Wednesday, January 20, 2010

பிராமணீயத்தால் அவாளுக்கே நட்டம்‍

பிராமணீய போக்கு பிராமணர்களுக்கும் ஆபத்துதான். தமிழ்வாணன் மாதிரி சி.எம்.அவர்களும் ( ஹி ஹி சித்தூர் முருகேசனுங்கோ) மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸுனு நீங்க  நினைச்சிருந்தா டாங்க்சுங்கோ. ஆனால் அது மிஷ்டேக் பாசு.  என்னவோ வறுமையும், சர்வைவல் பிரச்சினைகளும் கண்ட சாக்கடை பக்கம் விரட்டியிருந்தாலும் நம்ம நிலை கிணத்து தவளை ரகம் தான். இருந்தாலும் விசயங்களைகொஞ்சமா தெரிஞ்சுக்கறதுல ஒரு லாபம் என்னடான்னா, குழப்பம் கம்மி. தகிரியமா ஸ்டேட்மென்ட் விடலாம்.

பிராமணீய போக்கு:
இது என்ன ரத்தப்போக்கு மாதிரினு முகத்தை சுளிக்காதிங்க. நமக்கு தெரிஞ்ச ஆதிக்க  போக்குள்ள  சாதி பிராமண சாதி ஒன்னுதான். ஆனால் ஒவ்வொரு நாட்டு சரித்திரத்துலயும் இது போன்ற ஒரு சாதிய பார்க்க முடியும்.

நிலத்தில் கால் பாவாத சமாச்சாரங்கள்:
நெருப்பு சுடும். பனி குளிரும். இதெல்லாம் ஸ்தூலமான விசயம்.உடனடியா வாழ்க்கைல அப்ளை பண்ணா பலன் தர விசயம்,கொஞ்சம் முயற்சி பண்ணா எல்லாருமே தெரிஞ்சுக்க முடிஞ்ச விசயம்.  படைப்பு எப்படி ஆரம்பமாச்சு, மனுஷன் எப்படி வந்தான்? செத்தா எங்கே போறான்? அங்கே என்ன பண்ணுவான்? இதெல்லாம் நிலத்தில் கால் பாவாத சமாச்சாரங்கள். இதுக்கெல்லாம் பதில் தேடறது எவ்ளோ கஷ்டங்கறத ஒரு பக்கம் வைங்க. இந்த கேள்விகளுக்கு   பதிலை கண்டு பிடிக்கிறது அதாங்க இட்டு நிரப்பறது , இன்னும் பச்சையா சொன்னா பீலா விடறது  ஒரு சிலரால மட்டுமே முடிஞ்ச விசயம். வாழ்க்கை போராட்டத்துல ,உயிரை காப்பாத்திக்கிறதும் உணவு தேடறதுமே பெரிய வேலையா வாழற சாமான்யனுக்கு  இது சர்வ நிச்சயமா தலை கீழே நின்னு உடுப்பி ரசத்துல முகம் கழுவினாலும் முடியாத வேலை. இது எப்படி ஒரு இனத்துக்கே முடியற வேலையா ஆச்சு?


வாங்க கற்காலத்துக்கு போய் பார்க்கலாம்.  , ஒரு கூட்டம். வேட்டையாடுதலே தொழிலா குகையே வீடா வாழுதுனு வைங்க.  மழை, புயல்,பூகம்பம்,புலி வருகை ,காட்டு தீ வரவு இதையெல்லாம் ஒரு ஆசாமி மட்டுமா குன்சா கெஸ் பண்ண முடியுதுனு வைங்க. அப்போ என்னாகும். அவனுக்கு அந்த கூட்டத்துல பெரிய மரியாதை வந்துரும். கூட்டத்தலைவனா இருக்கக்கூடிய பலசாலியான ஆசாமிக்கு இவன் க்ளோஸ் ஆயிர்ரான். மேற்படி சமாச்சாரங்களை கெஸ் பண்ணி சொல்றதுதான் இவன் வேலை. இவன் வேட்டைக்கு வரத்தேவையில்லை. தலைவனோட பெண்டுகளுக்கு துணையா குகைலயே இருக்கலாம்னு ஒரு ரிலாக்ஸேஷன் தரப்படுமா இல்லியா ?

