Monday, January 18, 2010

சிவனை ஹோமோவாக்கிய கண்ணன் செயல்

கடந்த பதிவில் திரௌபதி பாத்திரம்  குறித்த என் கருத்துக்களிடையே கிருஷ்ணன் வாழ்வில் வினைக்கு  - எதிர் வினை  (ஆக்சன், ரியாக்சன்) என்ற அம்சம் குறித்து பிரஸ்தாபித்திருந்தேன்.  ஒன்றையும் இட்டுக்கட்டாமலே புராணங்களில் கூறப்பட்ட சம்பவங்களை வைத்தே இந்த ஆக்கம் உள்ளிடப்படுகிறது.

வினை:1
சிறு வயதில் கோபிகையர்கள்  குளிக்கும் போது அவர்களின் ஆடைகளை திருடிச்சென்று மரத்தில் உட்கார்ந்து கலாய்த்தது

எதிர்வினை:
பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் கிருஷ்ணரும்  பாண்டவர்கள் அஞ்சு பேரும்  குளிக்கப்போறாங்க. எல்லாரும் கரையேறின பிறகும் கிருஷ்ணர் கரையேறல. என்னடா விசயம்னா அவரோட கோவணம் ஆத்தோட போயிருச்சு. அப்போ திரௌபதி தன் நுண்ணிய அறிவால என்னன்னு கெஸ் பண்ணி ஒரு முழம் புடவையை கிழிச்சு போடறாங்க. உடனே கிருஷ்ணர் கோவணத்தை கட்டிக்கிட்டு கரையேறி வரார்.

அப்போ வரம் தரார்" யம்மா நீ ஒரு முழம் புடவை கொடுத்து என் மானத்தை காப்பாத்தினே.. சமயம் வரும்போது உனக்கு ஆயிரம் புடவை தரேன்"

வினை:2
ருக்மிணியை கடத்திக்கிட்டு போய் கண்ணாலம் கட்டிக்கிறார்
எதிர்வினை;
அர்ச்சுனன் இவர் தங்கச்சியை கடத்திட்டு போக முயற்சி பண்றான். ( அதுக்கு இவரே கோ ஆப்பரேட் பண்ணாருங்கறது வேற விசயம்

வினை:3,4
3.கர்ணனை கவர் பண்றதுக்காக குந்திய கர்ணன் கிட்டே தூதனுப்பறார். குந்திக்கு  அர்ச்சுனனை தவிர வேற எந்த பாண்டவனையும் கொல்லமாட்டேனு கர்ணன் வரம் தரான். அப்போ குந்தி   தாய் பால (?) கறந்து கொடுக்கறாங்க. அதை கர்ணன்  பூஜைல வச்சிட்டு குடிக்க முனையும்போது கிருஷ்ணர் பூனையா போய் அதை உருட்டி விட்டுர்ரார். அதை மட்டும் கர்ணன் குடிச்சிருந்தா அவனை கொல்லவே முடியாதுனு ஐதீகம்


4.துரியோதனன் பிறக்கப்போறான்/ திருதராஷ்டிரன் பிறந்த குழந்தைய அப்படியே கொண்டுவரச்சொல்றான். அப்போ அதை பார்க்கிற கிருஷ்ணர் ஆம்பளை புள்ளைக்கு
அரணாகயிறு கூட கட்டாம கொண்டு போறதானு அரைஞாண் கயிறு கட்டி அனுப்பறார்.
திருதராஷ்டிரன் குழந்தைய உச்சந்தலைல இருந்து தடவிக்கிட்டே கீழே வரான்.அவன் ஸ்பரிசத்தால துரியோதனன் உடல் அமரத்வம் பெறுது. அரைஞாண் கயிறு பட்டதுமே தொடர்பு அறுந்து போகுது. இதனால தான் துரியோதனை துடைல அடிச்சு கொல்லச்சொல்றாரு கிருஷ்ணன்.

 ( கண்பார்வையற்றவர்களுக்கு அதை பேலன்ஸ் செய்யும் விதத்தில் இயற்கை சில சக்திகளை தருகிறது. அதில் அவர்களது ஸ்பரிச சக்தியும் ஒன்று. சாதரணர்கள் தொடுகைக்கும் , ப்ளைண்ட் பீப்புள் தொடுறதுக்கும் வித்யாசம் உண்டு. மனிதனோட சக்தில பாதி கண்கள் வழியாத்தான் செலவாகுது. அதனாலதான் தியானத்தின் போது கண்ணை மூட சொல்றாங்க) 

எதிர்வினை:
ஒரு தரம் துர்வாச முனிவர் துவாரகைக்கு வரார். அவரு டென்ஷ்ன் பார்ட்டி முணுக்குன்னா கோபம் வந்துரும். ஆனால் அவர் மனம் கோணாம கிருஷ்ணரோட மனைவிகள் ( கொடுத்து வச்ச ஆளுப்பா) சேவைகள் செய்து மனம் குளிர வச்சு பாத பூஜை பண்றாங்க. அந்த தண்ணீய கிருஷ்ணரோட உடலெங்கும் பூசும்படி சொல்றார் துர்வாசர் . ஆனால் பாதங்கள் மட்டும் மிஸ் ஆயிருது. ஒரு வேடன் விட்ட அம்பு இவர் பாதத்துல துளைச்சித்தான் உடலை உதிர்க்கிறார்.

