Monday, January 11, 2010

பெண்களில் 90 சதம் மசாக்கிஸ்டுகள் தான் !

பெண்களில் இரண்டு வகை . மனமுதிர்ச்சி கொண்டவர்கள் வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டவர்கள் ஒரு வகை .இவர்களின் வயது 6 லிருந்து 60 வரை எதுவாக இருந்தாலும் பொறுப்பற்று திரியும் இளைஞர்களை விரும்புவார்கள்.

மனமுதிர்ச்சியற்றவர்கள், வாழ்வின் யதார்த்தம் இன்னும் தரிசனமளிக்காத காரணத்தால் கனவுகளில் சஞ்சரிப்பவர்கள். இவர்கள் ஃபாதர்லி மென்னால்  ( அப்பா வயது அ அப்பாத்தனமான ) கவரப்படுவார்கள்.

ஆண்களிலும் இரண்டுவகை . மனமுதிர்ச்சி கொண்டவர்கள் வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டவர்கள் ஒருவகை. இவர்கள்  ஆரம்பத்தில்  சம வயது பெண்களால் கவரப்பட்டாலும் பின்பு நாக்கை கடித்துக்கொண்டு மதர்லி விமனால் ( அம்மா வயது அ அம்மாத்தனமான) கவரப்படுவார்கள்.  அதே சமயம் நம் சமுதாயம் மேல் சேவனிஸ்ட் சமுதாயம் என்பதால் இவர்களுக்கு மற்றொரு சாய்ஸுக்கும் வாய்ப்பிருப்பதால்  மகள் வயது பெண்களுக்கு ஐடியல் ஹியாகவும் இருந்து சிலர் காதல் கண்ணாமூச்சிகளுக்கு இறங்கி விடுகிறார்கள் .

மனமுதிர்ச்சியற்றவர்கள், வாழ்வின் யதார்த்தம் இன்னும் தரிசனமளிக்காத காரணத்தால் கனவுகளில் சஞ்சரிப்பவர்கள் இரண்டாம் வகை. இவர்களும் ஆரம்பத்தில் சமவயது பெண்களால் கவரப்பட்டு அவர்களுடன் சேர்ந்து வாழ்வை அனுபவித்து விட வேண்டும் என்று துடித்து  வாழ்வை சிக்கலாக்கி கொண்ட பிறகு மதர்லி விமனால் ( அம்மா வயது அ அம்மாத்தனமான) கவரப்படுவார்கள்.

ஆண் பெண் உறவுகளில் நெருக்கம்,சிக்கல் ஏற்பட இந்த இரண்டு தியரிகள் தான் காரணமாக காட்டப்படுகின்றன. ஆனால் நான் இதை வேறு கோணத்தில் பார்க்க விரும்புகிறேன்.

சாடிஸ்ட் மசாக்கிஸ்டான  பெண்ணாலும், மசாக்கிஸ்ட் சாடிஸ்டான  பெண்ணாலும்,
கவரப்படுகிறான்.

அருஞ்சொற்பொருள்: சாடிஸ்ட்- பிறரை துன்புறுத்தி மகிழ்பவன்.  மசாக்கிஸ்ட் - பிறரால் துன்புறுத்தப்பட்டால் மகிழ்பவன்.

ஒவ்வொரு ஆண் அ பெண் ஒன்று சாடிஸ்டாக அ மசாக்கிஸ்டாகத்தான் இருக்கிறார்கள். சதவீதம் தான் வித்யாசம். அதே சமயம் ஒருவரிலேயே மசாக்கிசம்,சாடிசம் கலந்திருக்கும். அதேசமயம்  சிலசமயம் சாட்ஸ்டாக சில சமயம மசாக்கிஸ்டாக மாறுகிறார்கள். இதனால் தான் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் இத்தனை சிக்கல்.

இதில் ஆண் பெண்ணை ,பெண் ஆணை புரிந்து கொள்வதில் இந்த சிக்கல் மேலும் அதிகரிக்கிறது. பொது விதி : பெண் மசாகிஸ்ட். ஆண் சாடிஸ்ட். விதிவிலக்கு: பெண்ணும் சாடிஸ்டாக இருக்கலாம். ஆணும் மசாக்கிஸ்டாக மாறலாம். இதற்கு காரணம் ஒவ்வொரு ஆணிலும் பெண்மை இருக்கிறது.ஒவ்வொரு பெண்ணிலும் ஆண்மையும் இருக்கிறது.