இந்த ராஜகுரு தனமான ஆசாமிகளோட வாரிசுகள் பல்கி பெருகி தனி இனமா உருவாகறாங்கனு வைங்க. இவிகளுக்கு  வேலை வெட்டியில்லை. தலைவன் எப்போ எந்த பெண்டாட்டிக்கிட்டே போய் படுக்கனும்னு கூட இவனே டிசைட் பண்ற நிலைமை இருக்குனு வைங்க. இந்த ஃபெசிலிட்டியை காப்பாத்திக்கனுங்கற எண்ணம் வருமா வராதா?

வேலை வெட்டி, சோற்று பிரச்சினை, உயிராபத்து இல்லாத சமயத்துலதான் எதையும் உருவாக்கமுடியும். அது மொழியானாலும் சரி, சாங்கியமானாலும் சரி சதியானாலும் சரி. எசென்ஷியாலிட்டி ஈஸ் தி மதர் ஆஃப் இன்வென்ஷன்னு ஒரு சேயிங்க் இருக்கு அது வேறு கதை. ஸ்தூலமான கண்டுபிடிப்புகளுக்குத்தான் தேவை காரணமாகுது. தாயாகுது. மேற்சியோன்ன நிலத்தில் கால் பாவாத சமாச்சாரங்களுக்கு இந்த விதி பொருந்தாது. வேலை வெட்டி, சோற்று பிரச்சினை, உயிராபத்து இல்லாத சமயத்துலதான் கவைக்குதவாத கண்டுபிடிப்புகளை செய்யமுடியும்.

இந்த உலகமும் நீங்களும் நானும் இல்லாத காலமே இல்லே. ஏதோ வடிவத்துல, ஏதோ ஒரு பரிமானத்துல , ஏதோ ஒரு அலை வரிசைல  உலகமுமிருக்கு. நாமும் இருக்கோம். இந்த காலச்சக்கரத்தோட ஒவ்வொரு ஆரமும் ஆரங்களுக்கிடையிலான இடைவெளியும், பரிதியும் , நம்ம மூளைகளோட நியூரான்களில் மிஸ்டிக்கா ரிக்கார்ட்
ஆகியிருக்கு.

நீங்க எந்த புள்ளீயை (புள்ளிராஜா உட்பட)  நோக்கி சிந்திக்க ஆரம்பித்தாலும் அது குறித்த தகவல்கள் கூகுல் சர்ச் இஞ்சின்ல கொட்டற மாதிரி கொட்டும். என்னடான்னா கொஞ்சம் ஜாலாக்கா பொறுக்கிக்கனும்.சர்ச் ரிலட்டுல  குப்பையும் கலந்திருக்கும்.அதை தள்ள தெரிஞ்சிருக்கனும் .

உலகம் ஒரு பெரிய ஆலமரம்னா. மனிதன் ஒரு போன்சாய்க் ஆலமரம் அவ்ளோதான் வித்யாசம். இந்நிலையில் கூட்டத்தலைவனுக்கு ஆலோசகர்கள் என்ற ஹோதாவில் இருந்த கூட்டம் லீஷர் அவர்ஸில் இயற்கையை அவதானம் செய்ததோ ,  நிலத்தில் கால்பாவாத சமாச்சாரங்களை தப்பும் தவறுமாகவேனும் டீ கோட் செய்ததோ, மொழியை கண்டுபிடித்ததோ, தம் இன்டெலக்சுலவல் ப்ராப்பர்ட்டியை தம் இனத்துக்கே பேட்டன்ட் செய்து வைத்துக்கொண்டதோ, தம் இன நலனுக்கு ஆபத்து விளையும் போது கூட்டத்தலைவனுக்கே ஆப்பு வைப்பதோ அவன் பெண்டாட்டிய இவனுக பெண்டாளுவதோ, தேவை ஏற்படும்போது தம் பெண்டுகளை தலைவனுக்கு படுக்க வைப்பதோ பெரிய விசயமே அல்ல.