வினை:5
கிருஷ்ணரோட பக்கபலம் இருந்ததாலதான் பாண்டவர்கள் குருக்ஷேத்திர போருக்கு தயாரானாங்க. அதனால குருவம்சமே வேரத்துப்போச்சு.

எதிர்வினை;
துவாரகைக்கு ஒரு ரிஷி வரார் (துர்வாசரேவா என்ன ஞா இல்லை) அவரை கலாய்க்க யாதவ வீரன் ஒருத்தனுக்கு  கர்பிணி வேஷம் போட்டு இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்னு  சக வீரர்கள் கேட்கிறாங்க. அதுக்கு ரிஷி உலக்கை பிறக்குங்கறார். நிஜமாவே உலக்கை பிறக்குது. கிருஷ்ணர் ஜாலாக்கா அதை எரிச்சு சாம்பலாக்கி கடல்ல கலக்க சொல்றார். ஆனால் அந்த சாம்பல் மறுபடி இக்கரைக்கே வந்து ஆளுயர கோரை புல்லா முளைக்குது. யாதவ வீரர்கள் ஃபுல் மப்புல சில்லறை தகராறு வந்து அடிச்சிக்கிறாங்க.அப்போ ஒருத்தன் புல்லை பிடுங்கி தாக்க முனையும் போது அது உலக்கையா மாறுது. இப்படி மண்டை பிளந்து யாதவ கூட்டமே சாகுது

கிருஷ்ணர் 16,000 மனைவிகளை , ஊரான் மனைவிகளை கூட ஸ்க்ரூ செய்ததாய் புராணம் சொல்கிறது. இது வினை ஸ்க்ரூயிங் எக்ஸ்பீரியன்ஸ் எப்படியிருக்கும் என்று அவர் உணரவே அவரை சிவன்
பின்னால் ஏறி வெண்ணை எடுத்த சம்பவம் நடக்கிறது. இது எதிர்வினை.

இது மாதிரி நிறைய சம்பவங்கள் கிருஷ்ணரோட வாழ்க்கைல நடக்குது. இது புராணமா சரித்திரமா தரித்திரமானு மயிர் பிளக்கிற வாதத்துக்கு போறது வீண்வேலை இந்த சம்பவகோர்வைல ஒரு நீதியிருக்கு. அது என்னனு பார்க்கனும். ஆண்டவனாவே இருந்தாலும் அவனோட செயல்களுக்குண்டான பலனை அவன் நிச்சயமா அனுபவிச்சே ஆகனுங்கறது தான் அந்த நீதி.

ஏற்கெனவே பல முறை சொன்னபடி  புராணம் என்று நுழைந்தாலே ஜல்லிதான். இருந்தாலும் ஒரு காலத்தில் கோர்த்து வைத்த மணியாரம் இது (பணியாரம் இல்லிங்கண்ணா)  இதன் நோக்கம் புராணங்களை நம்ப சொல்வதல்ல "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளுக்கு பாஷ்யமாக இந்த பதிவை இடுகிறேன். மெய்பொருளை விளக்க முயல்கிறேன்.

வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. வினை என்றால் உடலளவில் செய்வது மட்டுமே அல்ல மனதளவில் எண்ணுவதும் வினையே.  இதனால் தான் ஏசு நாதர் "ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கியவன் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான் " என்று சொன்னார்.

நீங்க உங்க ஊர்ல் ஒரு காலத்துல ஓகோனு வியாபாரம் பண்ணி இப்போ ஷெட் ஆகி ஈ ஓட்டற பார்ட்டிய பாருங்க. அவன் இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லயேனுதான் புலம்புவான்.

ஆனால் இவன் ரன்னிங்ல இருந்தப்ப பல நூறு தடவை  நினைச்சிருப்பான். சொல்லியுமிருப்பான். " என்ன சார் வியாபாரம் .. கொஞ்சம் கூட நிம்மதியே கிடையாது. எல்லாத்தயும் ஊத்தி மூடிட்டு நிம்மதியா இருந்துரலாம்னு தோணுது"

மேற்படி வினை, எதிர்வினை மட்டும் சர்வ நிச்சயமாய் நடக்கிறது. அது கண்ணனாகவே இருந்தாலும் .