ஆண் பெண் உடல் வித்யாசங்கள்:
ஆண் உடலளவில் வலிமை பெற்றிருக்கிறான்.(பெற்றிருந்தான் என்று சொல்ல வேண்டி வரும்  நாட்கள் நெருங்கிவருகின்றன. டேக் கேர் சீரியல்களை ரசிக்கும் ஆண்கள் அதிகமாகிவருகிறார்கள்.) இதனால்  அவன் குடும்பம், தன்னவர், தன் உறவினர், மனைவியின் உறவினர் விஷயங்களிலும் முன் ஜாக்கிரதைகள், எதிர்கால பாதுகாப்பு,சதி,தந்திரங்களிலும் கவனம் செலுத்துவதில்லை.  மேலும் ஆண் சக்தி வாய்ந்தவனாக இருந்தாலும் அவன் சக்தி விந்துவை போலவே விரைவில் வெளிப்பட்டு விடுகிறது. பெண் எப்படிப்பட்ட பயில்வானாக இருந்தாலும் அவனால் ஒரு படி இட்லிக்கு அரைக்க முடியாது. டி.பி. பேஷண்டாக இருந்தாலும் ,ஒல்லி பீச்சானாக இருந்தாலும் பெண் அரைத்துவிடுகிறாள். காரணம் அவள் தன் சக்தியை தொடர்ந்து வெளிப்படுத்தும் சக்தியை பெற்றிருக்கிறாள். இதனால் தான் .உடலுறவின் போதும் ஒரே இரவில் பலமுறை உச்சம் பெற பெண்ணால் முடிகிறது.

 இவன் தன் சுய பாதுகாப்பு குறித்த அக்கறையற்றவனாக இருப்பதால் ஆகாயம்,அமெரிக்கா ,தில்லி,சென்னை,ஐதராபாதில் நடக்கும் சம்பவங்கள் பற்றி அக்கறை காட்டுகிறான். மச்சானை போலீஸ் பிடித்துப்போனது இவனை பாதிப்பதில்லை. அதே போல் இவன் அதிகம் உணர்ச்சிவசப்படுவதில்லை என்பதால்  உணர்ச்சிகளுக்கு இடம் தரும் கதை,இலக்கியம்,கவிதை இத்யாதி ஆணை கவருகிறது. பெண்ணோ தான் இன்செக்யூரிட்டியில் இருப்பதால்   இன்செக்யூரிட்டி காரணமாய்   செக்யூரிட்டிக்காக பெண்கள் போராடும் உதவாக்கரை சீரியல்களால் மட்டுமே கவரப்படுகிறாள்.

இந்த பேசிக்கல் உண்மைகளை மனதில் வைத்து சிந்தித்தால் ஓரளவு ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் புரிந்துகொள்ள முடியும். இவையாவும் இப்போதைக்கே செலாவணியில் உள்ள ப்ரிலிமினரி நிஜங்கள்.

ஆனால் என் தியரி வேறு. ( இந்த தியரி குறித்து மேலும் அறிய விரும்புபவர்கள்
இங்கு அழுத்தவும்
) எல்லா உயிருக்கும் அடிப்படை ஒரே உயிர். ஒரு செல் அங்கஜீவியான அமீபாவிலிருந்துதானே வந்தோம். ஓருயிர் ,ஓருடலாக இருந்த போது
தூரம்,காலம்,கம்யூனிகேஷன் ( சண்டை /சமாதானம்)  இத்யாதியில்லை. ஒரு அமீபா கொழுத்து செல் காப்பி மூலம் பிளந்து  இரண்டாவது உயிர் ஏற்பட்டது. இரண்டாவது உயிருக்கு தூரம்,காலம்,கம்யூனிகேஷன் ( சண்டை /சமாதானம்)இல்லாத ஓருடல் ஓருயிர் நிலையின் போது இருந்த "சாந்தி" செல் காப்பியிங் மூலம் கடத்தப்பட்டுவிட்டது. செல் காப்பிங்கில் ஏற்பட்ட தவறுகள் காரணமாய் எத்தனை புதிய ஜீவராசிகள் ஏற்பட்டாலும் இந்த சாந்தி மட்டும் டெலிட் ஆகவே இல்லை.

எனவே ஒவ்வொரு உயிரும் அந்த ஓருடல் ஓருயிர் நிலையை மீண்டும் எய்த துடிக்கின்றன. அதற்கு இந்த உடலே தடை என்று மயங்குகின்றன. இதனால் தான் சாடிஸ்ட் மாசாக்கிஸ்டாக இருக்கும்  எதிராளியின் உடலை உதிர்த்து அவன் உயிரை தன் உயிரில் சேர்த்துக்கொள்ள தவிக்கிறான். மசாக்கிஸ்ட் தன் உடலை உதிர்த்து சாடிஸ்டாக இருக்கும் எதிராளியின் உயிரோடு தன் உயிரை இணைத்துக்கொள்ள தவிக்கிறான்.