இந்த ராஜகுரு தனமான இனம் ஆரம்பத்தில் ( டூ ஆர் டை பொசிஷன்,சர்வைவல் ப்ராப்ளம்ஸ், ஒரு வித நன்றியுணர்வு இத்யாதி  காரணங்களால்)  சுய நலம் மறந்து, கூட்ட நலன் கருதியே வாழ்ந்திருக்கலாம். அப்போது Individual mind minus ego என்ற ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகி அந்த Individual minds கூட யூனிவர்சல் மைண்ட்ஸ் ஆக பரிணமித்து படைப்பின் ரகசியங்களை ப்லாஸ்ட் செய்திருக்கலாம்.

ஆனால் ஒரு சில கசப்பான அனுபவங்களாலோ, அல்லது ச்சும்மா உட்கார்ந்து தின்ற காரணத்தால் ஏற்பட்ட சரீர பரமான பலகீனம் தந்த இன்செக்யூரிட்டி ஃபீலிங்க் காரணமாகவோ சுஜாதா தமது உன்னத படைப்புகளில் கூட  போண்டாவில் எலி விசம் கணக்காய் சாதி துவேசத்தை கலந்தாற்போல் ( சுஜாதா கதைல ஹீரோல்லாம் பார்ப்பானா இருப்பான் வில்லன் எல்லாம் பார்ப்பனனல்லாதவனா இருப்பான். ) தம் ஞானத்தினூடே சுய பாதுகாப்பு கருதி சில எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்ஸும் செய்திருக்கலாம்.

எப்படியோ மனு ஸ்மிருதி, வர்ணாசிரம தர்மம் எல்லாம் வந்தாச்சு.  வந்தான்யா துருக்கன். வந்தான்யா ப்ரிட்டீஷ்காரன். அவனுக்கு இந்த பஞ்சகச்சங்க  காட்டின பூச்சியெல்லாம் கணக்கில்லாம இருந்தது. பேசினா அடி உதை ,கசையடினு நிலைமை மாறிப்போச்சு. அப்போ சர்வைவல் கருதி  அன்னிய மொழிய கற்றுத்தேர்ந்தாங்க. துபாஷிகளா மாறினாங்க.காட்டிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. தடுக்கி தடுக்கி கல்வி அனைவருக்குமானதா மாற ஆரம்பிச்சுருச்சு. சனம் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

எப்போ ஒரு இனம் கல்வியோட அத்யாவசியத்தை ரெகக்னைஸ் பண்ணுதோ ஆட்டோமேட்டிக்கா  அரசியல்,சமுதாய மாற்றங்களை உன்னிப்பா கவனிச்சு கெஸ் பண்ணி, இனியும் 100 சதம்  வேதம், புரோகிதம்னு பம்மாத்து பண்ணா பருப்பு வேகாதுன்னு சம கால வாழ்க்கை போராட்டத்தோட தேவைக்கு  ஏத்தமாதிரி தன் வ்யூகங்களை மாற்றிக்க ஆரம்பிக்குது. பை தி பை விஞ்ஞான முன்னேற்றமும்  
அவர்களுடைய மோனோப்பலி தனமான துறைகளுக்கு ஆப்பு வைக்க ஆரம்பித்தது. உ.ம் மழை,புயல்,வெள்ளம், பூகம்பம் குறித்த கணிப்புகள், மனோவியாதிகள் உடல் நல பிரச்சினைகள் பிராமணர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டது, காங்கிரஸ் கட்சியில் ,பின் பா.ஜா.கவில், தற்போது பஹுஜன் சமாஜ் பார்ட்டியில் இணைந்தது எல்லாமே காலத்தின் கட்டாயங்கள்  இப்படி அவசியத்தை பொருத்து மாற்று தளங்களில் செயல்பட ஆரம்பித்தார்கள். அவற்றில் ஒன்றுதான்  செக்ரட்ரியேட் கலெக்டரேட் முற்றுக்கையும். தங்கள் இன பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக அவர்கள் முற்றுக்கையிட்ட மற்றொரு தளம் பத்திரிக்கை துறையும், கலை ,இலக்கியங்களும். இவற்றின் விளைவுகளையும், இன்றும் தொடரும் பிராமணீய போக்கு அவர்கள் அழிவுக்கே எப்படி வழி கோல இருக்கின்றன என்பதையும் அடுத்த பதிவில் பார்ப்போம்.