 இந்த பிராமண கூட்டம் புலம்புவது போல இறைவனை எண்ணுவதாலோ புகழ்வதாலோ, யக்னம்,யாகம் என்று வேட்டு விடுவதாலோ , அபிசேக ஆராதனைகள் செய்வதாலோ இறைவனுக்கு அ பக்தனுக்கு ஏதோ பெரிதாய் நடந்துவிடும் என்று நம்ப நான் தயாராக இல்லை. இதெல்லாம் ஜஸ்ட் உயிர் பிரியும் அந்த கடைசி கணத்தில் இறைவன் நாமம் நினைக்கப்பட ஒரு பயிற்சியாகவே கொள்ளவேண்டும்.

சின்ன பசங்களை கடைக்கு அனுப்பினா அதுக சர்க்கரை கால் கிலோ சர்க்கரை கால் கிலோனு சொல்லிக்கிட்டு போற மாதிரி தான் இதுவும் .சில குழந்தைகள் வழியெல்லாம் சொல்லிட்டே போய் கடைகிட்டே போய் மறந்துரலாம். சில குழந்தைகள்  வழில கிரிக்கெட் மேட்ச் நடந்துக்கிட்டு இருந்தா அதை பார்த்துக்கிட்டு போயோ , விட்டா ஒரு பால் போல் போட்டுட்டு கூட போய் கரெக்டா கால் கிலோ சர்க்கரைனு சொல்லலாம்.

என் சம்சயம் என்னவென்றால் ஒரு குழந்தை எப்படி முக்தியே நோக்கமாக தனக்கேற்ற (தன் முக்திக்கு உதவத்தக்க என்விராமென்டை தரவல்ல ) தாயின் கருப்பையை தேர்வு செய்கிறதோ  அதே போல் இருபது வருடம் கழித்து நீங்கள் அனுபவிக்க வேண்டிய தண்டனக்குண்டான செயலை இப்போதே செய்துவிடுகிறீர்கள். இருபது வருடம் கழித்து உங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிக்கான நற்செயலை இப்போதே செய்து விடுகிறீர்கள் .

அன்னமாச்சாரியார் கீர்த்தனைகளில் வரும் வரி இது  "தெகது பாபம் தீரது புண்ணியம்" ( பாவம்  அறுந்து போகாது, புண்ணியம் தீர்ந்து போகாது) . எல்லாரும் என்ன நினைக்கிறோம் என்றால் பாவம் பென்சில் எழுத்து மாதிரி. புண்ணியம் ரப்பர் மாதிரி. புண்ணியம் பாவத்தை அழிச்சுரும். இந்த நம்பிக்கைய மேற்சொன்ன கீர்த்தனைவரி தூள் தூளாக்குது.

வினைக்கு எதிர்வினை நிச்சயம் உண்டு. அது இந்த பிறவியிலா? அடுத்த பிறவியிலா ? என்பது வேறு விசயம். வினைகள் செய்தால் எதிர்வினை உண்டு. எதிர்வினையை எதிர்கொள்ள பிறவிகள் ஏற்படும்.சரி பிறவா வரம் பெற என்ன வழி?

நீங்கள் சுய நலத்துடன் செய்யும் வினைக்குத்தான் எதிர்வினை ஏற்படுகிறது. பொது நலத்துடன் செய்யும் வினைக்கு எதிர்வினை ஏற்படுவதே இல்லை. அது ஆகாயத்தில் பறவை பறந்து சென்ற தடம் போலாகிவிடுகிறது. அந்த பாதையில் எதிர் வினை தொடர்ந்து வர முடிவதில்லை.

நான் ஒருவன் நலம் வாழ என்ன செய்தாலும் (சட்டப்பூர்வமான , நியாயமான தொழில்,வியாபாரம், சர்வீசஸ் எதுவானாலும் ) கருமம் சூழ்கிறது. அதற்குண்டான பலனை அனுபவித்தே ஆக வேண்டியுள்ளது.

ஆனால் நான் இந்த  நாடே நலம் காண உழைக்கும்போது கருமம் சூழ்வதில்லை என்பதோடு பூர்வ கருமமும் தொலைந்து போகிறது.  இவையெல்லாம் ஏட்டுச்சுரைக்காய் அல்ல. என் அனுபவங்கள்.

எனவே அனுபவ பூர்வமாய் கூறுகிறேன். ஒன்றை விட்டு தொலைப்பவன்  அதை பெறுகிறான். பற்றி பரிதவிப்பவன் இழக்கிறான். சுய நலத்தால் சுய நலத்தால் பொது நலம் மட்டுமல்ல சுய நலமும் நசிந்து போகிறது. பொது நலத்தால் சுய நலமும் காக்கப்படுகிறது.