ஓருடல் ஈருயிராவதாய் காதலில் ஒரு பிரமை ஏற்படுகிறது அதனால் தான் காதலுக்கு இத்தனை கிரேஸ்.  ஓருடல் ஈருயிராதல் தாய்மையின் போது பெண்ணுக்கு சாத்தியமாகிறது. இதனால் தான் பெண்ணுக்கு தாய்மையின் பேரில் அத்தனை ஈர்ப்பு. சமுதாயத்துக்கும் தாய்மை மீது ஒரு பிரமிப்பு. (தம்மால் முடியாததை அப்பெண் சாதித்திருக்கிறாள்) முறைப்படி திருமணமானவள் தாய்மைக்கு தவித்தாலும் அதில் தர்க்கமிருக்கிறது. தன் எதிர்காலம் குறித்த கணக்குகள் அதில் இருக்கிறது. திருமணத்துக்கு முன்பே தாயாகும் பெண்ணை அச்செயலுக்கு தூண்டியது "ஓருடல் ஈருயிர் மீதான " ஈர்ப்புதான். உடலுறவில் இது சாத்தியமானாலும் அது "அந்த" சில நிமிடங்களும் உச்சம் எய்தும் "ஒரு நொடியும் தான்" அதனால் தான் இத்தனை கு.க முறைகள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து சனத்தொகை பெருகிக்கொண்டே போகிறது.

ஆக ஓருயிராய் இருந்தோம்,பிரிந்தோம், மீண்டும் சேர உடல் உதிர வேண்டும் .அதற்குத்தான் இந்த மசாக்கிசம்,சாடிசம். அது ஏன் ஆண் பெண்ணை கொல்லவேண்டும்,பெண் ஆணை கொல்லவேண்டும். ஆண் ஆணை கொல்வதை காட்டிலும், பெண் பெண்ணை கொல்வதை காட்டிலும் எதிர்பாலினரை கொல்வதே பல மடங்கு அதிகமாக இருக்க காரணம் என்ன? உடலுறவு /கர்பம்/குழந்தை பிறப்பு/ இத்யாதி மூலம் ஈருடல் ஓருயிராக மாற உள்ள  வாய்ப்பு ஆணை பெண்ணை நோக்கியும் , பெண்ணை ஆணை நோக்கியும் செலுத்துகிறது. ஆனால் மேற்படி உபாயங்களால் ஈருடல் ஓருயிராக மாற இருக்கும் வாய்ப்பு லிமிட்டட் டு மேக்சிமம் 9 மாதம். ஒன்பதாவது மாதம் பாப்பா வெளிய வந்த்ரூது. தாயும் சேயும் பிரிஞ்சுர்ராங்க.  நிரந்தரமா சேரனும்னா உடல்கள் உதிரனும். அதுக்கு தான் ஆண் பெண்ணை,பெண் ஆணை கொல்ல ஆரம்பிச்சுர்ராங்க. நாம தினத்தந்தில பார்க்கிற செய்தியெல்லாம் ஒரே தவணைல கொல்லப்பட்ட கேஸுங்கள தான். ஆனால் இந்த கொலை தினசரி தவணைல நடக்குது.

இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு ? ஓருயிர் ஓருடலா இருந்தோம் கரெக்ட். பல்லுயிரா பெருகும்போது பிரிஞ்சுட்டோம் . இது ராங்க்.  பல ஃபேக்டரிகள்ளயிருந்து தயாரான கோடிக்கணக்கான செல் போன்கள்  ஸ்தூலமா பார்க்கும் போது பிரிஞ்சு கிடந்தாலும் , அந்த செல் போன் களிடையில் மலைக்கு மடுவுக்கு உள்ள வித்யாசங்கள் இருந்தாலும், ப்ராண்ட் வேறா இருந்தாலும், விலை வேறா இருந்தாலும் அதுகளுக்கிடையில் ஒரு நெட் வொர்க் இருந்து அதுகளை எப்படி இணைக்குதோ அப்படியே மனிதர்கள்,மிருகங்கள் இடையில் ஒரு நெட் வொர்க் இருந்து எல்லா உயிர்களையும் இணைக்குது. அந்த நெட் வொர்க்கை புரிஞ்சிக்கிட்டா ஒரு இழவும் இல்லை . அது எப்படினு அடுத்த பதிவுல பார்ப்போம்