கே வந்தா அண்ணி கொப்பும் கிளையுமா செம கட்டையா இருக்க தம்பி காரனோ ஆல்க்கஹாலிக்காகி நித்தம் தீர்த்தம் . இதை பஞ்சும் நெருப்பும் பத்திக்கிச்சுனு சொல்லமுடியாது.
வேணம்னா ம்யூச்சுவல் அண்டர் ஸ்டாண்டிங்குனு சொல்லலாம். இவளுக்கு குடும்பம் நடத்த காசு வேணும். அவனுக்கு வெறி தீரனும். வாரிசு வரணும். டெஸ்ட் ட்யூப் பேபி, வாடகை தாய் எல்லாம் இருபது வருசத்துக்கு முன்னாடி ஏது?
இதெல்லாம் டிஸ்கஸ் பண்ணி முடிக்கிற வேலையா என்ன? ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல கனெக்ட் ஆயிருச்சு. அண்ணி கர்பமாயிட்டா. வாரிசும் வந்துருச்சு. அந்த வாரிசை தம்பி காரன் தத்தெடுத்துக்கிட்டான்.
இதுவரை ஓகே. சரோஜா தேவி கதை மாதிரி தான் தோணும். ஆனால் மனிதமனம் ,அதன் சக்தி எப்படிப்பட்டதுனு எவனால வரையறை செய்யமுடியும். இவளுக்கு தன் ஏழ்மை தானே இதுக்கு காரணம்னு வெறி வந்ததா? . தம்பி காரனுக்கு அண்ணிய போயி இப்படி செய்துட்டமேங்கற குற்ற உணர்ச்சி வந்துருச்சா? இந்த உணர்வுகள் தான் அவர்களை செலுத்துச்சா ? தெரியாது. ஒரு பத்து வருசம் . ஓடம் வண்டியேறி, வண்டி ஓடமேறிப்போச்சு.
சாலை விரிவாக்கத்துல ஓட்டல் போச்சு. அதிர்ஷ்டம் போச்சு. இந்த செக்ஸ்
ஸ்காண்டல் தெரிஞ்சோ என்னமோ அவன் மனைவியும் போய் சேர்ந்துட்டா.
இவள் பணம் பணம்னு வெறியா சம்பாதிக்க ஆரம்பிச்சா. அப்பன் டம்மி பீஸுனு தெரிஞ்சு போனதால பிள்ளைகளும் அம்மா வழி நடக்க ஆரம்பிச்சாங்க. சில வருடங்கள்ள தம்பி காரனும் செத்துப்போனான்.
அவனுக்கு பிறந்த புள்ள இங்கயே வந்து சேர்ந்தான். என்னமோ அவன் இந்த குடும்பத்தோட ஒட்டவே முடியாம தவிச்சு வேற ஒரு பெண்ணை காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு மாசம் ஒரு தபா அம்மாவ பார்த்து அரிசி மூட்டைக்கு காசு வாங்கிகிட்டு போறான்.
ஆக்ஷன்! ரியாக்ஷன்! கண்ணுக்கு முன்னாலே நடக்குதுண்ணே.. டேக் கேர்